வயசைச் சொல்லாததால் இதுவரை சில சேதிகளைப் பதிவு செய்ய முடியாத நிலை. அதைக் கடந்தாகி விட்டது. ஆகவே, காலம், இடம் என்னும் வர்த்தமானங்களைக் (ஆமா, இப்படி எல்லாரும் எழுதறாங்க..வர்த்தமானம்..வர்த்தமானம் அப்டின்னா என்னங்க? நிஜமா தெரியாது.)கடந்து எழுதிர்ரதாக முடிவு.
உதாரணமாக, 1965-ன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தப்பற்றி ஒரு நேரடி ரிப்போர்ட் வேணும்னா, பாவம் இந்த வலைப்பதிவாளர்கள் எங்கே போய் யாரிடம் கேட்க முடியும், சொல்லுங்க. ஆகவேதான் இந்த முடிவு. ஒரு scooter வாங்க என்னவெல்லாம் செய்யணும், எவ்வளவு காலம் ஆகும். ஏழு மலை, ஏழு கடல் மாதிரி எத்தனை தடைக்கற்கள் கடக்கணும்னு உங்களுக்கு யார்தான் சொல்றது. அதுக்குத்தான் இப்படி ஒரு ஏற்பாடு.
எல்லாத்தையும் ஒரே சீரியலில் சொல்றதைவிட வேறமாதிரி சொல்லத்தான் நினைக்கிறேன்; பார்க்கலாம். நாளைக்கு நீங்கள் இந்தப்பக்கம் எட்டிப்பார்க்கலாமா வேண்டாமா என்று ஒரு முடிவு செய்துகொள்ள ஒரு உதவி செய்து விடுகிறேன் - முதல் சீரியலின் தலைப்பு (சகுனமே சரியாயில்லையேயென நினைப்பீர்களோ? பரவாயில்லை.) :
மரணம் தொட்ட சில கணங்கள்
8 comments:
Hm... It is great to know more about you.
நீங்கள் கொடுத்த அந்த சுட்டியில் நிறைய விசயங்கள் இருக்கிறது போல. நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பார்க்கிறேன்.
அமெரிக்கன் காலேஜா? நானு தியாகராஜா காலேஜ் பந்தததுக்கு நெருங்கிய சொந்தம். :-)
Keep writing. We are there to read and discuss.
அய்யா விஜய்,
நான் வேலை பார்த்தது அமெரிக்கன் கல்லூரி. நான் படித்தது முத்தமிழ் வளர்த்த (நாங்க படிக்கும்போது..!)மதுரை, தியாகராசர் கல்லூரிதான்'யா!
இப்போ சொந்தம் எப்படி?நெருக்கமோ நெருக்கமல்லவா?
"சகுனமே சரியாயில்லையேயென நினைப்பீர்களோ? "..
- கேள்வி இருக்கே; அது இல்லாமலா? ஆனாலும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய காரியம்தான் இல்லையா??
மற்றவங்களுக்கு எப்படியோ, தருமிக்கு பின்னூட்டங்கள் தரும் ஊட்டமே தனிதான். ரொம்ப தப்போ???
இந்தக் கேள்விகள் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா????
// நீங்கள் கொடுத்த அந்த சுட்டியில் // எந்த சுட்டி ??
எழுதுங்கள் தருமி, படிக்க ஆவலாக இருக்கிறேன் !
வீ எம்
இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி எழுதுங்கய்யா, இது வரை எனக்கு கிடைத்த தகவல்கள் (ஊடகங்கள் வழியாக மட்டுமே) ஒன்று இந்த எல்லை அல்லது அந்த எல்லை, எழுதுங்கள் புதிய விடயங்களை தெரிந்து கொள்கின்றோம்
நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் உங்கள் தொடரை.
அதுசரி எந்தச் சுட்டியைப் பற்றிக் கதைக்கிறியள்?
Post a Comment