Friday, January 11, 2013

627. இலங்கைப் பயணம் - 12 - புன்ன விள - யானை முகாம்
*

19 அக்டோபர் 2012

 புன்னவிள என்ற இடத்தில் யானைகளுக்கான முகாம் ஒன்றுள்ளது. பெரிய இடத்தில் அவைகளை மொத்தமாக வைத்திருப்பார்கள். அந்த முகாமில் யானைகளின் ‘விளையாட்டுகள்’ பார்க்க நன்றாக இருக்கும் என்றார்கள். ஆனால் நாங்கள் அந்த வாய்ப்பைத் தவற விட்டு விட்டோம். நாங்கள் போன நேரத்தில் அவைகள் விளையாடி முடித்து விட்டு ஆற்றுக்குப் புறப்பட்டுப் போய் விட்டன.
 புகைப்படங்கள் எடுக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. சுற்றிச் சுற்றி எடுத்தோம்.


பால் குடிக்கும் குட்டி

பாய்ந்து ஓடும் யானை


அசத்தலான ஒரு தூக்கம்

யானைக் கூட்டம்

யானைக் குடும்பம்

தனிக்காட்டு ராசா


முட்டி முட்டி பால் குடிக்கும் குட்டி

அரவணைப்பு


யானைப் பொருட்கள்இன்னும் யானைகள் படங்கள் பார்க்க .....

 *

 

12 comments:

vijay lankan said...

பதிவுலகில் முதன் முறையாக .......தருமி அவர்கள் பெருமையுடன் வழங்கும்...... கும்கி பாகம்-2...

அருமையான பதிவு ..அருமையான படங்கள் ...

அரவணைப்பு ...அந்த படம் ரொம்ப பிடித்து இருந்தது ...எண்ணங்கள் 1000 உதித்தது ...

நான் இன்னும் போகாத இடம் ...வெகு விரைவில் போகணும்

தருமி said...

விஜய்

நானும் போகாத முக்கிய இடங்களுக்குப் போக முடியவில்லையே என்ற கவலை உண்டு.

தருமி said...

இன்னும் கொஞ்சம் யானைகளை இங்கே பார்க்கலாம்.

vijay lankan said...

நீங்கள் சென்றுள்ள இடங்கள் தான் இலங்கையின் மிக முக்கிய சுற்றுலா தலங்கள்...மேலும் யாரும் பெரிதாக அறியாத கடல் வாழ் உயிரின பூங்காவை ,உங்களின் கட்டுரைகளே எமக்கு அறிமுக படுத்தியது ...சிங்கராஜ வனம்,வில்பத்து சரணாலயம் மற்றும் சிகிரியா மட்டும் தான் தங்களின் பயண தொகுப்பில் இது வரை வரவில்லை ..வடக்கு பக்கம் கோவில்கள் ,மற்றும் மடு மாதா தேவாலயம் ..கிழக்குல கிண்ணியா சுடுநீர் ஊற்று ,டால்பின் காட்சி மற்றும் கோவில்கள் இருக்கு ,தெற்கு பக்கம் கதிர்காமம் மற்றும் வெகு விரைவில் அம்பாந்தோட்டை மிக பெரிய உல்லாசபுரி ஆகிடும் ..(எங்க தல பிறந்த ஊரு )

தருமி said...

பொலன்னறுவை போல் அனுராதபுரம் பார்த்திருந்திருக்கலாம். அதோடு தமிழர் வாழ் பகுதிகள் பார்க்க ஆசை. முடியாது போயிற்று.

அதைவிட உங்களை உங்கள் ஊரில் வைத்தும் பார்த்திருக்கலாமேன்னு இப்போது தோன்றுகிறது!

இராஜராஜேஸ்வரி said...

அருமையான யானைகள் பற்றிய படங்கள்.. பாராட்டுக்கள்..

vijay lankan said...

//அதைவிட உங்களை உங்கள் ஊரில் வைத்தும் பார்த்திருக்கலாமேன்னு இப்போது தோன்றுகிறது!//

ITS MY PLEASURE .....

சில வேலை இந்த வருஷம் இந்தியா வர வேண்டி ஏற்படலாம் ...மதுரையில் உறவினர்கள் இருக்காங்க..கட்டாயம் தங்களை சந்திப்பேன் ...

நான் said...

யானை பொருட்கள்?

தருமி said...

நான்

யானையை வைத்து செய்த பொருட்கள் - தந்தத்தில், தோலில் ....

வேகநரி said...

எனது நண்பர் ஒருவர் தனது சகோதரி குடும்பத்தாருடன் இலங்கை 9 தேதி இலங்கை போய்விட்டார். கொழும்பில் இருந்து யானைகள் பார்க்க ஒரு இடத்துக்கு போகின்றனராம்.அவர் சொன்ன இடத்து பெயர்கள் நினைவில்லை. கொழும்பில் ஒரு நிறுவனம் ஜீப் வைத்திருக்கிறார்களாம். ஒரு நாள் வாடகை சாரதியுடன் 3000 இலங்கை ரூபா.முதலே பதிவு செய்துள்ளார்களாம்.அதில் தான் யானை பார்க்க போகிறார்களாம்.அவர் போவதற்கு முதலே அவருக்கு தர்மி ஐயாவின் இலங்கை பிரயாண கட்டுரைகளை அனுப்பி வைத்தேன். அவருக்கு நல்ல திருப்தி.

தருமி said...

வேகநரி,
நண்பரின் க்ருத்துக்கள் கிடைத்தால் அனுப்புங்கள்...

வேகநரி said...

நண்பர் வந்ததும் கருத்து அறிவேன் ஜயா. பிரயாண கட்டுரை படிப்பபது பிரயாண அனுபவங்கள் கேட்பது பிடித்த சமாச்சாரங்களாயிற்றே.

Post a Comment