Thursday, January 03, 2013

623. இலங்கைப் பயணம் 11 - பொலன்னறுவை - 2

*

 

*கல் விகாரை - தியான நிலை
15 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இச்சிலை தியான நிலையை சித்தரிக்கிறது. பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இதன் பாதம் மிக நுண்ணிய கடைசல்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. இச்சிலை பொலன்னறுவை காலத்தில் நிலவிய மகாயான கலையின் தாக்கத்தைக் காட்டுகிறது.


கல் விகாரை - பரி நிர்வாண சிலை
மெத்தென்ற தலையணையில் -  தலையும் ...


நீட்டி முடியும் அடியும் ...
THE ALPHA .......

& ... AND THE OMEGAஇச்சிலைகள் பெளத்த பரி நிர்வாண நிலையைச் சித்தரிக்கிறது. புத்தரின் உடலை  மிகச் சிறப்பாகக் காட்டுகிறது.


*

சிலைகளுக்கு முன்னால் நின்று முதுகை புத்தருக்குக் காண்பித்துப் படம் எடுக்க மட்டும் மிக முனைப்பாகத் தடுக்கிறார்கள். So much reverence ....

 

17 comments:

Unknown said...

புத்தர் பெருமானின் இச்சிலைகள் மிகபெரியதொரு கற்பாறை பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ளன ...தருமி ஐயா பார்த்து இருப்பீங்க ..ஒரு குகை உள்ளே புத்தர் அமர்ந்து இருக்கும் சிலை ...குகை உள்ளே கற்பாறை சுவரில் வெளித்தள்ளியவாறு அச்சிலை செதுக்க பட்டுள்ளது.இது சிறப்பான செதுக்கல் கலைக்கு உதாரணம் ஆகும் ..மேலும் பொலொன்னருவயில் மற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளக்கு தேவையான கற்பாறைகள் இங்கிருந்தே வெட்டி எடுக்கப்பட்டுள்ளது ...

//சிலைகளுக்கு முன்னால் நின்று முதுகை புத்தருக்குக் காண்பித்துப் படம் எடுக்க மட்டும் மிக முனைப்பாகத் தடுக்கிறார்கள். So much reverence ....//

2009 இல் தம்புள்ள தங்க விகாரையில் என் நண்பன் ஒருவன் புத்தரின் சிலைக்கு முதுகை காட்டியபடி
போஸ் கொடுத்தான் ..நான் ஏசி விட்டேன் ...இதுவே கோவில்ல போய் முருகன் சிலை முன்னாடி போட்டோ புடிப்பியாடின்னு கத்திட்டேன்....ஹீ ஹீ ஹீ ஹீ

தருமி said...

//இது சிறப்பான செதுக்கல் கலைக்கு உதாரணம் ஆகும் .//

மாமல்ல சிற்பங்களும் இதைப் போல் தான் என நினைக்கிறேன். - embossed sculpture.

விஜய், எதுக்கு இவ்வளவு பெரிய ஸ்தூபி கட்டியுள்ளார்கள். அவைகளின் சிறப்பு என்ன? உச்சியில் உள்ள சின்ன பீடத்திற்குள் வைர வைடூரங்கள் வைத்துக் கட்டுவார்கள் என்றார்களே ... அப்படியா?

அத்தனை பெரிய ஸ்தூபிகள் .. அதுவும் பக்கத்து பக்கத்தில் ... ஏன் என்றும் தெரியவில்லை.

Unknown said...

அலுவலக வேலை ...இப்போதும் மண்டை காய்ந்து கொண்டே இருக்கிறது ..வெகு விரைவில் காரணத்தை கண்டு பிடித்து மறுமொழி இடுகிறேன்

தருமி said...

vijay lankan,

//அலுவலக வேலை ..//

அடடா ... நான் காலேஜ் போற பையன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இன்னொரு ஐயம். ‘நம்ம ஆளுக’ மாதிரி சாதிப் பிரிவினைகள் சிங்களர் மத்தியில் உண்டா? இந்த சாதிப் பிரச்சனை நம் நாட்டுக்கு மட்டும் உள்ள ‘இழவு’ன்னு நினச்சிக்கிட்டு இருக்கேன்!

வேகநரி said...

//அடடா ... நான் காலேஜ் போற பையன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்//
ஐயா, தமிழ்நாட்டில் ஒரு இளைஞனை ஜாதி பற்றாளர்கள் ஆண் குழந்தையாகவே மாற்றினார்கள்.விஜய் காலேஜ் போற குழந்தை அல்ல, பையன் என்றே நீங்க நினைத்தீர்கள். நானும் கூட தான் காலேஜ் போற பையன் எப்படி இவ்வளவு ஆர்வமா வரலாற்றை படித்தார் என்று நினைத்தேன். ஜாதி பிரச்சனை பற்றி விஜய்யிடம் இருந்து அறிவோம்.எனக்கு இலங்கை தமிழர்களை பற்றி மட்டும் தெரியும். ஜாதி பாகுபாடு விடயத்தில் தமிழ்நாட்டைவிட அவர்கள் எவ்வளவோ மேல். ஜாதி பாகுபாடுகள் இருக்கு தான்.இரகசியமாக மட்டுமே ஜாதி பார்க்கிறார்கள். இலங்கையில் எவரிடமும் அரசு ஜாதி கேட்பதில்லை. ஆணா பெண்ணா? சிங்களமா தமிழா?(இனம்) என்பது மட்டும் தான். இந்தியாவில் நீ என்ன ஜாதி என்று அரசே கேட்டு ஜாதி சான்றிதழ் வழக்கும் போது ஜாதி எப்படி ஒழியும்!!!

Unknown said...

அனைத்து இந்திய கலாச்சாரத்துக்கும் பொதுவான ஜாதி வேற்றுமைகள் இங்கும் உண்டு. ஆனால் ஜாதி சங்கங்களும், ஜாதி கலவரங்களும் இங்கு இல்லை. ஜாதி பற்றி பொதுவில் பேசுவது இழிவானதொரு விடயமாக தற்போதைய தலைமுறை மத்தியில் பார்க்கப்படுகிறது. ஆனாலும் திருமணங்கள் இப்பொழுதும் பெரும்பாலும் ஜாதியினடிப்படையிலே மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கை தமிழர் மத்தியில் ஜாதி வேற்றுமைகளை பொதுவெளியில் ஒழித்த(அ)வெகு வெகுவாக குறைத்த பெருமை இடதுசாரி இயக்கங்களையும், ஆயுதப்போராட்ட இயக்கங்களையும் சாரும். தமிழர், சிங்களவர் என இன வேற்றுமை பெரிதானதும் சாதி வேற்றுமை பின் தள்ளப்பட்டதுக்கு மற்றுமொரு காரணம்.

சிங்களர்களில் பிரித்தானியர் காலம் வரை ’ரொடியா’ சாதி பெண்கள் மேலாடை அணிவது தடை செய்யப்பட்டிருந்தது. பிரித்தானிய அரசின் கடுமையான சட்டதிட்டங்கள், இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள் மற்றும் இலவசக்கல்விமூலம் கல்விகற்ற பரம்பரை உருவானவை என்பதன் மூலமும் சிங்களவர் மத்தியிலான சாதி வேறுபாடு பொது வெளியில் குறைக்கப்பட்டது.

Unknown said...

இலங்கையின் சாதிய முறமை பற்றிய ஒரு விக்கி கட்டுரை.

http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_caste_system


அந்தக்கால இலங்கையர்கள்..

http://www.imagesofceylon.com/ioc-people17.htm

Unknown said...

//அடடா ... நான் காலேஜ் போற பையன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்//

காலேஜ் போக வேண்டிய வயசு தான் ...21 வயது ஆகிறது..ஆனா பள்ளிபடிப்புடன் வேலை கிடைத்து விட்டது. பகுதி நேர பட்டபடிப்புடன் கம்பெனி ஒன்றில் கடன் கட்டுப்பாட்டாளர் பதவியில் இருக்கேன் ...நான் மட்டும் இல்லை ,இலங்கையில் பெரும்பாலும் பள்ளிபடிப்புடன் வங்கி,கணக்கியல்,சந்தைபடுத்தல் துறைகளக்குள் நுழையும் இளைன்ஞர்களே அதிகம் ..உங்களக்கே தெரிஞ்சுருக்கும் விலைவாசி நிலைவரம் ...அதான் அவசர குடுக்கையா வேலைக்கு வந்துட்டேன்

Unknown said...

//எதுக்கு இவ்வளவு பெரிய ஸ்தூபி கட்டியுள்ளார்கள். அவைகளின் சிறப்பு என்ன? உச்சியில் உள்ள சின்ன பீடத்திற்குள் வைர வைடூரங்கள் வைத்துக் கட்டுவார்கள் என்றார்களே ... அப்படியா//

அதாவது அக்காலத்தில் அப்பிரதேசம் மிகப்பெரும் இராசதானியாக இருந்துள்ளது ....பொலொன்னருவையின் பெரும்பகுதி காடாக இருக்கையில் இப்பகுதியை மட்டும் முடியுமான வரை சமப்படுத்தி குடியேற்றங்களை அமைத்தனர் .பின்னர் ஆண்டான் அடிமை கோட்பாட்டிற்கு அமைய அரசன் அவனுக்கான மாளிகைகளை அமைத்ததுடன் பல விகாரை ,ஸ்தூபிகளையும் அமைத்தான் ..சனத்தொகை பரம்பல் மட்டுபடுத்தபட்டிருந்தமையால் அவ் இராசதானி உள்ளேயே அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களும் அடங்கியது.

அக்காலத்தில் மன்னனின் பராக்கிரமம் அவன் விவசாயத்துறைக்கு செய்த சேவைகள் மற்றும் அவன் செய்த பௌத்த சமய சேவைகள் அடிப்படையிலேயே அனுமானிக்கபட்டது.(ஸ்ரீ விக்கரம ராஜ சிங்கனும் இதனால் தான் பௌத்தனாக காட்டி கொண்டான் )ஆகவே இராசதானி உள்ளேயே புது புது ஸ்தூபிகள் முளைக்க தொடங்கின ..இடபற்றாகுறை அவற்றை அருகருகே அமைய செய்து விட்டது..இவ்வாறு காட்டுபகுதியினுள் இராசதானி இருப்பதால் படையெடுப்புக்களில் இருந்து காத்து கொள்ள முடிந்தது ..

மகாயான பௌத்தத்தின் படி ஸ்தூபி ,வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது ..ஸ்தூபியை புனிதமாக கருதுவதால் அதன் புனிதத்தன்மையை அதிகரிக்க அவ்வாறு வைர வைடூரியங்களை உச்சியில் வைத்து கட்டுவது வழக்கம்..இது ஒரு மனித மனம் சார்ந்த செய்கையே ஆகும்..கோவில்களில் சாதா சிலையை விட தங்க சிலை வந்து விட்டால் அதன் மீது பக்தி ரொம்ப கூடுமே ..அது போலவே தான் ...மேலும் ஒரு காரணமும் கூறபடுகிறது ,படையெடுப்புகளின் போது தம் செல்வங்களை பாதுகாத்து கொள்ள ஸ்தூபிகளின் அடியிலும் ,உச்சியிலும் ஒழித்து வைத்தனர்..ஏனைய இராசதானிகளில் பௌத்த ,தமிழ் மன்னர்கள் இருந்தமையால் ஸ்தூபிகளை தாக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை அப்பொழுது காணப்பட்டது..

Unknown said...

//இன்னொரு ஐயம். ‘நம்ம ஆளுக’ மாதிரி சாதிப் பிரிவினைகள் சிங்களர் மத்தியில் உண்டா? இந்த சாதிப் பிரச்சனை நம் நாட்டுக்கு மட்டும் உள்ள ‘இழவு’ன்னு நினச்சிக்கிட்டு இருக்கே//

பௌத்தம் இந்து மதத்தில் இருந்து ஒரு சில விடயங்களை copy அடித்து உருவாகிய மதம் என்பது நாம் அறிந்ததே..மறுபிறப்பு,சுவர்க்கம்,நரகம்,ஜாதக,ஜோசியம் என்பன இங்கும் உண்டு..அப்புறம் எப்படி ஜாதி மட்டும் இல்லாம போகும்..ஆயினும் இங்கு பிராமணன்,சூத்திரன்,வைசியன்,சத்த்ரியன் னு கூறப்படவில்லை..தொழில் அடிப்படையில் மற்றும் பிறந்த இட அடிப்படையில் உயர்வு தாழ்வு காணபடுகிறது..பொட்கொல்லர் ,தையல்காரர்,துப்புரவாளர்கள் தாழ்வான மக்களாகவும்,விவசாய குடும்பத்தினர்,கல்வி கற்றோர்,நில பிரபுக்கள் உயர் மக்களாகவும் பிரித்துள்ளனர்....

மற்றும் இட அடிப்படையில் மலையக பௌத்தர்கள் உயர் சாதியாகவும் ,ஏனைய தாழ் நாட்டு மற்றும் தென் பகுதி பௌத்த மக்களும் சிறுபான்மை சாதியாகவும் உள்ளனர் .

ஆயினும் இச்சாதி முறைமை திருமணங்களில் மட்டுமே பெரும்பாலும் பார்க்க படுகிறது,அதனை தாண்டி இரட்டை குவளை,தீண்டாமை என்பன எனக்கு தெரிந்து இங்கு இல்லை..மற்றும் வகுப்பு வாத கலவரங்கள் என்பனவும் இங்கு இடம்பெறவில்லை..(தமிழன மட்டும் அடிச்சாங்க ))))

அலுவலக சிங்கள பெண் தோழி ஒருவர் கூறியது,,ஒரு நாள் தையல்காரர் வீட்டுக்கு பாட்டியுடன் சென்ற போது அவர் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்தாராம்..வீட்டுக்கு வந்த பின் பாட்டியிடம் அடி+உதை+ ஏச்சு வாங்கினார்.காரணம் தையல் தொழிலாளி தாழ்ந்த மக்களாம்...இதை தாண்டி ஏடுகளில் ,ஆவணங்களில் சாதி முறைகள் எங்கும் இல்லை..

பல்கலைகழக ஒதுக்கீட்டில் சிங்கள ,தமிழ் பாகு பாடு காணபடுகிற போதும் சிங்கள ஏழை மாணவன் ஆயினும் அவன் சிறந்த பெறுபேறு பெற்றால் உடனடியாக அனுமதிக்க படுவான்..

சமத்துவம் கற்பிக்கும் பௌத்தம் னு தான் அம்பேத்கர் மதம் மாறினார்..ஆனால் எல்லா நாடுகளிலும் பௌத்த மதம் அப்படி இல்லை என்பதை அவர் அறிந்து இருக்க வாய்ப்பில்லை..இலங்கையில் மட்டும் இரு வித பௌத்த மதம் காணபடுகிறது ..(மகாயான,தேரவாத)
இதை விட திபெத்தில் வஜ்ரயானம் உள்ளது ..அனைத்தும் வேறு வேறு விதத்தில் வாழ்வியல் பற்றி கூறுகின்றன..

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

தகவல்கள் சரி தானே :)

Unknown said...

@வேகநரி

என்னை பற்றிய கருத்துகளக்கு நன்றி...இந்த ஜாதி வேற்றுமை ஒழியும் வரை என்றுமே நம் தலை விதி மாறாது...அதான் ஒரு வருஷம் முன்னாடி நாத்திகம் பக்கம் திரும்பிட்டேன்....எப்போதான் பார்பனன் தின்ன இலைல உருளுவது நிக்குமோ????????

இலங்கையில் சின்ஹல தமிழ் வேறுபாடு இருப்பினும் சிங்கள மக்கள் உயர் சாதி, தமிழ் தாழ்ந்த சாதினு எங்கும் இல்லை..சிங்களவர்களை விட தமிழர்கள் சிறந்த கல்வி பெறுபேறுகளை பெற்றதால் பல்கலைகழக அனுமதியில் தமிழர் பங்கு கூடியது..அதனை இல்லாதொழிக்க Z -வெட்டுப்புள்ளி முறை அறிமுகபடுத்த பட்டு சிறந்த பெறு பேற்றை பெற்ற தமிழ் மாணவன் தகைமை இழந்தவன் ஆனான்,சாதாரண பெறுபேற்றை பெற்ற சிங்கள பிரதேச மாணவன் பல்கலை கழகம் நுழைந்தான்..இது நடந்தது 1970களில்..இனப்பிரச்சனையின் ஆரம்ப பற்ற வைப்பு இங்கு தான் ஆரம்பித்தது.....மற்றும் காலனி ஆதிக்கத்தின் போது அரச பதவிகளில் தமிழர்களை இருத்தி பிரித்தானியா அழகு பார்த்ததும் சிங்களவர்களை உசுபேற்றியது..

இலங்கை பற்றி எரிந்தது ......... தற்போது சூடு தணிந்துள்ளது .........

தருமி said...

தகவல்களுக்கு நன்றி, விஜய்.

நம்மை மாதிரி அவ்வளவு ‘அசிங்கம்’ அவர்களிடம் சாதியில் இல்லை. ஆனால் வேற்றுமை இருக்கிறது ... இல்லையா?

Unknown said...

ஆமாம் அய்யா,,

ஆனாலும் நம்ம ஆளுங்க PERFORMANCE சூப்பர் ...இப்பவும் கொழும்பு,யாழ்பாணம்,மற்றும் மலையகத்திலுள்ள ஒரு சில கோவில்களில் சப்பரம் தூக்க அந்த கோவிலின் உரிமையான ஜாதிக்கே முன்னுரிமை..அதிலும் மலையகத்தில் இது இன்னும் அதிகம்..

அதன் காரணமாக மலையக பகுதிகளில் மதம் மாறுதல் அதிகமாக உள்ளது..சர்ச்சுகளின் வளர்ச்சி இப்பகுதியில் மிக அதிகம்...

யாழ்ப்பாணத்து நண்பன் ஒருவன் சொன்னது,அவனுக்கு தாழ்ந்த சாதி நண்பர்கள் உண்டு ,அதனால் அவன் உறவு இளவயதினர் கூட அவனுடன் பேசுவதில்லையாம்..

இவ்ளோ ஏன்...சிறு வயதில் ஒரு தமிழ் நிறுவனத்தில் சிறு காலம் ( 4 நாள் ...ஹீ ஹீ ) வேலை செய்தேன்,..அங்கு கேட்ட முதல் கேள்வி ...தம்பி உங்க சாதி என்னது???? மனுஷ சாதின்னு சொல்ல வாயெடுத்தேன் ..ஆனா சொல்லல

வேகநரி said...

விஜய், நீங்க தந்த தகவல்களுக்கு நன்றி.
//ஒரு வருஷம் முன்னாடி நாத்திகம் பக்கம் திரும்பிட்டேன்//
ஸொ நீங்க ஒரு காபிர் உங்களுக்கு விருப்பமானதை தெரிந்து எடுத்துள்ளீர்கள்.

தருமி said...

சாயன்

கொடுத்த தகவல்களுக்கும் தொடுப்புக்கும் மிக்க நன்றி

Post a Comment