Monday, October 10, 2005

96. எம்.ஜி.ஆர். vs எம்.ஆர்.ராதா

1968- 1969 -எப்போது என்று நிச்சயமாகத் தெரியவில்லை; ஆனாலும் தமிழ் நாட்டையே உலுக்கிய நிகழ்வல்லவா? எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்; சுட்டது எம்.ஆர். ராதா. கென்னடியைச் சுட்டபோது குண்டுபாய்ந்த இடத்திலேயே - சில மில்லி மீட்டர்கள் தள்ளி - எம்.ஜி.ஆருக்கும் கழுத்தில் - carotid artery பக்கத்தில் - குண்டு பாய்ந்தது. அவர் செய்த தருமம் அவர் தலை காத்து, ‘நான் செத்துப் பொழச்சவண்டா’ன்னு பாட்டுப் பாட வச்சிது; குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்தபடியே, அந்த போஸ்டரைப் போட்டே தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்றது - இப்படிப் பல செய்திகள். உண்மைகள்…?

அது என்ன காரணம்னே தெரியாது. அவர் ரொம்ப நல்லவர் அப்டி, இப்டின்னு எல்லாருமே சொன்னாலும் எனக்கு என்னவோ அவரைச் சிறு வயதிலேயே பிடிப்பதில்லை. நடிகனாக இருந்ததால் அரசியலிலும், அரசியலில் இருந்ததால் சினிமாவிலும் அவர் புகழ் பெற்றார் என்பது என் எண்ணம். உதாரணமாக, ‘காமராஜர் என் தலைவர்’ என்றோ, ‘வழிகாட்டி’ என்றோ இவர் பேசிவிட, ‘எப்படி மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு’ என்று இவர் சொல்லலாம் என்று கழகக்கண்மணிகள் கோபித்துக்கொள்ள, இவர் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்க, அப்போது ரிலீசான ஒரு புதுப்படம் (கைராசி என்று நினைக்கிறேன்) ஈயாட, தயாரிப்பாளர் இவர் கையில கால்ல விழ, இவர் மன்னிப்புக் கோரி தாய்க்கழகத்திற்குத் திரும்பியதும், படம் பிச்சுக்கிட்டு போச்சு.தி.மு.க.விலிருந்து இவரே வெளியே போயிருந்தால்கூட அனேகமாக அப்படித்தான் நடந்திருக்கும். அதிலும் எங்க ஊர்க்காரர் ஒருத்தராலதான் அவரை வெளியே தள்ளி பெரிய ஆளாக்கினதா சொல்லுவாங்க. சரி, அத விடுங்க.

60-களில் மாணவர்களாக இருந்த அனேகம்பேர் போலவே நானும் அப்போது ஒரு தி.மு.க.-வின் ஆதரவாளனாய் இருந்த போதும் அவருக்கும் நமக்கும் ஒத்து வந்ததேயில்லை. ஒருவேளை அதன் அடிப்படைக் காரணம் நான் ‘பிரேமித்த’ சிவாஜிக்குக் கிடைக்காத ‘numero uno postion’ இந்த மனிதருக்குத் திரைஉலகில் கிடைத்தனால் இருக்கலாம். நன்றாக நினைவில் இருக்கிறது; தஞ்சையில் வேலை பார்த்து வந்த நாட்களில் தீபாவளிக்கு வந்த இரு படங்களில் சிவாஜியின் ‘இரு மலர்கள்’ (சிவாஜி, பத்மினி, கே.ஆர். விஜயா)படத்தை இரண்டாம் தடவையாக மாலைக் காட்சி பார்த்து விட்டு வெளியே வந்தோம். அன்றோடு அந்தப் படம் கடைசி. அடுத்த காட்சி -கடைசிக் காட்சி- க்குக் கூட்டம் ஒன்றும் இல்லை. ஆனால் இந்தத் தியேட்டருக்கு எதிர்த்தாற்போல் இருந்த இன்னொரு தியேட்டரில் ‘விவசாயி’ படத்திற்கு எக்கச் சக்கக் கூட்டம். ‘கருமண்டா சாமி’ன்னு தலியில அடிச்சிக்கிட்டேன். ஏன்னா, இதுவரை வந்த திரைப்பட விமர்சனங்களில் எனக்கு மிகவும் பிடித்தது விவசாயி படத்திற்கு குமுதத்தில் வந்த விமர்சனம்: அப்போது திரையிடப்பட்டு வந்த ஒரு அரசின் செய்தித் தொகுப்பைப் பற்றி விலாவாரியாக எழுதிவிட்டு, இறுதியாக குமுதம் இவ்வாறு எழுதியிருந்தது: இந்த செய்திப் படத்தோடு ‘விவசாயி’ என்றொரு சினிமாப் படமும் காண்பிக்கப்பட்டது. ஆனா, இப்போ காலம் கடந்து ஒரு உண்மை புரிந்து விட்டது. இன்றைக்கு யாராவது நடிகன் என்ற முறையில் எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதும் கூறுவது கிடையாது. சகாப்தம் அப்டி இப்டின்னு சொல்லுவாங்களே தவிர நல்லா நடிச்சார்னு யாருமே இப்போவெல்லாம் பொய் சொல்றதில்லை. (இதேமாதிரிதான், நாளைய உலகில் கமல்-ரஜினி விதயம் இருக்குமோ? இதப் போய் ரஜினி ராம்கியிடம் யாரும் சொல்லிடாதீங்க!)
பாத்தீங்களா, நம்ம பேச ஆரம்பிச்ச விதயம் என்னென்னே மறந்து போச்சு…சுட்ட கேஸ்…சுடாத கேஸ்… அதாவது எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டார்; சரி.ஆனால் எம்.ஆர்.ராதாவைத் திருப்பி யாரும் சுட்டார்களா, இல்லையா? யாரும் சுடலைன்னாஎம்.ஆர்.ராதாவுக்கு இருந்த காயம் எப்படி வந்தது? prosecution சொன்ன மாதிரி அவர் தன்னையே சுட்டுக்கிட்டாரா?…இப்படிப் பல கேள்விகள். குற்றவியலில் ஒன்று சொல்வார்கள். தடயங்களைச் சரியாகத் திரட்டி, சரியான முறையில் அவைகளைச் சோதித்தால் உண்மை கட்டாயம் வெளிச்சத்துக்கு வரும் என்று. வேண்டுமென்றே, கேஸை கோட்டைவிடுவதற்காகவே - அதாவது, நமது C.B.I.நம்ம அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்கமாய் கேஸ் போடுவார்களா அது மாதிரி - தகுந்த தடயங்களை பத்திரமாக வெளியில் வைத்துவிட்டு கேஸை நம் நீதிதவறா நீதியரசர்களிடம் கொண்டு போவார்களே, அப்படி போனால் எந்த கேஸ்தான் நிற்கும்; படுத்தே விடும். நம் ஊரில் நீதி தேவதை என்றைக்கு முழித்திருந்தது? கண்ணை வேறு நாம் கட்டிவிட்டோமா - இதுதான் சமயம் என்று நம் ஊர் நீதி தேவதை தூங்கிப்போய் ரொம்ப நாளாச்சு; அது தெரியாமல் நாம் அதன் கையில் ஒரு தராசை வேறு வைத்து விட்டோம்; பாவம்!

அடடா..மறுபடி, மறுபடி digression! இனிமே அப்படியில்லாம straight hit at the bull’s eye! சரிதானே…

கோர்ட்டில் கேஸ் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் தினசரிகளில் சுடச் சுட செய்திகள்; தவறாமல் படித்து விடுவோம். இறுதிக் கட்டம். எம்.ஆர்.ராதாவுக்கு வாதாடிய வழக்கறிஞரின் இறுதி விவாதம் மிகவும் நன்றாக இருந்தது. நாங்கள்கூட (இங்கே நாங்கள் என்பது, நானும் என் மற்ற இரு அறை நண்பர்களும்..எல்லோருக்கும் இந்த விஷயத்தில் ஒரே புத்தி!)ஆஹா, நம்ம ஆளு எம்.ஆர்.ராதா விடுதலை ஆயிடுவார் போல இருக்கே; இவ்வளவு பாயிண்ட்டுகள் எம்.ஆர்.ராதாவுக்குச் சாதகமா இருக்கேன்னு நினச்சோம். வாதாடிய வழக்கறிஞரின் பெயர் வானமாமலைன்னு நினைக்கிறேன். அவரின் அந்தக் கடைசி நாள் விவாதத்தைச் சொல்லட்டுமா…?

அப்போதுதான் matinee idol என்ற வார்த்தை எங்களுக்குத் தெரிய வந்தது. எம்.ஜி.ஆரின் வழக்கறிஞர் தன் வாதத்தை முடிக்கும்போது,எம்.ஜி.ஆரை வானளாவப் புகழ்ந்து விட்டு….’ஆகவே, இப்படிப்பட்ட என் கட்சிக்காரரைக் கொல்ல முயற்சித்த எம்.ஆர்.ராதாவுக்குக் கடுமையான தண்டனை அளிக்கும்படிக் (கனம் கோட்டாரவர்களை !) கேட்டுக்கொண்டு தன் வாதத்தை முடித்திருந்தார். பதிலளிக்க வந்த எம்.ஆர்.ராதாவின் வழக்கறிஞர், வழக்கமாக நடக்கும் ஆயிரக்கணக்கான கேஸ்களில் இதுவும் ஒன்று; சம்பந்தப்பட்டவர் matinee idol என்பதால் உள்ள பரபரப்பைவைத்து இது ‘ஆயிரத்தில் ஒரு கேஸ்’ என்று கனம் கோர்ட்டார் அவர்கள் நினைக்கக்கூடாது. மற்ற இது போன்ற எல்லா கேஸ்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்றார். (ஆஹா, கொன்னுட்டார்’டா! - இது நாங்க!)

குண்டடி பட்டு, அதுவும் தொண்டையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கும் ஒரு மனிதரை அவருக்கு வேண்டியவர்கள் பக்கத்தில் இருக்கும் பட்சத்தில், முதலில் அவரை எங்கே கொண்டு செல்வார்கள்? நிச்சயமாக, மிக அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு; அப்படியே இல்லாவிட்டாலும், போலிசுக்கு ஃபோன் செய்யலாம்; அதன் பிறகாவது உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஆனால், எம்.ஜி.ஆர். விஷயத்தில் நடந்தது என்ன?அந்த critical-ஆன நேரத்திலும் முதலில் அவர் அவர்களது வழக்கறிஞர் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதன்பின் வழக்கறிஞரோடு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று F.I.R. போட்டுவிட்டு, அதன் பின்பே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்; அதுவும், மிகவும் தொலைவிலுள்ள ராயப்பேட்டை மருத்துவமனைக்கு. ஏதும் பின்னணியோ, கேஸை ஜோடிக்கவேண்டிய அவசியமோ இருந்ததால்தான் இந்தத் தலைகீழான நிகழ்ச்சிகள் நடந்திருக்க வேண்டும். ஆகவே, prosecution தரப்பு வக்கீல் சொல்வதுபோல எம்.ஆர்.ராதா வந்தார்; சுட்டார் என்பதெல்லாம் நம்பமுடியாத விஷயங்கள். (ச்சே!..பின்னிட்டாண்டா, மனுஷன்! - இது நாங்க!)

அடுத்த பாயிண்ட் அசத்தல் பாயிண்ட். சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு கைத்துப்பாக்கிகளும், இரண்டு spent bullets கிடைத்ததாகச் சொல்லப்பட்டது. அதில் forensic test-ன்படி ஒரு bullet எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியில் இருந்து வந்தது என்று உறுதிப்படுத்தப் பட்டது. ஆனால், மற்றொரு bullet எந்தத் துப்பாக்கியில் இருந்து வந்தது என்பதைக் கண்டு பிடிக்கமுடியவில்லை என்று சொல்லப் பட்டது. நம்ம வழக்கறிஞர், அதாங்க..எம்.ஆர்.ராதாவின் வழக்கறிஞர்தான் கொடுத்த வாதம் உண்மையிலேயே உண்மை நிறைந்தது. அதுக்காக, சத்தியமே ஜெயதே - அப்டின்னா எல்லோரும் நம்பி விடறதா?
எந்த ஒரு ballistic expert-க்கும் அடிப்படைப் பாடமே spent bullets எந்தத் துப்பாக்கியிலிருந்து எந்த குண்டு வந்தது என்பதைக் கண்டுபிடிப்பதுதான். ஒரே ஒரு comparison micrsocope வைத்துச் செய்யப்படும் அடிப்படை டெஸ்ட்தான் இது. இருப்பது இரண்டு துப்பாக்கிகளும் இரண்டு குண்டுகளும்; இதில் ஒன்றை மட்டும் என் கட்சிக்காரரின் துப்பாக்கியில் இருந்து வந்ததைத் தெளிவாகக் கண்டுபிடித்தவர்களுக்கு, அடுத்த குண்டு இந்த இரண்டு துப்பாக்கிகளில் எதிலிருந்து வந்தது என்றோ, அல்லது இந்த இரண்டு துப்பாக்கிகளுக்குமே தொடர்பில்லையென்றோ நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எந்தக் காரணத்திற்காகவோ உண்மை மறைக்கப்படுகிறது. எம்.ஜி.ஆரின் அரசியல் பலமும், புகழும் இதற்குக் காரணங்கள் என்றார். (பரத்திட்டார்’டா; இதுக்குக் கோர்ட் கட்டாயம் போலீசிடமிருந்து பதில் பெற்றேயாகணும்; at least benefit of doubt-ன்னு ஒண்ணு இருக்கே ! - இது நாங்க!)

ஆனா, நாங்களா அப்போ நீதிபதியாக இருந்தோம்…!
Oct 25 2005 03:09 pm அரசியல்... and சினிமா edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 9 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
50 Responses
Mohandoss Ilangovan Says: after publication. e -->October 25th, 2005 at 3:45 pm e
அமேரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எப் கென்னடியின் தம்பி, ரொபர்ட் கென்னடியின் கொலையில் ஒரு சில குண்டுகள் அதிகமாக இருந்த காரணத்தால், அவன் கொலைசெய்ததை ஒப்புக்கொண்ட பிறகும் கூட அவனுக்கு வழங்கிய தூக்குதண்டணையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது என நினைக்கிறேன் அமேரிக்க அரசு. என் ஞாபகங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில்.
மோகன் தாஸ்.
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 4:00 pm e
மோகந்தாஸ்,முதல் தடவையா நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க. வரணும்..வரணும்.
உங்களைப் போலவே ஒரு காலத்தில் பொன்னியின் செல்வனின் வந்தியத் தேவனாக என்னையே நினைத்துக்கொண்டு -சைக்கிளில் செல்லவதல்லாம் குதிரையில் போவதாகக் கற்பனை செய்து கொண்டு- அது ஒரு காலம்.உங்கள் சோழர் வரலாறு கட்டுரையை ஏற்கெனவே வாசித்திருந்தேன். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
Dondu Says: after publication. e -->October 25th, 2005 at 4:42 pm e
எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி, பி.யு. சின்னப்பா மற்றும் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஜோடிகளை பற்றி நான் எழுதிய பதிவு கீழே பார்க்கலாம்.http://dondu.blogspot.com/2004/12/inevitable-pairs-in-tamil-cinema.html
எம்.ஜி.ஆர். 1967 ஜனவரி 17-ஆம் தேதியன்று சுடப்பட்டார்.
எம்.ஜி.ஆரை எனக்குப் பிடிக்கும், ஆனால் அவர் நடிப்புக்காக அல்ல. அவருக்கு இரு முகபாவம்தான் வரும் என்று ஒருவர் கூறினார், அதாவது ஒன்று தேள் கொட்டிய முகபாவம், இன்னொன்று தேள் கொட்டாத முகபாவம்.
ஆனாலும் அவர் எல்லோரது இதயத்திலும் இருக்கிறார் என்பதை மறுக்க இயலாது.
அன்புடன்,டோண்டு ராகவன்
அன்புடன்,டோண்டு ராகவன்
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 4:50 pm e
நம்மில் பல நடமாடும் encyclopaedia இருப்பீர்கள் போலும்! தகவலுக்கு நன்றி.ஒரு திருத்தம்:”ஆனாலும் அவர் எல்லோரது இதயத்திலும் இருக்கிறார் என்பதை மறுக்க இயலாது”இதை - “ஆனாலும் அவர் பலரது இதயத்திலும் இருந்தார் என்பதை மறுக்க இயலாது” - என்பதே சரியென்று நினைக்கிறேன். இப்பல்லாம் ‘நம்மளவிட’ பழசுங்க கொஞ்சம் நினச்சுக்கிட்டு இருக்கலாம்; அவ்வளவே. சரியா?
ramachandran usha Says: after publication. e -->October 25th, 2005 at 5:20 pm e
தருமி, சுதாங்கன் எழுதிய ‘’சுட்டாச்சு, சுட்டாச்சு” படியுங்க. படிச்சதும் எம்.ஜி.ஆர்விட ராதாவே நினைவில் நிற்பார். எனக்கும்எம்.ஜி.ஆர் அலர்ஜி. நடிப்பும் வராது. ஓரே மாதிரி கையை ஆட்டிக்கிட்டு, தாய்மை, பாசம் இதியாதிகளுடன் வல்கரும் அதிகம்,
Ramya Nageswaran Says: after publication. e -->October 25th, 2005 at 5:41 pm e
தருமி சார், விரைவில் நூறாவது பதிவா? எதாவது டாபிக் யோசிச்சு வைச்சுருக்கீங்களா?
J. Rajni Ramki Says: after publication. e -->October 25th, 2005 at 5:43 pm e
//சகாப்தம் அப்டி இப்டின்னு சொல்லுவாங்களே தவிர நல்லா நடிச்சார்னு யாருமே இப்போவெல்லாம் பொய் சொல்றதில்லை. (இதேமாதிரிதான், நாளைய உலகில் கமல்-ரஜினி விதயம் இருக்குமோ? இதப் போய் ரஜினி ராம்கியிடம் யாரும் சொல்லிடாதீங்க!)
We need not come to a conclusion. Let the audience/readers to decide… That’s what i did in my book.
When i read Suthangan’s book, i thought of saying what Usha has written here. At the same time, arguments put up by Vanamamalai were too much. Infact, he didn’t achieve anything other than simply asking childish questions!
Coming back to the point… To my knowledge, Rajni - Kamal pair did lot of achievements compare to Shivaji - M.G.R.
theevu Says: after publication. e -->October 25th, 2005 at 5:49 pm e
வர வர நம்ம வலப்பூ மகாஜனங்க ரொம்ப கஞ்சனாக மாறிக்கிட்டே போறாங்க..இந்தக் கட்டுரைக்கு ஏன் 1 பரிந்துரை?தாராளமாக இன்னொன்று குத்தலாம்தானே..குத்தியுள்ளேன்.நல்ல நடையுடன் கூடிய கட்டுரை
ஜோ Says: after publication. e -->October 25th, 2005 at 6:46 pm e
தருமி,எம்.ஜி.யார் என்கிற மனிதர் உண்மையிலயே புரியாத புதிர் .அவரைப் பற்றி மிக உயர்வாகவும் ,மிக மட்டமாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன் .இவ்வளவு வேறுபாடு வேறு யார் குறித்தும் இருந்ததில்லை ..ஆனா ஒண்ணு ..எம்.ஜி.ஆர் பட பாட்டுண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும்
Awwai Says: after publication. e -->October 25th, 2005 at 6:51 pm e
I am surprised you didn’t mention these details in the “Forensic Science” course you handled!Awwai
கோ.இராகவன் Says: after publication. e -->October 25th, 2005 at 7:54 pm e
ஐயோ! அப்புறம் என்னாச்சு….எம்.ஆர்.ராதாவை விட்டுட்டாங்களா? இது பத்தி லேசா கேள்விப் பட்டிருக்கேன். ஆனா முழு விவரம் தெரியாது. கேஸ் முடிவையும் சொல்லுங்க.
எம்.ஜி.ஆர் என்ற தனிமனிதர் மேல் எனக்குக் கொஞ்சமும் அபிமானம் இருந்ததில்லை. நடிகர் மேல் எதிரபிமானமே உண்டு. பழைய படங்களையும் பார்க்கும் எனக்கு எம்.ஜீ.ஆர் படங்கள் பிடித்தமானவைகளாக இருந்ததேயில்லை. பாட்டுகள் எல்லாம் நன்றாக இருக்கும். அதிலும் விசுவநாதன் அவருக்கென்றே இழைத்து இழைத்து செய்தது போல இருக்கும்.
நடிகராக சிவாஜி மிகவும் பிடிக்கும். ஓவர் ஆக்டிங் என்று இன்று சொல்வார்கள். ஆனால் அன்றைய அளவுகோலில் அவர் நடிப்பு சரியே. இன்றைக்குள்ள படங்களில் அவர் இன்றைக்குத் தக்க நடித்திருக்கிறாரே. குறிப்பாக பூ என்று தொடங்கும் படம். கடைசிப் படம் என்று நினைக்கிறேன்.
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 7:58 pm e
உஷா,சுதாங்கன்(ஜெயா டி.வி.க்காரர்தானே?)அவர் அப்படி எம்.ஆர்.ராதாவுக்கு சப்போர்ட் பண்ணி எழுதினார்? வாசிச்சதில்லை.ரம்யா,சொந்தக் கதைக்குப் போகட்டுமா, வேண்டாமா? அல்லது கடைசித் தடவையா ஜெயிலுக்குப் போகலாமா?அல்லது மரணம் தொட்ட கணங்களா? முதல் நாள் பள்ளிக்கூடம் போனதா?உங்கள் ஓட்டு எதற்கு? சீக்கிரம் சொல்லுங்க.
ஜோ,கலங்கரை விளக்கம் படப் பாடல்கள் அவ்வளவு பிடிக்கும். ஆனா, பொதுவாக மற்ற பாடல்கள் கேட்கும்போது அவர் திருமுகம் நினைவுக்கு வந்துவிடும் என்பதால் அதிகமாக ரசிக்க முடிவதில்லை.
அவ்வை,எம்.ஜி.ஆர்., ஷோபா (பசி), இந்த மாதிரி கதைகள் நம்ம ஸ்டாக்ல எப்பவும் உண்டே…எப்படியோ விட்டுப் போச்சு போல.
ஜோ Says: after publication. e -->October 25th, 2005 at 8:23 pm e
தருமி,கலங்கரை விளக்கம் படத்தில் ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்’ என்ற பாடல் அற்புதம் .எம்.ஜி.ஆர் பாடல்கள் குறித்து ,பாடல் உருவாக்கத்தில் அவருக்கும் கண்ணதாசன் ,விஸ்வநாதன் ஆகியோருக்கும் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து கீழேயுள்ள சுட்டியில் மனிசேகரன் என்பவர் நிறைய எழுதியிருக்கிறார்.
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=2192&postdays=0&postorder=asc&start=45
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 8:30 pm e
Ramki,sorry i have neither read your book nor suthangan’s. so no comments on that.how come you say that vanamamalai’s arguments are childish? the last two points, in all respects, are good pointers to how the case was handled by the police and others. well, he did not acheive anything in spite of those points and any one can see the reason behind it.
“Coming back to the point… To my knowledge, Rajni - Kamal pair did lot of achievements compare to Shivaji - M.G.R.” definitely YES - for kamal. rajini, i LIKE him for his personality, i mean his character. but filmic achievements - a definite NO. that’s MY personal view. Even he talks about முள்ளும் மலரும்;and not படையப்பா or சந்திரமுகி. பாபா படம் நல்லா போகலன்னதும் காசைத் திருப்பிக் கொடுத்தாரே, அது உங்க தலைவரால மட்டும்தான் முடியும். மனோரமா விஷயத்தில காட்டிய magnanimity வேறு யாருக்கும் வராது. ஆனா, ஸ்டைல் ஸ்டைல்னு சொல்லி அந்த மனுஷனைக் கெடுத்திட்டீங்க / கெடுத்திட்டாங்க. படம் ஓடுறது, ஓடாதது வச்சு நல்லபடம்,மோசமான படம் அப்டிங்கிற முடிவுக்கு வரமாட்டீங்கன்னு நினைக்கிறேன். ‘கப்பலோட்டிய தமிழன் ரிலீசானப்போ பயங்கர ஃப்ளாப்.
ஜோ Says: after publication. e -->October 25th, 2005 at 8:31 pm e
//சுதாங்கன்(ஜெயா டி.வி.க்காரர்தானே?)அவர் அப்படி எம்.ஆர்.ராதாவுக்கு சப்போர்ட் பண்ணி எழுதினார்? //தருமி ,ரொம்ப தான் நக்கல் உங்களுக்கு .ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் மேல் ரொம்ப அக்கறை இருக்க மாதிரி சொல்லுறீங்க .ஓட்டுக்கு மட்டும் தான் எம்.ஜி.ஆர் .தன் படத்தை விட எம்.ஜி.ஆர் படத்தை பெருசா போட்டு அவங்க கட்சி காரங்க போஸ்டர் அடிச்சா என்ன ஆகும்னு தெரியாதா ? எம்.ஆர்.ராதா மகன் ராதாரவி இப்போ எங்க இருக்கார்ன்னு தெரியாதா?
ஜோ Says: after publication. e -->October 25th, 2005 at 8:46 pm e
ராம்கி மற்றும் தருமி,எம்.ஜி.ஆர்- சிவாஜி ,கமல்-ரஜினி குறித்த பார்வையில் பலரும் எம்.ஜி.ஆரை ரஜினியுடனும் ,கமலை சிவாஜியுடனும் ஒப்பிட்டு நிறுத்தி விடுகிறார்கள் .நடிப்பில் சிவாஜியின் உயரத்தை தொடுவதற்கு சிவாஜி மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு என்றாலும் ,அவரது இடத்தை நிரப்ப கொஞ்சமாவது தகுதியுடையவர் கமல் தான் .அதே நேரத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பு விஷயத்தில் மோசமே என்றாலும் அவர் ஒரு வெற்றி பெற்ற தொழில்நுட்பவாதி .இரண்டு வெள்ளிவிழா படங்களை இயக்கியவர் .தயாரிப்பாளராக வெற்றி பெற்றவர் (சிவாஜியும் கூட) .இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர்-ன் வாரிசு கூட கமல் தான் .கமல் ஒரு கதை வசன கர்த்தா ,இயக்குனர் ,தயாரிப்பாளர் ,பாடலாசிரியர் ,பாடகர் ..என்று சகல துறைகளிலும் முத்திரை பதித்தவர் .ரஜினியப் பொறுத்தவரை ஜனரஞ்சகத்தில் அவர் எம்.ஜி.ஆர் வாரிசு என்றாலும் அவர் எம்.ஜி.ஆர் போல,கமல் போல பல்துறை வித்தகர் அல்ல .ஆனால் கமல் அளவுக்கு இல்லையென்றாலும் ,எம்.ஜி.ஆரை விட நடிப்பு திறமை உள்ளவர்.இது என் கருத்து.
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 9:32 pm e
இராகவன்,அப்புறம் என்ன? எம்.ஆர்.ராதாவை ஜெயில்ல போட்டாங்க. எத்தனை வருஷம் என்ன ஏது, அதில்லாம் வேணும்னா நம்ம எல்லோரும் டோண்டுவிடம் கேட்டிடுவோம்.
ராம்கி,முத முதல்ல வந்ததுக்கு நன்றி சொல்ல மறந்து போச்சு. நன்றி.இன்னொரு சந்தேகம். இதுவரை வராத ஆளு எப்படி உங்க ஆள்பற்றி எழுதியதுமே கண்டுபிடித்துவிட்டீர்களே, எப்படி? ஆச்சரியமா இருக்கு.ஆமா, இதுக்கே இப்படி சொல்றீங்களே,நான் முந்தி எழுதனதைப் படிச்சா என்ன சொல்வீங்க? அதோடு இதைப் பற்றி சீரியஸா ஒரு தொடர் பதிவு போடலாம்னு நினைக்கிறேன். ரொம்பவே எதிர்ப்பீங்களோ? நம்ம வீட்டுக்குள்ளே இருக்கு எதிர்ப்பு (எல்லாம் உங்க software ஆளுதான்!); அதெல்லாம் பாத்தா முடியுங்களா? வலைகளில் இதெல்லாம் சகஜமப்பா!!
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 9:37 pm e
முக்கியமான ஆள் பாக்காம விட்டுட்டேனே. பின்னூட்டக்காரர்கள் எல்லாம் நம்ம ‘தீவு’ சொல்றதக் கேட்டு நடந்தா எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்…!! ரொம்ப நன்றி. அதோடு முதல்வரவு நல்வரவாகுக..
தாணு Says: after publication. e -->October 25th, 2005 at 10:11 pm e
எம்.ஜி.ஆர். பிடிக்குதோ இல்லையோ, அவரோட படப் பாடல்கள் என்றும் இனிமைதான். நான் ஜோ கட்சி. சமீபத்தில் படித்தேன். சென்னையில் புதுசா ஓடின படங்களெல்லாம் ஊத்திக்கிட்டப்போ, பழைய எம்.ஜி.ஆர் படம் ஓகோன்னு ஓடிச்சாம்.
J. Rajni Ramki Says: after publication. e -->October 25th, 2005 at 10:25 pm e
நன்றி தருமி. நிறைய தடவை உங்க வூட்டுக்கு வந்திருக்கேன். கமெண்ட் போடறதுததான் கிடையாது! நீங்க சொல்ற பதிவையும் அப்பவே படிச்சிருக்கேன். ப்ச்! ரஜினியை விஜய் கூடவெல்லாம் ஒப்பிடறதெல்லாம் மரம்வெட்டிங்க மனசாட்சி கூட ஒத்துக்காத விஷயம்!
ஜோ ஏற்னவே இந்த விஷயத்தை கையிலெடுத்திருக்காரு. ரஜினி - கமல், சிவாஜி - எம்ஜிஆர் பத்தியெல்லாம் ஏதோ பின்னூட்டத்துல போடற விஷயமில்லை. பக்கம் பக்கமா தட்ட வேண்டிய விஷயம். தேவையில்லாத வேலை. வெட்டியா பத்து பேர் விதண்டாவாதம் பண்ண வருவாங்க. என்னைப் பொறுத்த வரை தமிழ் சினிமாவில் தனக்கென்று தனிப்பாணி நடிப்பு இரண்டு பேர்கிட்டேர்ந்து மட்டும்தான். ஒண்ணு சிவாஜி, இன்னொன்னு ரஜினி. மற்றவர்களெல்லாம் கலர்·புல்லாக இருந்தாலும் கார்பன் காப்பிதான்!
அது இருக்கட்டும். இதை விட முக்கியமான விஷயம் இந்த சுட்ட மேட்டர். சரோஜோ தேவி கூட மட்டும் ஏன் நிறைய படங்கள் நடிக்கிறீங்க? ஒரு படத்துக்கு ஏன் இவ்ளோ ஜாஸ்தியா சம்பளம் வாங்குறீங்க? வாங்குற பணத்தை என்ன பண்றீங்க? என்றெல்லாம் கேள்வி கேட்பது சட்டப்படி நியாயமாகவும் கருப்பு கோட்டு கலாசாரத்தின் படி பிரமாதமாகவோ இருந்தாலும் சாதாரண மக்களுக்கு படு எரிச்சல்தான். யார்தான் சுட்டது என்கிற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்காமலே குழப்படியாக முடிந்ததிற்கு காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும்.
எம்ஜிஆர் - ‘இந்த ஆளு கன்னாபின்னான்னு கேள்வி கேட்டு இம்சைப்படுத்துறானே… அதுக்கு சம்பந்தப்பட்ட பார்ட்டிக்கிட்டேயே சரண்டர் ஆயிட்டு கேஸை இழுத்து மூ வெச்சுடலாமே’
Kumaran Says: after publication. e -->October 25th, 2005 at 10:32 pm e
தருமி, இந்த விஷயத்தைப் பத்தி நானும் கொஞ்சமாதான் படிச்சிருக்கேன். முடிவு என்னாச்சுன்னு இன்னும் கொஞ்சம் விவரமா சொல்லுங்க.
dharumi Says: after publication. e -->October 26th, 2005 at 11:04 am e
வரவேணும் குமரன்.
“இன்னும் கொஞ்சம் விவரமா சொல்லுங்க”ரொம்ப details தெரியாதுங்க. ஜெயில்ல போட்டாங்க. வெளியே வந்ததும்,தான் எம்.ஜி.ஆரைச் சுட்டதாகவும், ஜானகி தன்னைச் சுட்டதாகவும் சொன்னார். அதைவைத்து ‘ சுட்டான்; சுட்டேன்; சுட்டாள்’ என்ற தலைப்பில் நாடகம் ஒன்று போடப்படுவதாகச் சொன்னார். நடக்கவில்லை.விஷயம் தெரிஞ்சவங்க இன்னும் சொன்னா தேவலை.
dharumi Says: after publication. e -->October 26th, 2005 at 11:18 am e
ராம்கி…ராம்கி…சஸ்பென்ஸ் தாங்கல..”அதுக்கு சம்பந்தப்பட்ட பார்ட்டிக்கிட்டேயே சரண்டர் ஆயிட்டு” - அது யாரு ‘அந்த’ பார்ட்டி? please! சீக்கிரம் சொல்லுங்க.
“ரஜினியை விஜய் கூடவெல்லாம் ஒப்பிடறதெல்லாம் மனசாட்சி ஒத்துக்காத விஷயம்!” மூணுபேரையும் ஒப்பிடலை; ஆனா எம்.ஜி.ஆர்.–>ரஜினி–>விஜய் -இந்த மூன்று பேரும் ஒரே தொடர் சங்கிலியின் தனித்தனித் துண்டுகள். தமிழ் சினிமாவை ‘இழுத்துக்கொண்டு’ சென்றதில், செல்வதில் இந்தச் சங்கிலிக்குப் பெரும் பங்கு உண்டு; எந்தத் திசையில் என்பதுதான் கேள்வி.
“தனிப்பாணி நடிப்பு இரண்டு பேர்கிட்டேர்ந்து மட்டும்தான். ஒண்ணு சிவாஜி, இன்னொன்னு ரஜினி” -இப்படி ‘இந்த’ இரண்டு துருவங்களையும் ஒரே bracket-ல் போடுவது உங்களுக்கே சரியாகத் தோன்றினால்…சொல்லிக்கொள்ளுங்கள்.
போவதற்கு முன்: நம் தமிழ் சினிமாவை அதன் தொடர்பான காரியங்களை முழுசாக, வன்மையாக எதிர்த்து, கண்டித்து ஒரு தொடர் எழுத உத்தேசம். அதைப்படித்து உங்களைப் போன்றவர்கள் “வருத்தப்’ படுவீர்களா என்று தெரிந்து கொள்ள ஆசை; கோபப்படுவதைப் பற்றிக் கவலையில்லை. remember, rajini will not be my only target, just one of many.
dharumi Says: after publication. e -->October 26th, 2005 at 11:23 am e
இன்னொண்ணு ராம்கி,““தனிப்பாணி நடிப்பு இரண்டு பேர்கிட்டேர்ந்து மட்டும்தான். ஒண்ணு சிவாஜி, இன்னொன்னு ரஜினி” -இப்படி ‘இந்த’ இரண்டு துருவங்களையும் ஒரே bracket-ல் போடுவது உங்களுக்கே சரியாகத் தோன்றினால்…சொல்லிக்கொள்ளுங்கள்.”
சொல்ல மறந்தது:இந்த இரண்டு பேரையும் நான் இப்படி ஒரே bracket-ல் இணைப்பேன்: utterly wasted talents. முன்னவர் முகிழ்த்த பிறகு; பின்னவர் முகிழ்க்கும்போதே (nipped in the bud)!
மூர்த்தி Says: after publication. e -->October 26th, 2005 at 1:10 pm e
அன்பின் தருமி அவர்களே,
நல்ல பதிவு. எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோது நானெல்லாம் பொடியன். அதன்பிறகு படித்துதான் தெரிந்து கொண்டேன். இங்கு வலை வாசகர்களுக்கு அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல.
துளசி கோபால் Says: after publication. e -->October 26th, 2005 at 1:26 pm e
சிவாஜி x எம்ஜியார் பதிவு சூடாப் போயிக்கிட்டு இருக்கறதை இப்பத்தான் பார்த்தேன் தருமி.
நடிப்புன்னா என்னான்னு குறிப்பிட்டுச் சொல்றதுலேயே ஏகப்பட்ட அபிப்பிராயங்கள் இருக்குதானே?
சிவாஜி நடிப்பு ஓவர் ஆக்டிங்னு சொன்னவுங்க எல்லாப்படத்திலேயும்னு சொல்லலைதானே?
நம்ம வீட்டுலே கோபால் எம்ஜியார் ரசிகர். அவரே சொல்லுவார் எம்ஜியார் படத்துலே எல்லாமே நல்லா இருக்கும்எம்ஜியாரைத் தவிரன்னு )
மகள், கமல் படத்தை மட்டுமே பார்ப்பாள்.
நானு ‘எல்லா’படத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கேன். கமல், விக்ரம் படங்கள் பிடிக்கும்.
கொஞ்சம் வயசான நாயகர்கள் வந்துக்கிட்டு இருந்தப்ப கொஞ்சம் இளைஞனா ஒருத்தர் வந்தவுடனேஅவரைப் பலருக்குப் பிடிச்சுப்போச்சு.
‘ராஜு மெச்சிந்தி ரம்பை ‘ன்னு ஒரு தெலுங்குப்பழமொழி இருக்கு. ராஜாவுக்கு இஷ்டமானவள் எப்படி இருந்தாலும்அழகுலெ ரம்பா( தேவலோகத்து)தான்னு அர்த்தம். அதனாலே ஆளைப் பிடிச்சுப் போச்சுன்னா அவுங்க நடிப்பையும்பிடிச்சிருக்குன்னு ஒரு மனமயக்கத்துலேதான் இப்ப ‘ரசிகர்கள்’னு சொல்லிக்கிறவுங்க இருக்காங்க.
J. Rajni Ramki Says: after publication. e -->October 26th, 2005 at 1:42 pm e
//இப்படி ‘இந்த’ இரண்டு துருவங்களையும் ஒரே bracket-ல் போடுவது உங்களுக்கே சரியாகத் தோன்றினால்…சொல்லிக்கொள்ளுங்கள்.
//நம் தமிழ் சினிமாவை அதன் தொடர்பான காரியங்களை முழுசாக, வன்மையாக எதிர்த்து, கண்டித்து ஒரு தொடர் எழுத உத்தேசம்
All the best. But, before doing this pl. go through the list of first 50 films, did by Rajni. This my humble suggestion.
Reg. the fans of Rajini, they are not that much ridiculous people. They have been trained to welcome all type of comments. They are the only fans who do not want to promote much about Rajni which is rare in Tamil cinema.
Dondu Says: after publication. e -->October 26th, 2005 at 1:49 pm e
“அப்புறம் என்ன? எம்.ஆர்.ராதாவை ஜெயில்ல போட்டாங்க. எத்தனை வருஷம் என்ன ஏது, அதில்லாம் வேணும்னா நம்ம எல்லோரும் டோண்டுவிடம் கேட்டிடுவோம்.”
முதலில் ஒரு சிறு திருத்தம். எம்ஜிஆர் சுடப்பட்டது ஜனவரி 12-தான், 17 அல்ல. எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டுகள் தண்டனை. தண்டனை காலத்தில் இன்டர்னேஷனல் மோசடிப் பேர்வழி வால்காட்டுடன் சிறையில் பழக்கம். பிரெஞ்சு அவரிடம் கற்றுக்கொண்டாராம், முக்கியமாக கெட்ட வார்த்தைகளை. எனக்கே அவை சரியாகத் தெரியாது. அல்லியான்ஸ் பிரான்ஸேசில் கேட்டிருந்தால் என்னை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார்கள்.
5 ஆண்டுகள் முடியும் முன்னரே அவர் விடுதலை அடைந்ததாக ஞாபகம். எழுபதுகளில் மறுபடியும் படங்களில் நடித்திருக்கிறார். உதாரணம்: தசாவதாரம், மேளதாளங்கள், கந்தர் அலங்காரம் (இதில் முருக பக்தராக வந்து காலட்சேபம் எல்லாம் செய்தார்). சரியோ தவறோ கடைசி வரை தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டார்.
அன்புடன்,டோண்டு ராகவன்
tbrjoseph Says: after publication. e -->October 26th, 2005 at 1:54 pm e
என்னுடைய சொந்த அனுபவத்தை இங்கே சொல்கிறேன்.
நான் முதன் முதல் மேலாளராக பதவியமர்த்தப்பட்ட என்னுடைய வங்கிக் கிளையைத் திறந்து வைத்தவர் எம்.ஜி.ஆர் (1980ம் வருடம். அவர் இரண்டாவது முறையாக ஜெயித்து முதல்வர் பதவியேற்றிருந்த வருடம் என்று நினைவு).
அவரிடம் தியதி வாங்குவதற்காக பலமுறை அவருடைய இரண்டு அலுவலகங்களுக்கும் (தலைமைச் செயலகம் மற்றும் தி.நகரரிலுள்ள கட்சி அலுவலகம்) பல மாதங்கள் நடையாய் நடந்திருக்கிறேன்.
அந்த பழக்கத்தில் சொல்கிறேன். அவருடைய சுயரூபம் திரையில் காண்பதற்கு நேர் எதிரானது. இப்படி ஒரு ஈகோ பிடித்த மனிதரை என் வாழ்நாளில் கண்டதேயில்லை.
துவக்க விழா அன்று தனிமையிலும், அரங்கத்திலும் அவர் நடந்துக் கொண்டதை இப்போது நினைத்துப்பார்த்தாலும் ஒரு மனிதரால் முற்றிலும் நேர்மறையான முகங்களை வைத்துக்கொண்டு எப்படி செயலாற்ற முடிந்தது என்று வியந்து போகிறேன்.
இப்போதைய கருப்பு எம்.ஜி.ஆரும் அதே போல்தான். அவரும் ஜெயித்து வந்து முதலமைச்சரானாலும் வியப்பில்லை!
dharumi Says: after publication. e -->October 26th, 2005 at 2:38 pm e
மூர்த்தி,இந்த வயசான ஆட்களுக்கு வலைப்பாதிவாளராக இருப்பது ஒரு வசதிதான் போலும். பழைய கதையை எடுத்துவுட்டாலே நிறைய எழுதலாமோ. நமக்குத் தெரிஞ்ச நாலஞ்சு கிழடு கட்டைங்க இருக்கு; வரச்சொல்லட்டுமா..?
துளசி, தெலுங்கில அப்படி சொல்றது இருக்கட்டும். நியூசில ‘கோபாலு மெச்சிந்தி துளசி’ங்கறாங்களே; சரிதானா?translation ஒண்ணும் உதைக்கலையே..?
ராம்கி -’All the best.’ - க்கு நன்றி.
டோண்டு, கைகொடுத்ததற்கு மிக்க நன்றி. அது எப்படி எல்லாம் மேல (தலையில)data base-ல் போட்டு வச்சிருப்பீங்களோ? “கடைசி வரை தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டார்.” எனக்கும் அவருடைய தனக்குத்தானே நேர்மையாகஇருந்ததும், என் இரண்டாம் commandment-படி இருந்ததும் எனக்கு அவரிடம் பிடித்த காரியங்கள்.
ஜோசஃப்,“நேர்மறையான முகங்களை வைத்துக்கொண்டு எப்படி செயலாற்ற முடிந்தது” - அந்த இரட்டைமுகம் வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதே ஒரு திறமைதான். வந்தமைக்கு நன்றி.
dharumi Says: after publication. e -->October 26th, 2005 at 2:51 pm e
மன்னிக்கணும் - மேலே கூறியதில் ஒரு திருத்தம்; “என் இரண்டாம் commandment-படி இருந்ததும் எனக்கு அவரிடம் பிடித்த காரியங்கள்”- அல்ல, அது எனது மூன்றாவது commandment என்று கொள்ளவும்.
ஜோ Says: after publication. e -->October 26th, 2005 at 3:26 pm e
//They are the only fans who do not want to promote much about Rajni which is rare in Tamil cinema.//ஒண்ணுமே புரியல ராம்கி .எதை வச்சு சொல்லுறீங்க ? கட்டவுடுக்கு பாலபிஷேகம் ,போஸ்டர் ,சுவர் விளம்பரம் ,ரசிகர் மன்றம் , யாகு குழுமம் ,இணைய தளம் ,தியேட்டருக்குள் கலாட்டா என்று எல்லா வகையிலும் தங்கள் அபிமான நடிகரை தூக்கிப்பிடிப்பதில் ரஜினி ரசிகர்களே முன்னணியில் இருக்கிறார்கள் .இதை எப்படி மறுக்கிறீர்கள் ?
anon1 Says: after publication. e -->October 26th, 2005 at 6:52 pm e
எம்.ஜி.ஆர் படங்கள் ஓடுவதற்கு காரணம் அதில் உள்ள பொழுதுபோக்குஅம்சங்கள். எல்லா படத்துக்கும் ஒரே கதைதான். அதில் நல்லஇசை, பாடல்கள், சண்டை என்று கலவையாக இருக்கும். அழுது வடிந்துமூக்கு சிந்த வைக்காது. அதனால் பல பேருக்கு இவர் படங்கள் பிடிக்கும்.(அவருக்கு நடிக்க தெரியாவிடாலும் கூட.)
குழலி Says: after publication. e -->October 26th, 2005 at 7:36 pm e
அப்போதே பதிவை தவற விட்டு விட்டேன், இப்போது படித்தேன் பல புதிய தகவல்களுடன் இருந்தது, பலே விவாதம் கூட நன்றாகத் தான் போயிருந்திருக்கு, பரவாயில்லை மரம்வெட்டியையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்காரு ரஜினி ராம்கி ஹா ஹா நாம மறந்தாலும் நம்மள மறக்க மாட்டாங்க போல…
சில பின்னூட்டங்களுக்கு பின்னூட்டம் கொடுக்க தோனினது, ஆனால் ஏற்கனவே குங்ஃபூ குழலி என்ற பெயரிருப்பதால் தற்போதைக்கு அப்பீட்…. வேறொரு முறை பார்த்துக்கலாம்.
எனக்கும் எம்ஜியார் படங்களை பிடிக்காது முன்னொரு காலத்தில், காஞ்சித்தலைவன் படத்திலிருந்து தான் அவரின் படங்கள் பிடிக்க ஆரம்பித்தது, அதன் பிறகு எம்ஜியாரின் கருப்பு வெள்ளை படங்களை ஆர்வத்துடன் பார்ப்பேன், எம்ஜியாரின் வண்ணப்படங்கள் பார்ப்பதில்லை அது அளவுக்கதிகமான ஹீரோயிச அபத்த களஞ்சியமாக இருப்பதால் ஆனாலும் தமிழகத்தை 13 ஆண்டுகள் ஆண்ட ஒரு வலிமையான தலைவராகவும், பல மக்களின் ஆதர்ச நாயகனாகவும் இருந்தவர் பேசிய வசனங்களை தற்போது கேட்கும் போது அவ்வளவாக எனக்கு சிரிப்பு வருவதில்லை, ஆனால் விஜயும், சிம்புவும், இப்போ விஜய் பேசுற மாதிரி முன்பு வேறொருவர் பஞ்ச் வசனம் பேசியதையும் கேட்கும் போது அய்யோ அய்யோ… ஒரே தமாசு…
வசந்தன் Says: after publication. e -->October 26th, 2005 at 9:22 pm e
மூர்த்தியின் தகவல் மீது ஐயமுள்ளது. அந்த நேரத்தில் அவர் சிறுவனாக இருந்திருக்க வாய்ப்பில்லையென்றே நினைக்கிறேன். பரவாயில்லை. உங்களது கிழட்டுப் பட்டியலில் அவரைச் சேர்த்துவிட்டீர்கள்.
chiththan Says: after publication. e -->October 29th, 2005 at 12:08 am e
நீதி தேவன் என்ன ஆனார்? மயங்கி விட்டாரோ!எம் ஜி ஆரால் வாழ்ந்தவர்கள் உண்டுஅசோகன்,சந்திரபாபு போல் வீழ்ந்தவர்களும் உண்டு.பாடல்களால் அவர் படங்கள் ஓடின.
NA Says: after publication. e -->October 30th, 2005 at 12:53 am e
M.G.R. = No Acting, Meaningful songs, Originality in telling the message through his films, Know the pulse rate of poor people, Know how to “HANDLE” politics.
Shivaji = “ACT(K)ING”
Kamal = ‘ACTing’ (but varies according to moods/films)
Rajini = Successful Hero (for style and action), Profit guaranteed, “thani vazhi”.
சன்னாசி Says: after publication. e -->October 30th, 2005 at 11:26 am e
பாகப்பிரிவினை (என்று நினைக்கிறேன்) படத்தில் “அடிக்றான், நொண்டிக்கையன் அடிக்றான்” என்று ஒதுங்கியவாறே எம்.ஆர்.ராதா துப்பும் வாக்கியம் சிவாஜியின் அதுவரையிலான “நடிப்பை” விழுங்கி ஒரே கணத்தில் ஏப்பம் விடுவதை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்ததுண்டு!
எம்.ஜி.ஆர்? “ஹம்மாஆஆ…” என்று சுவரைப்பார்த்துத் திரும்பிக்கொள்கிறேன்!
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 11:45 am e
குழலி, சித்தன் - நன்றி
NA - (not avilabel??),ஒண்ணு சேத்துக்கிறன். கமல் = ‘ACTing’ + மண்டையில மசாலா
சன்னாசி,இது மாதிரி நிறைய சொல்லமுடியும்னு நினைக்கிறேன்: உயர்ந்த மனிதனில் ஒரு சீனில் சிவாஜியைத் தூக்கி சாப்பிடுவார் ஒருவர்; அவர் யார் தெரியுமா? Of all people, S.A. அசோகன்!! கமல், சத்தியராஜ் நடித்த (காக்கிச் சட்டை??) படத்தில் சத்தியராஜ் ஓவர் டேக் பண்ணியிருப்பார். சத்தியராஜை ரகுவரன் நல்லாவே பொம்முக்குட்டி படத்தில் சைடு வாங்கியிருப்பார். இப்படியே போகும்…
Annonymous Says: after publication. e -->October 30th, 2005 at 9:54 pm e
கமல் = ‘ACTing’ + மண்டையில மசாலா
appo mathavungalukku masala illaya? you have started talking about their acting. it look like you have started telling about their personal behaviour also. he..he…
ஜோ Says: after publication. e -->October 30th, 2005 at 10:11 pm e
//கமல் = ‘ACTing’ + மண்டையில மசாலா//
மண்டையில மசாலா என்றால் அவர் மகான்னு அர்த்தம் இல்லை ..கமல் வெறும் நடிகன் மட்டுமல்ல .நடிப்பு போக சினிமாவில் தயாரிப்பாளராக ,இயக்குநராக ,கதை வசன கர்த்தாவாக ,பாடல் பாடுபவராக ,பாடல் எழுதுபவராக முத்திரை பதிப்பதற்கு மண்டையில் கொஞ்சம் மசாலா வேண்டும் தானே?
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 10:18 pm e
திரு./திருமதி/ செல்வி/ குழந்தை (இதில் எது சரியோ; அதைப் பொருத்திக்கொள்ளவும்!)கண்மணி,
இவ்வளவு நல்ல பெயரை வச்சிக்கிட்டு எதுக்கு அனானிமஸா வரணும்? அடுத்த பதிவையும் வாசிங்க; வாசிச்சிட்டு மறுபடியும் பேரோடு வாங்க; சரியா?
இந்த அனானிமஸ்களுக்குப் பதில் தர கொஞ்சம் தயக்கம். இருந்தும் தவறான புரிதலை மாற்ற இந்த பதில்: “it looks like you have started telling about their personal behaviour also. he..he… ” - உலக சினிமாகளைப் பற்றிய அறிதலும், புரிதலுமே நான் குறிப்பிட்ட மசாலா. நம்ம விஜய்க்கும், ரஜினிக்கும் இருக்குதா இது? இல்ல, பெரியவர் சிவாஜிக்கு இருந்ததா? நாசரின் முதல் இரண்டு படங்கள் எனக்கு அக்கிரா குரோசோவாவை நினைவூட்டியது. குருதிப்புனலின் தரம் - leaving aside the compromises, the technical side of the movie - உலகத்தரமென்று கூற முடியாவிட்டாலும், அதை நோக்கிய நல்ல முயற்சி. ஆனால், இந்த திரையுலக அறிவு கட்டாயம் வேண்டுவதில்லை - பாலா போன்ற சில சுயம்புகளுக்கு. சரியா…?
ஜோ Says: after publication. e -->October 30th, 2005 at 10:40 pm e
//பாலா போன்ற சில சுயம்புகளுக்கு//தருமி,பாலா கூட சுயம்பு இல்லை .பாலுமகேந்திரா பள்ளியில் பயின்றவர்.
ஜோ Says: after publication. e -->October 30th, 2005 at 10:43 pm e
குருதிப்புனல் வேறு மொழியிலிருந்து மறு பதிப்பு என்றாலும் ,என் அபிமான படங்களில் முக்கியமான ஒன்று.அதிலும் நாசரின் நடிப்பு அட்டகாசம்.
dharumi Says: after publication. e -->October 30th, 2005 at 11:46 pm e
ஜோ,“பாலா கூட சுயம்பு இல்லை .பாலுமகேந்திரா பள்ளியில் பயின்றவர்.”Probably he was ‘delearning’ in that school!இருவருக்கும் எவ்வளவு வேற்றுமை என்பதைவிடவும், எந்த ஒற்றுமையும் நான் காணவில்லை.
குருதிப் புனல் மறு பதிப்பு என்பது தெரியாது. ஒரிஜினல் என்ன மொழிப்படம், ஜோ?அந்தப் படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் எனக்கு பிரமிப்பூட்டியது.
பெத்தராயுடு Says: after publication. e -->October 31st, 2005 at 5:41 am e
குருதிப்புனல் கோவிந்த் நிஹ்லானி-யின் ‘த்ரோஹ்கால்’ படத்தின் தமிழ் பதிப்பு.
ஜோ Says: after publication. e -->October 31st, 2005 at 7:26 am e
தருமி,இந்தியில் வந்த ‘துரோக்கால்’ என்ற படத்தின் உயிமையை கமல் வாங்கி சில மாற்றங்களுடன் எடுத்த படம் ‘குருதிப்புனல்’. குருதிப்புனலை பார்த்த துரோக்கால் இயக்குநர் மூலத்தை விட மிகச்சிறப்பாக இருப்பதாக பாராட்டினாராம் .இந்த படத்தில் கமல் எழுதிய வசனங்கள் கவனித்தீர்களா ? “வீரம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்குறது” - ஒரு சோறு
ஜோ Says: after publication. e -->October 31st, 2005 at 7:33 am e
//இருவருக்கும் எவ்வளவு வேற்றுமை என்பதைவிடவும், எந்த ஒற்றுமையும் நான் காணவில்லை. //அவரவர்களுக்கு தனிப்பாணி இருந்தாலும் ,அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ள குரு உதவியிருப்பார் இல்லையா?
பாரதிராஜா சிஷ்யன் தான் மணிவண்ணன் ..என்ன சம்பந்தம்?
S.A.சந்திர சேகரன் (விஜய் அப்பா) சிஷ்யன் ஷங்கர் .என்ன சம்பந்தம்?
இதெல்லாம் விட K.S.ரவிக்குமார் சிஷ்யன் தான் சேரன் என்றால் நம்ப முடிகிறதா?
dharumi Says: after publication. e -->October 31st, 2005 at 10:32 am e
அடிப்படை விஷயங்களை கற்றுக்கொள்ள குரு உதவியிருப்பார் இல்லையா?// நன்றி,ஜோ.நான் என் மாணவர்களிடம் சில சமயம் கூறுவதுண்டு: என்னை ‘மாடலாகக்’ கொள்ளுங்கள் - as negative model, வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று!
dharumi Says: after publication. e -->October 31st, 2005 at 10:32 am e
பெத்தராயுடு,வரணும்..வரணும்.சேதிக்கு நன்றி.உங்கள் பெயர் எந்த படத்தின் தலைப்பு?!

No comments:

Post a Comment