உங்கள் தூண்டுதலோ, உங்கள் கட்சியின் ஆதரவோ இன்றி தன்னிச்சையாகத்தான் குஷ்பூ எதிர்ப்பு போராட்டம் நடக்கிறது என்று சொல்லியுள்ளீர்கள்.
நம் “தமிழ்ப் பண்பாட்டு’க்கு எழுந்துள்ள சவாலை முறியடிக்க இது மக்களின் மத்தியில் சுயமாகப் பூத்த ஒரு போராட்டம் என்று சொல்லியுள்ளீர்கள். இருந்தாலும் உண்மை உலகத்துக்கே தெரிந்ததுதான். அதை விடுங்க.
நான் சொல்ல வந்தது:
* பெயர்கள் வைப்பதில்கூட இருந்த ஜாதீய முறையை மாற்ற, ஒழிக்க நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக்கொள்ள உங்கள் சமூகத்தினரைக் கேட்டுக்கொண்டீர்கள். இது ஒரு நல்ல முடிவு. தமிழை இப்படிப் பயன்படுத்துவது எவ்வளவு அர்த்தமுள்ளதாக உள்ளது.
* இதே போல அவர்கள் எப்படி படிப்பினால் மட்டுமே உயர முடியும் என்பதையும் அழுத்தமாக மனதில் ஊன்றுங்கள்.
* குலத்தொழிலை விட்டு வெளியே வந்தாகவேண்டும் என்ற உண்மையை வலியுறுத்துங்கள்.
* எல்லாவற்றையும் விட தலித்துகளுக்கு நிறைய செய்வதாகக் கூறப்பட்டாலும், இப்போது அதிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுவிட்டது: பயன்பெற்று உயரே போய்விட்டு, ‘திரும்பிப் பார்க்க’ விரும்பாதவர்கள் ஒரு புறம்; இன்னும் நமக்கு என்னென்ன சலுகைகள் இருக்கின்றன என்பதுகூட தெரியாது, எந்த விழிப்புணர்வும் இல்லாத ஏழை மக்கள் மறுபுறம். ‘இது என் விதி’என்ற நினைப்பிலேயே தனது சமூக நிலைக்குக் காரணம் புரியாது இருக்கும் மக்கள் கூட்டத்திற்கு இப்போது தேவை விழிப்புணர்வு; அதை ஏற்படுத்த முயலுங்கள்.
* தலித்துகளுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளைப் பெற அவர்களின் முதல் தேவையான ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அவதிப்படும் ஏழை தலித் மாணவர்களையும், மற்ற மக்களையும் அடிக்கடி சந்தித்துள்ளேன். மாவட்டம்தோறும் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, இதுபோல சான்றிதழுக்காக இழுத்தடிக்கப்படும் மக்களுக்கு உதவிடுங்கள். மற்ற சாதியினரில் சிலர் போலிச்சான்றிதழ்கள் பெற்று உயர் கல்வி பெற்று இன்று மேல் நிலையில் சமூகத்திலும், அரசியலிலும் உயர்ந்த இடங்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையான தலித்துகளுக்கு இந்த விஷயத்தில் உதவுவது பேருதவியாக இருக்கும்.
கண்முன்னே நீங்கள் சாதிக்கவேண்டிய காரியங்கள் இதுபோல் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. தமிழ் என்றும் வாழும்; தார்ச்சட்டி எப்போதும் இருக்கும்; தமிழர்தம் கலாசாரம் என்றும் இருக்கும். நம் தமிழ்ப்பெண்களின் கற்பை காக்கா வந்து தூக்கிட்டுப் போய்விடாது. ஆகவே அவைகளைப் பற்றிக் கவலைப் படாமல் இப்போது ஆகவேண்டியதைப் பாருங்கள். தமிழ் காப்பும், தார் பூசுவதும் உங்களுக்கு இப்போது தேவையில்லை. Can you afford to have these LUXURIES, that too, NOW. அவைகள் வெறும் முழக்கங்கள்; மீடியாக்களின் பசிக்கும், பங்கேற்பவர்கள் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள மட்டுமே இந்த gimmicks என்பது யாருக்குத்தான் தெரியாது? உங்கள் தோழமைக்கட்சிகள் வேண்டுமானால் அவைகளைச் செய்து கொள்ளட்டும்.
அதோடு, ஒரு கரம் ராமதாஸுடன் என்பது சந்தோஷமே; இன்னொரு கரம் கொண்டு ஏன் கிருஷ்ணசாமியுடனும் உறவு கொள்ளக் கூடாது?
Nov 25 2005 02:46 pm | அரசியல்... and சமூகம் | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 6 பரிந்துரைகள்)
ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
58 Responses
இளவஞ்சி Says:
November 25th, 2005 at 4:23 pm e
//தமிழ் என்றும் வாழும்; தார்ச்சட்டி எப்போதும் இருக்கும்; //
எப்படிங்க இப்படியெல்லாம்?!
சுதர்சன் Says:
November 25th, 2005 at 4:58 pm e
தருமி,
திருமாவின் ஆரம்ப கால முயற்சிகள் தம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தன. அவரின் பேச்சும், எழுத்தும் நல்லதொரு எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது. பல இடங்களில் வெறும் சோற்றுக்காக உழைத்த மக்கள், ‘சோறு வேண்டாம், கூலி கொடு’ என்று கேட்க ஆரம்பித்தனர். பண்ணை வீட்டில் சாணி அள்ளுவது போன்ற காலங்காலமாக செய்து வந்த வேலைகளை மறுத்தனர். படிப்பின் அவசியமும் பலருக்கு புரிந்தது. அவரின் வீச்சு வடக்கிலிருந்து தெற்கிற்கு பரவும் சமயத்தில் அவரின் இயக்கம் அரசியல் இயக்கமானது. பிறகு மெல்ல மெல்ல தடம் மாறி இன்று ஒரு சாதாரண அரசியல்வாதியாகி போல தோற்றமளிக்கிறார். இந்த தமிழ் பாதுகாப்பும், கலாசார காப்பும் அவரின் முழு சக்தியையும் நேரத்தையும் உறிஞ்சி வீணடிக்கிறது. ‘அடங்க மறு, அத்து மீறு’ என்ற வசனத்தின் வேரை அவர் மறக்காமல் இருக்க வேண்டும்.
டி.பி.ஆர். ஜோசஃப் Says:
November 25th, 2005 at 5:07 pm e
தருமி சார்,
நீங்க மூனு நாளைக்கு முன்னால சன் நியூஸ்ல நடந்த கலந்துரையாடல்ல இவரு பேசினத கேட்டீங்களான்னு தெரியலை. கேட்டிருந்தீங்கன்னா இன்னும் காரமா எழுதியிருப்பீங்க. அவ்வளவு கேவலமா நடிகைகளை அவ, இவன்னு.. கேக்கறதுக்கு நாராசமா இருந்தது.
இவரெல்லாம் ஒரு தலைவர்?
இவங்கல்லாம் தப்பித்தவறி ஜெயிச்சி பதவியில உக்கார்ந்தா நாடு என்ன ஆவும்? சிவசேனாவே பரவாயில்லைன்னு தோணும். தாலிபான் கதையாகாம இருந்தா சரிதான்.
நீங்க சொன்னதையெல்லாம் செய்றதுக்கு அவருக்கு எங்க சார் நேரம்?
அதுசரி சார். உங்க பதிவுக்கும் அதுலருக்கற ஃபோட்டோவுக்கும் சம்மந்தம் இருக்கா?
ஜோ Says:
November 25th, 2005 at 5:08 pm e
தருமி,
ஆச்சர்யம் என்னன்ணா நேற்று இதே கருத்துக்களை வைத்து வலைப்பூ நண்பர் ஒருவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன் .என்னுடைய கருத்தை அப்படியே புரதிபலிக்கிறது உங்கள் இந்த பதிவு..நன்றி!
சோம்பேறி பையன் Says:
November 25th, 2005 at 5:31 pm e
வணக்கம் தருமி ஐயா, ரொம்ப நாள் கழிச்சு இன்றுதான் உங்க வலைப்பக்கத்துக்கு வந்தேன்.. வழக்கம்போலவே கலக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.. ரீகல் தியேட்டர் தல புராணம், விஜய்-ரஜினி பதிவுகள் மசாலா கலக்கல்.. சூப்பரப்பூ…
MUTHU Says:
November 25th, 2005 at 5:38 pm e
joseph சார்,
இங்கு ஓங்கி ஒலிக்கிற பிரச்சாரத்தை நம்பி முற்போக்குவாதி என்றால் இப்படித்தான் சிந்திக்கவேண்டும் போல இருக்கிறதே என்று எண்ணிவிடாதீர்கள். இங்குள்ள முற்போக்குவாதிகள் காரியகாரர்கள்..சில விஷயங்களில் உங்கள் சிந்தனை அவர்களால் இன்பூளியன்ஸ் செய்யப்பட்டு உள்ளது தெரிகிறது.
நடிகைகளை இதைவிட கேவலமா தினமலர் எழுதறதை நீங்க படிச்சதில்லையா?
MUTHU Says:
November 25th, 2005 at 5:40 pm e
திருமாவளவன் நீங்க சொல்ற மாதிரி காம்ரமைஸ் பண்ணாமல் இருந்தால்
காணாமல் போய்விடுவார். காம்பரமைஸ் பண்ணிக்காமல் அரசியல் கிடையாது என்பதை புரிஞ்சுக்கங்க.
எல்லாரும் அவுத்து போட்டுட்டு ஆடும்போது அவர் மட்டும் போத்திக்கிட்டு இருக்கணுமா? அவரு அடக்கி வாசிச்சா மட்டும் நீங்க அவருக்கு ஓட்டு போட்டிடுவீங்களா என்ன?
குமரன் Says:
November 25th, 2005 at 5:41 pm e
டி.பி.ஆர். ஜோசஃப் Says:
November 25th, 2005 at 6:17 pm e
முத்து,
உணர்ச்சிவசப்படாதீர்கள். தினமலர்மேல கேஸ் போட்டா அவரும் இப்படி அலையவேண்டியதுதான்.
கேஸ் யார் யார்மேல வேணும்னாலும் போடலாம். அத வேணுமா இல்லையாங்கறத முடிவு பண்ண வேண்டியது நீதிமன்றம்தான். நீங்க விருப்பப்பட்டாலும் படாட்டாலும். அதுதான் உண்மை.
இரத்தினவேலு Says:
November 25th, 2005 at 6:25 pm e
//* தலித்துகளுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளைப் பெற அவர்களின் முதல் தேவையான ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அவதிப்படும் ஏழை தலித்//
சரியான ஆதாரத்தைக்கொடுத்தால் சாதிச்சான்றிதழ் வழங்குவார்கள் அதில் ஒன்றும் குறைவுகிடையாது. பொய்யானவர் பொய்யாக சான்று வாங்கிவிட்டால் கொடுத்தவர் வட்டாட்சியர் கோட்டாட்சியர் பெட்டியைக் கட்டடிக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டியதுதான் அதற்காகத்தான். மாற்றுச்சாதியினர் இந்த சாதிதான் நான் எனக்கு கொடுங்கள் என்று ஒரு தலித்துடைய சான்றை எடுத்துககொண்டு வந்து இது எனது அண்ணன் என கேட்பார் அப்பா பெயர் சரியாக இருக்கம். அதற்காகத்தான் நன்றாக விசாரித்து கொடுக்க வேண்டியுள்ளது.
தருமி Says:
November 25th, 2005 at 9:22 pm e
//தமிழ் என்றும் வாழும்; தார்ச்சட்டி எப்போதும் இருக்கும்; //
எப்படிங்க இப்படியெல்லாம்?! - இளவஞ்சி
வேணாம் இளவஞ்சி …இந்த சிரிப்பெல்லாம் ..சொல்லிப்புட்டேன், ஆமா..!
தருமி Says:
November 25th, 2005 at 9:31 pm e
சுதர்சன்,
வசனத்தின் வேரை அவர் மறக்காமல் இருக்க வேண்டும். // உயரத்துக்குப் போகிறவர்கள் எல்லோருமே முதலில் மறப்பது தாங்கள் வந்த வழியையும், தங்கள் வேர்களையும்தானே. இதில் நம்ம அரசியல்வாதிகளின் ஸ்கோர்: 200%
தருமி Says:
November 25th, 2005 at 9:35 pm e
சன் நியூஸ்ல நடந்த கலந்துரையாடல்ல இவரு பேசினத கேட்டீங்களான்னு தெரியலை// அந்த ‘பாக்கியத்தை’ நான் எப்படியோ இழந்துவிட்டேன்.
உங்க பதிவுக்கும் அதுலருக்கற ஃபோட்டோவுக்கும் சம்மந்தம் இருக்கா? // ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு படம் என்ற அளவில் மட்டுமே சம்பந்தம்! முடிஞ்சா ஏதாவது ஒரு அர்த்தம் கொடுக்க முடியுமான்னு ஒரு முயற்சியும்தான். (உன்னையே பார்த்துக்கொள் - அப்டின்னு ஒரு டைட்டில் போட்றுவோமா? )அவரு ஆனந்த்விநாயகம் மட்டும்தான் படம் காண்பிக்கணுமா என்ன? (அது சரி, சம்மந்தம்/சம்பந்தம் -ரெண்டுல எது சரி?)
தருமி Says:
November 25th, 2005 at 9:59 pm e
ஜோ,
ஜோ நினைக்கிறார்…தருமி செஞ்சிர்ரான் … இது எப்படி…?
கொஞ்சம் முந்திக்கிட்டேனோ..?
சோம்பேறி பையன்,
சூப்பரப்பூ… //
சரிப்பூ..அடிக்கடி வந்து போய்க்கிட்டு இருங்கப்பூ, சரியா…?
தருமி Says:
November 25th, 2005 at 10:13 pm e
முத்து,
உங்களுக்கும் ஜோசஃப்புக்கும் நடுவில் நான் வரலாமா?
//இங்கு ஓங்கி ஒலிக்கிற பிரச்சாரத்தை நம்பி..// - இங்கு என்பது எங்கு? என்ன பிரச்சாரம் ஒலிக்கிறது இங்கு? புரியலையே?
//காம்பரமைஸ் பண்ணிக்காமல் அரசியல் கிடையாது../ - சுதர்சன் சொன்ன மாதிரி வேர்களை மறக்கிற அளவுக்கு அது என்ன காம்ப்ரமைஸ்…? விளங்கலையே?
//நீங்க அவருக்கு ஓட்டு போட்டிடுவீங்களா என்ன?// யார் யார் யார் யாருக்கு ஓட்டு போடுவாங்க்ன்னு உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் கோபம் யார் மீது? ஏன்? தெரியலையே?
தருமி Says:
November 25th, 2005 at 10:20 pm e
இரத்தினவேலு,
//சரியான ஆதாரத்தைக்கொடுத்தால் சாதிச்சான்றிதழ் வழங்குவார்கள் அதில் ஒன்றும் குறைவுகிடையாது.// - சான்றிதழ்களுக்காக ஆண்டுக்கணக்காக அல்லல் படும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? இருக்க வீடில்லாமல் இருப்பவரிடம் சொத்துப் பத்திரம் இருக்குமா? எது இல்லையோ அதைக்கொண்டு வா என்று கேட்கப்பட்டு
வாழ்நாளெல்லாம் இதற்காக அலைந்தவர்களைத் தெரியுமா?
//வட்டாட்சியர் கோட்டாட்சியர் பெட்டியைக் கட்டடிக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டியதுதான் // வட்டாட்சியர் கோட்டாட்சியர் இவர்கள் மீது உள்ள கரிசனத்தில் கொஞ்சம் இந்த மக்கள் மீது எல்லோருக்கும் வந்தாலே போதும்.
முகமூடி Says:
November 26th, 2005 at 12:54 am e
மரியாதைக்குரிய தருமி,
உங்கள் சமூகம், தலித் முன்னேற்றம் என்றெல்லாம் சொல்லி திரு.திருமா அவர்களை ஏன் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க முயற்சிக்கிறீர்கள்.. அவரின் பார்வை விரிவடைந்தது உங்களுக்கு தெரியாததா? காம்ப்ரமைஸ் பண்ணாமல் இருந்தால் காணாமல் போய்விடுவோம் என்பதை உணர்ந்து ஒரு விசாலமான பார்வை கொண்டு விடுதலை சிறுத்தைகள் என்பது ஒரு பிரிவினரின் முன்னேற்றத்துக்கான இயக்கம் இல்லை, அனைவருக்கும் பொதுவான அரசியல் கட்சி என்ற இமேஜ் வர போராடுபவரை ஏன் மீண்டும் மீண்டும் ஆரம்பத்தை ஞாபகப்படுத்தி பின்னேற சொல்கிறீர்கள்.. இது போலவே ஆரம்பத்தை நினைவுபடுத்தி பாட்டாளிகளின் முன்னேற்றம் குறித்து திரு.இராமதாஸருக்கும், தமிழினத்தின் முன்னேற்றம் குறித்து திரு.கருணாநிதி அவர்களுக்கும் இவவாறு கடிதம் எழுதுவீர்களா? திரு.திருமா அவர்கள் மீது மட்டும் உங்களுக்கு ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி?
முகமூடி Says:
November 26th, 2005 at 1:07 am e
// அதோடு, ஒரு கரம் ராமதாஸுடன் என்பது சந்தோஷமே; இன்னொரு கரம் கொண்டு ஏன் கிருஷ்ணசாமியுடனும் உறவு கொள்ளக் கூடாது? //
துளசி கோபால் Says:
November 26th, 2005 at 1:27 am e
சூப்பர் பதிவு தருமி.
இப்ப நீங்க சொன்ன ‘கிருஷ்ணசாமி’ யாருன்னு தெரியலை.
அரசியல்வாதியா? என்ன கட்சியாம்?
-L-L-D-a-s-u-- Says:
November 26th, 2005 at 4:52 am e
சூப்ர்ரப்பு தருமி
கல்வெட்டு Says:
November 26th, 2005 at 7:23 am e
//இப்ப நீங்க சொன்ன ‘கிருஷ்ணசாமி’ யாருன்னு தெரியலை.//
அக்கா சும்மா அடுப்படியிலேயே பாயாசம்,வடைன்னு சிந்திச்சுக்கிடே இருந்தா எப்படி? இவரும் டாக்டர்தான். தென் மாவட்டங்களில் கொஞ்சம் பிரபலம்.
அப்புறம் தருமி அந்த மீனாட்சி மிஷன் ஆசுபத்ரிக்கார அய்யாவ விட்டுட்டீக அவரையும் இன்னொரு கைய பிடிச்சுக்கட்டும். தென் மாநிலங்களும் அமைதியா இருக்கும்.
துளசி கோபால் Says:
November 26th, 2005 at 7:42 am e
கல்வெட்டு,
ஓஓஓஓ … இப்ப ‘டாக்டர்’ங்கெல்லாம் கட்சி ஆரம்பிச்சு ‘நடத்தி’ வராங்களா?
அதென்ன ‘மீனாட்சி மிஷன் ஆசுபத்திரி அய்யா’ விஷயம்?
நாட்டு நடப்பு சரியாத்தெரியலையே(-:
கொழுவி Says:
November 26th, 2005 at 8:05 am e
தருமி Says:
November 26th, 2005 at 8:39 am e
முகமூடி,
உங்கள் அங்கதம் புரிகிறது. அரசியல் என்பது எல்லோருக்கும் ‘முழு நேர வேலை’தான்! தெரியும். ஆனாலும் தலித் தலைவர்கள் கண் துஞ்சாது, மெய்வருத்தம் பாராது இந்த காலகட்டத்தில் உழைத்தாலொழிய there would not be any light at the end of the tunnel- என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? எதற்கு இந்த தேவையில்லாத விளக்கம். உங்கள் கேள்விகளுக்கு ஏற்கெனவே இப்படி பதில் அங்கேயே சொல்லிவிட்டேனே: Can you afford to have these LUXURIES, that too, NOW.
தருமி Says:
November 26th, 2005 at 8:45 am e
முகமூடி,
நான் என்னவோ ஆத்ம சுத்தி என்பார்களே அதுபோன்ற ஓர் உண்மையான ஆதங்கத்தோடு எழுதியதுதான் இப்பதிவு. அந்த மாதிரி பதிவுகளில்கூட நீங்கள் இதுபோல் குசும்பு பண்ணும்போது ‘நறுக்’குன்னு இந்த ஆளு தலைல குட்டினா என்னென்னு தோணும். குட்டட்டா…?
தருமி Says:
November 26th, 2005 at 9:07 am e
முகமூடி,
நான் என்னவோ ஆத்ம சுத்தி என்பார்களே அதுபோன்ற ஓர் உண்மையான ஆதங்கத்தோடு எழுதியதுதான் இப்பதிவு. அந்த மாதிரி பதிவுகளில்கூட நீங்கள் இதுபோல் குசும்பு பண்ணும்போது ‘நறுக்’குன்னு இந்த ஆளு தலைல குட்டினா என்னென்னு தோணும். குட்டட்டா…? அது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடியதல்ல என்பது தெரியும்தான்; இருப்பினும் ஒரு ஆசை.
தருமி Says:
November 26th, 2005 at 9:11 am e
நன்றி துளசி.
ஸ்மைலிஸ் போட்டது தப்புத்தான் கொழுவி.ஆனாலும் இப்படியா? ரொம்பத்தான் பொறுமை உங்களுக்கு…! இருந்தாலும் உங்க நீங்க சொல்லவந்தது அப்ப்டியே எனக்குப் புரிஞ்சிரிச்சி
MUTHU Says:
November 26th, 2005 at 9:49 am e
திரு தருமி.
//உங்களுக்கும் ஜோசஃப்புக்கும் நடுவில் நான் வரலாமா? //
நீங்க கண்டிப்பா வரலாம்.உங்களுக்கு உரிமை இருக்கு. இது உங்க வீடுங்க.நாங்க வந்து பேசிட்டு இருக்கோம்.நீங்க காபி கொடுத்து நாலு வார்த்தை பேசுறது தப்பா என்ன?
//இங்கு ஓங்கி ஒலிக்கிற பிரச்சாரத்தை நம்பி..// - இங்கு என்பது எங்கு? என்ன பிரச்சாரம் ஒலிக்கிறது இங்கு? புரியலையே?
இங்கே என்பது தமிழ்மணத்தை குறிக்கும். உஙகளுடைய இந்த பதிவை பற்றி அல்ல. முற்போக்கு என்றால் என்ன என்பதை பற்றித்தான்.அதிலென்ன சந்தேகம்?
//காம்பரமைஸ் பண்ணிக்காமல் அரசியல் கிடையாது../ - சுதர்சன் சொன்ன மாதிரி வேர்களை மறக்கிற அளவுக்கு அது என்ன காம்ப்ரமைஸ்…? விளங்கலையே?
வேர்களை மறக்காமல் அரசியல் பண்ணறதுக்கு அவர் அரசியல் களத்தில் தொடர்ந்து இருக்கவேண்டியது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.அவர் வேர்களை மறக்காமல் இருக்கிறாரா என்பதை அவர் யாருக்காக பாடுபடுகிறாரோ அவர்கள் சொல்லவேண்டும் என்பது என் கருத்து.
//நீங்க அவருக்கு ஓட்டு போட்டிடுவீங்களா என்ன?// யார் யார் யார் யாருக்கு ஓட்டு போடுவாங்க்ன்னு உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் கோபம் யார் மீது? ஏன்? தெரியலையே?
என் கோபம் யார் மீதும் இல்லை(நீங்கள்ளால் பெரிய ஆள்.நாங்கள்ளாம் இப்பத்தான் இங்க எட்டி பார்க்கிறோம்)அடக்கி வைக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து போராடி ஒரு முக்கிய சக்தியாக வருவது எனக்கு பிடித்திருக்கிறது. நாமெல்லாம் வாயளவில் அவர்கள் முன்னேற்றத்தை பற்றி பேசி ஆனால் உண்மையில் யாராவது முன்னேறினால் அதை தடுக்க பார்க்கிறோம் என்று நினைக்கிறேன்.இதை பற்றி நிறைய எழுத இருக்கிறது.தனிப்பதிவாக இடுகிறேன்.
MUTHU Says:
November 26th, 2005 at 9:53 am e
joseph சார்,
நான் எதுக்கு உணர்ச்சி வசப்படறேன்?. கேஸ் போடறதை பத்தி நான் பேசலை. வெட்டியா யார் கேஸ் போட்டாலும் அது முட்டாள்தனம்தான்.
ஆனால் திருமாவளவனை நீங்கள கடுமையாக விமர்சித்த மாதிரி எனக்கு பட்டதால் கூறினேன்.(இவரெல்லாம் ஒரு தலைவர் என்ற வார்த்தை)
டி.பி.ஆர். ஜோசஃப் Says:
November 26th, 2005 at 1:18 pm e
ஐயோ முத்து,
நான் சண்டைக்கெல்லாம் வரலை. திருமா உங்க பார்வையில பெரீரீரீரீய தலைவரா? இருக்கட்டும், இருக்கட்டும். நல்லாயிருக்கட்டும்.
தருமி Says:
November 26th, 2005 at 11:24 pm e
முத்து தம்பி,
நீங்கள் ஒன்றை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். காலங்காலமாய் அடக்கிவைக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளைப் புரிந்து கொள்ளவும், தங்கள் வாழ்வை உயர்த்திக் கொள்ள தலைவர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள் உதவ வேண்டும் என்று நான் சொல்லும் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
//(நீங்கள்ளால் பெரிய ஆள்.நாங்கள்ளாம் இப்பத்தான் இங்க எட்டி பார்க்கிறோம்)// இந்த நினைப்புதான் வேண்டாமென்கிறேன்.
//அடக்கி வைக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து போராடி ஒரு முக்கிய சக்தியாக வருவது எனக்கு பிடித்திருக்கிறது// - அது முக்கிய சக்தியாக மட்டுமல்ல, அந்த சமுதாயத்தை இன்னும் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய முனைப்பான சக்தியாக இருக்க வேண்டுமென்பதுதான் என் ஆசையும் என்று நான் நினைப்பது உங்களுக்குப் புரியவில்லையா..?
ivarugala Says:
November 28th, 2005 at 11:11 pm e
அன்புள்ள தருமி அவர்களுக்கு,
உங்களது அனைத்துக் கருத்துக்களிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. திருமாவிற்கும் கூட!!!. நீங்கள் பதிவு செய்தவைகளெல்லாம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியாதா என்ன?
அவர்கள் செய்வது தெரிந்தே செய்கிறார்கள். இவர்கள் திருந்த வேண்டும் அல்லது புதியதாக தன்னலமில்லாத சிலர் உண்மையிலேயே தன்னலமில்லாதவர்கள் தலைமைக்கு வரவேண்டும்.
தருமி Says:
November 29th, 2005 at 9:39 am e
தன்னலமில்லாத சிலர் உண்மையிலேயே தன்னலமில்லாதவர்கள் தலைமைக்கு வரவேண்டும்../ –எப்போ அத்தைக்கு மீசை முளைத்து…என்னமோ போங்க!
Snegethy Says:
December 3rd, 2005 at 6:23 am e
Dharumi aiya,
ungalapathium ungada appa patrium dinamalarila podurukinam.
(-._.-)
_( Y )_
(:_-*-:)
(_)-(_)
சிங். செயகுமார். Says:
December 3rd, 2005 at 7:27 am e
தாத்தாவுக்கு தெரிய படுதலாம்னு நெனச்சேன் சினேகிதி! முந்தி கிட்டீங்க!
வாழ்த்து சொல்ல வயசில்ல ! ஆசீர்வாதமாவது கிடைக்குமா தாத்தா ?
தருமி Says:
December 3rd, 2005 at 11:51 am e
நன்றி சினேகிதி..பார்த்தேன்.
சிங். செயக்குமார்,
ஆசிவாதம்தானே…உங்களுக்கில்லாததா…நல்லா இருங்க..என்றும்.
குமரன் Says:
December 3rd, 2005 at 10:16 pm e
வாழ்த்துகள் தருமி ஐயா. உங்கள் வலைப்பதிவைப் பற்றி இன்றைய தினமலரில் போட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா?
http://www.dinamalar.com/2005Dec03/flash.asp
Snegethy Says:
December 3rd, 2005 at 11:40 pm e
\\ஆசிவாதம்தானே…உங்களுக்கில்லாததா…நல்லா இருங்க..என்றும்\
appa enaku?
-L-L-D-a-s-u-- Says:
December 4th, 2005 at 4:55 am e
தினமலர் “தருமிக்கு 61 வயது. வெப்சைட் நடத்துவோரில் தமக்குத்தான் வயது அதிகம் என்று நினைத்துக்கொண்டிருந்தார்.”
அப்படியா? தருமி . ‘தமிழ்மண’-பதிவரில் மூத்தவர் என்று கூறினீர்கள் என்றுதான் நினைக்கிறேன் . என்னமோ போங்க !!
வாழ்த்துக்கள் ..
madhumitha Says:
December 4th, 2005 at 10:44 am e
வாழ்த்துகள் தருமி.
திருமாவுக்கு
ஒரு வார்த்தை
கவிதையையும் விடமாட்டீங்களோ
சரி நாங்க ஒங்க நலனில் அக்கறையா இருக்கோம்.
கொஞ்சம் ஆட்டோ,அடியாளுங்க வராத ஜாக்கிரதையா இருங்கய்யா
தருமி Says:
December 4th, 2005 at 2:29 pm e
பாத்துட்டேன் குமரன்….நன்றி
சினேகிதி, உங்களுக்கு மட்டுமென்ன…இளம் வலைப்பதிவாள- பிள்ளைகள் (Below 40 அப்டின்னு வச்சுக்குவோமா?)அனைவருக்கும் என் மனமுவந்த ஆசீர்வாதம் என்றும்..எப்போதும்..மிக்க அன்புடன்கூட.
தருமி Says:
December 4th, 2005 at 2:32 pm e
-L-L-D-a-s-u–,
‘தமிழ்மண’-பதிவரில் மூத்தவர் என்று கூறினீர்கள் என்றுதான் நினைக்கிறேன் “// - நான் எழுதியது அப்படிதான். எல்லாம் ஒரு editorial mistake தான். எப்படியோ அந்த தவறினால்தான் “அப்பா” எல்லாருக்கும் அறிமுகமாகிறார், இல்லையா? அதுவரை சந்தோஷம்தான்!
தருமி Says:
December 4th, 2005 at 2:39 pm e
மதுமிதா,
“ஜாக்கிரதையா இருங்கய்யா ” // இந்த மாதிரி நாம் எழுதறதெல்லாம் அவுங்களுக்கெல்லாம் போய்ச்சேரும் அப்டிங்கிற நம்பிக்கை எனக்கில்லை. இவைகள் நமது உரத்த சிந்தனைகள் என்றளவில் மட்டுமே இருக்கும் என்றே நினைக்கிறேன். இதெல்லாமி ஒரு ‘ஜுஜுபி’ நம்ம அரசியல்வாதிகளுக்கு. நமக்கு நல்லது ஒண்ணு சொல்லிட்டோம்ல அப்டிங்கிறா திருப்தி தவிர ஏதும் எதிர்வினை இருக்கும்னு நினைக்கிறீங்க?
கவிதையையும் விடமாட்டீங்களோ” // கவிதையாயினியைப் பாத்து சூடு போட்டுக்கிறதுதான்!
உங்களுக்கு ஒரு தனி மயில் அனுப்பி வச்சேன்; பறக்க முடியலைன்னு திரும்பி வந்திருச்சி எங்கிட்டேயே!
madhumitha Says:
December 4th, 2005 at 6:43 pm e
கோ.இராகவன் Says:
December 5th, 2005 at 12:05 pm e
தருமி, இப்பொழுதுதான் உங்கள் வலைப்பதிவைப் படித்தேன். அற்புதமாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வருவதற்கு ஒரு ஆரோக்கியமான நேர்மையான வழிமுறை உண்டு என்று ஏன் உணர மாட்டேன் என்கின்றார்களோ! குறுக்கு வழி வேண்டாம். நியாயமாக நடுநிலையாகச் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். கண்டிப்பாகப் பலன் கிடைக்கும் என்று நானும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனிநபர் எதிர்ப்பெல்லாம் ரொம்ப நாளைக்கு ஆகாது. அதற்குப் பலனும் கிடையாது.
தருமி, உங்கள் பதிவுகளில் மெருகு எக்கச்சக்கமாக ஏறிக்கொண்டிருக்கிறது. பிரமாதம்.
தமிழ் இடிதாங்கி கோமா தாஸ் Says:
December 7th, 2005 at 12:26 am e
திருமாவை கண்டிப்பதை தமிழ் இடிதாங்கி கண்டிக்கிறார்…
திரைப்படங்கள் பற்றிய தமிழ் இடிதாங்கி கோமா தாஸ் கருத்தறிய வாருங்கள்
http://kakapriyan.blogspot.com
Inga Paarunga Says:
December 8th, 2005 at 11:50 pm e
http://mayavarathaan.blogspot.com/2005/12/234_04.html
தருமி Says:
December 9th, 2005 at 12:13 am e
மதுமிதா,
தருமி Says:
December 9th, 2005 at 12:17 am e
ராகவன்,
மிக்க நன்றி.
தமிழ் இடிதாங்கி கோமா தாஸ்,
நல்ல பேருங்க! அந்த ‘கோமா’என்னங்க? Coma..? இல்ல, ஒரு ‘ளி’யை விட்டுட்டீங்களா?
Inga Paarunga,
நீங்க அங்க பாருங்க.
karthikramas Says:
December 9th, 2005 at 12:19 am e
இந்தப்பதிவில், திருமாவுக்கு ஒன்றும் பயனுள்ள செய்தி இருப்பதாக எனக்கு படவில்லை. அந்த அளவுக்கு அறிவுள்ள பதிவாகவும் இது தெரியவில்லை.
/தலித்துகளுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளைப் பெற அவர்களின் முதல் தேவையான ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அவதிப்படும் ஏழை தலித் மாணவர்களையும், மற்ற மக்களையும் அடிக்கடி சந்தித்துள்ளேன்./
ஒரு வாதததுக்கு இதை ஏற்றுக்கொண்டால் கூட, இந்தப் பதிவின் தொனி ஏதோ இரக்கம் காட்டுவது போல் அமைந்துள்ளது கவனிக்கப்படவேண்டியது. வேறு சாதிக்கு இப்படி நம்மால் சொல்ல வருமா என்று தெரியவில்லை. “தலித்” என்றாலே அய்யோ பாவம் என்ற மனநிலை தென்படுகிறது. தாசில்தார் ஆபிஸில் உள்ளவன் தனது வேலையை செய்தாலே சான்றிதழ் பிரச்சினை தீர்ந்து போய்விடும். அல்லது சங்கம் வைத்தாலும் “சங்கம்” மாமா/மாமூல் வேலை பார்க்காது என்று நிச்சமில்லை.
இது கிம்மிக்ஸ் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் திருமாவுக்கு இது லக்ஸரி என்று சொல்லும் உளவியல்தான் ஆச்சர்யப்படவைக்கிறது. மேற்கொண்டு எதுவும் எழுத இல்லை. நன்றி
தருமி Says:
December 9th, 2005 at 12:36 am e
கார்த்திக்ராமாஸ்,
i accept your comments though i dont agree with your views.
தாசில்தார் ஆபிஸில் உள்ளவன் தனது வேலையை செய்தாலே சான்றிதழ் பிரச்சினை தீர்ந்து போய்விடும்// நீங்கள் நினைக்கும் அளவிற்கு இந்தப் பிரச்சனை அவ்வளவு எளிதானதுமல்ல; சிறியதுமில்லை.
இரக்கம் காட்டுவது(அதைவிட, showing concern) பெரிய தவறேன்று நினைக்கவில்லை.
நன்றி
இரத்தினவேலு Says:
December 29th, 2005 at 6:54 am e
ஒருவருக்கு ஜாதிச் சான்றிதழ் கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு சில வழிமுறைகள் உண்டு. அதற்கு அரசாங்கத்தால் வழிகாட்டப்பட்டுள்ள வழியில் தான் கொடுக்கவேண்டும் அதை விடுத்து தாசில்தார் பார்த்து கொடுக்கலாம் கி.நி.அ. நினைத்தால் கொடுக்கலாம் என்பதெல்லாம் கிடையாது.
ஒரு தலித்துக்கு ஒரு ஜாதி சான்று கொடுக்கவேண்டும் என்றால் அவர் அந்த ஜாதிதான் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டும்.
மேட்டூரில் பிறந்து காட்டூரில் வளர்ந்து சிற்றுரில் தற்போது கூலி வேலை பார்க்கும் திரு.குபேரனை அந்த ஊரில் யாருக்குத் தெரியும் அவர் என்ன ஜாதி என்பது யாருக்குத் தெரியும்.அவர் படிக்கவில்லை உண்மையில் அந்த ஜாதியாகவும் இருக்கலாம். அதை எப்படி நிரூபிப்பது அதான் ஐயா நீ போய் உனது சொந்த ஊரில் வாங்கிக் கொள் என கூறுகிறார்கள் அங்கு சென்றால் ஒரு நாள் வேலை போகுமே என அவர் செல்வதில்லை அவர் மகனுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்க வில்லை. இதை பயன் படுத்தி மேல் நிலையில் உள்ள தலித்துக்கள் முன்னேறிக்கொண்டே போகின்றனர். இந்த சூழலிள் உள்ளவர்கள் அப்படியே இருக்கின்றனர். இதற்குத் தான் அந்த தலைவர்கள் இதற்கு ஒரு வழிகாட்டும் நடவடிக்கை எடுத்தால் அந்த ஏழைக்கு பயனாக இருக்கும்.
//தாசில்தார் ஆபிஸில் //உள்ளவன்// தனது வேலையை செய்தாலே சான்றிதழ் பிரச்சினை தீர்ந்து போய்விடும். அல்லது சங்கம் வைத்தாலும் “சங்கம்” மாமா/மாமூல் வேலை பார்க்காது என்று நிச்சமில்லை.//
அன் விகுதியை போட்டது சரியில்லை
மாமா மாமூல் வேலை பார்த்தால் கிடைக்குமா? கண்டிப்பாக கிடைக்காது
இரத்தினவேலு Says:
December 29th, 2005 at 7:16 am e
நண்பர் தருமி
//வட்டாட்சியர் கோட்டாட்சியர் பெட்டியைக் கட்டிக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டியதுதான் // வட்டாட்சியர் கோட்டாட்சியர் இவர்கள் மீது உள்ள கரிசனத்தில் கொஞ்சம் இந்த மக்கள் மீது எல்லோருக்கும் வந்தாலே போதும்
நன்றாகத் தெரியும் இவர்கள் படும் கஷ்டங்கள் அதற்கு யார் என்ன? செய்யமுடியும் அரசு சில வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து அதன் படி நடக்கச் சொன்னால் அப்படித்தானே அதிகாரிகள் நடப்பார்கள் சரியான ஆதாரம் இல்லையென்றால் அவர்கள் கண்டிப்பாக சான்று கொடுக்கமாட்டார்கள் இவர்கள் இன்னஜாதிஎன்பது எப்படி அவருக்குத் தெரியும்?
இவ்வாறு தவராக சான்று கொடுத்து ஒரு தாசில்தார் பணியிறக்கம் செய்யப்பட்ட கதை உங்களுக்தெரியுமா திருச்சியில் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட் ஆனார்.
சில சமூக விரோதிகள் தாங்கள் இன்ன ஜாதியென பள்ளிச் சான்றிதழ் மற்றும் சில ஆதாரங்களோடு வந்து வட்டாட்சியர் கோட்டாட்சியர்களிடம் சான்று வாங்கிவிடுகின்றனர். இதனால் உண்மையான தலித் பாதிக்கப்படுகிறார் இதற்காகத்தான் சரியான நபருக்கு கொடுக்க வேண்டும் தனது பணியும் பரிபோகக் கூடாது என்பதற்காக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது.
தருமி Says:
December 29th, 2005 at 2:17 pm e
“//தாசில்தார் ஆபிஸில் //உள்ளவன்// தனது வேலையை செய்தாலே சான்றிதழ் பிரச்சினை தீர்ந்து போய்விடும். அல்லது சங்கம் வைத்தாலும் “சங்கம்” மாமா/மாமூல் வேலை பார்க்காது என்று நிச்சமில்லை.//
அன் விகுதியை போட்டது சரியில்லை -
இரத்தினவேலு, இவை என்வார்த்தைகள் இல்லை.ஆனால். உங்களது இந்த வார்த்தைகள்: “நன்றாகத் தெரியும் இவர்கள் படும் கஷ்டங்கள் அதற்கு யார் என்ன? செய்யமுடியும் ..” //
இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை; பதில் சொல்லுவதில் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை அல்லவா?.
“சரியான ஆதாரம் இல்லையென்றால் அவர்கள் கண்டிப்பாக சான்று கொடுக்கமாட்டார்கள்..”// பிரச்சனை எனக்குக் கொஞ்சம் அறிமுகம் உண்டு என்பதால் சொல்கிறேன். சான்று கொடுக்கக்கூடாதென்பதற்காகவும் ஆதாரங்கள் கேட்கலாம்.
இந்த விவாதம் நமக்குள் முடியாதென்றே நினைக்கிறேன். ஏனெனில் நாம் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் எதிரெதிராக இருக்கிறதல்லவா? மீண்டும் ஒரு ரிப்பீட்டு: “வட்டாட்சியர் கோட்டாட்சியர் இவர்கள் மீது உள்ள கரிசனத்தில் கொஞ்சம் இந்த மக்கள் மீது எல்லோருக்கும் வந்தாலே போதும்”
இரத்தினவேலு Says:
December 29th, 2005 at 8:17 pm e
எல்லலோரும் ஒரே மாதிரி இருக்க முடியாத என்பது உண்மை
நன்றி நண்பரே
தருமி Says:
December 30th, 2005 at 9:57 am e
முகமூடி சொன்னது:
“குட்டிட்டீங்களா தருமி. என்ன
வாத்தியார் போங்க நீங்க
வலிக்கவேயில்ல.
இதுக்குத்தான் எங்க
பள்ளிக்கூடத்துல என்ன
பண்ணுவாய்ங்க, ப்சங்களோட
என்மீஸ கூப்பிட்டு குட்ட
சொல்லுவாரு வாத்தியாரு. தலை
பழுத்து போவும்ல.. அதுக்காக
நம்மோட எதிரிங்கள
கூப்பிட்டிடாதீங்க..
ஏகப்பட்ட பேரு.. தலை காணாம
போயிரும்..
அப்புறம் சைடுகிக்கு ஒண்ணு..
நான் ஒம்பதாப்பு
படிக்கிறப்போ ஜூனியர்
விகடன்ல இசைஞானி இளையராஜா
வாசகர்களுடன் கேள்வி பதில்.
வாசகர் : உங்களுக்கு ஆத்ம
திருப்தி கொடுத்த பாடல் எது?
இளையராஜா : ஆத்மாவுக்கு
ஏதுங்க திருப்தி.
(நீங்க ஆத்ம சுத்தின்னுதான்
சொன்னீங்க, என்னவோ எனக்கு இது
ஞாபகத்துக்கு வந்தது)
தருமி Says:
December 30th, 2005 at 10:16 am e
முகமூடி,
உங்க சைடு கிக் பற்றி: நான் வாசிச்சது என்னன்னா, ஒரு தடவை பார்த்திபன் (அப்படித்தான் நினைக்கிறேன்) ராஜா காலத் தொட்டப்போ, இதெல்லாம் எதுக்குன்னு கேட்டாராம். அதுக்கு பா. ஒரு ஆத்ம திருப்திக்கு அப்டின்னாராம். அப்போ ராஜா ஆத்மாவுக்கு ஏதுப்பா திருப்தி ,, . எப்படியோ சொன்ன ஆளு ஒண்ணுதான…யார்ட்ட, எங்கே அப்டிங்கிறதா முக்கியம்.
தருமி Says:
December 30th, 2005 at 10:20 am e
நன்றியெல்லாம் எதுக்கு, ரத்தினவேலு.
வந்து போய் இருங்க…
No comments:
Post a Comment