Friday, July 10, 2026

1378. லீக் ஆட்டம் முடிஞ்சாச்சு ...

                                                     

1986 ஆண்டிலிருந்து உலகக் கால்பந்து போட்டியைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஆனால் இந்த முறை காலங்கெட்ட நேரத்தில் போட்டி. விழித்திருந்து பார்க்க வயது அனுமதிக்கவில்லை என்று நானே வேண்டான்று முடிவெடுத்து விட்டேன். அதையும் மீறி ஒன்றிரண்டு பார்த்தேன். அதுவும் லீக் ஆட்டத்தில் 48லிருந்து 36 சுற்று வருவதற்குள் என்னென்னமோ ஆகிப் போச்சு. அதிகம் எதிர்பார்த்த ஜெர்மனியும், நெதார்லாந்தும்,தோற்றுப் போனதும் சிறிதும் எதிர்பாக்காதவை. ஜப்பான் தோற்றதும் ஒரு ஏமாற்றம் தான். இங்கிலாந்து காங்கோவை வெற்றி கண்டது எரிச்சலைக் கொடுத்தது.

ஆனால் யாருங்க ..  கேப் வர்தே அப்டின்னு ஒரு நாடு. அர்ஜெண்டினாவை வர்ரியா பாருன்னு கேட்ட நாடு. 2:3 என்று தோற்றது. அதுவும் கடைசி வரை அர்ஜெண்டினாவிற்கு இழுபறியாக இருந்தது. அதுவும் அந்த அணியின் கோல் கீப்பர் 41 வயசாம். சரியான மந்திரவாதி. அம்மாடி .. எத்தனை முறை அத்தனை அழகாகத் தன் அணியைக் காப்பாற்றினார். அந்த நாடோ மிக மிகச் சின்ன நாடு. 6 லட்சம் மக்கள் கூட இல்லை. அதன் பெயரை நான் இதுவரை கேள்விப்பட்டதுமில்லை. அத்தனை ஆச்சரியம்.




No comments:

Post a Comment