Tuesday, July 16, 2024

1284. EURO,’24 & WIMBLEDON ‘24




*

ஒரு வழியாக இரு போட்டிகளும் ஒரே நாளில் நேற்று முடிந்தன. இரண்டும் நினைத்தது போல் நடந்து முடிந்தன.

 

EURO,’24 

ஏறத்தாழ எப்போதும் அனைத்திலும் நான் இங்கிலாந்திற்கு எதிரானவன். சாகா - Saka - விளையாட்டு பிடித்தது. இருந்தாலும் முதலிலிருந்தே ஸ்பெயின் நாட்டின் வில்லியம் பிடித்தது. பின்னால் அவரோடு யமால் என்பவரும் பிடித்துப் போனது. இந்தக் கடைசிப் போட்டியில் யமால் நான்கைந்து  தடவை பந்தை கோல் நோக்கி அடித்த பந்துகள் கோலாகாமல் தப்பித்து விட்டன.  ஆயினும் இருவரின் ஆட்டமும் நன்றாக இருந்தது.










சோகமென்னவென்றால் அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழைய பெனல்டி கோல் வரை சில ஆட்டங்கள் சென்றன. அந்த ஆட்டங்கள் எனக்குப் பொதுவாகவே பிடிக்காது. அதைவிட sudden death இருப்பது நன்றாக இருந்தது. அதைவிட பெனல்ட்டியில் வெற்றி தோல்வி நிர்ணயிப்பது காசை சுண்டிப்போட்டு பார்ப்பது போல் ஆகிவிடுகிறது. One shooter / one goal keeper என்ற இருவர் மேல் பாரம் விழுகிறது. அட போங்க ... இது அழுவாச்சி ஆட்டம் அப்டின்னு தோணுது.

ஸ்பெயின் வென்றது; மகிழ்ச்சி

 

 

WIMBLEDON ‘24

 

அல்காரஸ் – சின்னர் இருவரும் அநேகமாக மோதுவார்கள்;  இல்லையேல் அல்காரஸ் – ஜோக்கோவிச் என்று எதிர்பார்த்தேன்.

வேறொன்றுமில்லை. The period of the triumvirate – Fedd-rafa-nova – is almost over. ஜோக்கோ இன்னும் சிறிது முயல்வார்.



இப்போடியில் ஜோக்கோ முயன்றார். 2:0 என்ற நிலையிலிருந்தும் மீண்டு வந்துள்ளார். அப்படியேதும் நடக்குமா என்று எண்ணிக்கொண்டிருந்த போது மூன்றாவது செட்டில் 0:2 என்ற நிலை வந்த போது சரி கதை முடிந்தது என்றே நினைக்கத் தோன்றியது.  ஒரு காலத்தில் ஜோக்கோவின் athletic actions ஆட்டத்தையும், உடம்பு அதற்கு ஒத்துழைத்ததும் பார்த்து மகிழ்ந்தேன். என்ன செய்வது? காலம் அனைத்தையும் மாற்றிப் போட்டு விட்டது. அல்காரஸ் ஆட்டம் ஜோக்கோவின் பழைய ஆட்டம் போல் ஆடினார்; வென்றார்; மகிழ்ச்சி.

ஜோக்கோ வென்றிருந்தால் பல புதிய records  உருவாகியிருக்கும். 










Thursday, July 11, 2024

1283. மதங்களும் சில விவாதங்களும் ...ஒரு நண்பரின் கருத்து




*

மதங்களும் சில விவாதங்களும் நூல் மிக அற்புதமான உண்மைகளை விளக்கும் நூல்,ஒரு கடவுள் கொள்கை உடைய இஸ்லாம் கிறிஸ்துவம மதத்திலேயே இவ்வளவு முரண்பாடுகள்,உள்ளது.  சில இடங்களில் நகைச்சுவையாஎவும் உள்ளது,நம் இந்து மததத்திலோ பெரு தெய்வங்கள் சிறு தெய்வ வழிபாடு என்று பல வகைகள் உள்ளது   

எதை நம்புவது எதை தவிர்ப்பது எனத் தெரியாமல் நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்று சுயமாக சிந்திக்காமல் அதே வழியிலேயே நடந்து பழகி விட்டோம் ஆனால் உங்கள் நூல், நம்மை யோசிக்க வைத்து முடிவை நம்மையே எடுக்கச் செய்கிறது 

மதம் சம்பந்தமான ஆர்வம், விருப்பம் உள்ளவர்கள் அவசியம்  இந்த நூலை படித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நல்ல நூலை படிக்க உதவியதற்கு நன்றி ஐயா 

வேலுமணி 
கோவை




Friday, July 05, 2024

1282. MAHARAJA & GARUDAN

Tuesday, July 02, 2024

1281. "டிண்கு" தான் நன்றாக ஆடியது ...!



*

ப்ரான்ஸ்  -  பெல்ஜியம்  -- 1 : 0

ப்ரான்ஸ் பெருசு...பெல்ஜியம் சிறுசுன்னு நினச்சேன். ஆனால் அப்படியெல்லாம் விளையாட்டில் வித்தியாசம் தெரியவில்லை. சமமாக விளையாடின .. கோல் எந்தப் பக்கமும் விழவில்லை. 


 Lukaku of Belgium showed his presence. அதே மாதிரி பிரான்சின் எம்பாப்பே கோல் பக்கத்தில் வந்ததும் நன்றாக - நம் ஊரில் சொல்லுவோமே, அதே மாதிரி - பந்தைக் கடைந்து கொண்டு போனார்... சப்ளை செய்தார். இரு பெரும் வீரர்களின் விளையாட்டை உன்னிப்பாகப் பார்த்த எனக்கு பிரான்சின் வலது விங்கராக விளையாடிய ஒரு குட்டை வீரரை மிகவும் பிடித்துப் போனது. அவரது எண் 5. அதை வைத்து பாலோ பண்ணும் போது அவர் பெயரை வர்ணனையாளர் சொல்லும் போது கொஞ்சம் வித்தியாசமாக அவரது பெயரைச் சொன்னது போலிருந்தது. டிண்கு ... புரியுதா, அதே மாதிரி சவுண்டு வந்தது. என்னடான்னு போய் பெயரைப் பார்த்தேன்.  Kounde ... குண்டேன்னு சொல்லியிருந்திருக்கலாம். ஆனால் அவர்களின் உச்சரிப்பில் அது டிண்கு என்று தான் என் காதில் பட்டது. 






சரி ... உடுங்க ... பெயர் என்ன ஆனால் என்ன? நன்றாக ஆடினார்.

முடிவதற்கு 5 நிமிடம் இருக்கும்போது பிரான்ஸ் ஒரு கோல் போட்டு வெற்றி பெற்றது.







Monday, July 01, 2024

1280. EURO, '24 ENGLAND SURVIVED



*

ENGLAND  -  SLOVAKIA



நல்ல ஆட்டம். 25வது நிமிடத்திலேயே ஸ்லோவாக்கியா இங்கிலாந்திற்கு ஒரு கோல் போட்டது. மீதி நேரம் முழுவதும் பந்து அங்குமிங்கும் இரு பக்கமும் சென்றது. ஆட்ட காலம் முடிந்து, injury time-ல் முதல் இரண்டாவது நிமிடத்தில் இங்கிலாந்தின் கேன் ஒரு கோலடிக்க சமமாயிற்று.

எக்ஸ்ட்ரா டைம் ஆரம்பித்ததும் இரண்டாம் நிமிடத்தில் இங்கிலாந்து இன்னொரு கோல் போட்டது.  ஸ்கோர் நீடித்து, ஸ்லோவாக்கியா கவலையுடன் வெளியேறியது.

எப்படியோ உலக மகா வில்லன் இங்கிலாந்து தப்பிப் பிழைத்து காலிறுதிக்கு முன்னேறியது.