Saturday, October 05, 2013

687. தருமி பக்கம் (7) - எப்டின்னே புரியலையே !



*

அதீதம் இணைய இதழின் தருமி பக்கம் (7)-ல் வெளியான கட்டுரையின் மறு பதிப்பு.




*




அறிவியலில் பல கேள்விகள். சின்ன வயதிலிருந்தே பல கேள்விகள். அன்றும் பதில் தெரியவில்லை; இன்றும் தெரியவில்லை. கிராம போன். சின்னூண்டு ஒரு பொட்டி. அதுக்கு மேல் ரிக்கார்ட் வச்சா சத்தம் வந்துது. எப்டின்னு அன்னைக்கும் புரியலை. ரேடியோ .. என்னமோ அலை வரிசை என்கிறார்கள். முள்ளைத் திருப்பினால் வேறு வேறு இடத்திலிருந்து பாட்டு வருது. எப்படி? யாருக்குத் தெரியும்!

ஆனாலும், இதைப் பற்றிக் கொஞ்சம் அறிவியலா யோசிக்கவாவது  முடியுது. லேசா அரசல் புரசலா புரியுது. அரைகுறை அறிவியல் வச்சி ஏதோ சில காரணம் கண்டுபிடிக்க முடியுது. ஆனால் இன்னொரு விஷயம். பல நூற்றாண்டு விஷயம். அது எப்படி நடந்ததுன்னு நானும் யோசிச்சிப் பார்க்கிறேன். இதுவரை ஏதும் விடை தெரியவில்லை. 

நம்ம ஊர் ஆயுர்வேத / மூலிகை மருத்துவம் பற்றிய கேள்விகள் அவை. இந்த வியாதிக்கு இது மருந்துன்னு சொல்றாங்க. ஒரு சின்ன எடுத்துக்காட்டாக மஞ்சள் காமாலைக்கு கீவாநல்லி இலை மருந்துன்னு சொன்னாங்க. இப்ப ஆங்கிலேய மருத்துவக்காரர்களுமே இதை ஒப்புக் கொண்டு விட்டார்கள். 

மருத்துவம் எல்லாமே வேதியல் தொடர்புடையது தான். வியாதி வருவதற்கு ஏதோ ஒரு வேதியல் பொருள் நம் உடம்பில் இல்லாமல போகிறது அல்லது அதிகமாக ஆகி விடுகிறது. நமக்குக் கொடுக்கப்படும் மருந்தில் உள்ள வேதியப்பொருள் இந்தக் குறைபாட்டை சரி செய்வதற்காகத்தான் கொடுக்கப்படுகிறது. எனக்குத் தெரிந்த மருத்துவம் இது தான். இப்போதைய நிலையில் உடம்பின் வேதியல் முறைகள் பலவும் கற்றுணரப்பட்டு விட்டன. சர்க்கரை வியாதியா? இன்சுலின் இல்லை. அதனால் சர்க்கரை ரத்தத்தில் முறையாகக் கட்டுப் படுத்தப் படுவதில்லை. அதற்குரிய மருந்தாக இன்சுலினில் உள்ள வேதியப் பொருள்  பயன்படுகிறது.

இன்றைக்கு வேதியல் பற்றிய ஆய்வுகள் மூலம் இதை அறிய முடிகிறது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சர்க்கரை வியாதிக்கு இது மருந்து என்று ஏதோ ஒரு செடியை அல்லது மஞ்சள் காமாலைக்கு இந்த செடி மருந்து என்று எப்படிக் கண்டுபிடித்திருக்க முடியும்? கீவாநல்லியில் உள்ள வேதியல் பொருள் என்ன என்று நம் பழைய மூலிகை வைத்தியர்கள் எப்படிக் கண்டுபிடித்திருக்க முடியும்? இது போன்ற பெரிய பட்டியலே இருக்கிறது.

trial and error method மட்டுமே இதற்குக் காரணமாக இருக்க முடியுமா? ஒரு நோய்க்கு இது தான் சரியான மருந்து என்பதை இந்த முறை மூலம் நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியாது என்றே நினைக்கிறேன். அத்தனை அத்தனை மனிதர்கள், அத்தனை அத்தனை வியாதிகள், பல முறைகள், பல மருந்துகள் அல்லது மூலிகைகள் என்றா ஆராய்ச்சி செய்திருக்க முடியும்? இன்றைய ஆராய்ச்சிகள் போல் sample, control and experimental systems ... இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்திருக்க முடியாது. ஆனால் பல நோய்களுக்குப் பல சரியான மூலிகை மருந்துகள் என்று அவர்கள் அன்று எப்படிக் கண்டு பிடித்திருக்க முடியும். இந்த மூலிகை இந்த நோய்க்கான மருந்து என்றோ, இந்த வியாதிக்கு இந்த மூலிகை மருந்து என்றோ எப்படி, எந்த முறையில் அவர்களால் கண்டுபிடித்திருக்க முடியும்.

என்றோ எப்படியோ கண்டு பிடித்த மூலிகை மருந்துகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவு இன்றும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்த சில தகவல்கள் மூலம் இக்கண்டுபிடிப்புகள் பற்றிய என் ஆச்சரியமும், அதிசயமும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. ஆனால் விடைகள் தான் இன்னும் கிடைக்கவில்லை. முதலில் உருண்டோடும் ஒரு கல்லில் இருந்தோ இல்லை வேறு ஏதோ பொருளிலிருந்தோ ஒரு சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கலாம். அதிலிருந்து ஒரு வண்டி, தேர் என்றெல்லாம் எப்படி பரிணாமம் நடந்திருக்க வேண்டுமென்று யோசிக்க முடிகிறது.




அட ... நமது சைக்கிள்களின் பரிணாமம் தான் நமக்குத் தெரியுமே .. அது எப்படி நடந்திருக்க முடியும் என்பது புரிகிறது.




ஆனால் வியாதிகளும், சரியான மருந்துகளும் என்ன  mechanism? என்ன method? ....ம்ம்..ம்.. எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு ...?







*



 

13 comments:

ப.கந்தசாமி said...

அன்று வேதியல் ஆராய்ச்சிக்கூடங்கள் இருந்திருக்கவில்லை. இருந்தாலும் இந்த ஆயுர்வேத மருந்துகள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. Hit and Miss முறை`ஆகத்தான் இருக்க முடியும் என்று கருதுகிறேன்.

நம்பள்கி said...

[[எடுத்துக்காட்டாக மஞ்சள் காமாலைக்கு கீவாநல்லி இலை மருந்துன்னு சொன்னாங்க. இப்ப ஆங்கிலேய மருத்துவக்காரர்களுமே இதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.]]

இந்திய allopathy மருத்தவர்கள் என்று சொல்லுங்கள்!. சரியான புரிதல் இல்லமால் இதை மஞ்சள் காமாலைக்கு மருந்து என்று கூறுகிறார்கள். மஞ்சள் காமலை வியாதியல்ல. Jaundice: yellowing of the skin. உடம்பினுள் உள்ள வியாதின் அறிகுறி மட்டுமே. வைரஸ் மூலம் வரலாம்; obstructive jaundice என்று ஒரு வகையும் உண்டு. இன்னும் பல வகைகள்.

Virus: Crisis and lysis.
இந்தியாவில் சுகாதாரம் இல்லாத நாடுகளில் காணப்படும். வைரஸ் மூலம் வரும் வியாதி ஒய்வு எடுத்து உணவுக்கட்டுப்பாடு மூலம் தான் 'தானே' குணமாகும். வைரஸ் உடம்பிருந்து தானே இறங்கிவிடும்.

NIH, CDC, Mayo clinic தளங்களுக்கு செல்லவேண்டாம். விக்பெடியாவிலே பல சுட்டிகள் கொடுத்து கட்டுரை உள்ளது.

Ref: http://en.wikipedia.org/wiki/Hepatitis_A
There is no specific treatment for hepatitis A. Sufferers are advised to rest, avoid fatty foods and alcohol (these may be poorly tolerated for some additional months during the recovery phase and cause minor relapses), eat a well-balanced diet, and stay hydrated.

Synopsis: நம்ம ஊரில் வரும் மஞ்சள் காம்லைக்கு மருந்து கிடையாது; தானாகவே குணம் ஆகும். கீழா நெல்லி கீரை ஈரலுக்கு நல்லது; அவ்வளவு தான். வியாதியை குணமாக்காது.
கீழா நெல்லி கீரை எட்டிக்காய் கசப்பு!

இந்திய டாக்டர்கள் புண்ணியத்தால்.Liv 52 -வை மருந்தாக்கி விட்டார்கள்.

தருமி said...

மன்னிக்கணும், பழனி. கந்தசாமி/ இது உங்க field. இருந்தாலும் நீங்க சொல்றதை முற்றாக நான் மறுக்கிறேன். அது எப்படி வெறும் Hit and Miss முறையில் இத்தனை சரியான மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியும். நாலைந்தில் ஒன்று என்றால் நீங்கள் சொல்லும் Hit and Miss முறை சரியாக இருக்கும். ஆனால் ஒரு மருந்துக்கு இந்த மூலிகை என்பதை எப்படி experimental-ஆகக் கண்டுபிடிக்க முடியும்? முடியவே முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது.
கொஞ்சம் permutation combination பற்றி யோசித்துப் பாருங்கள்.

தருமி said...

சரி டாக்டர். நான் கொடுத்த ஒரு மருந்து தவறு என்க. ஆனால் இன்னும் எத்தனையோ மருந்துகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வழி முறை என்னவாக இருக்கும்?

நம்பள்கி said...

பெனிசிலின் கண்டுபிடித்த முறை; எங்கோ படித்தது.
அடிபட்ட காயத்தின் மீது காளன்கள் (?) வைத்து ரொட்டியை வைத்து கட்டுப் போட்டார்கள். காயம் ஆறியது. இன்று வரை பெனிசிலின் மாதிரி ஒரு மருந்து கண்டுபிடிக்கவில்லை.

நம் ஊரில் மண்ணை வைத்தும் கட்டுப் போடுவர்கள்; சாணியை வைத்தும் கட்டுபோட்ட்டர்கள். ஏன் என்றுதெரியவில்லை? டெட்டனஸ் வந்து ஜன்னி கண்டது. இப்படி மனித சக்திக்கு முயற்சிக்கு அளவில்லை. இப்படிதான் கண்டு பிடித்திருப்பர்கள்.

காக்கை உக்காரா பணம் பழம்: வியாதி தானாக குணம் ஆனாலும், பூஜை போட்டு யாகம் செய்தினால் ஆச்சு என்று ஒரு பக்கம் காசு லவுட்டும் கூட்டம். பரிகாரம் இப்படி.

உலகத்தில் உள்ள விழுக்காடு 70 மருந்துகள் இயற்கையில் தான் கிடைகிறது. சுடுகாட்டிலேயே கிடைக்கும் நித்ய கல்யாணியில் இருந்து கேன்சருக்கு மருந்து தயாரிக்கிறார்கள்; அதற்காக நித்ய கல்யாணியை அப்பிடியே சாப்பிடமுடியுமா?

இங்கு தான் Statistics வருகிறது. இந்தியாவில் கேவலம் எந்த மருத்தவ கல்லூரி பாடத் திட்டத்திலும் புள்ளியியல் பாடம் கிடையாது. அவனால், எப்படி ஆராய்ச்சி கட்டுரையைப் படித்து புரிந்து கொள்ளமுடியும்?

They just cannot critique. கட்டுரையின் Conclusion மற்றும் மருந்து விற்பவன் சொல்வதையும் கேட்டு காலட்சேபம் ஓடுது!

Anonymous said...

நானும் இந்த கேள்விக்கான விடையை பல நாட்களாக தேடிகொண்டிருக்கேன் .

குவாரா வில் உங்கள் கேள்வியை பதிவு செய்தால் பல விடைகள் கிடைக்கலாம் .

http://www.quora.com/Medical-Research

டிபிஆர்.ஜோசப் said...

நோய் வருதா டாக்டர் சொன்னத சாப்டமா நோய் போயி சவுக்கியமா இருக்கமா? இதான் முக்கியம். நோய்க்கும் மருந்துக்கும் என்ன தொடர்புன்னு தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப்போறோம்? இப்படியும் கேக்க தோனுதே :)

தருமி said...

joseph
சரியான வங்கி ஆளா இருக்கீங்க ... காசு .. பணம் .. மணி .. பாட்டு நினைவுக்கு வருது!

தருமி said...

teabench
செய்திக்கு நன்றி. குவாரா பற்றித் தெரியாது. தகவலுக்கு நன்றி

Anonymous said...

தருமி,

கேள்வி கேட்டால் லிங்கை பகிரவும்.

தருமி said...

//teabench said...

தருமி,

கேள்வி கேட்டால் லிங்கை பகிரவும்.//

??????????????

Anonymous said...

குவாராவில் கேள்வியை பதிந்தால் லிங்கை பகிரவும்.

வால்பையன் said...

சிம்பன்சி குரங்குகள் தனக்கு உடல் சரியில்லைனா ஒருவகை மூலிகையை தேடிப்போய் சாப்பிடுமாம், நாய்க்கு செரிக்கலைனா புல்லை சாப்பிட்டு வாந்தி எடுக்குமாம். யார் சொல்லி கொடுத்துருப்பா?

Post a Comment