*
இந்து மதம் எங்கே போகிறது?
அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
*****
*****
எனது 15 வது வயதில் ஆரிய சமாஜம் உருவானது. தாயனந்த சரஸ்வதி என்பவரால் வட நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இவ்வமைப்பு பிராமணர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. (82)
‘வேதத்தை பிராமணர்கள் தங்களது தொழிற்கருவியாக பயன்படுத்தி விட்டனர். .. வேதத்தை பிராமணர்கள் மட்டுமல்ல எல்லோரும் படிக்க வேண்டும். வேதப் பொருள்களை அனைவரும் உணர வேண்டும். இதை எதிர்த்து அந்த பிராமண சபை உருவானது.
பெரியாரும் இந்தக் காலத்தில் பிராமணர்களை, பிராமணீயத்தை கடுமையாக விமரிசித்து வந்தார். (83)
பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம். இந்த புனிதமான கோயில்களுக்குள் சூத்திரனோ, பஞ்சமனோ ஒரு அடி எடுத்து வைத்தால் கூட அனுஷ்டானங்கள் கறைப்பட்டு விடும். – இது ஆகம கொள்கை.
இந்த சமயங்களில் பல ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. (100)
இந்த நிலைமையில் தான் பண்டித ஜவஹர்லால் நேருஜியின் மந்திரி சபையில் ‘ஹிந்து கோடு பில்’ கொண்டு வருவது பற்றிய ஆலோசனையில் இறங்கினார்கள்.(103)
பல எதிர்ப்புகளுக்கு நடுவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்று நேருஜி சட்டம் கொண்டு வந்தார். (107)
இந்தியா முழுவதும் உள்ள மடங்களை ஒன்று சேர்க்க சங்கராச்சாரியார் முயன்றார்;
ஆனால் வட இந்தியா முழுவதும் உள்ள மடங்கள் ‘சாது சம்மேளன்’ என்ற பெயரில் ஒன்றாகின.
அடுத்து தமிழ்நாட்டு மடங்களை ஒன்று சேர்க்க முனைந்தார். Association of Mutts ஒன்று உருவானது. (110)
ஒவ்வொரு மடமும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை இவ்வமைப்புக்குக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தினால் ஒற்றுமை குலைந்தது.
ஒரு கூட்டத்தில் மதுரை ஆதினம் ஒரு பிரச்சனையைக் கிளப்பினார். கோவில்களைக் கட்டியது மன்னர்கள். அதற்கு உதவி செய்தது, உழைப்பு கொடுத்தது, வியர்வை சிந்தியது, வீர்யம் கொடுத்தது, கல் சுமந்தது, மண் சுமந்தது எல்லாம் பிராமணர் இல்லாதோர். ஆனால் பூசை செய்வது மட்டும் பிராமணர்களா? கல் சுமந்து, மண் சுமந்து கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க பூசை செய்ய தடையா? வடநாட்டு காசியில் போல், இங்கும் அவரவர் பூசை செய்து கொள்ள விட வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெற வேண்டும். அதற்கு இந்த அமைப்பு உதவ வேண்டும் என்றார். (113)
ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழனாக வடக்கேயிருந்து வெற்றி சூடி திரும்பி வரும்போது, வடக்கிலிருந்த நாதமுனி என்ற வித்வானைத் தன்னுடன் அழைத்து வந்து, அவரைத் தன் குருவாக ஆக்கிக் கொண்டான். நாதமுனியின் பரம்பரை சோழ அரசோடு இணைந்து வந்தது. நாதமுனியின் பேரன் ஆளவந்தார். இந்த ஆள்வாரின் பேத்தியின் பிள்ளை விசிஷ்டாத்வைதம் கண்ட ஸ்ரீராமானுஜர்.(115)
மண்டையோட்டு வழிபாட்டுக் கலாச்சாரம். சார்வாகன் என்பவரின் நாஸ்திக கூட்டம், பெளத்த இருட்டு, ஜைனம், ஆதிசங்கரர் போதித்த மாயாவாதம் என்ற அத்வைதம் - எல்லாவற்றையும் அடக்கி ஒடுக்க வந்தவர் ஸ்ரீராமானுஜர். (117)
உலகில் எதுவுமே மாயை என்பது தவறு. பகவானுக்கு ரூபம் உண்டு. அவன் வைகுந்தத்தின் வசிக்கிறான். அவன் தான் ஜீவாத்மாவாகிய நம்மையும் உலகத்தையும் படைத்தான். பகவானின் உருவம் மனசு கற்பித்ததில்லை. அவன் நிஜமான உருவம் கொண்டவன் . பக்கத்தில் பிராட்டியோடு வைகுண்டத்தில் இருக்கும் பகவானை நாமெல்லாம் தியானிக்க வேண்டும் என்பது தான் ராமானுஜ உபதேசம்.
உபநிஷத்தின் வியாக்யானமான ப்ரம்மசூத்திரம் முக்கியமான வேதாந்த நூல்.
இதைப் படித்து உரை எழுதுவது அதாவது பாஷ்யம் பண்னுவது மிகக் கடினமான காரியம். அப்படிப்பட்ட ப்ரம்ம சூத்திரத்திற்கு சங்கரர் உரை எழுதினார். அது மத்வ பாஷ்யம் எனப்பட்டது.
அதே ப்ரம்ம சூத்திரத்திற்கு ராமானுஜரும் உரை எழுதினார். அது ஸ்ரீ பாஷ்யம் என்று மேன்மையாக அழைக்கப்படுகிறது. (119)
’பகவானின் உருவத்தை நித்யமும் தியானித்து உபாஸனம் செய்பவர்களுக்குத் தான் மோட்சம். இது பிராமணர்களுக்கு மட்டும் தான். பிராமணர் அல்லாத சூத்திரர்கள் மோட்சம் வேண்டும் என்றால் ... இந்தப் பிறவியை இப்படியே கழித்து, அடுத்த ஜென்மாவில் பிராமணனாக பிறக்க பகவானை பிரார்த்திக்க வேண்டும்.
ஒரு வேளை அடுத்த பிறவியில் பிராமணர்களாகப் பிறக்க அவர்களுக்கு பிராப்தம் கிடைக்குமானால் வேத உபநிஷத்துகளைக் கற்று பகவானைத் தொடர்ந்து தியானித்து மோட்சம் பெறலாம்.
அது போலவே ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்திரர்கள். எனவே அவர்கள் அடுத்த ஜென்மாவில் ப்ராமண புருஷனாக அவதரித்தால் தான் மோட்சத்துக்கு பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும்’, என்கிறார் ராமானுஜர்.(121)
திருமணச் சடங்குகளில் ரிஷிகளும், கோமாமிசமும் (பசு மாட்டுக் கறி) அவஸ்யமானவை என்கிறது வேத விதி. (146)
இப்போதும் திருமணங்களில் கோமாமிசம் சாப்பிடவேண்டிய சடங்குக்கான மந்த்ரத்தைச் சொல்கிறார்கள். அப்போது பெண்ணும் மாப்பிள்ளையும் தேங்காய் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்! காலத்தின் மாற்றத்தால் சடங்குகளை மாற்றிக் கொண்ட பிராமணர்கள் மந்த்ரங்களை மட்டும் இன்னும் விடாப்பிடியாய் பிடித்திருக்கிறார்கள்.(147)
பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது. பெண்களுக்கு உபநயனம் உள்ளிட்ட எவ்வித மந்த்ர சம்ஸ்காரங்களும் கிடையாது.(171)
8 வயசிலேயே கல்யாணம் பண்ணிக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் குடித்தனம் நடத்து. இல்லாவிடில், ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை .. உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப் படுமே கழிவு, அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படி ஒரு தண்டனையைப் பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை. (164)
(இந்த தண்டனையைப் பற்றியேதும் எழுத வேண்டாமென நினைத்து விட்டு விட்டேன். ஆனால் பின்னூட்டத்தில் ஒருவர் //இந்துமதத்தை இவ்வளவு வக்கிர வர்ணனை செய்வதால் உங்கள் சார்பு நிலைதான் தெரிகிறது. .நான் அரண்மனையைப் பற்றிச் சொல்கிறேன். நீங்களோ அதிலுள்ள கழிவறையை கிளறிவிட்டு நாறுகிறதே என்கிறீர்கள் என்ன சொல்வது?// என்று வருந்தி எழுதியிருந்தார். ஆகவே விட்டுப் போனதை மறுபடியும் எழுதி “அரண்மனை”யின் அழகைப் பற்றி விலாவரியாக எழுதும்படியாகி விட்டது..)
வேதமே இப்படி சொல்கிறதென்றால் மநு சும்மா விடுமா? வேதத்தை விட இன்னும் தெளிவாகச் சொல்கிறது. விதவைகளை சிதையிலேயே வைத்து தீர்த்துக் கட்டு என உத்தரவிடுகிறது. (173)
விதவைகளுக்குக் மொட்டை அடிக்கக் கூடாது என்று வடகலை வைணவர்கள் வலியுறுத்தினார்கள். அதெல்லாம் இல்லை மொட்டையடித்தே ஆகவேண்டும் என்பது தென்கலைக்காரர்களின் தரப்பு வாதம்.
வடகலை, தென்கலை என்றால் யார் யார்? பிரம்மத்துவம் எனப்படும் கடவுள் தன்மை பெருமாளின் துணைவியான பிராட்டி அதாவது தாயாருக்கு உண்டா என்ற பிரச்சனை எழுந்தது. பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் பங்கு கிடையாது; உதவும் சக்தி கிடையாது. வெறும் சிபாரிசு மட்டும் செய்ய முடியும் என்பது தென்கலைக்காரர்களின் வாதம். இதற்கு ‘புருஷகாரத்வம்’ என்பது சம்ப்ரதாயப் பெயர். இதனாலேயே விதவை மொட்டையடிக்க வேண்டும் என்றார்கள் இவர்கள். வட கலைக்காரர்களோ பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் குறிப்பிட்ட பங்கு இருக்கிறது என்று நம்பினார்கள்.இதனாலேயே இவர்கள் விதவைகள் மொட்டையடிக்க வேண்டியதில்லை என்றார்கள்.
இன்னும் 24 விஷயங்களின் அடிப்படையில் இந்த இருவரும் கருத்து வேறுபாடு கொண்டவர்கள். பின்பு 40 விஷயங்கள் என்று வளர்ந்து விட்டது.(174)
*
39 comments:
தருமிய்யா,
அக்னிஹோத்ரம் ,இந்து மதத்தை ஆய்வதை விட வைஷ்ணவத்தை தான் அய்கிறார் போல இருக்கே?
#//இதைப் படித்து உரை எழுதுவது அதாவது பாஷ்யம் பண்னுவது மிகக் கடினமான காரியம். அப்படிப்பட்ட ப்ரம்ம சூத்திரத்திற்கு சங்கரர் உரை எழுதினார். அது மத்வ பாஷ்யம் எனப்பட்டது.//
சங்கரர் ,சைவ சமயத்தினை வளர்க்க வந்தவர் அவர் ஏன் , வைணவ்வ பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதப்போனார்? ஒரு வேளை எழுதி இருக்காரானு சரிப்பார்க்கணும்.
ஆனால் மத்வ பாஷ்யம் எழுதியது "சிரி மத்வாச்சாரியார், அவர் தான் த்வைத பிரிவை உருவாக்கியது.
# வேதங்களை விட அதிக திரிபுகளை உள்ளடக்கியது உபநிஷத்துகள், அதுக்கும் மேல கோல்மால் கொண்டது பிரம்ம சூத்திரம் போன்றவை, இவை எல்லாம் ,அக்கால "சாமியார்களின்" வசதிக்கு உருவாக்கி கொண்ட ,அரேபிய ஷரியா/ஹதீத்கள் போல.
# வட கலை,தென்கலை என்பது என்னமோ மொட்டை அடிப்பதில் வந்த பிரச்சினையால் உருவானது போல சொல்லி இருக்கார்.
முதலில் தென்னிந்தியா நோக்கி வந்த ஆர்யர்கள் தென்கலை ஆகிப்போனவர்கள், வடக்கே தங்கி விட்டவர்கள் வட கலை.
கிழக்கு கடற்கரைப்பகுதி என பார்த்தால் துங்கபத்திராவுக்கு வடக்கே இருப்பவர்கள். வடகலை,அதுக்கு கீழ இருப்பவர்கள் தென்கலை.
மேற்கு கடற்கரையில் நர்மதைக்கு மேல் பகுதி வடகலை, அதுக்கு கீழ தென்கலை.
ஆனால் நடுவில கொங்கன் பகுதியில் இருக்கும் பிராமணர்கள் "கொங்கணாஸ்தா பிராமனர்கள்" அவர்களும் வடகலைனு சொல்லிக்கிறாங்க.அதுல ஒரு சர்ச்சையும் இருக்கு கொங்கன் பகுதியில் இருப்பவர்கள் பிராம்மணர்களே அல்லனு அவ்வ்!
சரஸ்வத் பிராமாணர்கள் என தனிப்பிரிவு ஆக சொல்கிறார்கள் ,அவங்களே இருப்பதிலே உயர்ந்தவர்கள்னு சொல்லிப்பாங்க ,ஆனால் நர்மதை நதிப்பக்கம் இருப்பவர்கள் , அவர்களைப்பார்த்தாலே குளிக்கணும்னு சொல்லிப்பாங்கனு ,மராத்தா வரலாறு படிக்கும் போது குறிப்பிட்டிருந்தது.
ஏன் மராத்தா வரலாற்றில் சரஸ்வத் பிராமணர்கள் வராங்கனு பார்க்கிறிங்களா, சத்ரபதி சிவாஜி ஒரு சரஸ்வத் பிராமணர், ஹி...ஹி பால் தாக்கரே ஒரு சரஸ்வத் பிராமணர் , இப்போ ஏன் சிவ சேனா ,சிவாஜினு ,பால் தாக்கரே அரசியல் செய்தார்னு புரிஞ்சி இருக்குமே அவ்வ்!
இதுல ஒரு யூத சதி இருக்கு(சு.பி சுவாமிகள் உடனே ஓடி வருவாரே) , சரஸ்வத் பிராமணர்கள் எனப்படுபவர்கள், யூத டயாஸ்போராவின் போது இந்திய வந்த யூதர்கள்னு சொல்லப்படுகிறது.
யூதர்கள் வந்த கப்பல் விபத்தில் சிக்கி ,கொங்கன் கடற்கரையில் ஒதுங்கவே அங்கேயே செட்டில் ஆகிட்டாங்களாம். பின்னாளில் கொங்கணாஸ்தா /சரஸ்வத் பிராமனர்கள், பரசுராமர் வழி வந்தவர்கள்னு வரலாறும் உருவாக்கிக்கொண்டதாக போகுது கதை.
அக்னிஹோத்திரம் ஒன்னும் சரியா இந்து மதத்தினை ஆய்வது போல தெரியலை,குன்சா தொன்ம கதைகளை தான் அடிச்சு விட்டு இருப்பார் போல.
//சிவாஜி ஒரு சரஸ்வத் பிராமணர், //
சிவாஜி ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்றுதானே படித்துள்ளேன். என்னண்ணா பிளேட்டை மாத்தரேள்! :-)
//யூதர்கள் வந்த கப்பல் விபத்தில் சிக்கி ,கொங்கன் கடற்கரையில் ஒதுங்கவே அங்கேயே செட்டில் ஆகிட்டாங்களாம். பின்னாளில் கொங்கணாஸ்தா /சரஸ்வத் பிராமனர்கள், பரசுராமர் வழி வந்தவர்கள்னு வரலாறும் உருவாக்கிக்கொண்டதாக போகுது கதை.//
இந்த சம்பவம் எனக்கு புதுசு!
சு.பி.,
//சு.பி.,
//முதலில் 720 வது பதிவு படித்து பதில் சொல்லி விட்டு இங்கு வாருங்கள் // என்று சொன்னேனே ... !
இன்னைக்கி இதப் படிச்சீங்களா? Boko Haram means “western education is sinful”
சுபி.சுவாமிகள்,
வாங்கண்ணா ,வணக்கங்ணா!
//சிவாஜி ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்றுதானே படித்துள்ளேன். என்னண்ணா பிளேட்டை மாத்தரேள்! :-)//
பிளேட்டை திருப்பி போட்டால் தான் சமூக புரட்சியே நடக்கும்!
சிவாஜியின் எழுச்சிக்கு முன்னர் , கொங்கணாஸ்தா மக்களை 'தாழ்த்தப்பட்டவர்களிலும்" கீழான நிலையில் நடத்தினார்கள் அக்கால பிராமணர்கள், எனவே எழுச்சியடைந்து நாங்களும் பிராமணர்கள் என "தங்களை" நிறுவிக்கொண்டார்கள்.
இன்று வரைக்கும் அவர்களுக்கு "பழையகால பிராமணர்கள்" சடங்கு செய்யமாட்டார்கள், கொங்கணாஸ்தா பிராமணர்களுக்கு அவர்கள் பிரிவு புரோகிதர்களை வச்சு தான் எல்லாம். நகர்ப்புறங்களில் காசுக்கு எல்லா வேலையும் நடக்கும் என்பது தனிக்கதை.
இது முள்ளை முள்ளால் எடுக்கும் டெக்னிக், நீ எங்களை எத எல்லாம் வச்சு கீழ்மைப்படுத்தினாயோ ,அதை எல்லாம் நாங்களும் செய்து மேம்பட்டவர்களாக்கிறோம்னு செய்தது.
வேதம் படிப்பதும் ,பூநூல் போட்டுப்பதும் தான் உயர்வானது ,அவனே பிராமணன் என்றால் அதை நாங்களும் செய்யக்கத்துக்கிறோம், பிராமணர்கள் ஆகிட்டோம்னு சொல்லிட்டாங்க கொங்கணாஸ்தா பிராமணர்கள் :-))
சிவாஜி ஆட்சியைப்பிடிக்கலைனா நீங்க சொன்னாப்போல ,அவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களாகவே வச்சிருந்திருப்பாங்க "பழையகால பிராமணர்கள்"!
# வேதத்தினை எழுதினதே(தொகுத்ததே) வியாசர் என சொல்லும் பிராமணர்கள் ,கோத்திரம் என சொல்லும் போது மட்டும் 'பரத்வாஜ கோத்திரம்' என ஆர்த்தடாக்ஸ் பிராமணர்கள் சொல்லிக்கொள்வார்கள்,வியாசரை கழட்டி விடுவதை பற்றி யோசியுங்களேன்?
கோத்திரத்தை வச்சு "ஒருவரின் பிராமண "pedigree" நிர்ணயம் செய்யவே.
பராசரர் என்ற சாமியாருக்கும், சத்யவதி என்ற மீனவப்பெண்ணுக்கும் பிறந்தவர் வியாசர் எனவே வேதமே எழுதினாலும் "செகண்ட் கிளாஸ் பிராமணர் " :-))
# உங்களுக்கு வேதம், புராணம் எல்லாம் கொஞ்சம் தெரியுது, ஓரு கயித்த எடுத்து தோள்மேல போட்டுக்கிட்டு "அரேபிய பிராமணர்" என சொல்லிடுங்க, சில காலம் போச்சுனா ,அது அப்படியே நிலைச்சுடும்.
பிராமணீய ஆதிக்கத்தினை ஒழிக்க இதுவே எளிதான தீர்வு!
# வரலாறு படிச்சா மட்டும் போதாது ,எப்படி படைக்கப்படுகிறது என்பதை புரிந்துக்கொண்டால் ,நாமும் மாற்றியமைக்கலாம்.
நம்மள ஒரு கோயிலில் வரக்கூடாதுனு ஒருத்தன் சொன்னால் ,நாம ஒரு கோயிலை கட்டி அதுல அவன வரக்கூடாதுனு சொல்லிடனும் ,ஆனால் முட்டா சனங்க ,சொந்த காசப்போட்டு கோயிலைக்கட்டி ,எவன் உள்ள விட மாட்டேன்னு சொன்னானோ அவனையே மறுபடியும் அதுல மணியாட்ட கூப்பிடுதுங்க! உருப்படுமா நாடு? அதான் விளங்காம போயிட்டு இருக்கு நம்ம நாடு!
# அது சரி ,உபாத்தியார் ஒரு வீட்டுப்பாடம் கொடுத்தாரே அதை செய்வோம்னு அக்கறை கொஞ்சமாவது இருக்கா? 720வது பதிவ படிச்சு பதில் எழுதுங்க ,இல்லைனா அடுத்த தடவை முட்டிப்போட சொன்னாலும் சொல்லுவர் உபாத்தியார் :-))
// ,சொந்த காசப்போட்டு கோயிலைக்கட்டி ,எவன் உள்ள விட மாட்டேன்னு சொன்னானோ அவனையே மறுபடியும் அதுல மணியாட்ட கூப்பிடுதுங்க! உருப்படுமா நாடு? அதான் விளங்காம போயிட்டு இருக்கு நம்ம நாடு!//
மிகச் சரி..
///த்ரபதி சிவாஜி ஒரு சரஸ்வத் பிராமணர், ஹி...ஹி பால் தாக்கரே ஒரு சரஸ்வத் பிராமணர்/// தகவல் தவறு ...
சிவாஜி போன்ஸ்லே வம்சத்தவர். (மராத்தா - martial caste)
மராத்தா -- இதில் வேறு பிரிவுகள் உள்ளன. - நிம்பால்கர் , மொஹிதே , சவான்
பால் தாக்கரே காயஸ்தர் வகுப்பு. இவர் முன்னோர்கள் மராத்திய அரசில் போர் வீரர்களாகவும், தளபதிகளாகவும் இருந்தனர்.
பேஷ்வாக்கள் தான் சித்பவன் பிராமணர்கள் ..
///த்ரபதி சிவாஜி ஒரு சரஸ்வத் பிராமணர், ஹி...ஹி பால் தாக்கரே ஒரு சரஸ்வத் பிராமணர்/// தகவல் தவறு ...
சிவாஜி போன்ஸ்லே வம்சத்தவர். (மராத்தா - martial caste)
மராத்தா -- இதில் வேறு பிரிவுகள் உள்ளன. - நிம்பால்கர் , மொஹிதே , சவான்
பால் தாக்கரே காயஸ்தர் வகுப்பு. இவர் முன்னோர்கள் மராத்திய அரசில் போர் வீரர்களாகவும், தளபதிகளாகவும் இருந்தனர்.
பேஷ்வாக்கள் தான் சித்பவன் பிராமணர்கள் ..
//ஏன் மராத்தா வரலாற்றில் சரஸ்வத் பிராமணர்கள் வராங்கனு பார்க்கிறிங்களா, சத்ரபதி சிவாஜி ஒரு சரஸ்வத் பிராமணர், ஹி...ஹி பால் தாக்கரே ஒரு சரஸ்வத் பிராமணர் , இப்போ ஏன் சிவ சேனா ,சிவாஜினு ,பால் தாக்கரே அரசியல் செய்தார்னு புரிஞ்சி இருக்குமே அவ்வ்!//
வவ்வால்,
தரவுகள் தர முடியுமா?
சத்ரபதி சிவாஜி போசலே என்ற சத்திரிய சாதி எனவும், பால் தாக்ரே கயஸ்த்தா என்கிற பண்டார சாதி எனவும் விக்கி சொல்கிறதே!
தென்னிந்தியாவில் பூசை செய்யும் உரிமையைப் பிடுங்கிக் கொண்ட பார்ப்பணர்கள் வட இந்தியாவில் அதை உரிமை கொண்டாடாததேன்? # டவுட்டு
//சிவாஜி ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்றுதானே படித்துள்ளேன். என்னண்ணா பிளேட்டை மாத்தரேள்! :-)//
இது நம்ம் திராவிட பகுத்தறிவு கும்பல் கிளப்பிவிட்ட கதை.
//அக்னிஹோத்திரம் ஒன்னும் சரியா இந்து மதத்தினை ஆய்வது போல தெரியலை,குன்சா தொன்ம கதைகளை தான் அடிச்சு விட்டு இருப்பார் போல.//
நக்கீரனில் வந்த தொடரில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். பரபரப்பாகவும் மேம்போக்காவும் தான் இருக்கும்.
//சொந்த காசப்போட்டு கோயிலைக்கட்டி ,எவன் உள்ள விட மாட்டேன்னு சொன்னானோ அவனையே மறுபடியும் அதுல மணியாட்ட கூப்பிடுதுங்க! //
இங்க மட்டுமா வெளிநாட்டில் போய் கோவில் கட்டினாலும், மணியாட்ட இவர்களைத்தான் கூப்பிடுகிறார்கள்.
//# வேதத்தினை எழுதினதே(தொகுத்ததே) வியாசர் என சொல்லும் பிராமணர்கள் ,கோத்திரம் என சொல்லும் போது மட்டும் 'பரத்வாஜ கோத்திரம்' என ஆர்த்தடாக்ஸ் பிராமணர்கள் சொல்லிக்கொள்வார்கள்,வியாசரை கழட்டி விடுவதை பற்றி யோசியுங்களேன்?
கோத்திரத்தை வச்சு "ஒருவரின் பிராமண "pedigree" நிர்ணயம் செய்யவே.//
கோத்திரம் என்பது அவர்கள் பூர்வீகத்தைக் குறிப்பது தானே. அதை எப்படி இதில் தொடர்பு படுத்துகிறீர்கள்.
நீங்கள் சொல்வது போல் வியாசர் மட்டுமல்ல, வால்மீகி, விசுவாமித்திரருக்கும் அந்த முக்கியத்துவம் கிடைப்பத்திலை.
//// ,சொந்த காசப்போட்டு கோயிலைக்கட்டி ,எவன் உள்ள விட மாட்டேன்னு சொன்னானோ அவனையே மறுபடியும் அதுல மணியாட்ட கூப்பிடுதுங்க! உருப்படுமா நாடு? அதான் விளங்காம போயிட்டு இருக்கு நம்ம நாடு!//
மிகச் சரி..//
சொந்தமாக சாமி வைச்சி கும்பிட்டா அதிகாரத்தில் உள்ளவரின் சாமிக்கு தனியாக வரிகட்டியாக வேண்டுமே. படிக்க வழியே இல்லாத வெளியுலக தகவல் தொடர்பு இல்லை என்ற அளவில் உள்ள மக்களுக்கு ஆககூடிய செயலா?
ஏத்துக்தாக சாமியை ஏன் வலுக்கட்டாயாமாக கும்பிடனும். ஏன் மாத்தியோசிக்கவில்லை?
இந்துமதம் கங்கையைப் போன்றது. பார்ப்பவனின் இடம்,.விருப்பு, வெறுப்புகளுக்கு தகுந்தவாறு காட்சியளிக்கும். கங்கையைப் போன்று விரிந்து பெரிதாக காலம்காலமாக தனது மக்களுக்கு நன்மை பயக்கிறது. கங்கை எங்கே போகிறதோ அது போல் இந்துமதம் பெருமதத்திற்கு இட்டுச் செல்லும். மிகவும் பொறுமையானது. சமயத்தில் சீற்றமும் கொள்வதுண்டு. அதன் எல்லைகளையும் போக்கையும் காலம்தான் தீர்மானிக்கின்றது. கங்கோத்ரியில் நின்று கொண்டு கங்கையாம் கங்கை, என் காலடியைக் கூட நனைக்க முடியாத சிறு ஓடையை நதி என்கிறார்கள் என்று சிரிப்பவனையும், “இந்துமதம் எங்கே போகிறது” என்பவர்களையும் என்னால் ஒன்றாகத்தான் பார்க்க முடிகிறது. கங்கையைப் பார்க்க வேண்டுமென்றால் கல்கத்தாவில் பார்க்க வேண்டும். இந்துமதத்தை இன்றைய நிலையில் பார்க்கவேண்டும் அதை விடுத்து மனுகாலத்தில் பார்ப்பவன் கங்கோத்ரியில் நின்று பார்த்து கங்கையை அளக்கும் அரைவேக்காடகத்தான் இருப்பான். கங்கை பல நதிகளின் சங்கமத்தில் உருவானது போல் இந்துமதமும் பல மதங்களை ஒன்றினைத்து உருவானது. கங்கை கடலை அடையுமுன் பல கிளைகளாகப் பிரிவது போல் இந்துமதத்தில் இருந்து பலமதங்கள் தோன்றின. மதம் என்பது நதியைப் போல் மனிதனுக்கும், அவன் பிறந்த மண்ணிற்கும், வாழ்க்கை முறைமைக்கும் ஆனது அதில் கடவுள் என்பது ஒரு சிறு பகுதி. ஆகவே மண்ணின் மைந்தர்கள் அந்த மண்ணின் மதத்தைப் பழிப்பதும் வெறுப்பதும் நமது தாய் தந்தையருடனாகிய முன்னோரை அறிவற்ற மூடர்கள் என்று பழிப்பதாகும். மதம் மாறுதல் என்பது தந்தை சரியில்லை என்பதால் வேறொருவரை தந்தையாக ஏற்றுக் கொள்வதற்கு சமம்.
chandru
நீங்கள் கங்கையைப் பற்றிச் சொன்னவை அனைத்து நதிகளுக்கும் பொருத்தமானதே/// அதை கங்கைக்கு மட்டுமே ஏன் உரித்தாக்குகிறீர்கள்?
//இந்துமதத்தில் இருந்து பலமதங்கள் தோன்றின.//
பலமதங்களை இணைத்து இந்து மதம் உருவானது .
தாய் தந்தையரும், முன்னோரும் பல விஷயங்களில் மூடர்களாக இருந்தால் அதை ஒத்துக் கொள்வதில் தவறேது.
குலாம்,முருகன் ஆகியோரே,
அறைகுறையா எதுனா தெரிஞ்சுக்கிட்டு வந்து தரவு இருக்கானு கேட்க வேண்டியது,அப்புறமா "தரவே" காட்டினாலும் அதை விட்டுவிட்டு அடுத்ததுக்கு தாவ வேண்டியது.
போஸ்லே என்பதை ஜாதி என சொல்ல முடியாது அது ஒரு இனக்குழு ,ஆனால் இப்ப ஜாதியாக்கிட்டாங்களோனு நினைக்கிறேன்.
சிவாஜி வகையில வருபவர்கள் எல்லாம் , போன்ஸ்லே, கெயிக்வாட், ஹோல்கர், சிந்தியா, ஷிண்டே ஆகிய ஐந்து பிரிவு ஆகும்,எல்லாருமே சரஸ்வத் பிராமணர்கள் என்ற பொதுப்பிரிவில் அடக்கம். இதுல சித்பவன், காயஸ்தா , கொங்கணஸ்தா ,தேசாஷ்தா என பல வகையில் சரஸ்வத் பிராமணர்களில் பிரிவு உள்ளது. இவங்க எல்லாரையும் பொதுவா பஞ்ச திராவிட பிராமணர்கள் அதாவது விந்திய மலைக்கு தெற்கே உள்ளவர்கள் என வகைப்படுத்துவதுண்டு.
இந்த இனக்குழுக்களே ஒன்னுக்குள்ள ஒன்னு தாங்கள் தான் உயர்ந்தவர்கள்னு சொல்லிப்பதும் உண்டு.
ஆனால் பொதுவாக சரஸ்வத் பிராமணர்களை "வைதீக பிராமணர்கள்" கீழாக நடத்துவது வழக்கம்.
சிவாஜி தலையெடுத்ததும் "கொங்கணாஸ்தாவின் எல்லா பிரிவும் மகாராஷ்ட்ராவில் பெரிய அளவில் முன்னுக்கு வந்துவிட்டார்கள்.
சிவாஜின் ஆன்மீக குரு ராம் தாஸ் சுவாமி, அவரை வளர்த்தது "Dadoji Kondev Gochivade" இருவருமே தேசாஷ்த பிராமணர்கள்,காரணம் போஸ்லே என்பது அப்பிரிவில் வரும் ஒரு இனக்குழுவே.
கொங்கணஸ்தா மற்றும் தேசாஸ்த பிராமணர்கள் இருவரும் பங்காளிகள் ஆனால் ஒரே சரஸ்வத் என சொல்லிக்கொள்பவர்கள். ரெண்டுப்பிரிவுக்கும் சண்டை உண்டு, ஒருவர் கோயிலில் இன்னொருவரை விட மாட்டாங்க அவ்வ்!
கொங்கணாஸ்தா என்றால் கடற்கரை பகுதி கொங்கண் என்றால் மேற்காம் அதாவது மேற்கு கடற்கரை,தேசாஸ்தா என்றால் உள்நாட்டு பகுதி அவ்ளோ தான் ,அதாவது அக்காலத்தில பிரிஞ்ச பிரிவுகள்.
சிவாஜிக்கு இரு பிரிவிலும் மனைவிகள் உண்டு, சாம்பாஜி என்ற மகன் கொங்கணாஸ்தா பிரிவு என்பதால் பின்னர் வந்த பேஷ்வாக்கள் எல்லாமே கொங்கணாஸ்தா வகை ஆகி,மராத்தா ஆட்சியில் செல்வாக்காகிவிட்டனர்.
ஏகப்பட்ட உள்க்குத்துக்கள் வரலாறெங்கும் உள்ளன, சும்மா மேம்போக்காக படித்துவிட்டு நான் எதையும் சொல்வதில்லை.
குட்டிப்பிசாசு,
//பூர்வீகத்தைக் குறிப்பது தானே//
பூர்வீகம் என்றால் சொந்த ஊரையா சொல்ல வரீங்க? அப்போ ஏன் பரத்வாஜ என சாமியார் பேரை சொல்லிக்கிறாங்க.
இதுல ஒரு பம்மாத்து என்னவெனில் ,அவரிடம் வேதம் கற்ற பரம்பரைனு சொல்ல என்பார்கள் ,அப்போ ஏன் கல்யாணத்துக்கு பார்க்கனும்? இல்லை மாப்பிள்ளைக்கு வேதம் தெரியுதானு டெஸ்ட் வைப்பாங்களா அவ்வ்!
பெடிகிரீ என அதுக்கு தான் குறிப்பிட்டேன்.
# வால்மீகி, விசுவாமித்திரர் எல்லாம் அவாள் இல்லையே.
ஆனால் விசுவாமித்திரர் ராஜரிஷி அதாவது சத்ரிய சாமியார் என்பதால் "கவுசிகன்" என்ற பழைய பேரில் ஒரு கோத்திரம் கொடுத்து வச்சிருக்காங்க ,அதுவும் ஒரு அடையாளங்காட்டவே.
மற்றபடி ,பரத்வாஜ, காஷ்யப என உயர்வான சாமியார்களின் வழியில் தான் கோத்திரமே ,சப்த ரிஷிகள் குருப்பாம் அவாள்லாம் அவ்வ்!
# நம்ம அடிமை மனப்பாங்கு வெளிநாட்டுக்கு போனாலும் போகாதுல, தெய்வக்குத்தம் ஆகிடுமேனு பயப்படுறாங்க ,அதான் அங்கேயும் மணியாட்ட அவாள்களே தேவைப்படுது அவ்வ்!
சந்"துரு",
//அந்த மண்ணின் மதத்தைப் பழிப்பதும் வெறுப்பதும் நமது தாய் தந்தையருடனாகிய முன்னோரை அறிவற்ற மூடர்கள் என்று பழிப்பதாகும். மதம் மாறுதல் என்பது தந்தை சரியில்லை என்பதால் வேறொருவரை தந்தையாக ஏற்றுக் கொள்வதற்கு சமம்.//
ஒரு அப்பன் ,அவனோட ஒரு மகனை கீழப்போட்டு கழுத்துல ஏறி மிதிச்சுக்கிட்டே ,வயசுக்கு வந்த மகளோட தாவணிய உருவுறானாம், அதைப்பார்க்கிற இன்னொரு பாசக்கர மகன் ,அப்பனுக்கு எதுக்கு கஷ்டம்னு அவனும் தாவணிய உருவ உதவுனானாம் ,இப்படித்தானே உங்க ' அப்பங்காரன்" என்ன கொடுமை செய்தாலும் ஆதரிப்பீங்க அவ்வ்!
கொடுமை செய்றதை திருத்த முயல்வதால் எல்லாம் எதுவும் "பழிச்சொல் வராதுங்க"
ஒரு வேளை நீங்க பாசக்கார மகனா இப்படில்லாம் செய்வீங்களோ?
மதத்தின் பெயரால் குறிப்பிட்ட இனப்பெண்கள் மாராப்பு போடக்கூடாது என சொல்வதும் ,சில பெண்களை ஊருக்கே போதுவாக்குவதும், பல உழைக்கும் மக்களை கிணற்றுல தண்ணிக்கூட பிடிக்காமல் தடுப்பதும் செய்தால் அம்மததை தோளில் தூக்கி சுமக்கணுமா இல்லை ,குழித்தோண்டி புதைக்கணுமா?
சொல்லுங்க சந்"துரு"வாள்!
சிவாஜி சித்பவன் பிராமணர் இல்லை என்று
ஜாதுநாத் சர்கார் , சதீஷ் சந்திரா , chaurasia ஆகியோர் என்று கூறுகின்றனர்.
க்ஷத்ரிய தலைவன் என்று தான் அவர் பட்டங்கள் கூறுகின்றன ..
மேலும் காக பட்டர் இவரை சிசொடியா ராஜபுத்ர வம்சம் என்கிறார்.
சிவாஜி கால பேஷ்வாக்கள் தேசாஸ்தர் வகுப்பினர்.....உண்மை
ஆனால் பிற்கால பேஷ்வாக்கள் , (மகாராஜா சாஹு) காலம் முதல் பேஷ்வாக்கள் சித்பவன் பிராமணர்கள் . பாலாஜி விஸ்வநாத் காலம் முதல் பட்டம் பரம்பரை பட்டம் ஆகிறது.
parag tope எழுதிய குறிப்புகளிலும் இந்த தகவல்கள் உள்ளன ...
சில farman களும் சிவாஜி ராஜபுத்ர வம்சம் என்கின்றன ....
-----
பால் தாக்ரே யின் வாழ்க்கை வரலாறும் பார்த்தேன் .. அவர் ckp எனும் சந்திர வம்ச காயஸ்தர் எனும் வகுப்பு என்கிறது ...
என் மராத்திய நண்பர் உதவியுடன் சில மராத்திய நூல்கள் சிலவற்றை பார்த்தோம்(பழைய சாம்னா இதழ்கள் ). அவற்றிலும் நீங்கள் குறிப்பிட்ட சிவாஜி, தாக்ரே ஆகியோர் பிராமணர்கள் என்ற தகவல் இல்லை.
-----
நீங்கள் குறிப்பிடும் தகவல்கள் எந்த ஆசிரியர் எழுதிய புத்தகத்தில் உள்ளன தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்.
ஏதேனும் புது ஆவணங்கள் கிடைத்துள்ளனவா ?? இருந்தால் தெரிவிக்கவும் ...
சிவாஜி சித்பவன் பிராமணர் இல்லை என்று
ஜாதுநாத் சர்கார் , சதீஷ் சந்திரா , chaurasia ஆகியோர் என்று கூறுகின்றனர்.
க்ஷத்ரிய தலைவன் என்று தான் அவர் பட்டங்கள் கூறுகின்றன ..
மேலும் காக பட்டர் இவரை சிசொடியா ராஜபுத்ர வம்சம் என்கிறார்.
சிவாஜி கால பேஷ்வாக்கள் தேசாஸ்தர் வகுப்பினர்.....உண்மை
ஆனால் பிற்கால பேஷ்வாக்கள் , (மகாராஜா சாஹு) காலம் முதல் பேஷ்வாக்கள் சித்பவன் பிராமணர்கள் . பாலாஜி விஸ்வநாத் காலம் முதல் பட்டம் பரம்பரை பட்டம் ஆகிறது.
parag tope எழுதிய குறிப்புகளிலும் இந்த தகவல்கள் உள்ளன ...
சில farman களும் சிவாஜி ராஜபுத்ர வம்சம் என்கின்றன ....
-----
பால் தாக்ரே யின் வாழ்க்கை வரலாறும் பார்த்தேன் .. அவர் ckp எனும் சந்திர வம்ச காயஸ்தர் எனும் வகுப்பு என்கிறது ...
என் மராத்திய நண்பர் உதவியுடன் சில மராத்திய நூல்கள் சிலவற்றை பார்த்தோம்(பழைய சாம்னா இதழ்கள் ). அவற்றிலும் நீங்கள் குறிப்பிட்ட சிவாஜி, தாக்ரே ஆகியோர் பிராமணர்கள் என்ற தகவல் இல்லை.
-----
நீங்கள் குறிப்பிடும் தகவல்கள் எந்த ஆசிரியர் எழுதிய புத்தகத்தில் உள்ளன தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்.
ஏதேனும் புது ஆவணங்கள் கிடைத்துள்ளனவா ?? இருந்தால் தெரிவிக்கவும் ...
கடந்த 20ஆயிரம் வருடங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இன்றும் தன்னை தொடர்ந்து மாற்றிக் கொண்டு,ஆட்சிகளுக்கு அடிபணியாமல், அதிகாரத்தில் அழிந்துவிடாமல் வளர்ந்து வரும் இந்துமதத்தை இவ்வளவு வக்கிர வர்ணனை செய்வதால் உங்கள் சார்பு நிலைதான் தெரிகிறது. நானோ விதிகளைப்பற்றிப் பேசுகிறேன் நீங்களோ விதிவிலக்குகளைப் பற்றி பேசுகிறீர்கள்.நான் அரண்மனையைப் பற்றிச் சொல்கிறேன். நீங்களோ அதிலுள்ள கழிவறையை கிளறிவிட்டு நாறுகிறதே என்கிறீர்கள் என்ன சொல்வது? இதைத்தான் தலைகீழ் பார்வை என்கிறார்களோ அவ்வ்வ்வ்!!! .கழுகுப் பார்வைக்கு மாறுங்கள்.
சந்துருவிற்காக இந்தப் பின்னூட்டத்தை பதிவில் சேர்த்து விட்டுள்ளேன்.
8 வயசிலேயே கல்யாணம் பண்ணிக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் குடித்தனம் நடத்து. இல்லாவிடில், ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை .. உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப் படுமே கழிவு, அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படி ஒரு தண்டனையைப் பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை. (164)
(இந்த தண்டனையைப் பற்றியேதும் எழுத வேண்டாமென நினைத்து விட்டு விட்டேன். ஆனால் பின்னூட்டத்தில் ஒருவர் //இந்துமதத்தை இவ்வளவு வக்கிர வர்ணனை செய்வதால் உங்கள் சார்பு நிலைதான் தெரிகிறது. .நான் அரண்மனையைப் பற்றிச் சொல்கிறேன். நீங்களோ அதிலுள்ள கழிவறையை கிளறிவிட்டு நாறுகிறதே என்கிறீர்கள் என்ன சொல்வது?// என்று வருந்தி எழுதியிருந்தார். ஆகவே விட்டுப் போனதை மறுபடியும் எழுதி “அரண்மனை”யின் அழகைப் பற்றி விலாவரியாக எழுதும்படியாகி விட்டது..)
அடஅடா கழுகு பார்வைக்கு மாறுங்கள் என்றால் கழுகாகவே மாறி "அழுகிய செத்த எலியை " பார்க்கிறீர்கள்.அது சரி நீரின் அளவே நீராம்பல். கங்கையை ஏன் இழுக்கிறீர்கள் என்று கேட்டீர்கள். நான்தான் சொல்லி விட்டேனே கங்கையை காண கல்கத்தாவிற்கு வரவேண்டும் என்று. கங்கோத்திரியில் நின்று கொண்டு கங்கையை அளக்கும் மடமை என்று கோடிட்டு காட்டினேன். கங்கோத்திரி என்றால் கங்கை உற்பத்தியாகும் இடம் என்பதையாவது புரிந்து கொண்டீர்களா? ஆனாலும் வக்கிரத்தில் சளைத்தவர்களல்ல என்ற எண்ணத்துடன் மீண்டும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இந்துவுக்கு தெரியாத ஒன்றை எடுத்து குழாயடிச் சண்டை ரேஞ்சுக்கு எழுதுகிறீர்கள். பிறந்த குழந்தையின் போட்டோவை பார்த்து "அய்யோ நிர்வானம்" என்று அலறினால் அது கண்டிப்பாக கடைந்தெடுத்த வக்கிரபுத்தியின் உச்சம்தான். நீங்கள் கூறியுள்ள தண்டனை கடைசியாக எப்பொழுது யாருக்கு யாரால் வழங்கப்பட்டது என்ற சான்றுகள் வைத்திருக்கிறீர்களா?
chandru
முதலும் கடைசியுமாக ஒரு ‘அறிவுரை’. மரியாதையாகப் பேசி, எழுதிப் பழகுங்கள். உங்கள் அளவிற்கு எழுத என் மனம் ஒப்புவதில்லை.
நீரின் அளவே நீராம்பல்.--- எல்லோரும் உங்களைப் போல் அறிவுக்கனல்களாக இருக்க முடியுமா என்ன?
//கங்கோத்திரி என்றால் கங்கை உற்பத்தியாகும் இடம் என்பதையாவது புரிந்து கொண்டீர்களா?//
அப்டிங்களா?
//இந்துவுக்கு தெரியாத ஒன்றை எடுத்து குழாயடிச் சண்டை ரேஞ்சுக்கு எழுதுகிறீர்கள். //
உங்கள் அறிவுக்கனலுக்கு முன்னால் ஒரு சிறிய செய்தி: இங்குள்ளவை என் கருத்துகளல்ல. எழுதியதை இங்கு தருகிறேன். தவறென்றால் அதைத் தவறு என்று சொல்லுங்கள். உங்கள் அளவிற்கு இறங்கி குழாயடிச் சண்டை போட எனக்கு மனமில்லை!
//பிறந்த குழந்தையின் போட்டோவை //
இங்கே ‘பிறந்த குழந்தை’ எது? கடைசியாகச் சேர்த்தது தான் பிறந்த குழந்தையோ?
//சான்றுகள் வைத்திருக்கிறீர்களா? //
உங்கள் வாதங்களை நிரூபிக்க மநுவில் இது இலலை என்று தரவோடு சொல்லுங்கள். என்னிடம் ஏன் சான்றுகளுக்கு வருகிறீர்கள்?
அளவை மீறாதீர்கள் - இருவருக்கும் நல்லது.
முருகன்,
//சிவாஜி சித்பவன் பிராமணர் இல்லை என்று //
நான் எங்கே சித்பவன் என சொன்னேன்?
கொங்கணாஸ்தா/சரஸ்வத் என சொன்னேன்.
சித்பவன் என்பவர்கள் ,குறிப்பாக பகுதியை வைத்து சொல்லிக்கொண்டால் உண்டு, கொங்கணாஸ்தா/ சரஸ்வத் பிராமணர்கள் என்பதே பொதுப்பெயர்.
இவர்களை பரசுராமர் வழி வந்தவர்கள் என சொன்னதை கவனிக்கவில்லையோ, அவர்கள் எல்லாம் "ஷத்ரிய பிராமணர்களாம்"!
சிவாஜியை ஷத்ரிய பிராமணராக்கிட்டாங்க ,அதுக்கேத்தா போல கலியாணமும் செய்து வாரிசுகளை உருவாக்கிட்டாங்க.
இப்போ கூட போஸ்லே என்ற பிரிவினர் என்ன வகையில சொல்றங்கனு மகாராஷ்ட்ராவில கேட்டுப்பார்க்கலாமே, எல்லாருமே ஷத்ரிய பிராமணர் என்பார்கள்.
சிவாஜியோட அம்மா ஜிஜாபாய் யாதவ குலம்(ஜாதவ்), அதனால் தானோ என்னவோ அவங்க அப்பா ,பையன் பிறந்த பின் கூட திரும்ப வரலை, தனியா பையனை வளர்த்து ஆளாக்கினாங்க. அப்போ கொங்கணாஸ்தா பிராமண குருக்கள் மூலம் வளர்க்கப்பட்டவரே சிவாஜி!
வரலாறை சரியா படிங்கய்யா, சும்மா வந்து எலிமெண்டரி லெவலில் கேள்விக்கேட்டுக்கிட்டு இருக்காதிங்க!
சிவாஜியோட மனைவிகள் எல்லாம் எப்படி முடிவானங்கனு படிச்சு பாருங்க, பல வகையிலும் திருமணம் செய்துக்கொண்டார்.சிவாஜியின் மனைவி சைவா பாய் ஒரு கொங்கணாஸ்தா சத்ரிய பிராமணர்(நிம்பள்கர்) அவரோட பையன் தான் ஷாம்பாஜி.
போஸ்லே என்பது நிம்பள்கரின் ஒரு பிரிவு.பிராமண அந்தஸ்தினை உருவாக்கிக்கொண்டார்கள் அல்லது அப்படியாக்கிவிட்டார்கள் எனலாம்.
சிவாஜி கொங்கணாஸ்தா ,தேசாஷ்தா பிராமணர்களுக்கிடையே ஒரு இணைப்பு பாலம்!
Dadoji Konddeo ,தேசாஷ்த பிராமணர் தான் சிறு வயது முதல் வளர்த்தார்.
Moropant Nilkanth Pingle என்ற இன்னொரு தேசாஸ்த பிராமணர் தான் சிவாஜியின் முதல் பேஷ்வா.
பாலாஜி விஷ்வநாத ராவ் காலத்தில் கொங்கணாஸ்தா பேஷ்வாக்கள் ,மராத்தா ஆட்சியை பிடித்துவிட்டார்கள்.
இப்படி ரெண்டுப்பக்கம் கையிலும் எப்படி பேஷ்வா பதவியை "சத்ரிய" சிவாஜி வம்சம் கொடுத்துவிட்டு போகுமா?
அப்போ சிவாஜியின் சத்ரிய வம்சத்தில் இருந்து அடுத்து ஆளே வராமல் போயிட்டாங்களா?
இரு வகையிலும் மண உறவுகள் வைத்து ரெண்டுப்பக்கமும் ஆட்சியில் வரக்காரணம் யார்?
சிவாஜியின் காலத்துக்கு பிறகே சமூக அந்தஸ்தில் சத்ரிய பிராமணர்கள் என உயர்ந்தார்கள் ,அது வரையில் ஒடுக்கப்பட்டிருந்தார்கள்.
//chandru
முதலும் கடைசியுமாக ஒரு ‘அறிவுரை’. மரியாதையாகப் பேசி, எழுதிப் பழகுங்கள். உங்கள் அளவிற்கு எழுத என் மனம் ஒப்புவதில்லை.// திரு சந்துரு அவமரியாதையாக எதையும் எழுதியதாக கருதஇயலவில்லை அவரது கருத்தை வலிமைபடுத்த கூறியவை அவமரியாதையாக கருதக்கூடடியதாகவும் இல்லை.
//அளவை மீறாதீர்கள் - இருவருக்கும் நல்லது. // அனைவருமே அறிந்து செயல்பட்டால் அறிவார்ந்த விவாதங்கள் கிடைக்கும்.
தருமிய்யா,
//அளவிற்கு இறங்கி குழாயடிச் சண்டை போட எனக்கு மனமில்லை!
//
அட சந்"துரு"வாள் சொல்வதையெல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ளலாமா? அவர் ஒரு மிகப்பெரிய "புராணீர்கர்" நெறைய புராண அறியல் எல்லாம் சொல்வார் , நகைச்சுவையாக இருக்கும்.
எதாவது மடக்கி கேட்டால் இப்படித்தான் வியாக்கியானம் செய்வார் ,ஆனால் சரியான பதில் வராது.
அவருக்கு " அம்பேத்கர் எழுதிய "who were the shudras" புக்கை படிக்க சிபாரிசு செய்வோம், அதுக்கு அப்புறமாச்சும் "மனுவின்" திருகுதாளங்கள் புரியுதா எனப்பார்ப்போம்.
வேதம் என்பதே டுபாக்கூர் என்றால் அதை விட அயோக்கியத்தனமான டுபாக்கூரை மனு என்றப்பெயரில் எழுதி வச்சிருக்காங்க.
ரிக் வேதத்தில் பெருமால் என்பவர் , இந்திரனின் சபையில் வாத்தியம் வாசிப்பவர் , இந்திரனே முதன்மைக்கடவுள்னு இருக்கு, அதை உட்டாலக்கடியாக்கி , பெருமாலை முதன்மைக்கடவுளாக்கியது யார்?
லிங்க வழிப்பாடு என்பது பண்டைய இந்தியர்களின் நடுகல் வழிப்பாடு , சிலை உருவமெல்லாம் கிடையாது, அதை சிவன்,நடராஜன் என ஆக்கி ஏமாற்றியது யார்?
ரெண்டாயிரம்ம் ஆண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலைகூட கிடைக்குது ஏன் ,சிவன் ,நடராஜன், பெருமால் என சிலைகள் கிடைக்கலை?
காரணம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில அந்த மாதிரி சாமிகளே இல்லை ,எவனும் கோயில் கட்டலை :-))
2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வழிப்பட்டது லிங்கமும் ,காளியுமே.
காளியினை துர்க்கையாக்கி பிராமணியம் ஆக்கினார்கள், லிங்கத்தினை சிவன் ,நடராஜன் ஆக்கிட்டாங்க.
வரலாறும் தெரியாம ,புராணமும் தெரியாம சந்"துரு"வாள் கிளம்பிட்டார் ,ஆம்பல் ,எலிப்புழுக்கைனு சொல்லிக்கிட்டு அவ்வ்!
Ant
இதே மரியாதையை சந்துரு உங்களுக்குக் கொடுத்தால் அன்போடு நீங்கள் அதை வாங்கிக் கொள்வதில் எனக்கு மறுப்பில்லை.
//அவமரியாதையாக எதையும் எழுதியதாக கருதஇயலவில்லை //
அது அவரவர் தோலின் தன்மையைப் பொறுத்தது.
//அனைவருமே அறிந்து செயல்பட்டால் அறிவார்ந்த விவாதங்கள் கிடைக்கும். //
உங்கள் ‘கட்டப்பஞ்சாயத்திற்கு’ நன்றி. ஆனால் அது எனக்குத் தேவையில்லை. வேறு எங்காவது அதை வைத்துக் கொண்டால் மகிழ்வேன்.
இந்து மதம் எங்கே போகிறது பதிவு நிறைய பின்னூட்டங்கள் பெறுகிறதே. அப்ப பின்னூட்டத்தில் நிறைய புதிய செய்திகள் தெரிஞ்சிக்கலாம். இந்து மதம் எங்கே போகிறது? புத்தகம் படிச்சிருக்கேன் நிறைய மறந்து விட்டது, உங்க பதிவு மூலம் அதை மீண்டும் படிப்போம்.
இப்போ கூட போஸ்லே என்ற பிரிவினர் என்ன வகையில சொல்றங்கனு மகாராஷ்ட்ராவில கேட்டுப்பார்க்கலாமே, எல்லாருமே ஷத்ரிய பிராமணர் என்பார்கள்.
//// --- இல்லை ...
வரலாறை சரியா படிங்கய்யா, சும்மா வந்து எலிமெண்டரி லெவலில் கேள்விக்கேட்டுக்கிட்டு இருக்காதிங்க! /////// ------
இவ்வளவுபடித்த நீங்கள் ,,, படித்த புத்தகத்தை சொல்லலாம் ....
நாங்களும் படித்து தெரிந்து கொள்வோம்......
பதில் கிடைக்குமா ?????
///////////////////////////
அக்னிஹோத்ரம் அவரும், மூல நூல்கள், சமஸ்கிரத செய்யுள் -- எந்த வரி ஆகியவற்றை கூறவில்லை தன்னுடைய நூல்களில் .
இதை அவரிடம் கடிதம் எழுதி கேட்டோம்.... கடைசி வரை எந்த புத்தகம் , எந்த வரி,
புத்தக ஆசிரியர் ஆகியவற்றை குறிப்பிடவில்லை.
இதை கொடுத்து இருந்தால் , மிகவும் உபயோகமாக இருந்து இருக்கும்....
/////////////////////////
முருகன்,
நான் பல சந்தர்ப்பங்களில் தனித்தனியாக படித்தவற்றை சொல்கிறேன் ,நோகாமல் வந்து புக்கு பேரு , பக்கம் சொல் என்கிறீர்கள், எத்தனையோ முறை தரவுகளை அளித்துள்ளேன் ,எனவே தேடி அளிப்பது ஒன்றும் பெரிதல்ல.
சிவாஜியின் "பூர்வாஷ்ரமம்" ஒரு மர்மமானதே. அவரை ஷத்ரியர் என்பதற்கு கூட ஆதாரமில்லை, காகப்பட்டர் சொன்னார் என்பதே புரட்டு என்கிறார்கள்.
மேலும் அக்காலத்தில் முகலாயர்கள் பலருக்கும் ஜாகீர்கள் என வரி வசூலிக்கும் உரிமை வழங்கியுள்ளார்கள்,அதை வைத்துக்கொண்டு ,ராஜ பரம்பரை" என பலரும் சொல்லிக்கொள்கிறார்கள்.
சிவாஜி கொங்கண் பகுதியை சேர்ந்தவர் , பின்னாளில் பிராமணிய மயமாக்கப்பட்டுவிட்டார் என்பதே சரியான ஒன்றாக இருக்க முடியும்.
இதனைப்பற்றி விரிவாக எழுதிய நூல்,
Shivaji - Hindu king in Islamic India - James Laine
இதனை மகாரஷ்ட்ராவில் தடை செய்து விட்டார்கள், இதன் அப்ஸ்ட்ராக்ட் மட்டுமே படித்ததால் , குறிப்பிட தயங்கினேன்.
மேலும் இணையத்தில் பல "கட்டுரைகள்' உள்ளன.
சத்ரப்,சத்ரபி என்றால் மண்டலம் என கிரேக்க மொழியில் பொருள் என்றும், இரான் பகுதியை சேர்ந்த சிந்தியர்கள், இந்து நதிக்கு மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியேறியதால் ,அதே வகையில் சத்ரபதி என்ற பட்டம் கொடுக்கப்பட்டது என "மராத்திய மொழியியல் ஆய்வாளர்களே சொல்கிறார்கள்.
சிந்திக்கள் என இப்பவும் ஒரு இனக்குழு இருக்கு, அவர்கள் பார்சிக்கள் போல.
சத்ரியர் என்றால் தான் ஆட்சிக்கு வர முடியும் என்பதால் சத்ரியராகவும், பிராமணர்களின் ஆதரவு வேண்டும் என அவர்களுக்கும் சாதகமாகவும் நடந்துக்கொண்ட ஒருவர் ஷிவாஜி. கடைசியில் கொங்கணாஸ்தாக்கள் தங்களுக்கானவராக மாற்றி இப்போ அரசியல் செய்துகொண்டுள்ளார்கள்.
மகாராஷ்ராவில் உள்ள "குன்பி" என்ற ஒடுக்கப்பட்ட மக்களும் சிவாஜி எங்க பரம்ம்பரைனு சண்டைக்கு நிற்கிறார்கள்,இதான் அங்கே அரசியல்.
சிவாஜிக்கு பிராமண முறைப்படி குலம்,கோத்ரம் எல்லாம் குடுத்து தான் இப்பவும் சமஸ்கிருத ஆர்வலர்கள் எழுதுறாங்க, மராத்தா கோத்ராக்கள் 96 இருக்கு என பட்டியலை இங்கு காணவும்.
சிவாஜிக்கு கவுசிக கோத்ரம் என போட்டிருக்கிறார்கள் :-))
http://the-royal-maratha-warriors.blogspot.in/
//அக்னிஹோத்ரம் அவரும், மூல நூல்கள், சமஸ்கிரத செய்யுள் -- எந்த வரி ஆகியவற்றை கூறவில்லை தன்னுடைய நூல்களில் .//
சில வரிகள் சமஸ்கிருதத்தில் கொடுத்துள்ளார். அவைகளை நான் இங்கே பதிவிடவில்லை.
@தருமி said... Monday, March 17, 2014 11:00:00 PM
//இதே மரியாதையை சந்துரு உங்களுக்குக் கொடுத்தால் அன்போடு நீங்கள் அதை வாங்கிக் கொள்வதில் எனக்கு மறுப்பில்லை. // மரியாதையை எதிர்பார்ப்பதில்லை. அவர் அவமரியாதையாக எதையும் கூறவில்லை என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. //அது அவரவர் தோலின் தன்மையைப் பொறுத்தது ... உங்கள் ‘கட்டப்பஞ்சாயத்திற்கு’ நன்றி. ஆனால் அது எனக்குத் தேவையில்லை. வேறு எங்காவது அதை வைத்துக் கொண்டால் மகிழ்வேன்.// உங்கள் தோலின் தன்மை ”கட்டப்பஞ்சாயத்து” தெளிவாக்குறது அதை சோதனைக்குள்ளாக்குவது எமது நோக்கமல்ல. பின்னூன்டங்களின் வழி கிடைக்கும் மதங்கள் தொடர்பான ஆதரபூர்வ தகவல்களுக்காகவே தளத்திற்க்கு வந்தோம் கருத்து திணிப்பை ஏற்க அல்ல! எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு! !! !!! இருப்பினும் எமது கருத்துகளை வெளியிட்டமைக்கு தங்களுக்கு நன்றிகள்.
ஐயா தருமி ,
தொடர்ச்சியாக இந்த புத்தகத்தின் கட்டுரையை வெளியிடுவதன் நோக்கம் என்ன?
இந்த புத்தகம் உண்மையை கூறினால் பரவாயில்லை. ஆனால் இதில் பெரும்பாலும் பொய்யாகவே உள்ளதாக தெரிகிறது ...ஒவ்வொரு பதிவிலும் வவ்வாலும் இதையே கூறுகிறார்.
உங்களுக்கும் இதில் பெரும்பாலும் பொய்யே உள்ளது என்பதும் தெரியும் என்றே எண்ணுகிறேன்.
பொய்யான் ஒன்றுக்கு தாங்கள் விளம்பரம் தருதல் ஏற்ப்புடையதல்ல.
இது உங்கள் தளம் தொடர்ந்து வெளியிட உங்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு.
சிந்தித்து செயல்படுங்கள்.
நீங்கள் இதை தட்டச்சு செய்து வெளியிடுவதாக கூறியுள்ளீர்கள். இதோ உங்களுக்கு இந்த புத்தகத்தின் வலைத்தளம் தொடர்ந்து வெளியிடுவதாக இருந்தால் வெட்டி ஓட்டலாம்.
http://thathachariyar.blogspot.in/
நன்றி
பிரச்னை என்னவென்றால் எனக்கும் தோல் மென்மையாக இருப்பதால் எளிதில் உணர்ச்சி வசப்பட்டுவிடுவேன் .ஒருவர் "பாசக்கார மகன்" என்று விவரிக்கும் போது உங்களுக்கு அவமரியாதை பற்றி நினைப்பு வரவில்லை. உங்கள் பதிவிலும் உள்குத்து இல்லை என்றால் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .நேற்றைய விதிகள் இன்று செல்லுபடியாகாத காலத்தில் வாழ்ந்து கொண்டு இன்னும் மனுவைப் படித்துக் கொண்டு மனுவை முன்னிறுத்திப் பேசுவது மடமையாகத் தெரிகிறது. ஆட்சி பீடத்தில் அமர்ந்து கொண்டு அதிகாரத்தின் உச்சியில் நின்ற, வெள்ளையனின் மதமாற்ற சூழ்ச்சிக்கு ஆளாகியும் , மாக்ஸ்முல்லரின் கட்டுக்கதைகளால் மூளைச்சலவை செய்யப்பட்டும் ,மேற்கத்திய மத அஸ்திவாராத்தில் கல்வி புகட்டப்பட்டும், மதமாற்றத்திற்கு ஆளாகியும், ஆளாகாமலும், இந்து மதத்திற்குள் இருக்க வெட்கப்படும், தமிழக நாத்திகப் பகுத்தறிவுவாதிகளுக்கு தோதான மனுவை இந்துக்களுக்கு எதிராக , அவனது பாணியில், ஒற்றை மைய அதிகாரத்தில் கற்பித்ததை உண்மை என்று நம்பும் இவர்களை காலம்தான் கடைத்தேற்ற வேண்டும். இதிகாசங்களுக்கு முந்தியது மனு. மற்ற மதத்தினர் கற்பனையில் கூட யோசிக்க முடியாத காலத்தைக் காட்டிலும் முந்தியது. ஆனால் அது இந்தியாவெங்கும் கோலோச்சியதாக எந்த ஆதாரமும் இல்லை. அது ஒரு கடவுள் அர்ப்பணிப்பு கொண்ட, ஆள்பவர்களின் நன்மதிப்புகொண்ட ,கல்வி அறிவு கொண்ட ஒரு சதவீத குழுவினருக்கான தனிப்பட்ட சட்டங்கள்( ஸ்மிருதி). இது போல் பல ஸ்மிருதிகள் இருந்துள்ளது.மனு-ஸ்ம்ருதி இந்து சமூகத்தை வரையறுத்ததாக பிரிட்டிஸாரால் கதைக்கப்பட்டது. ஆனாலும் இந்துமதத்தை ஒழிக்க எது தேவையோ அதைத்தான் வெள்ளையன் தனது அதிகாரபலத்தினால் பிரபலப் படுத்தினான்.
(மேலும் தெரிந்து கொள்ள http://www.jeyamohan.in/?p=37863. )
இந்துக்கள் அதைப் பழமையின் சின்னமாகத்தான் சொந்தம் கொண்டாடுகிறர்கள், போற்றுகிறார்கள் என்பதை இவர்களுக்கு உதாரணங்கள் மூலம் சொன்னால் புரியாதா? அல்லது புரியாதமாதிரி நடிக்கிறார்களா?.நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் மனுவில் இல்லை என்று வாதாட வரவில்லை ஆனால் வெள்ளையன் கற்பித்த மனுவே இந்துக்களுக்கு அன்னியமாகத்தான் இருந்திருக்கிறது என்கிறேன். முன்னோர்கள் மூடர் என்பதை ஒத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் அதற்காக அடுத்த வீட்டுக்காரனுடன் சேர்ந்து கொண்டு தாய்தந்தையரை மானபங்க படுத்துபவனின் வக்கிரத்தில் தவறு உள்ளது. மாக்ஸ் முல்லர் ஏற்றி மந்திரித்து விட்ட மடமையில் வாழுபவர்கள், அவனின் வரலாற்றுத் திருகுதாளம் அம்பலமான பிறகும் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்ற தங்கள் கொள்கையில் மாறாமல் இருப்பதற்கு இன்றைய கல்வி முறையும் காரணமாகும். இந்தியாவில் கிறித்தவமதம் பரப்பப்பட ஆரம்பித்த போதே இந்துமதத்தின் மூலநூல்களை விருப்பபடி திரித்து அவற்றுக்குள் கிறித்தவத்தைக் கொண்டு வரும் முயற்சிகள் ஆரம்பமாகி விட்டன. அதன் காரணமாக இந்த ஒற்றை மைய அதிகாரத்தின் அடையாளமாக மனுவை கற்பனையாக முன்னிறுத்திச் சென்றான். ஏனென்றால் அவன் புத்திக்கு எட்டிய மதமெல்லாம் ஒற்றை மைய அதிகாரம் கொண்டவை என்பதால் இந்து மதத்தையும் அவ்வாறுதான் இருக்கமுடியும் என்று அதிகாரத்தின் மூலம் கற்பித்தான். அதிகாரம் கையில் இருந்ததால் ஒரு தொண்மையான மிகப்பெரிய சமூகத்தின் வரலாற்றை மாற்றி அமைத்து அம்மக்களை கொண்டே அச்சமூகத்தையும் அவர்களது உயர்ந்த பண்பாட்டையும், அழிக்கமுடியும் என்பதற்கு நிகழ்கால சாட்சிகளாக விளங்கிக் கொண்டிருங்கள் தவறேதுமில்லை.
//// chandru said...
கடந்த 20ஆயிரம் வருடங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இன்றும் தன்னை தொடர்ந்து மாற்றிக் கொண்டு,ஆட்சிகளுக்கு அடிபணியாமல், அதிகாரத்தில் அழிந்துவிடாமல் வளர்ந்து வரும் இந்துமதத்தை ////
என்னாது !!!! 20 ஆயிரம் வருடங்களா ???? அந்த இந்து யாருப்பா ???? அதான் அந்த 19 ஆயிரம் ஆண்டுக்கு முன்ன இருந்தவன் ????
//...இதிகாசங்களுக்கு முந்தியது மனு. மற்ற மதத்தினர் கற்பனையில் கூட யோசிக்க முடியாத காலத்தைக் காட்டிலும் முந்தியது. //
என்ன எழுதிறீங்க...மற்ற மதத்தினர் கற்பனைகளில் யோசிக்க முடியாத காலம் உங்கள் கற்பனையில் யோசித்துவிட்டீர்கள் என்று சொல்கிறீர்கள்? அவ்வளவு ஸ்பெஷல் மூளையா ஆண்டவன் கொடுத்துவிட்டான்? அப்படியென்றால் அது எந்தக்காலம்? இதிகாசத்துக்கு முந்தியதென்றால் இதிகாசங்களில் காலங்கள் எவை?
சந்துரு...இந்துமதத்தைப்பற்றிப்பேசும் முன் கொஞ்சம் அம்மதத்தின் வர்லாற்று அடிப்படை அறிவை கேட்டு, படித்து தெரிந்து வளர்த்த பின் பேசலாமே? இதுகாசங்களின் காலங்களே முறபட்டவை என்றும் மனு வெகுபின்காலத்திலே - அதாவது பிராமணர்கள் மீண்டும் தலையெடுத்த குப்தர்கள் கால்த்தில் தோன்றி, அப்பிராமணர்களை அனைத்துமக்களும் அடிபணிந்து மதிக்கவேண்டுமென்ற நோக்கத்திலே புனையப்பட்ட இந்துசட்ட நூலது. அச்சட்டங்கள் பிராமணர்களுக்கு ஒருதலைச்சார்ப்பாக இருந்து இந்துமதத்துகே கேடுவிளைவித்ததால், அது இன்று ஏறகப்படவில்லை. அவ்வளவுதான்.
Post a Comment