Tuesday, December 25, 2012

619. இலங்கைப் பயணம் - 9 - தலதா மாளிக





*



*
தலதா மாளிக .. புத்தரின் புனிதப் பல் ஒன்றை வைத்திருக்கும் புத்தர் கோவில். நீண்ட நெடும் வரலாறு இந்தப் பல்லுக்கு உண்டு. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இப்புனிதப் பொருள் பல இடங்களில் பாதுகாப்பிற்காகவும், மன்னனின் அரண்மனைக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் வேறு வேறு இடங்களில்  மாறி மாறி இருந்து வந்துள்ளன.

கோவிலின் பெரும்பகுதி ஒரு பெரிய கட்டிடத்திலும் அதைச் சுற்றிச் சின்னச் சின்ன கட்டிடங்களும் இருந்தன. எங்கும் புத்தர் வீற்றிருந்தார். அந்தப் பெரிய கட்டிடத்தைச் சுற்றி பெரும் அகழி நீரோடு இருந்தது. எம் போன்று சுற்றிப் பார்க்க வருபவர்கள் மிகக் குறைவு. எல்லோரும் பய பக்தியோடு கும்பிட வந்திருந்தார்கள்.





புத்தரின் அழகுச் சிலைகள் 
எங்கும், எல்லா அளவிலும் விரவிக் கிடந்தன.









நிவேதனப் பொருட்கள்  
இந்துக் கோயில்கள் போலவே இங்கும் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன.


நீண்ட  நெடும் வழி





நம்மூர் கோவில் தூண்கள் போலவே இருக்கின்றன.




பக்தி மயம்




புத்தர் கோவில்களில் நான் பார்த்த தந்தங்கள் 
நம்ப முடியாத அளவு அவ்வளவு பெரியதாக இருந்தன.













மரத் தூண்களால் ஆன ஒரு மண்டபம். இதில் ஏதும் கலை நிகழ்ச்சிகளுக்காக இருந்திருக்கலாம். ஏனெனில் மண்டபத்தின் ஒரு பக்கத்தின் தரையில் சில தடயங்கள் இருந்தன.






இந்திய ‘நட்பின்’ வெகுமதி!!











மிக அழகான மர மண்டபத்தின் நடுவே புத்தர். 
கருத்த தூண்கள். 
இந்த மண்டபம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது.










ஆடும் யானை ...






பாவம் பெரியவர் ... எனக்கும் இசைக்கும் இருக்கும் தூரம் இவருக்கும் இருக்கும் போலும். ஆனால் அவர் தொழிலே பூஜை நேரத்தில் இந்த கொட்டுகளிலிருந்து இசை எழுப்ப வேண்டும் போலும்.  ஆனால் எழுந்தது என்னவோ  ... அதில்  இசையேதுமில்லை .... வெறும் டொம் .. டொம் ..





தலதா மாளிகையின் வெளியே ஒரு தண்ணீர் ஊற்றுக்கு நடுவில் இருந்த இரும்புச் சிலைகள். ஆண்டவர்கள், .. அதாங்க .. பிரித்தானிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு அமைக்கப்பட்டவை.




தலதா மாளிகையின் வெளிப்புறத்தில் இருந்த ஒரு ஏரியும் .. 
அதைத் தாண்டிய இடமும். 
கருக்கொண்ட மேகங்களும் ...




பயமில்லாத புறாக்கள் மாளிகையின் வாசலில், 
மக்கள் கூட்டத்தைக் கண்டு கொள்ளாமல் ....




கோவிலை ஒட்டி ஒரு பொருட்காட்சியகம் இருந்தது. படங்கள் எடுக்க அனுமதியில்லை. அரச குடும்பத்தின் வரலாறு காண்பிக்கும் சிலைகள், படங்கள் இருந்தன. அந்தப் படங்களோடு 1983-ல் தமிழர்களால் தாக்குண்டு சிதைந்த சில இடங்களின் படங்களும் இருந்தன. :(


*

23 comments:

இராஜராஜேஸ்வரி said...

அழகான படங்கள்.. அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை.

Unknown said...

அருமையான பகிர்வு அய்யா ,

பலமுறை தலதா மாளிகை சென்றுள்ளேன்..ஆயினும் என் 4 வயதில் (1996 இல் ) சென்ற போது இருந்த பழமையின் அழகு அதன் பின் இடம் பெற்ற குண்டு தாக்குதலில் சின்னாபின்னம் ஆகி போனது...முன்னர் இருந்த தங்க கூரை வேலைபாடுகளை பின்னர் காணவில்லை...அகழி சுவர் சேதம் அடைந்து நீர் வற்றி மீன்கள் மடிந்து கிடந்தன ...

இங்கு இருக்கும் ஒரு மரகத புத்தர் சிலை பௌர்ணமி விசேட நாட்களில் மட்டுமே காட்சி படுத்த படுமாம்.,ஒரு முறை பார்த்து இருக்கிறேன்

இம்மாளிகையில் பாடம் செய்யப்பட்ட ஒரு பட்டத்து யானை உடல் இருக்குமே ...பார்த்தீர்களா ????

இலங்கையின் கடைசி மன்னன் ஆட்சி செய்தது இம்மாளிகையில் தான் ...மதுரையில் 1780 இல் பிறந்த கண்ணுசாமி (எ ) ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன் என்கிற நாயக்க வம்ச மன்னன் தான் அவன்...இலங்கை பௌத்த மக்களின் அபிமானத்தை பெற்று கொள்வதற்காக தன்னை ஒரு பௌத்தனாகவே காட்டி கொண்டான்..உடை,பேச்சு,பழக்கவழக்கம் அனைத்தும் சின்ஹல பௌத்தனே .......(இப்படி தான் படி படியா சந்திரமுகி ஆகினா !!!!!!)))) அப்புறம் எல்லா தெற்காசிய மன்னர்கள் போலவும் இறுதியில் ஆங்கிலேயனிடம் 1815 இல் மண்டியிட்டான் ,சிறைபிடிக்க பட்டான்...

//நம்மூர் கோவில் தூண்கள் போலவே இருக்கின்றன//

இலங்கையின் கட்டிட கலை பெரும்பாலும் பல்லவ சிட்பகலையை ஒத்தது என்பதே ஆகும்..தென் இந்திய ஆட்சிகாலத்தின் போதே இலங்கையின் கட்டிட கலை வளர்ச்சியுற்றது...நாட்டு மக்களின் நன் மதிப்பை பெற ஏராளமான விகாரைகள் கட்டபெற்றன...இந்தியாவின் சாஞ்சி தூபி கட்டிட அமைப்பை இலங்கையின் அனேக விகாரைகளில் காணலாம் ...மற்றும் தலதா மாளிகையின் பிரதான ஸ்தபதியாக பணியாற்றியவர் தேவேந்திர மூலாச்சாரி என்பவர் ஆவார் ...சிகிரியா குகை ஓவியங்களும் ,இந்தியாவின் அஜந்தா குகை ஓவியங்களும் ஒரே மாதிரியாக காண படுவதும் குறிப்பிட தக்கது

Unknown said...

//தளித மாளிகையின் வெளிப்புறத்தில் இருந்த ஒரு ஏரியும் ..
அதைத் தாண்டிய இடமும்.
கருக்கொண்ட மேகங்களும் ...//

VERY NICE PHOTOGRAPHY SIR...GOING TO BE THE PHOTO OF THE YEAR

தருமி said...

//GOING TO BE THE PHOTO OF THE YEAR //

அட போங்க’ப்பா...! நாம் எடுத்த படங்களைப் பற்றி இப்படியெல்லாம் சொல்லாதீங்கப்பா ... அதைப் பத்திப் பேசினாலே எனக்கு ரொம்ப ‘அழுவையா’ வந்துரும்!!!

தருமி said...

//தலதா மாளிகை சென்றுள்ளேன்..//

நான் ‘தளதா’ என்று எழுதியுள்ளேன். திருத்தி விடுகிறேன். நன்றி

தருமி said...

கொடுத்த அதிகப்படியான தகவல்களுக்கு மிக்க நன்றி.

//பாடம் செய்யப்பட்ட ஒரு பட்டத்து யானை உடல் இருக்குமே ...பார்த்தீர்களா ????//

இல்லையே!

//
இலங்கையின் கடைசி மன்னன் ஆட்சி செய்தது இம்மாளிகையில் தான் ...மதுரையில் 1780 இல் பிறந்த கண்ணுசாமி (எ )..//

இந்த வரலாற்றுச் செய்திகள் தெரியாது. நன்றி

Unknown said...

//இந்த வரலாற்றுச் செய்திகள் தெரியாது. நன்றி//

உபயம் - தரம் 11 சமூககல்வியும் வரலாறும் புத்தகம்

Unknown said...

TRUE...PHOTOS ARE REALLYA AMAZING

Unknown said...

நீங்க இலங்கைக்கு வர போற செய்தியை முன்னாடியே சொல்லிருந்தா தருமி ரசிகர் மன்றம் சார்பா பெரிய விருந்தே வச்சுருப்போமே ......

வேகநரி said...

வழங்கம் போல சிறந்த பயண கட்டுரை. நல்ல ஒரு ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டுக்கு பக்கத்து இசை மாதிரி விஜே ஸ்ரீலங்கனின் பக்க உரை நல்லாவேயிருக்கு.

தருமி said...

வேகநரி

‘இசைக்கும் பக்கத்து இசை’க்கும் மிக்க நன்றி

தருமி said...

இராஜராஜேஸ்வரி
ராமலக்ஷ்மி


........... நன்றி

ரிஷபன்Meena said...

என் மனதுக்கு மிக நெருக்கமானது உங்கள் எழுத்து.

நீங்கள் சென்ற மாதிரி ரசித்து சென்றால் பயணம் என்பது அற்புதமானது தான்.

எனக்கும் பயணம் ரொம்ப இஷ்டமானதே. போகிற இடங்களின் வரலாற்றுப் பின்னனி மற்றும் பிற விவரங்களை பல்வேறு தளங்களில் தேடும் போதே பயணம் புறப்பட்டது போலிருக்கும். போய் வந்த பின் பயணக் கட்டுரையாய் எழுதும் போது அது தனி சுகம் , மாடு அசை போடுவது போல.

ஒவ்வொரு இடத்துக்கும் உங்கள் கூடவே பயனித்தது போலிருந்தது. அதுவும் அந்த ஆங்கிலோஇலங்கியர் வீடு பற்றி எழுதியது அழகு. நான் பயணக்கட்டுரைகளை பல பாகங்களாக எழுத நினைத்து ஆரம்பிப்பேன் ஆனால் அது இது வரை இரண்டு பகுதிகளைத் தாண்டியதே இல்லை. நீங்கள் எட்டுப் பகுதிகள் எழுதி விட்டீர்கள் , நினைத்ததை முடிப்பவர் , வாழ்த்துக்கள்.
தம்புள்ள வரை சென்று வந்திருக்கிறீர்கள் கண்டிப்பாக சிகிரியா சென்றிருப்பீர்கள் அதைப் பற்றி உங்கள் கட்டுரையில் பார்த்ததாக ஞாபகம் இல்லை. எங்கள் ஊரில் அருகே இருக்கும் திருமயம் கோட்டையை விட சின்னஞ்சிறு சிகிரியா (பாறை)கோட்டைக்கு அந்நாட்டு சுற்றுலாத் துறை கொடுக்கும் விளம்பரங்களிலும் பில்டப்களிலும் வெள்ளையர் கூட்டம் நிரம்பி வழிகிறது.

ரிஷபன்Meena said...


நாங்கள் ஸ்ரீலங்கா சென்றிருந்த போது , இனையத்தில் பார்த்த ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் கார் மற்றும் ஹோட்டல் ஏற்பாடு செய்திருந்தோம். இமெயில் இவ்வளவு வாக்குறுதி கொடுக்கிறார்கள் நேரில் என்னவோ என்ற சந்தேகத்துடன் தான் சென்றோம்

ஆனால் அவர்கள் மட்டுமல்லாது சுற்றுலாதளங்களில் இருக்கும் இலங்கை மக்களும் டூரிஸ்ட்களை ஏமாற்றாமல் இருந்தது மன நிறைவைத் தந்தது.

பின்னவளா யானைகள் சரணாலயத்தில் கண்ணி வெடியில் காலிழந்த யானையை அவர்கள் பராமரிப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்தேன். அந்த சரனலாயத்துக்கு டூரிஸ்ட்களை கவர்கிற வியாபார நோக்கமுண்டு அதே சமயம் யானையைக் கவணித்துக் கொள்கிற பண்பும் உண்டு. நம்மிடம் அப்படி ஒரு சரணாலயம் இருந்திருந்தால் இரண்டுமே இருந்திருக்காது.
ஸ்ரீலங்கா வின் சாலை ஒழுங்கையும் அதன் சுற்றுலாத்தளங்களின் சுத்தத்தையும் பற்றி நீங்கள் எழுதியது 100 சதவீதம் சரி. இத்தனை சிறிய நாட்டில் , நம்மை விட பொருளாதரத்தில் தாழ்ந்த நாட்டில் இப்படி நிர்வகிக்க முடியுமென்றால் , நம்மிடம் சீரியஸாக எதோ தவறு இருக்கிறது.
நம்ம நாட்டில் சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான ஆட்சியாளர்கள் அதிகாரிகள் இவர்களிடம் பாடம் படிக்க வேண்டும்.

ரிஷபன்Meena said...

//இலங்கையின் கடைசி மன்னன் ஆட்சி செய்தது இம்மாளிகையில் தான் ...மதுரையில் 1780 இல் பிறந்த கண்ணுசாமி (எ ) ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன் என்கிற நாயக்க வம்ச மன்னன் தான் //

இது புதிய தகவல்.

கண்டி கடைத் தெருவில் இருந்த(கதிர்காமர்) முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்ற எங்கள் கைடு, கண்டி மன்னரின் மனைவி மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர், அவருக்காக மன்னர் கட்டிய கோவில் இது என்றார். இப்பதான் தெரியுது மன்னரே நாயக்கர்காரு தான் என்று.

Unknown said...

@ திரு ரிஷபன் ,
//கண்டி கடைத் தெருவில் இருந்த(கதிர்காமர்) முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்ற எங்கள் கைடு, கண்டி மன்னரின் மனைவி மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர், அவருக்காக மன்னர் கட்டிய கோவில் இது என்றார். இப்பதான் தெரியுது மன்னரே நாயக்கர்காரு தான் என்று.//

இலங்கை ஒரு சில பௌத்த பழமை வாத வரலாற்று ஆசிரியர்களால் திரிபு படுத்த பட்டு அழகு பார்க்கப்பட்டது..இலங்கையின் வரலாறான மகாவம்ச நூலின் படி சிங்களவர்களின் முன்னோடி விஜயன் எனும் ஆரிய தேச இளவரசன் ..இவன் ஒரு ஒலக மகா பொம்பள பொறுக்கி...அவன் கொடுமை தாங்காமல் அவன் தந்தை சிங்கபாகு (இவன பத்தியும் ஒரு கதை இருக்கு)
அவன்+அவனது 700 தோழர்களையும் ஒரு கப்பலில் போட்டு அனுப்பி விட அது இலங்கை வந்து சேர்கிறது ,அங்கு நூல் நூற்கும் (இலங்கை எப்பவோ கைத்தொழிலில் முன்னேறிட்டு பா ...) குவேனி எனும் வேடுவ பெண்ணை கவர்ந்து அவளை திருமணம் செய்து பின்னர் அவளை துரத்தி விட்டு பாண்டிய இளவரசியை திருமணம் செய்கிறான்...

இதுவே ஒரு புரட்டு தான் ...ஆனாலும் சமீப காலமாக இலங்கையில் இந்திய எதிர்ப்பு வலுத்து வருகிறது.சின்ஹலவர்கள் தங்களை இந்திய வழி தோன்றல்களாக பார்க்க விரும்பவில்லை.இலங்கையின் பூர்வ குடிகள் தாங்களே என்றும் தமிழர்கள் வந்தேறிகள் எனவும் கூறுகின்றனர்..அதாவது இராவணன் வழி தோன்றல்கள் தான் சிங்களவர்கள் என நிறுவும் முயற்சி அரங்கேறி வருகிறது..இராவணன் குளித்த இடம்,இராவணன் பாறையை வெட்டிய இடம்,இராவணன் புட்பக விமானத்தை இறக்கிய ஓடு பாதை என்பன கண்டுபிடி ....மன்னிக்கவும் . உருவாக்க பட்டுள்ளது... அதே வகையில் தான் இலங்கை மன்னர்கள் தொடர்பிலும் உண்மைகள் மறைக்க படுகின்றன..


ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன் அவனை சிங்களவனாக காட்டி கொண்ட போதிலும் அவன் அவன் தமிழனே ..ஆயினும் நூல்களில் அவன் சிங்களவனே ...இது மட்டுமன்றி பல தமிழ் மன்னர்கள் சிங்களவர் ஆனதும் ,தமிழ் மன்னர்களின் சேவைகள் மறைக்க பட்டதும் வரலாற்றின் வழி நெடுக காணப்பட்டது ...

இவ்வளவு ஏன் ..இங்கு இந்தியாவை விட ஜாதக ஜோசியம் பார்ப்பது அதிகம் ..அதிலும் சில நண்பர்கள் ...நீங்க ஜோசியம் பார்பீங்களா ???
விஷ்ணு,சிவன்,விநாயகர் எல்லாம் கும்பிடுவின்களா ???னு கேப்பாங்க...

ஒரு சிலர் மட்டுமே இவ்வாறு ...மற்றபடி இலங்கையர் அனைவரும் ஒரு தாய் மக்களே ...
இரு மொழிகளில் தேசிய கீதம் இசைக்கபடுகிறது(தமிழ் மற்றும் சின்ஹலம் ) காலம் இப்போது மாறி வருவதும் சந்தோசமே ..அதற்கு தருமி அய்யாவின் கட்டுரையே சாட்

Unknown said...

@வேகநரி

//நல்ல ஒரு ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டுக்கு பக்கத்து இசை மாதிரி விஜே ஸ்ரீலங்கனின் பக்க உரை நல்லாவேயிருக்கு//


அதாவது சக்கரை பொங்கலும் வடைகறியும்
மாதிரி தானே ??????

தருமி said...

//. நீங்கள் எட்டுப் பகுதிகள் எழுதி விட்டீர்கள் , நினைத்ததை முடிப்பவர் ..//

ரிஷபன்

நான் எங்கே எழுதினேன். வெறும் ‘படங்காட்டல்’ தானே அதிகம்!

சிகிரி நாங்கள் பார்க்கவில்லையே.

நீங்கள் சொல்லும் சுத்தம் நாடு பூராவும் பார்த்ததும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும்.

கோமதி அரசு said...

தலதா மாளிகையின் வெளிப்புறத்தில் இருந்த ஒரு ஏரியும் ..
அதைத் தாண்டிய இடமும்.
கருக்கொண்ட மேகங்களும் ...//

அருமையான படம்.
நாங்கள் இங்கு போய் வந்தோம்.

Nara said...

தருமி சார்,

இந்த முறை இந்தியா வரும்போது குடும்பத்துடன் இலங்கை வந்து வரலாம் என்றிருக்கிறேன்.

அனுராதபுரம்,திரிகோனமலை, பொலனறுவை, நுவரேலியா கண்டி மற்றும் பின்னவளா சென்றுவர திட்டம்.

நீங்கள் சென்ற போது டூர் ஆப்ரேட்டர் மூலம் ஏற்பாடு செய்திருந்தீர்களா ? அவர்களின் சேவை எப்படி இருந்தது ?

தருமி said...

nara,
it was thru a friend's car we went around. heard that there are tourist vehicles.

வேகநரி said...

@Nara,தருமி ஐயா சொன்னது போல உல்லாசபயணிங்களுக்கு கார் பஸ் வசதிகள் நிச்சயம் கிடைக்கும்.இலங்கையில் நண்பர்கள் உறவினர்கள் உள்ள இந்தியன் தமிழர்கள் தான் அவர்களோடு இடங்க பார்க்க போகிறார்களே தவிர நிறைய வெள்ளை இனத்தவங்க வருகிறார்கள்.அவர்கள் எல்லாம் டூர் ஏற்பாடு செய்து தான் இடங்க பார்க்க வேண்டும்.

Post a Comment