Friday, October 16, 2009

344. கடவுள் என்றொரு மாயை ... 10

*
தொடர்புடைய ஏனைய பதிவுகள்:


298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

-->



கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

Chapter 8:

WHAT'S WRONG WITH RELIGION?
WHY BE SO HOSTILE?


========================================

மக்கள் எல்லோரையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கடவுள் - மேலே வானத்தில் இருந்துகொண்டு் - நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடத்திலும், நாளிலும் என்னென்ன செய்கிறோம் என்பதைக் கவனித்துக் கொண்டிருப்பதாக ஒரு நினைப்பை மதம் ஏற்படுத்தி விட்டது.

புலப்படாத அந்த மனிதனும் நாம் செய்யக் கூடாத பத்து கற்பனைகளை ஒரு நிரலாகத் தொகுத்து வைத்துள்ளார். அப்படி வி்லக்கப்பட்ட அந்தப் பத்துக் கட்டளைகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தால் அவர் ஒரு 'தனியிடம்' ஒன்றை வைத்துள்ளார்; அக்கினி மிகுந்து சூடும் புகையும் நிறைந்த, தவறுகள் செய்யும் நம்மையெல்லாம் சித்திரவதை செய்யும் அந்த இடத்திற்கு அனுப்பி, காலமெல்லாம் நாம் அங்கே கஷ்டப்படவும், எரிந்து வேதனைப் படவும், துக்கத்திலும் துயரத்திலும் நாம் முடிவில்லாத காலம் வரை அழுது துயருறவும் அனுப்பி விடுவார். .... ஆனால், அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார்!:) (பக்:317)

.................................ஜார்ஜ் கார்லின்

===============================================



ஏன் இவ்வளவு வேகமாக மதங்களை நீங்கள் வெறுக்க வேண்டும்? இதுவே ஒருவகை அடிப்படை நாத்திகம்தானே என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு.(319)

*
எந்த வேதப் புத்தகத்தையும் படித்துவிட்டு எந்தக் கேள்வியுமில்லாமல் அப்படியே நம்புவதில்லை. மாறாக, எனக்குப் பிடித்த பரிணாமக் கொள்கையை நான் எந்த வேத நூலையும் வாசித்து விட்டு நம்பாமல், உண்மையான அறிவியல் சான்றுகளைப் படித்துவிட்டு அவைகளை நம்புகிறேன்.(319)

*
சான்றுகளைப் படித்துவிட்டு அதனால் பரிணாமக் கொள்கைகளை நம்புகிறேன். நாளையே புதிய சான்று ஒன்று வந்து பரிணாமத்தை எதிர்த்தால் அப்படியே பரிணாமத்தைத் தூக்கி எறிந்து விடுவோம். இதை அப்படியே ஒரு மத அடிப்படைவாதியால் சொல்ல முடியுமா?(320)

*
எனக்கு மத அடிப்படைத்தன்மை பிடிக்கவேயில்லை; ஏனெனில் அது அறிவியலை மிகவும் துச்சமாக்குகின்றது. நம் மனதை மாற்றவோ இன்னும் புதிதாக நிறைய தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணமோ இன்றி அவர்கள் இருப்பதற்கு அந்த அடிப்படைவாதமே காரணம்.(321)

*
மத மறுப்புக்குத்தான் பழைய ஏற்பாட்டில் பெரிய தண்டனை சொல்லப்பட்டிருக்கிறது. இன்றும் கூட பாகிஸ்தானின் சட்டமான Section 295-C -ல் மத மறுப்புக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.(324)

*
ஆப்கானிஸ்தானத்தில் 2006-ல் அப்துல் ரஹ்மானுக்கு கிறித்துவத்திற்கு மாறியதற்காக மரண தண்டனை கொடுக்கப்பட்டது.
இன்றும் 'விடுதலையாக்கப்பட்ட' ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மறுப்பிற்கு உள்ள தண்டனை மரணதண்டனைதான்.(326)

இப்படியெல்லாம் மத 'ஈமானை" காத்து ரட்சிக்கணுமா? நீங்கள் 'காக்கவேண்டிய' கடவுள் அவ்வளவு பாவப்பட்ட பலஹீனமானவரா?!

*

ஆப்கானிஸ்தானத்தில் ஒருபால் சேர்க்கைக்கு (homosexuality) கொடுக்கப்படும் தண்டனை உயிரோடு புதைக்கப்படுவதாகும்.
இங்கிலாந்திலும் ஒன்றும் லேசான தண்டனை இல்லை. Alan Turing என்ற கணினியின் முதல் முன்னோடிகளில் ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை (1967) அவரை தற்கொலைக்குத் தள்ளியது.(327)

*
நம்பிக்கையின் பாற்பட்ட 'குணவான்களுக்கு' அடுத்தவன் என்ன செய்கிறான்; அவன் மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்று பார்ப்பதில்தான் அத்துணை விருப்பம்.(327)

*
மனிதக் கரு, மத நம்பிக்கைகளின்படி ஒரு முழு உயிர். ஆகவே கருக்கலைப்பு பெரிய 'பாவம்'. (329)

*
(கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களை மதத்தின் பெயரால் கொல்லப்பட்ட கதைகளை இப்பகுதியில் விவரிக்கிறார்.)

*

ஈரானிலும், செளதியிலும் உள்ள சட்டங்களின்படி எந்த ஒரு பெண்ணும் தனியாக வீட்டை விட்டுச் செல்லக் கூடாது - ஆனால் ஒரு ஆண் கைக்குழந்தையுடன் (!) அவ்வாறு செல்லலாம். இதை வைத்து Johann Hari என்பவர் தினசரியில் எழுதியது: இஸ்லாமிய ஜிகாதிஸ்டுகளை அடக்க அவர்களது பெண்கள் போராடுவதே சரியாக இருக்கும்.(341)

*
லண்டன் வெடிகுண்டு நிகழ்ச்சிக்குப் பிறகு, Muriel Gray தினசரியில் எழுதியது: இந்தத் துயரமான, பயங்கரமான, முட்டாள்தனமான வெடி குண்டுகளுக்குக் காரணம் மதம் என்பதை மறைத்துவிட்டு, ... அரசும் ஊடகங்களும் இவைகளுக்குக் காரணம் மதங்கள் அல்ல என்பதுபோல் நடந்து கொண்டன.

இதற்குக் காரணம் முழுமையான கேள்விகளற்ற, தொட்டிலிலிருந்து சொல்லிக் கொடுக்கப்படும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளே காரணம். (344)

*
இந்த பயங்கரவாதங்களுக்கு ஒரு சிறு உதாரணம். பாலஸ்தீன தற்கொலைப்படையினரில் ஒருவன் பிடிக்கப்பட்ட போது அவன் (Nasra Hassan)2001-ல் The New Yorker என்ற தினசரியில் கொடுத்த பேட்டி:

"உன் இந்த முயற்சிக்குக் காரணம் என்ன?"

"எங்கள் ஆத்மாவின் இழுப்பு மேல் நோக்கியே இருக்கும். .."

"உங்களின் முயற்சி தோற்றுவிட்டால் ..?"

அப்போது நாங்கள் எங்கள் நபியை சந்தித்து, அவரோடு ஒரு துணையாளர்களாகி விடுவோம். ... எங்கள் ஜிகாதின் உறுதிமொழியின் பெயர் bayt al-ridwan. சுவனம் நபிகளுக்காகவும், வேதங்களுக்காக உயிரைத்தரும் எம்போன்றோருக்காகவும் உரித்தானது. ...
இந்த பேட்டியில் ஒளிபரப்பிய ஒரு சிறு காணொளியில், இந்த நபரும் இன்னொரு நபரும் ஒன்றிணைந்து, குரானின் மேல் கைவைத்து சபதம் எடுப்பதும், இறுதியில் அந்த இன்னொரு திட்டம் தீட்டியவர் இவனிடம் கூறுகிறார்: 'நாளை நீ சுவனத்தில் இருப்பாய்'."

டாக்கின்ஸ் கேட்கிறார்: இந்த இளைஞன் அந்த திட்டம் தீட்டியவரிடம், பின் ஏன் நீயே இதைச் செய்து, விரைவாக சுவனத்திற்குச் செல்லக் கூடாது' என்று கேட்டிருக்க வேண்டும்.
(345)


*

இப்படிப் பேசும் மக்கள் தாங்கள் பேசுவதை முழுவதும் அறிந்தே புரிந்தே பேசுகிறார்கள். இதன் மூலம் நாம் பெறும் ஒரு முக்கிய பாடம்: மதத் தீவிரத்தையல்ல, நாம் மதங்களைத்தான் சாடவேண்டும்.

மத நம்பிக்கைகள் என்பதற்காகவே மதிப்பு கொடுக்கப்பட வேண்டுமானால், ஓசாமாவின், மற்ற தற்கொலைப்படைத் தீவிரவாதிகளின் நம்பிக்கைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.(345)

மத நம்பிக்கைகளுக்கு நாம் கொடுக்கும் மதிப்பை நிறுத்தியே ஆக வேண்டும்.

*
இஸ்லாம் போலவே கிறித்துவமும் கேள்வி கேட்கப்படாத நம்பிக்கைகளே ஞானம் என்று போதிக்கின்றன. (346)

பத்து ஆண்டுகளுக்கு முன் Ibn Warraq என்ற இஸ்லாமில் ஆழமான அறிவுடையவரால் எழுதப்பட்ட ( இப்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் ) Why I am not a Muslim என்ற நூலில் சொல்லப்பட்டது: இஸ்லாமியர் அமைதி விரும்பும்போது கொடுக்கப்படக்கூடிய செய்திகளை குரானிலிருந்து கொடுக்க முடியும்; போரிட வேண்டுமானால் அப்போதும் குரானிலிருந்து செய்திகளைத் தர முடியும் என்கிறார். (347)

*
குரானில் வரும் அமைதியான வசனங்கள் குரானின் முன் பகுதியில் வருகின்றன; அவைகள் எல்லாமே நபி மெக்காவில் இருக்கும்போது வந்தவை. சண்டையும் வன்மையும் மிகுந்த வசனங்கள் அவர் மெதினாவுக்குச் சென்றபின் வந்தவை.

*
வளரும் பிள்ளைகளிடம் மதங்களைக் கூட கேள்வி கேட்டு வளரவேண்டும்; அப்படியே மதம் சொல்பவைகளை நம்ப வேண்டாம் என்று சொல்லி வளர்த்தால், நிச்சயமாக என்றும் இதுபோன்ற தற்கொலைப் படையாளிகள் தோன்ற மாட்டார்கள்.

*
மதங்களுக்காகத் தன் உயிரைத் தருவதற்காக சுவனம் அவர்களுக்காகக் காத்திருக்கிறது - இப்படி பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது மதத் தீவிரவாதிகளல்ல; வீட்டிலிருக்கும் சாதுவான, அமைதியான பெரும்பான்மை முஸ்லீமகள்தான்.

*
வளரும் சிறு வயதிலேயே, அந்த அறியாப் பருவத்திலேயே, வளைந்து கொடுக்கும் அந்த வயதிலேயே மத நம்பிக்கைகளை ஆழமாகப் பதிப்பது மிகவும் தவறு.

*



*

31 comments:

நையாண்டி நைனா said...

present sir.

Udhaya said...

தங்கள் பதிவு நன்றாக உள்ளது.

ஆனால் கடவுள் என்பது ஓர் தனி நிலை இல்லை. இந்த பிரபஞ்சத்தை போல பல பிரபஞ்சங்களை தனக்குள் உள்ளடக்கியதும் . அணுவினுள் அணுவாய் இருப்பதுமாகிய ஓர் சக்தியே கடவுள். இந்த புலன் , அறிவு , மனம் இவற்றை கடந்தால் இவற்றிற்கு அப்பாற்பட்ட கடவுள் என்ற நிலையினை உணரலாம் என்று சித்தர்கள் கூறியுள்ளனர். நம் மனிதர்கள் எப்போதுமே ஒரு அவசர குடுக்கையாகவே உள்ளனர். கண்ணுக்கு முன்னால் கடவுளை காட்ட வேண்டும். இல்லை என்றால் கடவுள் நம்பிக்கை இல்லை. அது அறிவு மனம் இவற்றைதாண்டிய ஒரு அற்புத விஷயம் தான் இந்த கடவுள்.
ஒவ்வொரு மதமும் பல்வேறு முரண்பாடுகளை கொண்டிருப்பதால் உங்கள் பதிவுகளுக்கு மதம் என்றொரு மாயை என்று தலைப்பிடலாம்.

கிருஷ்ண மூர்த்தி S said...

"The Atheist is God playing at hide and seek with Himself; but is the Theist any other? Well, perhaps; for he has seen the shadow of God and clutched at it."

Sri Aurobindo

Thoughts and Aphorisms- 33

தன்னுடைய விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் மட்டுமே ஒன்று இருக்கிறது அல்லது அது இல்லை என்று மறுக்கும் போக்கைத் தவிர, டாகின்ஸ் புதிதாக இங்கே எதையுமே சொல்ல முற்படவில்லை. நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும், அல்லது டாகின்ஸ் விவாதித்திருக்கும் பகுதிகள் சரியாக இருந்திருந்தால், அப்போது மட்டும் கடவுள் உண்டு அல்லது இல்லை என்று தெளிவாகி இருக்குமா?

கடவுளை மறுக்க இவை போதுமான, வலுவான காரணங்கள் இல்லையே!

passerby said...

You are a mysterious blogger who just reproduces extracts from some thinker or newsreport and pretends to have no opinion of your own apropos the extracts.

Be that as it may.

From the extracts of Richard Dawkins, dont you think he is not talking about God, but about how the religions use the concept of God. He is against the principles, codes that the religions enjoin upon their followers. He is more concerned about the trafic suffering like death penalty for conversion, blashphemy etc. perpetrated in the name of God.

In case the effects of the organised religions on their followers are positive - that it encourages rational thinking, that it reforms itself by chopping off its dead wood from time to time. in tune with the modern times, that it does not become a kill joy in the harmless enjoyments of daily lives of its followers, that it is not dogmatic, but liberal, so on and so forth, Richard Dawkins can have no complaint.

It is disappointing to find people accepting things without examining. It becomes clear if one sees the popularity of Dawkins even with the so-called educated men and women.

We must never lose ourselves to get carried away by a sensational thinker.

தருமி said...

நை.நை.,
இதுக்கு பேசாம proxy கொடுக்க மட்டும் ஒரு ஆளை சேத்துக்கங்க ...

தருமி said...

உதயா,
//மதம் என்றொரு மாயை என்று தலைப்பிடலாம்.//

நான் கொடுத்திருக்கும் தலைப்பு நான வாசித்த புத்தகத்தின் தலைப்பு.

நான் சொல்வது மனித அறிவுக்கு உட்பட்ட விஷயங்கள்தான். நீங்கள் சொல்லும் புலன் , அறிவு , மனம் இவற்றை கடந்தால் .. என்பது போன்ற சித்தர்வாக்குகளை நம்ப நான் தயாரில்லைங்க.

தருமி said...

கிருஷ்ணமூர்த்தி,
//clutching the shadow of god ..//

what is shadow; what is real - அப்டின்னெல்லாம் கேள்வி வருதுங்க.

//டாகின்ஸ் விவாதித்திருக்கும் பகுதிகள் சரியாக இருந்திருந்தால், அப்போது மட்டும் கடவுள் உண்டு அல்லது இல்லை என்று தெளிவாகி இருக்குமா?//
புரியவில்லை.

//கடவுளை மறுக்க இவை போதுமான, வலுவான காரணங்கள் இல்லையே!//

உங்களுக்கு இப்படி. ஏற்கெனவே மறுத்துவிட்ட எனக்கு இவைகள் எல்லாம் complementary points தான்.

தருமி said...

கள்ளபிரான்,

//You are a mysterious blogger..// let me take it as a compliment!!

//...pretends to have no opinion of your own apropos the extracts...

your contention. but this post is just a complement to my ideas posted in many previous posts. better pass your judgment after going thru them!

my judgment on your II & III paragraphs: you pass your comments on this post alone without reading the earlier ones. concept of god is talked about and then the religions in the book.

//It is disappointing to find people accepting things without examining. //
so sad. however who are they?

தருமி said...

கிருஷ்ணமூர்த்தி, களப்பிரன்,

என் இரண்டாவது கட்டளையின்படி என் தேடலில் நான் கண்ட முடிவிற்குப் பிறகுதான் இதுபோன்ற என் கருத்துக்கு ஒத்துவரும் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். நீங்கள் இருவரும் கருதுவதுபோல் இந்தப் புத்தகம் என்னை வழிநடத்தவில்லை.

Sundararajan P said...

The God Delusion புத்தகத்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் தமிழில் விரைவில் வெளியிடுகிறது.

தருமி said...

சுந்தரராஜன்,
கொடுத்துள்ள நல்ல செய்திக்கு நன்றி.

Anna said...

Hi Dharumi Sir,

I have read many of your blog posts with interest but this is my first time to comment.

I have read this book a while ago. Infact I think I have all Dawkin's books in my book shelf. :)

Like yourself, I had become an atheist long before I started reading these types of books. I love the way Dawkins thoughts make us think in a totally new direction.

You are doing a great job of translating sections of this book.

The reason for this blabby comment is to introduce you to the following website that you might like.

http://www.mrdeity.com

Mr. Deity is hilarious. Here's an example episode.

Mr.Deity and the planes:
http://www.youtube.com/watch?v=z0lYxwSZTPA&feature=player_embedded

கிருஷ்ண மூர்த்தி S said...

/என் தேடலில் நான் கண்ட முடிவிற்குப் பிறகுதான் இதுபோன்ற என் கருத்துக்கு ஒத்துவரும் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன்/

பிரச்சினையே இங்கு தான் இருக்கிறது ஐயா! முன்கூட்டியே ஒரு அனுமானம், அதன் பேரில் எடுக்கப்படும் முடிவு, அதற்கு ஒத்துப்பாடும் கருத்துக்களைமட்டுமே நான் படிப்பேன், சொல்லுவேன் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?

தவிர, புரிந்துகொள்ளுதல் என்பது முரண்படும் கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்தபின் நிகழ்வது. இங்கே நான் வந்து படித்துவிட்டுப் போவது கூட, ஒரு மாற்றுச் சிந்தனை தென்படுகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளத் தான். மாற்றுச் சிந்தனை இல்லாத போது, பேசுகிற நாத்திகமோ, ஆத்திகமோ, வெறும் வறண்ட கோட்பாடாக ஆகிப்போய் விடுகிறது இல்லையா?

தருமி said...

An Analyst,
Mr. D's meet with skeptic and virgin were quite nice. thanks for the videos. but i was remembered of George Carlin's videos. so posted one of them.

தருமி said...

///என் தேடலில் நான் கண்ட முடிவிற்குப் பிறகுதான் இதுபோன்ற என் கருத்துக்கு ஒத்துவரும் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன்///

கிருஷ்ணமூர்த்தி,
கடவுளைப் பற்றிய என் தன்முனை முடிவுகளுக்குப் பின்னே இதுபோன்ற புத்தஙகங்களைப் படித்தேன் - இது சரியான பொருள் தருகிறதா?

அதைத்தான் என் முன்னுரையில் கூறியிருந்தேன். நான் வாசித்த சில மதப் புத்தகங்களைப்பற்றியும் அங்கு குறிப்பிட்டுள்ளேன்.என் கருத்துக்கு எதிரான புத்தகங்கள் கிடைத்தால் வாசிப்பதில் தடையேதுமில்லை.

நீங்கள் குறிப்பிடும் "மாற்றுச் சிந்தனை" என்ன என்பது எனக்குத் தெரியவில்லை.

நான் எழுதுவது என் சிந்தனைகள்.

கிருஷ்ண மூர்த்தி S said...

/நான் எழுதுவது என் சிந்தனைகள்./

இதையே கூட ஒரு தொடக்கப் புள்ளியாக வைத்துக் கொண்டு சிந்திக்க ஆரம்பிக்கலாம், ஐயா! நான், எனது என்பன எங்கிருந்து வருகின்றன? எனது சிந்தனைகள் என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே என்னுடையதுதானா? அல்லது வேறோரிடத்தில் நான் பார்த்தது, கேட்டதில் ஒன்றிப்போய், எனது என்று சொல்ல ஆரம்பித்தேனா....இப்படிக் கேள்விகளில்பொய்மையை நிராகரித்து நிராகரித்து, உள்ளதை உள்ளபடி அறிய முற்படுவது ஒரு தத்துவத் தேடல் தான்!

மதங்கள், சடங்குகள் அதில் காலப்போக்கில் கலந்துவிட்ட தவறான பொய்களை நிராகரிக்கிறேனென்று, மொத்தத்தையுமே நிராகரிக்கிற தவறான எதிர்முனைக்குப்போய் விடக் கூடாது இல்லையா!

தருமி said...

கிருஷ்ணமூர்த்தி,
//எனது சிந்தனைகள் என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே என்னுடையதுதானா? அல்லது வேறோரிடத்தில் நான் பார்த்தது, கேட்டதில் ஒன்றிப்போய், எனது என்று சொல்ல ஆரம்பித்தேனா...//

There is nothing as original என்றும் சொல்வார்கள். ஆயினும் முடிந்தவரை என் சொந்த 'புத்தியில்' தோன்றியவைகளைத்தான் எழுதியுள்ளேன்.

//மொத்தத்தையுமே நிராகரிக்கிற தவறான (???) எதிர்முனைக்குப்போய் விடக் கூடாது //

என் முனை எனக்குச் சரியாகத் தெரிகிறது - உங்களுக்கு உங்கள் முனை போல் ...

தருமி said...

//என் முனை எனக்குச் சரியாகத் தெரிகிறது//
அன்றும் என்றும் ஒரு யூனியனிஸ்டாக இருந்தேன். கடவுள் நம்பிக்கைகொண்டு என் மதத்திட்டங்களுக்கு உடன்பட்டு இருந்தேன். இப்போது இரண்டாவதில் மட்டும் மாறி விட்டேன். அன்று இருந்தது வளர்ப்பு; இன்று இருப்பது தெளிவு.

// உங்களுக்கு உங்கள் முனை போல் ...//நீங்கள் உங்கள் இரு தரப்பிலும் மாறிவிட்டதாகக் கூறினீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது எது சரியாகத் தெரிகிறது> இப்போது இருக்கும் நிலைதான் என்று நினைக்கிறேன் ...

கிருஷ்ண மூர்த்தி S said...

Thesis-->Anti-thesis=Synthesis

சிந்தனையோட்டத்தின் முரண் இயக்கங்களில் முழுநம்பிக்கை உள்ளவன் என்பதால், எல்லாவிதமான சிந்தனைகளையும் கூர்ந்து கவனிக்கிறேன், யோசிக்கிறேன், எனக்குப் புரிந்த அளவில் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறேன்.

அப்படி உருவான கருத்துக் கூட, தொடர் முரண் இயக்கத்திற்கு உட்பட்டது தான்! இதைத்தான் முன்பு பேசிக் கொண்டிருந்த ஒரு தருணத்தில் சொன்னேன் ஐயா!

வளர்ப்பினால் ஆத்திகனாக அல்லது நம்பிக்கையாளனாக இருந்து இடையில் நாத்திகனாகவும், இறை மறுப்பாளனாகவும் இருந்து, ஆன்மீகச் சிந்தனைக்கு மாறியிருக்கிறேன் என்று சொல்லும்போது, அதே பழைய மதப் பிடிமானங்களுக்குக் கீழே அல்ல, பரந்து விரிந்த புதிய கண்ணோட்டத்துக்குத் தயார் செய்துகொள்ளும் முயற்சியில் இருப்பவனாகவே! நீங்கள் தெளிவு என்று கருதும் நிலையைக் கடந்து வந்து வெகு நாட்களாயிற்று!

Unknown said...

<<<
மக்கள் எல்லோரையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கடவுள் - மேலே வானத்தில் இருந்துகொண்டு் - நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடத்திலும், நாளிலும் என்னென்ன செய்கிறோம் என்பதைக் கவனித்துக் கொண்டிருப்பதாக ஒரு நினைப்பை மதம் ஏற்படுத்தி விட்டது
>>>

I dont agree this, if god monitoring us why does he create heaven and hell? I hope you don’t believe this. Say for example, If god decides this person has to go hell and this is for heaven, why suppose to him monitoring if everything preplanned? As per me… born and death in his hand reaming everything in our hand. God monitoring means… don’t make anything wrong then you will be punishable. For example one person writing exam and he is copying from another person, before entering exam hall exam inspector announcing that copying is illegal, that could be banned and he went out. That person doesn’t know camera is watching them, so he started copying… we can use this example here. If he knows that some one monitoring we will aware of that.

Reaming all your points, its being by human being…. Please don’t take any Islamic countries rules as the Qurans law. human makes wrong.

வால்பையன் said...

//இன்றும் கூட பாகிஸ்தானின் சட்டமான Section 295-C -ல் மத மறுப்புக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.//

நல்லவேளை நாம் பாகிஸ்தானில் பிறக்கவில்லை!

தருமி said...

//நீங்கள் தெளிவு என்று கருதும் நிலையைக் கடந்து வந்து வெகு நாட்களாயிற்று!//

same blood

தருமி said...

மஸ்தான்,
நீங்கள் சொன்னது ஏதும் புரியவில்லை - இந்தக் கடைசி வரி தவிர.

//Reaming all your points, its being by human being…. Please don’t take any Islamic countries rules as the Qurans law. human makes wrong.//

கேட்டால் இப்படி சொல்லிர்ரீங்க. எங்க குரான் வாழ்வியல் சொல்லியிருக்குன்னு சொல்றீங்க. அதை வைத்து நடக்கும் அரசு பண்றது தப்புன்னு சொல்றீங்க.

இப்ப சொல்லுங்க .. மத மாற்றத்திற்கு உங்கள் மதத்தில் தண்டனை உண்டா, இல்லையா?

தருமி said...

//நல்லவேளை நாம் பாகிஸ்தானில் பிறக்கவில்லை!//

same blood

தருமி said...

மஸ்தான்,
உங்கள் பதில் வருமெனக் காத்திருந்தேனே ..

உங்களுக்குகொஞ்சம் உதவியாக இன்னொரு செய்தி:
ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்."

வால்பையன் said...

//அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்."//

அல்லா கசாப்பு கடை வைத்திருக்கிறாரா!?

நான் சொல்றபடி நடக்கலைனா கொன்னுபுடுவேன்னு ஒரு கடவுள் சொல்லும்னு எனக்கு நம்பிக்கையில்லை! ஒருவேளை சொன்னது சாத்தானாக இருக்குமோ!

கடவுள் என்பவர் அன்பு மயமானவர் தானே! இவ்வளவு வன்முறை இருந்தால் அது சாத்தான் தானே!

Prabhu said...

உங்களுக்குகொஞ்சம் உதவியாக இன்னொரு செய்தி:
ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்."////

enna koduma saravanan idhu?

ippati oru matter kelvi patathilayae?

god is a good shepherdnu sonadhalaya? :)

கிருஷ்ண மூர்த்தி S said...

/enna koduma saravanan idhu?
ippati oru matter kelvi patathilayae?
god is a good shepherdnu sonadhalaya/

நல்ல மேய்ப்பன்னு தான் ஆரம்பத்துல சொன்னாங்க!

பின்னால வந்த 'ரசிகர்களுக்கு 'கைமா' தான் ரொம்பப் புடிச்சதுங்கிறதால மேய்ப்பரையே கசாப்புக் கடை வைக்கச் சொல்லிட்டாங்க போல!

smart said...

மதிப்புக்குரிய தருமி,
நீங்கள் கொஞ்சமாவது சிந்திக்க முனைந்து ஒரு வட்டத்துக்குள் சிந்திக்கிறேர்கள். உங்கள் பதிவுகளில் ஆரோக்கியமாக விவாதம் தொடர விரும்புவது பாராட்டவேண்டியது. நீங்கள் காட்டும் தப்புக்களும், தவறுகளும், மனிதத்தவறுகளே, உங்களால் உணரமுடியாத விஷயங்களை இல்லை என்று கூறி அதற்கு மனிதத் தவறுகளை காரணம் காட்டிக்கொள்கிறீர்கள். நீங்கள் மேலும் சிந்தித்துக் கொண்டிருக்கீர்கள் சிந்தியுங்கள் விஷயங்கள் புரியும். ஆனால் அதற்கிடையில் கடவுள் மறுப்பை ஒரு தீவிரவாதியாகவும் , ஒரு நாகரீக மீறலாகவும் செய்பவர்களை உங்கள் துணையாக வைத்துக்கொள்வது நாத்திகத்தின் மறுப்புக்குத் துணை செய்யும். நானும் காட்டலாம் நாத்திகம் செய்பவர்கள் பேசும் வார்த்தைகள் இப்படி அப்படி, அவர்கள் எழுதும் முறை சரியில்லை எனக்காட்டமுடியும் அப்போது நாத்திகம் தவறு என்று ஒப்புக் கொள்வீர்களா ?

மனித தவறுகளை மதத்தினுள்ளே இணைக்காதீர்கள்!

smart said...

//நாளையே புதிய சான்று ஒன்று வந்து பரிணாமத்தை எதிர்த்தால் அப்படியே பரிணாமத்தைத் தூக்கி எறிந்து விடுவோம்//
அப்ப அதன் பெயர் அரைகுறை

//அல்லா கசாப்பு கடை வைத்திருக்கிறாரா!?//
பூமியே அவரின் கீழ் உள்ளதாக சொல்லும் போது இப்படி அறிவிலியாக கேட்பது இந்த நகைச்சிவை விருதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

தருமி said...

////நாளையே புதிய சான்று ஒன்று வந்து பரிணாமத்தை எதிர்த்தால் அப்படியே பரிணாமத்தைத் தூக்கி எறிந்து விடுவோம்//
அப்ப அதன் பெயர் அரைகுறை //

கொஞ்சம் யோசித்து எது / யார் அரைகுறையென்று காணுங்கள்.

Post a Comment