Wednesday, December 05, 2012

611. இலங்கைப் பயணம் .. 3 - மீன் பண்ணைகள்

*


 *
பயணப் பதிவுகள்;
*

முதல் பதிவு

இரண்டாம் பதிவு

மூன்றாம் பதிவு 

நான்காம் பதிவு

ஐந்தாம் பதிவு

ஆறாம் பதிவு

ஏழாம் பதிவு

எட்டாம் பதிவு

ஒன்பதாம் பதிவு

பத்தாம் பதிவு

பதினொன்றாம் பதிவு

பன்னிரெண்டாம் பதிவு*   


இலங்கைப் பயண நாட்கள்: 2012, அக்டோ. 15 முதல் 21 வரை.  


DAILY DIARY 

16-ம் தேதி:

கொழும்புவிலிருந்து கிளம்பி இரத்தினபுரி செல்லும் சாலையில் சென்று Nara என்னுமிடத்திலுள்ள ஒரு மீன் பண்ணைக்குச் சென்றோம். எனக்கு இரத்தினபுரிக்கே போகணும்னு ஆசை. ஆத்தில உள்ள மணலைத் தோண்டினால் இரத்தின்ங்கள் கிடைக்குமாமே! ஒரு காலத்தில் அப்ப்டித்தானிருந்ததாம். ஆனால் இப்போது எல்லாமே குத்தகைக்கு விட்டு விட்டார்களாம். பெரிய மெஷின்கள் மணலை அள்ளி புறந்தள்ளி ரத்தினக் கற்களை ஒதுக்குமாம். உரிமையாளருக்கு மட்டுமே என்ன கிடைத்த்து என்று தெரியுமாம் என்று நண்பர் ஒருவர் கூறினார். சரி .. ரத்தின்ங்களை ஒதுக்கி வைத்து விட்டு, நாம் பார்க்கப் போன மீன் பண்ணைகளைப் பற்றி பார்ப்போம்:


*


நாங்கள் பார்த்ததில் மிகப்பெரிய பண்ணை இதுவே. அழகுக் கடல் பிராணிகளைப் பிடித்து, வளர்த்து ஏற்றுமதி செய்யும் பண்ணை.
*


Sea anemone என்னும் கடல் பிராணிகளைப் படங்களிலும், சினிமாக்களிலும் பார்த்திருக்கிறேன். இங்கு அவைகளைத் தொட்டியில் உயிரோடு பார்க்கும் அனுபவம் கிடைத்தது.
*


பண்ணையின் முதலாளியையும் சந்தித்தோம். பரம்பரையாக நடந்து வரும் பண்ணை போலும். தன் அயல்நாட்டுத் தொடர்புகள், வியாபார முறைகள் பற்றி பேசினார்.
*மிக விலையதிகமான சில மீன்களைப் பற்றியும் கூறினார். ஒரே ஒரு மீன் $ 2000 மதிப்புள்ள மீனகளை ஏற்றுமதி செய்ததையும் பற்றிக் கூறினார். 

மீனவ நண்பர்களுக்கு’  நிறைய நேரடி அனுபவம் கிடைத்தது. அதுவும் மிகப் பெரிய முறையில் இருந்த அப்பண்ணையின்  செயல்பாடு அவர்களுக்கு மிக நல்ல அனுபவமாக இருந்தது. மிக அழகான பல கடல் உயிரிகள் .. பார்க்க மிகவும் அழகு.  இவைகளை வீட்டில் வைத்து வளர்ப்பதற்கும் தனித் திறமையே வேண்டுமாம்.

*     *     *       * 

மதியச் சாப்பாடு இலங்கைச் சாப்பாடாக இருக்க வேண்டுமென்றோம். நண்பர் மால் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். இரு பெண்கள் நடத்தும் ஒரு சிறிய உணவகம். 

என்ன ஏது என்று தெரியாமல் ‘ஒரு மாதிரி’யாக ஆர்டர் கொடுத்தோம். சிகப்பரிசி .. நண்டு ... இறால் ,,, கீரை ... ஒரு கதம்பமாக இருந்தது. ஒரு வழியாக ‘ஒரு கை’ பார்த்தோம். நன்றாகவே இருந்தது. 

*   *    *     *திரும்பி கொழும்பு வரும் வழியில் மில்லவா என்ற ஒரு எஸ்டேட் சென்றோம்.
அந்தக் காட்டுக்குள் ஒரு சிறு குடும்பம் ஒரு பண்ணை நடத்தி வந்தது. நாங்கள் போகும்போது அங்கு குடும்பத் தலைவியும் அவர்களது சிறு மகளும் இருந்தார்கள். மொழிப் பிரச்சனை ...! ஆனாலும் அந்தச் சிறு பெண் பெயர்: சுகாஸ்னி என் கையை இயல்பாகப் பற்றி கொண்டு அவர்கள் பண்ணையை எனக்குச் சுற்றிக் காண்பித்தது. அது சொன்னது எனக்கு எதுவும் புரியவில்லை. ஆயினும் தலையை ஆட்டிக் கொண்டே அவளுடன் சென்றேன். ஒன்று மட்டும் புரிந்தது. சுகாஸ்னிக்கு அங்குள்ள மீன்களின் பெயர்கள் எல்லாமே அத்துப்படி!அவளுக்கு விளையாட்டுத் தோழிகள் வீட்டுக்குப் பக்கத்தில் யாரும் இல்லை. மீன்கள் தான் அவளுக்குத் தோழிகள் போலும் !

காட்டுக்கு நடுவில் சின்னக் குடித்தனம்... கடுமையான உழைப்பு... நல்ல .வருமானம் என்றும் நினைக்கிறேன். வளர்க ...
*
*  

இன்னும் கொஞ்சம் பயணப் படங்கள் ... இங்கே ...  
இங்கே


*

 

5 comments:

நம்பள்கி said...

மீன்கள் அழகு; மீன்களை விட சுகாசினி பாப்பா அழகு! அவர்களுக்கு லிங்க் கொடுத்து பாப்பாவை உங்க தளத்தில் உள்ள அவருடைய போட்டோவைப் பார்க்கச்சொல்லுங்கள்.

வேகநரி said...

இந்த பயண கட்டுரை நல்லாவே இருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

மீன்களின் தோழி மான் போல் இருக்கிறாள்:)!

Unknown said...

ஹொந்த கமனக் வகே????மாலு டிக்க lassanai ....
(நல்ல பயணம் போல ...மீன்கள் அனைத்தும் அழகு )

சாப்பாட்டு தட்டை பார்த்தா வாய் ஊருது ......நீங்க சொல்லித்தான் இப்படி ஒரு இடம் இருப்பதே தெரியும் ..சீக்கிரமா போய் பார்கிறேன் ..

//எனக்கு இரத்தினபுரிக்கே போகணும்னு ஆசை. ஆத்தில உள்ள மணலைத் தோண்டினால் இரத்தின்ங்கள் கிடைக்குமாமே! ஒரு காலத்தில் அப்ப்டித்தானிருந்ததாம். ஆனால் இப்போது எல்லாமே குத்தகைக்கு விட்டு விட்டார்களாம்//

கதிர்காமம் பக்கத்தில புதுசா ஒரு இரத்தின வயல் கண்டு பிடிச்சுருக்காங்க..ஆரம்பத்துல மக்கள் போட்டி போட்டு இரத்தினங்கள அள்ளுனாங்க.அப்புறம் வழக்கம் போல அரசுடமை ஆக்கி அதை குத்தகைக்கு விட்டுட்டாங்க ........

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எல்லாமே புதிய செய்தியே!
சிறுமி இயல்பான இயற்கை அழகுடன் மிளிர்கிறர். அழகிய புன்னகை!

Post a Comment