*
*
முதல் பதிவு
இரண்டாம் பதிவு
மூன்றாம் பதிவு
நான்காம் பதிவு
ஐந்தாம் பதிவு
ஆறாம் பதிவு
ஏழாம் பதிவு
எட்டாம் பதிவு
ஒன்பதாம் பதிவு
பத்தாம் பதிவு
பதினொன்றாம் பதிவு
பன்னிரெண்டாம் பதிவு
*
* படிப்பு எல்லா நிலைகளிலும் இலவசமே!
* இரு வகை educational streams. ஒன்று London A,O .. levels & Sri Lanka A, O .. levels.
* மொத்தம் 14 பல்கலைக் கழகங்கள் இதுவரை இருந்து வந்துள்ளன. எல்லாமே அரசின் உதவியோடு நடத்தப்படும் அரசுப் பல்கலைக் கழகங்கள்தான்.
* ஆனால் புதியதாக ஒரு தனியார் பல்கலைக் கழகம் வந்துள்ளது. * தனியார் நட்த்தும் கல்விச்சாலைகளை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். அதனால் பலவகைக் கல்வித் துறைகள் வர வாய்ப்புண்டு.
* அரசு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காதவர்களும் கல்வி பயிலும் வாய்ப்புகள் இதனால் உருவாகும்.
* ஏனெனில் இதுவரை உயர்கல்விக்காக சிங்கை, மலேசியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு மாணவர்கள் இதுவரை பயணப்படுவது தவிர்க்கப்படுமே.
* நான்கு மாதங்களாக அரசுப் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் நடந்து, நாங்கள் போகும்போதுதான் முடிவுக்கு வந்திருந்தது.
* அரசுப் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்களின் இப்போதைய சம்பளம் பங்களாதேஷ் நாட்டின் கல்லூரி ஆசிரியர்களோடு ஒத்துள்ளது. அவர்கள் இந்தியக் கல்லூரி ஆசிரியர்களின் சம்பளத்தை ஒட்டிக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
* அவர்கள் போராட்டத்திற்கு இன்னொரு முக்கிய காரணம் கல்விக்கு அரசு அளிக்கும் விகிதாச்சரம். முன்பு கல்விக்காக 3% செலவளித்த்து. அந்த தொகை அப்படியே நின்று போய், நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் இப்போது கல்விக்கான தொகை வெறும் 1.6% ஆகக் குறைந்து விட்டது. கல்விக்கான இந்தத் தொகையை அதிகரிக்கவும் இந்தப் போராட்டம் நடந்து வந்துள்ளது.
* போராட்டங்கள் முடிந்து விட்டன. ஆனால் அவர்கள் கொள்கைகள், கோரிக்கைகள் என்னாயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. போராடியவர்களுக்கும் தான் !
* இரு சக்கரத்தில் செல்லும் எல்லோரும் – பின்னால் உட்கார்ந்திருப்பவரும் – தலைக் கவசம் அணிந்து செல்கிறார்கள்.
* ஆளில்லா estate பகுதிகளில் கூட எல்லோரும் தலைக்கவசத்தோடு செல்வதை ஆச்சரியமாகப் பார்த்தேன். (நம்ம ஊர் மக்களுக்கு மட்டும் இப்படி சட்ட்த்தை மதிக்கணும் அப்டின்ற நினைப்பே எப்போதும் வர்ரதேயில்லை? இதைப் போன்ற நல்ல பல போக்குவரத்து விஷயங்களை அங்கே பார்த்தேன்.)
* கார் ஓட்டியும், பக்கத்தில் இருப்பவர்களும் கட்டாயமாக சீட் பெல்ட் போட்டிருக்க வேண்டும். டாக்ஸியாக இருந்தாலும் அது கட்டாயமே! (அது ஏன் சிங்கையிலும் இங்கேயும் டாக்ஸியை ’டெக்ஸி’ என்கிறார்கள்?)
* TRAFFIC SENSE IS TERRIFIC ! நம்ம ஊர் மாதிரி முட்டி மோதி முன்னால போணும்ன்னு யாரும் நினைக்கிறதில்லை. நியாயமாக காத்து நிற்க வேண்டியவர்கள் பொறுமையாகக் காத்து நிற்கிறார்கள்.
* HORN SOUNDS ARE SO RARE! WHAT A PLEASANT THING !! தேவையில்லாமல் என்னிடம் இருக்கு HORN .. அத நான்பாட்டுக்கு அடிச்சிக்கிட்டே போவேன் என்கிற நம்ம ஊர் மிருகத்தனம் அங்கே இல்லை.
* திட்டுவதற்கு மட்டுமே HORN அடிக்கிறார்கள். சிங்கை, அமெரிக்கா மாதிரி இருக்கு TRAFFIC. எப்படி அந்த ஊர் மக்கள் எல்லாம் இப்படி சட்டத்தை மதிக்கிறார்கள்?! நம்மை மாதிரி அவர்கள் ‘சுதந்திர மக்கள்’ இல்லை போலும்!
* கார்களின் முன் பக்க எண் வெள்ளை வண்ணத்திலும் அதே வண்டியில் பின் பக்கம் மஞ்சள் நிறத்திலும் இருந்தன. ஏனென்று Neil-க்கும் தெரியவில்லை. விவேக் ஜோக் நினைவுக்கு வந்தது - இன்னும் நாலைந்து போர்டுகள் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் !!
* கழுத்தை வெட்டிப் போட்டது போல் கோணிக்கொண்டு கைப்பேசி பேசிக்கொண்டே வண்டி ஓட்டும் ஈனத்தனம் சுத்தமாக அங்கே நான் காணவில்லை.
* நம்ம காவல் துறை என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை! நம் மக்களும் அப்படி ... நம் காவல் துறையும் அப்படி ...
* நம் நாட்டு நெடுஞ்சாலைகள் பற்றி அவர்களுக்கு பிரமிப்பு; பொறாமை. இங்கே ஒரே ஒரு நெடுஞ்சாலை மட்டும் - கொழும்பிலிருந்து அம்மன் தொட்டை என்ற ‘சின்ன ஊருக்கு’ முதல் நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது.
* சைனாவினால் போடப்பட்ட சாலை. ஒரு நல்ல விஷயம். நம் ஊரில் சின்ன ஊர்களுக்கு நடுவில் இந்தச் சாலை போகும்; நடு நடுவே குறுக்குச் சாலைகள் வரும். இங்கே அப்படியேதும் இல்லை. நெடுஞ்சாலைக்கருகில் உள்ள ஊர்கள் வழியே இச்சாலை செல்வதில்லை. அந்த சின்ன ஊர்களுக்கு என்று தனிப்பாலம். அங்கிருந்து தடாலென நம் ஊரில் மாதிரி குறுக்கே யாரும் வர முடியாது நெடுஞ்சாலையில் அந்தப் பயம் இன்றி நேரே ஓட்டிச் செல்ல்லாம். மலைகளுக்கு நடுவே நெடுஞ்சாலை. நெடுஞ்சாலையில் ஒரு ‘இரும்புப் பறவை’
* அம்மன் தொட்டைஎன்ற அந்த சின்ன ஊர் ராஜ பக்சே பிறந்த ஊராம். அந்த ஊருக்கு முக்கியத்துவம் கொடுக்க நாட்டின் முதல் நெடுஞ்சாலை கொழும்பிலிருந்து நேராக அந்த ஊருக்குச் செல்கின்றது.
* இது மட்டுமின்றி அந்த ஊரில் ஒரு துறைமுகம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது – எந்த வித பயனுமின்றி! துறைமுகம் கட்டிய பிறகு சும்மா பெயர் சொல்வதற்காக இதுவரை ஒரே ஒரு கப்பல் மட்டும் அங்கு சென்றதாம்.
* துறைமுகம் மட்டுமல்லாது தேவையில்லாமல் ஒரு பல்நாட்டு விமானத் தளம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
* நாட்டுக்கு வரும் மக்களிடம் பணத்தை அரசு உறிஞ்சி எடுத்து விடுகிறது. பயணிகள் வருகை தரும் இடங்களில் எல்லாம் வைக்கப்படும் உரிமைச் சீட்டுகள் மிக அதிகமாகத் தெரிந்தது – அதுவும் SAARC நாடுகள் என்ற முறையில் இந்தியர்களுக்குக் குறைந்த கட்டணம் ..! அதுவே இப்படி!
* கொழும்புவில் உள்ல பூங்காவிற்குச் செல்ல உள்ளூர் மக்களுக்கு அனுமதிச் சீட்டு 50 ரூபாய்; நமக்கு 1100 !
* பின்ன விளை என்ற இட்த்தில் யானைகளைப் பார்க்க உள்ளூர் மக்களுக்கு அனுமதிக் கட்டணு தேவையில்லை; நமக்கு 500 ரூபாய்.
* புல நெருவ என்ற இடத்தில் உள்ள பழைய கோட்டை கொத்தளங்களைப் பார்க்க $ 12.50!
* ஆனால் எல்லா இடங்களும் அவ்வளவு அழகாக சுத்தமாக வைத்துள்ளார்கள். அதற்கே கொடுக்கலாம் காசு!
* எங்களது காரோட்டியின் பெயர் Neil. சிங்களவர். தமிழும் ஆங்கிலமும் தெரியும். இனிய நண்பரானார்.
* அவருக்கு இரண்டு பையன்களாம். இரண்டு பேரும் நம்ம விஜயின் ரசிகர்களாம். அவர்களுக்குத் தமிழ் தெரியாது.
* சிங்களப் படங்கள் வருஷத்து நாலைந்த் வருமாம்.
* Neil புத்தமதத்தினராக இருந்து இப்போது கிறித்துவராகி விட்டாராம். ஏன் என்று கேட்டேன். சிரித்தார்! ஆனாலும் இப்போது இரண்டு கோவிலுக்கும் போவாராம்.
* கொழும்பில் வெள்ளவத்தை போனோம். தமிழர்கள் இருக்கும் பகுதி. போனதும் அது புரிந்தது! ஒரு இந்துக் கோவிலுக்கு அருகில் ஒரு கடை. பாட்டு வச்ச சத்தம் காதே கிழிந்த்து. கடைக்காரப் பையன் பெய்ர் விஜய். ஏம்’பா இப்டி? என்றேன், சிரித்துக் கொண்டான்.
* கடைக்கு முன்னால் எச்சில் துப்பி அவலட்சணமாகத் தெரிந்தது. விஜயிடம் சொல்லிட்டு வந்தேன்! வேறெங்கும் இதுபோல் அவலட்சணத்தைப் பார்க்கவில்லை.
* ஊரில் flex board எங்கும் காணவில்லை.
* சுவரெல்லாம் போஸ்டர்கள் ஒட்டவில்லை.
* ஒரு சந்தோஷம். நம்ம TASMAC கடை மாதிரி அங்கேயுள்ள கடைகளிலும் கதவைப் பூட்டிக் கொண்டு ஜன்னல் வழியாக ‘ஜாக்கிரதையாக’ வியாபாரம் செய்கிறார்கள்.
* பள்ளிக்கூட நேரத்தில் பள்ளிக்கருகே நிறைய ZEBRA கோடுகள். ஒவ்வொரு கோட்டுக்கருகிலும் ஒரு காவல்துறையினர் நிற்கிறார்.
* பல காவல்துறையினரைப் பார்த்தேன். ஆனால்நான் பார்த்த காவல துறையினர் யாருக்கும் தொப்பை ஏதுமில்லை.
* சிங்கள – தமிழ்ப் பிரச்சனை இருக்கிறதா என்று கேட்ட போது, இப்போது சிங்கள-தமிழ்ப் பிரச்சனை தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது என்றார் ஒரு சிங்கள நண்பர்.
* ஒரு நண்பர் வீட்டில் மதியச் சாப்பாடு. கேரளா போல் சிகப்பரிசி .. மீன் குழம்பு; அட .. அதையெல்லாம் விட சாப்பிட்டு முடிந்ததும் ஒரு மண் சட்டியில் கெட்ட்ட்ட்டியான தயிர். ஐஸ்க்ரீமில் தேன் ஊற்றிச் சாப்பிடுவது மாதிரி, இந்த தயிரின் மீது பதனியைக் (தெலிஜ) கொதித்து காய்ந்து கருப்பட்டியாகும் முன் அதன் திரவ ரூபத்தில் எடுக்கும் கூப்பனியை (பெனி) ஊற்றி சாப்பிடணும் – desserts!
* என் நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை.
* என் பால்ய கால நினைவுகளோடு (அதைப் பற்றி பின்னால் எழுதணும்!) நான் ஒரு வெட்டு வெட்டினேன்.
* ‘பெற்றோல்’ நம்ம ஊர் விலைதான். லிட்டருக்கு 149 இலங்கை ரூபாய்.
* சாலைகளில் ஸ்பீட் லிமிட் உண்டு. சாதா சாலைகளில் 70கிமீ. நெடுஞ்சாலைகளில் 100 கிமீ. வழக்கம் போலவே எல்லா சாலை விதிகள் போலவே இதுவும் சரியாக்க் கடைப்பிடிக்கப் படுகிறது.
* புலநெருவ என்னும் இடத்தில் உள்ள பழைய வரலாற்றுச் சின்ன்ங்களைப் பார்த்து விட்டு வெளியே ஒரு கடையில் மதிய உணவு உண்டோம். விட்டிருந்த மழை மீண்டும் பலமாகத் தொடர்ந்தது. காரை கடைக்கு முன் கொண்டு வரச் சொல்லி வேகமாக விரைந்தோடி ஏறி விரைந்தோம். அடுத்த இடம் டம்புள்ள. அந்த இடத்திற்கு நெருங்கியதும் காமிராக்களை எடுத்து தயாராக ஆரம்பித்தோம். இரண்டு Digital காமிராக்கள் பத்திரமாக இருந்தன. point & shoot காமிரா காணோம். யோசித்ததும் சாப்பாட்டுக் கடையிலேயே வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. பதினேழாயிரம் போச்சுன்னு நான் கணக்குப் போட்டேன்.
நாங்கள் டம்புள்ளயில் இறங்கி கொண்டு Neil-யை திரும்ப அந்தக் கடைக்கு அனுப்பினோம். தனியாகப் போன்வர் கொஞ்சம் காரை விரட்டியிருக்கிறார். 120-ல் போனவர் காவல்துறைக்குத் த்ண்டம் கட்டி, கடைக்குப் போய் கேட்டிருக்கிறார். காமிரா அங்கே அவர்களிடம் இருந்தது. இரண்டு படங்கள் தங்களையே படம் எடுத்திருக்கிறார்கள். காமிரா திரும்பி வந்தது.
* எனக்கு நிச்சயமாக அது திரும்பக் கிடைக்குமென்று நம்பிக்கையேயில்லை. நண்பர்களுக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது. நண்பர்கள் மாதிரியே அந்தக் கடைக்கார இளைஞன் நல்லவனாயிருந்திருக்கிறார். நண்பர்கள் நிச்சயமாக அந்த இளைஞன் இட்த்தில் இருந்திருந்தால் அவரைப் போல்வே திரும்பக் கொடுத்திருபார்கள். நானாக இருந்திருந்தால் ... கொஞ்சம் சந்தேகம்தான் ..!
* சும்மா சொல்லக்கூடாது .. புத்தர் நல்லாவே உதவி செய்து விட்டார் ..!
* Neil கடையிலிருந்தே காமிரா கிடைத்ததைச் சொல்லியிருந்தால் அந்த இளைஞருக்கு ஒரு நன்றி மனதாரச் சொல்லியிருக்கலாம். ஒரு சின்ன அன்பளிப்பு கொடுத்திருக்கலாம். முடியாது போனது பற்றி வருத்தம் தான்.

பார்த்ததும் ‘பக்’கென்றாகி விட்டது! கண்ணுக்குமா FIGHT?? |
* கார் ஓட்டியும், பக்கத்தில் இருப்பவர்களும் கட்டாயமாக சீட் பெல்ட் போட்டிருக்க வேண்டும். டாக்ஸியாக இருந்தாலும் அது கட்டாயமே! (அது ஏன் சிங்கையிலும் இங்கேயும் டாக்ஸியை ’டெக்ஸி’ என்கிறார்கள்?)
* TRAFFIC SENSE IS TERRIFIC ! நம்ம ஊர் மாதிரி முட்டி மோதி முன்னால போணும்ன்னு யாரும் நினைக்கிறதில்லை. நியாயமாக காத்து நிற்க வேண்டியவர்கள் பொறுமையாகக் காத்து நிற்கிறார்கள்.
சின்ன சாலைகள் தான். ஆனால் ஒழுங்கான போக்குவரத்து. |
* திட்டுவதற்கு மட்டுமே HORN அடிக்கிறார்கள். சிங்கை, அமெரிக்கா மாதிரி இருக்கு TRAFFIC. எப்படி அந்த ஊர் மக்கள் எல்லாம் இப்படி சட்டத்தை மதிக்கிறார்கள்?! நம்மை மாதிரி அவர்கள் ‘சுதந்திர மக்கள்’ இல்லை போலும்!
* கார்களின் முன் பக்க எண் வெள்ளை வண்ணத்திலும் அதே வண்டியில் பின் பக்கம் மஞ்சள் நிறத்திலும் இருந்தன. ஏனென்று Neil-க்கும் தெரியவில்லை. விவேக் ஜோக் நினைவுக்கு வந்தது - இன்னும் நாலைந்து போர்டுகள் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் !!
* கழுத்தை வெட்டிப் போட்டது போல் கோணிக்கொண்டு கைப்பேசி பேசிக்கொண்டே வண்டி ஓட்டும் ஈனத்தனம் சுத்தமாக அங்கே நான் காணவில்லை.
* நம்ம காவல் துறை என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை! நம் மக்களும் அப்படி ... நம் காவல் துறையும் அப்படி ...
* நம் நாட்டு நெடுஞ்சாலைகள் பற்றி அவர்களுக்கு பிரமிப்பு; பொறாமை. இங்கே ஒரே ஒரு நெடுஞ்சாலை மட்டும் - கொழும்பிலிருந்து அம்மன் தொட்டை என்ற ‘சின்ன ஊருக்கு’ முதல் நெடுஞ்சாலை போடப்பட்டுள்ளது.
* சைனாவினால் போடப்பட்ட சாலை. ஒரு நல்ல விஷயம். நம் ஊரில் சின்ன ஊர்களுக்கு நடுவில் இந்தச் சாலை போகும்; நடு நடுவே குறுக்குச் சாலைகள் வரும். இங்கே அப்படியேதும் இல்லை. நெடுஞ்சாலைக்கருகில் உள்ள ஊர்கள் வழியே இச்சாலை செல்வதில்லை. அந்த சின்ன ஊர்களுக்கு என்று தனிப்பாலம். அங்கிருந்து தடாலென நம் ஊரில் மாதிரி குறுக்கே யாரும் வர முடியாது நெடுஞ்சாலையில் அந்தப் பயம் இன்றி நேரே ஓட்டிச் செல்ல்லாம். மலைகளுக்கு நடுவே நெடுஞ்சாலை. நெடுஞ்சாலையில் ஒரு ‘இரும்புப் பறவை’
நெடுஞ்சாலையில் ஓர் ‘இரும்புப் பறவை’! |
* அம்மன் தொட்டைஎன்ற அந்த சின்ன ஊர் ராஜ பக்சே பிறந்த ஊராம். அந்த ஊருக்கு முக்கியத்துவம் கொடுக்க நாட்டின் முதல் நெடுஞ்சாலை கொழும்பிலிருந்து நேராக அந்த ஊருக்குச் செல்கின்றது.
* இது மட்டுமின்றி அந்த ஊரில் ஒரு துறைமுகம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது – எந்த வித பயனுமின்றி! துறைமுகம் கட்டிய பிறகு சும்மா பெயர் சொல்வதற்காக இதுவரை ஒரே ஒரு கப்பல் மட்டும் அங்கு சென்றதாம்.
* துறைமுகம் மட்டுமல்லாது தேவையில்லாமல் ஒரு பல்நாட்டு விமானத் தளம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
* நாட்டுக்கு வரும் மக்களிடம் பணத்தை அரசு உறிஞ்சி எடுத்து விடுகிறது. பயணிகள் வருகை தரும் இடங்களில் எல்லாம் வைக்கப்படும் உரிமைச் சீட்டுகள் மிக அதிகமாகத் தெரிந்தது – அதுவும் SAARC நாடுகள் என்ற முறையில் இந்தியர்களுக்குக் குறைந்த கட்டணம் ..! அதுவே இப்படி!
* கொழும்புவில் உள்ல பூங்காவிற்குச் செல்ல உள்ளூர் மக்களுக்கு அனுமதிச் சீட்டு 50 ரூபாய்; நமக்கு 1100 !
* பின்ன விளை என்ற இட்த்தில் யானைகளைப் பார்க்க உள்ளூர் மக்களுக்கு அனுமதிக் கட்டணு தேவையில்லை; நமக்கு 500 ரூபாய்.
* புல நெருவ என்ற இடத்தில் உள்ள பழைய கோட்டை கொத்தளங்களைப் பார்க்க $ 12.50!
* ஆனால் எல்லா இடங்களும் அவ்வளவு அழகாக சுத்தமாக வைத்துள்ளார்கள். அதற்கே கொடுக்கலாம் காசு!
* எங்களது காரோட்டியின் பெயர் Neil. சிங்களவர். தமிழும் ஆங்கிலமும் தெரியும். இனிய நண்பரானார்.
* அவருக்கு இரண்டு பையன்களாம். இரண்டு பேரும் நம்ம விஜயின் ரசிகர்களாம். அவர்களுக்குத் தமிழ் தெரியாது.
* சிங்களப் படங்கள் வருஷத்து நாலைந்த் வருமாம்.
* Neil புத்தமதத்தினராக இருந்து இப்போது கிறித்துவராகி விட்டாராம். ஏன் என்று கேட்டேன். சிரித்தார்! ஆனாலும் இப்போது இரண்டு கோவிலுக்கும் போவாராம்.
* கொழும்பில் வெள்ளவத்தை போனோம். தமிழர்கள் இருக்கும் பகுதி. போனதும் அது புரிந்தது! ஒரு இந்துக் கோவிலுக்கு அருகில் ஒரு கடை. பாட்டு வச்ச சத்தம் காதே கிழிந்த்து. கடைக்காரப் பையன் பெய்ர் விஜய். ஏம்’பா இப்டி? என்றேன், சிரித்துக் கொண்டான்.
* கடைக்கு முன்னால் எச்சில் துப்பி அவலட்சணமாகத் தெரிந்தது. விஜயிடம் சொல்லிட்டு வந்தேன்! வேறெங்கும் இதுபோல் அவலட்சணத்தைப் பார்க்கவில்லை.
* ஊரில் flex board எங்கும் காணவில்லை.
* சுவரெல்லாம் போஸ்டர்கள் ஒட்டவில்லை.
* ஒரு சந்தோஷம். நம்ம TASMAC கடை மாதிரி அங்கேயுள்ள கடைகளிலும் கதவைப் பூட்டிக் கொண்டு ஜன்னல் வழியாக ‘ஜாக்கிரதையாக’ வியாபாரம் செய்கிறார்கள்.
* பள்ளிக்கூட நேரத்தில் பள்ளிக்கருகே நிறைய ZEBRA கோடுகள். ஒவ்வொரு கோட்டுக்கருகிலும் ஒரு காவல்துறையினர் நிற்கிறார்.
* பல காவல்துறையினரைப் பார்த்தேன். ஆனால்நான் பார்த்த காவல துறையினர் யாருக்கும் தொப்பை ஏதுமில்லை.
* சிங்கள – தமிழ்ப் பிரச்சனை இருக்கிறதா என்று கேட்ட போது, இப்போது சிங்கள-தமிழ்ப் பிரச்சனை தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது என்றார் ஒரு சிங்கள நண்பர்.
* ஒரு நண்பர் வீட்டில் மதியச் சாப்பாடு. கேரளா போல் சிகப்பரிசி .. மீன் குழம்பு; அட .. அதையெல்லாம் விட சாப்பிட்டு முடிந்ததும் ஒரு மண் சட்டியில் கெட்ட்ட்ட்டியான தயிர். ஐஸ்க்ரீமில் தேன் ஊற்றிச் சாப்பிடுவது மாதிரி, இந்த தயிரின் மீது பதனியைக் (தெலிஜ) கொதித்து காய்ந்து கருப்பட்டியாகும் முன் அதன் திரவ ரூபத்தில் எடுக்கும் கூப்பனியை (பெனி) ஊற்றி சாப்பிடணும் – desserts!
* என் நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை.
* என் பால்ய கால நினைவுகளோடு (அதைப் பற்றி பின்னால் எழுதணும்!) நான் ஒரு வெட்டு வெட்டினேன்.
* ‘பெற்றோல்’ நம்ம ஊர் விலைதான். லிட்டருக்கு 149 இலங்கை ரூபாய்.
* சாலைகளில் ஸ்பீட் லிமிட் உண்டு. சாதா சாலைகளில் 70கிமீ. நெடுஞ்சாலைகளில் 100 கிமீ. வழக்கம் போலவே எல்லா சாலை விதிகள் போலவே இதுவும் சரியாக்க் கடைப்பிடிக்கப் படுகிறது.
* புலநெருவ என்னும் இடத்தில் உள்ள பழைய வரலாற்றுச் சின்ன்ங்களைப் பார்த்து விட்டு வெளியே ஒரு கடையில் மதிய உணவு உண்டோம். விட்டிருந்த மழை மீண்டும் பலமாகத் தொடர்ந்தது. காரை கடைக்கு முன் கொண்டு வரச் சொல்லி வேகமாக விரைந்தோடி ஏறி விரைந்தோம். அடுத்த இடம் டம்புள்ள. அந்த இடத்திற்கு நெருங்கியதும் காமிராக்களை எடுத்து தயாராக ஆரம்பித்தோம். இரண்டு Digital காமிராக்கள் பத்திரமாக இருந்தன. point & shoot காமிரா காணோம். யோசித்ததும் சாப்பாட்டுக் கடையிலேயே வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. பதினேழாயிரம் போச்சுன்னு நான் கணக்குப் போட்டேன்.
நாங்கள் டம்புள்ளயில் இறங்கி கொண்டு Neil-யை திரும்ப அந்தக் கடைக்கு அனுப்பினோம். தனியாகப் போன்வர் கொஞ்சம் காரை விரட்டியிருக்கிறார். 120-ல் போனவர் காவல்துறைக்குத் த்ண்டம் கட்டி, கடைக்குப் போய் கேட்டிருக்கிறார். காமிரா அங்கே அவர்களிடம் இருந்தது. இரண்டு படங்கள் தங்களையே படம் எடுத்திருக்கிறார்கள். காமிரா திரும்பி வந்தது.
காமிராவைப் பத்திரமாக எடுத்து வைத்திருந்த இளைஞர். |
* எனக்கு நிச்சயமாக அது திரும்பக் கிடைக்குமென்று நம்பிக்கையேயில்லை. நண்பர்களுக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது. நண்பர்கள் மாதிரியே அந்தக் கடைக்கார இளைஞன் நல்லவனாயிருந்திருக்கிறார். நண்பர்கள் நிச்சயமாக அந்த இளைஞன் இட்த்தில் இருந்திருந்தால் அவரைப் போல்வே திரும்பக் கொடுத்திருபார்கள். நானாக இருந்திருந்தால் ... கொஞ்சம் சந்தேகம்தான் ..!
* சும்மா சொல்லக்கூடாது .. புத்தர் நல்லாவே உதவி செய்து விட்டார் ..!
* Neil கடையிலிருந்தே காமிரா கிடைத்ததைச் சொல்லியிருந்தால் அந்த இளைஞருக்கு ஒரு நன்றி மனதாரச் சொல்லியிருக்கலாம். ஒரு சின்ன அன்பளிப்பு கொடுத்திருக்கலாம். முடியாது போனது பற்றி வருத்தம் தான்.
*
*
13 comments:
அருமையான பகிர்வு நண்பரே
மனக்கசப்பூட்டும் செய்திகளை பற்றியே கேள்விப்பட்டு , இலங்கே என்றாலே , தயக்கமான உணர்வு தோன்றும்.
அதுவும் மனிதாபிமானம் உள்ளவர்கள் வாழும் , அழகிய நாடு , என்று , படிக்கும் போது மனம் நெகிழ்ந்தது.
சாலை விதிகளை மதிக்கும் பண்பாடு, மெச்சத்தக்கது.
நீங்கள் பதிவின் ஊடே கலந்த நகைச்சுவை வெகு சுவை.
வணக்கம்.
நல்ல ரசனையான அனுபவம் . சிங்கை பயணத்தின் வழி இலங்கையில் இரவு மட்டும் தங்கி இருந்தேன்.
அருமையான பயண கட்டுரை.
//இரு சக்கரத்தில் செல்லும் எல்லோரும் – பின்னால் உட்கார்ந்திருப்பவரும் – தலைக் கவசம் அணிந்து செல்கிறார்கள்//
இந்தியாவில் தலைக் கவசம் அணியாம பயணம் செய்கிறார்கள் என்று வெளிநாடுகளில் சொன்னா யாராவது நம்புவார்களா? தலைக் கவசம் அணிவதை கண்டிச்சு தமிழில் பதிவுகள் கூட வத்ததாமே!
//படிப்பு எல்லா நிலைகளிலும் இலவசமே!//
இந்தியாவை விட அங்கே கல்வி கற்றோர் தொகை அதிகமாக இருப்பதிற்க்கு அங்குள்ள முறையான இலவச கல்வியே காரணம் என்று அறிந்திந்திருக்கிறேன்.தமிழர்கள் தமிழிலும் சிங்களவர்கள் சிங்களத்திலும் கல்வி கற்பது இன்னொரு சிறப்பு.
அருமையான பதிவு. இலங்கை பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நீங்கள் எழுதி இருப்பதை படிக்கும் போதும், இணைத்துள்ள படங்களை பார்க்கும் போதும், ஓர் பெரும் கேள்வி மனதில், அண்டை நாடு, இந்தியாவில் இருந்து மக்கள் சென்று குடியேறிய நாடு. எப்படி இவ்வளவு சுத்தம், வரிசையில் நிற்கும் ஒழுக்கம், இயற்கையை பாழாக்காது வாழும் பண்பு எல்லாம்? அனைத்து படங்களிலும் எவ்வளவு பசுமை, நம் தமிழ் நாட்டை ஒப்பிட்டு பார்த்தால் வயிறு எரிகிறது.ஹும்ம், இந்திய வம்சாவளியினர் இடம் இந்த குணங்கள் இருக்கிறது என்றால் நம் முன்னோரிடம் இந்த குணங்கள் இருந்திருக்க வேண்டும் தானே? ஏன் நம்மிடம் இல்லை? நடுவே எங்கே போயிற்று இதெல்லாம்? ஏன் போயிற்று இக்குணங்கள்?
//Ganesan said...
நம் தமிழ் நாட்டை ஒப்பிட்டு பார்த்தால் வயிறு எரிகிறது.ஹும்ம்
நம் முன்னோரிடம் இந்த குணங்கள் இருந்திருக்க வேண்டும் தானே? ஏன் நம்மிடம் இல்லை? நடுவே எங்கே போயிற்று இதெல்லாம்?//
அசிங்கமான ஒன்று இருக்கு. சகோ இக்பால் செல்வன் ஒரு பதிவு இந்திய உண்மை நிலை பற்றி எழுதியிருந்தார். இந்தியர்கள் கழிப்பறை வைத்திருக்காம பொது இடங்களில் மலம் கழிக்கிறார்கள் என்று இதில் இந்திய தமிழர்களும் அடக்கம் என்பது சொல்ல தேவையில்லை .ஆனா மலேசியாவில் உள்ள தமிழனோ இலங்கை உள்ள தமிழனோ அப்படியல்ல. எவ்வளவு வசதி குறைந்தவரும் ஒரு கழிப்பறை தங்களுக்கு என்று கட்டிவைத்திருப்பார்களே தவிர இந்தியா மாதிரி அசிங்கமா நடக்க மாட்டார்கள்.
தமிழர்கள் தாங்கள் வாழும் நாட்டிற்கேற்ற மாதிரி நல்ல முறைகளை பழகுகிறார்கள்.
ஒட்டுமொத்த இலங்கையர் சார்பில்
நன்றி தருமி ஐயா ,
தங்கள் பதிவின் மூலம் இலங்கையின் தற்போதைய சுமூக நிலை பலருக்கு எடுத்து காட்டப்பட்டுள்ளது ...
இன்னும் சில போக்குவரத்து நெறி முறைகள் உண்டு ...
*பிரதான சாலைகளில் மஞ்சள் கடவையை பாவிக்காமல் கடப்பவர்களக்கு 1000 ரூபாய் அபராதமும்,வீதி ஒழுங்கு கருத்தரங்கும் கட்டாயம்..
*வீதியில் குப்பை போட்டால் 10000 ரூபாய் அபராதம் அல்லது 2 வருட சிறை தண்டனை ..
*பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்து மாட்டி கொண்டால் 2 வருட கடும் காவல் தண்டனை
*3 முறை தவறு செய்யும் சாரதிகளக்கு அனுமதி பத்திரம் இரத்து செய்யபடும் .
*ஆட்டோ வில் 3 பேருக்கு மேல் பயணம் செய்தால் 5000 அபராதம்
இங்கு விதிகள் வந்தால் அதனை எதிர்க்கும் மனப்பான்மை குறைவு
ஆண்டு 1-13 வரை இங்கு இலவச கல்வியே ...பாடப்புத்தகம்,சீருடை அனைத்தும் இலவசம் ...ஆயினும் உயர் படிப்புக்கு தகுதி பெறும் மாணவர் தொகை வெறும் 2% தான்....
//(அது ஏன் சிங்கையிலும் இங்கேயும் டாக்ஸியை ’டெக்ஸி’ என்கிறார்கள்?)//
ஐயா, ஆஸ்திரேலியா, கனடாவிலும் டெக்ஸி என்றே சொல்கிறார்கள்.
அந்த FIGHT FOR SIGHT விளம்பரத்தை ஒரு வழியா இன்று காலையில் கண்டு பிடித்து விட்டேன்.......
பேருந்தில் மருதானை வழியாக போகும் போது அதை பார்த்தேன் ...உடனே தருமி அய்யா ஞாபகம் வந்தது ..அது பக்கத்துல போற வீதி பெயர் ஆனந்த மாவத்தை
vijay lankan
நீங்கள் எழுதியுள்ள ஒழுங்கு நியதிகளைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி. இப்படி நியதிகளையும், அதனை நடைமுறைப்படுத்துவதையும் எங்கள் நாட்டில் விரைவில் காண ஆசை ...
நடக்குமோ என்னவோ .... :(
//விளம்பரத்தை ஒரு வழியா இன்று காலையில் கண்டு பிடித்து விட்டேன்.......//
குட்டிக் கொலம்பஸ் !!
பல்கலைக்கழகங்களிலும் இலவசக் கல்வியே. மாணவர்களுக்கு செலவுக்கென்று பணம் வழங்குவார்கள். ஏறத்தாள 2500.00 மாதாந்தம்.
இலவசக்கல்வியோடு மாணவர்களுக்கு இலவச சீருடை உண்டு. மாணவர்கள் அனைவரும் அதனையே அணியவேண்டும் என்கின்ற சட்டமும் உண்டு. இதனால் பணக்காரர் ஏழை என்கின்ற வித்தியாசம் பாடசாலையில் தெரியாது.
Neil கடையிலிருந்தே காமிரா கிடைத்ததைச் சொல்லியிருந்தால் அந்த இளைஞருக்கு ஒரு நன்றி மனதாரச் சொல்லியிருக்கலாம். ஒரு சின்ன அன்பளிப்பு கொடுத்திருக்கலாம். முடியாது போனது பற்றி வருத்தம் தான்.//
நல்ல மனிதரை அடையாளம் காட்டி, அவரைப் பற்றி நன்றியுடன் நினைத்து எல்லோரிடமும் சொல்லியதே அவருக்கு நீங்கள் கொடுக்கும் அன்பளிப்பு தான்.
//நல்ல மனிதரை அடையாளம் காட்டி, ....//
ஆனால் அவருக்குத் தெரியாதே என்று நினைத்தேன்.
Post a Comment