Thursday, October 06, 2005

84. ச்சே! வாழ்க்கையே ஒரு …?

நம்ம கணக்குப்படி இரண்டு மாடி; அமெரிக்காகாரர்கள் கணக்கில் மூன்று மாடி - நாங்கள் நான்கு பேர் அந்த வீட்டில்தான் தங்கியிருந்தோம். நாலுபேர்ல, மேல் மாடியில் இரண்டு பெண்கள், நானும், சீன நண்பர் ஷாவோவும் இரண்டாவது மாடியில். தனித்தனி அறைகள்;ஆனால் எனக்கும் ஷாவோவுக்கும் ஒரே சமையலறை. மனுஷன் சும்மா சொல்லக்கூடாது. விதவிதமா சமைப்பார். நான் ‘தென்னிந்திய ஆண்களுக்கு சமைக்கவே தெரியாது’ என்ற கெட்ட பெயரை தமிழ்த் தகப்பன் குலத்திற்கு வாங்கிக் கொடுத்துவிட்டேன். 100 நாட்கள் அமெரிக்க வாசம். முதல் தடவை அயல்நாட்டுப் பயணம் என்பது மட்டுமல்ல, வீட்டினரை விட்டு இவ்வளவு நாட்கள் தனித்திருப்பதும் இதுவே முதல் தடவை. சென்னையில் அப்போது இருந்த இரு மகள்களுக்கும் தினமும் ஒரு மெயிலாவது அனுப்பிவிட வேண்டுமெனவும், அவர்கள் மதுரையில் உள்ள அம்மாவுக்கு தினமும் சேதி சொல்லிவிடுவது என்றும், நான் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை தொலைபேசியில் பேசிவிடுவதென்றும் ஏற்பாடு.
முதல் முறையாக broad band - ஆச்சரியமா இருந்தது. dial up-ல் க்ளிக் செய்துவிட்டு முக்குக் கடையில போய் ஒரு டீ குடிச்சிட்டு வந்துவிடலாமான்னு மூட் வர்ர அளவுக்கு இருந்தது போய், password அடிச்சி முடிச்சதும் கனக்ஷன் கிடச்சா எப்படி இருக்கும். அதனால், தினமும் அங்க நடக்கிறதையெல்லாம் நான் மெயில்களாக அனுப்பிக் கொண்டிருந்தேன். என்ன, பெருசா ‘Discovery of America’ன்னு புத்தகமா எழுதிடப்போறோம்? ஒரு ஆசை. அவ்வளவுதான். இப்போ ஒரு folder-ல் போட்டுட்டு, C.D.-ல் இறக்கி வச்சாச்சு, அப்படி ஒரு literary master piece தூங்குது! அப்போ அனுப்பிச்சது பூராவும் இங்லீபீஸுலதான்; ஏன்னா அப்ப தமிழ் தெரியாது - அதாவது, கம்ப்யூட்டர்ல தமிழ் எழுதத்தெரியாது. ஒண்ணிரண்டு rediffmail-ல் அனுப்புறதுக்குள்ள தாவு தீர்ந்திரும்.
இப்போ, அந்த என்னுடைய magnum opus-ல இருந்து ஒரு பக்கத்த உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். வர்ரீங்களா…?


DAY 41 19.03.’02 MONDAY

நாப்பது நாள் முடிஞ்சிருச்சி; இதுவரை எப்படியோ ஓட்டியாச்சி; இன்னும் 60 நாள்தான் இருக்கு. ஆனா எனக்கு என்ன ஆச்சின்னே தெரியலை. இதோ நான் மட்டும் தனியா உக்காந்திருக்கேன் - கண்ணீரோடு. இவ்வளவுக்கும் நாள் நல்லாவே ஆரம்பிச்சுது. காலையில 10.20-க்குதான் எழுந்திருச்சேன். காலையில வேலை இல்லாதப்போ இப்படி லேட்டா எழுந்திருச்சி, நல்ல ஒரு தொட்டிக் குளியல் போட்டுட்டு, ஏதாவது brunch தயார் பண்ணிட்டு,சாப்டிட்டு lab போனா எப்ப வேணாலும் மெல்ல வந்து ராத்திரிக்குன்னு கொஞ்சம் முழுங்கிட்டு நாள ஓட்டிடலாம். இப்படி ரெண்டு தடவையோடு முடிச்சிக்கிறது நல்லா இருக்கு; பிடிச்சிருக்கு. அது மாதிரிதான் இன்னைக்கு - நல்லா நிம்மதியான தூக்கம்; நல்ல ஒரு குளியல். ஆனா இப்ப என்ன ஆச்சுன்னு தெரியலையே…
நல்லவேளை. ஷாவோ ஊரில் இல்லை. சிக்காகோ போய்ட்டார். நான் மட்டும் தனியே. வழியும் கண்ணீரைத் துடைக்கக்கூட திராணியில்லை. போட்டு இருக்கும் T-ஷர்ட் கூட நனஞ்சு போச்சு. நானும் என்னென்னவோ நினச்சுப் பார்ர்கிறேன். இன்னும் just அறுபது நாட்கள்தான்; இன்னையிலிருந்து அறுபது நாள் கழிச்சி, இன்னேரம் பறந்துகிட்டு இருப்பேன் - இப்படியெல்லம் நினச்சும் மனசு என்னவோ நிலையில் இல்லை; விழிநீரும் நிற்கவில்லை.
நீங்களும் இப்படித்தானே கஷ்டப்படுவீர்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். அதை நினைக்கும்போது கண்கள் மேலும் குளமாகிறது. எனக்கு இன்று என்னதான் ஆச்சு? ஏன் இப்படி இருக்கிறேன் - என்று என்னை நானே ஒரு கேள்வி கேட்டுக்கொள்கிறேன். கேள்விக்குப் பல பதில்கள். அதில் இரண்டு மட்டும் : 1.matter of reality; 2. a piece of philosophy
1.matter of reality: இன்னும் எண்ணி அறுபது நாட்கள் தானே. ஓடிவிடும் ஒரு வீச்சில்… நாற்பது நாள் ஓடிவிடவில்லையா..அது போலத்தான் அடுத்த அறுபது நாட்களும்
2. a piece of philosophy: எனக்கு மட்டுமா இந்தப் பிரச்சனை. உங்களுக்கும் கூட சாம்பார் செய்ய வெங்காயம் உரிக்கும்போதெல்லாம் கண் எரிஞ்சி, இப்படித்தானே கண்ல இருந்து தண்ணியா ஊத்தும்! இல்லியா!!
Oct 06 2005 03:28 pm சொந்தக்கதை.. and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 4 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
9 Responses
kid Says: after publication. e -->October 6th, 2005 at 5:15 pm e
hi dharumi appanu
first shocked dharumi ALUVATHAA??
a piece of philosophy was really good ha! ha!
வசந்தன் Says: after publication. e -->October 6th, 2005 at 7:15 pm e
ம். சின்னப்பிள்ளையில நானிருந்த மாதிரிக்கிடக்கு.அந்த அழுகை உண்மையானதா? அழுகை பற்றின வர்ணனை ‘அந்த மாதிரி’.
dharumi Says: after publication. e -->October 6th, 2005 at 8:21 pm e
மகளே, எல்லோருக்கும் போல உனக்கும் நன்றி சொல்லணும் அல்லவா? நன்றி.வசந்தன், நன்றி. அப்போ சின்ன பிள்ளையில ரொம்ப கள்ள அழுகை அழுதிருக்கீங்க..
Balaji-paari Says: after publication. e -->October 7th, 2005 at 3:06 am e
Atappaavi manusha…naan kooda Dharumiyaa azhuvathaannu ninaichchen..:)
துளசி கோபால் Says: after publication. e -->October 7th, 2005 at 3:50 am e
எப்படியோ பொம்பிளைங்க கஷ்டம் புரிஞ்சாச் சரி.
Ramya Nageswaran Says: after publication. e -->October 7th, 2005 at 4:33 am e
(வெளியாட்கள் புரிந்து கொள்ளக் கூடிய) காரணம் இல்லாம நாங்க அழுதா PMS, Post partum blues இப்படி என்னேன்னமோ சொல்றாங்க. உங்களுக்கு அந்த கவலையேல்லாம் இல்லைப்பா! பிஸாசபி சொல்லிட்டு போயிடலாம்!
வசந்தன் Says: after publication. e -->October 7th, 2005 at 5:49 am e
//வசந்தன், நன்றி. அப்போ சின்ன பிள்ளையில ரொம்ப கள்ள அழுகை அழுதிருக்கீங்க.. //
அட! இதென்ன இப்பிடிக் கேட்டிட்டியள்? எந்தக் குழந்தைதான் அதைச் செய்யேல?அப்பிடி அழாட்டி அது சின்னக்குழந்தையில்ல.ஆனா மனசு குழந்தையா இருக்கெண்டு காட்டிக்கொள்ளிறதுக்காக இப்படிச் செய்யிறது சுத்த மோசம்;-)அதுசரி, மேற்கண்ட மடலைப் பார்த்த உங்கள் பிள்ளைகள் என்ன நினைத்தார்கள்?அதையும் சொல்லுங்களேன், சுவாரசியமாயிருக்கும்.
ஷ்ரேயா Says: after publication. e -->October 7th, 2005 at 11:36 am e
//(வெளியாட்கள் புரிந்து கொள்ளக் கூடிய) காரணம் இல்லாம நாங்க அழுதா PMS, Post partum blues இப்படி என்னேன்னமோ சொல்றாங்க. உங்களுக்கு அந்த கவலையேல்லாம் இல்லைப்பா! பிஸாசபி சொல்லிட்டு போயிடலாம்!:) //
அப்பிடிப்போடுங்க ரம்யா!
தருமி - இப்பவும் அழுகிறீங்களா?
dharumi Says: after publication. e -->October 7th, 2005 at 10:47 pm e
அது என்ன, வெங்காயம், சாம்பார், சமையல் அப்டின்னவுடன் வரிசையா - என் மகள், துளசி, ரம்யா, ஷ்ரேயா - வந்திட்டீங்க. (என் மகள்கள் என்னய அப்பா’ணு-அப்பா கண்ணு என்பதின் short version-என்றுதான் கூப்பிடுவார்கள்)
வசந்தன்,அப்போ ஆங்கிலத்தில் வாசித்த பிறகு - என் சின்ன மகள் தொடர்ந்து வாசித்து விட்டாள். ரசித்தாள் - அப்படிதான் பதில் மெயில் அனுப்பியிருந்தாள்.மூத்தவள் experience ரொம்ப interesting ஆக எனக்கு இருந்தது. அப்போது அவளது மூத்த மகன் கைப்பிள்ளை. இவள் காலையில் முதல் பாரா வாசித்ததும் மீதி வாசிப்பதற்குள் மகனைக் கவனிக்க வேண்டியதாகப் போக, பிறகு மாலைதான் மெயில் பார்க்க முடிந்திருக்கிறது. ஆகவே, பிள்ளை பாவம், அதுவரை அப்பா பாவம்னு நினச்சுக்கிட்டே கவலையோடு இருந்திருக்கா..சாயந்திரம்தான் நிம்மதியாச்சாம்.இப்ப எழுதும்போது கொஞ்சம், matter of reality,a piece of philosophy அப்டின்னு மாத்தியிருக்கேன்.

No comments:

Post a Comment