Friday, January 04, 2013

624. ஒச்சப்பனும் நானும் (2013)
*


சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒச்சப்பன் என்றொரு புனைப்பெயரில்  தன்னை அழைத்துக் கொள்ளும் Belgium நாட்டின் Henk என்பவரைச் சந்தித்து அவரோடு இணைந்து புகைப்படங்கள் எடுத்ததைப் பற்றியும், புகைப்படத்துறையில் இருந்த அவரது ஆர்வத்தையும், அவரோடு சில படங்களை post-production  செய்தது பற்றியும் ஏற்கெனவே எழுதியிருந்தேன்.

பல ஆண்டுகளாக வருவது போல் இந்த ஆண்டும் டிசம்பர் மாதமே வந்து விட்டார். வந்ததையும் தெரிவித்தார்.  ஆனாலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நேரில் சென்று சந்திக்க முடியாது போயிற்று. மனுஷன் புத்தாண்டு தினத்தன்று வீட்டிற்கே வந்து விட்டார். அவர் இந்த ஆண்டு வருவதற்குள் கொஞ்சமாவது post-production பழகிக்கொள்ள வேண்டுமென நினைத்திருந்தேன். முடியாது போயிற்று.

இரண்டு நாள் கழித்து அவரைப் பார்க்கச் சென்றேன். கையோடு பதிவுகளில் சமீபத்தில் போட்டிருந்த Orchids  படங்களோடு சென்றிருந்தேன். படம் எடுத்த போது இந்தப் படங்கள் நன்றாக வந்திருந்ததாக நினைத்திருந்தேன். ஆனால் அதன் பின் திருப்தியில்லாமல் போனது. சரி ... அவரையாவது கொஞ்சம்  PP செய்யச் சொல்லுவோமே என்று அவைகளோடு சென்றேன். வழக்கமான மேஜிக் செய்து காண்பித்தார். என்ன வேகம் ... என்ன precision ... இரு பூக்களை அவர் PP செய்ததை இங்கே பதிந்திருக்கிறேன்.


இந்தப் படங்களில் இதழ்களின் வரிக்கோடுகள், texture எல்லாம் கொண்டு வந்தார். பின்னணி மாறுபாட்டோடு இருக்க வேண்டுமென நினைத்தார். நான் வெள்ளைப் பூவிற்கு பச்சைப் பின்னணி நன்றாயிருக்குமே என்று நினைத்திருந்தேன். ஆனால் மாறுபட்ட பின்னணி தான் சரி  என்று மாற்றிக் காண்பித்தார். பூவிதழ்கள் இயற்கைத் தோற்றத்திற்குக் கொண்டு வந்துள்ளார். பூ பின்னணியிலிருந்து தனித்து நிற்க வேண்டும் என்றார்.

அடுத்து ....அடுத்த படத்திலும் பின்னணியை மாற்றினார். அதோடு பூவிலும் நிறைய மாற்றங்கள் செய்தார். மிக நுணுக்கமான மாற்றங்களைக் கொண்டு வருகிறார். மிகச் சிறிய - சில சமயம் அவ்வளவு எளிதாகக் கண்டு கொள்ள முடியாத - மாற்றங்களைக் கொண்டு வருகிறார். உன்னிப்பும், வேகமும் பயமுறுத்தின !


PP-யில் என்னென்ன மாற்றங்கள் செய்கிறாய் என்று கேட்டார். நானென்ன பெருசா செய்யப் போகிறேன் ... கொஞ்சம் கொஞ்சம் curves, contrast, colour balanace மட்டும் செய்கிறேன். அதிலும் skin tone கொண்டு வரக் கஷ்டப்படுவதைச் சொன்னேன். பூவிற்கு எடுத்த அளவு அதிக முயற்சி எடுக்காமல் கீழே உள்ள என் பேத்தியின் படங்களை மாற்றிக் காண்பித்தார்.எல்லாம் துரித கதியில் செய்கிறார். அவர் மூலமாகக் கற்றுக் கொள்வது என்னைப் போன்ற மர மண்டைக்குக் கொஞ்சமல்ல ... நிறைய கஷ்டம். அதற்கும் ஒரு வழி கண்டு பிடித்து விட்டோம். அவரது இந்தியப் பயணத்தில் அவரோடு இருக்கும் அவரது மதுரை நண்பன் ஆனந்திற்கு நிறைய சொல்லிக் கொடுத்துள்ளார். அவனோடு இனி அமர்ந்து படிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். ஒச்சப்பன் இந்தியாவை விட்டுப் போனபின் அந்த வேலையை ‘சீரியஸாக’ச் செய்ய வேண்டும். (ஏற்கெனவே நவ்பால் சொன்னது போல் எனக்கு perseverance ரொம்பக் கம்மி தான். இருந்தும் ஒரு கை முயற்சித்துப் பார்த்துவிட வேண்டியது தான்.)


*


9 comments:

அமர பாரதி said...

படங்களை போஸ்ட் ப்ரொடக்ஷனில் மாற்றிய விதம் அழகு. எந்த மென்பொருள் உபயோகப்படுத்துகிறார் என்று சொன்னால் குறைந்த பட்சம் சொந்தமாகவாவது முயற்சிக்கலாமே.

vijay lankan said...

பேராசிரியர் ,எழுத்தாளர்,பதிவர்,பேச்சாளர்,பயண விரும்பி,மொழி பெயர்ப்பு ஆக்கம் ........புகைப்பட துறையிலும் பல சாதனைகள் புரிந்திட வாழ்த்துக்கள்

தருமி said...

அமர பாரதி

அடோப் போட்டோ ஷாப் தான்.

தருமி said...

//புகைப்பட துறையிலும் பல சாதனைகள் புரிந்திட வாழ்த்துக்கள் //

அட போங்க’ப்பா!

s suresh said...

நல்ல கலை! எனக்கும் கற்றுக்கொள்ள ஆர்வம்தான்! பகிர்வுக்கு நன்றி!

Vel Murugan said...

இது ஒரு தூண்டுதல், இதுதான் மேன்மேலும் கற்றுக் கொள்ள, முன்னேற வைக்கிறது மனிதனை.

சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்

மருத புல்லட் பாண்டி said...

பாஸ் நீங்க அதுக்கு சரிபட மாட்டீங்க

தருமி said...

அமர பாரதி

adobe phtoshop + nik software + topaz

சித்திரவீதிக்காரன் said...

எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால் நானும், மதுரையை இன்னும் அழகாகப் பதிவு செய்வேன்.

Post a Comment