திரை ஊடகங்களில் இருப்பதால் நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த இரண்டு பெண்மணிகளின் கூற்றுக்கள் பற்றிய விவாதங்கள் ஒரு பக்கம் என்றால் கோர்ட், கேஸ்கள் என்று இன்னொரு பக்கம் நடந்தேறுகின்றன. இந்தக் கோர்ட்டுகள் முன்னால் நம் மக்களின், அதிலும் தாய்க்குலங்களின் நம் தமிழ்க் கலாச்சாரத்தை ஒட்டிய, நம் பண்பாட்டைத் தூக்கி நிறுத்தக் கூடிய திருவிளையாடல்களையும் பார்க்கும் நம் நீதிக் காவலர்களுக்கு இந்தக் கேஸ்களின் அடிப்படை புரியாமலா இருக்கிறது? புரிந்திருந்தால் ‘on frivolous ground’ என்ற அடிப்படையில் இந்தக் கேஸ்களை எடுக்காமலே புறந்தள்ள முடியாதா? ஒவ்வொரு கோர்ட்டாக இந்தப் பெண்களைப் படியேற வைத்து, அந்தந்த கோர்ட்டுகள் முன்பு ஒவ்வொரு முறையும் நம் பண்பாட்டுத் திருவிழாக்கள் நடந்தேற விடவேண்டுமா? prima facie என்றெல்லாம் என்னென்னவோ சட்ட நுணுக்கங்கள் சொல்வார்களே, அதெல்லாம் இங்கே நடைமுறைப் படுத்தமுடியாதா? எவ்வளவு மடத்தனமான அடிப்படையிலும், யார் வேண்டுமானாலும், யார் மீதும் பொறுப்பற்ற முறையில் இது போல கேஸ்களை ஜோடிக்கலாமா? பொது நலமும், கோர்ட்டுகளின் ‘பொன்னான நேரமும்’ வீணாவதில் நம் நீதியரசர்களுக்குப் பொறுப்பில்லையா? அல்லது, அவர்களும் இந்த “அழகான” ’side shows’ தரும் ’side kicks’-களை கண்டு களித்துக்கொண்டிருக்க வேண்டியதுதானா?
இதற்கெல்லாம் உண்மையிலேயே எனக்குப் பதில் தெரியாது…
Nov 24 2005 12:27 pm | அவியல்... | | edit this
Rate this post at www.thamizmanam.com
இதுவரை விழுந்த "உள்குத்து" நிலைமை பாருங்க!!??:
(இதுவரை 1 பரிந்துரைகள்)
ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வோட்டு / வேட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
22 Responses
தாணு Says:
November 24th, 2005 at 1:39 pm e
இதையேதான் நானும் நினைத்தேன். தீர்வு செய்யப்படாத வழக்குகள் தேங்கிக் கிடக்கும் நிலையில், கவைக்குதவாத இத்தைகைய வழக்குகள் தேவைதானா? வழக்கறிஞர்களைத்தான் கேட்கணும். `நேரம் போகாதோர் வழக்காடு மன்றம்’ ஒன்று தொடங்கி, இதையெல்லாம் அங்கே ட்ரான்ஸ்பர் செய்துவிடலாம்.
குகு Says:
November 24th, 2005 at 2:14 pm e
இந்த உரல் படிச்சு பாருங்க:
http://www.ndtv.com/morenews/showmorestory.asp?category=National&slug=Murdered+IOC+officer’s+family+devastated&id=81682
http://news.webindia123.com/news/showdetails.asp?id=171309&n_date=20051124&cat=India
நம்ம ஆளுங்க போற பாதை பத்தி தெரியும்!
இந்தப் பதிவுக்கும் உரலுக்கும் எவ்வித தொடர்பு இல்லையென்ற disclaimer-யையும் கவனத்தில் கொள்க!
ஜோ Says:
November 24th, 2005 at 7:49 pm e
இது ஒரு நல்ல கேள்வி..நானும் சட்டம் தெரிந்தவர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.
சுதர்சன் Says:
November 24th, 2005 at 8:41 pm e
எனக்கும் இதுதான் புரியவில்லை. எப்படி இந்த வழக்குகளை நீதிமன்றங்கள் அனுமதிக்கின்றன..இந்த வழக்குகளுக்கெல்லாம் பிடிவாரண்ட் வேறு வழங்குகிறார்கள்..
kirukan Says:
November 24th, 2005 at 9:48 pm e
Ooops… There are no lawyers here
Think they went to the court to see Kushboo
இளவஞ்சி Says:
November 24th, 2005 at 10:38 pm e
தருமி சார்,
ஸ்ரீதேவி என் பொண்டாட்டின்னு ஆந்திராகாரரு ஒருத்தரு போட்ட வழக்கையே எடுத்து விசாரிக்கறாங்க!? அவருக்கு இதே பொழப்பாம். இதுக்கு முன்னாடி இதுமாதிரி அவரு போட்ட 2 வழக்குல எச்சரிக்கையும் தண்டனையும் வேற கெடைச்சிருக்கு அந்த ஆளுக்கு! என்னத்த சொல்ல?!
1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படகூடாது பாருங்க! ஜனநாயக நாட்டுல சில விசயங்களை தவிர்க்கமுடியாது போல! அது எவ்வளவுதான் கேனத்தனமா இருந்தாலும்!!
துளசி கோபால் Says:
November 25th, 2005 at 1:08 am e
தருமிக்கே இந்தக் கோர்ட்டுவாசலிலே நடக்கும்’திருவிளையாடல்’ புரியலைன்னா எப்படி?
நீதி அரசர்களுக்கு மட்டும் ‘சினிமா இஷ்டாருங்களைப் பார்க்கற’ ஆசை இருக்கக்கூடாதாமா?
நல்லடியார் Says:
November 25th, 2005 at 2:12 am e
தருமி,
எதுக்கும் உஷாரா இருங்க! நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குக் சாத்தியம் உண்டு!
;-)
தருமி Says:
November 25th, 2005 at 2:10 pm e
குகு,
இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதுதான் ‘நல்லவனா இருப்பது தவறா?’ என்ற மகாநதிப் படத்து வசனம் நினைவுக்கு வருது. யார் இவருக்குச் சிலை வைக்கப் போகிறார்கள்? Was what he did a mere waste? விடை தெரியாத கேள்விகள்…
தருமி Says:
November 25th, 2005 at 2:14 pm e
இத்தைகைய வழக்குகள் தேவைதானா? - தாணு
எனக்கும் இதுதான் புரியவில்லை. - சுதர்சன்
நானும் சட்டம் தெரிந்தவர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன். - ஜோ
- sailing in the same boat…?
தருமி Says:
November 25th, 2005 at 2:17 pm e
ஆனாலும் இளவஞ்சி, எனக்கு என்னவோ நம் நீதித் துறை எப்பவோ ஒரு முறைதான் தூக்கத்தில இருந்து எழுந்திரிச்சி உருப்படியா ஏதாவது தங்களை ‘மறந்து’நல்லது பண்ணிடுராங்க. மற்றபடி…என்ன சனநாயகமோ தெரியலை’ங்க!
தருமி Says:
November 25th, 2005 at 2:19 pm e
நல்லடியார்,
ஏதோ வலைப்பதிவர்கள் நீங்கள் எல்லாரும் எனக்குப் பக்கபலமா இருக்குறீங்க அப்டிங்கிற நம்பிக்கைதான்…!
நல்லடியார் Says:
November 25th, 2005 at 3:27 pm e
//எவ்வளவு மடத்தனமான அடிப்படையிலும், யார் வேண்டுமானாலும், யார் மீதும் பொறுப்பற்ற முறையில் இது போல கேஸ்களை ஜோடிக்கலாமா?//
குஷ்பு மற்றும் சுஹாசினி மீதான வழக்குகள் அரசியல் காரணங்கள் ஒரு பக்கம் என்றாலும் அவை பொறுப்பற்ற வழக்குகள் அல்ல.
பிரபலங்களாக இருப்பவர்கள் தங்களுக்கு பிரபலத்தைத் தந்தவர்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டுபொறுப்பற்ற/மடத்தனமான கருத்துச் சொல்லிவிட்டு மன்னிப்புக் கேட்பதும் தேவையா?
சினிமா/அரசியல் பிரபலங்களை தங்களின் முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட மக்கள்தான் உண்மையில் பொறுப்பற்றவர்கள்.
//ஏதோ வலைப்பதிவர்கள் நீங்கள் எல்லாரும் எனக்குப் பக்கபலமா இருக்குறீங்க அப்டிங்கிற நம்பிக்கைதான்…!//
ஸாரி. இப்ப நான் பின்னூட்டப் பதிவர் மட்டுமே
டி.பி.ஆர். ஜோசஃப் Says:
November 25th, 2005 at 5:56 pm e
தருமி சார்,
நம்மள்ல பெரும்பாலோர் குஷ்பு சொன்னதுல பெரிசா யாரோட மானமும் போயிரலங்கற கண்ணோட்டத்தில பாக்குறதுனாலயோ என்னவோ இந்த வழக்குகள் எல்லாம் தேவையில்லன்னு தோணுது. ஆனா சட்டத்துக்கு கண், உணர்ச்சி அப்படீன்னு ஒன்னுமில்லைங்கறதுதான் நிதர்சனம்.
நம்ம அலுவலகத்தையே எடுத்துக்குங்க. எவனாவது ஒரு வேலயத்தவன் நமக்கெதிரா ஒரு மொட்டை கடிதாசி போடறான்னு வச்சிக்குவம். அதன் அடிப்படையில உண்மை இருக்கோ இல்லையோ உடனே ஒரு என்க்வயரின்னு ஒரு நாடகத்தை நடத்தித்தான் அதுல எந்தவித உண்மையில்லங்கறத ஆதாரபூர்வமான!? கண்டுபிடிப்பாங்க. நான் முப்பது வருஷமா நாணயமா உழைச்சிருக்கேனே ஒரு மொட்ட கடுதாசிய வச்சிக்கிட்டு என் மேல என்க்வயரி வைக்கிறீங்களேன்னு புலம்பி பயனிருக்காதில்லையா?
அதே போலத்தான் இந்த குஷ்பு விஷயமும். நீதியரசர்கள் வாதி பிரதிவாதிகளுடைய கருத்துக்களைக் கேட்ட பிறகுதான் ஒரு விஷயம் Frivolousஆ இல்லையாங்கற முடிவுக்கே வரமுடியும். த.நாவுலருக்கறல எல்லா நீதிமன்றங்களிலும் இவர்களுக்கெதிராய் வழக்கு தொடுப்பதன் உள் நோக்கம் என்ன? இவர்களை தண்டிக்க வேண்டும் என்பதா? இல்லவே இல்லை.. திருமாவே சட்டம் படித்தவர்தானே. அவருக்கு நன்றாய் தெரியும் குஷ்புவை சட்டத்தால் பெரிசாக ஒன்றும் தண்டிக்க முடியாதுஎன்று. ஆனாலும் அவரை ஊர் முழுக்க இழுத்தடித்து தொல்லை கொடுக்க வேண்டுமென்பதே இவர்கள் நோக்கம். அதற்கு சட்டத்தில் இருக்கும் archaic விதி முறைகள்தான் காரணம்.
நாம புலம்பி என்னாவ போவுது?
தருமி Says:
November 25th, 2005 at 11:06 pm e
நல்லடியார்,
//சினிமா/அரசியல் பிரபலங்களை தங்களின் முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட மக்கள்தான் உண்மையில் பொறுப்பற்றவர்கள்//- முழுமையாக ஒத்துக்கொள்கிறேன்.
ஜோசஃப்,
//நாம புலம்பி என்னாவ போவுது?//at least அதையாவது செய்வோமே!
தருமி Says:
November 25th, 2005 at 11:09 pm e
கிறுக்கன்,
நன்றி
தருமி Says:
November 28th, 2005 at 9:56 am e
ஜோச்ஃப்,
அந்த மொட்டைக்கடுதாசி விவகாரம் - ஒரு கேள்வி: முதல் தடவை ஒரு மொட்டைக்கடுதாசி வந்து நடவடிக்கை எடுத்தால் சரி. இதே வேலையாக ஒருத்தன் பண்றான்னு தெரிஞ்சா அதுக்குப் பிறகும் நடவடிக்கை, விசாரணைன்னா - அது தேவையில்லாத விவகாரம்தானே, இல்லியா?
madhumitha Says:
November 28th, 2005 at 1:01 pm e
இதையும் பார்த்து ஏதாவது பண்ணுங்க தருமி
http://madhumithaa.blogspot.com/2005/10/blog-post_04.html
டி.பி.ஆர். ஜோசஃப் Says:
November 28th, 2005 at 1:43 pm e
அது தேவையில்லாத விவகாரம்தானே, இல்லியா?
நீங்க சொல்றது சரிதான் சார். ஒத்துக்கறேன். ஆனாலும் என்ன பண்றது? கடுதாசி மொட்டையின்னாலும் அதுல இருக்கற விஷயம் உண்மையா இல்லையான்னு கண்டுக்கணும்னா விசாரணை வேணுமா இல்லையா?
ஆனா ஒன்னு. ஒன்னும் இல்லாத வாய்க்கு அவல் கிடைச்சா மாதிரியிருக்கு இந்த பத்திரிகை காரங்களுக்கு. இதுல பிராமின் நான் பிராமின்னு வேற ஒரு ஆங்கிள். நேத்தைக்கி ஹிண்டுல இதப்பத்தியே ரெண்டு மூனு ஆர்ட்டிகிள்ஸ் இருந்துச்சே. படிச்சீங்களா? இந்த விஷயத்துல ஹிண்டுவோட அதிகப்படியான அக்கறைதான் கலைஞர அப்படி பேச சொல்லியிருக்குன்னு நினைக்கிறேன். இந்த விஷயம் காமடியா பாக்கறதுக்குத்தான் லாயக்குன்னு நான் ஒரு காமெடி கலந்துரையாடல ஜோடிச்சேன். படிச்சீங்களா?
ivarugala Says:
November 28th, 2005 at 11:24 pm e
ஒரு சாதரண செயலுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்று ஒரு நீதிபதியால் கண்டித்து தண்டிக்கப்பட்டவன் நான். எதற்கும் உஷாரா இருங்க! நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்குக் சாத்தியம் உண்டு!(நல்லடியாருக்கு நன்றி)
anon1 Says:
November 29th, 2005 at 2:52 am e
neraya vazhakkugal vandhal neraya vakkeeluku velai kidaikum. needipadhigalukum velai kidaikum. velai illadha naatule neraya per indha vetti velaya seyyalame!
:)
sari. frivolos caseku penalty iruku. penaltya romba osathina aprom yarum case podave mudiyama poyidum.
தருமி Says:
November 29th, 2005 at 9:36 am e
ivarugala,
ரொம்ப இண்டரஸ்டிங்-ஆ இருக்கும்போல இருக்கே. அதை கொஞ்சம் எங்க எல்லாத்துக்கும் சொல்லலாமே…
ஜோச்ஃப்,
படிச்சேங்க நீங்க எழுதி இருக்கிறதை…ஒண்ணு இந்த மாதிரி சிரிச்சிக்கிட்டே போகணும்.. (இன்னும் எத்தனை காலம்தான்…?)இல்ல, புலம்பிக்கிட்டே இருக்கணும்..! வயித்தெரிச்சல்தான் போங்க
No comments:
Post a Comment