Monday, July 07, 2008

262. இது தசாவதாரம் விமர்சனப் பதிவு அல்ல

இது தசாவதாரம் விமர்சனப் பதிவு அல்ல. அந்தப் படம் பார்த்த கதை. அவ்வளவே.

போன வெள்ளிக்கிழமை. தங்க்ஸோடு சினிமா பார்த்திர்ரதுன்னு முடிவு செய்து, மதுரையிலேயே தசா நடக்கிறதில்ல எது நல்ல தியேட்டர் என்று நாலுபேருகிட்ட விசாரிச்சி, வீட்ல இருந்து ரொம்ப தொலைவில் - திருநகரில் - உள்ள இம்பாலா படக் கொட்டகையை முடிவு செஞ்சி அதுக்காகவே அங்க இருக்கிற தங்க்ஸின் அண்ணன் வீட்டுக்குச் செய்தி சொல்லியாச்சி. அவங்க வீட்டுக்குச் சீக்கிரமே போனாலும் படம் எத்தனை மணிக்குச் சரியா போடுவாங்கன்னு தெரிஞ்சுக்கணுமே. ஏன்னா நம்ம பதிவுலக மக்கள் எல்லோரும் ஒருமித்து சொன்ன ஒரே விஷயம் முதல் 15 நிமிடம் உலகத்தரம் அப்டின்னு. அதை மிஸ் பண்ணிடக்கூடாதே அப்டின்றதுக்காக போற வழியில் இருந்த கொட்டகைக்குப் போய் எப்போன்னு கேட்டுடலாம்னு நேரே அங்க போனோம்.

கொட்டகைக்கு முன்னால் போய் நின்னதும் வாயில்காப்பாளர் எங்களை நோக்கி ஓடிவந்தார். எப்போ படம் அப்டின்னு கேட்டோம். மதியம் இரண்டரைக்கு என்றார். காலைக்காட்சி அப்போது நடந்து கொண்டிருந்தது. டிக்கெட் எல்லாம் சுலபமா கிடைக்குமா என்று கேட்டேன். கிடைக்கும். ஆனால் இப்பவே வாங்கிக்கொள்ளுங்களேன் என்றார். சரி,இறங்கி வாங்குவோம்னு நினைத்த போதே தானே வாங்கித் தருவதாக மிக அன்பாகச் சொன்னார். இருந்தும் தியேட்டர் எப்படி இருக்கிறதென்றும் பார்ப்போமே என்று எண்ணி உள்ளே சென்றேன்.

தடபுடலாக பயங்கர மரியாதையோடு என்னோடுகூடவே காப்பாளரும் வந்தார். சீட்டு கொடுக்குமிடம் வந்தது எவ்வளவு என்றேன். காப்பாளர் எனக்கான முடிவை அவரே எடுத்துவிட்டார். 'சார், உங்கள பார்த்ததுமே நினச்சிட்டேன்; 100 ரூபாய் டிக்கெட் எடுங்க' என்றார். நம்மைப் பார்த்தாலே அப்படியா ஈனா வானா மாதிரி தெரியுது அப்டின்னு நானா நினச்சிக்கிட்டேன். இந்த கொட்டகையைக் கையைக் காட்டினவர்களோ ஒரு டிக்கெட் 50 ரூபாய் என்றுதான் சொல்லியிருந்தார்கள். அதை அவரிடமே சொன்னேன். இல்ல சார், இது பாக்ஸ்; வந்து பாருங்க அப்டின்னு கையைப் பிடிக்காத குறையா கூட்டிட்டு போனார். நானும் கூடப் போய் பார்ப்போமேன்னு போய்ட்டேன். ஒரு வாசலைத் திறந்தவர் உள்ளே அழைத்தார். உள்ளே போனதும் டக்குன்னு விளக்கைப் போட்டுட்டார். மொத்தம் 4 பேர். 4 வரிசைகளில் இரண்டிரண்டு சோஃபா. 4 பேரில் இரண்டு பேர் இளம் ஜோடி. தட தடன்னு ரெண்டும் ஒருமாதிரி எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்ததுகள். காப்பாளரையும் விரைந்து வெளியே இழுத்து வந்தேன். இப்படி கரடியா மாறிட்டோமே அப்டின்னேன். எனக்கு தெரியுமா, சார் அப்டின்னு அப்பாவியா கேட்டார். இந்த பாக்ஸ் மட்டும் குளிரூட்டப்பட்டது என்றார். சரின்னு மூணு சீட்டு வாங்கிட்டு வீட்டுக்குப் போய்ட்டு 2.20-க்குத் திரும்பி வந்தோம். படம் முடிந்து கொட்டகையை சுத்தப்படுத்திட்டு 2.45 மணியளவில் படம் போட்டார்கள். காப்பாளர் இப்போது மீண்டும் வந்து விளக்கு ஸ்விட்ச் எங்க இருக்குன்னு சொல்லிட்டு, வேற ஏதும் வேணுமான்னு கேட்டார்; இல்லைன்னேன். எதுன்னாலும் சொல்லுங்க,சார் அப்டின்னு ஒரே கவனிப்பு. இந்த முறை எங்க 'பாக்ஸில்' எங்களைத் தவிர்த்து இன்னும் ரெண்டு ஜோடி. அதுல ஒண்ணு .. சரி..சரி... அத விடுங்க. படத்தைப் பார்ப்போம்.

படம் எனக்குப் பிடிச்சிது; தங்க்ஸுக்குப் பிடிக்கலை. ஸ்ரேயாவும் தலைவரும் வந்து ஒரு பாட்டு பாடினா எப்படி இருந்திருக்கும்; சும்மா எல்லோரும் ஓடிக்கிட்டே, அடிச்சிக்கிட்டே இருந்தா .. என்ன இது அப்டின்னிட்டாங்க. குசேலன் கூட்டிட்டுப் போயிடவேண்டியதுதான், சிவாஜி மாதிரி.

ஒண்ணு புரிஞ்சிது. கமல் ஒரே தப்பை திரும்பவும் செஞ்சிக்கிட்டே இருக்கிறார். நானும் இந்தப் படம் அவரின் magnum opus என்றெல்லாம் சொன்னதும் என்னமோ ஏதோ என்று நினச்சிட்டேன். நம்ம பதிவர்களும் எப்படி ஒவ்வொரு 'அவதாரத்துக்கும்' வைத்த பெயர்கள் கூட எப்படி தசாவதாரத்தோடு தொடர்புள்ளன; வண்ணாத்திப் பூச்சி பறக்கிறது - choas theory - அது இதுன்னு பில்டப் கொடுத்திருந்தாங்களா, வேற மாதிரி நினச்சிட்டுத்தான் போனேன்.

போன பிறகுதான் தெரிஞ்சுது நம்ம டைரடக்கர்கள் எல்லோருமே தங்கள் படம் வெளியாவதற்கு முன் கொடுக்கும் பேட்டியில் 'இந்தப் படத்தில் எல்லோருக்கும் பிடித்த - காதல், பைட், செண்டிமெண்ட், நகைச்சுவை - எல்லாமும் இருக்கும் என்பார்களே அந்தமாதிரி படம்தான் இது அப்டின்னு. நான் வேற வித்தியாசமான genre என்று நினச்சது மாதிரி இல்லாம, இதுவும் எல்லாப் படமும் மாதிரியான 'ஒரே மாதிரிப்' படம் அப்டின்னு தெரிஞ்சிது. ஒரு விசயகாந்த் படத்தில் அவரை வில்லன் துப்பாக்கியால் சுட அது அவர் நெஞ்சில் பட்டு அப்படியே திரும்பி சுட்டவன் மேல் பாய்ந்து சுட்டவனையே கொன்றுவிடும்! இங்க கொஞ்சம் மாத்தி குண்டு பட்டு அவ்தார்சிங்கின் கேன்ஸர் சுகமாயிரும். உன் காதலன் உன்னைக் காப்பாற்ற திரும்பி வருவான் என்று சொல்லும்போது அசின் அதெல்லாம் வரமாட்டான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கமல் உள்ளே நுழைய, அந்தக் கணத்திலேயே கதாநாயகிக்குக் காதல் வந்திருமே அதெல்லாம் நமக்குப் புதுசா என்ன? கதாநாயகனைத் துப்பாக்கியால் எத்தனை ரவுண்டு சுட்டாலும் அப்போ மட்டும் குண்டு குறி தவறிப் போகுமே அது நாம் எத்தனை உலகத்தரமான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பார்த்திருப்போம். அத்தனை பெரிய பெருமாள் சிலையையே கடலுக்குள் இருந்து கரைக்குக் கொண்டுவந்து போட்ட சுனாமி அலைகள் நம் கதாநாயகன், கதாநாயகி இருந்த படகை மட்டும் தொடாமலே சென்று விடுமே அதெல்லாம் Our film heroes are non-destructible என்ற தத்துவத்தை ருசிப்பிக்குமே, அது புதுசா என்ன?

இதெல்லாம் சாதாரண ரசிகனுக்கும் போய்ச்சேரும் விஷயங்கள். ஆனால் தன் மேதாவித்தனத்தைக் காண்பிக்கவும், நம் பல பதிவர்கள் போன்ற மேதாவிகளின் புத்திசாலித்தனத்துக்குத் தீனியாகவும் கேக் மேல் இருக்கும் icing போல் சில விஷயங்களைச் சேர்த்திருக்கிறார். அவைகள்தான் அந்த choas theory, வண்ணாத்திப் பூச்சி, ஒவ்வொரு 'அவதாரத்துக்கும்' வைத்த பெயர்கள், அந்த continuity எல்லாமுமே. இந்த முலாம் பூச்சுதான் இத்தனை காரசார விமர்சனங்களுக்கும் காரணம். இது ஒரு 'ஒரிஜினல் நயம் பொழுதுபோக்குப் படம்' அப்டின்னு முதலிலேயே சொல்லியிருந்தால் இதைவிட இந்தப் படத்துக்கு வரவேற்பு இருந்திருக்குமென நினைக்கிறேன்.

ஹே ராம் ஒரு இளைஞனின் கதை என்று மட்டும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைவிட்டு விட்டு அந்தக் கதைக்குப் பல வரலாற்றுப் பூச்சுக்கள், அரசியல் வர்ணங்கள் கொடுத்ததால்தான் தேவையற்ற விவாதங்கள் படம் வருவதற்கு முன்பே. அந்த விவாதங்களே படத்திற்கு எதிர்விளைவானது. கடும் உழைப்பும், பெரும் திறனும் பின் தள்ளப்பட்டு விட்டன. கமலின் படங்களுக்கு அவைகள் வெளியாவாதற்கு முன் கொடுக்கப்படும் hype அந்தப் படங்களைப் பற்றிய தவறான புரிதல்களையோ, எதிர்பார்ப்புகளையோ கொடுத்து மக்களைத் திசை திருப்பிவிடுகின்றன.

பாலகுமாரன் கதையான குணா நல்ல வேளை இதிலிருந்து கொஞ்சம் பிழைத்தது. சாதாரணமாக ஒரு கடத்தல் கதை போல் இருந்தாலும், பின்புலத்தில் பரமாத்மா (அபிராமி), ஜீவாத்மா (குணா) இடையிலான உறவு என்ற தத்துவமும், இன்னும் சில உள்ளடங்கிய தத்துவங்களும் படத்தின் வெளிப்படையான கடத்தல் கதைக்குள் பொதிந்து வைக்கப்பட்டன. புரிந்தால் புரிந்து கொள்ளப்படட்டும் இல்லாவிட்டில் இருக்கவே இருக்கிறது காதல் - கடத்தல் என்ற கதையாடல் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து, அதிகப் பிரச்சனைகள் இல்லாமல் ஓடியது.

கமல் படங்களுக்குக் கொடுக்கப்படும் இந்த hype இல்லாவிட்டால் அவரது படங்கள் இன்னும் ரசிக்கப்படும் என்றே தோன்றுகிறது.

அதென்ன .. எல்லாரும் சொல்லி வச்சாப்புல தசா.வில ஜெயப் பிரதாவைப் பத்தி ஒண்ணுமே கண்டுக்கலை .. சே.. ஓல்டுன்னாலும் கோல்டு கோல்டுதான்!

28 comments:

Thamiz Priyan said...

///அதென்ன .. எல்லாரும் சொல்லி வச்சாப்புல தசா.வில ஜெயப் பிரதாவைப் பத்தி ஒண்ணுமே கண்டுக்கலை .. சே.. ஓல்டுன்னாலும் கோல்டு கோல்டுதான்!///
:))

இலவசக்கொத்தனார் said...

என்னாது காந்தி செத்துட்டாரா? என்று டுபுக்குவின் தசா பதிவில் இன்று போட்ட அதே பின்னூட்டத்தை உங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

தருமி said...

தமிழ்ப் பிரியன்,
?

அது சரி, உங்க பெயரில் "ப்" வரணுமா வேண்டாமா?

தருமி said...

கொத்ஸ்,
எங்கிட்ட இப்படியெல்லாம் விளையாடாதீங்க. ரொம்ப நாளா குணா பட விமர்சனம் எழுதலாமாவென நினச்சிக்கிட்டு இருக்கிறதை நிறைவேத்திப் புடுவேன்; ஜாக்கிரதை!!

புருனோ Bruno said...

//கேக் மேல் இருக்கும் icing போல் சில விஷயங்களைச் சேர்த்திருக்கிறார். //

கமல் இது நாள் வரை கேக்கை தனியாகவும் (தெனாலி, அவ்வை சண்முகி) ஐசிங்கை தனியாகவும் (ஹே ராம், ஆளவந்தான்) அளித்து வந்தார்.

இப்பொழுது தான் சேர்த்து அளித்திருக்கிறார் :) :)

Thekkikattan|தெகா said...

தருமி,

அப்ப முதல்ல கரடியாகி, இரண்டாவது முறையா உள்ளே போயி ஒழுங்கு முறையா அமர்ந்து படத்தை மட்டும் பார்த்தீங்கன்னு நம்புறோம், :-).

என்னோட தசா படம் பார்க்கப் போன கதையிலும் கூட, நான் நல்லதொரு பொழுதுப் போக்கு படமின்னுதான் சொல்லியிருப்பேனாக்கும்...

"குணா" படம் அன்னிக்கு நீங்க சொன்ன அந்த 'ஆத்மா' கோணத்திலருந்து பார்க்கும் பொழுது அந்தக் 'கண்மணி அன்போட...' கடுதாசி பாடல் கூட ஒரு புதுப் பொருளைக் கொடுத்தது, அதற்கு உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி. ஆக மொத்தத்தில கமலோட 17 வருஷத்திற்கு முந்திய படத்தில வந்த ஒரு மறை முக கான்செப்ட் இப்பத்தான் புரிஞ்சி பார்க்க முடிஞ்சது :-(.

லக்கிலுக் said...

அனேகமாக நான் படிக்கும் தசாவதாரம் விமர்சனங்களில் நேர்மையான முதல் விமர்சனம் இதுதானென்று நினைக்கிறேன் :-)

ஜோ/Joe said...

விமர்சனத்துக்கு நன்றி வாத்தியாரே!

இது ஒரு வணிகரீதியான படம் என்பதாகத் தான் தொடக்கத்திலிருந்து சொல்லப்பட்டதெனவே நான் நினைக்கிறேன்.

rapp said...

விமர்சனம் சூப்பரோ சூப்பர்.//கமலின் படங்களுக்கு அவைகள் வெளியாவாதற்கு முன் கொடுக்கப்படும் hype அந்தப் படங்களைப் பற்றிய தவறான புரிதல்களையோ, எதிர்பார்ப்புகளையோ கொடுத்து மக்களைத் திசை திருப்பிவிடுகின்றன//
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, தன் வாயாலயே தனக்கு சூனியம் வெச்சிக்கரோம்னு தான இந்த தடவ அவரு பட ரிலீசுக்கு முன்னாடி தர்ற பேட்டியைக் கூடத் தரல.மத்தவங்க அவர கைப்புள்ளயாக்கி குளிர்காஞ்சி, அவர் படத்த ரணகளமாக்கிட்டாங்க இந்த தடவை. நீங்க ரவிக்குமார பார்த்து உஷாராகிருக்கணும்:):):) வர வர அவர் எதையுமே வெளிப்படையா சொல்றதில்லை, சூசகமாவே சொல்றாரு.

நான் ஒரு வரி ஜெயப்பிரதாவப் பத்தி எழுதிருக்கேன்.

சரிங்க, அந்த ஜோடி என்னாப் பண்ணாங்க, அதுக்கொரு தனிப் பதிவா போட்டு ***** கதயாக்கிடுங்க

ராஜ நடராஜன் said...

தருமி ஐயா வணக்கம்.முதல் தடவை பார்க்கும்போது அப்படித்தான் இருக்கும்.இன்னொரு முறை பாருங்க.குணாவுக்கு இத்தனை வருசம் கழிச்சு புது விளக்கம் சொல்றமாதிரி புது விளக்கங்கள் நிறைய கிடைக்கும்.முக்கியமாக வசனம் கவனம் செலுத்துங்கள்.

தருமி said...

மாணவ நண்பன் பரணீ தனி மடலில் அனுப்பிய பின்னூட்டத்தை இங்கு இட்டுள்ளேன். ஒரு கட்டுரையும் உண்டு; கொஞ்சம் நீளம்தான். இருந்தாலும் ரொம்ப interesting! (இந்த இடத்தில interesting-க்குப் பதிலாக என்ன சொல் சரியாக இருக்கும்; நெடுநாளாக இந்தக் கேள்வி எனக்குண்டு; தெரிந்தோர் உதவவும்)

அந்தக் கட்டுரையை முழுதாகப் படிக்க மனதில்லாதவர்கள் அதில் கொடுக்கப் பட்டுள்ள you tube தொடுப்பையாவது கட்டாயம் பாருங்கள். very interesting!!

Hello sir,

Hope you are fine. today i read your blog post about Dasavatharam.

I'm forwarding an article to answer some of your questions which were raised here.

1) Avthar Singh's cancer:

There was a real incident happened in a western country where cancer on a person's head was removed by a bullet shot towards him. I do not remember the country and all, but i'm sure that i've read this news in a news paper.

2) Highlighted para in the article below explains how Kamal & Asin charcters got saved from Tsunami.

Expecting your reply.

Thanks & Regards,

Baraneetharan K


Dasavatharam - A Nice recap - might get to know something you missed



Some guys have claimed they haven't understood chaos theory which plays such an important part in the film. With some explanation people can appreciate the brilliance of the film.

Q: What is Chaos?

A: Basically a chaotic system is one wherein long term predictions are impossible. For example, if I push a car, I know that it is going to move and it will continue to do so if I go on pushing it on and on. However, in a chaotic system, this situation cannot be predicted over a long period of time. Weather for example is a chaotic system. No matter how good your instruments are,you simply cannot predict the weather with 100% accuracy over a long term basis and forecast it. I feel the scene from aporva sadoraragal where he kills Delhi Ganesh is one more example of chaos theory.

Q: What is the butterfly effect?

A: It is the most important component of a chaotic system. Basically, small perturbations result in amplifications which completely destroy the original nature of the system and makes prediction impossible. If a butterfly flaps its wings in Africa, it could result in a cyclone in USA.(Mark the word COULD)A highly dumbed down explanation of the butterfly effect is in the film Anniyan,where Vikram's sister dies because a liquor shop owner sells liquor on a dry day.

Q:OK, how does Dasa incorporate it?

A:In essence, Dasa talks about 8 characters who are inconsequential as such,but are integrated in a larger picture. Without Bush,the plane would have been called back. Without Shinghen,Govind would be dead. Without the tsunami, the world would have been destroyed.Even Krishnaveni Patti plays a very important role. If she had not put the vial in the idol, maybe Govind would have recovered it then and there and a powerful weapon would have been unleashed. The very fact that it went into the idol meant that it was being accelerated to its destiny. Without Kaifulllah Khan,Govind would have never escaped; the list simply goes on.

Q:OK,so does the film talk about theism or atheism?

A:Neither. It talks about how humans drive the destiny of the world. Kamal says in the movie that everything happens for a reason. It appears that He implies "Nature Is God" - from his portrayal of the world, the cyclic and reasoned happenings of life and nature with respect to the CHAOS THEORY. However, the main point and the subject of my post is to bring up a very simplified example of the chaos theory. One thing can lead to another, and another and another and so on, wherein energy can be gained, multiplied, transformed thus leading to a result which ends this cycle.

Please take a look at this video: the best way to explain chaos theory. http://www.youtube.com/watch?v=KW18GGGKJQM

These are very few simple examples of what simple changes in relative positions of objects can do. No one can ever predict what would lead to what, as in we will have no idea what is going to be the end result when we start watching the things happening in sequence. They can be built to accomplish anything, starting with something that is NO WAY related to what the end result is. This can be taken as a model to explain the chaos theory, wherein the only difference being that these machines are man-made and chaos theory is nature-made. Having said that, I hope you all know where I am coming. It is marvellous that Aandavar Kamal has used such a device in Abhoorva Saghodhararghal, way back in 1989. To kill Delhi Ganesh, for those of you who do not remember. The plot concept of Dhasaavadhaaram is logically explained by a machine used by Him in His own screenply back then too, before 20 Years!! Be it a coincidence or He possibly had that in mind as an inspiration, it amazes!!

My whole point is, Kamal Hasan, was born genius!

Nambi explanation: Okay, this is slightly outside the chaotic system driving the film as a whole.My tamil is not that good(lived in north all my life)so I can't say exactly what Govind was telling in the begining of the film,but from what I could gather he says that this story is about ideologies like God,the madness surrounding such ideologies and decides to tell the story of the Shaivite-Vaishnavite conflict to show how people go crazy in the name of God as an example. As a loose end, it gets tied up in the end,when the Ranganathar idol is thrown out of the sea due to the tsunami which highlights the cyclic nature of life.

Another explanation(and this is slightly far fetched)is that Govind is in fact the reincaranation of Nambi. As Nambi he couldn't protect God and died in the name of God. In order to fulfill his Karma, he is reincarnated as Govind Ramasamy who ultimately saves the world from destruction. The idol in the end somewhat hints to this theory; his story began with the idol and it ends with the idol.

Another explanation

The idol that is drowned in the sea along with Rangarajan in 12th century by Chozha king results in a fault being developed at the bottom of the ocean and creates tremors more than 800 years later. These tremors result in the Tsunami. This again is a classic case of Butterfly Effect wherein a seemingly inconsequential event (the drowning of the idol) saves Tamil Nadu from being wiped out off the face of the earth.

All 8 characters are responsible for Govind reaching his destination i.e beach during the exact time of tsunami right from bush to Japanese man and after statue comes out they would have researched it and so Govind started narrating the story from religious aspect to give it as a example for satellite failure to predict tsunami kamal rocks man, no words to explain.

As far as the connection with Nambi character and events in 12th Century goes... The connection is based on the "butterfly effect ".

When Govind and Andal goes to the bury the idol in the sands, Andal will stumble on a particular stone couple of times...This is the same stone as the one from 12th Century when Kothai rips her Thali and flings it at Kulothunga Chozan...it will end up hanging on the stone. So, the implied message here is Andal is Kothai reborn in the 21st century.

During the encounter with Santhana Bharathi in the sand quarry, it is a repeat of the incident from 12th century. Instead of Kulothunga Chozhan, it is the Sand Mafia who tries to inflict damage on the lives of Govind and Andal...

This movie is a brilliant juxtaposition of independent characters whose paths cross, if only briefly, which is stunning example of Chaos Theory.

For reviewers in Sify and Times of India, it would make sense for the owners of those media outlets to get their reviewers trained on basics of reviewing a movie without prejudice. Even after Thalai mentioned about Chaos Theory in the buildup to the movie release, these reviewers could not understand the significance of it.

This is stunning screenplay at its best!

The story line is things going wrong are made to be right which involves many people and countries knowingly or unknowingly......knowingly: bush, manmohan singh, govind, fletcher, balaram naidu, mallika sheravat. unknowingly: poovaragan(actually saved kamal unknowingly),sardarji(gave way to fletcher to escape unknowingly),japanese(saved govind from fletcher,he knows he is saving but he doesnt know about the play and was there only for revenge),kallifulla and family(saved govind unknowingly)........this is based on chaos theory

If u watch it closely u can also find another actor who has done double action other than asin and kamal. asin's father sahasranamam. in the beginning he ll be saying "panchatchira manthirathai sollitu vaango maappillai". n at the end he ll be saying "avar enna jathiyo inga vaanga paati theetu aagida poguthu". another eg of chaos.

Dalith kamal was trying to save the land resource......he unknowingly gets involved in saving the person(govind) who is trying to save the world....... also sardarji dont know about vayal but since he distracts policemen in airport by blood vomit, fletcher is made to escape........

Connections to Vishnu Purana & Dasavatharam : :-) Just tried....

Boovarahan (Obvious The Boar - Varaha Avatharam; his issue in the movie is digging the earth and sand),

Balarama naidu (obvious)

Krishnaveni-Patti can both be Krishna Avatharam - but lets assign avar Patti the Krishna avatharam (since Krishna is also a woman) and since Govind is Govind Ramaswamy and has a monkey called (H)Anu - he should be Rama avatharam.

Kalif Ullah was the opposite of Vamana Avatharam (Tall vs Short).

The Japanese Kamal had a name similar to Nrihasimha Avatharam .

Since Ranagaraja Nambi drowned can we say there is a loose connection to Matsya (an avatharam where a fish warns the King of impending flood) or can we say he was Koorma avatharam because he lay in the bottom and churned the sea.

Just wanted to talk about Kamal's amazing attention to detail. Looking closely there are a few more things:

* When Fletcher and the Japanese guy fight, the boats go down, visibly, all of a sudden referring to the drop in water levels that precede a Tsunami.

* The church bell strikes 8 times when the Tsunami approaches.

* Birds flying away from the sea when Fletcher grabs the idol on top of the unconstructed building referring to animals which fled away from the shore on the morning of Tsunami.

Looking much closer, it actually happened in Yala National Park, Sri Lanka and the coast surrounding it which has close to 700-1000 elephants and more than 5000 animals. About 12000 people died on that shore, not a single animal was found dead.

* Santhana Bharathi, P Vasu, Vincent Boovaraghan or anyone shown in the Tsunami scene NEVER use the word Tsunami, because as far as the general public is concerned Hindu used the word Tsunami in its headlines the next day morning, no other newspaper did.

However, Narasahi is the only person to even say the word Tsunami in the WHOLE movie and it is apt since Japan has a Tsunami almost every other fortnight and Narasahi also knows what to do, so he does what is best, get into a covered structure or a boat while others flee the area. Narasahi stays and knows that the best way to avoid a Tsunami is to go with its flow but also ensure that he is not in an unstable place.

Everything happens for a reason in this movie

1. Nambi's drowning to death with the heavy statue causes simple changes to the seabed that causes a devastating tsunami 800 years later

2. The tsunami takes the lives of hundreds but saves a whole state by killing the deadly germs with its high content of sodium chloride

3. Vincent Poovaragan's death establishes his legacy and makes Santhana Barathi change

4. Poovargan's death assumed as her son's death by Krishnaveni patti, relieves her of her mental instability

5. The change of package between Avtaar Singh and Fletcher delays things a bit and also ends up curing Avtaar Singhs throat cancer

6. Yuka's death in a way saves Govind in the climax as Shinghen saves him

7. Kalifulla's family and neighbours are saved as they are taken to the Darga for investigation

DASA 10 roles review

1.Rangaraja nambi : Who said kamal is 50+ years old.. Amazing body.. Acting in that role top class..

2.Govind : the perfect hero

3.Fletcher : other villains have to learn from him.. Amazing man.. i started loving this villain.

4.Avthar Singh : Perfect punjabi singer. Daler mehendi should watch this.

5.Krishnaveni paati : How did he do that role man.. Why no one is discussing this role? This character was not as short as APPU but still was shorter. We all know how he bent his knees for APPU, but for this Paati what did he do? Amazing.

6.Japaneese Narahasi : Small role but what a stunt performance.. But for the climax song, i wouldn’t have believed that it was kamal.

7.Kalifulla Khan : Have u ever noticed how such a tall guy usually walks in real life. It’s just like him. Perfect.. 10/10

8.George Bush: See his body language and his make up nothing missed. Stylish English.

9.Poovaraghan : No words for this character. I loved him man. He is the man. Notice his body language. Stiff shoulders and what a slang. He attracted everyone in the end.

10. Balram Naidu : Last but not the least.. The most lovable character.. Chanceless timing. He knows 5 languages in Telugu. This one character is enough for the movie to be a hit in Andhra. Lovely body language.

தருமி said...

தெக்ஸ்,
//கமலோட 17 வருஷத்திற்கு முந்திய படத்தில வந்த ஒரு மறை முக கான்செப்ட்..//

மேலே உள்ள கட்டுரையில் 20 வருஷத்துக்கு முந்தியே அபூர்வ சகோதரர்கள் படத்திலேயே தசாவதாரத்திற்கு ரோடு போட்டாச்சுன்னு சொல்றார் பருங்க!

தருமி said...

லக்கி ல்யூக், (உங்க பேரை இப்படி எழுதினா...?)

அப்போ இத ஒரு விமர்சனம்தான் அப்டின்னு தீர்ப்பளிக்கிறீங்க ..?

தருமி said...

ஜோ,
long time ...no see ... என்ன ஆச்சு?

ஆனா நான் இது கமலோட magnum opus அப்டின்ற நினப்புலதான் கடைசிவரை இருந்தேன்.

தருமி said...

ராஜநடராஜன்,
கட்டாயமா மறுபடியும் பார்க்கணும். அதுக்காகவே ஒரு தி.டி.வி.டி. வாங்கணும்.

ராஜ நடராஜன் said...

தருமி ஐயா!மீண்டும் வணக்கம்.பின்னூட்டத்துக்கு என்ன பதில் தந்தீர்கள் என்ற ஆவலில் மீண்டும் வந்தேன்.ஆனால் பதிலுக்குப் பதிலாக உங்கள் மாணவனின் நீண்ட கடிதம் கண்டேன்.இன்னும் முழுவதுமாகப் படிக்க வில்லை.காரணம் chaos theory என்ற வார்த்தை கேட்டவுடன் இரண்டு நாட்களுக்கு முன் வாங்கிய தகடு இன்னும் பார்க்காமல் இருப்பது நினைவுக்கு வந்தது.இனி பின்னூட்டம் படித்துவிட்டு வருகிறேன்.

ராஜ நடராஜன் said...

என்ன உங்க மாணவர் பின்னூட்டத்துல அடிச்சு ஆடுறாரு.உங்க மாணவராச்சே இருக்காதா பின்னே?

அதென்ன தி.டி.வி.டி? அதுக்கெல்லாம் இனி காசு செலவு பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணி இரண்டாவது ஆட்டமும் சினிமா தியேட்டருக்குப் போய்தான் பார்த்தேன்.ஆனா என்ன குறைனா வாங்கின K.F.C கோழிய உள்ளே கொண்டு போய் தின்ன விடமாட்டேன்னுட்டா பாவி காவல்காரன்.அப்படியே அவன் சீட்டுப் பக்கத்திலேயே வச்சுட்டுப் போயிட்டேன்.

(உங்க பதிவுக்குப் பக்கத்துல வெட்டியண்ணன் NRI களின் அலும்புன்னு பதிவு போட்டு தாக்கிட்டு இருக்காரு.தயவு செய்து அவரு காதுல போட்டிடாதீங்க ஐயா!)

ilavanji said...

தருமிசார்,


// இதெல்லாம் சாதாரண ரசிகனுக்கும் போய்ச்சேரும் விஷயங்கள். ஆனால் தன் மேதாவித்தனத்தைக் காண்பிக்கவும், நம் பல பதிவர்கள் போன்ற மேதாவிகளின் புத்திசாலித்தனத்துக்குத் தீனியாகவும் கேக் மேல் இருக்கும் icing போல் சில விஷயங்களைச் சேர்த்திருக்கிறார். அவைகள்தான் அந்த choas theory, வண்ணாத்திப் பூச்சி, ஒவ்வொரு 'அவதாரத்துக்கும்' வைத்த பெயர்கள், அந்த continuity எல்லாமுமே. இந்த முலாம் பூச்சுதான் இத்தனை காரசார விமர்சனங்களுக்கும் காரணம். //

ஜீப்பரு! :)

// இது ஒரு 'ஒரிஜினல் நயம் பொழுதுபோக்குப் படம்' அப்டின்னு முதலிலேயே சொல்லியிருந்தால் இதைவிட இந்தப் படத்துக்கு வரவேற்பு இருந்திருக்குமென நினைக்கிறேன். //

இப்பொழுது கிடைத்திருக்கும் வரவேற்பு நிஜமாகவே மிகப்பெரியது என நினைக்கிறேன். கமல் படம் வணிக ரீதியாக வெற்றியடைவது அறிவுசீவிகளுக்கு என்ன பிரச்சனையை உண்டாக்குகிறதோ யாமறியோம்! :)

புருனோ Bruno said...

தருமி சார்,

அந்த ஆங்கில கட்டுரை போலவே ஒரு தமிழ் கட்டுரை எனது பதிவில் உள்ளது

முக்கியமாக நான் கவனித்த பல விஷயங்கள் அந்த ஆங்கில கட்டுரையில் உள்ளன (குரங்கின் பெயர், சப்பானியர் மட்டும் சுனாமி என்று கத்துவது)

வாசித்து உங்கள் கருத்தை கூறலாம் :)

புருனோ Bruno said...

தருமி சார்,

அந்த யூ டுயுப் படத்தில் இருப்பது Chain effect சங்கில் தொடர்பு நிகழ்வுகள். இதற்கும் Chaos Theoryக்கும் வேறு பாடு உண்டு.

Chaos Theoryக்கு உதாரணம் அந்நியன் படத்தில் விக்ரமின் தங்கை இறப்பதற்கான காரணம் குறித்து வரும் வசனம் (காவல் துறை முதல் மின் துறை வரை அனைவரின் செயலும் அதில் உள்ளது)

ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதது போல் தோன்றும் இரு நிகழ்வுகளால் விளையும் ஒரு விளைவு Chaos Theory

ஒன்றின் பின் ஒன்றாக நடக்கும் நிகழ்வுகள் Chain Reaction.

தருமி said...

ராஜ நடராஜன்,
//...வெட்டியண்ணன் NRI களின் அலும்பு..//

இது சுத்தமா புரியலையே!!
:(

தருமி said...

இளவஞ்சி,
//இப்பொழுது கிடைத்திருக்கும் வரவேற்பு நிஜமாகவே மிகப்பெரியது ..//

அப்படியா .. கேட்க சந்தோஷம்.

//கமல் படம் வணிக ரீதியாக வெற்றியடைவது அறிவுசீவிகளுக்கு என்ன பிரச்சனையை உண்டாக்குகிறதோ யாமறியோம்! :)//

கற்றாரை கற்றாரே காமுறுவர் அப்டின்றது மாதிரின்னு வச்சுக்கங்களேன்!

தருமி said...

ப்ருனோ,
உங்கள் தமிழ்ப் பதிவைப் படித்துவிட்டேன். மிக அருமை.உங்களின் கவனிப்பின் ஆழம் மூலம் கமலின் உழைப்பின் ஆழம் புரிய வர .. hats off to kamal.
புரிய வைத்த உங்களுக்கும் நன்றி.

என்னைப் பொறுத்தவரை எந்த படத்தின் தரமும் இரண்டாம் பட்சம்தான். முதலாவது அந்தப் படங்கள் எடுப்பவர்களது முனைப்பும், உழைப்பும், sincerity-யும். கமல் இந்த விஷயங்களில் எப்போதும் சோடை போவதில்லை.

வளரட்டும் அவர்; வளர்க்கட்டும் நம் ரசிகர்களது ருசியை.

Sridhar V said...

உங்க விமர்சனத்துல பெருமளவு ஒத்துப் போகிறேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள் :-)

//இளம் ஜோடி. தட தடன்னு ரெண்டும் ஒருமாதிரி எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்ததுகள்.//

என்ன கொடுமைங்க இது. பாவம் :-) அட நீங்கதாங்க பாவம் :-))

//முதலாவது அந்தப் படங்கள் எடுப்பவர்களது முனைப்பும், உழைப்பும், sincerity-யும். //

நேர்மையை விட்டுட்டீங்களே. சமூகத்துக்கு எதை கொடுக்கிறோம்ங்கிற உணர்வும், அதை ஒத்துக்கிற நேர்மையும் கண்டிப்பாக இருக்கனும். இது சரியாக வந்துவிட்டால் படைப்பின் தரம் தானாகவே உயரும்.

காழியன் said...

//எங்க 'பாக்ஸில்' எங்களைத் தவிர்த்து இன்னும் ரெண்டு ஜோடி. அதுல ஒண்ணு .. சரி..சரி... அத விடுங்க. படத்தைப் பார்ப்போம்.
//

அதெல்லாம் விட முடியாது, என்ன ஆச்சி சொல்லுங்க. :-)``

இராம்/Raam said...

ஓ.... படம் பார்த்தாச்சா??? :D

Aravindhan said...

என்ன sir, 100 ரூவா குடுத்துட்டு ரெண்டு படம் பாத்துட்டு வந்துருக்கீங்க.அந்த இங்கிலீஷ் கட்டுரை அருமை.orkut கமலஹாசன் communityla படத்த பத்தி நெறைய பேசிருபாங்க
அதுல முக்கியமான ஒண்ணு.அந்த சிலையால தான் fault வந்து சுனாமி வந்து...அந்த வாதத்த ஏத்துக்க முடில.ஏன்னா செலைய கடல்ல தூக்கி போட்டது சிதம்பரத்துல சுனாமி நடந்தது இந்தோனேசியா கிட்ட.
ஒடனே நீங்க கால மாற்றத்தால் சிலை நகந்து இந்தோனேசியா வரைக்கும் போய்ருகும்னு சொன்னீங்கனா கண்டிப்பா நீங்க தமிழ் படம் பாத்து கெட்டு போனவரா தான் இருக்கணும்
community பக்கம் ஒரு எட்டு போய்டு வாங்களேன்.சுனாமி நடந்தப்ப இவங்க சென்னைல இருந்தாங்கள pondicherryla இருந்தங்கலன்னு ஒரு அடி தடியே நடக்குது.interestingaa (ஆச்சரிய படற மாறி/ரொம்ப சுவையா/மயிர் கூச்செறிய வைக்கும்/சுவாரசியமா) பல தகவல்கள் கிடைக்கும்

தருமி said...

அரவிந்தன்,

அப்படி எல்லாம் இல்லீங்க.. பார்த்தது ஒரே ஒரு படம்தானுங்க. கொடுத்த காசுக்கு அதுவே போதுமுங்க.

விட்டா மக்கள் நிறைய thesis எழுதிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

Post a Comment