Tuesday, June 16, 2009

317. கடவுள் என்றொரு மாயை ... 7

*

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:


298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

*




கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================


Chapter V. THE ROOTS OF RELIGION

*
நாமும் டார்வினியனின் பரிணாமக் கொள்கைகளின் இறுதிப்படைப்பே என்பதன் மூலம், நாம் ஏன் அல்லது எந்த அழுத்தங்களுக்கு உட்பட்டு, (natural selection) இயற்கையின் தேர்வின் உந்துதலால் இந்த மதம் என்பது எப்படி ஏற்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

*
இப்பகுதியில், டார்வினின் கொள்கைப்படி எப்படி மதங்கள் உருவாகியிருக்க வேண்டும் என்பதெல்லாம் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. Direct Advantages of Religion; Group Selection, Religion as a by-product of something else - போன்ற தலைப்புகள் இதில் வருபவையே. விட்டில் பூச்சிகள் விளக்கொளியில் விழுவது எதற்கு? என்பது போன்றவைகளும், மீமீ-களும் ..., genes, DNA, ... இன்னும் பல.

*
மக்களுக்குள்ளே இருக்கும் மாறு்பட்ட இனச்சேர்க்கை ஈர்ப்பு போலவே, மத நம்பிக்கைகள் மக்க்ளுக்குள்ளே இருக்கும் ஒரு பரவலான விஷயம். ஆயினும், இரு வித நம்பிக்கைகளுமே பலவித மாறுபட்ட விஷயங்களுக்கு உட்பட்டதாயிருக்கும்.

*
மத நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது நம்பிக்கை மன அழுத்தத்தால் ஏற்படும் பல வாழ்வுச் சிக்கல்களிடமிருந்து விடுபட உதவுகின்றது.

*
George Bernard Shaw: ஒரு மத நம்பிக்கையற்றவனை விடவும் மத நம்பிக்கையுள்ளவன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறானென்றால், அது ஒரு குடிகாரன் சாதாரணமாக இருப்பவனை விடவும் மகிழ்ச்சியாக இருக்கிறானென்று பொருள்.

*
கண்முன்னால் தெரிந்த சில மதத்தொடர்பான செயல்கள், ஆச்சரியங்கள் எல்லாமே மனித மூளையின் (temporal lobe epilepsy) பிறழ்வே.

*


நூலின் இந்தப் பகுதியே டார்வினின் கோட்பாடே இயற்கையின் தேர்தல் விதிகளில் (Natural Selection) தேவையற்றவைகளுக்கு இடமேயில்லை என்ற தொடர் விதியை வலியுறுத்தும். அப்படியானால் மதங்களால் ஏதோ ஒரு நன்மை இருப்பதால்தான் அது இத்துணை காலமும் இருந்து வந்துள்ளது. மதம் எப்படியோ எதனோ ஒன்றின் பகுதிப் பொருளாக (by-product) இருந்து வந்துள்ளது. மதங்களினால் எந்த நேரடிப் பயனுமின்றி இருப்பினும், அதன்பகுதிப் பொருள் ஏதேனும் ஒரு பயனோடு இருக்க வேண்டும்.

*

டாக்கின்ஸ் இந்த நிலையை விளக்கில் விழும் விட்டில் பூச்சியின் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டு விளக்குகிறார். வான்வழி விளக்குகளோடு பலகாலமாய் பழகிய விட்டில் பூச்சிகள் சாதாரண காலங்களில் இன்றும் அந்த விளக்கொளிகோடுகளோதான் தங்களது இன்றைய இடமாற்றங்களைச் செய்து கொள்கின்றன. இருப்பினும் நாம் காணும் சூழலில் அவைகள் நம் முன் உள்ள விளக்கொளியைப் புரிந்து கொள்ளாது, ஈர்க்கப் பட்டு மாய்ந்து விடுகின்றன.

இவைகள் ஒன்றும் தற்கொலைகளல்ல; அவைகள் எல்லாமே அவைகள் உடம்பிலுள்ள காந்த சக்தியின் தவறுதலான வழிகாட்டல்கள் ஆகும். (It never was right to call it suicide. It is misfiring by-product of a normally useful compass.)

*

விளக்கில் விழுந்து சாகும் இந்தப் பூச்சிகளைப் போலவே, ஆயிரக்கணக்கான மனிதர்கள் தங்கள் நம்பிக்கைகளுக்காகவே சாகிறார்கள், சாகடிக்கிறார்கள். அதைப் பார்த்து ஆச்சரியப் படுவதோடு தவறான கேள்விகளையும் எழுப்பிக் கொண்டுள்ளோம்.

*

மதங்கள் மற்றொன்றின் பகுதிப் பொருள் என்றால் எதனுடைய பகுதிப் பொருளாக இருக்க வேண்டும்?

*

குழந்தைகள் மனது போல் Casabianca கதை போலவும், இன்னும் சில கதைகள் போலவும் சொல்லிச் சொல்லியே இளம் வயதில் நம் குழந்தைகள் எப்படி 'கீழ்ப்படிதலுள்ள" பிள்ளைகளாக இருக்க வேண்டுமெனச் சொல்லித் தருகிறோம். இயல்பிலேயே உள்ள அடிமைத்தனமான கீழ்ப்படிதலை (slavish gullibility) அவர்களிடம் ஊட்டி விடுகிறோம். குழந்தைகளும் அவைகளை அப்படியே எடுத்துக் கொள்கின்றன. 'முதலை இருக்கும் நீரில் விளையாடப் போகக் கூடாது என்பதற்கும், ஒரு ஆடு வெட்டி பலி கொடுக்கவில்லையென்றால் இந்த ஆண்டு மாரியாத்தா மழை தராது' என்ற இரண்டிற்கும் அந்தக் குழந்தைக்கு எப்படி வேற்றுமை காண முடியும்? இரண்டுமே மரியாதைக்குரிய ஒரே வழியிலிருந்துதானே வருகின்றன.

*

ஒரு வேடிக்கையான கதை:
Religion Explained என்ற நூலை எழுதிய Pascal Boyer Cameroon-ல் உள்ள Fang என்ற மக்களைப் பற்றி ஆராய்ந்தவர். அவரு ஒரு முறை தன் நண்பர்கள் குழாமில், எப்படி அவர்கள் மத்தியில் மந்திரவாதிகள் பல கேடுகளை விளைவிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு கிறித்துவ மதக்காரர், 'எப்படித்தான் இப்படி மூடத்தனமான விஷயங்களை மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்களோ?' என்று வியந்த போது டாக்கின்ஸுக்கு நினைவுக்கு் வந்த சில விஷயங்கள்:

* தகப்பன் இல்லாமல் கன்னிக்கு ஒரு குழந்தை பிறந்தது. நம்ம ஐயப்பன், ஆறுமுகம், கர்ணன் பிறந்த கதைகள் மாதிரி ...
* செத்துப் போன லாசரை உயிர்ப்பிப்பது ...
* செத்து மூணு நாள் கழிச்சி உயிரோடு வந்தது.
*** இப்படியாக .....

*
"பெரியவர்களை நம்புங்கள்". இது குழந்தைகளுக்காகச் சொல்லப்படும் ஒரு மதிப்பான வாதம். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல இது பயனற்ற ஒன்றாகலாம்.

*
கண்கள் பார்ப்பதற்கும், காதுகள் கேட்பதற்கும் என்பது போல் மூளை என்பதும் பல உறுப்புக்களின் ஒரு தொகுதி; இது, பல - specialist in data-processing needs. உறவுகளுக்கும், எதிர்மறைக் கருத்துக்களை உருவாக்கவும் ... இப்படி பல காரியங்களுக்கானது.

*
Paul Bloom, ஒரு மனோதத்துவர்; இவர் குழந்தைகள் "இரட்டை மனக்காரர்கள்" (dualistic mind) என்ற தத்துவக்காரர்.

மதத்தைக் கட்டிப் பிடிக்க வல்லது நம் மனது என்பாரிவர்..

நம் இரட்டை மனதால் நாம் 'ஆன்மா' என்பது நம்முடம்பில் தங்கியுள்ளது என்பதை நம்புவோம்.

*
ஒரு குழந்தை எந்த அடிப்படைக் குணங்களோடு வளர்கிறதோ, அதே குணங்களை அடுத்த தலைமுறைக்கும் கொடுத்துச் செல்லும்.

*
அழியா பிறவி என்பது நம் ஆழ்ந்த மனத்தின் ஒரு வெளிப்பாடு.

*
Martin Luther: காரண காரியங்கள் மதங்களின் நேர் எதிரி. "காரணம் (reason) என்பது நம்பிக்கைக்கு நேர் எதிரானது. அவைகள் நம்பிக்கைக்கான ஆன்மாவுக்குரிய விஷயங்களில் நேர் எதிரி; கடவுளிடமிருந்து வரும் எல்லா விஷயங்களுக்கும் அவைகள் நேர் எதிர். ... ஒரு நல்ல கிறித்துவனாக இருக்க வேண்டியவன் தன் கண்களை இந்த காரணங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள வெண்டும். .. காரணங்கள் எல்லா கிறித்துவர்களாலும் அழித்துப் போட வேண்டிய விஷயம்.

*
Cargo cults என்பதிலிருந்து சில சான்றுகள் தருகிறார். அதில் ஒன்று John Frum என்ற ஒரு 'தேவமகனை"ப் பற்றியது. நடந்தது Tanna in New Hebries. அவருக்காக 19 ஆண்டுகளாகக் காத்திருக்கும் ஒருவரை அதைப் பற்றிக் கேட்ட போது, 'நீங்கள் இரண்டாயிரம் வருடங்களாகக் காத்திருக்கும்போது 19 வருஷம் என்பது பெரிதா?' என்று கேட்டிருக்கிறார்.

* இந்த வித cultகளைப் பற்றிப் பேசும் டாக்கின்ஸ் இதிலிருந்து மதங்கள் எப்படி ஆரம்பித்திருக்க முடியும் என்பதற்குரிய நான்கு காரணங்களைக் கூறுகிறார்:
1. இந்த வித குழு அமைப்புகள் (cults)மிக மிக வேகமாக வளரக்கூடியவை.
2. இக்குழுக்களின் ஆரம்ப கால விஷயங்கள் எப்போதுமே பின் தள்ளப் படக்கூடியவை.
3. இதுபோன்ற பல குழுக்கள் ஆரம்பிப்பதை எப்போதும் காண முடியும்.
4. இதைப் போன்றே எல்லாவித மதங்களும் ஆரம்பித்து, வளர்ந்து வந்தன என்பதைக் காண முடிகிறது.

*

அடுத்த பதிவு:

THE ROOTS OF MORALITY;
WHY ARE WE GOOD?

241 - 267










*

Monday, June 08, 2009

316. இளைய தளபதி அரசியலுக்கு வர்ராராமே ... வரட்டும் ..

*
Roger Federer முந்தா நாள் ராத்திரி பார்த்தேன். யாரோ Mathiue அப்டின்னு ஒருத்தரோடு ஆடி முதல் செட் போச்சு; ஆனா ரெண்டாவது செட்டில் நல்லா அடிச்சி ஜெயிக்கிறது மாதிரி வந்ததும் நான் படுக்கப் போய்ட்டேன். தல ஆட்டம் முன்னால் போல இல்ல. கடைசிவரை தேறுவாரா? மாட்டார்னு நினைக்கிறேன். ஜோகோவிச் போயாச்சி ... இவரு எப்படியோ?

=========================================

எப்படியோ, Roger Federer அதுக்குப் பிறகு ஜெயிச்சிட்டார். ஆனா கடைசி வரை வருவாரான்னு நினச்சிக்கிட்டு உக்கார்ந்து பார்த்தா, நாடலும் ரொம்ப தடுமாறுகிறார். முதல் செட் அவுட். ரெண்டாவதில தேறி இருக்கார். ஆனாலும் முதல் இரு செட்டுலயும் lead-footed Nadal! பார்ப்போம்.

=========================================

நம்ம சினிமா சண்டைக்காட்சி எடுக்கிற ஆளுகளுக்கு மட்டும் ஒரே ஒரு வார்த்தை. அந்த matrix, crouching tiger மாதிரி படங்கள் வந்தாலும் வந்தாச்சு, நம்ம தமிழ்ப் படங்களில் நம்ம தலைகள் ஒரு அடி அடிச்சா எதிர்த்தரப்பு மக்கள் எல்லோரும் எப்படியும் காத்தில பறந்து போய் ஒரு முப்பது நாப்பது அடி தள்ளி்ப் போய் விழுகுறாங்க. என்ன ஸ்பீடு'ப்பா!

இந்த கயிறு கட்டி இழுக்குறதை நிப்பாட்டி நிஜமா சண்டைக் காட்சி மாதிரி எடுக்கப் படாதா?
ப்ளீஸ் ...!

==========================================


நம்ம இளைய தளபதி அரசியலுக்கு வர்ராராம்ல. இந்த மாதம் அவரது பிறந்த நாளில் புதுக் கட்சி ஆரம்பிக்குதாம். அப்டின்னா, அநேகமாக, 2011-ல் அவருதான் பிரதமரு .. அடச்சீ .. முதல்வரு்.

நல்லாத்தான் இருக்கும்.

இப்ப பாருங்க நெப்போலியன் மந்திரிப் பதவில இருக்கிறவரை நடிக்க மாட்டேன்னுட்டார். அதெல்லாம் ஒரு நெஞ்சழுத்தம்தான். அதுமாதிரி நம்ம ஈனா தானாவும் வந்திருவாரோன்னு சிலருக்குப் பயம். அந்தப் பயத்தில அவரு அரசியலுக்கு வரக்கூடாது என்றாங்க. ஆனா, பாருங்களேன் .. தலைவர் கட்சி ஆரம்பிக்கிறார்; பதவியைப் பிடிக்கிறார்; அதுக்குப் பிறகு பாருங்களேன். தமிழ்நாடு பூராவும் ஒரே 'கில்லி' ஆட்டம்தான். இவருக்கு ஏதாவது புதுப்பட்டம் கொடுக்கணும்; 'கறுப்பு எம்.ஜி.ஆர்.' இல்லை. வேற என்ன கொடுக்கலாம். யோசிக்கணும். அந்த வேலையும் நிறைய இருக்கு.

அதோட நம்ம ஈனா தானாவை நம்பி இருக்கேன் இன்னொரு விஷயத்துக்கும். இவர் வர்ர வேகத்தைப் பார்த்தா அப்படியே நம்ம தனுஷ், சிம்பு, விஷால், பரத் .. இன்னும் பலர் .. இப்படி பலரையும் தன் கட்சிக்கு வரவழைச்சிக்குவார். அப்படியே இல்லைன்னா கூட இவங்க எல்லாரும் தனிக் கட்சி ஆரம்பிச்சிருவாங்க. நான் நினைக்கிறேன், தனுஷ், சிம்பு ரெண்டுபேரும் தனித் தனிக் கட்சிதான். அதான் நல்லா இருக்கும். எப்படியோ நாடு நல்லா இருக்கப் போகுது.

எப்படா இவங்க எல்லாரும் தனிக் கட்சிகள் ஆரம்பிப்பாங்க; நாடு முன்னேறும்னு ஒரு துடிப்போடு இருக்கேன்.

பொறாமைப் படாதவங்க எல்லாரும் ஒரே அணியில் இருப்போம்; வாருங்கள்.

===========================================

நாடல் பாவம் ... ஐந்தாம் முறை தொடர் வெற்றிக்கான வாய்ப்பு போச்சு. ரெண்டு பேருடைய பேட்டி சண்டை நல்லாத்தான் இருந்திச்சி ...

============================================

இப்போ மயிலில் வந்த ஜோக்:
What is confidence????

A hypothetical situation where 20 CEOs board an airplane and are told that
the flight that they are about to take is the first-ever to feature
pilotless technology: It is an uncrewed aircraft. Each one of the CEOs is
then told, privately, that their company's software is running the
aircraft's automatic pilot system. Nineteen of the CEOs promptly leave the
aircraft, each offering a different type of excuse.

One CEO alone remains on board the jet, seeming very calm indeed. Asked why
he is so confident in this first uncrewed flight,

he replies :

"If it is the same software that is developed by my company's IT systems department, this plane won't even take off." !!!!

That is called Confidence!!!


=========================================
8.6.09

பெடரர் ஜெயிச்சாச்சு. எல்லா ஸ்லாம்களிலும் வெற்றி. சாம்ப்ராஸின் 14 வெற்றிக் கோப்பைகளுக்கு ஈடு கொடுத்தாச்சி. இன்னைக்கு அழுகை ரொம்பவே. நிறைய பாய்ண்டுகள் drop shots-ல கிடைச்சிது.
எதிர்ப் போட்டியாளர் சோடர்லிங் -போட்டி ஓரளவு நல்லா இருந்தாலும் - நல்ல பேட்டி கொடுத்தார்;

==========================================

லியாண்டர் ப்யாஸ் மறுபடி ஒரு ஸ்லாம் வெற்றி. முதல் செட்டில் கண்ணில் நல்ல அடி. அந்த செட் போக, அடுத்த இரண்டிலும் வெற்றி. முதலில் ஓடி பழைய பார்ட்னர் நவரத்திலோவாவிற்குப் பார்த்தது நல்லா இருந்திச்சி. ஆனாலும் ப்யாஸ் தன் பார்ட்னரைத் தூக்க முயற்சித்தது எதுக்கு? :)

==============================================

டென்னிஸ் முடிஞ்ச பிறகு "நீயா நானா?" பார்த்தேன். வயசான பெற்றோர், இளம் பிள்ளைகள் இவர்களுக்குக்கேயான ஒரு உரையாடல்.

ஏன் வயசானவங்க (?) எல்லாரும் இப்படி 'அழுது வடியிறாங்க'? ஒருவேளை வயசாயிரிச்சின்னா அப்படித்தானிருக்குமோ? தெரியலை!

இதுக்குத்தான் ஒழுங்கா நான் முன்பே சொன்னது மாதிரி 192. FOR THE EYES OF SENIOR CITIZENS ONLY*** இருக்க வேண்டியதுதானே!

===================================================



*

Thursday, May 28, 2009

315. MY FIRST TIME ........

*

MADURAI BLOGGERS' MEET .......

*
ஏதோ தப்பு தப்பா செஞ்சி ஒரு பதிவுலகில் முதல் முறையாக ஒரு u-tube படம் போட்டாச்சு. இன்னும் கொஞ்சம் மீதியிருக்கு. மறுபடி சரி செஞ்சி போடணும் .. அதுவரை இதைப் பார்க்கணும்னா பாருங்க .......







இல்லைன்னா .. இப்போ அடுத்த நாள் போட்ட இந்தப் பதிவைப் பாருங்களேன் ...





*

Wednesday, May 27, 2009

314. ஒரு திருட்டுப் பதிவு ... அட, கடவுளே!

*

தமிழ்ப்படை என்ற பெயரில் ஒரு பதிவு. வாசித்ததும் மிகவும் பிடித்தது. பதிவர் பெயர் தெரியாது. பதிவு வழியே தொடர்பு கொண்டேன். உங்களது இந்தப் பதிவை நான் என் பதிவில் மீண்டும் போட வேண்டுமென ஒரு வேண்டுகோள் விடுத்தேன். சரியென்றார். ஆனால் இப்போது அவரது பதிவைக் காணவில்லை. ஏனென்றும் தெரியவில்லை.

ஆகவே, இப்போது அப்பதிவை இங்கு இடுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை அந்த இளைஞரின் (வயது கொஞ்சம் கம்மிதான் என்பது மட்டும் தெரியும்.) இந்தப் பரவலான சிந்தனை என்னை மிகவும் பிரமிப்பு கொள்ள வைத்ததால் மட்டுமே இதை என் பதிவிலும் இட நினைத்தேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள்; இதோ:








எங்கே? உன் கடவுள், எனக்குக் காட்டு!

நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை "வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு' என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.

இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் "கடவுளை' அப்புறப்படுத்த முடியவில்லை.

எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. "நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!'' "என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?'' ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.

புறவய உலகத்தின் "தோற்றம்' குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் "உணர்வு' குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் "கண்டு', பிறகு அதனை "விண்டு' உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

முதலில் "படைப்பு ரகசியம்' பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hydron Collider) அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.

"இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்'' என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், "உலகம் அழியுமா, அழியாதா?'' என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் "அழியாது' என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.

கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (mass and weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.

புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் "ஹிக்ஸ் துகள்' என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (ட்ச்ண்ண்) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை "கடவுள் துகள்' (எணிஞீ ணீச்ணூtடிஞிடூஞு) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.

களிமண்ணை உருட்டினால் கடவுள்!கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!

"ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே' என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் "கடவுள் துகளை'த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், "இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?'' என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது "பிரம்ம ரகசியத்தை'க் கண்டறிந்து விட முடியும்.

ஒருவேளை தோற்றுவிட்டால்? "40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!'' என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.

"எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்'' என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், "அவிசுவாசிகள்' உருவாக்கிய கணினியின் வழியே, "தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி'யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.


சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?


வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் "காட்சி' தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் "இறங்குகிறார்' ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பியல் மருத்துவம்.

"மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் "டெம்பரல் லோப்' என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான "ஆன்மீக அனுபவங்கள்' ஏற்படுகின்றன'' என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.

இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, "தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக'க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் "கண்ட' காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் "அனுபவத்தை' ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள், தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.

"செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் "ஏசு அவர் முன் "தோன்றத்' தொடங்கினார்'' என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய "இறையருள்' கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய "உள்காயம்' ஏற்படக்கூடும்.

"இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் "டெம்பரல் லோப்' என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன'' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.

"ஒருவேளை மூளையில் கடவுள் "குடியிருக்கும்' இந்தப் பகுதியை (God spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?'' என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. "கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?'' என்று அவர்களை "சமாதானப்படுத்தினார்' ராமச்சந்திரன். அப்படியொரு "ஆன்மீக ஆன்டனா'வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.

கோவில் கனெக்சன் இல்லாமலேயே கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!


Image and video hosting by TinyPicகாட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் "கவச' சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.

டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், "அந்நிய பாஷை' என்று கிறித்தவர்கள் கூறுகின்றர்.

தியானத்தில் ஈடுபடும்போது, "தான்' என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற "பாரிடல் லோப்' செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.

இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் "அமானுஷ்யமானவை' என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட "ஆன்மீக அனுபவங்களை'த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.

மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று "ஆன்மீக மூலக்கூறு' என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், "இறை நரம்பியல்' (neuro theology) ) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.

எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. "மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத "பரவச உணர்வுகளோ', வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது'' என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.

ஏசு இறங்கினாரா? எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!

மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.


பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, "ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.

பொருளும் சிந்தனையும்: புரட்சி எனும் ஹைட்ரஜன் கொலைடர்!

இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து "கடவுளை' அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் "சோதனையும்' ஒப்பீட்டளவில் கடினமானவை.

உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.

எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், "கல்விச் சுதந்திரம்' என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.

"டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்' என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.

பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).

விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். "குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?'' என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.

"அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?'' என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.

நன்றி: http://www.tamilcircle.net/

(இப்பதிவுக்குரிய பின்னூட்டங்களை அவரது பதிவில் போடச் சொல்ல வேண்டுமென நினைத்திருந்தேன். இப்போது அவரது பதிவு இல்லாததால் பின்னூட்டங்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன. ஆசிரியரை இங்கு அழைக்கிறேன்.)


*

Monday, May 25, 2009

313. மதுரை - பதிவர் சந்திப்பு

*

நானும் இன்னும் ஓரிரு பதிவர்களும் மதுரையில் ஒரு நல்ல பதிவர் கூட்டம் நடத்திடலாம்னு நினச்சோம். என்ன பண்றது ... கார்த்திகைப் பாண்டியன் அப்டின்னு ஒரு இளைஞர் வந்தாதான் அப்படியெல்லாம் நடத்த முடியும்னு இன்னைக்கித்தான் நிஜமாச்சு .. 16+2 பதிவர்கள் வந்து கலந்துக்கிட்டோமே ..


1. டக்ளஸ்

2.தேனீ-சுந்தர்

3. அன்பு- சிவகாசி

4. பாலகுமார்

5. இளைய கவி கணேஷ் குமார்

6. ஜாலி ஜம்பர்

7. சூப்பர் சுப்ரா

8. வால்பையன்

9. கார்த்திகைப் பாண்டியன்

10. ஸ்ரீதர்

11. சில் பீர்

12. டாக். தேவமாயம்

13. அருண்

14. முருகன்

15. சீனா

16. தருமி

17. ராஜா

18. கார்த்திக்



ஜாலி ஜம்பர், கார்த்திகைப் பாண்டியன்



வால்பையன், சூப்பர் சுப்ரா, அருண்



தேனீ-சுந்தர், கார்த்திக், சில்-பீர்



அருண், தேனீ-சுந்தர், சில்-பீர்




கணேஷ் குமார்






ஸ்ரீதர், வால்பையன்



டக்ளஸ்



ஸ்ரீதர்






சூப்பர் சுப்ரா, அன்பு, ஜாலி, ஸ்ரீதர்




அன்பு, கார்த்திக்



சில்-பீர்



ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா




ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா, சில்-பீர்




அருண், கார்த்திகை




ஜாலி, ஸ்ரீதர், கார்த்திகை

















மயங்கும் நேரம் ...


* 5 மணிக்குச் சந்திக்கலாமென நினைத்திருந்தால் 3.30 மணிக்கு சரியான மழை.

* தெரிந்தது போலவே அரை மணி கழித்து மழை முடிந்து போயிற்று.

* புறப்பட்டு, சரியாக 4.58க்கு பந்தய மைதானத்து வாசலுக்கு வந்து நின்றேன்.

* வாசலில் பழச்சாறு விற்பவரோடு 10 நிமிட உரையாடல்; அடுத்த 'கதை'க்கு கரு கிடைத்தது. ஆனால் யார் கதை எழுதுவது?

* 5.15க்கு ஒரு ஆட்டோ; உள்ளேயிருந்து ஆட்கள் இறங்கிக்கொண்டே இருந்தார்கள். அத்தனை சனம். அந்த ஒரு வண்டிக்குள். 7 உருப்படி இறங்கியதுகள்! இறங்கின ஆட்களுக்கும் அந்த பந்தய மைதானத்துக்கும் ஏதும் தொடர்பில்லை. இருந்தும் எல்லாரும் தாராளமாய் பந்தய மைதானத்துக்குள் நுழைந்தார்கள். யாரும் வேறு யாரையும் தேடவுமில்லை. என்னமோ கல்யாண வீட்டுக்கு வந்த மக்கள் மாதிரி போனார்கள். திடீரென நடுவில் ஒரே ஒரு தெரிந்த முகம். நம்ம வால்ஸ் தான். கூப்பிட்டால் மொத்தமாக படையெடுத்து வந்தார்கள். அறிமுகம் வாசலிலேயே முடித்துவிட்டு, உள்ளே படிகள் இருக்குமே அங்கே செல்ல ஆரம்பித்தோம்.

* படிகள் எல்லாமே நல்ல ஈரம். நின்று கொண்டே பல சேதிகள் பற்றிப் பேசினோம். எல்லோருக்குமே இப்படி ஒரு பதிவர் உலகமா என்று தோன்றியதோ என்னவோ .. அப்படி ஒரு கலகலப்பு.

* இன்னும் சிறிது நேரத்தில் மற்ற பதிவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

* அரட்டை ... அரட்டை ... காலை வாருதல் ..

* இருட்டும் நேரத்தில் வந்து சேர்ந்தார் தேவன் மாயம்.

* அதைவிடவும் பின்னால், வெளியூர் சென்றிருந்த சீனா வந்தார். அவரை "வரவேற்கும்" நிலையில் பந்தயத் திடலின் முன் வாசலுக்கு வந்து நின்று அவரோடும், எல்லோரும் நின்று கொண்டே பேசி முடித்துக் கிளம்பினோம்.

* படம் போடும்போது பதிவர் அன்புடன் நின்று ஒரு படம் எடுத்திருக்கலாமோவென்று தோன்றியது. ஏனெனில் 20 வயது என்பது கூட தோன்றாமல் நின்ற அவருடன் பதிவுலகப் "பெரியவன்" என்ற முறையில் ஒரு படம் எடுத்திருக்கலாமேவென்று தோன்றியது!

* பதிவுலக சந்திப்பு ஆரம்பிக்கும்போதே மும்பையிலிருந்து நையாண்டி நைனாவும், முடியும் நேரத்தில் ரம்யா அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்கள். அவர்களுக்கு என் நன்றி.

* அன்பு அவர்கள் சந்திப்பு பற்றி ஒரு பதிவிட்டுள்ளார்

* இரவுக் காட்சிகளோடு, தேவமாயம் ஒரு பதிவிட்டுள்ளார்.

பாலகுமாரின் பதிவு.






*