Wednesday, December 05, 2012

610. இலங்கைப் பயணம் ...2




*
பயணப் பதிவுகள்;








*

முதல் பதிவு

இரண்டாம் பதிவு

மூன்றாம் பதிவு 

நான்காம் பதிவு

ஐந்தாம் பதிவு

ஆறாம் பதிவு

ஏழாம் பதிவு

எட்டாம் பதிவு

ஒன்பதாம் பதிவு

பத்தாம் பதிவு

பதினொன்றாம் பதிவு

பன்னிரெண்டாம் பதிவு






*
எங்க ஊர் மதுரையின் விமான நிலையமும் பன்னாட்டு நிலையமாக மாறி விட்டதாம். நாலைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த ‘ஆதி காலத்து’ நிலையம் சிறிது மாறியுள்ளது. முதலில் ஸ்ரீலங்காவிற்குத் தான் இங்கிருந்து சேவை தொடங்கியுள்ளது. ஸ்ரீலங்காவின் விமான சேவையும் மதுரைக்கு ஆரம்பித்து விட்டார்கள். 

*

*
மதுரை சின்ன ஊர் தானே! பாஸ்போர்ட்டை வாங்கி சோதித்த இருவரும் சில கேள்விகள் கேட்டார்கள். என்ன வேலை என்று கேட்டார்கள். சொன்னதும் ஒரே மகிழ்ச்சி அவர்கள் முகத்தில். இருவரும் எங்கள் கல்லூரியின் பழைய  மாணவர்களாம். கல்லுரியின் இப்போதைய சோகக் கதை பற்றிக் கேட்டார்கள்.





*
விமானத்துக்குள் பணிப்பெண்கள் ஏதேதோ சைகைகளில்  செய்கிறார்களே .. இதுவரை இது யாருக்காவது புரிந்திருக்குமா என்று நினைத்தேன்.  ஒரு கதை வாசித்தேன். அப்போது விமானப் பணிப் பெண்கள் இது போல் ஏதோ செய்வார்கள் என்று படித்ததும், பழைய பயணத்தில் இப்படி ஏதும் செய்தார்களா என்று யோசித்துப் பார்த்தேன். அப்படி ஏதும் நினைவில் இல்லை. அதனால் இந்த முறை



                                                                                                        அவர்கள் ஏதாவது செய்கிறார்களா என்று பார்த்து விட வேண்டும்     என்று நினைத்திருந்தேன். அதற்காக உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தேன்.     பேசியவர் எந்த மொழியில்                                                         
பேசினார் என்று தெரிந்து கொள்ளவே கஷ்டமாகப் போச்சு. பணிப்பெண் ஆடிய ஆட்டமும் என்னவென்று தெரியவில்லை.


*




விமானத்தில் ஏறும் முன் அதன் வாசலில் சூரியன் படம் ஒன்று போட்டிருந்தது. முதலில் புரியவில்லை. பின்னால் தான தெரிந்தது Spice Jet நம்மூர் சூரியக் குடும்பத்தினரின் சேவை என்று தெரிந்தது.


ஒரு மணி நேரம் தானே. புகைப்படம் எடுக்கவே முதலில் 15 நிமிடமும், கடைசியில் 15 நிமிடமும் சரியாகப் போனது.






 விமானம் இலங்கைக்கு மேல் பறக்க ஆரம்பித்தது. விமான தளத்தில் இறங்கும் போது எதிர் வரிசையில் ஒரு விமானம் புறப்பட தயாராக ஓடிக் கொண்டிருந்தது. அது --->
அமெரிக்காவிலிருந்து வாங்கிய இலங்கை ராணுவ விமானம்!
கொஞ்சம் ‘சுருக்’கென்றது.



இறங்கும் போது  நல்ல மழை வரவேற்றது.


*
*
இன்னும் கொஞ்சம் பயணப் படங்கள் ... இங்கே ...

*
 

7 comments:

Unknown said...



பயணக் கதை சுவையாகச் செல்கிறது! தொடருங்கள் தொடர்வேன்!

ஜோதிஜி said...

படங்கள், அலைன்மெண்ட் கொஞ்சம் பிரச்சனை செய்கின்றது என்று நினைக்கின்றேன்.

கவனிங்க. ரொம்ப சுருக்கி எழுதாதீங்க. கொஞ்சமாவது விசயம் வேண்டாமா?

தருமி said...

//கொஞ்சமாவது விசயம் வேண்டாமா?//

அதுக்கு வர்ரதுக்கு ரொம்ப முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியதிருக்கே!

இதோ .. வந்திர்ரேன்.

வல்லிசிம்ஹன் said...

சரி,விசயத்தோடு வாருங்கள். மேகக் கூட்டம் அழகாக இருக்கு.

”தளிர் சுரேஷ்” said...

சுவையாகச் செல்கிறது பயண அனுபவம்! உடன் பயணிக்கிறேன்! நன்றி!

ராமலக்ஷ்மி said...

பகிர்வும் படங்களும் அருமை.

மேக மண்டலம் மாய ஜாலம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

விமானப் பணிப் பெண்கள் பாதுகாப்பு விடயங்கள் பற்றிக் கூறி சைகையில் காட்டியவை 82ல் எனக்கும் கண்ணைக் கட்டியது போலதான் இருந்தது.

Post a Comment