Wednesday, September 16, 2026

1400. என் கதை - இளங்கோ கண்ணன்

ஐயா வணக்கம்; நலமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன்.




 220 பக்கம் முடிந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பின் தொடர்ச்சியாகப் படிக்கும் ஒரு நூலாக அமைந்திருக்கிறது.

  தாங்கள்  மதச்சார்பற்றவர் என்பதை, வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக்  கொண்டே விளக்கி இருக்கிறீர்கள்.

 எந்த மதத்தைச் சார்ந்தவர் ஆனாலும் உயர்வு தாழ்வு காட்டாமல் நடுநிலையோடு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளீர்கள். 

பொதுவாக, இஸ்லாம்  அறிவியல் அடிப்படையில் அமைந்த ஒரு மார்க்கம் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வார்கள். அதையும்  விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.

 இந்து மதம், பின்ன கிறிஸ்தவ மதத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

  'சத் சபை' என்ற புதிய செய்தியைப் பற்றியும் சொல்லி இருக்கிறீர்கள். அந்த  அந்த அமைப்பில் உள்ள கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் சொல்லுக்கும் செயலுக்கும் எப்படி ஒருமைப்பாடு இல்லாமல் நடந்து கொண்டார் என்பதைக் குறிப்பிட்டு சாடி இருக்கிறீர்கள். உலகம் முழுவதும் இன்று பலபேர் அப்படித்தான் இருக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில்.

 தங்களுடைய எள்ளல் சுவை கலந்த நடைதான் மின் தொடர்வண்டி எஞ்சின் போல என்னை  விறுவிறுப்பாக இழுத்துச் செல்கிறது என உறுதியாகச் சொல்லலாம்.

 ஒரு சிறு திருத்தம். பக்கம் 129ல் துப்புரவுத் தொழிலாளர் என்ற இடத்தில் இடையின 'ர' வருவதற்குப் பதில் 'ற' வந்திருக்கிறது. அதையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

  கடமை தவறாத மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும்  மருத்துவமனை தொடர்பான பணியாளர்கள் அனைவரையும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறீர்கள். இது ஒரு பெரிய பண்பு.

அந்தப் பண்புக்குத் தலை வணங்குகிறேன்.

No comments:

Post a Comment