Wednesday, November 02, 2005

100. (MY CENTURY) - பாத்ரூம் எழுத்தாளர்கள்



பதிவுக்குள் செல்லும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை.
வலைப்பதிவனாக ஆகும் முன், ஆறு மாதங்களுக்கும் குறைவான நாட்களில் 100 பதிவுகள் எழுதுவேன் என்றோ, என்னால் எழுத முடியும் என்றோ யாரும் சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன். ஆனாலும் நடந்தே விட்டது. Quality எப்படியோ, Quantity நானே எதிர்பார்க்காத அளவுதான்! ஆனாலும், ஏதோ Quality இருப்பதாக ஒரு பிரம்மையை எனக்குக் கொடுத்தது நீங்கள்தானே. எனவே,Quantity-யையும் நீங்கள் பொறுத்துதான் ஆக வேண்டும். இதுவரை பொறுமை காத்து, உடன் வந்த (இனியும் தொடர்ந்து வருவீர்கள் என்ற நப்பாசையில்)அத்தனை பேருக்கும் பெரும் நன்றி.
இந்த எழுத்து முயற்சிக்குத் தளம் அமைத்துக் கொடுத்த காசிக்குச் சிறப்பான நன்றி.அவரோடு, இந்த தளம் (மற்ற தளங்கள் பற்றி ஏதும் அறியேன்.) தரும் சிறப்பான சேவைக்கு இதன் நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி.
தமிழ்மணம் எனக்கு அளித்துள்ள வாய்ப்புகளும், வசதிகளும், அதனால் நான் பெற்றுள்ள நல்ல நட்புகளும் ( கோப்பெருஞ் சோழன் - பிசிராந்தையார் காணாமலே நட்பில் ஒன்றினார்களாமே, நமக்கு முன்னோடிகள் போலும்!)வாழ்வில் ஒரு புதிய அர்த்தத்தையும், அத்தியாயத்தையும் எனக்குத் திறந்து காட்டியுள்ளன. இத்தமிழ்மணம் மேலும் மெருகேற வாழ்த்துக்கள்.

I HAPPILY DEDICATE MY HUNDREDTH POST TO THE FUTURE OF THAMIZMANAM
உங்களில் பலரும் இளம் வயதினரே. என் வயதினருக்குக் கிடைக்காத ஒரு பெரும் வாய்ப்பு இந்த வலைப்பதிவுகள். உங்கள் திறமைகளை, உங்களுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர, உரசிப்பார்த்துத் தரமறிய, தரமறிந்து மேலும் உயர உங்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. நிச்சயமாக, இவ்வலைப்பதிவுகள் வளர்ந்து, புதிய சிந்தனைகள் கிளைத்து, நம் மொழியையும், நாட்டையும் மேலும் செழிக்கச் செய்யும் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் மீண்டும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி…

எல்லாருக்கும் பாத்ரூம் பாடகர்கள் தெரியும்; இது என்ன பாத்ரூம் எழுத்தாளர்கள்?
மனுஷ வாழ்க்கையில் நாம் தனியா விடப்படற இடம்னு பார்த்தா ரெண்டே ரெண்டு இடம்தான். ஆனா உயிரோட தன்னந் தனியா இருக்கிற இடம் ஒண்ணே ஒண்ணுதான். அது நம்ம பாத்ரூம்தான். காலையில் செய்தித் தாள் சரியான நேரத்தில் வந்தா நல்லது. நாலு பக்கம் புரட்டிக்கிட்டு இருக்கும்போதே வந்த வேலையை முடிச்சிட்டு வந்திடலாம். ஐயா! ஒரு நாள் பேப்பர் வர்லைன்னா, என்னென்ன பிரச்சனையெல்லாம் வருது. அன்னைக்குப் பாத்து கையில் கிடைக்கிற விகடன் எல்லாம் ஏற்கெனவே வாசிச்சதா இருக்கும். ச்சேன்னு அலுப்போட நிஜமாகவே ‘தனியா’ போனோம்னு வச்சிக்கிங்க; இன்னைக்கு எதப் பத்தி பதிவு போடலாம்னு நினைக்கிறதில இருந்து, வீட்டுக் கடனை எப்படி அடைக்கிறது வரை, இல்ல அதையும் தாண்டி கத்ரீனா, வில்மா-ன்னு எல்லாத்தையும் பத்தி நினச்சி, எதுக்கும் ஒரு முடிவும் இல்லாம, வந்த வேலையை மட்டும் முடிச்சிக்கிட்டு வெளியெ வரணும். இதில பெரிய கண்ணாடி ஒண்ணு உள்ள மாட்டியிருந்தீங்கன்னு வச்சுக்கங்க; தொலஞ்சுது பொளப்பு.
பாத்ரூம்ல இருந்து பாடறதுங்கிறது எல்லாரும் இல்ல; ரெண்டே டைப்பு ஆளுகதான். கொஞ்சமாவது சாரீரம் உள்ள ஆளுக; அல்லது அப்படி தங்களப் பத்தி நினைச்சுக்கிற ஆளுக. ரெண்டாவது, சரியா கதவை மூட முடியாத ஆளுக. உதாரணமா, என்ன மாதிரி S.P.B.ரேஞ்சுக்குப் பாடற ஆட்களுக்கு வெளிய பெரிய மேடை அது இதுன்னு இருந்தாதான் ஒரு மூடே செட் ஆகும். மற்றபடி இந்த பாத்ரூமுக்கு உள்ள இருந்து பாடற ஜோலியே நமக்கெல்லாம் கிடையாது.


ஆக இந்த ரெண்டு டைப் ஆளுகள் மட்டுமல்லாமல், வேற எந்த ஆளுக உள்ள போனாலும், ஒரு கண்ணாடி மட்டும் இருந்தால், ஒரே ஒரு நிமிஷமாவது அது முன்னால நின்னு அப்படி ஒரு angle-ல் ஒரு போஸ், இந்த angle-ல் இன்னொரு போஸ் - இது நடந்துக்கிட்டு இருக்கும்போதே மூஞ்சுக்கு ஒரு close-up கொடுத்து, அஷ்ட கோணல்னு சொல்லுவாங்களே அதெல்லாத்தையும் செஞ்சு பாத்து, தொப்பை இருக்கிற ஆளுக -அது இல்லாத ஆளு யாரு - மூச்ச ஒரு தம் கட்டி இழுத்து, வயிறை ஒரு எக்கு எக்கி,’எல்லாரும் சொல்ற மாதிரி அப்டி ஒண்ணும் தொப்பை பெரிசா இல்ல′ அப்டின்னு தன்னையே சாந்தி படுத்திக்கிட்டு……… இப்படியே கதை போகும். எல்லாம் தனியா இருக்கோம்ங்கற ஒரு காரணம்தான். தன்னிச்சைன்னு சொல்லுவாங்களே, அது இந்த இடத்தில மட்டும்தான். இதே கொனஷ்டைகளை வெளியே வந்து உங்க அப்பாவோ, மனைவியோ, பிள்ளைகளோ இருக்கும்போது செய்ய முடியுமா? பயந்திர மாட்டாங்க! வேப்பிலை அடிக்க ஆள் தேடி அடுத்த நிமிஷமே ஆளுக்கு ஒரு திசையா புறப்பட்டுருவாங்கல்லா! பாத்ரூம விட்டு வெளியே வந்திட்டா, உலகத்தில இவன மாதிரி டீசெண்ட்டான ஆளு வேற யாருங்கற மாதிரில்லா பீலா விட்டுடுறோம்; இல்லீங்களா?


என்ன சொல்ல வர்ரேன்னா, ஒரு முகத்திரை போட்டுக்கிட்டு, ஒரு வலைப்பதிவு வச்சிருந்தோம்னா, நமக்கு எந்த inhibition-ம் இருக்க வாய்ப்பில்லை; அதுவும் அனானிமஸ் என்றால் கேட்கவே வேண்டாம்.


நமக்கு நாமேகூட ஒரு எல்லை வச்சிருப்போமே, அதைக் கூட தாண்ட நாம் யோசிப்பதில்லை. சில பதிவுகள், பின்னூட்டங்களைப் பாத்து, ஒரு கோபத்திலோ, எரிச்சலிலோ அனானிமஸ்னு போட்டு ஒரு தாக்கு தாக்கிடுவோமான்னு ஒரு சின்ன நினப்பு எனக்கே வந்திருக்கு. ஆனா இதுவரை அந்த மாதிரி எண்ணம் வந்தவுடனேயே நான் அதைப் புறந்தள்ளியிருக்கிறேன். ஒழுங்கா -அதாவது, முகத்திரை இல்லாமல் இருக்கும்போதே - என் மாதிரி ஆளுக்கே (வயச சொல்றேன்)அந்த temptation வரும்போது இளம் ரத்தக்காரர்களான உங்களில் பலருக்கு எப்படி இருக்கும்? அதனால, நமக்கு நாமே ஒரு ‘லக்ஷ்மண் ரேகை’ போட்டுக்கிட்டாதானே எல்லாத்துக்கும் நல்லது.

(இதில என்ன கூத்துன்னா நானே ஒரு புனைப்பெயரில் பதிய ஆரம்பிச்ச கேசு. ‘அப்ப நீ மட்டும் ஏன் அப்டி பண்ணின?’ அப்டின்னு கேப்பீங்க. பதில் வச்சிருக்கேனே! அங்க பாத்துக்கங்க. முக்கியமா, எப்போ generation problem-த்தைத் தாண்டியாகிவிட்டது என்று நினைத்தேனோ அன்றே திரையை விலக்கி விட்டேன்.(ஆனா, எவ்வளவு சொன்னாலும் சில பேரு ‘ஐயா’ பட்டம் கட்டித் தனியே தள்ளி விட்டுர்ராங்க.ஒரு மூத்தவர் சொல்றதக் கேக்கணும்னு இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எங்கே தெரியுது! அதுக்குத்தானே புனைப் பெயரே வச்சிருக்கு!)

அதோடு, அனானிமஸ்னு வர்ர பின்னூட்டங்களை முடிந்தவரை கண்டுகொள்வதில்லை. அவன் யாரோ, எவனோ? கண்டவனுக்கெல்லாம் (கண்ட கஸ்மாலத்திற்கெல்லாம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம்)பதில் எழுதுவதற்கு நான் ஏன் மெனக்கெட வேண்டும் என்ற நினைப்புதான்.)

என் வேண்டுகோள் / suggestion / request….எது வேண்ணாலும் வச்சுக்கோங்க…நம்மள நாமே ஏன் மறைச்சிக்கணும். Let us love ourselves. பல நேரங்கள்ல என் எழுத்துக்களில் நான் என்னையே மூணாவது மனுஷனுடைய பார்வையில் பாக்கிறது மாதிரி உணர்ந்துள்ளேன்.அதுவும் என் ‘சொந்தக் கதை’ப் பதிவுகளில் என்னை நானே பாத்துக்கிற சந்தோஷம் நிஜமாவே நல்லா இருக்கு. என் ‘சுயத்தை’ நான் ஏன் மறைக்கவேண்டும்; நான் என்ன அவ்வளவு மோசமா? நான் என்ன திருடனா? கொலைகாரனா, என்னைப் பிறரிடம் இருந்து மறைத்துக் கொள்ள? உங்களில் ஒருவன் இல்லையா, நான்?

Let us all play the game fair;Let us all play it on the level ground.

முகத்திரைகளைக் களைந்து விட்டு, நம் நிஜ முகங்களோடு, நண்பர்களோடுகைகோர்த்துக் கொள்வோம். ஒரு புதிய ஆரம்பமாக இருக்கட்டுமே!


கொஞ்சம் வெக்கமாக இருந்தாலும், நான் சொன்ன காரணத்திற்காகவே எம் ‘மூஞ்சி’யைக்காண்பிக்க முடிவு செஞ்ச பிறகு மூணு வருடத்திற்கு முன்பு எடுத்த இந்தப் படமே அனுமதிக்கப் பட்டது துணைவியாரால். ‘ஈ’ன்னு இளிக்கிற படமெல்லாம் வேண்டாமாம்! ஆனா அத எப்படியும் ஒரு நாள் இல்லைன்னா, இன்னொடு நாள்,கடத்திட்டு வந்திடறேன், சரியா?



Nov 02 2005 09:09 am அவியல்... edit this
Rate this post at www.thamizmanam.com Current rating is:
(இதுவரை 3 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
72 Responses
Mathy Kandasamy Says: after publication. e -->November 2nd, 2005 at 9:44 am e
வாழ்த்துகள் தருமி!
//‘ஈ’ன்னு இளிக்கிற படமெல்லாம் வேண்டாமாம்! ஆனா அத எப்படியும் ஒரு நாள் இல்லைன்னா, இன்னொடு நாள்,கடத்திட்டு வந்திடறேன், சரியா?//
டிபிகல் தருமி. )
-மதி
ஜோ Says: after publication. e -->November 2nd, 2005 at 10:04 am e
தருமி,கிட்டதட்ட நான் கற்பனை பண்ணி வச்சிருந்த மாதிரியே இருக்கீங்க .புகைபடத்துக்கு நன்றி! மேலும் மேலும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஆவலாயிருக்கிறேன்
Thangamani Says: after publication. e -->November 2nd, 2005 at 10:16 am e
நல்லா இருக்கீங்க. 100 வது பதிவுக்கு வாழ்த்துகள்!
முகமூடி Says: after publication. e -->November 2nd, 2005 at 10:24 am e
150ஐ வயதிலும், 1500ஐ பதிவிலும் காண வாழ்த்துக்கள்.
அந்த தாடி தாத்தாத்தான் என்ன பொறுத்த வரை தருமி எப்பவுமே…
ராம்கி Says: after publication. e -->November 2nd, 2005 at 10:25 am e
தருமி,100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். என் பதிவில் நான் சார் என்று அழைத்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டேன். பார்த்தீர்களா? இந்த பன்மை மரியாதை கொடுக்கலாம் இல்லையா?
ஞானபீடம் Says: after publication. e -->November 2nd, 2005 at 10:29 am e
100-க்கு வாழ்த்துக்கள்! தருமி!!
//அவன் யாரோ, எவனோ? கண்டவனுக்கெல்லாம் (கண்ட கஸ்மாலத்திற்கெல்லாம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம்)பதில் எழுதுவதற்கு நான் ஏன் மெனக்கெட வேண்டும் என்ற நினைப்புதான்.)//
//Comment moderation is enabled… //
ஏகப்பட்ட கெடுபிடி போல இருக்கு!:-(
வசந்தன். Says: after publication. e -->November 2nd, 2005 at 10:43 am e
தருமி,நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
படத்தில் நீங்கள் நல்லாயிருக்கிறீர்கள். கொஞ்சம் நிறப்படமாப் போட்டிருக்கக்கூடாதா?கறுப்புவெள்ளைப்படம் நல்லா உயத்திவிடுது(அறிஞர்கள் மாதிரி). நெருக்கம் இல்லை. அந்நியத்தன்மை தெரியுது.
Awwai Says: after publication. e -->November 2nd, 2005 at 10:53 am e
1. Lonliness is pain; Solitude is bliss. There is a thin line between the two, and it is upto us to jump across!
2. There is a great deal of benefit in being anonymous. You are able put yourself in someone else’s shoes and think outside the box!Also, when you said, “atleast for a moment is it possible for you to consider that other religions could also be true”, readers will be more willing to take it from Dharumi than from Sam George. Also, familiarity breeds contempt.So, I think, this forum provides us the opportunity to get out of the socially defined self-identity, and we should make good use of it. Of course, I don’t appreciate hiding behind anonymity to abuse someone. Avarkalai pedigal endru solli pedikalai kevalapaduththavendam.
3. This photo you have posted doesn’t reflect the true SamG. Retirement time-la pension application etc.-kaaka eduththa passport size padamthaana idhu? Namma Mani Studio-vaa?I would like to see a picture like this: SamG dressed up in his typical denim outfit, with his glasses ‘carelessly’ resting over the head.
4. Newspaper illai-na, oru laptop thookeettu ponga. Western style-la utkaandhu type adikka vasadiya irukkum!
Suresh - Penathal Says: after publication. e -->November 2nd, 2005 at 11:01 am e
Quantity அதிகமானால், ஒரு நாள் இல்லை ஒரு நாள் Qaulityயும் அதிகமாகும் - பாடப்பாட ராகம், மூட மூட ரோகம் இல்லையா?
அப்புறம், இப்படி ஒரு போடோவை போட்டுட்டு, சார்னு கூப்பிடக்கூடாதுன்னா எப்படி சார்?:-)
ramachandran usha Says: after publication. e -->November 2nd, 2005 at 11:18 am e
அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததுஅதே நிலா…:)))))))))))))))))))))
Ramya Nageswaran Says: after publication. e -->November 2nd, 2005 at 11:51 am e
நூறாவது பதிவு வாழ்த்துகள்! நானும் உங்களை தருமின்னு தான் கூப்பிட்டுகிட்டிருந்தேன். நீங்க Amercian Collegeலே பாடம் எடுத்திருக்கீங்கன்னு படிச்சவுடனே தான் சாருக்கு மாத்திட்டேன். பின்னே? எங்க வூட்டுகாரரு படிச்ச காலேஜ் ஆச்சே..
ஈன்னு சிரிக்கலைன்னாலும் நல்லாத்தான் இருக்கு படம்
டி.பி.ஆர். ஜோசஃப் Says: after publication. e -->November 2nd, 2005 at 12:42 pm e
நம்மள போல சீனியர்ஸ் (பெரிசுங்கன்னும் சொல்லலாம் இளைஞர்கள் பாஷையில்) ரெண்டோ மூணோ பேர்தான் தமிழ்மணம் வலைப்பூக்களில் எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
நான் கூறுவது தவறாக இருக்கும் பட்சத்தில் 55 வயதைக் கடந்த தமிழ்மணம் வலைப்பூ எழுத்தாளர்கள் எல்லோரும் சேர்ந்து பெரிசுங்க சங்கம் ஒன்று அமைக்கலாம் என்று உத்தேசம்.
என்னையும் ஐயா, சார் என்றெல்லாம் நம் வலைப்பூ தோழர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடும்போதுதான் என் வயசே எனக்குத் தெரிகிறது!
தங்களுடைய நூறாவது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
குவான்டிட்டி கூட கூடத்தான் குவாலிட்டியும் கூடும். தொடர்ந்து எழுதுங்கள்.
மூகமூடியோ, புனைப் பெயரோ தேவையில்லை என்பதுதான் என்னுடைய அபிப்பிராயமும்.
kumaraess Says: after publication. e -->November 2nd, 2005 at 12:45 pm e
வாழ்த்துக்கள் தருமி,
“ஒரு மூத்தவர் சொல்றதக் கேக்கணும்னு இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எங்கே தெரியுது” ?
படத்தைப்பார்த்தபின் இதை ஓர் முன்னுதாரணமாகவா அல்லது பின்னுதாரணமாகவா எடுப்பது என்றுதான் எனக்கு குழப்பம்.
துளசி கோபால் Says: after publication. e -->November 2nd, 2005 at 1:07 pm e
தருமி,
100க்கு 100 வாங்கியாச்சா?:-))))
அதுசரி, படம் எங்கே? எல்லாரும் பார்த்துட்டுக் கமெண்ட் விட்டுக்கிட்டு இருக்காங்க!
துளசி கோபால் Says: after publication. e -->November 2nd, 2005 at 1:15 pm e
தருமி,
வந்துருச்சு படம் வந்துருச்சு!
ரொம்ப சிந்தனையிலே இருக்கீங்களா இல்லே சாந்தமா?:-)
இளவஞ்சி Says: after publication. e -->November 2nd, 2005 at 1:41 pm e
100க்கு வாழ்த்துக்கள் தருமி சார்!(படிச்சப்பதான் நான் வாத்தியாருகளை மதிக்கலை! இப்பவுமா? அதெல்லாம் முடியாது! நான் உங்களை சார்னுதான் கூப்பிடுவேன்!!)
ஏன்னு தெரியலை.. உங்களை நான் மீசை இல்லாம பாலசந்தர் பிரேம் கண்கண்ணாடியோட கற்பனைல வச்சிருந்தேன்!
Dondu Says: after publication. e -->November 2nd, 2005 at 2:29 pm e
வாழ்த்துக்கள் தருமி அவர்களே. எனக்குத் தெரிந்து நீங்கள், நான், ஜோசஃப், என்னார், கிச்சு ஆகியோர் 50 வயதைத் தாண்டியவர்கள். வெங்கட் சாமினாதன் அவர்கள் தீவிரமாகப் பதிவுகளில் இன்னும் இறங்காததால் அவரை நான் இங்கு சேர்க்கவில்லை. இல்லாவிட்டால் அவர்தான் சீனியர், அடுத்து நீங்கள் பிறகு நான்.
அன்புடன்,டோண்டு ராகவன்
Mohandoss Ilangovan Says: after publication. e -->November 2nd, 2005 at 2:38 pm e
தருமி,நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
We people in IT never mind in calling a person by his first name, it is quite naturual here. Even we call our CEO by his firstname. So for me there is no problem regarding calling you by your first name or your alias name.
தேசிகன் Says: after publication. e -->November 2nd, 2005 at 2:48 pm e
தருமி,100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். யாரையும் பற்றி கவலை படாமல் எழுதிக்கொண்டே இருங்கள்.
வசந்தன் Says: after publication. e -->November 2nd, 2005 at 2:51 pm e
Dondo said://வாழ்த்துக்கள் தருமி அவர்களே. எனக்குத் தெரிந்து நீங்கள், நான், ஜோசஃப், என்னார், கிச்சு ஆகியோர் 50 வயதைத் தாண்டியவர்கள். வெங்கட் சாமினாதன் அவர்கள் தீவிரமாகப் பதிவுகளில் இன்னும் இறங்காததால் அவரை நான் இங்கு சேர்க்கவில்லை. இல்லாவிட்டால் அவர்தான் சீனியர், அடுத்து நீங்கள் பிறகு நான்.//
இராம.கி இருக்கிறார்.மறவன் புலவு சச்சிதானந்தன் ஐயாவையும் சேர்த்துக்கொள்ளலாம். மாலன்???இன்னும் யாராவது வெளியே தெரியாமல் இருப்பார்கள்.
சுதர்சன் Says: after publication. e -->November 2nd, 2005 at 3:09 pm e
வெகு சீக்கிரத்தில் 100 பதிவுகளை எட்டிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் தருமி!
dharumi Says: after publication. e -->November 2nd, 2005 at 3:18 pm e
மதி,‘ஈ’ன்னு இளிக்கிற டிபிகல் தருமி’ அப்டீங்கிறீங்க; இல்லியா?(எப்படி நம்ம வெட்டு& ஒட்டு வேலை!)
ஜோ,“கிட்டதட்ட நான் கற்பனை பண்ணி வச்சிருந்த மாதிரியே இருக்கீங்க” - ஆக, ஒங்க கற்பனை எப்பவுமே இப்படித்தான், இல்லியா? இன்மேயாவது நல்ல கற்பனைகளை வளர்த்துக்கொள்ள வாழ்த்துக்கள்!!
தங்கமணி,நன்றி.appearances are deceptive.
dharumi Says: after publication. e -->November 2nd, 2005 at 3:21 pm e
ராம்கி,“என் பதிவில் நான் சார் என்று அழைத்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டேன்” - பாத்துட்டேன்; “மன்னிச்சிட்டேன்”!
ஞானபீடம்,நான் சொன்னது ‘நம்மள′ மாதிரி புனைப்பெயர் உள்ள ஆளுகளுக்கு இல்லல்லா. பேரே இல்லாம வர்ர ஆளுகளுக்கு. ஞானபீடம் அப்டின்கிறவர் சொல்றார்னா, எப்பவுமே ஒரே ஆளு அப்டிங்கிற அளவாவது தெரியும். அனானிமஸ்னா ஒண்ணுமே புரியாமப் போயிடுதே. அதனால அந்த நினப்பு.இன்னும் தப்புதான் நான் சொன்னதுன்னு நினைக்றீங்களா?
dharumi Says: after publication. e -->November 2nd, 2005 at 3:27 pm e
அவ்வை,“this forum provides us the opportunity to get out of the socially defined self-identity” - i do admit that one need not stick on to the socially defined identity. but i feel there has to be atleast ONE SINGLE identity. single identity is better than NO IDENTITY at all. once sombdoy goes behind anonymity, the human frailty could tend to make people cross the ‘lakshman rekha’.
dharumi Says: after publication. e -->November 2nd, 2005 at 3:29 pm e
துளசி,100க்கு 100 வாங்கியாச்சா?:-))))// - இல்ல, துள்சி, நம்ம நிலம ரொம்ப மோசமா போயிருச்சி. ரெண்டு பேரு என்ன சொல்றாங்கன்னு பாருங்க!!
Quantity அதிகமானால், ஒரு நாள் இல்லை ஒரு நாள் Qaulityயும் அதிகமாகும் ” - இது சுரேஷ்.“குவான்டிட்டி கூட கூடத்தான் குவாலிட்டியும் கூடும். தொடர்ந்து எழுதுங்கள்” -இதைச்சொன்னது ஜோசஃப்.
சுரேஷ், ஜோசஃப் - இரண்டு பேரும் என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியுது. ‘நல்லா பாடுறதுவரை விடமாட்டோம்னு சொல்லி once more.. once more.. அப்டின்னு கேட்டாங்களாமே, அது மாதிரி!!ம்..ம்ம்.. எனக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்…இப்படி மண்டபத்தில புலம்ப விட்டுட்டீங்களே’ய்யா…
dharumi Says: after publication. e -->November 2nd, 2005 at 3:37 pm e
முகமூடி,ஒரு திருத்தம்: (150- 10= 89) - இன்னும் இருக்கிற வருஷம்); இதை 150 - 61 = 89 என்று கொள்ளவும்
dharumi Says: after publication. e -->November 2nd, 2005 at 3:38 pm e
வசந்தன்,கொஞ்சம் நிறப்படமாப் போட்டிருக்கக்கூடாதா?// அடுத்த ரிலீஸ்ல பாத்துக்குவோம்.‘கறுப்புவெள்ளைப்படம் நல்லா உயத்திவிடுது(அறிஞர்கள் மாதிரி). ‘ - நீங்கள் அறிஞர் இல்லை என்று நேரடியாகச் சொல்லிவிடவேண்டியதுதானே.
ரம்யா,“எங்க வூட்டுகாரரு படிச்ச காலேஜ் ஆச்சே.. ” அவரையே ‘தருமி’ன்னு கூப்பிடச்சொல்லிற வேண்டியதுதானே!
உஷா,அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததுஅதே நிலா…:))))))))))))))))))))) - you mean on the marina beach? நம்ம “முழு நிலா”வைத் தான் காண்பிக்கவில்லையே!
dharumi Says: after publication. e -->November 2nd, 2005 at 3:40 pm e
இளவஞ்சி,உங்களை நான் மீசை இல்லாம …//ரீசன்டா ட்ரை பண்ணிப் பார்த்தேன், இளவஞ்சி. வீட்ல சோத்துப் பிரச்சனை வந்திட்டுது; சொன்னபடி மறுபடி வளத்துட்டேன். மனஷனுக்கு எங்க சுதந்திரம் இருக்கு, சொல்லுங்க! பெத்ததுகளும் அம்மாவுக்கு ‘ஜால்ரா’.
டோண்டு,“வெங்கட் சாமினாதன் … அவரை நான் இங்கு சேர்க்கவில்லை. இல்லாவிட்டால் அவர்தான் சீனியர்..”ஆஹா, அவரை இல்லாவிட்டாலும் அவர் பதிவையாவது இதோ போய் பார்த்துவிடுகிறேன். எனக்கும் சீனியரா…?
தேசிகன்,“யாரையும் பற்றி கவலை படாமல் எழுதிக்கொண்டே இருங்கள். ” - அதாவது, வாசிக்கிறவங்க பற்றிக் கவலைப் படாமல்-அப்டின்னு சொல்றீங்க. அதுதான எப்பவுமே பண்றது!
Dondu Says: after publication. e -->November 2nd, 2005 at 3:47 pm e
வெங்கட் ஸ்வாமினாதன் அவர்கள் பதிவைப் பார்க்க: http://vesaamusings.blogspot.com/
அன்புடன்,டோண்டு ராகவன்
dharumi Says: after publication. e -->November 2nd, 2005 at 3:49 pm e
மறந்துபோன முக்கிய விஷயம்: மதி, ஜோ, தங்கமணி, முகமூடி, ராம்கி, ஞானபீடம், வசந்தன்,அவ்வை, சுரேஷ், உஷா,ரம்யா, குமரேஸ், துளசி, இளவஞ்சி, டோண்டு, மோகந்தாஸ், தேசிகன், சுதர்சன் — அனைவருக்கும் அன்பும், நன்றியும்.
J. Rajni Ramki Says: after publication. e -->November 2nd, 2005 at 3:52 pm e
//வாழ்த்துக்கள் தருமி அவர்களே. எனக்குத் தெரிந்து நீங்கள், நான், ஜோசஃப், என்னார், கிச்சு ஆகியோர் 50 வயதைத் தாண்டியவர்கள். வெங்கட் சாமினாதன் அவர்கள் தீவிரமாகப் பதிவுகளில் இன்னும் இறங்காததால் அவரை நான் இங்கு சேர்க்கவில்லை. இல்லாவிட்டால் அவர்தான் சீனியர், அடுத்து நீங்கள் பிறகு நான்.
//அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததுஅதே நிலா…:)))))))))))))))))))))
Ada.. namma Maami mathiriye.. MGR kaalathu aaala…?
Persunga ellam onnu kooditaangaappppppaaaaaaaaaaaaaaaaaaaaa……:)))))))))))
டி.பி.ஆர். ஜோசஃப் Says: after publication. e -->November 2nd, 2005 at 4:14 pm e
குவான்டிட்டி கூடக்கூடத்தான்…
அது உங்களுக்கில்லை..
எனக்கு நானே சொல்லிக்கொண்டது.
No one needs to tell a quality person like you to aim for quality. Be assured. You are one of the best:-))))))
ramachandran usha Says: after publication. e -->November 2nd, 2005 at 4:19 pm e
அட பாவி ராம்கி, நா ரஜினி, கமல் காலத்துக்காரி. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்து வயசான பா(ர்)ட்டி ஆக்கிட்டியே? இது ஞாயமா? ஏதோ பீச்சுல பார்த்தவரோட முகம், இங்க போட்ட புகைப்படத்த பார்த்ததும் அதே ஆளுங்கரதுக்கு பழைய பாட்டஎடுத்துவிட்டா, கதைய மாத்திட்டீயேபா.
கோ.இராகவன் Says: after publication. e -->November 2nd, 2005 at 4:41 pm e
வாழ்த்துகள் தருமி. நூறு பதிப்புகள் கண்டமைக்குதான். இப்பத்தான் நான் இதுவரைக்கும் எத்தனை பதிவு போட்டிருப்பேன்னு எண்ணத் தோணுது. ஆனா எண்ணப் போறதில்லை. காரணம். அப்புறம் நூறாவது பதிவுன்னு அது மேல மட்டும் தனிப்பாசம் வந்திருமே. ஆகையால கணக்கில்லாமலே இருக்கட்டுமுன்னு விட்டுடப் போறேன்.
அப்புறம் உங்கள் புகைப்படத்தைப் போட்ட துணிவைப் பாராட்டுகிறேன். நல்ல முடிவு. பாரதிதாசன் புனைப்பெயர் வைத்துக் கொள்லவில்லையா என்று கேட்பார்கள். ஆனால் அவர்தான் கனகசுப்புரத்தினம் என்று நமக்கெல்லாம் தெரியும். அப்படியா இங்கு நிலை இருக்கிறது? ஊரும் சொல்லாமல் பேரும் சொல்லாமல் ஏதோ ஒரு புனைப்பெயரில் வந்து பதிக்கலாமே.
ஆனாலும் நேர்மையைக் கருதி, நான் என்னுடைய பெயரிலேயே பதிவுகளை இடுகிறேன். புகைப்படம்? ஒரு மாதம் கழித்து இட வேண்டும். வீட்டில் நெட் வசதி இல்லாததுதான் பிரச்சனை.
மீண்டும் ஒருமுறை உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
Josaph Irudayaraj Says: after publication. e -->November 2nd, 2005 at 5:00 pm e
ஏற்கனவே ஒரு பதிவில் சதம் போட வாழ்த்துகள் சொல்லியாச்சு.இப்ப போட்டுடீங்க!… சூப்பர்ப்.வாழ்த்துகள்!
தொடருங்கள் இன்னும் உங்களிடமிருந்து நிறைய பாக்கி இருக்கு, எல்லாத்தையும் வாங்குற வரையில் நம்ம தமிழ்மண வாசகர்கள் உங்களை விடமாட்டாங்கன்னு நினைக்கிறேன்.
//…(ஆனா, எவ்வளவு சொன்னாலும் சில பேரு ‘ஐயா’ பட்டம் கட்டித் தனியே தள்ளி விட்டுர்ராங்க.ஒரு மூத்தவர் சொல்றதக் கேக்கணும்னு இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எங்கே தெரியுது! அதுக்குத்தானே புனைப் பெயரே வச்சிருக்கு!)//
இப்போ இந்த “சார்” அல்லது “ஐயா” பிரச்சினைக்கு வருவோம்.
சதாரணமா ஒருவர் மற்றவரோடு பேசும் போது அவரை மரியாதையுடன் விளிக்க வேண்டும் என்பது நாகரீகம். அது வயதுக்கு கொடுக்கிற மரியாதையாக நினைக்க கூடாது என்பது என் வாதம்.
உதாரணமாக நான் பார்த்தவரையில் இங்கு சவுதி அரேபியாவில் இருக்க கூடிய பிலிப்பைன் நாட்டவர்கள் தங்களுக்குள் யாரை பார்த்து பேசினாலும் “Sir” என்று தான் விளித்து பேசுவார்கள், வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது ஓரே வயதை ஒத்தவர்கள் கூட தங்களுக்குள் அப்படி தான் விளிப்பார்கள்.
இங்கிலாந்திலே போலீஸ் உத்தியோகத்தவர்கள் கூட மற்றவர்களை(சாதாரண மக்களை) “sir” என்று விளிப்பதை பார்த்திருக்கிறேன்,(அட டிவீயிலங்க, நேரில் எப்படியோ? தெரிஞ்சவங்க சொல்லுங்க!)
அதன் பிறகு தான் நானும் எல்லா நபர்களையும் “சார்” க்கு பதிலாக “ஐயா” என்று தமிழில் விளிக்க தொடங்கினேன்… இன்னமும் இங்கு எனது நண்பர்கள் எல்லாரையும் அப்படி தான் விளிக்கிறேன். யாரையும் பார்த்தவுடன் நாம சாதாரணமா ஆங்கிலத்தில் ” Good morning or God evening ” இப்படி தான் சொல்லி வரவேற்போம்.
ஆனால் தமிழில் “வணக்கம் ஐயா” அப்படீன்னு உபசரித்துப்பாருங்கள் அதிலுள்ள சுகமும், ஒரு ஐக்கிய உணர்வும் தனி தான்.
ஐயா! என்கிற அழகான தமிழ்ப்பதம் ஏதோ நம்மை விட உயர்ந்தவங்களுக்கு மட்டும் (பணம்,ஜாதி பார்த்து அதில் உயர்ந்தவங்களா இருக்கிறதா நினைக்கிறவுங்களுக்கு) பாவிக்கிறதா ஓரு எண்ணம் உருவாக்கப்பட்டுவிடதனால் தான், இந்த “ஐயா” நம்மைவிட்டு தனித்து நிற்க பார்க்கிறாரா தெரியவில்லை?மற்றும் படி ஒன்றுமில்லை,
இனி எல்லோரையும் ஐயான்னு கூப்பிடலாமுங்களா ஐயா!
இராமநாதன் Says: after publication. e -->November 2nd, 2005 at 5:16 pm e
வாழ்த்துக்கள் தருமி.
//குவான்டிட்டி கூட கூடத்தான் குவாலிட்டியும் கூடும். தொடர்ந்து எழுதுங்கள்//இந்த தைரியத்தில் தான் இங்க பலரும் எழுதறோம்.
போட்டோ போட்டுட்டீங்க. கொஞ்சம் நோபல் வாங்கினவருக்கான சாயல் தெரிஞ்சாலும், அது நீங்க தான்னு மக்கள் ஒத்துக்கறாங்க.. ஆனா, பாருங்க நான் எவ்ளோ ரீஜெண்டா போட்டுருக்கேன்.. ஆனா ஒருவரும் நம்ப மாட்டேங்கறாங்களே…
குமரன் Says: after publication. e -->November 2nd, 2005 at 5:33 pm e
‘வாழ்த்துகள் தருமி ஐயா’ என்று சொல்லத்தான் நினைக்கிறேன்…ஆனால் வாழ்த்த வயதில்லை…அதனால் வணங்குகிறேன்…
இந்த மாதிரி சொல்வது இப்ப ரொம்ப பழசோ?
J. Rajni Ramki Says: after publication. e -->November 2nd, 2005 at 5:37 pm e
//அட பாவி ராம்கி, நா ரஜினி, கமல் காலத்துக்காரி.
Aaaha… Maami nammalai “perusu” aakurathukku try pannraale…:-).
Thevuda.. Thevud.. ennai konjam paaruda…
madhumitha Says: after publication. e -->November 2nd, 2005 at 5:46 pm e
100 பதிவு வரை தொடர்ந்தமைக்கு பாராட்டும்,நன்றியும்
இப்ப டி.வி யில கோர்ட்டுக்கு அழச்சுட்டு போறவங்க எல்லாம் சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுக்கிறாங்க வீடியோவுக்கு
உங்களை காட்டியதற்கு எல்லோருக்கும் மகிழ்ச்சியே.
ஐயா இராமநாதன்
இப்பதான் உங்க பதிவுக்கு போய் வந்தேன்.புகைப்படத்தில் நீங்கதான்னு நம்புறோங்க
madhumitha Says: after publication. e -->November 2nd, 2005 at 5:47 pm e
100 பதிவு வரை தொடர்ந்தமைக்கு பாராட்டும்,நன்றியும் தருமி (ஐயா!!!)விட்டுப்போச்சு எடுத்து ஒட்டுறப்போ
padma arvind Says: after publication. e -->November 2nd, 2005 at 5:49 pm e
வாழ்த்துக்கள் தருமி. நகர உயர்நிலை பள்ளியில் ஆசிரியர்களை இனிஷியலுடன் அழைக்கும் பழக்கம் இருந்தது (தயாநிதி என்பவரை VDN என்று)நேரில் சார் என்றும் மற்றவரிடம் சொல்லும்போது இனிஷியல் மட்டும் என்று. அதன்பிறகு சார் என்று அழைத்து பழக்கம் இல்லை. வெகுநாட்களுக்கு பிறகு சமீபத்தில் ஒரு பெண் என்னை மேடம் என்று அழைத்து அதுவும் வர்த்தைக்கு வார்த்தை ஒரு மாதிரி கஷ்டமாக இருந்தது. பெயர் சொல்லி கூப்பிடு என்றாலும் மறுத்துவிட்டார்.உஷா: நீங்க சிம்பு, தனுஷ் காலம் அப்படின்னுகூட சொல்லிக்கலாம். வயது உடலுக்குதானே தவிர மனசுக்கு இல்லை:)
test Says: after publication. e -->November 2nd, 2005 at 6:19 pm e
Congrats Tharumi.I have gained a lot from ur posts.
- inomeno
chiththan Says: after publication. e -->November 2nd, 2005 at 10:06 pm e
வணக்கம் சார் வாழ்த்துக்கள்! மதம் பற்றிய உங்கள் பதிவுகள் அற்புதமானவை.தமிழ்மணத்தின் மூலம் நட்பு வட்டம் கிடைத்தில் மிகவும் மகிழ்ந்தேன்.
dharumi Says: after publication. e -->November 2nd, 2005 at 10:36 pm e
ஒண்ணுமே புரியலையே! - எனக்கும்தான். 2 முறை போட்டுட்டேன்:
இங்கேயும் கொடுக்கறேன், நீங்களே போட்டுடுங்க:
100 பதிவுகள் கண்ட தருமிக்குப் பொற்கிழி கிடைக்க சொக்கன் அருள்புரியட்டும்!
http://kasi.thamizmanam.com/?item=40 : எங்கெல்லாம் முகமூடிபோடலாம்?http://kasi.thamizmanam.com/?item=41 : எங்கெல்லாம் முகமூடி போடலாம் - மறுபார்வைhttp://kasi.thamizmanam.com/?item=134 : முகமூடியே தேவலை.
என் 2 நயா பைசாக்கள் (முன்னமே எழுதியதிலிருந்து : //விவாதம் விமரிசனத்திலிருந்து வேறுபடுகிறது விவாதத்தில் மாற்றி மாற்றி பதில் கொடுத்துக்கொண்டே இருப்பர். ஒருவர் கொடுத்த தற்போதைய பதிலுக்கு பதில் கொடுக்கும் அடுத்தவர் புதிதாய்க் கிளப்பும் கேள்விகள் விவாதத்தை எங்கோ கொண்டு போகின்றன. பதில் கொடுக்கும்போது முகமூடி அணிந்தவர் எளிதில் எத்தகைய தாக்குதலை வேண்டுமானாலும் வைக்கமுடியும். 'இழப்பத்ற்கு ஒன்றுமில்லை, அடைவதற்கோ அடுத்தவனின் வலி இருகிறது' என்ற ஒரு ஒருதலைபட்சமான நிலை ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகை செய்யுமா?' இது சந்தேகமே. எனவே, கலை, இலக்கியம், அரசியல்,சினிமா தவிர்த்து, (புனை)படைப்புகளின் மேலான விமரிசனங்களைத் தவிர்த்து, மற்ற துறைகளில், தீவிர விவாதக் களத்தில் முகமூடிகள் பங்கேற்பது சரியாக இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.//
dharumi Says: after publication. e -->November 2nd, 2005 at 11:03 pm e
ஒரு சிறு முன்குறிப்புடன் இதற்கு முந்திய பதிவைப் போட்டிருக்கவேண்டும். காசி இரண்டுமுறை அனுப்பிய பின்னூட்டம் இங்கே ‘அச்சேறாதலால்’ தனியாக அனுப்பிய பின்னூட்டத்தை வெட்டி, ஒட்டி இங்கு ஏற்றியிருக்கிறேன்.
வெங்கட் Says: after publication. e -->November 2nd, 2005 at 11:33 pm e
கொஞ்சம் நாட்களாக வலைப்பதிவு எழுதுவது, வாசிப்பது பின்னூட்டிடுவது எல்லாமே குறைந்திருந்தாலும் அவ்வப்பொழுது தவறாது படித்துவரும் வலைப்பதிவுகளில் உங்களுடையதும் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.மிக்க அன்புடன்
P.V.Sri Rangan Says: after publication. e -->November 3rd, 2005 at 6:10 am e
தருமி,என் வாழ்த்தும் ஆசியும் என்றும் உங்களுக்கு உண்டு!உடல் நலத்தோடு நீண்ட காலம்(100 ஐக் கடந்து)நீங்களும்,உங்கள் துணைவியாரும் வாழ்ந்து நமக்கு ஆலோசனை செய்யணும்.அன்புடன்ஸ்ரீரங்கன்
moses Says: after publication. e -->November 3rd, 2005 at 8:08 am e
i have learned a lot from your posts dharumi,infact when i was in a confused state regarding the religion, your words pushed me to analyse more rationally the preaches from pastors(??????)thanks a lot dharumi,i wish you a hale and healthy life
சங்கரய்யா Says: after publication. e -->November 3rd, 2005 at 5:39 pm e
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
Awwai Says: after publication. e -->November 3rd, 2005 at 8:45 pm e
SamG! like everyone else, I too agree that you analysis of religions is good. However, you had very little to deny the existance of God, and I had pointed out the deficiencies in your stance on that. I still am eager to hear your response on that.anbudan Awwai.
Aruna Says: after publication. e -->November 3rd, 2005 at 9:11 pm e
எங்கேயோப் பார்த்த மாதிரி இருக்கே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். உஷாப் பாட்டே பாடி விட்டார் 50 வயதுக்கு மேற்பட்ட பெரிசுகள் லிஸ்டில் இன்னும் ஒருத்தரை மறந்துவிட்டீர்களே
நிறைய எழுத வாழ்த்துக்கள்.
அருணா.
dharumi Says: after publication. e -->November 3rd, 2005 at 11:23 pm e
டி.பி.ஆர். ஜோசஃப்,அம்மாடியோவ்! என்ன இப்படி போட்டுட்டீங்க!!
ராகவன்,எண்ணப் போறதில்லை. காரணம். அப்புறம் நூறாவது பதிவுன்னு அது மேல மட்டும் தனிப்பாசம் வந்திருமே// வந்திச்சே…90-ஐத் தாண்டியதுமே அந்த நினப்பு, பாசம் எல்லாமே வந்திருச்சி!.
ஜோசஃப் இருதயராஜ்,இனி எல்லோரையும் ஐயான்னு கூப்பிடலாமுங்களா ஐயா! // கூப்புடுங்க, ஐயா!
‘ரம்’நாதர்,ஒருவரும் நம்ப மாட்டேங்கறாங்களே… // எப்படி நம்ப முடியும் - இப்படி ஒரு அழகா அப்டின்னுதான்! பொறாமை…உடுங்க!
dharumi Says: after publication. e -->November 3rd, 2005 at 11:26 pm e
ரஜினி ராம்கி, உஷா - உங்க இரண்டு பேருக்கும் ஒரு கட்டப் பஞ்சாயத்து
ரஜினி ராம்கி, நல்ல பிள்ளையா இருக்கணும்; பெரியவங்ககூட சண்டை எல்லாம் போடக்கூடாது.
உஷா, கண்டுக்காதீங்க. நீங்க ரஜினி வயசு/காலத்து ஆளுதான்; உங்களைப் போய் அப்படி சொல்றாரு - எம்.ஜி.ஆர். காலத்து ஆளுன்னு..!? தப்பாதான் சொல்றாரு.
dharumi Says: after publication. e -->November 3rd, 2005 at 11:28 pm e
மதுமிதா,“இப்ப டி.வி யில கோர்ட்டுக்கு அழச்சுட்டு போறவங்க எல்லாம் சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுக்கிறாங்க ” //என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியலையே!
பத்மா,வயது உடலுக்குதானே தவிர மனசுக்கு இல்லை:) //அது என்னவோ தெரியலை; 45+ ஆளுகள் எல்லாமே இப்படிதான் சொல்றாங்க..!
dharumi Says: after publication. e -->November 3rd, 2005 at 11:28 pm e
வெங்கட்,“அவ்வப்பொழுது தவறாது படித்துவரும் ” //நம்ம நண்பர் ஒருவர் பசங்களைக் கூட்டிக்கிட்டு முதுமலைக்கு டூர் ஒண்ணு போனார்; அவர் பேசுற விஷயங்கள் பல ரொம்ப நல்லா இருக்கும்; ரசிக்கலாம். பையன் ஒருவன் ‘சார், இங்க பஸ் அடிக்கடி வருமா’ன்னு டேட்டான். அவர் பதில்: ‘ஓ! பஸ் எல்லாம் அப்பப்போ, அடிக்கடி, rare-ஆ, எப்பவாவது வருமே !by the by, இப்ப நீங்க என்னாங்கறீங்க??!!
dharumi Says: after publication. e -->November 3rd, 2005 at 11:29 pm e
குமரன்,ரொம்ப பழசோ// அவ்வளவு பழசில்ல…just என் வயசுதானிருக்கும்!!
ஸ்ரீரங்கன்,அவ்வளவெல்லாம் வேணாங்க. என்ன வேணுங்கிறத சீக்கிரம் சொல்லிடறேன்.
சங்கரய்யா,மிக்க நன்றி
dharumi Says: after publication. e -->November 3rd, 2005 at 11:30 pm e
இனோமினோ, சித்தன்,இரண்டு பேரும் மதம் பற்றிய பதிவுகளைப் பற்றிச் சொல்லியுள்ளீர்கள்.நூத்துக்கு ஏழு பழுதில்லை என்கிறீர்கள்…நன்றி !!
மோசஸ்,உங்களுக்கு வயது 25+ என்றால் பரவாயில்லை. ஏனெனில், சின்னப் பசங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ, கடவுள் பயம் வேண்டும் என்பது என் எண்ணம்.
J. Rajni Ramki Says: after publication. e -->November 4th, 2005 at 12:09 am e
//50 வயதுக்கு மேற்பட்ட பெரிசுகள் லிஸ்டில் இன்னும் ஒருத்தரை மறந்துவிட்டீர்களே
அட.. இங்கே பாருங்கப்பா, பட்சிங்க தானா வந்து வலையில மாட்டுதுங்க…
தருமி ஸார், பெரிசுங்க ஸ்பெஷல்னு டைட்டிலை மாத்திடுங்க
dharumi Says: after publication. e -->November 4th, 2005 at 12:16 am e
ரஜினி ராம்கி,class recognizes class !! இது பிடிக்கலைன்னா, வயசு recognizes வயசு-ன்னு சொல்லிக்கிங்க’ப்பா!
முகமூடி Says: after publication. e -->November 4th, 2005 at 1:08 am e
// // பதில் கொடுக்கும்போது முகமூடி அணிந்தவர் எளிதில் எத்தகைய தாக்குதலை வேண்டுமானாலும் வைக்கமுடியும். ‘இழப்பத்ற்கு ஒன்றுமில்லை, அடைவதற்கோ அடுத்தவனின் வலி இருகிறது’ என்ற ஒரு ஒருதலைபட்சமான நிலை ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகை செய்யுமா?’ இது சந்தேகமே. எனவே, கலை, இலக்கியம், அரசியல், சினிமா தவிர்த்து, (புனை)படைப்புகளின் மேலான விமரிசனங்களைத் தவிர்த்து, மற்ற துறைகளில், தீவிர விவாதக் களத்தில் முகமூடிகள் பங்கேற்பது சரியாக இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து //
புனை பெயர்ல எழுதறவங்கள பத்திய கருத்தா இது… எதேச்சையா கண்ல பட்டிச்சா… பாத்தமா.. போய்க்கிட்டே இருந்தமான்னு இல்லாம நாம மட்டும் என்னத்துக்கு அத பத்தி விளக்கம் கேட்டு, அப்புறம் அது ஒரு வேளை தீவிர விவாதமா ஆகி? சரி.. கருத்துக்கு நன்றி… போய்ட்டு வரேங்க..
நல்லடியார் Says: after publication. e -->November 4th, 2005 at 2:22 am e
தருமி,
மதநம்பிக்கைகள் பற்றிய தங்கள் பதிவுகளின் பின்னூட்டங்களில் நமக்குள் அதிக தொடர்பு ஏற்பட்டது என நினைக்கிறேன். கடவுள் மறுப்பிற்கு தாங்கள் செய்த மதங்கள் பற்றிய ஒப்புநோக்கலில் இஸ்லாம் குறித்த கருத்துக்கள் பாரபட்சமாகப் பட்டது.
உங்களின் கேள்விகளுக்கு (இஸ்லாம் பற்றிய) தேவையான பதிலை தமிழோவியம் தொடருக்குப் பின் விரிவாக தரலாம் என நினைத்திருந்தேன். துரதிஷ்டவசமாக தமிழ்மணம் கொள்கைகள் அதற்கு அனுமதிக்கவில்லை.
எனினும் உங்களுக்கு தனி மடலாகவோ அல்லது சம்பந்தப்பட்ட தொடரில் பின்னூட்டமாகவோ இடுகிறேன். அவற்றில் உங்கள் ஐயங்கள் தெளிவு படுத்தப்பட்டால் நடுநிலையாக உங்கள் கருத்தை மீண்டும் தொடராக இட வேண்டுகிறேன்.
மேலும் உங்களின் தேடல்கள் தொடரும் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். ஆக தொடர்ச்சியான தேடல்களின் உங்கள் அனுபவத்தை மென்மேலும் பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஞானபீடம் Says: after publication. e -->November 4th, 2005 at 9:30 am e
//எதேச்சையா கண்ல பட்டிச்சா… பாத்தமா.. போய்க்கிட்டே இருந்தமான்னு இல்லாம நாம மட்டும் என்னத்துக்கு அத பத்தி விளக்கம் கேட்டு, அப்புறம் அது ஒரு வேளை தீவிர விவாதமா ஆகி? … // - said: Mugamoodi
அய்யா முகமூடியாரே!, (நீரும் ஒரு நூறு பதிவு போட்டுட்டு அப்புறமா இப்டி,) அவுங்க இதச் செய்யக் கூடாது, இவுங்க அதச் செய்யனும்னா- கூடவே ஜாதகக் குறிப்பும் அட்டாச் பண்ணனும்- அப்டீன்னு சொல்லுமய்யா!!!
ஒமக்கும் சொதந்திரம் உண்டல்லோ!!!
ஞானபீடம் Says: after publication. e -->November 4th, 2005 at 9:31 am e
//எதேச்சையா கண்ல பட்டிச்சா… பாத்தமா.. போய்க்கிட்டே இருந்தமான்னு இல்லாம நாம மட்டும் என்னத்துக்கு அத பத்தி விளக்கம் கேட்டு, அப்புறம் அது ஒரு வேளை தீவிர விவாதமா ஆகி? … // - said: Mugamoodi
அய்யா முகமூடியாரே!, (நீரும் ஒரு நூறு பதிவு போட்டுட்டு அப்புறமா இப்டி,) அவுங்க இதச் செய்யக் கூடாது, இவுங்க அதச் செய்யனும்னா- கூடவே ஜாதகக் குறிப்பும் அட்டாச் பண்ணனும்- அப்டீன்னு சொல்லுமய்யா!!!
ஒமக்கும் சொதந்திரம் உண்டல்லோ!!!
நாராயண… நாராயண…. நாராயண!
dharumi Says: after publication. e -->November 4th, 2005 at 2:50 pm e
முகமூடி,“போய்ட்டு வரேங்க.. ” //- போய்ட்டு வாங்க… அப்பப்ப வந்து போய்கிட்டு இருங்க…
ஞானபீடம்,“அய்யா முகமூடியாரே!, (நீரும் ஒரு நூறு பதிவு போட்டுட்டு அப்புறமா இப்டி,) அவுங்க இதச் செய்யக் கூடாது, இவுங்க அதச் செய்யனும்னா- கூடவே ஜாதகக் குறிப்பும் அட்டாச் பண்ணனும்- அப்டீன்னு சொல்லுமய்யா!!! ” //அய்யா ஞானபீடம், நீங்க எப்பவுமே ‘பீடத்திலேயே’ நிக்கிற ஆளு. அப்படி உசரத்தில ஞானத்தோட நின்னும் ஒரு ‘பறவைப் பார்வை’ கிடைக்கல போல இருக்கே!
நான் பதிய ஆரம்பிச்ச நாள்: 24.4.’05 அந்த மாதம் 9 பதிவுகள்அடுத்த மாதத்தில் மொத்தமே 3 பதிவுகள்;ஜூன் மாதத்தில் -11′
ஜூலை மாதத்தில் இருந்துதான் நீள் பதிவுகளும், நான் எனது நல்ல சில முயற்சிகள் என்று நினைக்கும் பதிவுகளையும் எழுத ஆரம்பித்தேன். முதல் முப்பதுமே எனது சோதனை முயற்சிகள் போலத்தான். 16ம் தேதி என் 31 வது பதிவின் தலைப்பு: “முகத்திரை களைகிறேன்”. அதிலேயே என் ‘ஜாதகம்’ அட்டாச் பண்ணியாச்சு, அய்யா. அய்யா, உங்க கண்ணில அது படல போல.
அதனால, நீங்க சொல்றது மாதிரி “நீரும் ஒரு நூறு பதிவு போட்டுட்டு அப்புறமா இப்டி…” - நூறு பதிவு போட்டுட்டு நான் இத சொல்லலைங்க’ய்யா; முகத்தை மூடிக்கிட்டு எழுதுறது நல்லா இல்லைன்னு பட்டதாலதானய்யா அப்பவே முகத்திரை களைஞ்சிக்கிட்டேனய்யா! 100-வது பதிவிலே சேத்தது படம் மட்டும்தானய்யா.சரீங்களா, அய்யா?
அன்பு Says: after publication. e -->November 4th, 2005 at 3:15 pm e
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். நிறைய விடயங்கள் எழுதிவருகின்றீர்கள், புதியனபல வேறொருபார்வையில் அறியமுடிகிறது மிக்க நன்றி.
நீங்கள் சொல்லும் குளியறை தவிர்த்து, சிலநேரம் மின்தூக்கிகளிலும் இதுபோல் நடந்துகொள்கிறேன். பாடுவது, கண்ணாடியிருந்தால் கோணங்கித்தனம் பண்ணுவது, இன்னபிற…:)
//மோசஸ்,உங்களுக்கு வயது 25+ என்றால் பரவாயில்லை. ஏனெனில், சின்னப் பசங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ, கடவுள் பயம் வேண்டும் என்பது என் எண்ணம்.//என்னுடைய கருத்தும் இதுதான். அந்தப் பயம்குறையத்தான் நிறைய சிக்கல்கள் வருகிறது!
மற்றப்படி, ஞானபீடமும், முகமூடியும் பேசிக்கிறது உங்க ஜாதகம் பற்றியதல்ல என்பது என்னுடைய அனுமானம்:)
dharumi Says: after publication. e -->November 4th, 2005 at 3:21 pm e
அன்புள்ள நல்லடியாருக்கு,
‘எனக்கு மதம் பிடிக்கவில்லை’ என்ற என் பதிவுகளை அடுத்து வந்த ‘deafening silence’ கொஞ்சம் ஆச்சரியம் தந்ததென்னவோ உண்மைதான். மெளனம் கலை(ந்)த்தது சந்தோஷமே.
“….துரதிஷ்டவசமாக தமிழ்மணம் கொள்கைகள் அதற்கு அனுமதிக்கவில்லை.” // - இப்போதும் நிலை அதேதானே. “தீவிர விவாதக் களத்தில் முகமூடிகள் பங்கேற்பது சரியாக இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.”// நல்லடியார் என்பது தங்கள் புனைப்பெயரென்றே நினைக்கிறேன். மேலே காசி கூறியிருப்பது ஒரு விதிபோல உங்களைக் கட்டுப்படுத்துமே; இல்லையா?
நான் இரு கரம் கூப்பி, எல்லோரிடமும் ‘ I am so and so…’ என்று கூறி முகமன் செய்து கொண்டு விட்டேன். அதைப்போல என்னிடம் பேச வருபவரைப் பற்றி நானும் அறிந்து, அவரோடு கை குலுக்குவதே முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
“உங்கள் ஐயங்கள் தெளிவு படுத்தப்பட்டால் நடுநிலையாக உங்கள் கருத்தை மீண்டும் தொடராக இட வேண்டுகிறேன். “// என் கருத்துக்கள் மாறினாலோ, மாற்றப்பட்டாலோ அதை வெளியிட எனக்கு எந்த வித தயக்கமும் இருக்காது என்று என்னால் உறுதியளிக்க முடியும். நான் ஒரு ‘confused traveller’ இல்லை என்ற நம்பிக்கை எனக்கு. I feel confident that i stand on ‘terra firma’ !
தனிமடல்கள் மூலம் உங்களோடு one-to-one என்ற முறையில் உங்களைப்பற்றித் தெரிந்து கொண்டு,தொடர்பு கொள்வதும் எனக்கு உடன்பாடே. உங்களைப் பற்றிய தனிப்பட்டக் குறிப்புகளை (personal details and identity)எனக்குள் வைத்துக் காத்துக்கொள்ள என்னால் உறுதி தரமுடியும். என்மீது அந்த நம்பிக்கை இருந்தால் …
இருமுறைகளில் எதுவும் எனக்கு உடன்பாடே.
“தொடர்ச்சியான தேடல்களின் உங்கள் அனுபவத்தை மென்மேலும் பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள்.” // - மிக்க நன்றி.
dharumi Says: after publication. e -->November 4th, 2005 at 3:55 pm e
அனைவரின் பார்வைக்கும் இதை வைக்கிறேன்:
http://kuppai.blogspot.com/2005/10/blog-post.html#comments
இத்தகவலை இங்கு இடுவதற்கு இனிதான் பதிவாளர் ‘அன்பிடம்’ உத்தரவு கேட்க வேண்டும் !!
அன்பு Says: after publication. e -->November 4th, 2005 at 4:28 pm e
இதிலென்ன பெரிய உத்தரவு…!?என்னுடைய ‘குப்பை’யிலும் பிறருக்கு பயன்படும் விடயம் ஏதேனுமிருந்தால் எனக்கு மகிழ்ச்சியே. நன்றி.
அன்பு Says: after publication. e -->November 11th, 2005 at 7:34 am e
class recognizes class !! இது பிடிக்கலைன்னா, வயசு recognizes வயசு
இந்தசேதி பார்த்தீங்களா தருமி (சார்)…Senior Citizen Bloggers Defy Stereotypes
madhumitha Says: after publication. e -->November 11th, 2005 at 9:45 am e
///மதுமிதா,“இப்ப டி.வி யில கோர்ட்டுக்கு அழச்சுட்டு போறவங்க எல்லாம் சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுக்கிறாங்க ” //என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியலையே!///
அய்யாகொல குத்தம்,பிராட்-டு தனம் பண்றவங்க டி,வி.ல சிரிச்சுட்டு போஸ் குடித்துட்டு போறாங்க.சின்சியரா எழுதுற நீங்க சிரிச்சுட்டு போஸ் கொடுக்கறது தப்பில்ல ன்னு சொன்னேன்.
அதான் சிரிச்சிட்டே அழ வெச்சுட்டீங்களே.
இன்னும் பல காலம் உடல் ஆரோக்கியத்தோடு வாழணும் நீங்க.
madhumitha Says: after publication. e -->November 11th, 2005 at 9:48 am e
பாத்ரூம் எழுத்தாளர்களப் பத்தி சொன்னீங்கபாத்ரூம் படிப்பாளர்கள பத்தி சொல்லலியே.சொன்னா அந்த லிஸ்ட்-ல சேத்துக்கோங்க என்னை.குடும்ப வேலை,குழந்தைகள்,வெளி வேலைகள்-னு இருக்கமொத்த பரீட்சையும் அப்படி தான் எழுதி பாஸானேன்.
குழலி Says: after publication. e -->November 17th, 2005 at 6:33 pm e
அதிவிரைவில் சதமடித்து விட்டீர் வாழ்த்துகள்… சதம் சத்தாகவும் உள்ளது…
நன்றி

3 comments:

Dr.Rudhran said...

என்னவோ சமீபத்தில் இந்த முகம்காட்ட அஞ்சுபவர்கள் பற்றி நிறையவே எழுதப்படுகிறது. கிருமிக்கலா அடையாளம் கண்டுகொண்டால்தான் நாசினிகளை உருவாக்க முடியும். வாழ்த்துகள்.

ராஜ நடராஜன் said...

மருத்துவர் ருத்ரன் பதிவிலிருந்து 2005ம் வருடம் நோக்கிய பயணம்.

Thekkikattan|தெகா said...

இது போன நூற்றாண்டில எழுதின பதிவா? இது மாதிரி இன்னும் வாசிக்காம எத்தனை பதிவுகள் இருக்குதோ... ஆனா, எப்ப வேணாலும் வைச்சி வாசிக்கலாமுங்கோவ்... ஏதாவது மாற்றம் நடந்திருக்கா இந்தப் பதிவையொட்டி ;-)

Post a Comment