Monday, October 10, 2005

97. சிவாஜி vs எம்.ஜி.ஆர்.

சிவாஜி vs எம்.ஜி.ஆர்.–அல்லது —பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது எப்படி?
‘கதை ஒன்று சொல்லுங்கள், அத்தான்’ என்று தலைவி கேட்க, சேரன் செங்குட்டுவனாக, கலைஞரின் நீண்ட வசனத்தைத் தொடர்வாக, தெளிவாக,அழகு உச்சரிப்பில் ‘ராஜா-ராணி’ படத்தில் பேசிய அழகைச் சொல்லவா?(மேக்கப் போடும்போது அருகில் நின்று ஒருவர் உரத்துப் படிக்க, எத்தனை நீண்ட வசனமாயினும் அப்படியே மனனம் ஆகிவிடுமென்று வாசித்தபோது ம்..ம்..இப்படி ஒரு கலைஞனா என்று தோன்றியது)
தொண்டுக் கிழமாக சாக்ரடிஸ் வசனம் பேசிய அழகா, ‘அவர்களும் பேசிப்பார்க்கட்டுமே; ம்..ம்..பேசித்தோற்றவர்கள்’ என்று கரகரத்த குரலில் சொல்வாரே அந்த அழகைச் சொல்லவா?
சாம்ராட் அசோகனில் அந்த ‘ ரத, கஜ, துரக, பதாதிகள்’ என்ற சொற்றொடரை நாங்கள் உச்சரிக்க முயன்று தோற்போமே அதைச் சொல்லவா?
உயர்ந்த மனிதனில் சாப்பிட்டுவிட்டுப் பல்குத்திக்கொண்டே பேசுவாரே..இல்லை, ‘அந்த நாள் ஞாபகம் வந்ததே’ என்ற பாட்டுக்கு 14 வித நடை நடந்து அசத்துவாரே அதைச் சொல்லவா?
திடீரென்று ஆள் ட்ரிம்மாக ஆகி, எங்க மாமாவில் நடனம் ஏது ஆடாமலேயே தோளைக் குலுக்குவதை மட்டும் வைத்தே அழகாக நடனம் ஆடுவதுபோன்ற ஒரு பிரம்மையை உண்டாக்குவாரே அதை நினைவு கூறவா?
வ.உ.சி.யாகவே மீண்டும் வந்து வாழ்ந்து காட்டினாரே அதைச் சொல்லவா?
இல்லை, பாசமலரில் மனம் நெகிழ ‘கைவீசம்மா கைவீசு’ என்றதைச் சொல்லவா?
உத்தம புத்திரனில் காண்பித்த வேறுபட்ட குணச்சித்திரங்களைச் சொல்லவா?
அதையெல்லாம் விடுங்கள் - தெய்வமகனில் அந்த convent bred இளைய மகனின் சேட்டைகளை வேறு யாரும் செய்தால் அரவாணி போல்தானே இருந்திருக்கும்.
சரி, விடுங்கள். It is an endless list…
அடுத்த ஆள், நம்ம எம்.ஜி.ஆர். என்னைப் பொறுத்தவரை அவர் நடித்த ஒரே படம் ‘பெற்றால்தான் பிள்ளையா?’. லியோனி ஒரு பட்டிமன்றத்தில் சொன்னது போல, ‘பாவம்..அவர். சோகம்னா வேகமா போய் ஒரு தூணில் முகத்தை மூடி வைத்துக்கொண்டு அட்ஜஸ்ட் செஞ்சுக்குவார்; அவருக்கு அவ்வளவுதான் பண்ண முடியும்’.
இப்படி நடிப்பில் இரு எதிர் எதிர் துருவங்களாக இருந்தும் திரைஉலகிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பெயர் என்னவோ எம்.ஜி.ஆருக்குத்தான். சிலருக்கு இப்படிதான் ஒரு ஸ்டார் இருக்கும்போல; நம்ம ரஜினி, அமிதாப்..பாருங்களேன், இந்த தருமிக்குக் கூட ஸ்டார் ஸ்டேட்டஸ் ஒரு வாரத்திற்குக் கிடைக்கலை, அது மாதிரிதான் எல்லாமே போலும்!
நான் சொல்ல வந்த விஷயம் அது இல்லை. ரொம்ப நல்ல நடிகரா ஒருத்தர். அரசியல் நடிகரா இன்னொருவர். இதில் அந்தக் காலத்தில் இவர்களைக் குறிப்பிட்டு பேசும்போது எல்லோருமே, சிவாஜியை ‘அவன்,இவன்’ என்றும், எம்.ஜி.ஆரை ‘அவர், இவர்’ என்றும் பேசுவது வழக்கம். இதில் என்னைப் போன்றவர்களும் அடக்கம். திடீரென்று ஒரு நாள் அது உறைத்தது. ஏறத்தாழ எல்லோருமே இது போல் இருந்ததைக் கண்டேன். ஒர் ஆராய்ச்சி…!முடிவு தெரிந்தது.
சிவாஜியின் பெயர் கணேசன் என்று முடிகிறது; இதனால், (சிவாஜி)கணேசன் நடித்தான்;(சிவாஜி)கணேசன் கொன்னுட்டான்’டா… இப்படித்தான் சொல்ல எளிதாகிறது. அடுத்த பெயரைச் சொல்லிப் பாருங்கள்: எம்.ஜி.ஆர். நடித்தார் என்பதுதான் எளிதாக வரும். நல்லா வாள் சண்டை எம்.ஜி.ஆர். போட்டான் என்றால் நல்லாவா இருக்கு.ஆக, கண்டுபிடிச்சது என்னென்னா, பெயரின் விகுதியை ‘அர்’, ‘ஆர்’ என்பதுபோல வைத்தால் பின்னால் கூப்பிடுபவர்கள் பெரும்பாலும் மரியாதை கொடுத்துவிட வாய்ப்புகள் அதிகம். இதை விட்டு விட்டு, கணேசன் என்று ‘அன்’ விகுதியோடு பெயர் வைக்கிறீங்கன்னு வையுங்க…பிள்ளைங்க உங்கள பின்னால வையுங்க!
இந்த மாதிரி இலக்கணம் பாத்து பெயர் வச்சீங்கன்னா நல்லா இருக்குமா…அதை விட்டுட்டு numerology அது இதுன்னு போட்டு மக்கள குழப்பாதீங்க. இந்த numerology அதோடு சேர்ந்த மூ–தனமான விஷயங்களைப் பற்றியும் சீக்கிரம் எழுதணும்; அது ஒரு சமூகக் கடமையல்லவா?
Oct 26 2005 11:31 am அவியல்... and சினிமா edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 4 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
20 Responses
ஜோ Says: after publication. e -->October 26th, 2005 at 12:11 pm e
அடேங்கப்பா..நம்ம நடிகர் திலகத்தின் புகழ பாடி விட்டு ,அசத்தலான ஒரு விஷயத்தையும் சொல்லிட்டீங்க.
வினையூக்கி Says: after publication. e -->October 26th, 2005 at 12:13 pm e
தருமி, நான் மிகவும் குழம்பியது உண்டு…ஏன் எம்.ஜி.ஆரை மட்டும் அவர் இவர் என்று விளிக்கிறார்கள் ?நன்றி….உங்கள் பதிவு எனக்கு ஒரு தெளிவான காரணத்தை அளித்துள்ளது.எம்.ஜி.ஆர் நடிப்பை விட்ட பிறகுதான் நான் இவ்வுலகத்தில் அவதரித்தேன்….
என் அறிவுக்கு எட்டியவரை, எம்.ஜி.ஆர் ஒரு பாசிடிவ் எலிமென்ட்…. எம்.ஜி.ஆர் படங்களை பார்த்தால் I feel/get a positve impact… where as with Sivaji movies, most of the movies சோக மயம் தான்…..
Suresh - Penathal Says: after publication. e -->October 26th, 2005 at 12:14 pm e
அப்போ - பினாத்தல் கொன்னுட்டாள், சொதப்பிட்டாள்னு சொல்லுவீங்களா?
என்ன ஆராய்ச்சி சார் இது - என் தலை மேல கை வைக்கிற ஆராய்ச்சி!
வினையூக்கி Says: after publication. e -->October 26th, 2005 at 12:16 pm e
//இந்த மாதிரி இலக்கணம் பாத்து பெயர் வச்சீங்கன்னா நல்லா இருக்குமா…அதை விட்டுட்டு numerology அது இதுன்னு போட்டு மக்கள குழப்பாதீங்க. இந்த numerology அதோடு சேர்ந்த மூ–தனமான விஷயங்களைப் பற்றியும் சீக்கிரம் எழுதணும்; அது ஒரு சமூகக் கடமையல்லவா?//
Attention Please Vijay TV, Raj, Raj Digital Plus Channels
Josaph Irudayaraj Says: after publication. e -->October 26th, 2005 at 1:12 pm e
ஆகா!அடுத்து நம்ம “பேர்” மேட்டர் எழுதப்போரிங்க போல…..
எம்ஜிஆர், எம்மார் ராதா, பதிவு நல்லா இருந்திச்சு.
எனக்கு என்னா தெரியுமுன்னா இன்னமாதிரி சுட்டுபுட்டங்கன்னு சொல்லி கேள்விபட்டேன்… அவ்வளவுதான் அதுவும் எப்ப தெரியுங்களா? 79லன்னு நினைக்கிறேன்,அப்ப தான் நமக்கு கொஞ்சம் வெவரம் வெலங்குற வயசு.(ஹீ ! ஹீ ஒரு பன்னிரண்டு தான் இருக்கும்)
ஆனா உங்க பதிவ படிச்சப்புறம் தான் தெரிஞ்சது. ஆகா! உள்ள மேட்டர் இவ்வளவான்னு?
சதம் போடவும் தொடர்ந்து இரட்டைச்சதம் போடவும் எனது வாழ்த்துகள்!
Dondu Says: after publication. e -->October 26th, 2005 at 2:40 pm e
“இதில் அந்தக் காலத்தில் இவர்களைக் குறிப்பிட்டு பேசும்போது எல்லோருமே, சிவாஜியை “அவன்,இவன்” என்றும், எம்.ஜி.ஆரை “அவர், இவர்” என்றும் பேசுவது வழக்கம்.”
“நான் ஏன் பிறந்தேன்” என்ற தன்னுடைய தொடரில் எம்.ஜி.ஆர் குமுதத்தில் வந்த ஒரு கேலிச் சித்திரத்தைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார். அதாவது, ஒரு சிவாஜி ரசிகர் சைக்கிளில் உட்கார்ந்திருக்கிறார், எம்.ஜி.ஆர். ரசிகர் விளக்குக் கம்பத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறார். சிவாஜியின் ரசிகர் பேன்ட் ஷர்ட் போட்டிருக்கிறார், எம்.ஜி.ஆர். ரசிகரோ சாதாரண வேட்டிச் சட்டை. தன்னுடைய ரசிகரை பட்டிக்காட்டானாகக் காட்டிவிட்டு சிவாஜி ரசிகரை நாசுக்கான பேர்வழியாகக் காட்டுவதே குமுதத்தின் வேலையாகப் போயிற்று என்று எம்.ஜி.ஆர். குறை கூறியிருக்கிறார்.
அன்புடன்,டோண்டு ராகவன்
கோ.இராகவன் Says: after publication. e -->October 26th, 2005 at 3:35 pm e
யாரங்கே தருமிக்கு பொற்கிழியைப் பரிசாகக் கொடுங்கள்.
தருமி நீங்க கண்டுபிடிச்சது நம்ம ரத்தத்துல ஊறுனதுதான். இந்த எனக மொகனைல நம்ம ஆளுங்க பெரிய ஆளுங்க. அத அப்படியே இலக்கணத்துலயும் சேத்துட்டாங்க. அத நாமளும் அப்படியே பிடிச்சுக்கிட்டு கொண்டு போயிக்கிட்டு இருக்கோம். அதுல வந்ததுதான் இந்த வினையும்.சிவாஜிவாயிலேஜிலேபின்னு சொல்லத்தானே செய்யுறோம்.
வசந்தன் Says: after publication. e -->October 26th, 2005 at 6:22 pm e
அன் விகுதியில கூப்பிடப்படுறதில ஒரு சந்தோசம் இருக்கு கண்டியளோ?வசந்தன் எண்ட பேரை வச்சிருக்கிற நான் அதை அனுபவிச்சிருக்கிறேன்.நல்ல ஆராய்ச்சி.
kirukan Says: after publication. e -->October 26th, 2005 at 6:49 pm e
This avan and avar, I have also noticed. Your explanation seems to be right.
இளவஞ்சி Says: after publication. e -->October 26th, 2005 at 6:57 pm e
இளவஞ்சி… நீயெல்லாம் என்னத்தை பதிச்சி… எழுதி கிழிச்சி… சீச்சீ…!! அய்யையோ.. நம்ப நிலமை பெனாத்தலைவிட மோசமா இருக்கே!
இந்த கேப்புல எனக்கு ரொம்ப பிடிச்ச மாஸ்டர்பீஸையும் சொல்லிடறேன்! சிவாஜியும் M.R.ராதாவும் “மாமா..மாப்ப்ளே..!”ன்னு ஒரு பாட்டு பாடுவாங்களே! கலக்கலுங்க அது….
dharumi Says: after publication. e -->October 26th, 2005 at 9:33 pm e
ஜோ,இன்னும் இதுமாதிரி மனசுக்குப் பிடிச்சது, நெஞ்சில் நின்றதுன்னு சொல்லிக்கிட்டே போகலாம்… இல்ல
வினையூக்கி,“என் அறிவுக்கு எட்டியவரை, எம்.ஜி.ஆர் ஒரு பாசிடிவ் எலிமென்ட்….”அது simply romanticism அப்டின்னு இந்த வயசிலகூட தோணலியா?“Attention Please Vijay TV, Raj, Raj Digital Plus Channels “..அதுல வர்ர ஒரு ஹீரோவை சந்திச்சதையும் சொல்லிடறேன்!
பினாத்தல்,“கொன்னுட்டாள், சொதப்பிட்டாள்னு ..”சரியா வரலையே! இளவஞ்சிக்கு சரியா வருதோ?!
Josaph Irudayaraj,“சதம் போடவும் தொடர்ந்து இரட்டைச்சதம் போடவும்..” சதம் முதல்ல முடியட்டும். ‘அன்றன்றுள்ள எங்கள் அப்பம் எங்களுக்குத் தாரும்’ அப்டிங்கற கேசு நான்! நம்ம அடுத்து வரப்போற ‘மரணம் தொட்ட கணங்கள்’ வாசிச்சா புரியும்ல..!
டோண்டு ராகவன்,“சொன்னாலும் சொல்லாட்டியும் அதுதானே சரி..இல்லியா?
வசந்தன்,“;அன்’ விகுதியில கூப்பிடப்படுறதில ஒரு சந்தோசம் இருக்கு” - அப்டியா? (பிதாமகன் சூர்யா ஸ்டைலில் சொல்லிப்பார்த்துக் கொள்ளவும்)
இளவஞ்சி…“நீயெல்லாம் என்னத்தை பதிச்சி… எழுதி கிழிச்சி…”எதுகை, மோனை எல்லாம் சரியா இருக்கு. ஆனா, நான் ரொம்ப நேசிச்ச எழுத்த அப்படியெல்லாம் சொல்லாதீங்க, அப்புறம் எனக்கு ரொம்ப ‘இது’வாயிடும்.
துளசி கோபால் Says: after publication. e -->October 27th, 2005 at 1:08 am e
இளவஞ்சி,
//சிவாஜியும் M.R.ராதாவும் “மாமா..மாப்ப்ளே..!”ன்னு ஒரு பாட்டு பாடுவாங்களே!கலக்கலுங்க //
அந்தப் படம் ‘பலே பாண்டியா’
இந்தப் படத்துலெ எல்லாப் பாட்டுக்களுமே நல்லா இருக்கும்.
இராமநாதர் Says: after publication. e -->October 27th, 2005 at 1:17 am e
சரி, நீங்க சொன்னதுக்காக (அப்டியாவது அவர்னு சொல்றாங்களான்னு பாக்கலாம்) இராமநாதர்-னு மாத்திட்டேன்… அப்படியும் இரம்நாதர்-னு தான் மண்டபத்துல சில நாளைக்கு கூப்பிட்டாங்க. அத சரி பண்ண எதுனாவது வழி இருக்கா??
//நம்ம ரஜினி,//தேவையில்லாமல் எங்கள் தலைவரை இழுத்த தருமியை அகில உலக ரசிகர் மன்றத்தின் (ரஷ்ய வட்டம் - நம் 812) சார்பாய் கண்டிக்கிறேன்.
dharumi Says: after publication. e -->October 27th, 2005 at 2:58 pm e
துள்சி,அப்டியே அந்தக் “காய்” பாட்டைப் பத்தியும் இளவஞ்சிகிட்ட சொல்லிற வேண்டியதுதானே!
ஏங்க ராமனாதர், பிள்ளைகளுக்குப் பெயர் அப்படி வைங்கப்பான்னு சொன்னா, இவ்வளவு லேட்டா உங்க பேரை மாத்தினா எப்படி?பேரு மாத்திக்கோன்னு சொன்னா போதுமே, இந்தக்காலத்து இளைஞர் பட்டாளத்துக்கு…
Kumaran Says: after publication. e -->October 29th, 2005 at 1:18 am e
சின்ன வயசில் நானும் என் தம்பியும் சிவாஜி ரசிகர் மன்றம் வைத்து நடத்தியது தான் ஞாபகம் வந்தது. பின்னர் சிவாஜி கட்சி தொடங்கிய போது நான் பெரிய பையன் ஆகிவிட்டேன். என் தம்பி (2 வயது இளையவன்) கட்சி கொடி எல்லாம் கட்டிக் கொண்டு திரிந்தான்.
சிவாஜி கணேசனை ‘அவன் இவன்’ என்று சொல்லுவார்கள் என்பது எனக்கு புதிய செய்தி. என்னை ஒத்த பசங்க ‘ரஜினி கமல்’ என்று போகும்போது சிவாஜி என்று நாங்கள் இருந்ததால் எப்போதும் அவர் இவர் என்று தான் பேசி வழக்கம்.
dharumi Says: after publication. e -->October 29th, 2005 at 11:00 pm e
இராமநாதர், “அப்படியும் இரம்நாதர்-னு தான் மண்டபத்துல சில நாளைக்கு கூப்பிட்டாங்க” -- ஒருவேளை ‘காரண இடுகுறிப் பெயராக’ இருக்குமோ?
அது என்ன குமரன், நீங்க, ஜோ எல்லாரும் எங்க காலத்து ஆளுகளுக்குகூட விசிறியா இருந்திருக்கீங்க!சந்தோஷமாத்தான் இருக்கு..
dharumi Says: after publication. e -->October 29th, 2005 at 11:02 pm e
குமரன்,இன்னொரு சந்தேகம். உங்க அப்பா சிவாஜி ரசிகர்தானே?
ஜோ Says: after publication. e -->October 30th, 2005 at 8:41 am e
தருமி,சிங்கையில் நேற்று இரவு லிட்டில் இந்தியா பகுதியில் தீபாவளியை முன்னிட்டு வாணவேடிக்கை நடந்தது .வேறு ஒரு வேலையாக சென்ற நான் சிறிது நேரம் வேடிக்க பார்த்து நின்றேன் .திறந்த வெளியில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.இந்தியாவிலிருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர் கூட்டம் நிரைய இருந்தது.நிகழ்ச்சி நடுவில் பாட்டு மன்றம் என்ற பெயரில் இரு அணிகள் எம்.ஜி.ஆர் அணி ,சிவாஜி அணி என்று மாறி மாறி எம்.ஜி.ஆர் சிவாஜி பாடல்களை பாடினார்கள் .முடிவில் வேடிக்கையாக தொகுத்து வழங்கிய உள்ளூர் பெண் நிகழ்ச்சி படைப்பாளர், எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரில் பார்வையாளர் ஆதரவு யாருக்கு என்று குரல் மூலம் முடிவு செய்யலாம் என்று சொன்னார் .அவர் எம்.ஜி.ஆர் தான் வெற்றி பெறுவார் என தீவிரமாக நம்பினார் போலும் .எம்.ஜி.ஆர் பெயரை சொன்னதும் நல்ல குரல் எழும்பியது .அடுத்து சிவாஜி பெயரை சொல்ல அதைவிட 5 மடங்கு சத்தமாக குரல் ஆரவாரம் எழும்பியது .அவர் அசடு வழிந்து விட்டு ,நம்ப முடியாமல் ‘எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் எங்கே?’ என்று சொல்லி மறு படியும் ஓட்டு நடத்தினார் .இம்முறை சிவாஜிக்கு முன்னை விட அதிக குரல் எழும்ப ,நொந்து போய் “எம்.ஜி.ஆர் ..பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்று நழுவினார் .தமிழகத்து இன்றைய இளைய தலைமுறையினர் எம்.ஜி.ஆர் ,சிவாஜி இருவரில் நடிகர் என்ற முறையில் யாரிடம் அதிக அபிமானம் வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெளிவானது .மகிழ்ச்சி. (நான் சத்தம் போடவேயில்லையப்பா ..சத்தம் போடுறது ..கைதட்டுறது நமக்கு பழக்கமில்லை)
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 11:30 am e
ஜோ,“(நான் சத்தம் போடவேயில்லையப்பா ..சத்தம் போடுறது ..கைதட்டுறது நமக்கு பழக்கமில்லை)” - அட, போங்கப்பா! நான் அங்க இருந்திருந்தா ஒரு விசில் அடிச்சிருப்பேனே!ஆனா, நீங்க என் வயசுக்கு வரும்போது இப்படி ஒரு நிகழ்ச்சி கமல்-ரஜினியை வைத்து நடந்தாலும், இது போன்றே இருக்கும் என்பது நிச்சயம் - என்னைப் பொறுத்த வரையில்!
Kumaran Says: after publication. e -->October 31st, 2005 at 8:24 pm e
தருமி,
எங்க அப்பா சிவாஜி ரசிகர் இல்லை. ஜெமினி ரசிகர்.

No comments:

Post a Comment