Friday, April 11, 2014

743. ஷியா – சன்னி பிரிவுகள் ... 1* ‘சமாதானம்’ என்ற பொருள் கொண்ட இஸ்லாம் என்ற மதம் முகமது நபியால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது காலத்திலேயே பெரும் இஸ்லாமிய நாடாக உருக்கொண்டது. முகமது 622லிருந்து 632 வரை ஏறத்தாழ 99 போர்க்களங்களைக் கண்டு அவரது இஸ்லாமியப் பகுதியை உருவாக்கினார்.

ஆனால் அவரது இறப்பை ஒட்டியே அவரால் உருவான இஸ்லாம் சன்னி – ஷியா என்ற இரு பகுதிகளாக உடைந்தது. இதற்குக் காரணம் நபியின் இடத்தை யார் கைப்பற்றுவது என்பதில் தோன்றிய தகராறே காரணம். 1400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிளவு இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஷியா பிரிவினர் 20 விழுக்காட்டிற்கும் கீழே தான் உள்ளனர். ஆனாலும் ஈராக், ஈரான், பாஹ்ரெய்ன் என்னுமிடங்களில் ஷியா அதிகமாக உள்ளனர்.

சன்னிகள் நபியின் வழிவந்தோரில் தகுதியானவர் பதவியேற்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் ஷியா என்ற சிறு பகுதியினர் முகமதுவின் மகளை மணம்புரிந்த அலி பதவிக்கு வரவேண்டுமென விரும்பினர். நபி இறந்த உடனேயே இந்தப் பிளவு ஏற்பட்டு விட்டது.இதில் சன்னிப் பிரிவினரின் விருப்பப்படியே அபு பக்கர் முதல் கலிபா ஆனார். அபு பக்கரை அடுத்து அவரது தேர்வின் படி உமர் அடுத்த கலிபா ஆனார். அடுத்து உத்மன் மூன்றாவது கலிபா ஆனார். இவர் கொல்லப்பட்டு, நான்காவது கலிபாவாக அலி வந்தார். இதனை எதிர்த்து பலர் போர் தொடுத்தனர்.

போராட்டங்களின் முடிவில் அலி கொல்லப்பட்டார். இதனை எதிர்த்து அலியின் மகன் ஹுசைன் ஒரு சிறு படையோடு இன்றைய ஈராக், அன்றைய கர்பாலா போர்க்களத்தில் டமாஸ்கஸ் கலிபாவின் படைகளோடு மோதினார். ஆனால் அவர் படை தோற்கடிக்கப்பட்டு, நபியின் பேரனான ஹுசைனும் அவரது குடும்பத்தினர் 72 பேரும் – ஹுசைனின் ஆறு மாதக் குழந்தையும் – அழித்தொழிக்கப்பட்டனர். ஹுசைனின் தலை மட்டும் கொய்யப்பட்டு டமாஸ்கஸில் உள்ள கலிபாவிடம் சேர்க்கப்பட்டது.

குர்ஆனின் வசனங்கள் தங்க எழுத்துகளில் சுவனத்தில் இருக்கும். அதன் நகல் ஜிப்ரேல் மூலமாக முஹம்மதுவிற்கு இறங்கும்; பின், அதனை அவர் முதலில் மனனம் செய்து கொள்வார். பின்னர் அதனைத் தனது தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்து, அவர்களையும் மனனம் செய்து கொள்ளச் செய்வார்.. அதன் பின் குர்ஆன் வசனங்களை தனது தோழர்களை கொண்டு எழுதிக்கொள்ளச் செய்து, எழுதிக்கொண்ட வசனங்களை சரியானதுதானா என்று மீண்டும் பலமுறை உறுதி செய்து கொள்வார். இப்படித் தான் அவை குர்ஆனாக தொகுக்கப்பட்டது. – இப்படி ஒன்றை 1400 வருடங்களாகச் சொல்லிக் கொண்டு தங்கள் நம்பிக்கையை இதன் மேல் இஸ்லாமியர்கள் வைத்திருக்கிறார்கள் இஸ்லாமியர்கள். மதராஸா பள்ளியில் உள்ள பாடத்திட்டம் போல் அழகாக கதை போல் இருப்பது அந்தப் பள்ளிப் பருவத்திற்கு சரி. ஆனால் எல்லோருக்குமல்ல.

இதில் எந்தக் கேள்வி கேட்டாலும் இதே பதில் திரும்பச் சொல்லப்படும். உதாரணமாக, யாருக்கும் எளிதாகத் தோன்றக்கூடிய ஒரு கேள்வி: அல்லா ஏன் படிப்பறிவில்லாத ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அதுவும் 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து வஹி இறங்கியும், அத்தனை ஆண்டுகளாக ஒருவர் எழுதப் படிக்கத் தெரியாதவராக இப்படி தொடர்ந்து இருந்திருக்க முடியுமா? //"முஹம்மதே! இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர! // - இப்படி சொல்லியிருக்கிறதாம். அது அவர்களது நூல்; அதிலுள்ளவை அல்லாவின் வார்த்தைகள் – நம்பிக்கையாளர்களுக்கு. நமக்கு இது எப்படி ஒத்து வரும்? வலது கையால் எழுத மாட்டாராம்...? எதற்காக இப்படி ஒரு ‘புத்திசாலித் தனமான’ முடிவை அல்லா எடுத்தார்? முகமதுவே நேரடியாக எழுதி விட்டால் //பைபிளிலிருந்தும் தோராவிலிருந்தும் அனைத்து வசனங்களையும் காப்பி அடித்து விட்டார் என்று அன்றைய அரபுகள் குற்றம் சுமத்துவர். அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்."(குர்ஆன் 29:48)// அதாவது, இவர் கைப்பட எழுதினால் மற்றவர்கள் இவர் ‘காப்பி’ அடித்து விட்டார் என்று குற்றம் சுமத்துவார்களாம். ஏன், ஒருவர் காப்பியடித்து அதை வாயால் சொல்லி பிறரை எழுத வைத்தாலும் … காப்பி காப்பி தானே! ஏனிப்படி நடக்க முடியாதா? அதுவும் இப்படி ‘தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டாலும்’ இப்போதும் முகமது பழைய மத நம்பிக்கைகளைக் குரானில் இறக்கி வைத்துள்ளார் என்று தானே சொல்லப்படுகிறது.

Really very poor logic of Allah ! அல்லாவின் லாஜிக் என்ன என்று புரியவில்லை.

மேலும் குரானில் இன்றைய அறிவியல் அப்படியே இருப்பதாகவும் அதுவே இது ஒரு 1400 வருடங்களுக்கு முந்திய மனிதனால் எழுதப்பட்டதல்ல; எல்லாம் அறிந்த அல்லாவால் எழுதப்பட்டது என்பது குரான் கடவுளின் வார்த்தை என்பதை நிரூபிக்க அவர்கள் பயன்படுத்தும் இன்னொரு விவாதம். ஆனால் என் பட்டறிவில் ஆணிற்கு எங்கிருந்து விந்து வருகிறது என்பதை படங்கள் மூலம் விளக்கினாலும் அவர்கள் சொன்ன ‘எங்கள் முயலுக்கு மூன்று கால் தான்’ என்கிற விவாதம் தொடர்ந்து வருவதையும் பார்க்க முடிந்தது. அதே போல் உலகத்தைச் ‘சுருட்டி வைத்தல்’, சூரியனின் பயணம் போன்றவைகள் எல்லாமே விஞ்ஞானம் என்று கூறுவதைப் பார்க்கும் போது மனதில் தோன்றிய ஒரே எண்ணம்: அவர்கள் முயலுக்கு மூணு கால் தான் என்பதே!

அனைத்தும் அறிந்த ஒரு இறைவனென்றால் அவன் சொல்வது மிகச் சரியானதாக, ஆணியின் தலையில் அடிக்கும் சுத்தியலாக கருத்துகள் இருக்க வேண்டும். ஆனால் அடைப்புக்குறி போட்டு தான் அவைகளை மனிதர்களுக்கு விளக்க வேண்டும் என்று நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது இவ்வளவு மோசமான ‘அறிவியல் ஆசிரியராக’ அல்லா இருக்கிறாரே என்று தான் தோன்றுகிறது. இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதை தான் குரான் தொகுக்கப்பட்டதற்கு மதராஸாவில் சொல்லிக் கொடுக்கும் பாடம்.

இதில் இன்னொன்றையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். குரான் முகமது இறந்த பிறகு தொகுக்கப்பட்டது. ஆனால் இந்த கால இடைவெளிக்குள் இஸ்லாமியருக்குள்ளேயே, அதுவும் முகமதுவின் நண்பர்களுக்குள்ளும், உறவினர்களுக்கும் இடையே நடந்த போர்கள் பற்றி நிறையவே சொல்லியாயிற்று. எந்தக் குழுவில் யார் அதிகாரத்தோடு இருந்தார்களோ அவர்கள் சொல்வது தான் உண்மையாக இருக்கும் என்பது வெளிப்படை உண்மை; வஹி பெற்றவரே எழுதி வைத்திருந்தால் இருக்கக்கூடிய உறுதி, தெளிவு, நேர்மை இவ்வகைப் பதிவுகளில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு தான்.

அதுவும் என் வார்த்தைகளைத் தொகுக்க வேண்டாம் என்று முகமது உத்தரவு கொடுத்த பிறகும் ஹதீசுகள் தொகுக்கப் பட்டன. ஏன் தொகுக்கப்பட்டன என்பதற்கான பதில் இல்லை; ஆனால் தொகுக்கப்பட்டிருந்தால் இத்தனை அரசியல், இத்தனை குழுக்கள், அவர்களுக்குள் போராட்டங்கள் இருந்த காலத்தில் அவை தொகுக்கப் பட்டவைகள் என்பதே அவைகளின் மீதான நம்பிக்கைக்கு ஒரு பெரிய கேள்வி.

 //நபி எந்த எழுத்துக்களையும் விட்டுச்செல்லாததனால், "நபி கூறினார்" என்று யாரேனும் கூறினால், அது நபி கூறியதாகாது.// -- இப்படி ஒரு விவாதம். அதாவது ஒரு ஹதீஸ் சொன்னால் அது நபி சொன்னது என்ற நிச்சயம் இல்லையாம். அப்படி நிச்சயம் இல்லாத ஹதீசுகளை ஏன் இன்னும் வைத்திருக்கிறார்கள். ஒண்ணும் புரியவில்லை ....

சானா குரான் என்று ஒரு தொல்பொருள் கிடைத்தது. ஆரம்ப கால ஆய்வுகள் சில ஜெர்மானிய அறிஞர்களால் ஆரம்பிக்கப் பட்டது. சில தகவல்கள் கசிந்தன. அதோடு சரி ... இப்போது அவை சரியான பாதுகாப்பின்றி ஒரு நூலகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள உண்மைகள் எப்போதாவது வெளிவருமா என்றும் தெரியவில்லை. அது முகமதுவின் check list-ல் அது இல்லை; அதைப் பற்றிய அக்கரை எங்களுக்கு ஏதுமில்லை என்று இஸ்லாமியர் கை கழுவுகிறார்கள்.

இத்தனை குழப்பங்களையும், மனிதக் குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் 1400 வருடங்களாக மனிதக் கரம் படாத நூல் என்று குரானைக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

நம்பிக்கையுள்ளவர்களுக்கு இதெல்லாம் பெரும் நம்பிக்கை; நம்பிக்கையற்றவர்களுக்கு இதெல்லாம் வெறும் வேடிக்கை !


*

9 comments:

தருமி said...

தருமி
என்ன ஒரு மார்க்கப்பந்தையும் காணோம்? யாராவது வந்தா கச்சேரியில் கலந்துக்க வரேன் :-))
=================
தருமி
மார்க்க பந்து ... இங்கே நேரடியா வரமாட்டாங்க... 719 ... 720 ... 720(a) .. இந்த வழியில் அல்லவா வரச்சொல்லியிருக்கு.

குட்டிபிசாசு said...

அந்த காலத்திலேயே குடும்ப அரசியல், வாரிசு தகராறு. கருணாநிதி போல நபியும் வயதான காலத்தில் பொலம்பி இருப்பாருனு நினைக்கிறேன்.

வேகநரி said...

அண்ணாதுரை இறந்தவுடனேயே திமுகவில் யார் அடுத்த தலைவர் என்று மோதல் தெடங்கிடுச்சாம். 1400 வருடங்களுக்கு முன்பு ஒரு ஆயுத குழுவிலும் அதேமாதிரியான மோதல் நடந்திருக்கிறது. ஆயுதகுழுவில் மோதல் வந்தா எப்படியிருக்கும்.
ஷியாக்கள் தான் தாடி வைப்பாங்க,சுன்னிக்கள் கிளீன் சவரம் செய்திருப்பாங்க என்ற கருத்து முன்பு இருந்தாம். வஹாபிங்க வருகைக்கு பின் தான் சுன்னிகளும் தமிழகத்தில் தாடி வைக்க தொடங்கிட்டாங்க.

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,

20/20 மாதிரி தொடர்ந்து பதிவு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

பின்னூட்டங்கள் இடவே பல விடயம் தேட வைக்கிறீர்கள்.ம்ம்ம்ம்ம்ம்

1).மூளையின் ஓர பகுதியில் (பிற சிந்தனைகள் போல்)கடவுள் சிந்தனை உருவாகிறது என்பது எதைக் காட்டுகிறது???? ஆத்திகமா? நாத்திகமா?

அதிலும் இந்த பகுதியில் ஏற்படும் வலிப்பு(??) உள்ளவர்கள் இயற்கைக்கு மேம்பட்ட சக்தியோடு உறவு ஏற்படுகிறது ( என எண்ணிக் கொள்கிறார்கள்)என்பதும் எதைக் காட்டுகிறது???

விடாது கருப்பு தொடர் ஞாபகம் வருகிறதா???நாயகன் இராசேந்திரனுக்குள் உள்ள கருப்புசாமி அவனை அறியாமலேயே அவனை ஆட்கொண்டார்.நீதி பரிபாலனம் செய்து நியாயத்தை நிலை நாட்டினார்.ம்ம்ம்ம்ம்ம்

இதைப் பற்றி சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!!!!!!!!!
இறை நாடாமல் நம்பிக்கை கொள்ள முடியாது, நாடியதை செய்யும் நாயகன் அவனே!!!நாடியவருக்கு டெம்போரல் லோப் மூலம் நம்பிக்கையும்,செய்தியும் அளிக்க வல்லவன் அவனே என்பது நிரூபணம் ஆகிறது,இதை அன்றே கூறினார் ஆதிமூலம் என சொல்ல முடிவது பற்றி சிந்திக்க மாட்டீர்களா???
2)தோமா வழிக் கிறித்தவம் என்ன்னும் புது மத வியாபாரக் கடை போட முயலும் போது, புனித யூதாஸ் வழி ஞானவாதக் கிறித்தவமே சரி என்று எதிர்க்கடை போடுவது பற்றி தாங்கள் சிந்திக்க மாட்டீர்களா???

3) நம் சகோக்கள் மோடி காய்ச்சல் கண்டு மான் அல்லது (மூ)மீன் கராத்தே போட்டு பதிவுலகில் அடக்கி வாசிப்பதால், நம்க்கும் எதிர்வினை ஆற்ற அவசியம் இல்லை. எனினும் ஷியா,சுன்னி தோற்றத்தின் மூல காரணம் ஆன அபுபக்கரின் பதவி ஏற்பு பற்றிய நமது பதிவு!!!
முதல் கலிஃபா அபுபக்கரின் தேர்வு

http://saarvaakan.blogspot.com/2011/08/blog-post.html
//சமாதானம்’ என்ற பொருள் கொண்ட இஸ்லாம்//
http://en.wikipedia.org/wiki/Islam
Islam is a verbal noun originating from the triliteral root s-l-m which forms a large class of words mostly relating to concepts of wholeness, safeness and peace.[21] In a religious context it means "voluntary submission to God".[2
இஸ்லாம் என்றால் தானாக ஏக இறைவனுக்கும்அடிபணிதல், அதாவது ஸ்வயம் சேவக்.அரபு நாட்டு ஆர் எஸ் எஸ் தான் இஸ்லாம்.
நன்றி!!!!

வவ்வால் said...

தருமிய்யா,

# மார்க்குகள் எல்லாம் களைப்பாகிட்டாங்க போல ,எட்டிக்கூட பார்க்க மாட்டேங்கிறாங்க அவ்வ்.

ஹி...ஹி மார்க்கப்பந்துக்களுக்கு "குரானில்" என்ன இருக்குனே உண்மையில் தெரியாது, யாராவது சொன்ன மொழிப்பெயர்ப்பு கதைய தான் இத்தினி நாளா சொல்லிக்கிட்டு இருக்காங்க, எல்லாத்தையும் தோண்டினால் இன்னும் பல மர்மங்கள் வெளியாகும்.

அரபியில் இருக்கும் பல சொற்களின் மூலம் பாரசீகம், மேலும் அக்காலத்தில் அரபி வெறும் பேச்சு மொழியாகத்தான் இருந்தது , எழுத படிக்க எல்லாம் பாரசீகம் மற்று, அக்காடியன் ,அராமைக் போன்றவையே.

எனவே குரான் எழுத எந்த மொழி சாயல் கொண்ட அரபியில் எழுதுவதுனு தெரியாம தான் ரொம்ப நாளா முழிச்சுக்கிட்டு "புக்கு" எழுதாம இருந்தாங்க.

இவங்கலாம் பெருமையா சொல்லிக்கிற "அரபிக்குரானில்" 50% சொற்கள் பாரசீகம் ,எப்படி தமிழில் இருந்து மற்ற திராவிட மொழிகள் கடன் வாங்கிச்சோ அப்படி தான் அரபியும், :-))

அக்காலத்தில் கல்வி பாரசீக வழியில் தான் அரபியில் இல்லை ,அரபி மொழியாக உருவம் எடுத்ததே முகமது காலத்துக்கு பின் தான் , பாராசிகத்தினை கற்பதே அக்காலத்தில் "முறையான கல்வி", எனவே முகமது பாரசீகத்தினை கல்வி ரீதியாக கற்காதவராக தான் இருந்திருப்பாரே ஒழிய ,அரேபிய பேச்சு மொழி, எழுத்து மொழி என தெரிஞ்சிருக்கும். பாரசீகத்தினை முறையாக படிக்கலை என்பதை வச்சே "படிக்காத மேதை" என சொல்லிக்கிறாங்க போல அவ்வ்.

#அக்கால அரேபியாவில் ஏகமாய் கிருத்துவர்கள் இருந்தார்கள் ,ஆனால் அவர்களின் இன்ஃப்ளுயன்ஸ் என்னனே "அரேபிய மதத்தினர் வாயே திறப்பதில்லை.

கிருத்துவ, யூத மதத்தினருடன் உரையாடி பல விடயங்களை தெரிஞ்சுக்கொண்டு ,அதெல்லாம் ஜிப்ரீல் சொன்னார்னு அப்போதைய அப்பாவிகளை நம்ப வச்சிருக்கணும்.

Anonymous said...

இன்றளவும் ஆயுதக்குழுக்கள், அரசியல் கட்சிகள், தொழில் சக்திகள், மாபியாக்கள், என பலவற்றில் உண்டாகும் குடும்ப அரசியல், பதவிப் போட்டி, படுகொலைகள், அன்றும் நடந்துள்ளன. என்ன இன்று ஆயுதம், சட்ட திட்டம், பயம் போன்றவற்றால் கட்டுபடுத்திகிறார்கள், அன்று கூடவே கடவுள் நம்பிக்கையும். இவற்றை நோக்கும் போது இந்தியாவில் தோன்றிய பவுத்த, சமண மதம் எவ்வளவு அற்புதமானவை என்று சொல்ல வைக்கின்றது..

வால்பையன் said...

ஃபேஸ்புக்கில் ஷேர் பண்ணியிருக்கேன். இப்பெல்லாம் அங்க தான் எல்லா முமின்களும் சுத்திகிட்டு இருக்காங்க.

அங்க வாங்க தல

வால்பையன் said...

ஃபாலோஅப்புக்காக

தருமி said...

//அங்க தான் எல்லா முமின்களும் சுத்திகிட்டு இருக்காங்க.//

அங்கேயும் காபிர்கள் மட்டும் தானே பார்த்தேன்!!

Post a Comment