QF – ARGENTINA
– SWITZERLAND
அர்ஜென்டினாவின் மெஸ்ஸியின்
மேலும், FIFA மேலும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள்
கால்பந்து ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன. நான் முழுவதுமாக
அதில் விழுந்து விடவில்லை. இருந்தும் நடப்பவைகள்
பலவும் அந்தக் கேள்விகளுக்கு உரம் கொடுக்கின்றன.
ஸ்விஸ் வீரர் முதல் சில நிமிடங்களிலேயே
கோல் அடித்தார். அதற்கு ஈடான கோலை அடிக்க அர்ஜென்டினா 67 நிமிடங்கள் எடுத்து ஈடு செய்தது.
இரு பாதிகள் முடிந்த நிலையில் தலா ஒரு கோல் என்ற நிலை இருந்தது. ஆனால் அதற்குள் அந்த
இறுதி நிமிடங்களில் ஸ்விஸ் அணியின் எம்போலா, இன்னொரு ஸ்விஸ் வீரர் இருவரும் ஒரு அர்ஜென்டினா வீரரும் foul ஒன்றில் மாட்டிக் கொண்டனர், எம்போலா அந்த foulலை வைத்து அர்ஜென்டினா வீரருக்குத் தண்டனை கொடுக்க நடுவரிடம் கேட்டார். அவர்
VAR பார்த்து விட்டு, அந்த அர்ஜென்டினா
வீரருக்கு முன்பே எம்போலா தவறு செய்துள்ளார் அல்லது போலியாக அடிப்பட்டது போல் நடித்துள்ளார் என்று
அவருக்கு மஞ்சள் அட்டை காண்பித்தார், இதில் சோகம் என்னவென்றால்,
எம்போலாவிற்கு ஏற்கெனவே மஞ்சள் அட்டை கொடுத்திருந்ததால் இப்போது அவருக்கு
சிகப்பு அட்டை என்றாகி விட்டது. ஆகவே அடுத்து வரும் extra timeல் அவர் விளையாட முடியாது. இப்போது 11 அர்ஜென்டினா வீரர்களுக்கு எதிராக 10
ஸ்விஸ் வீரர்கள் விளையாடுவார்கள். அதிக ஆள் பலத்தினாலோ என்னவோ அப்பகுதியில் இரு கோல்களைப்
போட்டு 3 : 1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்றது.
என்னைப் பொறுத்தவரை இரண்டாவது மஞ்சள் அட்டை கொடுப்பதற்கு முன் நடுவர்கள் கொஞ்சம் யோசித்தே கொடுப்பார்கள்.
இங்கே விளையாட்டு வீரர் foul செய்யவில்லை. ஆனால் foul நடந்ததுபோல்
நடித்தார் என்பதற்காக இரண்டாவது அட்டையைக் கொடுத்தது எனக்கு அதிக பட்ச தண்டனையாகத்
தோன்றியது.
மெஸ்ஸியின் எதிராளிகள் சொல்வது
போல் மெஸ்ஸிக்கு நடுவர்கள் சாதகமான முடிவுகளையே
எடுக்கிறார்கள் என்று சொவதில் உண்மை இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. லீக் ஆட்டத்தில்
ஒரு தடவை மெஸ்ஸி எதிராளியின் காலை மிதித்து foul செய்தும் அவர் தண்டிக்கப்படவில்லை என்பதையும் நினைத்துக் கொண்டேன். எம்போலா ஒரு முக்கியமான முன்னணி வீரர். Lead
striker. அவரை வெளியே அனுப்பவே இந்த முடிவெடுக்கப்பட்டது என்று ஸ்விஸ்
வீரர்களின் வெளிப்பாடாக இருந்தது. அதைத் தவறு என்று சொல்ல முடியாது.
ஏற்கெனவே எகிப்து அணியின்
ஒரு கோலை நடுவர் ரத்து செய்தது pro-Argentina or
pro-Messi move என்ற விவாதம் கடுமையாக எழுந்தது.

No comments:
Post a Comment