Monday, October 03, 2005

80. DRESS CODE…

பெண்கள் உடை பற்றி சென்னைப் பல்கலைக்கழக ஆணை பற்றிக் கூற இதை எழுதவில்லை. ஏனெனில் அந்த ஆணை பற்றி ஒரே சொல்லில் கருத்துச்சொல்லிவிடலாமே -முட்டாள்தனம் என்று. கொஞ்சம் அதிகமாக விளக்கமாக சொல்லவேண்டுமென்றால் ‘வடிகட்டிய முட்டாள்தனம்’ என்றுதான் நான் கூறுவேன். ஆனால் இந்தப் பிரச்சனையோடு தொடர்புடைய இரு விதயங்களைப் பற்றிச் சொல்ல ஆசை.
1987.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டறை (workshop) ஒன்றில் கலந்து கொள்ள கல்லூரி பேராசிரியர்கள் 20 பேர் அதற்கு முந்திய நாள் மாலையே வந்து சேர்ந்தோம். இரவில் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். திருச்சிக் கல்லூரியில் இருந்து ஒரு நண்பர்- கொஞ்சம் தூரத்து உறவினர்கூட- வந்திருந்தார். அடுத்தடுத்த அறை எங்களுக்கு. தங்கல், சாப்பாடு, பட்டறை எல்லாம் ஒரே இடத்தில். அடுத்த நாள் காலை உணவு முடித்து அப்படியே பட்டறை செல்வதாக ஏற்பாடு. புறப்பட்டு கதவை மூடிக்கொண்டிருக்குபோது அந்த நண்பரும் வந்தார். என் உடையைப் பார்த்து உறைந்து போய் நின்று விட்டார். ‘இப்படியேயா பட்டறைக்கும் வருவீர்கள்?’ என்றார். ஆமாம் என்று நான் சொன்ன சொல்லை அவரால் தாங்க முடியவில்லை. இல்லை மாத்திக்கணும்; இது சரியில்லை என்றார். சரி, முதலில் சாப்பிடப்போவோம்; வேறு யாராவது ஒருவர் சொன்னாலும் வந்து உடை மாற்றிக்கொள்கிறேன் என்றேன். அந்த ஒப்பந்தத்திற்குப் பிறகே உடன் வந்தார். வேறொன்றுமில்லை. நம் தேசிய உடையாக ஆகவேண்டும் என நான் விரும்பும் ஜீன்ஸ், டி ஷர்ட், ஷூ போட்டிருந்தேன்.
சாப்பாட்டறைக்குள் சென்றதும் அவரே பிரச்சனையை எல்லோர் முன்பும் வைத்தார். இருப்பதில் சீனியரான பேராசிரியர் ‘ஏதோ, எனக்கும் ஆசைதான்; ஆனா போட முடியாது. தம்பியாவது போட்டுக்கிடட்டும்’ என்றார். ஆனால், நண்பருக்கு இது மிகவும் அபத்தமாகப் பட்டிருக்க வேண்டும். அதனால், மாலையில் அரட்டைக்கு உட்கார்ந்த போது அதே பிரச்சனையை எழுப்பினார். அதோடு தன் கல்லூரியில் அந்த ஆண்டு வகுப்பிற்கு சூரிதாரில் ஒரு மாணவி வந்தபோது, ஒன்று அந்தப் பெண் சேலை கட்டி வரவேண்டும்; இல்லை நான் வகுப்புக்குப் போகமுடியாது என்று தன் துறைத்தலைவரிடம் சொல்லி, அந்தப் பெண்ணை சேலை கட்ட வரச் செய்த புராணத்தை விலாவாரியாகச் சொல்லி முடித்தார். ‘என் மகளாயிருந்திருந்தால், அவள் அப்படித்தான் வருவாள்; அவள் வகுப்பிற்கு வருவதும், வராது போவதும் உங்கள் இஷ்டம்’ என்று சொல்லியிருப்பேன் என்றேன். என் பக்கமே ஏறக்குறைய எல்லா பேராசிரியர்களும் பேசினார்கள். கடைசியாக, நண்பரிடம் உங்கள் பெண் குழந்தையின் வயதென்ன என்று கேட்டேன் - எனக்குத் தெரியும் என் இரண்டாவது மகளின் வயதே அவர் மகளுக்கும் என்று. 8 என்றார். உங்கள் மகளுக்கு சூரிதார் வாங்கிக்கொடுப்பீர்களா என்றதற்கு, ஊரார் வீட்டுப் பெண்ணே போடக்கூடாது என்பவன் என் மகளுக்கு வாங்கிக்கொடுப்பேனா என்றார்.’இன்னும் எண்ணி 5 ஆண்டுகள் கழித்து பார்ப்போம்’ என்று சொல்லி விவாதத்தை முடித்தோம். அவர் வேலை பார்ப்பது திருச்சி என்றாலும், அவரது குடும்பம் மதுரையில் தான் இருந்தது. சொன்னது மாதிரியே சில ஆண்டுகள் கழித்து அவர்கள் கோவில் விழாவில் பார்த்துக்கொண்டோம். எங்கள் இருவரின் மகள்களும் எங்களோடு நின்றிருந்தார்கள் - சூரிதாரில்.
மாற்றங்களை வெகு காலம் கழித்தே ஏற்றுக்கொள்ளும் மனம் சிலருக்கு. Future Shock நூலை வாசிக்கச் சொல்லவேண்டும் அவர்களை, பாவம்.


அடுத்த நிகழ்ச்சி:2002,ஏப்ரில்:

என் கல்லூரி ஆசிரியர் வேலையின் இறுதி நாள்; இறுதி வகுப்பு; நான் இறுதியாக என் மாணவர்களிடம் வகுப்பறைக்குள் பேசியது: “நாங்கள் மாணவர்களாய் இருந்தபோது தேவைக்கு அதிகமாகவே - emotional - உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருந்தோம்; முணுக்கென்றால் ஸ்ட்ரைக் அது, இதுன்னு ஏதாவது ஒரு கலாட்டா வருஷா வருஷம் இருக்கும். அது தப்புதான். ஆனால்,இந்த semester stystem, internal marks இதல்லாம் வந்த பிறகு மாணவ சமுதாயமே intlellectual and self-centered ஆகப் போய்ட்டீங்க; லாப நஷ்ட கணக்குப் பார்த்துதான் உங்களுக்கும் கல்லூரிக்கும், உங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உறவுகள் உள்ளன. ஒரு இராணி மேரி கல்லூரி பிரச்சனையில்கூட மாணவர்களுக்கு மாணவர்கள் என்ற முறையில்கூட எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் மாநிலம் முழுவதும் ‘அமைதி’ கடைப்பிடித்தீர்கள். காரணம் சுயநலம் மட்டுமே. நரி வலம் போனால் என்ன; இடம் போனால் என்ன; என்மேல் விழுந்து கடிக்காமல் போனால் சரி. உங்களிடம் இந்த நாட்டின் எதிர்காலம் இருக்கப்போவது குறித்து எனக்கு கொஞ்சம் அச்சமே” என்று சொல்லி, (ஆப்பிரிக்க மூலக் கவிதை ஒன்றை தமிழில் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதியது என்று நினைக்கிறேன் - இப்பொருளில் வரும் கவிதை - சென்ற வாரம் என் தெருமுனை வீட்டில் இருந்து ராணுவம் சிலரைத் தூக்கிச் சென்றது; நேற்று பக்கத்து வீடு. ஐயோ, இன்று என்னைத் தூக்கிச்செல்கிறார்கள்; கேட்க யாருமில்லையா? - இக்கவிதையின் கருத்தைச்சொல்லிவிட்டு அந்தக் கடைசி வகுப்பை முடித்தேன்.

இன்று ஊரெல்லாம் மாணவர்களுக்கான உடை ஒழுக்கம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது; ஆனால் மாணவ சமுதாயம் மட்டும் … என்ன செய்கின்றது என்று தெரியவில்லை. ஒருவேளை பேசாமல் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு, assignment prepare செய்து கொண்டு, internals-க்கு தயார் படுத்திக்கொண்டிருக்கிறதோ. போகட்டும், தங்கள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு முன்னேறினால் சரி. வாழ்க மாணவ சமுதாயம்!
Oct 03 2005 02:58 pm நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at www.thamizmanam.com Current rating is:
(இதுவரை 3 பரிந்துரைகள்)Click on the stars for voting pad.
17 Responses
வசந்தன் Says: after publication. e -->October 3rd, 2005 at 3:23 pm e
புதுவீடு நல்லாயிருக்கு.பதிவும் நல்லாயிருக்கு. அத்தோடு அவசியமான பதிவும்கூட.
இங்கேகூட வேட்டி சட்டையை வைத்துச் சிலர் சண்டை போடுகிறார்கள். தாக்குவதற்கு எதுவுமில்லையென்றால் வேட்டி சட்டைகூட சிலருக்கு ஆயுதம் தான்.
tbrjoseph Says: after publication. e -->October 3rd, 2005 at 3:58 pm e
மாணவ சமுதாயத்தை இப்படி கொத்தடிமைகளாய் ஆக்கி வைத்திருப்பது நம்மைப் போன்ற சுயநலம் பிடித்த பெற்றோர்தான்.
அவர்களுக்கு என்ன படிக்க பிடிக்கும்,என்ன உடுத்த பிடிக்கும் என்று என்றாவது நினைத்திருக்கிறோமா?
என் பிள்ளைகளில் ஒன்றாவது மருத்துவராக அல்லது பொறியாளராக - பொறியாளராக வந்தால் மட்டும் போதாது அதிலும் கணினி பொறியாளராக,ஏனென்றால் அதில் தானே எடுத்த உடனே 20000/-, 30000/- என ஊதியம் கிடைக்கும் என்ற நப்பாசை - வரவேண்டும். அதுதான் பெற்றோர்களின் ஆசை.
படிப்பு முடிவதற்குள்ளேயே காம்பஸ் வேலைத் தேர்வில் (இதற்கு சரியான தமிழ் மொழி பெயர்ப்பு என்னங்க?) வேலை கிடைத்துவிடவேண்டும். இல்லையென்றால் அந்த மாணவன் ஒரு LOSER ஆகத்தான் சொந்த வீட்டிலேயே கணிக்கப்படுகிறான்.
காம்பசிலேயே நல்ல கம்பெனிகள் நடத்தும் தேர்விற்கு தகுதி பெறவேண்டுமென்றா 80 விழுக்காடுகளுக்கு மேல் மதிப்பெண் இருக்கவேண்டும்..
அத்தகைய மதிப்பெண்கள் பெறவேண்டுமென்றால் Internal Marks மிக மிக முக்கியம். அதற்கு கல்லூரி ஆசிரியர்களின் தயவு தேவை.
இத்தகைய சூழ்நிலையில் உடை, நடை, பாவனை விஷயத்தில் கல்லூரி நிர்வாகத்தையோ, ஆசிரியர்களையோ எதிர்த்துப் போராடும் நிலையிலா இன்றைய மாணவனிருக்கிறான்?
நிச்சயமாய் இல்லை. அதற்கு அவனை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை.
பெற்றோர்களாகிய நாம் நம்மையே சுய ஆராய்ச்சி செய்து பார்த்தால் போதும். நம்மிடம்தான் மாற்றம் வர வேண்டும்!
sundararajan.s Says: after publication. e -->October 3rd, 2005 at 4:00 pm e
excellent vibration on your thought.very nice. i hope that u would have write more about practical problems in present wright now.thank u bye byesundararajan.sliverpooluk
Geetha ambasivam Says: after publication. e -->October 3rd, 2005 at 4:11 pm e
Dear Sir, the dress code is necessary for the students to some extent. They should dress decently in Jeans and T-shirt also. Actually the jeans symbolises the carelessness of the one. If they get job in the mycro soft or in the IBM they have to observe dress code. Then why not in the college?
dharumi Says: after publication. e -->October 3rd, 2005 at 4:42 pm e
வசந்தன்,வீடு நல்ல இருக்கிறதுக்கு காரண கர்த்தா நானில்லை. பாராட்டெல்லாம் அவர்களுக்கே!
ஜோசஃப்,இளைஞர்களை அப்படி புறந்தள்ளுவது சரியில்லை. முன்னேறுவதில் பெற்றோரின் முனைப்பைக்குறை கூறும் நீங்கள், எப்படி அவர்களுக்குப் போராட்ட குணமே அற்றுப்போயிருப்பதை நியாயப்படுத்த முடியும்?
thanks a lot , sundararajan.
geetha, drop that ’sir’when you write to me next time, right? after all that’s one of the reasons for choosing a pseudonym.you yourself accept that dresscode changes according to our positions in life. what i tried to say in my post, 18 years back a simple decent churidar looked indecent and unacceptable for a gentleman. same thing will happen for jeans and t-shirts. changes are the only definite things in life. let us learn to accept them before they are forced on us.thanks for the mail
Padma Arvind Says: after publication. e -->October 3rd, 2005 at 5:25 pm e
வாங்க தருமி. வீடும் பதிவும் நல்லா இருக்கு. நட்சத்திர வாரத்திற்கு பாராட்டுக்கள்.
மாலன் Says: after publication. e -->October 3rd, 2005 at 5:42 pm e
அன்புள்ள தருமி,உங்கள் அனுபவங்கள் பல உண்மைகளை உணர்த்துகின்றன.
என் அமெரிக்கப் பல்கலை வாழ்க்கையிலும் சில அனுபவங்கள்.அதில் ஒன்று:மற்ற நாளில் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால் Project ஐ present பண்ணும் போது, டீன், பல்கலைக் கழகத் தலைவர் ஆகியோர் வருவதால் அன்று குழுவில் உள்ளவர்கள் சூட் அணிந்து வர வேண்டும்.விதி அல்ல. மரபு. என் குழுவில் வனீஸா என்று ஒரு பெண்ணியவாதி இருந்தாள்.நான் பெண்ணா ஆணா என்பது முக்கியமில்லை, என் தலைக்குள் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம் என்று வாதிடுபவள். அவள் கருத்தை வலியுறுத்தும் விதமாக மார்க் கச்சை அணிவது அவள் வழக்கமில்லை. வனீஸா சூட்டில் வர வேண்டும் மறந்து விடாதே என்று அவளிடம் வகுப்பில் யாரோ சொன்னார்கள். Why should I? என்று பொரிந்தாள். அந்த D-dayயில் நாங்கள் சூட்டில் போனோம். அவள் வழ்க்கம் போல வந்தாள். அதனால் எங்கள் புரொஜெக்ட் உதை வாங்குமோ என்று பயந்தோம். அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. மின் இதழுக்கு நாங்கள் தயாரித்த முன்மாதிரி மற்றவர்களது தயாரிப்புக்களை விட சிறப்பாக இருந்ததாக டீன் பாராட்டிப் பேசினார்.
எனக்கென்னவோ வனீசாவின் கருத்து அன்று வென்றது என்று தோன்றியது.
இந்த dress code மற்றும் குஷ்பு தொடர்பான பிரசினைகள் குறித்து நேற்று இண்டியன் எக்ஸ்பிரசில் நான் எழுதியிருந்தேன். அதன் சுட்டி ஆர்வமுள்ளவர்களுக்காக இங்கே:http://www.newindpress.com/sunday/sundayitems.asp?id=SEG20050929070737&eTitle=Insight&rLink=0
அன்புடன்மாலன்
tbrjoseph Says: after publication. e -->October 3rd, 2005 at 5:50 pm e
மாணவர்களின் நிலையிலிருந்தும் நீங்கள் பார்க்கவேண்டும்.எனக்கு தெரிந்த நண்பரின் மகனுடைய அனுபவத்தை வைத்துத்தான் அப்படி எழுதினேன்.என் நண்பரின் மகன் ஒரு கேளிக்கைப் பேர்வழி!எதையும் ஜாலியாக பார்க்கும் குணம்.
நம்முடைய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவர் கல்லூரியில் உடை அணிவதற்கு ஒரு வரைமுறை (Dress Code) யை அறிவித்த நாளுக்கு மறுநாள் ‘I wear what I like’ என்ற வாசகம் எழுதப்பட்ட டி சர்ட் ஒன்றை அணிந்து கல்லூரிக்குச் சென்றான்.
அன்று கல்லூரி நிர்வாக அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த மாணவன் அன்று நாள் முழுவதும் வகுப்புக்கூட செல்ல அனுமதிக்காமல் அவனுடைய பெற்றோரை தொலைப்பேசி மூலம் அழைத்து இருவரும் தங்கள் மகன் இனி இப்படி செய்ய மாட்டான் என்று கைப்பட எழுதிக்கொடுத்தப் பிறகுதான் அவனை கல்லூரியில் தொடர அனுமதித்தார்கள்.
இதை விட கொடுமை என்னவென்றால் அவனுடைய பெற்றோர் இருவருமே கல்லூரி நிர்வாக ஊழியரின் முன் அவனை கை நீட்டி அடித்ததுதான்.எதற்கென்று நினைக்கிறீர்கள்? மகன் தங்களுடைய மானத்தை வாங்கிவிட்டானாம்.
அவனுடைய அடுத்த நான்காண்டு கல்லூரி வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள்.
நீங்களும் நானும் படித்த காலத்தில் நமக்கிருந்த கருத்துச் சுதந்திரம் கூட இன்றைய மாணவர்களுக்கு பெற்றோரே தருவதில்லை. இதில் கல்லூரி நிர்வாகிகளை என்ன சொல்ல?
இதில் மாணவர்கள் எந்த தைரியத்தில் போராடுவார்கள்!
போராடியதன் விளைவாக கல்லுரியிலிருந்து வெளியேற்றப்பட்டால் அவர்களுக்காக போராட யாரிருக்கிறார்கள்?
Voice on Wings Says: after publication. e -->October 3rd, 2005 at 7:50 pm e
//ஆப்பிரிக்க மூலக் கவிதை ஒன்றை தமிழில் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதியது என்று நினைக்கிறேன் - இப்பொருளில் வரும் கவிதை - சென்ற வாரம் என் தெருமுனை வீட்டில் இருந்து ராணுவம் சிலரைத் தூக்கிச் சென்றது; நேற்று பக்கத்து வீடு. ஐயோ, இன்று என்னைத் தூக்கிச்செல்கிறார்கள்; கேட்க யாருமில்லையா?//
நீங்கள் குறிப்பிடும் கவிதையின் ஆங்கில மூலம் இதுதானென்று நினைக்கிறேன். ஜெர்மனியின் நாட்ஸிகளைப் (Nazis) பற்றியது.
dharumi Says: after publication. e -->October 3rd, 2005 at 9:24 pm e
Voice on Wings,மிக்க நன்றி. அக்கவிதையை எல்லோரும் தெரிந்து கொள்ள இங்கே இடுகிறேன்.
First They Came for the JewsFirst they came for the Jewsand I did not speak outbecause I was not a Jew.Then they came for the Communistsand I did not speak outbecause I was not a Communist.Then they came for the trade unionistsand I did not speak outbecause I was not a trade unionist.Then they came for meand there was no one leftto speak out for me.
Pastor Martin Niemöller
dharumi Says: after publication. e -->October 3rd, 2005 at 9:38 pm e
பத்மா, மிக்க நன்றி. உங்கள் அறிவியல் துறையில் சில சந்தேகங்களோடு வர நினைத்துள்ளேன்.
மாலன், உங்கள் எழுத்தை IE-ல் வாசித்தேன். முழுமையாக உடன்படுகிறேன்.“வனீஸா சூட்டில் வர வேண்டும் மறந்து விடாதே என்று அவளிடம் வகுப்பில் யாரோ சொன்னார்கள்” - இப்படி வனீஸாவிடம் யாரும் சொல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை அவர் சூட்டில் வந்திருக்கக்கூடும்!!ஏனெனில் நான் அதேமாதிரி நடந்து கொண்டதுண்டு!!
ஜோச்ஃப், “நமக்கிருந்த கருத்துச் சுதந்திரம் கூட இன்றைய மாணவர்களுக்கு பெற்றோரே தருவதில்லை” மன்னிக்கவும், இதை நான் மறுக்கிறேன். என் படிப்பு முழுவதுமே என் எதிர்ப்பையும் மீறி என் தந்தையால் முடிவு செய்யப்பட்டது. இந்த generation-யை அப்படி கட்டுப்படுத்துவதுமில்லை, கட்டுப்படுத்தவும் முடியாது என்றே நான் நினைக்கிறேன்.
முகமூடி Says: after publication. e -->October 3rd, 2005 at 11:06 pm e
// இந்த generation-யை அப்படி கட்டுப்படுத்துவதுமில்லை, கட்டுப்படுத்தவும் முடியாது என்றே நான் நினைக்கிறேன். //
நீங்க எந்த ஜெனரேஷன பத்தி சொல்றீங்கன்னு தெரியல.. இப்ப ஐஞ்சாப்பு படிக்கிற ஜெனரேஷனையா… எனக்கு என்னன்னவோ நெனப்பு ஓடுது மனசுகுள்ள… வார்த்தியா ஒரு பதிவுல வடிக்க முடியுதான்னு பாக்குறேன்.
முகமூடி Says: after publication. e -->October 3rd, 2005 at 11:11 pm e
வார்த்தைகள என்று இருந்திருக்க வேண்டும் வார்த்தியா என்று வந்து விட்டது…
அப்புறம் இது சம்பந்தமா நான் ரொம்ப நாள் முந்தி எழுதியது. சில யோசனைகள் இருப்பதால் உபயோகப்படலாமேன்னு…
அண்ணா பல்கலை மன்னராட்சி
Thangamani Says: after publication. e -->October 4th, 2005 at 3:48 am e
அஞ்சி அஞ்சிச் சாவார் அவர் ஆஞ்சாத பொருளில்லை அவனியிலே!
-அச்சத்தைப் போல ஆளுவோர்க்கு உறுதுணையாவது ஒன்றுமில்லை என்ற சாணக்கிய நீதியை அரசுகள் தொடக்கம், கல்லூரிகள், பள்ளிகள் வரை நடைமுறை படுத்திவிட்டோம், நமது சுதந்திரநாட்டில்.
dharumi Says: after publication. e -->October 7th, 2005 at 11:05 pm e
தங்கமணி, நன்றாகச் சொன்னீர்கள். இந்த ‘தார்மீகக் கோபம்’ இளைஞர்களிடம் இல்லாமல் போய்வருவது என்னைக் கஷ்டப்படுத்துகிறது.
anon Says: after publication. e -->October 7th, 2005 at 11:46 pm e
idhe anna univ yil oru naal ella manavargalum vetti anindhu vandhargal. oru manavar panjakacham anindhu vandhar. motha vaguppum college sutri oru round procession pola ponargal (oru jollykaaga.)
dharumi Says: after publication. e -->October 8th, 2005 at 12:16 am e
அண்ணா பல்கலை மாணவர்கள் இது போல் ‘ஜாலி’யாக ஒரு நாள் செய்து விட்டார்கள். ‘சீரியஸாக’ எப்போது, எப்படி, என்ன செய்யப் போகிறார்கள்? அல்லது எல்லாமே ஒரு ஜாலிதானா…?

No comments:

Post a Comment