Thursday, June 10, 2010

400. அமினா - ஒரு திறனாய்வு

*
அமினா பற்றிய முந்திய பதிவு ..... 

*
மதுரையிலிருந்து பேரா. ஜேம்ஸ் என்பவரால் நடத்தப்படும் சிறு மாத இதழ் "மனித நேயம்". வழக்கமாக இவ்விதழில் எழுதி வரும் முனைவர் பேரா.டாக்டர் வின்சென்ட் இவ்வாண்டின் மே மாத இதழில் அமினா என்ற என் மொழிபெயர்ப்பு நூலின் மீது ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். டாக். வின்சென்ட் நைஜீரிய புதின எழுத்தாளர் சினு அச்சிபி்யின் புதினங்கள் மீது Ph.D.க்கான தன் ஆய்வுக்கட்டுரை எழுதியவர். அவரது கட்டுரை:






நூல் :         அமினா 
ஆசிரியர்: முகமது உமர்

தமிழில்: தருமி 
பதிப்பு: கிழக்கு

பக்கம்: 368 
விலை: ரூ. 200

ஆப்ரிக்க நாடுகளின் ஆங்கிலப் படைப்புகள் உலக இலக்கியத்தில் உயர்வாக மதிக்கப்படுபவை. குறிப்பாக நைஜீரிய நாட்டின் வளமான இலக்கியப் படைப்புகள் அரை நூற்றாண்டிற்கு மேல் வாசகர்களையும் திறனாய்வாளர்களையும் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. சினு அச்சிபியும், நோபெல் பரிசு பெற்ற ஓலே சோயிக்காவும் உலகப் பெரும் எழுத்தாளர்கள் வரிசையிலே இடம் பெற்றவர்கள். எனினும் வடக்கு நைஜீரியாவிலிருந்து இப்போதுதான் ஆங்கிலத்தில் படைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. அவற்றில் முதன்மையாகக் கருதப்பட வேண்டியது முகமது உமர் எழுதிய அமினா என்ற நூல்.

இந்தப் புதினம் நைஜீரியாவில் இஸ்லாமியர் நிறைந்த பக்காவோ நகரினைப் பின்புலமாகக் கொண்டு இஸ்லாமியப் பெண்களின் அவலநிலையை சிந்திக்கிறது. கதைத் தலைவி அமீனா மாநில மக்களவை உறுப்பினர் ஹமணாவின் நான்காவது மனைவி. படித்தவள். தொடக்கத்தில் தன் அழகு, செல்வம், கணவரின் பதவி தந்த செருக்கில் மிதந்தவள்.  ஆனால் அவளுடைய தோழி பாத்திமா என்ற பெண் விடுதலைப் போராளி அவளைத் தன் பக்கம் ஈர்க்கிறாள்.  ஹருணாவின் வீட்டில் பாத்திமாவின் கூட்டாளிகள் சந்திக்கிறார்கள். முதலில் அவர்களுடைய வழியில் செல்லாத அமீனா, பிறகு தன்னையும் அவர்களோடு இணைத்துக் கொண்டாள்.  அவளுடைய நடத்தையில் சந்தேகப்படும் கணவன், அவனுடைய பெண்ணடிமைக் கொள்கையை எதிர்த்துப் போராடும் கூட்டம் என்று அலைக்கழிக்கப்படுகிற அமீனா பெண்கள் இயக்கத்தில் தலைவியாகிறாள். அவளுடைய கணவன் மக்களவையில் கொண்டு வந்த பெண்ணடிமைத் தீர்மானத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்துகிறார், அவள் காப்பாற்றி வளர்த்த பெண் லாராய் துப்பாகிச் சூட்டில் இறக்கிறாள். அமீனாவும் தாக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறாள். வழக்கு மன்றத்தில் அமீனாவே தனக்காக வாதாடுகிறாள். வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பாத்திமா அமீனாவிற்கு ஐ.நா. சபை மாநாட்டுப் பத்திரம் தரப் போவதாக அவளுக்குத் தெரிவிக்கிறாள். இந்தப் போராட்டம் தோற்றாலும், அடுத்த போராட்டம் வெற்றி தரும். "ஒளிமயமான எதிர்காலம் கைக்கெட்டும் தூரத்தில் தான்" என்ற் நம்பிக்கைச் சொற்களோடு நாவல் முடிகிறது.

நைஜீரியாவில் பரவி இருக்கும் ஊழல், பதவிப்போர் ஆகியவற்றைப் படம், பிடித்துக் காட்டும் இந்நாவல் இஸ்லாமியப் பெண்களின் அவல நிலையை நெஞ்சுருகச் சொல்லுகின்றது. பலதாரமணம், பெண்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள், பெண்களை அடித்துத் துன்புறுத்துதல் முதலியன நைஜீரிய இஸ்லாமிய சமூகம் அங்கீகரித்தவை. மகன் ரஷித்தின் உயிரைக் காப்பாற்றக் கதறியழும் அமீனாவை ஹருணா சந்தேகத்தின் பேரில் கண்மண் தெரியாமல் அடித்துத் துன்புறுத்துவது கொடூரமான சோகம்.

நைஜீரியாவின் பெண்ணடிமைத்தனத்தையும், ஊழலையும் விவரிக்கும் முயற்சியில் உயர்நாவலின் கட்டமைப்பை மறந்து விடுகிறார். பாத்திரப்படைப்பில் அழுத்தமில்லை. எனினும் ஒரு பெண் போராளியின் கதை என்ற முறையில் நைஜீரிய இஸ்லாமிய சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிற புதினம் இது. 'தருமி' என்ற புனைப்பெயரில் எழுதுகின்ற பேராசிரியர் சாம் ஜார்ஜ் நாவலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.  ஆற்றொழுக்கான நடை. ஒரு சில இடங்களில் சொற்களில் தடுமாற்றம் இருந்தாலும், கதை சொல்லும் பாணி மிக நன்று. பெண்ணிய ஆர்வலர் அவசியம் படிக்க வேண்டும்.

.................... பேராசிரியர் ச. வின்சென்ட்


*










Wednesday, June 09, 2010

399. சிங்கப்பூர் -- சந்திப்பு 1

22 மே 2010

இன்று காலை சிங்கை வந்து சேர்ந்தோம்; மாலையில் முதல் சந்திப்பு நடந்தது.

ஊரெங்கும் .. இல்லை .. இல்லை .. அந்த நாடெங்கும் பல நூலகங்கள் இருக்குமாம். அதில் ஒன்றான - ANG MO KIO - அங் மோ கியோ - என்ற நூலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அங் மோ கியோ என்றால் "(உடைந்த) தக்காளி" என்று பொருளாம்; அங்கு சிங்கப்பூரின் "வாசகர் வட்டம்" என்ற குழுவினரால் ஒரு அறிமுக - வாழ்த்துக் கூட்டம் நடத்தப் பட்டது. கூட்டம் நடந்த அறையின் பெயர்: தக்காளி அறை




தக்காளி அறைக்குள் செல்லும் முன் நூலகத்தை ஒரு பார்வையிட்டோம். தமிழுக்கென்று ஒரு தனிப் பகுதி. அப்பகுதியின் சில படங்கள் இங்கே ...











**


பின் எல்லோரும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப் பட்டோம். வாசகர் வட்டத்தின் வரலாறும், வளர்ச்சியும் வாசகர் வட்டத்தின் திரு. இராம கண்ணப்பன் அவர்களால் விளக்கப்பட்டது.











ஜோசப் பால்ராஜ் அனைவரையும் வரவேற்றார். (படத்தில் இருப்பது போல் 'சோகமாக' அல்ல; மிக்க மகிழ்ச்சியாக ...!) வேறெங்கும் இல்லாத அளவு எப்படி இந்தப் போட்டியை சிங்கைப் பதிவர்கள் நடத்த முனைந்ததைப் பற்றிய என் கேள்விக்கு, எங்களின் நேரமும் வாய்ப்பும் கொடுத்த முனைப்பு என்றார். அதோடு அவர்கள் எல்லோரின் ஒருமித்த கருத்தும், மனதும் முக்கிய காரணிகளாக எனக்குப் பட்டன.


அடுத்து, ஜோ 'மணற்கேணி'யினைப் பற்றிய அறிமுகம் அளித்தார். பலராலும் மணற்கேணி என்ற பெயர் மிகவும் போற்றப்பட்டது. இந்த ஆண்டு நடத்திய போட்டி போலவே தொடர்ந்து நடத்தும் திட்டம் இருப்பதாகவும் கூறினார்.
முதலாண்டு பரிசு வாங்கியவர்கள் இரண்டாமாண்டில் வெற்றி பெற்றோருக்கு  'கைடு'களாக வரவழைக்கப்படலாமே என்ற என் கோரிக்கை (!!)அடியோடு நிராகரிக்கப்பட்டது. :(




 

வாசகர் வட்டத்தின் திருமதி சித்ரா ரமேஷ்  மணற்கேணி இந்த ஆண்டுக்கு வெளியிட்ட
 நினைவு நூலின் கட்டுரைகள் அனைத்தையும் பற்றிய தன் கருத்துக்களை தொகுத்தளித்தார்.

இந்த மணற்கேணி நூலினால், 'இணையப் பதிவர்களா'க இருந்த நண்பர்கள்  இப்போது 'எழுத்தாளர்கள்' என்று promote ஆகிவிட்டார்கள்!  மேலும் .. தொடர்ந்து .. வளர்க.







பரிசு பெற்ற மூன்று கட்டுரைகளின் அறிமுகமும், நடுவர்கள் அளித்த குறிப்புகளும் அதற்குப் பின் பரிசு பெற்றோரின் பதிலுமாகக் கூட்டம் தொடர்ந்தது.





முதலில் என் கட்டுரையை குழலி அறிமுகம் செய்வித்தார். இருபுற அலசல்கள், உணர்ச்சிகரமான அணுகல், நேற்றைய, இன்றைய நிலவரங்கள், வழக்குகள், புள்ளி விவரங்கள், pace ஆகியவை பற்றி குறிப்பிட்டார். இடப்பங்கீடு என்ற தலைப்பை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்.

என் பதிலில் க்ரீமி லேயர் என்பது பிற்படுத்தப்பட்டோரின் கேள்வியாக இருக்க வேண்டும்; அந்த அளவிற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இடப்பங்கீட்டின் முக்கியத்துவம் புரிய வேண்டும். ஆனால் இன்னும் அந்த நிலை வரவில்லை. இரண்டாவதாக, நியாயமான க்ரீமி லேயருக்கு என் பதிலை அளித்துள்ளேன். அதற்கு வாசகர்களின் கருத்துக்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு (இந்த நிமிடம் வரையிலும் கூட ) எந்த வித பதிலும் இதுவரை வரவில்லை என்று கூறினேன்.

அடுத்து மருத்துவர் தேவன்மாயத்தின் கட்டுரையை கோவி கண்ணன் ஆய்வு செய்தார். சரியான சொல்தேடலால்,  புரிதல் எளிதாகிறது என்பதிலிருந்து, நம்  மேற்படிப்புகளைத் தமிழில் நடத்த முடியுமா என்ற வினாவையும் எழுப்பினார். இலங்கையில் மருத்துவம் தமிழில் சொல்லிக் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது.



தேவன்மாயம் அறிவியல் சொல்லாடல்கள் பற்றிய விளக்கங்களை அளித்தார்.

மூன்றாவதாக, பிரபாகரின் கட்டுரையை முகவை ராம் அறிமுக செய்வித்தார். கட்டுரையில் தமிழ் இசையின் முழு வரலாறு, பக்தி இசை, இசையில் சமயங்களின் ஈடுபாடு,  இசை ஆர்வலர்களின் அளிப்புகள், அரசியலின் தாக்கம்  என்பவற்றைக் கூறி இசை நோக்கிய பயணத்தின் அடுத்த அடிக்குச் செல்லும் சிறப்பான கட்டுரை என்று கூறி முடித்தார்.

அதன்பின் நடுவரின் குறிப்புகளும் வாசிக்கப்பட்டன. பிரபாகர் தன் ஏற்புரையில் தான் கட்டுரையில் எடுத்துக் கொண்டவைகளைப் பற்றியும், இசையைப் பற்றிய பொதுப்பார்வையையும், தமிழிசையின் இன்றைய நிலைப்பாடுகள், வேறுபாடுகள் பற்றியும் அளித்தவையும், குட்டி musical demo-வும் அவையோரைக் கட்டி வைத்தது.




இறுதியாக 20 நூல்கள் வெளியிட்டிருக்கும் வாசகர் வட்ட திருமதி ஜெயந்தி சங்கரின் நூல்கள் பரிசு பெற்றோருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டன்.







































இன்னும் கொஞ்சம் 'தக்காளி'ப் படங்கள் பார்க்க இங்கே வாருங்களேன் ...........

வேறு பதிவுகள்:  
http://abidheva.blogspot.com/2010/06/blog-post_04.html

http://abidheva.blogspot.com/2010/06/2.html


http://dharumi.blogspot.com/2010/06/397-1.html

http://dharumi.blogspot.com/2010/06/400.html

Monday, June 07, 2010

398. உங்களுக்கு இன்னும் எவ்வளவோ வேலை இருக்கு ... வாங்க

*
திடீர்னு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்த்துட்டாங்க. ஆனா அதுக்கு முயற்சி எடுத்த நம்ம நாட்டு BCCI, இப்போ நடக்கப்போகிற ஆட்டத்துக்கு நாங்க வரமாட்டோம்; எங்களுக்கு அதை விட "பெரிய" வேலை இருக்கு.

Sunday, June 06, 2010

397. Sam & Silas vs ஏசு & முகமது

*


எனக்கு  மிகவும் இளையவராக கல்லூரியில் எனது துறையில் சேர்ந்து, சேர்ந்த புதிதில் என்னையும் என் நடவடிக்கைகளையும் 'ஒரு மாதிரி'  பார்த்து, சுணங்கி, எட்டி நின்று,

Friday, June 04, 2010

396. இடப்பங்கீடு - தனிமடல் பதிவு

*

//ஒரு வேண்டுகோள்:

என் பதில்கள், முடிவுரை என்ற இக்கட்டுரையின் கடைசிப் பகுதிகளை வாசித்து அதற்கான உங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.// இப்படி ஒரு வேண்டுகோளுடன் என் முந்திய பதிவாக சிங்கைப் பதிவர்களின் கட்டுரைப்போட்டியில் வென்ற என் கட்டுரையை அளித்திருந்தேன்.

தொடக்கூடாத கட்டுரை போல் எவ்வித response-ம் இல்லாமல் "பாவம்" போல் (3 பின்னூட்டங்கள் தவிர )அக்கட்டுரை அப்படியே இருந்துவிட்டது.