Thursday, July 03, 2008

261. தசாவதாரம் - ஒரு காதோட்டம்*

*பார்வை / கண் தொடர்பானவைகளைக் கண்ணோட்டம் என்பதுபோல், ஏன்
ஒலி தொடர்பானவைகளைக் காதோட்டம் என்று சொல்லக்கூடாது.

தசாவதாரம் படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும் பாட்டுக்களை - சில பாட்டுகளையாவது அடிக்கடி கேட்டாயிற்று. இரண்டு பாட்டு நன்றாகவே இருக்கு - முகுந்தா முகுந்தா பாட்டும், கல்லைமட்டும் கண்டால் பாட்டும். அதன்பின் கட்டாயம் ஒரு குத்துப் பாட்டு இருக்கவேண்டும் என்ற தற்கால தமிழ்ப்பட இலக்கணத்திற்கு ஏற்ப உலக நாயகனே அப்டின்னு ஒரு குத்துப்பாட்டு. அது போக கமல் பாடிய இன்னொரு பாட்டு .. அப்புறம் யாரோ ஷாலினி சிங் என்று ஒருவராம் அவர் பாடிய - என்னெவென்றே புரியாத பாட்டு ஒன்று - இப்படியாக ...

பாட்டுக்களை அக்கு வேற ஆணி வேற ஆக்கி அலசுற அளவுக்கு நமக்கு இசைஞானம் கிடையாது. ஆனாலும் படத்தைப் பற்றி எழுதினவர்களில் பலரும் இசை நன்றாக இல்லை; இசைஞானி அல்லது இசைப் புயல் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லியுள்ளனர். அதில்தான் எனக்கு ஒரு சந்தேகம்.

எந்த இசையமைப்பாளர் என்றாலும் எல்லா பாடல்களையும் நன்றாக அமைத்துவிடுவதில்லை. (ஏனோ, எம்.எஸ்.வி.யின் "அந்தக் காலத்து" பாவமன்னிப்பும், ஞானியின் "அந்தக் காலத்து" காதல் ஓவியமும், ஏ.ஆர். ரஹ்மானின் "அந்தக் காலத்து" டூயட்டும் நினைவுக்கு வருகின்றன.இந்தப் படங்களில் எந்தப் பாடலைத்தான் சோடை சொல்ல முடியும்?) மற்றபடி, எந்த படத்திலும், ஏதோ ஐந்தாறு பாட்டில் இரண்டு மூன்று தேறும். அவ்வளவே. அந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால் ஹிமேஷும் தேறிவிட்டார் என்றே தோன்றுகிறது. ஆனால் எல்லோரும் நம்ம ஆளுகள் ரெண்டுபேரைப் பற்றியே சொல்லியிருக்கிறார்கள். அதில் என் கேள்வி என்னன்னா, இப்போதெல்லாம் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்த படங்களில் எத்தனை பாட்டுக்கள் தேறுகின்றன என்பதுதான். கடைசியாக வந்த பெரிய படம் சிவாஜி. ஏதோ சூப்பர் ஸ்டார் முகத்துக்காக அந்தப் படப் பாடல்கள் அதிகமாகக் கேட்கப்பட்டனவேயொழிய மற்றபடி அந்தப் படப் பாடல்கள் எதுவுமே தேறாத வகைதான் என்பது என் எண்ணம். ஒருவேளை அவர் இப்போதெல்லாம் முழுக்கவனத்தை தன் தமிழ்ப்படப் பாடல்களுக்குக் கொடுக்க முடியாததால் இருக்கலாம். 'உலகத்தரமான' இசை கொடுக்க வேண்டியதிருப்பதால் இங்கே லோக்கல் படங்களுக்கு பழைய முனைப்போடு கொடுக்க முடியாமல் இருக்கலாம். இப்போதெல்லாம் இங்கே உள்ள இசை அமைப்பாளர்களே நல்ல பாடல்களாகவே கொடுத்துதான் வருகின்றனர். ஆனாலும் நாம்தான் நாமே மேலே தூக்கி வைத்த ரஹ்மானை இன்னும் அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறோம். தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை அவரின் பழைய இடத்திலிருந்து அவர் இறங்கி நாளாகிவிட்டது என்றே நினைக்கிறேன்.

ஒருவேளை இசைஞானியிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்திருந்தாலாவது இன்னொரு நல்லது நடந்திருக்கும். நிச்சயமாக இரண்டு பாடல்களுக்கு மேல் நல்ல பாட்டுக்கள் கிடைத்திருக்கும். அதைவிடவும், எப்போதுமே பின்னணி இசையில் அவரது ராஜாங்கமே தனிதான். காதலுக்கு மரியாதையின் கடைசி சீன்கள் நினைவுக்கு வருகின்றன. அதே போல் பம்பாய் படத்தின் ஆழமான அந்த இறுதி கலவரக் காட்சிகளில் ரஹ்மானின் பின்னணி இசை கர்ணகடூரமாய் பார்வையாளர்களைக் காட்சியோடு ஒன்ற முடியாதபடி செய்ததும் நினைவுக்கு வருகிறது. தசாவதாரத்தைக் கொடுத்திருந்தால் அதேபோல் 'விளையாட' ரஹ்மானுக்கு நிறைய காட்சிகள் இருந்திருக்கும். நல்ல வேளை ...

*

24 comments:

ராஜ நடராஜன் said...

தருமி ஐயா,காதோட்டம் கேட்ட முதல் ஆள் நானா?இதுவரை ஒருத்தரும் போணி பண்ணலை

தருமி said...

ஆமாங்க நடராஜன்.
நாம் ரெண்டுபேரு மட்டும்தான் இங்க தனியா இருக்கோம்..
:(

ராஜ நடராஜன் said...

புருனோவின் பதிவிக்குப் போய் விட்டு வர்றதுக்குள்ள உங்களின் பதில்.நன்றி.ரொம்ப வேகம்தான் போங்க!

சின்னப்பொண்ணு said...

அப்போ பின்னூட்டம் என்று எதை சொல்வது???

Ash said...

dharumi saar,,

rahman songs u have to listen to atleat 5-6 times, then it will rmeind u of old songs composed by him , then u will start loving it..but anytime i prefer harris jayaraj,,his songs are lovely from the first time u hear it..wat say?

தருமி said...

நானும் இங்க இருந்து அங்கதான் போய்ட்டு வந்தேன். நல்ல பதிவும் பின்னூட்டங்களும்.

தருமி said...

காசிபாரதி,
அத நீங்களே சொல்லிடுங்களேன்.....

தருமி said...

அசோக்,
//rahman songs u have to listen to atleat 5-6 times,..//

இப்படித்தான் நிறைய பேரு சொல்றீங்க. ஆனா எனக்கு என்னமோ அப்படியெல்லாம் தெரியலைங்க. சின்னச் சின்ன ஆசை, கண்ணுக்கு மையழகு - எல்லாம் கேட்ட முதல் தடவையே பச்சக்குன்னு மனசுல ஒட்டுனது இன்னும் நினைவிலிருக்கு.

Thekkikattan|தெகா said...

பெரும்பாலான கமலின் முக்கிய படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்திருக்கும் பொழுது ஏன் தசாவிற்கு மட்டும் இல்லை என்று யோசிக்கும் பொழுது, எனக்குத் தோன்றுகிறது கமலே நினைத்திருக்கலாம் ராஜா கான்ரோவெர்சிகளை விரும்பாதவர் மேலும் அந்த முகுந்தா... முகுந்தா பாடலில் சில பாடல் வரிகள் கொஞ்சம் சிக்கலானது என்பதினால் தவிர்த்திருக்கலாமோன்னு நினைக்கத் தோன்றுகிறது.

ரஹ்மான் பற்றி... அவரு எங்கேயோ போயிட்டார், தருமி. இருந்தாலும் ஒரே மாதிரி 5-6 நிமிடத்திற்கும் மேலாக இழுக்கும் பாடல்கள், போதும்... :-).

ராஜ நடராஜன் said...

ஹிட் கவுண்டிங் ஸ்டார்ட்.இதுவரைக்கும் மொத்தம் 8.நான் வீட்டுக்குப் போகிறேன்.

இலவசக்கொத்தனார் said...

கடைசி பேரா - ரிப்பீட்டேய்!!

தருமி said...

தெக்ஸ்,
//முகுந்தா... முகுந்தா பாடலில் சில பாடல் வரிகள் கொஞ்சம் சிக்கலானது என்பதினால் ..//

கொஞ்சம் கோனார் நோட்ஸ் தேவையா இருக்கே...

தருமி said...

கொத்ஸ்,
நிறைய பேரு ரஹ்மானைக் குறைத்து சொல்லிட்டேன்னு சண்டைக்கு வருவார்களோ என நினைத்திருந்த போது இப்படி "ரிப்பீட்டேய்' கிடைக்கும்னு நினைக்கலை. நன்னி.

பினாத்தல் சுரேஷ் said...

கடைசிப்பாராவுக்கு ரிப்பீட்டேய் போட நண்பர் முந்திக் கொண்டார். அதனால் என்ன? ரெண்டு ரிப்பீட்டேய் போட்டா தப்பா என்ன?

அடுத்ததாக, மணாளனே மங்கையின் பாக்கியம்னு ஒரு படம் கொஞ்ச நாள் முன்னாடி வந்துச்சாம், அதோட இசைத்தட்டு கேட்டு ஒரு விமர்சனம் எழுதுங்களேன்!

தெகா, நீங்கள் சொல்லும் காரணம் லாஜிகலாக இருக்கிறது!

தருமி said...

ஏங்க பெனாத்ஸ்,

பாவமன்னிப்பு, காதல் ஓவியம் எல்லாம் ஏதோ எங்க காலத்து சினிமான்னு நினச்சி அதப் பத்தி சொன்னா நீங்க ஒரேயடியா ம.ம.பா. பத்தி சொல்லச் சொல்றீங்களே. ரொம்பத்தான் குசும்பு.

அதோட இதுக்கே இப்படி சொல்லிட்டீங்களே .. இன்னைக்கித்தான் தசா பாக்கப் போறேன். வந்து ஒரு விமர்சனம் போடலாம்னு பார்க்கிறேன். ஆனா அடிக்க வந்துருவீக போல இருக்கே!

ரெண்டாவது ரிப்பீட்டுக்கு நன்னி.

தருமி said...

தெக்ஸ்,
//ரஹ்மான் ..எங்கேயோ போயிட்டார்,..//

அதான் சொல்றேன். எங்கேயோ போய்ட்டார்; அங்கேயே நல்லா இருக்கட்டுமேன்னு சொல்றேன்.

கோவி.கண்ணன் said...

தருமி ஐயா,

தசவதாரப் பாடல்கள் விமர்சனமாக தொடங்கி, இசை அமைப்பாளர்களை விமர்சித்து முடித்திருக்கிறீர்கள்.

நானும் அது தொடர்பிலேயே சொல்லிவிடுகிறேன்.

இசையமைப்பாளர்கள் நிபுணத்துவம் பெற்ற பிறகு முன்பு போல் அந்த முனைப்பு இருக்காது. மேலும் இளைஞர்களில் விருப்பத்திற்கு ஏற்ற இசை என்பதை மறந்து தங்களுக்கு ஏற்ற இசையைத் தான் தருவார்கள். அது ஒரு Saturation அது மெச்சூரிட்டி என்று(ம்) தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

எல்லாவற்றிக்கும் கால எல்லை இருக்கே. இளையராஜா முன்பு போலவே மாதத்திற்கு 5 படம் இசை அமைத்தால் அவரால் தரமான பாடல்களைக் கொடுக்க முடியாது ஆண்டு 5 என்ற அளவில் கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார். இரகுமானின் இசை எல்லைகள் விரிந்துவிட்டதால் தமிழ்பாடல்களைப் பொருத்து சொல்லும் கருத்து அவரது திறமைக்கு பொருந்தாது என்றே நினைக்கிறேன்.

யார் கண்டது, நிறைய இரகுமான்கள் வாய்ப்புகளுக்காக காத்திருக்கலாம். சினிமாவில் முதல் அடிவைத்து, முதல் படத்தில் முத்திரை பதிப்பதில் இசை அமைப்பாளர்களின் முழுத் திறமைக்கான விதை. அதை அன்னக்கிளியில் இசைஞானியும், ரோஜாவில் இசைப்புயலும் நன்றாகவே ஊன்றினார்கள்.

கோவி.கண்ணன் said...

//பாட்டுக்களை அக்கு வேற ஆணி வேற ஆக்கி அலசுற அளவுக்கு நமக்கு இசைஞானம் கிடையாது. //

சபா கச்சேரிகளை விமர்சிக்கும் சுப்புடு ரேஞ்சுக்கு பீல் பண்ணுறிங்க.

திரைப்படத்தில் வரும் பாடல்கள் திரை ரசிகர்களின் காதுகளுக்குத்தானே தானே. கேட்கும், ரசிக்கும் திறன் இருந்தால் போதும்... இதற்கு இசைஞானம் தேவையில்லை என்பது என்கருத்து !

வால்பையன் said...

இப்போதெல்லாம் பெரிய இசையமைப்பாளர்கள் இயக்குனர்களுக்கு விரும்பிய வகையில் இசையமப்பதில்லை, போட்டாச்சு பாத்துகோங்க என்று சென்று விடுகிறார்கள்.
இதை அப்பட்டமாக காட்டியது முகவரி என்ற திரைப்படம்,
திறமை இருப்பினும் காலத்திற்க்கேற்றவாறு மாறி கொள்ளும் குணம் நிறைய திறமையாளர்களுக்கு இல்லை, அதனால் தான் நிறைய இயக்குனர்கள் பெரிய தலைகளை தேடி செல்லவில்லை,

காணாமல் போன சிற்பி எனக்கு பிடித்த இசையமைப்பாளர்

வால்பையன்

வால்பையன் said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

வால்,
//அதனால் தான் நிறைய இயக்குனர்கள் பெரிய தலைகளை தேடி செல்லவில்லை..//

இன்னுமல்லவா தேடிப் போகச் சொல்லுகிறார்கள்..!

தருமி said...

கண்ணன்,
//இளைஞர்களில் விருப்பத்திற்கு ஏற்ற இசை என்பதை மறந்து ..//

இதில் 'இளைஞர்களில்' என்பதற்குப் பதில் 'எல்லோரின்' என்றிருந்தால் சரியாக இருந்திருக்கும். அதென்ன இளைஞர்களுக்கு மட்டும் பிடித்த பாடல்கள்?

தருமி said...

கண்ணன்,,
அதத்தான் சொல்றேன்; பாட்டு ரசிக்கத்தெரியும்; ஆனா, சொன்ன மாதிரி 'அக்கு வேற ஆணி வேற ஆக்கி அலசுறக்கு' திறமையில்லைன்னு சொன்னேன்.

G.Ragavan said...

தருமி சார், அந்தக் கல்லைக் கண்டால் பாட்டு மலையாளப் பாட்டோட காப்பியாம். :-)

இளையராஜா ரகுமான் தேவையில்லை... தேவாவைக் கூப்பிட்டிருந்தாலே எல்லாப் பாட்டும் ஹிட் ஆயிருக்கும்.

நீங்க சொன்ன மாதிரி மெல்லிசை மன்னரோ, இசைஞானியோ இசைப்புயலோ எல்லாப் படத்துலயும் எல்லாப் பாட்டும் நல்ல பாட்டு கொடுத்ததில்லை. மொக்கைகளும் உண்டு. ஆனா இவங்க மூனு பேருமே கொஞ்சம் சிரத்தை எடுத்து செய்யக் கூடியவங்க. அந்தச் சிரத்தையும் முனைப்பும் ஹிம்மேஷ் ரேஷமய்யாவிடம் தெரியவில்லை. கல்லைக் கண்டால் பாட்டைத் தவிர எந்தப் பாட்டும் காட்சியோடு பொருந்தவில்லை என்பது என் கருத்து. முகுந்தா முகுந்தா நல்லாயிருக்கு. ஆனா கோயிலோட கற்சுவருக்குப் பூசுன ஆயில் பெயிண்ட் மாதிரி பளபளன்னு இருக்கு. நல்லாருக்குன்னு சொன்ன கல்லைக் கண்டால் பாட்டும் காப்பியாம்.

Post a Comment