*
ஒச்சப்பன் முதல் தடவை மதுரை வந்த போது, ஒரு வெயில் நேரத்தில் ஒதுங்க இடமில்லாத இடத்தில் நின்று புகைப் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, பக்கத்தில் ஒரு கடையில் இருந்த இளைஞன் அவரை கடைக்கு உள்ளே வந்து உட்கார அழைத்திருக்கிறான். அழைத்த இளைஞன் ஆனந்த். அன்று தொட்ட நட்பு பல்லாண்டுகளாக நன்கு வளர்ந்துள்ளது. ஒச்சப்பன் இந்தியா வரும் நாளை ஆனந்திற்குத் தெரிவித்து விடுகிறார். சென்னைக்கே சென்று அவரைச் சந்தித்து, பின் அவர் தன் தாய்நாடு திரும்பும் வரை அவரோடு ஆனந்த் இருப்பது தொடர்ந்த ஒரு பழக்கம்.
ஒச்சப்பனின் “தத்துப் பிள்ளை” |
முதல் முறை ஒச்சப்பன் படம் எடுக்கும் இடங்களுக்கும் உடன் வரும் ஆனந்திடம் ஒரு சின்ன காமிராவைக் கொடுத்து படம் எடுக்க வைத்திருக்கிறார். அவரோடு அமர்ந்து புகைப்படத் திருத்தல்களையும் கற்றுக் கொண்டு விட்டான். இப்போது அவனது படங்களும் நம்மை மலைக்க வைக்கின்றன. இப்போது ஆனந்த் திருமணங்களுக்குப் படம் எடுப்பதில் வல்லவனாகி விட்டான்.
ஒச்சப்பன் google maps வைத்தே மதுரையருகில் உள்ள சின்னச் சின்னக் கிராமங்களைக் ‘குறி’ வைக்கிறார். அவரோடு ஏற்கெனவே அவர்கள் அடிக்கடி போயிருக்கும் யானை மலையைச் சுற்றியுள்ள கல் குவாரிகளைச் சுற்றிப் பார்த்துப் படம் எடுக்கப் போயிருந்தேன். யானைமலையை ஒட்டி அந்த மலையின் வெளியே தெரியும் அளவிற்கு ஆழமாக கற்களைத் தோண்டி எடுத்துள்ளார்கள்.
அநேகமாக கல்லூரி படத்தில் கதாநாயகன் ஒரு கல் பாதையில் வேகமாக ஓடுவது போல் ஒரு காட்சி இருக்கும். அநேகமாக நாங்கள் போன ஒரு பாதையாக அது இருக்கலாம். சரியாக ஒரு லாரி மட்டும் செல்லும் அகலத்தில் ஒரு பாதை. அதன் இரு பக்கமும் பார்த்தால் அதல பாதாளம். அப்பாதையில் போகவே எனக்குப் பயமாக இருந்தது. அதைக் கடந்து போனோம். ஆஆஆஆஆழமாக வெட்டி எடுத்துள்ளார்கள் - கொடுத்து வச்ச மவராசன்கள்!
‘தண்ணி’யை அரசு விற்கிறது. விலைகூடிய கற்களை சில தனி மனிதர்கள் விற்கிறார்கள். நம் நாட்டுக் கனிப் பொருட்களை அரசே உடமையாக்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்று தான் அந்த இடங்களைப் பார்த்ததும் தோன்றியது. என்றாவது அது நடக்குமா என்று ஒரு ஆசை.
திபெத்திய மூதாட்டி |
இதே மூதாட்டியை இருவரும் படம் எடுத்துள்ளார்கள். ஒன்றுக்கு ஒன்று குறைச்சலில்லை. ஆனாலும் ஒச்சப்பன் தான் தான் அந்த மூதாட்டியை படம் எடுக்கத் தேர்ந்தெடுத்தேன் என்று சொல்லி, காலரை தூக்கி விட்டுக் கொண்டார்.
ஆனந்த் சீர் திருத்தியது |
நான் ‘கெடுத்த’ படம் |
ஆனந்த் |
தருமி |
*
6 comments:
தங்களின் புகைப்படங்கள் அருமை அய்யா...MY MONEY ON DHARUMI SIR,..அதிலும் அந்த மனிதனின் நிழல் சுத்தியலால் அவனை அவனே அடிப்பது போல இருக்கு
நட்புக்கு எல்லை ஏது??? இனம் மதம் மொழி தாண்டி ஒச்சப்பன்,ஆனந்த் இருவரையும் குரு சிஷ்யன் உறவுக்குள் அழைத்து வந்திருப்பது நட்பே...ஒச்சப்பன் அவர்களை பார்க்க நானும் ஆசை படுகிறேன்.....கற்ற கலையை உபகரணங்களுடன் சொல்லி கொடுக்கும் இது போன்ற தன்மையான ஆசான்கள் தான் நம் போன்ற வளர்ந்து வரும் நாட்டு குழந்தைகளைக்கு சிறந்த வழிகாட்டிகளாக இருக்க முடியும் ...
//ற்ற கலையை உபகரணங்களுடன் சொல்லி கொடுக்கும் இது போன்ற தன்மையான ஆசான்கள் //
வழக்கமாக பொட்டி தூக்குறவங்க நிறைய பேர் தங்கள் ‘ரகசியங்களை’ வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் இவர்கள் அப்படியில்லை.
அந்த உயர் குணம் தான் ஒச்சப்பன் அய்யாவை மதுரை இல் FAMOUS ஆகா செய்துள்ளது..தங்களின் எழுத்தே அவரது இயல்பை பறைசாற்றுகிறது ..
மற்றும் ஆனந்த் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்
brother Now a days we are ready share our knowledge, however Very Young People Like you are not ready to dedicate.
மருத புல்லட் பாண்டி
அண்ணா, நாங்க சொன்னது பொட்டி அதாவது காமிரா பொட்டி தூக்குறவங்களைப் பத்தி. உங்க கணினிப் பொட்டி பத்தி சொல்லலை.
முந்திரிக்கொட்டை ,,,!
மருத ரவை பாண்டி யாரை பற்றி சொல்றாரு ???? எதை பத்தி சொல்றாரு ...நாங்க தமிழ் மீடியம் பசங்க ...புரியுறாப்ல சொல்லுங்க பாண்டி அண்ணோவ்
Post a Comment