Monday, October 03, 2005

79. தல புராணம்…1

Post Date :
Monday, Oct 3rd, 2005 at 11:56 am



*

ஏனைய பதிவுகள்:


1...............

2..............

3...............

4.............

5............. 





*


தல புராணம் அப்டிங்கிற தலைப்பில எங்க ஊரு மதுரையென்னும் ‘பெரிய கிராமத்தில′ உள்ள எனக்குத் தெரிஞ்ச சில இடங்களைப் பத்தி எழுத ஆசை. அதில் இது முதல்…

Image and video hosting by TinyPic

இந்தக் கட்டிடத்தைப் பார்க்கும்போது இது ஒருகாலத்தில் மதுரையின் மையமாக,V.V.I.P.கள் யார் வந்தாலும் தங்கற ஹோட்டல் இதுதான்னு சொன்னா நம்பமுடியுதா? மதுரை மேல மாசி வீதியில் இருக்கிற இந்த இடத்த நான் சின்ன பையனாக இருந்தப்போ பாத்திருக்கேன். ஜே..ஜேன்னு இருக்கும். அந்தக் காலத்தில் ரோட்டில ரொம்ப ஒண்ணும் கார்கள் போய்ட்டு வந்திட்டு இருக்காது. ஆனா நான் பாத்த நேரங்களில் எல்லாம் இந்தக் கட்டிடம் முன்னால நிறைய கார்கள் எப்போதும் நிக்கும். ஆட்கள் நிறைய அந்த லாட்ஜ் முன்னால நின்னாங்கன்னா யாரோ நடிக, நடிகையர்கள் வந்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம். ‘மாடர்ன் லாட்ஜ்’ன்னு பேரு. எல்லா அரசியல் தலைவர்கள், மற்ற முக்கிய புள்ளிகள் வந்தால் இங்கேதான் தங்குவாங்க. இந்த லாட்ஜ் எங்க இருக்குன்னு இப்ப தமிழ்நாட்ல இருக்கிற எல்லாருக்கும் ஈசியா அடையாளம் சொல்லிடலாம். ரெண்டு மூணு வருசத்துக்கு முந்தி சுப்பிரமணி சாமி தலையிட்டு அடிதடி நடத்தி, பூட்டியிருந்த ஒரு இட்லிகடையை உடச்சி எல்லாம் திறந்தாரே - ‘முருகன் இட்லிக் கடை’ , ஒரு இன்டர்நேஷனல் லெவல்லுக்கு கொண்டு போக முயற்சி செய்து, ஸ்டேட் லெவலோட முடிஞ்சிதே - அந்தக் கடை ஏறக்குறைய இதற்கு எதிர்த்தாற்போல் இருக்குது.

அந்தக் காலத்தில தலைவர் காமராஜர் வரும்போது இங்க தங்கினாலும், இந்த லாட்ஜில் இரவு சாப்பிடுவதை விடவும், இதிலிருந்து ஒரு 100 மீட்டர் கூட இருக்காது ஒரு பத்துக்கு பத்து கடை ஒண்ணு இருக்கும். செளராஷ்ட்ர குடும்பம் நடத்தின இட்லி கடை ஒண்ணு உண்டு. கடையில் மேஜை, நாற்காலி அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காது. எல்லாம் தரையில உக்காந்துதான் சாப்பிடணும்; அநேகமா எல்லாரும் பார்சல் வாங்கிட்டு போறவங்களாதான் இருக்கும். இட்லிக்கு சட்னி, சாம்பார், பொடி அது இதுன்னு என்னென்னமோ இருக்கும். இட்லியைப் பொறுத்தவரை இட்லி, எண்ணெய் இட்லி, நெய் இட்லி அப்டின்னு அந்த இட்லிகளுக்கு மேல ஊத்திற விஷயங்கள் மாறி தரத்தை உயர்த்தும். இந்தக் கடையில் இருந்துதான் காமராஜருக்கு இட்லி போகும்னு சொல்லுவாங்க. மல்லி(கை)ப்பூ இட்லின்னே பேரு.

எப்படி இருந்த இடம் இப்படி ஆகிப்போச்சுன்னு பாத்தீங்களா? இந்த லாட்ஜின் மவுசு போனபிறகு இன்னொரு லாட்ஜ் வந்திச்சி..ஆனா இந்த அளவு பெயர் இல்லை; அதுக்குப் பிறகு வந்ததுதான் ‘பாண்டியன் ஹோட்டல்’. இப்போ அப்படி நிறைய ஸ்டார் அந்தஸ்துல வந்திருச்சி…

Oct 03 2005 11:56 am நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at www.thamizmanam.com Current rating is: (இதுவரை 0 பரிந்துரைகள்)
Click on the stars for voting pad.
9 Responses
சங்கரய்யா Says:
October 3rd, 2005 at 12:25 pm e
நல்லவேளை, தல-ன்னு பாத்ததும் அஜீத் புராணம்னு நெனச்சு பயந்துட்டேன்

Go.Ganesh Says:
October 3rd, 2005 at 2:08 pm e
//‘பெரிய கிராமத்தில′ உள்ள எனக்குத் தெரிஞ்ச சில இடங்களைப் பத்தி எழுத ஆசை. அதில் இது முதல்…//

என்னங்க மதுர பெரிய கிராமம்னு யார் சொன்னா ??

துளசி கோபால் Says:
October 3rd, 2005 at 2:14 pm e
ஏன் தருமி,

இந்த ‘காலேஜ் ஹவுஸ்’ன்னு ஒரு ஹோட்டல் இருந்துச்சே, அது இன்னும் இருக்கா?

அப்புறம் தங்கம் டாக்கீஸை இடிச்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்.

dharumi Says:
October 3rd, 2005 at 2:23 pm e
சங்கரய்யா,
தல படம் அடுத்தது வரட்டும், நீங்கல்லாம் சிவகாசி பக்கம் ஓடிட வேண்டியதுதான், தெரிஉமா?

கணேசு,
இது கோயில்பட்டி ஆளுக்கு டூ மச்!

ஏன் துளசி,
கொஞ்சம் சும்மா இருக்கமாட்டீங்களா? காலேஜ் ஹவுஸ் படம்லாம் எடுத்திட்டேன்; பாதி மேட்டர் ரெடி. தங்கம் டாக்கீஸ் பாழடைஞ்சு கிடக்கு. படம் எடுக்கப் போனேன்; வாட்ச்மேன் விடலை. நானும் விடக்கூடாதுன்னு நினச்சிருக்கேன்.சரி..சரி//வேற என்ன இடம் ‘பிடிக்கலாம்’னு சொல்லுங்க! நாங்க என்ன க்றீஸ்ட்டுன்னு என்னமோ சொல்லுவீங்களே, அதெல்லாமா சொல்லப்போறோம்?

Maram Says:
October 3rd, 2005 at 4:02 pm e
கணேஷ்,

//என்னங்க மதுர பெரிய கிராமம்னு யார் சொன்னா ?? //

பின்ன இல்லையா?., திண்டுக்கல் சின்ன கிராமம்., மதுரை பெரிய கிராமம். பஸ்ல ஏறி., சிட்டிய விட்டு வெளிய வந்தா, ஒரு 1/2 மணி நேரத்துல., ஒரே கிராமமா வருதா?., அதுதான்.

Maram Says:
October 3rd, 2005 at 4:05 pm e
தருமி,

நிறைய எழுதுங்கள் மருதயப் பத்தி.

VM Says:
October 3rd, 2005 at 5:49 pm e
தருமி
தல புரானம் என்றவுடன் நான் நம்ம குழலி தல இல்லைனா முகமூடி தல நெனச்சுட்டேன்.. ஹி ஹி ஹ் இ

அட இந்த சாமி செடி அக்காக்கு எந்த ஊரு சொன்னாலும் அதுல ஒரு இடம் தெரியுதுப்பா… பலே ஆளுப்பா அவங்க..

dharumi Says:
October 3rd, 2005 at 9:52 pm e
மரத்துக்கு நன்றி

வீ.எம்.,”சாமி செடி அக்காக்கு” இந்தப் பேரு நல்லா இருக்கே. சொல்லீட்டீங்களா அவுகளுக்கு?

உங்களுக்க் தலனாவே அவுக ஞாபகம் வந்திருதோ..அவ்வளவு குளோஸ்..!

awwai Says:
October 3rd, 2005 at 11:27 pm e
the sunnaambbu ovens of ‘kaalavaasal’
‘Pandiyan’ touring talkies (adhu ungalukke theriyumaa-nu theriala!)
Mangamma chathiram
the jain caves in the hillocks around Madurai. (apparently that is where the jains who where prosecuted by the Pandiya kings hid and passed their time by making sculptures!)
Railway Colony (I think the most well organised Railway Colony in India!)
I beleive Madurai is the city with most number of arts and science colleges in India (just hearsay; not sure about authenticity); you may write about the well known and not so well known colleges.

Nothing more comes to mind now. Will extend the list it I remember anything new. Till then you may consider writing on these places/topics.
nandri.

No comments:

Post a Comment