Sunday, October 09, 2005

88. தல புராணம்…3














*
ஏனைய பதிவுகள்:

1...............

2.............. 

3............... 

4............. 

5............. 








*




genetical-ஆக (?) அந்த புகை மேல இருந்த ஆர்வம் காரணமாக சின்ன வயசில இருந்தே ஒரு ஈர்ப்பு. கொஞ்சம் வளர்ந்ததும் ஊருக்குப் போகும்போதெல்லாம் திருட்டு தம்… அப்படியே போனது, காலேஜ் வந்தப்போ தொடர்ந்தது. ஊர்ல புளியந்தோப்புதான்; ஆனா மதுரையில ‘திருமலை நாயக்கர் மகால்’தான். நம்ம காம்பஸ்ல இருந்து ரொம்பப் பக்கத்திலதான் - ஒரு 100 மீட்டர்தான். இந்த மகாலுக்கும், மரியன்னை கோயிலுக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்ததாகவும், கடைசி நாயக்க மன்னர் யாருக்கும் தெரியாமல் கிறித்துவரானாரென்றும் ‘கட்டுக் கதை’ ஒன்று உண்டு. ஆனா நாங்க (நானும், ஆல்பர்ட்டும்) அந்த சுரங்கப் பாதையில் போறதில்லை; ராஜ பாட்டையில்தான்! அந்த நாட்களில் மகால் ஒரு - least cared for toursit spot -ஆக இருந்தது. வெளவ்வாலும், புறாக்களும்தான் அப்போ அங்க ‘ராஜ பரிபாலனம்’ நடத்திக்கிட்டு இருந்தாங்க. அதுக்குப் பிறகு, மதுரை கோர்ட் வந்தது. எங்களோட ராஜாங்கத்தை கோ.மு., கோ.பி. அப்டின்னு பிரிக்கலாம்.; கோர்ட் வர்ரதுக்கு முந்தி, கோர்ட் வந்த பிறகுன்னு.
கோ.மு.வில பகல்ல மகாலைச் சுத்தி உள்ள வெற்றிடங்களில் பசங்க நிறைய ஃபுட்பால் விளையாடிக்கிட்டு இருப்பாங்க. ‘ரிப்பீட்டு’ சொல்றேன்; நிஜமா சொல்றேன்; வழக்கமா சத்தியம் பண்றதில்லை; இல்லன்னா சத்தியமாகூட சொல்லுவேன் - ஒரு நாள்கூட ஒரு ஆள்கூட யாரும் கிரிக்கெட் ஆடிப் பார்த்ததில்லை; கிட்டி விளையாடிக்கிட்டு இருப்பார்கள். குண்டு, கோலி, பம்பரம், பட்டம், சடுகுடு என்னும் கபடி மற்ற எல்லாமே உண்டு. பாவம், இந்தக் காலத்துப் பசங்க - அட, அது எல்லாமே நீங்கதானே - அந்த விளையாட்டுகளை விளையாடி என்ன, பார்த்துகூட இருக்க மாட்டீர்கள். நீங்கள்ளாம் யாருப்பா; ஸ்டெஃப்பிய பாத்து ஜொள்ளு விட்டாலும், விளையாடணும்னா கிரிக்கெட்தானே - இளவஞ்சி, நான் ஒண்ணும் உங்கள சொல்லலை! இன்னும் பொம்பளப் பசங்க கிரிக்கெட்டும் பிரபலமாச்சுன்னா கேக்கவே வேணாம். ஆனா, அடுத்த generation-க்கு அப்படித்தான் - உங்க பசங்க ‘கிர்க்கெட்டிணிகள்’ (அதாங்க, கிர்க்கெட் வீரிகள்!) படம் போட்ட ஸ்கூல் நோட்புக், சட்டை போட்டுக்குவாங்க; உங்க கூடவே உங்க கையைப் பிடிச்சிக்கிட்டு வந்துகிட்டு இருக்க பிள்ளங்க திடீரென உங்க கையை விட்டுட்டு பெளலிங் போடறது மாதிரியோ, பேட் பண்றது மாதிரியோ ஒரு நிமிஷம் பண்ணிட்டு, அடுத்த நிமிஷம் சாதாரணமா உங்க கையப் பிடிக்கும்போது ‘ஆஹா, நம்ம பிள்ளைக்கு என்னமோ ஆச்சு; நாளைக்கே மந்திரிக்கணும்’ அப்டின்னு நினப்பீங்களே - சுருக்கமா சொல்லணும்னா நீங்க இப்ப ‘அலையறது’ மாதிரி அலையும்போதுதான் உங்களுக்கெல்லாம் உறைக்கும். அதுவரைக்கும் உங்க காதுல ஒண்ணுமே விழாது - howzzzaaaat !!!-அப்டிங்கிறது தவிர. சரி..சரி நம்ம விதயதிற்கு வருவோம். இல்லன்னா, சுரேஷ்..’இப்படியே போனா எப்ப கப்பல் போய்ச்சேரும்’பார்!


இந்த கோ.மு. பீரீயட்ல எங்க safe place எதுன்னா, மகாலுக்கு மேல போய் - அப்பல்லாம் டிக்கெட் கிடையாது எங்கள மாதிரி ஆளுகளுக்கு; வெளியூர் பார்ட்டிகிட்ட கொஞ்சம் எதுனாச்சும் மாடிப்படி கிட்ட நிக்கிறவர் கறந்துடுவார் - நாங்கல்லாம் யாரு, ரெகுலர் பார்ட்டிகள்ல. அங்க திருடன் கன்னம் வச்சு உடும்பை வச்சு ராசா சயன அறையில இறங்கி, ராணி கழுத்து மாலையை லவட்னதுன்னு - எல்லாம் ராசா வச்ச போட்டினாலதான் - ஒரு இடம் சொல்லுவாங்களே அதுதான் நம்ம ஸ்பாட். உக்காந்து பத்த வச்சிட்ட பிறகு, நின்னுக்கிட்டே இழுத்து புகை விட, யாரேனும் தெரிஞ்ச மூஞ்சி வர்ரது மாதிரி இருந்தா காலுக்கடியில் சிகரெட்டப் போட்டுவிட்டு நல்ல பிள்ளையாய் வந்துருவம்ல. அதுக்கு வசதியான இடம் அதுதான். இப்படி எத்தனை நாள் போய்ட்டு வந்திருப்போம்; ஆன ஒரு நாள் கூட இந்தச் சுவத்தில நிறைய பேருக அவங்க பேரையெல்லாம் கிறுக்கியிருக்காங்களே நாமும்தான் கிறுக்குவுமேன்னு நினச்சதுகூட கிடையாதுங்க. (ராமனாதன் கவனிக்கிறீங்களா?)
கோ.பி.-ல நாங்களும் இப்ப கொஞ்சம் தெளிஞ்சுட்டோம். காம்பஸ் பயம் இன்னும் இருந்திச்சு - என்னதான் இருந்தாலும் அது நம்ம ஏரியா இல்லையா? ஆனா கோர்ட் இப்ப ரொம்ப பிசியான இடமா ஆயிடுச்சி. நிறைய கருப்புக் கோட்டுகள்; ஆட்கள். மகாலுக்கு உள்ளயே ஒரு சிகரெட், டீக்கடை வந்திருச்சி. உள்ளேன்னா, மகால் மெயின் வாசலுக்கு வடது பக்கம் ஒரு சின்ன வாசல்; அதை ஒட்டி அந்தக் கடை. எங்கள மாதிரி திருட்டு தம் கேசுகள்; சீனியர்கள் கண்ணில் படாமல் இருப்பதற்காக ஓரங்கட்டும் குட்டி வக்கீல்கள் - இவர்களுக்கென்று ஒதுக்குப்புறமாக ஒரு ஸ்மோக்கிங் கார்னர் உண்டு. அங்க உக்காந்து சிகரெட் பிடிக்க தைரியம் வந்தபோது கல்லூரி இளங்கலை மூன்றாமாண்டுக்கு வந்தாச்சு.
இப்பவும் மகாலைத் தாண்டிப் போகும்போது திரும்பிப் பார்க்காமல், போக முடிவதில்லை. சில நாட்கள் சாயங்காலம் அங்கே போய் ‘இழுத்திட்டு’ அதற்குப் பிறகு வெளியில் உள்ள பார்க்கில் படுத்துக்கொண்டு, ஒரு செளராஷ்ட்ர அம்மா கொண்டுவரும் ‘உன்னா உடித்’ (அவித்த பாசிப்பயறு + எதோ ஒரு பொடி தூவித் தருவார்கள்) பத்து பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டால்…ம்..ஹும்…அது அந்தக் காலம்.
அப்படி நம்ம காம்ப்ஸ் லைஃப்ல இந்தப் பழக்கம் வந்திரிச்சினா, இன்னொரு பழக்கமும் தொத்திக்கிரீச்சி. அது நல்ல பழக்கமா…இல்ல, கெட்ட பழக்கமா? - அத நீங்கதான் சொல்லணும்.
Oct 09 2005 09:56 am சொந்தக்கதை.. and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at www.thamizmanam.com Current rating is:
(இதுவரை 0 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
4 Responses
வசந்தன் Says: after publication. e -->October 10th, 2005 at 5:15 pm e
// கிட்டி விளையாடிக்கிட்டு இருப்பார்கள். குண்டு, கோலி, பம்பரம், பட்டம், சடுகுடு என்னும் கபடி மற்ற எல்லாமே உண்டு. பாவம், இந்தக் காலத்துப் பசங்க - அட, அது எல்லாமே நீங்கதானே - அந்த விளையாட்டுகளை விளையாடி என்ன, பார்த்துகூட இருக்க மாட்டீர்கள். //
என்னையா இப்படிச் சொல்லீட்டீங்கள்?நானும் இந்தத் தலைமுறைதானென்பதால் வன்மையாகக் கண்டிக்கிறேன். எங்கள் ஊரில் கிரிக்கெட் தவிர மிச்ச எல்லா விளையாட்டும் இருக்கு. யாழ்ப்பாணத்தில கொஞ்சக் காலம்முன்புவரை, கிரிக்கெட் மேல்தட்டுவர்க்க விளையாட்டாகவும் வசதிபடைத்த கல்லூரிகளில் மட்டுமே விளையாடும் விளையாட்டாகத்தான் இருந்ததாக என் புரிதல். அப்போது மின்சாரமும் இல்லாதபடியால் கிரிக்கெட் போட்டிகள் கூட தொலைக்காட்சிகளில் பார்த்தில்லை. ஆனால் உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டியை நேரடியாக இல்லாவிட்டாலும் வீடியோ நாடாவில் தருவித்துப் பார்த்துவிடுவோம். உதைபந்தாட்டத்துக்கு அடுத்ததாக மிகப்பிரபலமானவை கிட்டிபுள்ளும், கிளித்தட்டும்தான். கரையோரக் கிராமமென்பதால் பட்டம் விடுதலும் சேர்ந்து கொள்ளும். ஆனால் முழுக்காலமும் பறக்கவிட முடியாது.
தருமி » 102. மரணம் தொட்ட கணங்கள்…3 Says: after publication. e -->November 8th, 2005 at 1:36 am e
[…] A smoker is always a smoker - என்பதற்கு ஏற்றாற்போல இன்னுமும் சிகரெட் ஆசை என்னவோ விடவில்லை! பேனா மூடி, பென்சில் இப்படி ஏதாவது ஒன்றை வாயில் வைத்துக்கொண்டு ‘பழைய நினைப்பில்’ மூழ்கி, வீட்டில் திட்டு வாங்கும்போதெல்லாம், ‘என் இரண்டாம் மகளின் கல்யாணம் முடிந்த அன்றைக்குப் பாருங்கள்; தண்ணி, தம்முன்னு அடிச்சி ஒரு ‘அலப்ஸ்’ கொடுக்கிறேனா இல்லையான்னு’ சொல்லிக்கிட்டே இருப்பேன். அதே மாதிரி அவள் கல்யாணம் முடிந்த அன்று இரவு ‘ராஜ மாளிகை’யில் என்னோடு தம் அடிக்கப் பழகிய ஆல்பர்ட்டிடமும், இன்னொரு நண்பனிடமும் ஒரே ஒரு சிகரெட் ஓசி கேட்டேன்; பாவிப் பசங்க தரமாட்டேன்னுட்டாங்க! அதனால், இரண்டில் ஒன்றை மட்டும் செய்து என் வாக்குறுதியில் 50% மட்டும் நிறைவேற்றிக்கொண்டேன். இன்னும் ‘ஆசை இருக்கு தம் அடிக்க; அதிர்ஷ்டம் இல்லை பத்த வைக்க!’ […]
தருமி » 103. மரணம் தொட்ட கணங்கள்…4 Says: after publication. e -->November 8th, 2005 at 8:45 pm e
[…] அடுத்த நாள் - D-Day - காலையிலேயே தியேட்டருக்கு stretcher-ல் பயணம்; வழியில் ஆல்பர்ட் (’நம்ம திருட்டுத் தம் கூட்டாளி !)என்னிடம் குனிந்து தைரியம் சொன்னான்; சிகரெட் நாற்றம்; ‘இப்படி அடிச்சிதான் இப்படி போறேன்; நீ இன்னும் விடமாட்ட, இல்ல என்றேன். (சிரிச்சிக்கிட்டே ஜோக் மாதிரி நான் சொன்னதாக அவன் பின்னால் சொல்லி, எப்படி’டா, அந்த நேரத்தில் உன்னால ஜோக் அடிக்க முடுஞ்சுது என்றான்.) தியேட்டருக்கு நுழைவதற்கு முன் உள்ள முன்னறையில் படுக்க வைத்தார்கள்; சில பல ஊசிகள். மயக்கநிலைக்குச் சென்று கொண்டிருந்தேன். அடுத்த ஒரு stretcher-க்கு மாற்றியதை உணர்ந்தேன்; அது மிக மிக ‘சில்’ல்லென்று இருக்க, உள்ளே எடுத்துப் போகப்பட்டேன். தலைக்குமேல் ஏதோ ஒன்று - லைட் ஏதாவது இருக்கலாம்; பள பளவென்று இருந்தது. அதில் என் உருவம் ஓரளவு தெரிந்தது; ஏதோ சிலுவையில் அறையப் போவதுபோல் கைகளை நீட்டி வைத்திருந்தது தெரிந்தது. அதையே பார்த்துக்கொண்டேஏஏஏஏ…இருந்தேன். அவ்வளவுதான் தெரியும். […]
தருமி » 108.தல புராணம்…5 Says: after publication. e -->November 22nd, 2005 at 10:13 pm e
[…] சின்ன வயசில ‘வேப்ப மர உச்சியில நின்னு பேயொண்ணு ஆடுது…’அப்டின்றது மாதிரி இது மாதிரி எத்தனை எத்தனை வதந்திகள். அதையே ஒரு பெரிய லிஸ்ட்டாகப் போடலாம். இந்த காலேஜ் ஹவுஸுக்குப் பக்கத்து சந்திலதான் ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர் என்ற பெருமையோடு இருந்தது - தங்கம் தியேட்டர். ஒரு பெரிய கால்பந்து மைதானத்தையே உள்ளே வைத்து விடலாம்போல அவ்வளவு பெரிய தியேட்டர். சுற்றியும் பெரிய இடம். தியேட்டரின் வெளி வராந்தாவே அவ்ளோ அகலமா இருக்கும். இதுதான் நான் சிகரெட் குடிச்சி, போலிசிடம் பிடிபட்டு, ஆங்கிலத்தால தப்பிய ‘தலம்’! இந்த தியேட்டரில் கூட முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டத்தில் சிக்கி உயிர் இழந்த சினிமா ரசிகர்கள் உண்டு என்றால் எங்கள் ஊரின் மகிமையை என்னென்று சொல்வது! இந்த தியேட்டர் கட்டும்போது - அப்போது நான் நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவனாயிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். பல கதைகள் காற்றில் வந்த நினைவு இருக்கிறது. நரபலி கொடுத்ததில் பானை நிறைய கிடைத்த தங்க காசுகள் வைத்துக் கட்டப்பட்ட தியேட்டர் என்றார்கள். இதன் முகப்பு மீனாட்சி அம்மன் கோயிலைவிட உயரமாகப் போய்விடும் என்பதால் அந்த முகப்பைக் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது என்று பின்னாளில் கேள்விப் பட்டோம். ஆனால் அந்த சமயத்தில் நரபலிக் கதையின் தொடர்ச்சியாக வேறு சில கதைகள் மிதந்தன. […]

1 comment:

cheena (சீனா) said...

அட நம்ம தருமி அண்ணன்

தம்மடிக்கறதுலே ஆரம்பிச்சி - மகால்ல ரவுண்டடிச்சு - கோ.மு - கோ.பி - தங்கம் தியேட்டர் கட்டின வரைக்கும் - கடஹ் சொல்லி - அப்பப்பா - தலபுராணம் சூப்பரண்ணெ !

தூள் கெளப்பீட்டிங்க போங்க

நல்லாருங்கண்ணே
நட்புடன் சீனா

Post a Comment