இவ்வார ஆனந்த விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் கேள்வி பதில் பகுதியில் வந்த ஒரு கேள்வியும் பதிலும் ...
"இந்தக் கேள்வி கேட்பதற்கு மன்னியுங்கள். எங்கள் மதத்தில் பாவங்கள் செய்தவன் நரகத்துக்குச் செல்வான் என்றும், கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவான் என்றும் எங்கள் மதத்தலைவர்கள் சொல்கிறார்கள். இங்கே சந்தோஷங்களை எல்லாம் தவிர்த்து விட்டு பிற்பாடு சொர்க்கத்துக்குப் போவதா, அல்லது இங்கே ஜாலியாக எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு, பிற்பாடு நரகத்துக்குப் போவதா என்று குழப்பமாக இருக்கிறது".
"நரகம் என்று ஒன்று இருக்கிறது. அங்கே நீ எண்ணெய்க் கொப்பரையில் வதக்கப்படுவாய் .. அணையாத நெருப்பில் எரிக்கப்படுவாய்" என்றெல்லாம் சொல்பவர்களுக்கு எவ்வளவு அரக்கத்தனமான மனது!
அடிப்படை மனிதத்தன்மைகூட இல்லாமல், இப்படிப்பட்ட கொடூரமான எண்ணங்கள் கொண்டதற்காக அவர்களை அல்லவா அப்படிப்பட்ட நெருப்பில் பொசுக்க வேண்டும்? வன்மையான மிருகங்கள்கூட ஒரே அடியில் தாக்கிக் கொல்லப் பார்க்குமே அன்றி, சதா எரியும் நெருபில் இட்டுச் சித்திரவதை செய்து வேடிக்கை பார்க்காது. இப்படிப்பட்ட வக்கிரமான மனம் கொண்டவர்கள், எப்படியோ மதத் தலைவர்களாக இயங்க ஆரம்பித்துவிட்டதுதான் துரதிருஷ்டம்.
இப்படிப்பட்டவர்களின் போதனைகளால், நிற்பது பாவமோ, உட்கார்வது பாவமோ என்று ஒவ்வொன்றைப்பற்றியும் அச்சம் கொண்டு, குற்ற உணர்வால் தவிப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். உண்மையில் அச்சமூட்டி யாரையும் நல்லவர்களாக்கிவிட முடியாது.
ஒன்றைத் தவிர்க்கும் போது, அது பற்றிய கவனம் அதிகமாகி, அதில் இருந்து விடுபட முடியாமல் சிக்கிப் போகிறவர்களே அதிகம்.
கவனித்துப் பாருங்கள். பாவங்களைப் பற்றிப் பேசும் சமூகத்தில்தான் ஒழுங்கீனம் தலைவிரித்து ஆடுகிறது. செய்ய நினைப்பதைச் செய்துவிட்டு கதறி அழுது கொண்டிருப்பார்கள்.
*
38 comments:
நாம் எதாவது தவறு செய்து விட்டால் நம்மை உறுத்தும் குற்ற உணர்வே நரகம்!
அதை சொல்லி மன்னிப்பு கேட்க்கும் போது நரகம் விடுபட்டு சொர்க்கம் பிறக்கிறது!
மதவாதிகள் எல்லா தப்பையும் பண்ணிட்டு அய்யா சாமி மன்னிசிருன்னு ஒரு வார்த்தையை சொல்லிட்டு போயிருவாங்க! இதுகெல்லாம் என்னை கொப்பரை இல்லைன்னு அவுங்களே சமாதானபடுத்திகுவாங்க!
மேலும் சொர்க்கம், நரகம்னு ஒன்னுயில்லைன்னும் அவுங்களுக்கு தெரியும், பல்லாயிரகணக்கான ஓட்டையில் தமது மதத்தில் இருப்பது தெரிந்தும் அவர்கள் மதத்தில் தொங்கி கொண்டிருக்க காரணம், தான் ஒரு குழுமத்தில் இருந்தால் பாதுகாப்பு என்னும் எண்ணம்!
சிறுவயதில் கேள்வி பட்டிருக்கிறேன்!
பூமியில் இருக்கும் சொர்க்கம் கக்கூஸ் தானென்று. உங்களுக்கு வேறு எதாவது!
சூப்பர்............
சொர்க்கம்,நரகத்தை பயத்தை உடைச்சா மதங்கள் எல்லாம் நரகத்துக்கு போயிரும்.
ஆனா மக்கள் யோசிக்க மாட்டாங்க.
//பல்லாயிரகணக்கான ஓட்டையில் தமது மதத்தில் இருப்பது தெரிந்தும் அவர்கள் மதத்தில் தொங்கி கொண்டிருக்க காரணம், தான் ஒரு குழுமத்தில் இருந்தால் பாதுகாப்பு என்னும் எண்ணம்!//
இல்லீங்க .. என்னமோ ஒண்ணு இருக்குது .. என்னன்னுதான் தெரியலை!
பாவம் ...
சொர்க்க தியோட்டருக்குள் இடம் பிடிக்க வேண்டி ஆள் பிடிப்பதும் நடக்கிறதுதானே... ?
சின்ன புள்ளைங்களா அடிச்சு, மிரட்டி, உருட்டி கடவுளுக்கு 'பயந்து' நடந்துக்க? சில நேரம் மக்களை அந்த நிலையில வைச்சு பார்க்கும் பொழுது (அவுங்க ஆக்ட் ;-) வேடிக்கையா இல்ல, தருமி...
நேசிக்கிறதுக்கும், பயத்திற்கும் வித்தியாசமிருக்கில்ல - நேசிக்கும் பொழுது அங்கே பயத்திற்கு என்ன வேலை ????
அப்படி சொல்லும் அவரு ஏன் இன்னும் இந்து மதத்தில் இருக்கார்? எல்லா மதம்தான் அப்படி சொல்லுகிறது, இந்து மதம் அவ்வாறே சொல்லுகிறது. சும்மா நடுநிலைவாதி போல் போஸு, எந்த மதத்தையும் சாரதவன் போல். ஆனா வணங்குவது லிங்கத்தை. ஈஸா மையத்தில் என்ன இருக்காம்? சும்மா இவர்லாம் ஊரை ஏமத்துறாரு. நீங்களும் (தருமி) இதப் பின்பற்றி பதிவு வேற போட்டிடீங்க.
வருத்தமா இருக்கு தருமி :(
//மக்கள் யோசிக்க மாட்டாங்க.//
குடுகுடுப்பை,
யோசிச்சிட்டா மதம் ஏது? மதமே போனபின் ஏது நரகமும், சுவனமும் ..!
//நேசிக்கும் பொழுது அங்கே பயத்திற்கு என்ன வேலை //
ஆனா தெக்ஸ் .. இந்த ஆபிரஹாமிய மதங்களில் மனித நேயத்தையும் தாண்டி கடவுள் பயம்தான் ஜாஸ்தி.
"fear of god is the beginning of wisdom" --bible
மஸ்தான்,
அவரைப் பற்றிய முழு விவரங்களும் எனக்குத் தெரியாது. ஆனால் ஆ.வி.யில் ஓரளவு ஒழுங்காக அவரது பதிவை வாசித்திருக்கிறேன். வழக்கமான 'சாமியார்தனமான' வார்த்தைகளாக இல்லாமல் இருப்பது பார்த்து அவ்வாறு வாசிக்க ஆரம்பித்தேன்.
அடுத்து, "நம்ம" மதங்கள் சொல்றது மாதிரி நரகத்தைப் பற்றிய பயம் இந்துக்களிடம் கிடையாது. அவர்கள் மறுபிறப்பு, முக்தி என்றெல்லாம் பேசுவது கொஞ்சம் மனுஷ நீதியோடு ஒத்துவரும் விஷயம். ஆனால் "நாம" சொல்ற நகரம் அப்படியா?
இந்த ஆப்ரஹாமிய சுவன, நகர விஷயங்களில் மனுஷ நீதியே இல்லை; இதில் இவைகள் எப்படி கடவுளின் நீதியாக இருக்க முடியும் என்பதே என் எண்ணம்.
மஸ்தான் et al
அந்த நகரத்தையெல்லாம் நரகமா மாத்திக்கிங்க ...!
அவரின் எழத்தை கவனமாக கவனித்தால் புரியவரும், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அடுத்த மதங்களை (இஸ்லாம் மற்றும் கிருஸ்துவம்) பற்றி தவறாக கூறிக்கொண்டுருப்பார், அவர் ஒன்றும் நடுநிலையானவர் அல்ல.
சரி மனுச நீதின்னு எத சொல்கிறீர்கள்?
பல பேர்களை மதத்தி பெயராலும்/ஜாதியின் பெயராலும் கொண்டு குவிச்சுகிட்டு இருக்காங்களே, அவர்கள் பிடிபட்டும் அவர்கள் விரும்பி சாப்பிடும் பிரியாணியை வாங்கி கொடுப்பதையா?
பல சிறுவர்களை கொன்று தின்ற சிங்கை விடுதலை செய்வதையா?
இலங்கையில் இவ்வளவு அநீதி நடந்து காரணமானவர்களை சந்தோசமா வச்சுருப்பதையா?
எது மனித தன்மையான தண்டனை? தண்டனை என்றாலே மனித தன்மை போயிடுமே, உண்மையான தண்டனைன்னா தவறு செய்தவர் மீண்டும் செய்யாதவாரு செய்வதருக்கு. நரகத்தில் இப்படிலாம் நடக்கும், கவனமா நடந்துக்க, யாருக்கும் தப்பு செய்யாதே இப்படி சொல்லுறதா உங்களுக்கு ஆப்ரஹாமிய மதத்துல தப்பா படுது?
மஸ்தான்,
ஒரு மனுசனா பொறந்து எத்தனை வருஷம் ஒருவன் தப்பு செய்வான் - 100 வருஷம்?
இந்த 100 வருஷத்தில செய்ற தப்புக்கு உங்க நரகத்தில - perpetual punishment - காலா காலத்துக்கும் தண்டனை அப்டின்றது ரொம்ப சரியா இருக்கா?
அப்டியே இன்னொரு கேள்வி: நீங்கள் மஸ்தானா (நம்பிக்கையாளனா) இருக்கிறதுக்கும், நான் தருமியா (நம்பிக்கையற்றவனா)இருக்குறதுக்கும் (உங்க நம்பிக்கையின்படி) கடவுள்தானே காரணம். அப்புறம் என்ன தண்டனை எனக்கு?
என்ன ஏன் அல்லா இப்படி படைச்சார்?
ம்ம்ம்ம்ம்...
இப்படியும் ஒரு கேள்வியா?
நான் வரலை இந்த விளையாட்டுக்கு... :)
கொஞ்சம் டைம் கொடுங்க... விளக்குவதற்கு முயற்சிக்கிறேன்.
தருமி said //அடுத்து, "நம்ம" மதங்கள் சொல்றது மாதிரி நரகத்தைப் பற்றிய பயம் இந்துக்களிடம் கிடையாது. //
என்ன சாமீ இப்படி சொல்லிட்டீங்க. இந்து மதம் நரகம் என சொல்லாமல் இருந்திருக்கலாம். எல்லாம் கர்மா படி தான் நடக்கும் என்பதும்; கர்ம வினைகளை இப்பிறவியில் நீ செய்யும் நன்மை தீமைகள் தெரிவிக்கும் என்பதும் மற்ற மதங்கள் கொடுக்கும் அதே பயத்தை மக்கள் மனதில் கொண்டுவராதா? அழித்தல் தொழில் கொண்ட சிவனார், கோபம் வந்து துஷ்டனை அழிக்கவில்லையா?
மனிதன் மனிதனை மதிக்க தெரிந்தாலே மதங்களும் தெய்வங்களும் தேவையில்லை சாமீ.
ஜக்கி நல்லா பேசுவாரு. கண்டிப்பா வாசிங்க. ஆனால் அவரின் செயலைகளை கண்டிப்பா பார்க்காதிங்க. குழம்பி போயிருவீங்க. :-D
மஸ்தான் அதுக்கு முந்தி அப்படியே இதையும் கொஞ்சம் வாசிச்சிட்டு வாங்களேன்....
காட்டாறு,
//மனிதன் மனிதனை மதிக்க தெரிந்தாலே // இதைவிடவும் கடவுளுக்கு மனுசனுக்கும் பாலம் போடுறதுதானே மதங்களின் வேலை.
இந்து மதத்தில் கர்ம வினை இருக்கு. தப்பு பண்ணிட்டா அடுத்த ஜன்மத்தில அதுக்குப் பிரயாசித்தம் பண்ணிட்டு நல்ல பொறப்பெடுத்து எடுத்து கடைசியில 'பிறப்பில்லா முக்தி'தானே கடைசி ... இல்லியா?
தருமி said //அப்டியே இன்னொரு கேள்வி: நீங்கள் மஸ்தானா (நம்பிக்கையாளனா) இருக்கிறதுக்கும், நான் தருமியா (நம்பிக்கையற்றவனா)இருக்குறதுக்கும் (உங்க நம்பிக்கையின்படி) கடவுள்தானே காரணம்//
Ways to overcome bondage of karma என்பதில் ஜக்கி சொல்லுறார் "This moment, the very way you think, feel, understand and act, is a deep conditioning of past activity. That's karma. //
அப்போ உங்கள் இருப்புக்கும் மஸ்தான் இருப்புக்கும் என் இருப்புக்கும் கர்மா தான் காரணமாம். நம்பிக்கையற்ற உங்களுக்கு என்ன தோணுது?
"fear of god is the beginning of wisdom" --bible //
ஆஹா, இப்படியா சொல்லியிருக்காங்க... ம்ம். பயம் வந்துட்டாவே மனுசனோட இன்னொரு பகுதியான இரட்டைத் தன்மையும் வந்திருமே. நேசிக்கணுமின்னா அது புரிஞ்சு ஏன், எதுக்குன்னு கேள்விக்கு உட்படுத்தி நிதானமா உள்ளே போறது, பயமின்னா ஒரு தப்பு பண்ணிட்டோம், எப்படியா இருந்தாலும் தண்டனை நிச்சயம் அப்படிங்கிற மேம்போக்குத் தனம் வந்திராதா... எங்கோ இடிக்குதே?
அந்தக் 'கர்மா' மேல நம்பிக்கை கிடையாதுதான். ஆனாலும் அதிலயாவது ஒரு லாஜிக் இருக்கு ... ஆனா இந்த நரக சுவனம்...?!
எதார்த்தமான பதிலா தான் இருக்கு.
ஆனா இந்த கருடபுராணம் ,எண்ணைச் சட்டி வறுவல் இதெல்லாம் எந்த மதத்துக்கு கீழும் வராதா?
வந்தாலும் ,நித்திய வறுவலுக்கு ஒரு நேர வறுவல் பரவாயில்லைங்குறீங்களா?
"fear of god is the beginning of wisdom" --bible //
விட்டுப்போனது...
அந்த FEARங்கிற இடத்தில LOVING YOURSELF அப்படின்னு போட்டுறந்தா பொருத்தமா இருந்திருக்குமோ ...
//நித்திய வறுவலுக்கு ஒரு நேர வறுவல் பரவாயில்லைங்குறீங்களா?//
கலக்கிட்டீங்க'ப்பா!
ஆனாலும் அந்த அந்நிய விவகாரங்கள் எப்படி இருக்கு?
யாராவது தெரிஞ்சவங்க அவுத்து உடுங்க'ப்பா!
//வந்தாலும் ,நித்திய வறுவலுக்கு ஒரு நேர வறுவல் பரவாயில்லைங்குறீங்களா?
//
இப்பிறவி ஒரு நேர வறுவல் என்பதை தீர்மானிப்பது யாரு. தெரியலையே. இந்த பிறப்பில் நல்லவராயிருந்தாலும் கர்ம வினையால் கஷ்டபட்டால், அது ஒரு நேர வறுவல் என்பதற்கு என்ன நிச்சயம்?
நண்பர் ஒரு சாமியாரை பார்க்க போயிருந்தாராம். உங்களுக்கு 4 ஜென்மத்து முன்ன செய்த பாவம் தான் தாக்குதுன்னு சாமியாரு சொன்னாராம். அவரு அப்போ 4 ஜென்மமா தொடர்ந்து வருதா வறுவல்?
யாரப்பா அங்கே.. இந்த controversial conversation இழுத்து விட்டுட்டு சிவனேன்னு இருக்குறது?
PS:
சாமீ நான் உங்களை கூப்பிடல. அந்த வாசுதேவனை கூப்பிட்டேன்.
இந்து மதத்தில எனக்கு தெரிஞ்சு யாரும் இந்த சொர்க்கம்,நரகத்துக்கு பயப்படறதில்லை. கடவுள் கிட்ட போறது வாழும் போதான தேவைக்கானா வேண்டுகோள் மட்டுமே. சிலர் இருக்கிறார்கள் சிரிரங்கம் சொர்க்கவாசலில் சென்று சொர்க்கம் செல்ல அதுவும் ஒருநாள் கூத்துதான் அடுத்தநாள் மறக்கிற கூட்டம்தான் அதிகம்.
இங்க அவனவன் அன்னாடப்பொழைப்புக்குமே அல்லாடிகிட்டு, நரக அவஸ்தைப் பட்டுக்கிட்டிருக்கும்போது, அதென்ன 'நித்திய வறுவல்' ஒரு நேரத்துக்கு மட்டும் வறுவல்' அப்படீன்னு தனிக் கேள்வி!
சொர்கமும் நரகமும் இங்கேயே, நம்மைச் சுற்றியுள்ள தளங்கள் தான்னு தத்துவம் உண்டே! அங்கே வறுக்கிற வேலையெல்லாம் கெடையாது!
நல்லவைக்கு சொர்க்கம் அல்லாததற்கு நரகம் என்றெல்லாம் பின்னூட்டத்திலும் வருகிறது. சரி, நல்லது என்பதையும் கெட்டது என்பதையும் சொல்ல என்ன வரையறை? நமக்கு நல்லது என்பது அல்லது ஒரு சாராருக்கு நல்லது என்பது அடுத்தவருக்கோ அல்லது வேறு சாராருக்கோ கெட்டதாக இருக்குமே...பெரும்பான்மை எது என்று பார்ப்பார்களா? 100% Good, 100% Bad என்று எதை சொல்ல முடியும்?
//
Blogger தருமி said...
Indians descended from two ancestral populations: Study
//
இந்த சுட்டி எதற்காக இங்கே கொடுத்திருக்கிறீர்கள்?
அந்த பேப்பரை நானும் படித்தேன். 40,000 ஆண்டுகளுக்கு முன் வந்திறங்கியதாகச் சொல்லப்படுகிறது ASI (ancient south indian) மற்றும் ANI (Ancient north indian) ஜீன்கள்.
To the disappointment of many நிச்சயம் 1300 BC யில் மத்திய ஆசியாவிலிருந்து மாடு மேய்த்துக்கொண்டு யாரும் வந்தேறவில்லை.
//தருமி....
என்ன ஏன் அல்லா இப்படி படைச்சார்?//
உலகமே சுவர்க்கத்தில் பிளாட் வாங்கிப்போட வேண்டிய வேலையைப் பார்த்துக் கொன்டு இருக்கும்போது , எந்தக் கடவுள் குறுக்கு வழியில் சொர்க்கம் காட்டுகிறதோ, எந்த மதம் மலிவு விலையில் சொர்க்கப் பிளாட் விற்கிறதோ அதை சட்டுப்புட்டுன்னு வாங்கிப்போடாமல் கேள்வி கேட்கும் பேராசிரியருக்கு.....
***
கீரோவையும், வில்லனையும், மானபங்க காட்சியையும் சிருஸ்டிப்பது படத்தின் டைரக்டரே.
ஏன் டைரக்டர் அவ்வாறு செய்கிறார் என்றால் எல்லாம் சுவராஸ்யமாய் இருக்கத்தான். :-)))
வில்லனாக இருந்தாலும் நடிக்கச் சொல்வதும் அதற்கும் பணம் வாங்கித் தருவதும் டைரக்டரே.
வாழ்கையே ஒரு ட்ராமா என்று கடவுள் சொன்னது தெரியாதா?
ஒரு ரிப்பீட் போடும்போது தேவையில்லாமல் எனது இன்னொரு பதிவின் தொடுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்த்து அதை நீக்கிய பிறகு, வஞ்ரா உங்கள் கேள்வி பார்த்தேன். ஆனா அதுக்குள்ள அதை எடுத்துட்டேன்.
கல்வெட்டு,
//வாழ்கையே ஒரு ட்ராமா என்று கடவுள் சொன்னது தெரியாதா???
அடடா .. அதை நான் செகப்பிரியர் அப்டின்னுலா நினச்சிக்கிட்டு இருந்தேன்!
///இல்லீங்க .. என்னமோ ஒண்ணு இருக்குது .. என்னன்னுதான் தெரியலை!
பாவம் ...////
:))
//அடடா .. அதை நான் செகப்பிரியர் அப்டின்னுலா நினச்சிக்கிட்டு இருந்தேன்!//
எல்லாம் கடவுளே அவன் இன்றி ஒரு தத்துவமும் இல்லை.
நீங்க ரொம்ப நல்லவர் ஆனாலும் கண்டிப்பா உங்களுக்கு நரகந்தான் , ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எனக்கும் ஒரு சூடா ஒரு சீட்டு போட்டு வைங்கசார்
குடுகுடுப்பை
//எனக்கும் ஒரு சூடா ஒரு சீட்டு போட்டு வைங்கசார்//
இப்படி எல்லாரும் என்னிடமே சீட்டு போடச்சொன்னா நான் என்னதான் பண்றது? ரொம்ப கூட்டமா இருக்கு....
//எல்லாம் கடவுளே அவன் இன்றி ஒரு தத்துவமும் இல்லை.//
சம்பவாமி யுகே .. யுகே ..!
//செல்வநாயகி said...
1. ///இல்லீங்க .. என்னமோ ஒண்ணு இருக்குது .. என்னன்னுதான் தெரியலை!//
2. .. பாவம் ...////
இந்த இரண்டில எதுக்கு நீங்க ஆச்சரியப் படுறீங்கன்னு தெரியலையே ...!
ஜக்கி நல்லாவே பேசுவாரு. ஒரு தெளிவான நீரோடம் மாதிரி பேச்சு.
நரகத்துக்கு அவரின் பதில் வித்யாசமா இருக்குது.
கடவுள் இல்லங்கரவங்களுக்கு இந்த கேள்வி வராது.
ஆனா, எல்லாருக்கும், பொதுவா நரகம், கஷ்டப் படும் காலகட்டங்களில், குத்தும் மனசாட்சிதான். அத செஞ்சதனால இப்படி ஆயிடச்சோ,ன்னு ஒரே மண்டை குடைச்சல் வருமே. அது டார்ச்சர்ர்ர்ர்ர்.
ஒரு அவுட் ஆஃப் சிலபஸ் பின்னூட்டம்...
ஆரம்பத்தில் சத்குரு சொல்வது புதிதாக இருந்தது. ஆனால், போகப் போக அடுத்து என்ன சொல்வார் என்று என்னால் யோசிக்க முடிந்ததால் அவ்வளவாக இன்ட்ரஸ்ட் இருப்பதில்லை.
ஆனாலும், அந்த "இந்த வார" ஆ.வி.யில் ஜென் கதைகள் என்றால் என்ன என்று விளக்கியிருந்தாரே, அமர்க்களம். அப்பொழுதுதான் தெரிந்தது ஜென் கதைகளின் உட்கரு. அற்புதம்.
Post a Comment