Friday, August 21, 2026

1389. என் கதை - ஒரு செய்தி

இளங்கோ கண்ணன்  எழுதியது  ...


ஐயா வணக்கம். நலமா?

தங்களின் 'என் கதை'யை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

முன்னும் பின்னுமாக நகர்ந்தாலும் படிப்பதற்கு விறுவிறுப்பான ஒரு புதினத்தைப் போலவே இருக்கிறது. 

என்னுடைய எழுத்து சிந்தனையும் தங்களுடையதும் ஒன்று போலவே இருக்கின்றன. அதற்காக நான் என்னை தங்களுக்கு இணையாகச் சொல்கிறேன் என்று நினைத்து விட வேண்டாம். எனக்கு அதில் ஒரு சிறு மகிழ்ச்சி, அவ்வளவுதான்.

அங்கங்கே சிறு பிழைகளும் தென்படுகின்றன; அவற்றைக் குறித்துக் கொண்டு வருகிறேன்.

'தருமி'யிடம் குறை காண்பதால் நான் நக்கீரன் அல்ல! புத்தகம் மேலும் மெருகேற வேண்டும் எனும் நோக்கத்தில்தான்.

'திராபை' எனும் சொல்லை, சில நாட்களுக்கு முன் சொக்கன் அவர்களின் 'நல்ல தமிழில் எழுதுவோம்' நூலிலும் பார்த்தேன். தங்கள் நூலிலும் அந்தச் சொல் வருகிறது.

க்ரியா தமிழ் அகராதியைத் துழாவியபோது, பயனற்றது / கழிசடை எனும் பொருளை அதன் மூலம் …

1 comment:

Post a Comment