Saturday, July 11, 2026

1379.. இங்கிலாந்து - காங்கோ 2:1









 

இங்கிலாந்து – காங்கோ விளையாடும்போது மனசு என்னவோ காங்கோ பக்கமே இருந்தது. விளையாட ஆரம்பித்த 7 நிமிடத்திலேயே காங்கோ முதல் கோல் போட்டது. I’m always an anti-england guy. ரொம்ப மகிழ்ச்சியாகப் போய்விட்டது. விளையாட்டும் விறுவிறுப்பாகப் போனது. ஆட்டத்தின் நடுவில் right ex-ல் ஒரு பரட்டைத் தலையோடு ஒருவர் நன்கு விளையாடிக்கொண்டிருந்தார். விளையாடியவர்கள் – இரு அணியிலுமே – கருப்புத் தோல்காரர்களே அதிகமாக இருந்தார்களா ... நானும் 8ம் எண்ணுடன் விளையாடிய அவரையும் ஒரு ஆப்ரிக்கக்காரராக நினைத்திருந்தேன். முதல் பாதி விளையாட்டில் தீப்பொறி பறந்தது. இங்கிலாந்து அணி முதல் பாதியில் முழுமையாக முயன்றும் கோல் விழவில்லை. காங்கோ அணியின் கோல் கீப்பர் மிகத் திறமையாகத் தடுப்பாட்டம் கொடுத்தார்.

இரண்டாம் பகுதி ஆரம்பித்த பிறகே அந்த 8ம் நம்பர் பரட்டைத் தலைக்காரரின் பெயர் ஓரிரு தடவை காதில் விழுந்தது. நாம் சரியாகத்தான் கேட்கிறோமா என்று நினைத்தேன். வர்ணனையாளர்கள் சொன்ன ஒரு பெயர் வித்தியாசமாகக் கேட்டது. எனக்கே சந்தேகத்தோடு மீண்டும் கேட்டேன். நிச்சயமாக முத்துசாமின்னு தான் எனக்குக் கேட்டது. இருந்தாலும் முழு நிச்சயமாகத் தெரியவில்லை.

விளையாட்டு வேகமாகப் போனது. இங்கிலாந்தின் முதன்மை வீரர் கேன் இரண்டு கோல்களையும் அடுத்தடுத்துப் போட்டு இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தினார். எனக்கு சோகம் தான். அத்தனை தீவிரமாக விளையாடியும் காங்கோ தோல்வியைத் தழுவியது. தோற்றாலும் நன்கு விளையாடித் தோற்றனர்.








ஆட்டம் முடிந்ததும் வேகமாக கூகுள் ஆண்டவரிடம் ஓடினேன். காங்கோ அணி வீரர்களின் பெயர்ப் பட்டியலைப் பார்த்தேன். இந்திய், தமிழ்நாட்டிலிருந்து பிரான்சில் பிறந்து காங்கோ நாட்டின் கால்பந்தணியில் இடம் பிடித்துள்ளார். அடடா ... இது தெரிந்திருந்தால் இன்னும் அவர் விளையாட்டைத் தீவிரமாகக் கவனித்திருக்கலாமே என்று தோன்றியது. பார்த்தவரையில் அவர் 16 வயதினிலே வரும் “பரட்டை” மாதிரியே இருந்தார். கொஞ்சம் பெருமை தான் – நம்மாளும் கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடுகிறாரே என்ற பெருமைதான்.

மீண்டும் ஆண்டவரிடம் இது போல் இந்தியர்கள் விளையாடுகிறார்களா என்று கேட்டேன். நால்வர் இது போல் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடுவதாக ஒரு பட்டியல் கொடுத்தது.

Sarpreet Singh 🇳🇿


Samuel Moutoussamy 🇨🇩


Nishan Velupillay 🇦🇺


Tahsin Mohammed 🇶🇦



ஒரு சின்ன மகிழ்ச்சிதான்.


No comments:

Post a Comment