Monday, March 06, 2006

140. ஷோலே - இரண்டாம் பாகம்…

ஹாலிவுட் படங்களில் எனக்கு இந்த western படங்கள் என்றாலே ரொம்பவே பிடிக்கும். எல்லா படங்களின் கதைகளுமே ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்: ஹீரோ எங்கிருந்தோ ஒரு ஊருக்கு வருவாரு; வில்லன்களைத் துவம்சம் பண்ணிட்டு, கடைசியில அந்த ஊரு மக்கள் கேட்டுக்கிட்டாலும் எதுவுமே வேண்டான்னுட்டு, தனியாகத்தானே வந்தோம்; தனியாகத்தானே போகணும் அப்டிங்கிற தத்துவத்தோடு அந்தி மயங்கும் ஒரு மாலை வேளையில் தன் குதிரையில் தனி ஆளாகத் திரும்பிப் போய்டுவார். எப்பவுமே ‘சத்தியமே ஜெயதே’ அப்டிங்கிறது மாதிரி, நல்லவனாக, வல்லவனாக வந்து தீய சக்திகளை அழிச்சிட்டுப் புறப்பட்டுப் போயிடுவார். எத்தனையோ நடிகர்கள் நடிச்சிருந்தாலும் சிலருக்குத்தான் அந்த ரோல் பொருந்தியிருந்தது. அதிகம் அலட்டிக்காம, நறுக்குன்னு வசனங்கள் பேசி நடிச்சதில Garry Cooper, John Wayne, Henry Fonda, Joel Mcrea - இவர்கள்தான் என்னைக் கவர்ந்தவர்கள். இவர்கள் காலத்திற்குப் பிறகு Clint Eastwood, Franco Nero, Lee Van Cleef- இவர்கள் என்னைக் கவர்ந்தார்கள். கடைசியாகச் சொன்ன இந்த நடிகர்கள் நடித்தது இத்தாலிய வெஸ்டர்ன் படங்களாகும். இந்தப் படங்களை spaghetti Westerns என்று அழைப்பதுண்டு. இந்தப் படங்களுக்குத் தேவையான இயல்புகள் இவர்களிடம் இயற்கையாகவே இருந்தன. இந்த நேரத்தில் நம்ம கர்ணன் ஜெயசங்கரைக் கதாநாயகனாக வைத்து எடுத்த நம்ம ஊரு கெளபாய் படங்கள் நினைவுக்கு வரத்தான் செய்கின்றன. சரி..அந்தக் கொடுமையை வேறு ஒரு பதிவில் பார்ப்போம். ஷோலே படம் பார்த்த போது அந்தப் படத்திற்கும் ஆங்கில வெஸ்டர்ன் படங்களுக்கும் இருந்த ஒற்றுமைகள் பளீரெனத் தென்பட்டன. என்ன, வெஸ்டர்ன் ஹீரோக்கள் குதிரையில் வருவது போல் இல்லாமல் நம்ம கதாநாயகர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தார்கள். ஆனாலும் பல காட்சி அமைப்புகள், கதாபாத்திரப் படைப்புகளில் பல ஒற்றுமை இருந்தன என்பதென்னவோ உண்மை.

ஒற்றுமைகள்:
ஷோலேயில் இரண்டு நல்ல நண்பர்கள் - தர்மேந்திராவும், அமிதாபும். இதே போலவே பல படங்களில் இரட்டைக் கதாநாயகர்கள் ஆங்கில வெஸ்டர்னில் வருவார்கள்: Henry Fonda-வும் Antony Quinn-ம் “Warlock” (1959)என்ற படத்திலும், John Wayne-ம் Kirk Douglas-ம் “The War Wagon”என்ற படத்திலும், (1967) Burt Lancaster-ம் Kirk Douglas-ம் “TheGunfight at the O.K. Coraala” (1957)என்ற படத்திலும் இதே போல இரட்டை நண்பர்களாகவே வருவார்கள். அதே போல், உள்ளூர் பெரிய மனிதர் (சஞ்சீவ் குமார் )வில்லனைச் ( அம்ஜத் கான்) சமாளிக்க, தர்மேந்திரா, அமிதாபை நாடுவது “The Professionals” (1966) “Vera Cruz” (1954) “Shane” (1953)என்ற படங்களில் உள்ள கதையமைப்பாகும். அமிதாப் இளம் விதவை (ஜெய பாதுரி)மீது காதல் கொள்வதாக ஷோலேயில் இருக்கும். இதே கதையமைப்பே “Hondo” (1953) என்ற படத்திலும், சிறிதே மாறி “Shane” படத்திலும் வரும். இதைவிடவும், அமிதாப் இறக்கும் அந்தக் கடைசி சீன் அப்படியே “The Garden of Evil” (1950)என்ற படத்தின் அப்பட்ட காப்பியாகும். அமிதாப் அந்தக் கடைசி சீனில் செய்வது, பேசும் வசனம் எல்லாமே இந்தப் படத்தின் கதா நாயகன் Richard Widmark செய்வதின் ஃபோட்டா காப்பிதான். ஷோலேயில் ஒரு நல்ல சீன்; தர்மேந்திரா கிராமத்துப் பெண் ஹேமமாலினியைக் கவர தன் துப்பாக்கியால் குறி பார்த்து சுட்டு தன் வீரப் பிரதாபத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பார். அப்போது, அமிதாப் அதைவிட தூரத்திலிருந்து குறி தவறாமல் சுட்டு தர்மேந்திராவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார். இந்த சீனும் Garry Cooper “Dallas” (1950) என்ற படத்தில் செய்வதின் சுத்தமான நகலாகும். ஷோலேயில் A.K. Hangal-ன் பாத்திரப் படைப்பு Karl Malden, Van Heflin போன்றவர்கள் வெஸ்டர்ன் படங்களில் செய்யும் சின்னப் பாத்திரங்களையே ஒத்திருந்தது. கபார் சிங் (அம்ஜத் கான்) ஷோலேயில் நடித்த கதா பாத்திரமும் Burt Lancaster “Vera Cruz” என்ற படத்தில் செய்ததே. ஷோலே வெஸ்டர்ன் படங்களில் இருந்து மாறுபட்ட ஒரே முக்கிய அம்சம் என்னவென்றால், ஹேமமாலினியின் பாத்திரப்படைப்பு மட்டுமே. ஏனெனில் வெஸ்டர்ன்களில் வரும் பெண்கள் ஏறக்குறைய எல்லோருமே நீண்ட சிகரெட்டை ஊதிக்கொண்டு, கொஞ்சமே கொஞ்சம் உடை உடுத்திக்கொண்டு ‘ஒரு மாதிரி’ பெண்ணாகவே வருவார்கள். வீடுகளில் அவர்களைப் பார்க்க முடியாது; எப்போதும் கதாநாயகனும், வில்லனும் மோதும் ‘பார்களில்’தான் இருப்பார்கள். என்னதான் இருந்தாலும் ஷோலே நம்ம ஊர் படமல்லவா; அதற்கேற்றாற்போல ஹேமமாலினியின் பாத்திரம் படைக்கப்பட்டது. இன்னொரு முக்கிய வேற்றுமை - வெஸ்டர்னில் வரும் கதா நாயகர்கள் எப்போதும் தனித்தே இருப்பார்கள். ஒரு படத்தில் ஹீரோவை ‘ஏன் தனியாக இங்கே உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்க, கதாநாயகன் ‘நான் எப்போதுமே தனியன்தான், கூட்டத்திலும் கூட’ என்பான். வெஸ்டர்ன் படக் கதாநாயகர்களுக்கே உரித்தான இந்த தனித்துவம் சிறிதும் இல்லாமல் தர்மேந்திராவின் பாத்திரப் படைப்பு ஒரு ஜனரஞ்சகமான, கலகலப்பான பாத்திரமாக இருக்கும். வெஸ்டர்ன் படங்களுக்கே உரித்தான ஒரு சோகம் கப்பிய, தனியனாக இருக்கும் கதாநாயகப் பாத்திரம் ஷோலேயில் தலைகீழ். ஷோலே - இரண்டாம் பாகம் வரப் போகிறதாம். அந்தப் படம் எந்தெந்த வெஸ்டர்ன் படங்களைத் ‘தழுவ’ப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

இந்தப் பதிவு என் சொந்தச் சரக்கல்ல; என் நண்பரும், எனக்குக் கல்லூரியில் சீனியருமான ஆங்கிலப் பேராசிரியர் J. வசந்தன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியது. வசந்தன் மெல்லிய நகைச்சுவையுடன் கதை, கட்டுரைகளை ஆங்கிலத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக எழுதி வருகிறார். பல பத்திரிகைகள் அவரது கட்டுரைகளைத் தொடர்ந்து பதித்து வந்துள்ளன. இப்போதும் The Hindu-வின் Metro Plus-ல் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் “Down The Memory Lane” என்ற தலைப்பில் எழுதிவருகிறார். He is also a good cartoonist. Mostly his writings will have his own drawings. கோகுலம் என்ற குழந்தைப் புத்தகத்தில் தொடராக வந்த அவரது நகைச்சுவைக் கட்டுரைகள் புத்தகமாக வெளிவந்துள்ளன. கல்லூரியில் பல ஆண்டுகளாக “Curtain Club”என்ற நாடகக் குழுவை அமைத்து பல ஆங்கில நாடகங்களை மேடையேற்றியுள்ளார். அவரது சில சினிமா பற்றிய கட்டுரைகளைத் தமிழில் தர எனக்குள்ள ஆவலின் முதல் முயற்சி இது.



வெளிகண்ட நாதரின் - மீண்டும் ஷோலே






Mar 06 2006 03:33 pm Uncategorized edit this
6 Responses
தருமி Says:
March 6th, 2006 at 10:51 pm e
Name: Padma Arvind E-mail: padma.arvind@gmail.com IP: 70.111.192.244

தருமி:
பொதுவாகவே அமிதாபின் நிறைய சண்டை போடும் உடல் மொழி கிளிண்ட் இன் பாதிப்பாக தோன்றுவது உண்டு. ஷோலேயில் காட்சிகள் படமாக்கப்பட்டவிதம் அருமை(வெகு நாட்களுக்கு முன்)

தருமி Says:
March 6th, 2006 at 10:55 pm e
நன்றி பத்மா.

தருமி Says:
March 6th, 2006 at 10:57 pm e
மக்களே,
(வழக்கம்போல) தருமிக்கு ஒரு சந்தேகம்
மேலே உள்ள பத்மா அவர்களின் பின்னூட்டம் எனக்கு என் மயில் பொட்டியில் வராமல் நேராக மட்டுறுத்தலுக்குக் காத்திருந்தது. approve என்று கிளிக் செய்த பிறகும் இங்கு பின்னூட்டத்திற்கு வரவில்லை.
* ஏன் என் inbox-க்கு வராமல் பின்னூட்ட மட்டுறுத்தலுக்கு நேரடியாக வந்தது?
* மட்டுறுத்தப் பட்ட பிறகும் ஏன் பின்னூட்டத்திற்கு வரவில்லை?
* முன்பு சில தடவைகள், சில பின்னூட்டங்கள் inbox-க்கும் வராமல், மட்டுறுத்தலுக்கும் வராமல் நேரடியாக பின்னூட்டத்தில் வந்து விட்டது. அது எப்படி?

வெளிகண்ட நாதர் Says:
March 6th, 2006 at 11:24 pm e
//இந்த நேரத்தில் நம்ம கர்ணன் ஜெயசங்கரைக் கதாநாயகனாக வைத்து எடுத்த நம்ம ஊரு கெளபாய் படங்கள் நினைவுக்கு வரத்தான் செய்கின்றன.//
ஆஹா, மறந்தே போய்ட்டேன், ஞாபக படுத்திட்டீங்க, சிஐடி சங்கர்லருந்து.. எங்க பாட்டன் சொத்து வரை..இருக்கு எழுத, அரிதாரத்தில… நன்றி தருமி!

வெளிகண்ட நாதர் Says:
March 8th, 2006 at 5:22 am e
நன்றி தருமி, நானும் பல western படங்கள் பார்த்ததுண்டு. இப்படி ஷோலே படத்தை, Frame by Frame Comapre பண்ணியதிலலை. இருந்தாலும் இன்னொரு முறை அப்படங்களை பார்க்க தூண்டுகிறது உங்கள் பதிவு.

//இந்த நேரத்தில் நம்ம கர்ணன் ஜெயசங்கரைக் கதாநாயகனாக வைத்து எடுத்த நம்ம ஊரு கெளபாய் படங்கள் நினைவுக்கு வரத்தான் செய்கின்றன//.ஆஹா.. மறந்தே போயிட்டேன்.. ஞாபகபடுத்தீட்டிங்க..அரிதாரத்தில எழுதனும், சிஐடி சங்கர்லருந்து, எங்கபாட்டன் சொத்து வரை..

dharumi Says:
March 11th, 2006 at 2:57 pm e
வெளிகண்ட நாதர்,
ஆக, அடுத்த பதிவுக்கு விஷயம் எடுத்துக் கொடுத்தாச்சு, இல்லையா?

Saturday, March 04, 2006

139. எங்கள் கல்லூரி…



படித்தது என்னவோ வேறு இரு கல்லூரிகள்; வேலைபார்த்ததும் இரு கல்லூரிகளில்; இருப்பினும் ‘எங்கள் கல்லூரி’ என்றால் அது அமெரிக்கன் கல்லூரி என்றாகி விட்டது. 33 ஆண்டுகால உறவு என்பது மட்டுமே நிச்சயமாகக் காரணமல்ல.

கல்லூரியின் 125-வது ஆண்டு விழா சென்ற வாரம் நடந்தது. மற்றொரு பெரிய, நகரை விட்டு 15கி.மீ. தள்ளியுள்ள புதிய வளாகம் ஒன்றில் -satellite campus - பெப்.24-ம் தேதி புதிய கட்டிடம் ஒன்று திறக்கப் பட்டது. அடுத்த நாள்: Commemoration Day - வரலாற்றைத் திரும்பி நன்றியோடு நினைவுபடுத்திக் கொள்ளும் நாள்.


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியின் முதல் கட்டிடமான Main Hall கட்டி முடிக்கப்பட்ட 90-வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. அவ்விழாவின் ஒருங்கிணைப்பாளராக இருக்க நான் அழைக்கப்பட்டேன். ஒரு முழு நாள் விழாவின் முக்கிய இறுதிப் பகுதியாக ஓர் ‘ஒலி-ஒளி’ நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். அக்காட்சிக்கு அந்த மெயின் ஹாலே நிகழ்களமாக ஆக்கி, கல்லூரியின் முதல் இரு முதல்வர்களான (அமெரிக்கர்கள்) Zumbro and Wallace இருவரும் பசுமலையில் இருந்த சிறு கல்லூரியை வைகையின் வடகரைக்கு மாற்றுவது பற்றி பேசி, திட்டமிட்டு, முதல் கட்டிடத்தைக் கட்டி எழுப்பியதை ஒலி-ஒளி காட்சியின் கருத்தாகக் கொண்டு நடத்தினோம்.

இக்காட்சி பலருக்கும் கண்ணில் நீர் கோர்க்கும் அளவிற்குச் சிறப்பாக அமைந்ததற்குக் காரண கர்த்தாக்கள் இரு நண்பர்கள்: பேரா. பிரபாகரும், பேரா.சுந்தரும். நாற்பதே மாணவர்கள் படித்துவந்த அந்தக் காலத்திலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொள்ளும் அளவிற்கு ஒரு கட்டிடம் கட்ட முனைந்த அந்த இரு பெரிய மனிதர்களின் ‘ஆவியே’ இறங்கி வந்ததால்தான் நிகழ்ச்சி அவ்வளவு சிறப்பாக அமைந்தது என்று நண்பன் சுந்தர் சொல்வதுண்டு.அந்த விழாவின் வெற்றி ஒவ்வொரு பிப்ரவரி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் தொடர்ச்சியாகக் கொண்டாட வழிகோலியது.

சென்ற வாரத்தின் 25-ம் தேதி வழக்கம்போல் காலையிலிருந்து கொண்டாட்டாங்களின் நாளாக இருந்தது. வழக்கத்தை விட மாணவர்களின் கூட்டம் அதிகம். மதியம் ஒரு மணி முதல் மாலை 6மணி வரை நடத்தத் திட்டமிட்டிருந்த கலை நிகழ்ச்சிகள் 7 மணி வரை செல்ல, 7.30க்கு ஒலி-ஒளி நிகழ்ச்சி ஆரம்பித்தது. இம்முறை வாலஸ் மாணவர் விடுதி - Wallace Hostel - நிகழ்களமாக ஆனது. 7.30க்கு எல்லா விளக்குகளும் அணைந்த போது ஒரு சில விசில் சத்தங்கள். இருட்டில் 2000-க்கும் மேல் மாணவர்கள் இருக்கும்போது அதுகூட இல்லாவிட்டால் எப்படி? ஒரே ஒரு ஸ்பாட் லைட் எரிய கல்லூரி முதல்வர் அந்த ஒளி வட்டத்துக்குள் வர, மாணவர்கள் பகுதியில் இருந்து சத்தம். ஆனால், எல்லாமே ஏழெட்டு வினாடிகளுக்குத்தான். முதல்வரின் 4-5 நிமிட பேச்சுக்கு ஓர் அழகான அமைதி.



பிறகு ஒலி-ஒளி காட்சி. கல்வி என்பதே கைக்கெட்டாப் பொருளாக, உயர்சாதியினரின் உடைமையாக இருந்த ஒரு கால கட்டத்தில், சமூகத்தின் அடிமட்டத்தில் உழன்று கொண்டிருந்தவர்களுக்கும் கல்வி போய்ச் சேர வேண்டும் என்ற குறிக்கோளோடும், “In the service of God and people” என்ற தாரக மந்திரத்தோடும் உழைத்த பெருமக்களின் பரந்த மனத்தை, காலங்காலமாய் மெளன சாட்சியாய் நின்று பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் கட்டிடம் இன்றைய மாணவர்களிடம் சாட்சி பகர்ந்தது; பெரிய ஞானிகளையும், விஞ்ஞானிகளை மட்டுமே உருவாக்குவதற்காக அல்ல இந்தக் கல்லூரி. தன் மடி மீது வரும் ஒவ்வொருவரையும் நல்ல மனிதனாய், மனித நேயனாய் மாற்ற முயலுவதே நம் முன்னோர்களின் எண்ணமாகவும் நம்பிக்கையாகவும் இருந்து வந்துள்ளது. உங்கள் ஒவ்வொருவரிடமும் அந்த நெருப்புப் பொறியை ஏற்றுவதே இந்தக் கல்லூரியின் நோக்கமும், ஆவலும் என்பது போன்ற வசனங்கள் பின்னால் ஒலிக்க இருண்ட பின்புலத்தில் ஒளியோடு பல காட்சிகள் நடந்தேறின.


‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை

அங்கொரு காட்டிலோர் பொந்தினில் வைத்தேன்

வெந்து தணிந்தது காடு - தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

- என்ற முண்டாசுக்காரனின் வசனங்களோடும், திடீரென வெடிகள் மூலம் வானில் ஏற்படுத்தப் பட்ட வண்ணக் கோலங்களோடும் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தபோது அனைவரின் மனங்களும் உணர்வு வயப்பட்டிருக்க, அண்ணாந்து நோக்கிய முகங்களில் பெருமிதம் பூத்திருக்க விழா முடிந்தது. இந்த ஆண்டு நிகழ்ச்சி முழுமையாக பேரா. பிரபாகரின் மேற்பார்வையில், பழைய மாணவன் ஷண்முகராஜா (விருமாண்டியின் பேய்க்காமன்) -முயற்சியினால் நடந்தேறியது.

கடந்த ஒவ்வொரு வருடமும், இந்த நிகழ்ச்சிகளில் நான் பிரமிப்படைவது எங்கள் கல்லூரி மாணவர்கள் இந்த ஒலி-ஒளி காட்சிகளின்போது நடந்து கொள்ளும் விதமே. இந்த ஒலி-ஒளி நிகழ்ச்சிகளில் இளம் வயசுப் பசங்கள் கலாட்டா பண்ணுவதற்கேற்ற நேரமே. ஏனெனில் அவர்கள் வயது அப்படி; இருண்ட சூழல் வேறு. இருப்பினும் rising to the occasion என்பது எப்படி அவர்களுக்குச் சாத்தியமாகிறது; எந்த உணர்வு அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது எனக்கு இன்றுவரை பிடிபடுவதேயில்லை. அதுதான் எங்கள் கல்லூரியின் பாரம்பரியமோ…








Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 04 2006 10:34 pm Uncategorized edit this
24 Responses
sarah Says:
March 4th, 2006 at 11:44 pm e
Thank you sir for post

I am always proud to say that I studied in
“The American College”.

It was nice moments i spent in my life there, where i learnt a lot and still have connection with that in terms of my best teachers, batch mates , friends and juniors even after i left the college. We always have some close feelings when we hear that somebody is from American College.

Thank you for the photos

sarah

தருமி Says:
March 4th, 2006 at 11:55 pm e
sara,
“I am always proud to say that I studied in “The American College”.//

it is always this feeling among the alumni that gives a place of pride to this great institution.
- thank you.

கோ.இராகவன் Says:
March 5th, 2006 at 12:15 am e
அதனால்தான் தமிழ் சொல்லுது….”அன்ன யாவினும் புண்ணியம் செய்தல் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்…” அதை மறுக்கிறவன் நிச்சயம் உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்ள முடியாது.

அமெரிக்கன் கல்லூரியை நான் பலமுறை வெளியில் இருந்து பார்த்திருக்கிறேன். அது பற்றிப் பலர் சொல்லியும் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்லதொரு நினைவு கூறல்.

dharumi Says:
March 5th, 2006 at 9:14 am e
ஒரு சிறு பின் குறிப்பு:
24-ம் தேதி நடந்த புதிய வளாகத்திறப்பு விழாவிற்காக ஒரு சைக்கிள் பேரணி நடந்தது. கல்லூரியிலிருந்து மிகச் சரியாக காலை 6 மணிக்குப் புறப்பட்டு வழி நெடுக ஆசிரியர்கள் கண்காணிப்பில் இரண்டு இரண்டு பேராக யாருக்கும் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் கண்ணியமாக நடைபெற்றது. விழா முடிந்த பிறகு இருபது இருபது மாணவர்களாகத் திரும்பிச் சென்றார்கள். அதிகாலை என்பதால் யாருக்குமே எந்த இடைஞ்சலும் இல்லை. வழியோ ஊருக்கு வெளியே.

ஆனால், அடுத்த நாள் தினமலரில் மாணவர்கள் ஊர்வலம் போக்குவரத்தை மிகவும் பாதித்ததாகவும், இது போன்றவை தேவையா எனவும் கேள்வி கேட்டிருந்ததாகக் கேள்விப் பட்டேன். பொறுப்பற்ற விதமாய் செய்திகள் தருவதென்பதே இவர்களின் வழக்கமோ என்று தோன்றியது.

இவர்கள் நடத்தும் கல்லூரிக்குத் தன்னாட்சிக் கொடுக்கப் பட்டிருப்பதாக இன்றைய செய்தித்தாள் தகவல். கல்லூரியையாவது நன்றாக நடத்த மாட்டார்களா என்றொரு ஆசை எனக்கு.

இளவஞ்சி Says:
March 5th, 2006 at 3:14 pm e
சும்மா போயிட்டு வந்த என்னோட காலேஜ் மேல 12 வருசம் ஆகியும் எனக்கு இத்தனை அட்டாச்மெண்டு இருக்கறப்ப 33 வருசம்னா உங்களுக்கு எவ்வளவு இருக்கும்?!!

இரண்டாவதா இருக்கற கல்லூரி போட்டோ சூப்பருங்க சார்!!

umarewa Says:
March 5th, 2006 at 5:44 pm e
chekkukkum sivalingaththirkum ,,,,,,,,,,,,

கைப்புள்ள Says:
March 5th, 2006 at 6:12 pm e
நம்மோட கல்லூரி பத்தி பேசறதுன்னா எப்பவுமே ஒரு தனி பிரியம் தான் இல்ல? எனக்கும் அப்படி தான். அமெரிக்கன் கல்லூரி பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் அவ்வப்போது பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். பேராசிரியர்.சாலமன் பாப்பையா அக்கல்லூரி பேராசிரியர் என்று கேள்விபட்டிருக்கிறேன். நடிகர் விவேக் அக்கல்லூரி மாணவர் என்றும் கேள்வி. உங்க காலேஜின் பழைய மாணவர்கள்(celebrities) பத்தி மேலும் சொல்லுங்களேன்.

செல்வன் Says:
March 6th, 2006 at 8:56 am e
பார்ட்னர்,

மதுரையில் உள்ள மிகப்பெரிய கல்லூரி என கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் நேரில் பார்த்ததில்லை.அமெரிக்கன் கல்லூரி ஆண்கள் கல்லூரி என ஒருவர் சொன்னார்.உண்மையா?அப்படியானால் அங்கு படிக்க போரடிக்குமே?

vaheesan selva Says:
March 6th, 2006 at 1:20 pm e
வணக்கம் தருமி,

தங்களின் கடவுள் நம்பிக்கை பற்றிய பதிவை படிக்க நேர்ந்தது.
தங்களைப்போலவே நானும் பல குழப்பங்களுக்குள்ளாகி இப்போது சற்றே தெளிவாகியுள்ளேன்.
நல்ல சிந்தனைகள். அதிலும் அதன் முடிவில் கண்ணதாசன் பாடல் வரிகளோடு இணைத்திருந்தீர்கள்.
மிக்க மகிழ்ந்தேன்.

தொடரட்டும் உங்கள் பணி….

வாழ்த்துக்களுடன்
வாகீசன்.

dharumi Says:
March 6th, 2006 at 2:32 pm e
முதல்வர் சாமுவேல் சுதானந்தா சொன்னது:

Sam, Thanks for sharing your comments with me. It was wonderful. Thanks once again. Sudanandha

தருமி Says:
March 6th, 2006 at 10:02 pm e
இராகவன்,
“அதை மறுக்கிறவன் நிச்சயம் உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்ள முடியாது.”//
- ஆனால், பல காலமா இருந்து வந்த விஷயமல்லவா அது. சொல்லப் போனால் அந்த எண்ணம் இன்னும் பலர் மனசில இருக்கே. “அவங்களால அவ்வளவுதான் முடியுமுங்க” அப்டின்னு சொல்லிக் கேட்டதில்லை?

தருமி Says:
March 6th, 2006 at 10:21 pm e
அதான் சொல்லவந்தேன் இளவஞ்சி.
இந்த ‘உறவுக்கு’ வெறும் 33 ஆண்டு மட்டுமே காரணம் இல்லை
…அதையும் தாண்டி…!
ஏன்னா இதவிட கூட வருஷம் இருந்திட்டு, திரும்பிப்
பாக்காதவங்களும் உண்டு.
இளவஞ்சி, கீழே ஒருத்தர் வாஹீசன் அப்டின்னு ஒருத்தர் புதுசா
வந்து பின்னூட்டம் போட்டிருக்கார்; அவர் ஃபோட்டோ போய் பாருங்க. அசத்தலா இருக்குல்ல அந்த தாடி. ஒரு information-தான். மற்றபடி ஒங்களுக்கு ஒண்ணும் suggest பண்ணலை!!!

தருமி Says:
March 6th, 2006 at 10:25 pm e
இளவஞ்சி.
அப்புறம் இன்னொரு விஷயம். அந்தக் கட்டிடம் நல்லா இருக்குன்னு சொன்னீங்களே. அது indo-saracenic architecture அப்டிங்கிறாங்க. இந்தக் கட்டிடம், சென்னை உயர் நீதிமன்றம், மைசூர் அரண்மனை இதெல்லாமே ஒரே ஆளால் வடிவமைக்கப்பட்டது என்று கேள்வி.

தருமி Says:
March 6th, 2006 at 11:03 pm e
மக்களே,
(வழக்கம்போல) தருமிக்கு ஒரு சந்தேகம்
மேலே உள்ள பின்னூட்டங்களில் இளவஞ்சி, உமாரீவா, கைப்புள்ள,செல்வன், வாகீசன் - இவர்களது பின்னூட்டங்கல் என் inbox-க்கு வராமலே, பின்னூட்ட மட்டுறுத்தலுக்குக் காத்திருந்தன.approve என்று கிளிக் செய்த பிறகு பின்னூட்டப் பகுதிகளில் தோன்றின.

ஆனால்..
ஷோலே பற்றிய பதிவில், பதமா அவர்களின் பின்னூட்டம் எனக்கு என் மயில் பொட்டியில் வராமல் நேராக மட்டுறுத்தலுக்குக் காத்திருந்தது. approve என்று கிளிக் செய்த பிறகும் இங்கு பின்னூட்டத்திற்கு வரவில்லை.
* ஏன் என் inbox-க்கு வராமல் பின்னூட்ட மட்டுறுத்தலுக்கு நேரடியாக வந்தது?
* மட்டுறுத்தப் பட்ட பிறகும் ஏன் பின்னூட்டத்திற்கு வரவில்லை?
* முன்பு சில தடவைகள், சில பின்னூட்டங்கள் inbox-க்கும் வராமல், மட்டுறுத்தலுக்கும் வராமல் நேரடியாக பின்னூட்டத்தில் வந்து விட்டன. அது எப்படி?

என்னதாங்க நடக்குது…?

Kumaran Says:
March 7th, 2006 at 9:02 am e
நானும் பாத்திருக்கேன் சார். அமெரிக்கன் கல்லூரியில படிச்ச பசங்களுக்கெல்லாம் அவங்க காலேஜ் மேல ஒரு தனிவிதமான பெருமையான உணர்வு இருக்கிறத. என் நண்பர்கள் பல பேர் சௌராஷ்ட்ரா கல்லூரியில் தான் படித்தார்கள்; ஒரு நெருங்கிய நண்பன் உங்கள் கல்லூரியில் படித்தான். அவனுக்கு எப்போதும் தான் அமெரிக்கன் காலேஜில் படிக்கிறோம் என்று ஒரு தனிப்பெருமை. சௌராஷ்ட்ரா காலேஜெல்லாம் ஒரு காலேஜா என்று சொல்லிக்கிட்டே இருப்பான்.

dharumi Says:
March 7th, 2006 at 9:29 am e
umarewa சொல்லி இருக்கிறதுக்கு அவரோ அல்லது
வேறு யாராவது கொஞ்சம் ‘நோட்ஸ்’ போடுங்களேம்’ப்பா!

உமாரீவா, மொத மொத வரும்போதே இப்படி ‘கிளப்புறீகளே’; வாங்க அடிக்கடி. ஆனா என்னமாதிரி ஆளுக்குப் புரியறது மாதிரி சொல்லுங்க..சரியா?

கைப்புள்ள,
“நம்மோட கல்லூரி பத்தி பேசறதுன்னா எப்பவுமே ஒரு தனி பிரியம் தான் இல்ல?”//-
- அவைகளை வெறும் கட்டிடங்களாகப் பாராமல், நம்ம வாழ்க்கையின் ஒரு பகுதியாகப்
பார்க்கும்போது நீங்க சொல்ற அந்த உறவு, பாசம் எல்லாம் வந்திருதில்ல.

dharumi Says:
March 7th, 2006 at 9:30 am e
பார்ட்னர்,

“அப்படியானால் அங்கு படிக்க போரடிக்குமே?”
தெரியலை. ஏன்னா நாந்தான் அங்க படிக்கலியே!

ஆனா ஒண்ணு பார்ட்னர், பசங்க மட்டும் இருக்கிற கிளாஸ்ல பாடம் நடத்துறது மாதிரி co-ed-ல் கிளாஸ் எடுக்கிறது interesting-ஆக இருந்ததில்லை. ஜோக்குல இருந்து எல்லாம் யோசிச்சு சொல்லணும். free flow will be the first victim in combined classes for a (நம்மள மாதிரி)teacher! (ஆமா, நீங்க எப்படி? என்னமாதிரி இல்லாம நல்ல வாத்தியாரா இருப்பீங்கல்ல? இருங்க!)

dharumi Says:
March 7th, 2006 at 9:32 am e
வாகீசன்,

புதிதாக வந்திருக்கிறீகள். நன்றி.
உங்க வீட்டுக்குப் போய் பார்த்தேன். சின்ன programmer அப்டின்னுட்டு IBM test அது இதுன்னு கலக்குறீங்க…நல்லா இருங்க. வந்து போய் இருங்க..நானும் அங்க வர்ரேன்.

உங்க தாடி பத்தி மேல ஒரு comment போட்டுருக்கேன்; பாத்தீங்களா? it suits you quite well !

dharumi Says:
March 11th, 2006 at 2:12 pm e
குமரன்,
அது உண்மைதான். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் வேலை செய்ற வாத்தியார்களுக்கும் அந்த ‘நினப்பு’ உண்டு.

நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் இன்னொரு கல்லூரிக்குச் சென்றிருந்த போது, நான் ஒருவருக்கு அறிமுகம் செய்யப் பட்டேன். அந்த ஆங்கிலத்துறை ஆசிரியர் ரொம்ப காஷுவலாக ‘hi’ என்றவர்,He is from American College’என்றதும் எழுந்து நின்று மரியாதை கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து, முகமன் கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் - பெண்கள் கல்லூரி உட்பட - இந்த வேறுபாடு பல்லாண்டுகளாகவே உண்டு.

srishiv Says:
March 12th, 2006 at 1:41 pm e
உண்மைதான்
கௌதம்ராஜ் சரிதம் புத்தகத்தில் படித்ததாக நினைவு???? அது திருநெல்வேலி கல்லூரி மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரி என்றுநினைவு, என் சித்தப்பாவும் அங்கு பயின்றவர்தான், அதன்பின்னர் தியாகராசர் பொறியியற்கல்லூரியில் பொறியியல் பயின்று திருநெல்வேலி தலைமை பொறியாளராக இருந்து சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார்
ஸ்ரீஷிவ்….:)

Rajan Says:
March 14th, 2006 at 11:15 pm e
Dear Dharumi

Is Pera.Sundar is our Kaa.Sundar?

Regards
Rajan

தருமி Says:
March 15th, 2006 at 9:20 am e
ராஜன்,
வேற யாரு…நம்ம ஆளு,தாடிக்கார காளி சுந்தரேதான். what an effort! and what an achievement! it was simply superb and the credit goes to those two guys out and out.

ஜோ Says:
March 15th, 2006 at 9:50 am e
நன்றி தருமி உங்கள் பகிர்வுக்கு.

150 வருடங்களை கடந்துவிட்ட எங்கள் திருச்சி ஜோசப் கல்லூரி நினைவுகளை தூண்டிவிட்டீர்கள்.

தருமி Says:
March 15th, 2006 at 12:05 pm e
மூத்தவங்களே ஜோ,
நன்றி..
பின்னூட்டம் மட்டும் போடறது; இப்போதைக்கு (தவ முயற்சியோ?)எழுதறதில்லைன்னு முடிவா?

Thursday, March 02, 2006

138. தோல்விச் சுகம்…

நிச்சயமா இதுதான் ‘தேர்தலை’ப் பற்றிய கடைசிப் பதிவு - அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே போவது போல ஒரு நினைப்பு.

புதிய முயற்சி. நிச்சயமாக நிறைய முன்னேற்பாடுகள் இருந்திருக்கும். நிறைய நேரம் செலவழித்திருக்க வேண்டும். - இவைகள் எல்லாவற்றிற்காகவும் மனம் நிறைந்த, மனம் திறந்த பாராட்டுக்கள் - நிலாவிற்கு. இன்னும் இதுபோல் பல போட்டிகள் நடத்த எதிர்பார்க்கிறோம்.
நன்றி நிலா.

சிறிலாவது வேலையின் நிமித்தமாய் தனது பார்ட்னருக்குக் கை கொடுக்க முடியாது போயிற்று. என்னளவில் photoshop-ல் வேலை செய்ய எடுத்துக் கொண்ட நேரத்தில் உருப்படியாக ஏதாவது செய்திருக்க வேண்டும். அதையெல்லாம் கோட்டை விட்டு விட்டு, பொன்னான நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டு செலவழிக்காது என் பார்ட்னர் செல்வனின் கழுத்தில் மாட்டிய கல்லாக அவர் வெற்றிச் செல்வனாவதைத் தடுத்து விட்டேன். செல்வனின் தலைவிதி நான் அவர் பார்ட்னராக இருக்க வேண்டும் என்பது. விதி என் ரூபத்தில் விளையாடி விட்டது, பார்ட்னர். Sorry about it.
நான் தவறிய விஷயங்களில் எல்லாம் மிகச் சரியாக இருந்து, உழைத்து வெற்றி கண்ட குமரன்-கொத்ஸ் குழு ஒப்பாரும், மிக்காருமின்றி தனிப் பெரும் வெற்றி ஈட்டியமைக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள். Hats off to you, kumaran & Koths.

ஓட்டுப் போட்ட அந்த எண்மருக்கும் (லிஸ்ட் பார்ட்னரின் பதிவில்!) நெஞ்சார்ந்த வணக்கங்களும், நன்றிகளும்.
வெற்றிக்குப் பின் சுற்றி நின்று கும்மியடிக்க ஆட்கள் பலர் இருப்பதுண்டு.ஆனால் தோல்விக்குப் பின் தோள் கொடுக்க வருபவர் மிகக் குறைவே. ஆனால் எங்கள் குழுவின் ‘நிகரில்லாத்’ தோல்விக்குப் பின் ஆறுதல் சொல்ல வந்த நல்ல பல உள்ளங்களுக்கு என்றும் நாங்கள் கடப்பாடு உடையோம். மறவோம் இந்த நல்ல உள்ளங்களை, அவர்தம் ஆறுதல் மொழிகளை. அவர்கள் கொடுத்த அறிவுரைகளையும் என்றும் நினைவில் கொள்வோமென உறுதியளிக்கிறோம். பின்வந்து பின்னூட்டமிட்ட அந்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. ஏனெனில், வெற்றி பெற்றிருந்தால் கூட இது போன்ற மனசைத் தொடும் பின்னூட்டங்கள் வந்திருக்குமா, என்ன? பெற்ற தோல்வியால் வந்த உங்கள் அனைவரின் பின்னூட்டங்கள் மயிலிறகாய் வருடிச்சென்றன.

தோல்வியில் இத்தனை சுகமா?

நன்றி….







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 02 2006 02:06 pm | Uncategorized | | edit this
8 Responses
ஜோ Says:
March 2nd, 2006 at 2:33 pm e
தருமி,
இன்னொரு தேர்தல் வச்சா அனுதாப ஓட்டுல அமோகமா ஜெயிப்பீங்க போலிருக்கே!

தருமி Says:
March 2nd, 2006 at 2:41 pm e
ஜோ,
நிலான்னு ஒரு தேர்தல் கமிஷனர் இருக்காறே..

pot"tea"kadai Says:
March 2nd, 2006 at 5:57 pm e
தருமி, நீங்கள் தான் என்னுடைய ஒரே இன-மான, தன்மான தலைவர்:-)))))…உங்களுக்காகத்தான் நான் ஓட்டு போடக்கூட துணிந்தேன். அடுத்து நடை பெற இருக்கும் தேர்தலில் எப்பாடுபட்டாவது உங்களை வெற்றியடைய வைப்பேன் இல்லையென்றால் நான் தங்கிலிஷில் டைப்புவதை விட்டுவிடுகிறேன் என்று இந்த தேர்தல் மீது ஆணையிட்டு சூளுரைக்கிறேன்.

//தோல்வியில் இத்தனை சுகமா?//

சில நேரங்களில் தோல்வி தான் சுகமே!!!!:-)

சிங். Says:
March 2nd, 2006 at 6:17 pm e
தருமி ஐயா அடுத்த எலக்ஷன்ல சமாய்சிடுவோம்! இது இடைத்தேர்தல்தானே.பொதுத்தேர்தல்ல பாத்துக்குவோம்!

சோம்பேறி பையன் Says:
March 2nd, 2006 at 7:20 pm e
பரவாயில்லை.. எங்கள் நெஞ்சங்களில் என்றுமே நீங்கள்தான் வின்னர் !!!
உங்க பார்ட்னர் (செல்வன்) பதிவு விலாசம் என்ன ??

குமரன் Says:
March 2nd, 2006 at 8:10 pm e
சுகராகம் சோகம் தானே…..

வந்து விரிவான பின்னூட்டம் இடுகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி.

selvan Says:
March 4th, 2006 at 4:25 am e
பார்ட்னர்,

//செல்வனின் தலைவிதி நான் அவர் பார்ட்னராக இருக்க வேண்டும் என்பது. விதி என் ரூபத்தில் விளையாடி விட்டது, பார்ட்னர். sorry about it. //

என்ன பார்ட்னர் இதெல்லாம்?சும்மா வெளையாட்டுக்கு ஒரு போட்டி.அதுல போய் சாரி கீரின்னுட்டு.உங்க் நட்பு கிடச்சது இந்த போட்டி மூலமா தான்.அந்த வெற்றிக்கு ஈடு இணை உண்டா சொல்லுங்க?

உங்க ரசிகர்கள் உங்க மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்காங்கன்னு பாருங்க.இது அத்தனையும் உங்க எழுத்துக்கு கிடைச்ச வெற்றின்னு தான் சொல்லணும்.

தருமி Says:
April 19th, 2006 at 3:12 pm e
:duel:

Wednesday, March 01, 2006

137.”அட என்னடா பொல்லாத தேர்தல்…..”

உங்கள் அனைவரிடமும் நான் எவ்வளவு மரியாதையும், அன்பும், அருகாமையும் கொண்டிருந்தேன் என்பது இந்தப் பதிவிலிருந்தே உங்களுக்குப் புரிந்துவிடும். ஏனெனில், இப்பதிவு எனக்கும் என் பார்ட்னர் செல்வனுக்கும் நடுவில் நடந்த personal மயில்களின் தொகுப்பு. எங்கள் பெர்சனல் மயிலகளைக் கூட உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நான் உங்களுக்கெல்லாம் எவ்வளவு ‘இது’ கொடுத்திருக்கிறேன். (இப்படியெல்லாம் நான் இருந்தும் நீங்கள் எங்கள் டீமுக்கு ஓட்டு போடவில்லையே என்றா சொல்கிறேன்… சீச்ச்சீ…அப்படியெல்லாம் இல்லை..இல்லவே இல்லை)

செல்வனுக்கு என் மயில்:
பார்ட்னர்,
…..இப்படி சில பாட்டு ஞாபகம் வந்து ரொம்ப தொல்லை படுத்துது.

“நாலு பேத்துக்கு நன்றி - மொத்தமே
‘அந்த நாலு’ பேத்துக்கு நன்றி..”

“உன்னைச் சொல்லிக் குத்தமில்லை
என்னைச் சொல்லிக் குத்தமில்லை
கேட்டாதான் ஓட்டுன்றவங்கள சொல்லியும் குத்தமில்லை….”

“சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா…”

“அட என்னடா பொல்லாத தேர்தல்…..”

“வாழ்வே மாயம்
இந்த தேர்தலே மாயம்…”

“ஆடி அடங்கும் வாழ்க்கையடா - இதில்
நாலு ஓட்டே மொத்தமடா…”

சில சந்தேகங்களும், ஆதங்கங்களும்…………..


* பதிவாளர்களிடம் ‘கேட்டால்தான் ஓட்டு’ என்ற ஃபிலாஸஃபி இருப்பது நீங்கள் எதிர்பார்த்ததா?

* சும்மா போட்டிருந்தாலாவது என் ரஜினி பதிவை இன்னும் ஒரு நாலு பேராவது பார்த்திருப்பாங்க. நடந்த கலாட்டாவில் நான் நாலைந்து மணி நேரம் (அவ்வளவுதான் நம்ம talent) செலவழித்துப் பண்ணிய வேலையை யாரும் இந்தத் தேர்தல் சுடு களத்தில் கண்டுக்கவே இல்லை.
* லைஃப்ல இந்த time management பற்றி எப்போதுதான் தெரிஞ்சிக்கப் போறேனோ? (இந்தப் பதிவுக்கே :க.கெ.பி. சூர்ய நமஸ்காரம்” அப்டின்னு, அதாவது கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்னு தலைப்பு வைக்கலாமான்னு யோசிச்சேன்.)

சில சந்தோஷங்கள்…


* விளையாட்டு..இன்னும் நல்லா விளையாடி இருக்கலாமென்றாலும், சந்தோஷமா இருந்திச்சு

* இன்னும் நிலா போட்டி வைக்கப் போறாங்களாம்…நாம இந்தப் போட்டிகளின் founder members ஆயிட்டோம்ல (guinea pigs, too)

* அரை இருட்டுக்குள் இருந்த என் மேல் இன்னும் கொஞ்சம் ‘ஸ்பாட் லைட்’. நன்றி நிலாவுக்கு
* நம்ம நிஜ ‘பாப்புலாரிட்டி’ என்னன்னு தெரிஞ்சிக்கிட்டோம்ல..
=========================================
செல்வனின் பதில் மயில்:


பார்ட்னர்

கவலைபட வேண்டாம்.4 மணிநேரத்தில் 8 பேர் ஓட்டு போட்டார்கள்.அதில் 4 செல்லாததாகி விட்டது.இங்கு இரவு நேரம் என்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது.

ரோஜா அணியினர் அதிகாலையிலிருந்து செயல்பட்டு வெற்றிக்கனியை பறித்து விட்டனர்.நான் 10 மணிக்கு தான் ஆபீஸ் வந்தேன்.இப்படி ஆகிவிட்டது.

இது நல்ல அனுபவம்தான் பார்ட்னர்.முயற்சி செய்து போராடினோமே அதை சொல்லவேண்டும்

======================

வெற்றிக்கனி பறித்த டீமுக்கு

மணந்த,

மணக்கின்ற,

மணக்கும்

மல்லிகைக் குழுவின்

வாழ்த்துக்கள்………..







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 01 2006 02:05 pm | Uncategorized | | edit this
21 Responses
suresh - penathal Says:
March 1st, 2006 at 2:48 pm e
Apdippodungga!

pot'tea'kadai Says:
March 1st, 2006 at 3:40 pm e
Tharumi,

Tomorrow never dies…:-)

Thangamani Says:
March 1st, 2006 at 3:43 pm e
நான் வந்து பார்க்கும் போது காலம் கடந்துவிட்டது தருமி!:)

Dev Says:
March 1st, 2006 at 4:45 pm e
தருமி சார்,
வெறும் நாலு ஒட்டு இல்ல சார்… நாஆஆலு ஓட்டு சார்.
எங்களுக்கு ஒத்த ஓட்டு அதுவும் சிறில் வேறு வழி இல்லாமல் அவரே போட்டுகிட்ட ஓட்டு…
( எனக்கு அது கூடத் தோணல்ல….தோணியிருந்தா 2 ஓட்டு கிடைச்சிருக்கும்)
இதெல்லாம் கவுண்டர் சொல்லுற மாதிரி அரசியல்ல சாதாரணம்ப்பா…
அடுத்த தடவை தேர்தல் நடக்கட்டும் அப்புறம் பாருங்க…
போலி தருமி, போலி செல்வன், போலி நிலா, போலி குமரன் அப்படின்னு போலிங்கை பின்னி எடுத்துறலாம்…
ஜனநாயக ரீதியாக இந்த முறை மக்கள் ( நக்கல்) தீர்ப்புக்கு தலைப் பணிவோம்….

மணியன் Says:
March 1st, 2006 at 4:52 pm e
//பதிவாளர்களிடம் ‘கேட்டால்தான் ஓட்டு’ என்ற ஃபிலாஸஃபி இருப்பது நீங்கள் எதிர்பார்த்ததா?//

சார், போட்டி என்பதால் நான் ஒவ்வொரு குழுவும் தங்கள் பிரச்சார யுக்தியை எப்படி கையாளப் போகிறார்கள் என்று வைத்து ஒட்டுபோடுவதாக இருந்தேன். இல்லையெனில் எல்லோரும் சமநிலை நண்பர்கள்தானே.

முக்கிய குறை அதிகாலை 3:30க்கு முடிந்ததுதான். அல்லது பிரச்சாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் கொடுத்து அதன் முடிவில் அனைவரும் ஒட்டு போட நேரம் கொடுத்திருக்கவேண்டும்.

குழலி Says:
March 1st, 2006 at 5:19 pm e
ம்… அலுவலகத்தில் தமிழ்மணம் பார்ப்பதில்லை என்ற சபதத்தையும் மீறி இன்று உங்கள் மடல் கண்டு வாக்களித்தேன், என்ன செய்வது அதுவும் செல்லாத வாக்காகிவிட்டது நேரம் கடந்துவிட்டதால்…

Sam Says:
March 1st, 2006 at 6:46 pm e
அன்புள்ள தருமி
உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்தது. மிக்க நன்றி. அடுத்த முறை தேர்தல் வரும் போது என் தொண்டு உங்களுக்கும் செல்வனுக்கும் கண்டிப்பாக உண்டு. தமிழ்ல் தட்டச்சு செய்ய இன்னும் தடுமாறுகிறேன். நிறைய எழுத முடியவில்லை.
அன்புடன்
சாம்

கோ.இராகவன் Says:
March 1st, 2006 at 9:42 pm e
தருமி,

உமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்

அன்புடன்,
கோ.இராகவன்

தருமி Says:
March 1st, 2006 at 10:01 pm e
சுரேஷ்,
போட்டுட்டேன்..

பொட்டீ,
“Tomorrow never dies…:-)”……but i do! (sick joke?) சும்மா ஜாலிக்குத் தான்…

தருமி Says:
March 1st, 2006 at 10:05 pm e
தங்க மணி, குழலி,
இந்த late comers-க்கு எல்லாம் imposition குடுக்கப் போறேன். (வாத்தியார் புத்தி போக மாட்டேங்குதோ)

குழலி,
இந்த இரண்டும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்:
Gentle men never promise.
Promises are made to be broken!

சரி, வீட்டம்மா வந்து சேர்ந்தாச்சா?
நாளைக்கு என்ன ‘பதிவர் மாநாடாமே’? ஜமாய்ங்க…

தருமி Says:
March 1st, 2006 at 10:10 pm e
Sam-க்கு Sam எழுதுவது,
அடுத்த தேர்தல்ல எனக்கும் செல்வனுக்கும் வேலை செய்யப் போறீங்களா? நல்லா இருக்கே! நாங்கள்ள உங்களுக்குத் தொண்டு செய்யணும்…

என்ன தேவ்,
நீங்க என்ன இதுக்கெல்லாம் அசர்ர ஆளா? இந்த வருஷ best indibloggies-க்கு ரெடி ஆகுங்க…சரியா..? all the best.

தருமி Says:
March 1st, 2006 at 10:14 pm e
மணியன்,
பாப்புலாரிட்டி ஓட் என்பது ஏற்கெனவே உள்ள பாப்புலாரிட்டி வைத்து என்றும் நினைத்தேன். ஆக இப்போ, நம்ம பாப்புலாரிட்டி எவ்வளவுன்னு தெரிஞ்சு போச்சு, பாத்தீங்களா?

ராகவன்,
நீதிக்கு இது ஒரு சோதனை அப்டிங்கிறீங்களோ?
தோத்தவங்க சொல்றதுக்குத்தான் என்னென்ன இருக்கு பாத்தீங்களா?

selvan Says:
March 1st, 2006 at 10:16 pm e
பார்ட்னர்

பார்த்தீர்களா உங்கள் ரசிகர் பட்டாளம் உங்களுக்கு தரும் அன்பை?நேரப்பிரச்சனையால் தான் இவர்களால் ஓட்டளிக்க முடியாமல் போய்விட்டது.நான் விழித்திருக்கும் நேரம் அங்கு இரவு.அங்கு இரவு என்றால் இங்கு பகல்.இருவரும் சேர்ந்து பேசவே முடியாமல் போய் விட்டது.ரசிகர்களாலும் ஆதரவு தர முடியாமல் போய் விட்டது.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?அன்பால் சேர்ந்த இந்த ரசிகர் படைக்கு நம் நன்றியை எப்படி சொல்வது என தெரியவில்லை.

Voice on Wings Says:
March 1st, 2006 at 10:40 pm e
தருமி, எனது மானசீகமான ஓட்டு உங்களுக்கு எப்போதுமே உண்டு யாருக்குமே ஓட்டளிக்கவில்லையென்றாலும், குமரனின் உழைப்பை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒவ்வொரு பதிவுக்கும் சென்று வோட்டு கேட்டிருக்கிறார், ஒரு உண்மையான அரசியல்வாதியைப் போல். அவருக்கும், இந்த போட்டியில் சிறப்பாகக் கலந்து கொண்ட உங்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

குமரன் Says:
March 1st, 2006 at 11:08 pm e
//ரோஜா அணியினர் அதிகாலையிலிருந்து செயல்பட்டு வெற்றிக்கனியை பறித்து விட்டனர்.//

இது தவறான தகவல். நாங்களும் எங்கள் நேரம் 9 மணிக்குத் தான் தொடங்கினோம். செல்வனுக்கு 10மணி என்பது எனக்கு 9 மணி (டயம் டிப்பரன்ஸ்). அதனால ஒரே நேரத்துல தான் தொடங்கினோம். என்ன எங்கள் உண்மை வலிமை எது என்று எங்களுக்குத் தெரிந்ததால், விளம்பரத்தில் கவனம் செலுத்தாமல் இதில் முழுமூச்சாய் இறங்கிவிட்டோம். நீங்கள் சுதாரிப்பதற்குள் நேரம் கடந்து விட்டது.

காலத்தின் கோலம் - நான் மிகவும் மதிக்கும் தருமி ஐயாவும், எனக்கு முதன்முதலாய் ரசிகர் மன்றம் தொடங்கிய அன்புச் செல்வனும் எதிரணியினராய்ப் போய்விட்டனர்.

ஜோ Says:
March 2nd, 2006 at 9:31 am e
//காலத்தின் கோலம் - நான் மிகவும் மதிக்கும் தருமி ஐயாவும், எனக்கு முதன்முதலாய் ரசிகர் மன்றம் தொடங்கிய அன்புச் செல்வனும் எதிரணியினராய்ப் போய்விட்டனர். //

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

suresh - penathal Says:
March 2nd, 2006 at 11:27 am e
குமரன்,

அதான் தேர்தல் முடிஞ்சுபோச்சு இல்ல.. இப்போ தெர்தலுக்குப் பிந்தைய கூட்டணிய ஆரம்பிச்சுடுங்க!

Padma arvind Says:
March 2nd, 2006 at 4:09 pm e
Dharumi
Was my vote valid or rejected… Next time please let me know. Oflate I have not been following ThamiZmanam. I know I voted for you but did not know for what and why? Am i a typical voter or what.

குமரன் Says:
March 4th, 2006 at 12:13 pm e
பெனாத்தல் சுரேஷ். சரியாச் சொன்னீங்க. தருமி ஐயாவுக்கும் எனக்கும் இருக்கும் கூட்டணி ஊர்ப்பாசக் கூட்டணியாச்சே. என்றும் அந்த அன்புக் கூட்டணி தொடரும். அடுத்த தடவை மதுரைக்குப் போகும் போது அமெரிக்கன் கல்லூரியில் படித்த என் நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு தருமி சாரைப் போய் பார்க்கவேண்டும்.

தருமி Says:
March 4th, 2006 at 5:23 pm e
Voice on Wings,
பாராட்டுக்களுக்கு நன்றி.

பத்மா,
“…Am i a typical voter or what.”//
Ha! definitely.. நம்ம ஊரு வாசனை போகுமா..

dharumi Says:
March 4th, 2006 at 5:36 pm e
குமரன்,
“அடுத்த தடவை மதுரைக்குப் போகும் போது .. அது எப்போது, குமரன்?
…அமெரிக்கன் கல்லூரியில் படித்த என் நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு தருமியைப் போய் பார்க்கவேண்டும். ……..அந்த ‘அன்புப் படையெடுப்பை’ எதிர்நோக்கியுள்ளேன்.

136. ரத்தத்தின் ரத்தங்களுக்கு….

இதுவரை நீ யாரோ நான் யாரோ என்றிருந்தவர் எல்லாம் இன்று இப்போது உன்னை “உடன் பிறப்பே’ என்றழைக்கும் காரணம் தம்பிகாள் உங்கள் அனனவருக்குமே புரிந்திருக்குமே.

ஆம் தம்பி, இன்று உன் தயவு வேண்டியிருப்பதால் ஓடோடியும் வருகின்றனர். உன்னை சிங்கம் என்றும், சிறுத்தை என்றும் அழைக்கலாம் அவர்கள். உன்னை அப்படி நான் விலங்குகளோடு பொருத்துவேனோ? இல்லை தம்பி, இல்லை.



உனக்குத் தெரியாதா, பசப்பு வார்த்தைகள் பேசி, சிறு பிள்ளைக்கு நிலா காட்டுவது போல (எல்லாம் இந்த நிலாவால் வந்த வினைதான் )உனக்கு ஆசை வார்த்தைகளைக் காட்டி உன்னைக் கானகத்தே இட்டுச் சென்று, உன் கையிலுள்ள ‘ஓட்டை’த் தட்டிப் பறிக்கப் பார்க்கும் தருக்கர் கூட்டம் உன்னைச் சுற்றியுள்ளதைப் புரிந்து கொண்டாயா? உன்னைத் ‘தம்பி’ என்றழைக்கும் தகுதி மட்டுமா எனக்கு, நாம் இந்நாள்வரை ஒன்றாய் கண்ட போர்கள் எத்தனை; நாம் வெட்டிச் சாய்த்த பதிவுகள் எத்தனை - எண்ணிப் பாரடா, என் தம்பி. இனியும் நம் கண்முன்னே விரிந்து கிடக்கும் இடுகைகளில் நாம் காண வேண்டிய சமர்கள் எத்தனை எத்தனை - எண்ணிக்கையிலடங்குமோ !



ஆசை வார்த்தைகளில் மயங்குபவன் இல்லை நீ. எனக்குத் தெரியும் அது. அதிரடி சலுகைகள் உன்னைச் சறுக்கச் செய்யாது. எனக்குத் தெரியும் அது. ஆயினும் தம்பி, ஒன்று சொல்வேன் உனக்கு…உன்மத்தர்கள், உண்மையைக் குழிதோண்டி புதைப்பவர்கள், வெறும் வார்த்தை ஜாலங்கள் காண்பிப்பவர்களைப் புரிந்து கொள்.



இப்போது நமக்குத் தேவை வெற்றி. அது உன் கையில். அண்ணன் நானிருக்க வேறெங்கு போட்டிடுவாய் அதை நீ.



தெரிந்திருந்தும் ஏனடா அண்ணன் கேட்கிறானே என்றுதானே யோசிக்கிறாய். நம் தமிழர் மரபுதானடா தம்பி அது. நனி நாகரீகத்தை இந்த உலகுக்குத் தந்த நம் தமிழ்த்தாய் கற்றுக் கொடுத்த பாடத்தை மறந்திடலாமோ - அந்த பண்பை, மரபைக் காப்பாற்றவே இந்த வேண்டுகோள்.



முரசொலி கேட்கிறதா தம்பி…கேள்..நன்றாகக் கேள்…உற்றுக் கேள் …இதோ அங்கே..http://nilaraj.blogspot.com/2006/02/6_28.html#comments விரைந்து வந்துவிடு அங்கே; போட்டுவிடு உடனே உன் ஓட்டை. (இங்கே ஏதாவது ஒரு திருக்குறளைப் போட்டுக் கொள், தம்பி!)







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 01 2006 01:05 am | Uncategorized | | edit this
20 Responses
selvan Says:
March 1st, 2006 at 1:12 am e
பார்ட்னர்,,

இதோ பொருத்தமான திருக்குறள்

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

உங்கள் ரசிகர் படை மடை திறந்த வெள்ளம் போல் கிளம்பினால் அதை தடுப்பவர் யார்?வெற்றியை குவிக்க தம்பிமார் படை இருக்கிறது.தம்பி உடையான் படைக்கஞ்சான்.

கிளம்பட்டும் நமது மறவர் படை.தோள் தட்டி.இப்படை தோர்கின் எப்படை வெல்லும்?

குமரன் Says:
March 1st, 2006 at 1:16 am e
அருமையான பதிவு தருமி ஐயா…..

Sam Says:
March 1st, 2006 at 1:31 am e
தருமி அவர்களே
நீங்க்ள் என்னை கண்டு கொள்ளவில்லை என்றாலும், நான், என் வாக்கைப் உங்களுக்கும்
செல்வனுக்கும் பதிவு செய்து விட்டேன்.
சாம்

daya Says:
March 1st, 2006 at 3:34 am e
இது என்ன விதமான போட்டின்னு இன்னும் சரியாக தெரியவில்லை. செல்வன் கேட்டுகொண்டதற்காகவும் எனக்கு மிகவும் பிடித்த மலர் மல்லிகை என்பதாலும் நிலாவின் பதிவில் மல்லிகை சின்னத்தில் குத்தியிருக்கிறேன்.

கவலைப்படாதீர்கள் தருமி! அந்த ‘நிலா’வையே சூடியுள்ளவன் வரம் தருவான்.

ஒரு விஷயம். ரத்தத்தின் ரத்தங்களுக்கான கடிதமும் உடன்பிறப்புக்கா எழுதிய மாதிரி இருக்கிறதே. குட்டி கதை சொல்லியிருக்க வேண்டாமோ?

சந்தோஷ் Says:
March 1st, 2006 at 3:57 am e
தருமி,
கலக்கல் கடிதம் போங்க. ஆனா Marketingல குமரன் முந்திட்டாரு. இது இத்தோட முடியுமா இல்ல சோடா பாட்டில், ஆசீட் வீச்சு, ஆட்டோ, சுமோ, அடியாள் அப்படின்னு போகுமா? ஏதோ பாத்து செய்யுங்க.

சந்தோஷத்துடன்
சந்தோஷ்.

நந்தன் Says:
March 1st, 2006 at 4:33 am e
போட்டேனுங்க, அப்புறம் தான் பார்தேன், தேர்தலே முடிஞ்தாம்லே

சிங். Says:
March 1st, 2006 at 4:52 am e
தருமி அய்யா வணக்கம் !. மன்னிக்க வேண்டுகிறேன். காலம் தாழ்ந்து தொகுதி பக்கம் வந்ததால் என்னுடைய ஓட்டும் செல்லா ஓட்டாகிவிட்டதே!
வருத்ததுடன்
சிங்.செயகுமார்

anbuanbu Says:
March 1st, 2006 at 5:31 am e
யப்பா
என்ன கலக்கல் கலக்கறாங்க
நிலா நல்லா இருங்க
இத்தனை பேர கெளப்பியிருக்கீங்க
நிஜ தேர்தல் தோத்தது போங்க

DRaj Says:
March 1st, 2006 at 6:29 am e
தங்கைகள் ஓட்டு உங்களுக்கு வேண்டாமா???

ஜோ Says:
March 1st, 2006 at 8:22 am e
அண்ணா,
தேர்தல் பிரச்சாரத்தை காலம் கடந்து தொடங்கிய உங்களைச் சொல்லுவதா?அல்லது தேர்தல் களத்தில் மின்னல் வேகத்தில் திட்டமிட்டு சுழன்ற நண்பர் குமரனைச் சொல்லுவதா?இம்முறை ஏற்கனவே குமரன் என் ஓட்டை தட்டிக்கொண்டு சென்று விட்டார்.ஆனால் இதயத்தில் உங்களுக்குள்ள இடம் பத்திரமாக இருக்கிறது.

Mathy Kandasamy Says:
March 1st, 2006 at 8:50 am e
//தங்கைகள் ஓட்டு உங்களுக்கு வேண்டாமா???//

//
தேர்தல் பிரச்சாரத்தை காலம் கடந்து தொடங்கிய உங்களைச் சொல்லுவதா?அல்லது தேர்தல் களத்தில் மின்னல் வேகத்தில் திட்டமிட்டு சுழன்ற நண்பர் குமரனைச் சொல்லுவதா?இம்முறை ஏற்கனவே குமரன் என் ஓட்டை தட்டிக்கொண்டு சென்று விட்டார்.//



//ஆனால் இதயத்தில் உங்களுக்குள்ள இடம் பத்திரமாக இருக்கிறது. //



-Mathy

selvan Says:
March 1st, 2006 at 8:51 am e
அன்பு ஜோ

எல்லாம் நேரம் செய்த பிழை.போட்டி அறிவிக்கப்பட்டபோது அமெரிக்க நேரம் இரவு.நான் கம்ப்யூட்டரை திறந்தபோது மணி காலை 10.போட்டி முடிய 4 மணிநேரமே இருந்தது.நடுவே ஆபீஸ் வேலை வேறு.

எப்படியோ 8 பேர் எங்களுக்கு ஓட்டு போட்டார்கள்.அவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி

pot'tea"kadai Says:
March 1st, 2006 at 9:00 am e
Once in a blue moon…once in a life time…
i tried to cast my vote. But i’ve been denied entry, ‘cos the time was up.
I call up the networking tigers(mohandoss - take it easy) to hack & takeover nila’s blog …

suresh - penathal Says:
March 1st, 2006 at 9:08 am e
தருமி,

உங்கள் பதிவு கொஞ்சம் லேட். இரண்டு பிரசாரப்பதிவுகளும் ஒரே நேரத்தில் வந்திருந்தால் இதற்குத்தான் என் ஓட்டை இட்டிருப்பென். ஆனால் இலவசம் முந்திக்கொண்டு, உங்கள் அணிக்கு என்றும் நீங்கா இதய இடத்தை (மட்டுமே) விட்டுச்சென்றுவிட்டதே.. அய்யகோ!

தருமி Says:
March 1st, 2006 at 9:08 am e
எல்லாம் நேரம் செய்த பிழை. - செல்வன்
“காலம் செய்த கோலமடி
‘நிலா’ செய்த பாவமடி”

வருத்தத்துடன் நண்பர் Says:
March 1st, 2006 at 11:00 am e
தருமி சார் நீங்ககூட இதுமாதிரி வேலையத்த கிம்மிக் வோட்டிங் கேம்ல ஈடுபடணுமா?

தருமி Says:
March 1st, 2006 at 1:30 pm e
வருத்தத்துடன் நண்பருக்கு,
உங்களுக்கு மட்டும் உடனே பதில்.
உங்க பின்னூட்டத்தில ஸ்மைலி போடறத வச்சு நீங்க ஒரு ஸ்போர்ட்டிவான ஆளுன்னு தெரியுது. இது ஒரு விளையாட்டுதானே. பாருங்க, எனக்கு செல்வனை அதிகமா முந்தி தெரியாது. இதே மாதிரி கொத்ஸின் sense of humour, gaming spirit இதெல்லாமே புதுசுதான். இதில் என்ன தவறு கண்டுபிடித்தீர்கள் என்று தெரியவில்லையே?
‘நீங்க கூட’ என்பது என் வயதை வைத்துக் கேட்கப்பட்டது என்றால் என் பதில்: வயசென்ன இதில். இங்கு உடம்பா ஓடி உழைக்கிறது; மனசுதானே.அதையாவது முடிந்தவரை இளமையாக வைத்திருப்போமே.

Chandravathanaa Says:
March 1st, 2006 at 2:05 pm e
தருமி
உங்களுக்கு நான் போட்ட வாக்கு ஒரு சதப் பிரயோசனமில்லாமல் போய் விட்டது. என்ன செய்ய? நான் உங்கள் மெயிலைப் பார்த்த கையோடு போட்டேன். அதற்கு முன்னரே நிலா வாக்குச் சாவடியை மூடி விட்டார் என்பது தெரியாமல்.

என்றாலும் பரவாயில்லை. ஏதாவது எலக்சனில் நின்று பாருங்கள். வீடு வீடாய் போய் வேட்டி சட்டை கொடுக்கத் தேவையில்லை. இப்படி மின்னஞ்சல் வழியாவே வென்று விடுவீர்கள்.

மணியன் Says:
March 1st, 2006 at 2:06 pm e
ஐயா, தேர்தல் கமிஷனிடம் வாக்களிக்கும் நேரம் சரியில்லையென்று மனு கொடுங்கள். என்னைப் போன்ற நிறைய பேர் வாக்குசாவடியிலிருந்து ஒட்டு போடமுடியாமல் திரும்பியிருக்கிறார்கள்

Nila Says:
March 1st, 2006 at 2:25 pm e
//இது ஒரு விளையாட்டுதானே. பாருங்க, எனக்கு செல்வனை அதிகமா முந்தி தெரியாது. இதே மாதிரி கொத்ஸின் sense of humour, gaming spirit இதெல்லாமே புதுசுதான். இதில் என்ன தவறு கண்டுபிடித்தீர்கள் என்று தெரியவில்லையே?
‘நீங்க கூட’ என்பது என் வயதை வைத்துக் கேட்கப்பட்டது என்றால் என் பதில்: வயசென்ன இதில். இங்கு உடம்பா ஓடி உழைக்கிறது; மனசுதானே.அதையாவது முடிந்தவரை இளமையாக வைத்திருப்போமே. //

தருமி
நச்சுன்னு அடிச்சீங்க. இதையேதான் நானும் மனசில நெனச்சுக்கிட்டிருந்தேன். இந்த விளையாட்டை விளையாட்டதான் தொடங்கினேன். ஆனா போட்டியாளர்களால இது ரொம்ப நல்லா வந்துச்சி. இதுக்கு ஒரு தனி பதிவு போடறேன்

உங்க பதிவு தூள். நல்ல கடிதம். நேத்து போட்ருந்தீங்கன்னா என் ஓட்டு உங்களுக்குத்தான். கொஞ்சம் லேட்டா போச்சு:-)