Saturday, October 22, 2005

95. என் மனக் காய்ச்சல்…

நமக்கோ சுயக் கட்டுப்பாடு என்பது கிஞ்சித்தேனும் கிடையாது; ஆனாலும் நாம் எல்லோருமே பெரிய படிப்பாளிகள்; சிலர் படைப்பாளிகள்கூட. ஆயினும் என்ன? என் வாழ்நாளில் நான் சந்தித்த இருபது இருபத்தோரு வயதுக்கும் குறைவான என் மாணவர்களைவிடவும் மோசமாக நடந்து கொள்ளும் பதிவாளர்களைக் காணும்போது, அதுவும் இவர்களின் கையில் நாளை என் நாடு என்னும்போது பயம்தான் வருகிறது.
என் மாணவர்களிடம் நான் சொல்லும் ஒரு வழக்கமான விதயம்: உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறேன். நீங்களும் உங்கள் எல்லை தெரிந்து அதை முற்றாகவும், நன்றாகவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் - என்று சொல்வதுண்டு. அவர்கள் புத்திசாலிகள். ஒரு சில நேரங்களில் தவிர அவர்கள் அவர்கள் எல்லைக்குள் இருந்து நான் எந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு கொடுத்ததில்லை. அவர்களுக்கும் என்னை நன்கு தெரியும். எல்லைக் கோட்டைத் தாண்டினால் அது எனக்கும் அவர்களுக்குமே நன்றாக இருக்காது என்று.
இது சுய புராணமில்லை. நடந்தது.
முதலில், காசி முன்னறிவிப்புகள் இன்னும் கொடுத்து, தனி மடல்களிட்டு, பிறகு நீக்க நினைக்கும் பதிவுகளை நீக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றுதான் எனக்கும் தோன்றியது. ஆனால், அதற்கு நாம் தகுதியில்லாதவர்களென்று நமக்கு நாமே நிரூபித்துள்ளோம். நேற்றுவரை நல்லவன், வல்லவன் என்றெல்லாம் நாம்தானே புகழ்ந்தோம்; இன்று நாமே வரைமுறையில்லாமல் பேசுகிறோமே என்றாவது நமது அறிவுஜீவிகள் கொஞ்சம் யோசிக்க மாட்டார்களா? ‘என்னைத் தூக்கி வெளியே போட்டுட்டியா; போகுது போ; நீ நல்லா இரு; நானும் வாழ்ந்து காண்பிக்கிறேன்’ என்றால் அல்லவா உங்கள் தகுதிகளுக்குப் பொருந்தும். புனைப்பெயர்களுக்குள்ளும், அனானிமஸ்களாகவும் உலா வருவதால் வரும் தைரியமா?
சரி, காசி தவறே செய்து விட்டார்; தட்டிக் கேட்கணும்னா, அதுக்கு எந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது என்ற விவஸ்தைகூட இல்லாமல் எவ்வளவு அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ‘நாங்கள் இவ்வளவுதான்’ என்று நிரூபிப்பது எவ்வளவு சரி?
சிலர் கடுமையான வார்த்தைகள் என்றால், சிலர் அங்கதம் என்றொரு பாணியாமே, அதில் விளையாடுகிறார்கள்; நேரமா அதற்கு இப்போது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா திறமை?
‘உங்களில் குற்றமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும்’ என்று பைபிளில் ஓரிடத்தில் வரும். கல் எறியுங்கள்; அதற்கு முன் உங்களையே கண்ணாடிகளில் பார்த்துக் கொள்ளுங்கள்…
இந்தத் தடங்கல்களையும், இரு புற மனக் காயங்களையும் தாண்டி நாமும், நம் தமிழ்மணமும் தொடர்ந்து வளர்வோம் என்று நம்புகிறேன்; விழைகிறேன்.
we have miles to go………
Oct 22 2005 04:05 pm அவியல்... edit this
Rate this post at www.thamizmanam.com Current rating is:
(இதுவரை 6 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
23 Responses
ஜோ Says: after publication. e -->October 22nd, 2005 at 4:40 pm e
100 % சரியா சொல்லிருக்கீங்க
inomeno Says: after publication. e -->October 22nd, 2005 at 8:45 pm e
/ஆனால், அதற்கு நாம் தகுதியில்லாதவர்களென்று நமக்கு நாமே நிரூபித்துள்ளோம். /
தங்களின் இக் கருத்து எமாற்றமளிக்கிறது தருமி.கீழ் கண்டவர் என் மனதின் எண்ணத்தை பிரதிபளிக்கிறார்.இவரைப் போன்றவர்களின் நியாயமான ஆதங்களையும் தாங்கள் கொஞ்சம் கண்டுக் கொண்டு இருந்திருக்களாம்.பொத்தம் பொதுவாக ‘நாம் தகுதியில்லாதவர்களென்று நமக்கு நாமே நிரூபித்துள்ளோம்’ என்று சொல்லியது எமாற்றமளிக்கிறது.
Jayashree Govindararan/ஆனால் தமிழ்மணத்தை மேம்படுத்த உதவியவர்கள், தொழில்நுட்ப விஷயங்களை சகபதிவாளர்களுக்கு தேவைப்பட்டபோதெல்லாம் அவர்களுக்குள்ளாகவே முன்வந்து வழங்கியவர்கள், நட்சத்திரப் பதிவாளர்களாக இருந்தும், தங்கள் பின்னூட்டங்களாலும் பிற பதிவாளர்களையும் உற்சாகப்படுத்தியவர்கள் என்ற வகையில் பெரும்பாலான பதிவர்களின் பங்கும் இதில் இருக்கிறது என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.
இந்த நிலையில், 4வது காரணமாக சொல்லப்பட்டிருக்கும்- திடீரென உங்களுக்கு விருப்பமில்லாத பதிவுகளை எந்த முன்னறிவிப்பும் யாருக்கும் கொடுக்காமல் நீக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. முழுக்க முழுக்க தமிழ்ப் பதிவாளர்கள் அனைவரும் தமிழ்மணத்தையே நம்பியிருக்கும் வேளையில் திடீரென ஒருநாள் காலையில் ஒவ்வொருவராக திரட்டியில் தன்பதிவு இல்லையென்று புலம்ப வைப்பது… நான் பாஸ், நீ ஃபெயில் என்று மாற்றி மாற்றி உங்கள் பச்சைவிளக்கைப் பார்க்க ஓடவைப்பது.. நாம் எந்த நாகரிக யுகத்தில் இருக்கிறோம் என்று யோசிக்கவைக்கிறது.
இத்தனைபேரை நீக்கலாம் என்று நீங்கள் எடுத்தமுடிவு ஒரே நிமிடத்தில் (நேற்றிரவு 12 மணிக்குத்) தோன்றியதாகவோ, அடுத்த நிமிடமே உடனடியாக அமல்படுத்த வேண்டியதான நெருப்புப் பற்றி எரிகிற அவசரமோ நிச்சயம் இருந்திருக்காது; என்ற நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு முன்கூட்டிய அறிவிப்பை மட்டுமாவது கொடுத்து அவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடுக்கான(வேறு திரட்டிக்கு மாறிக்கொள்ள) நேரத்தை வழங்கியிருக்கலாம். அல்லது ஒரு குறைந்தபட்ச கெடுவைத்து தனிப்பட்ட முறையில் தெரிவித்து நீங்கள் நீக்காமல் அவர்களாகவே நாகரிகமாக தங்களை தமிழ்மணத்திலிருந்து விடுவித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தையாவது வழங்கியிருக்கலாம். நிச்சயம் இதைப் பலர் தாங்களாகவே செய்திருப்பார்கள். Gஒல்டென் Hஅன்ட்ஷகெ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு கொடுக்கவேண்டியது பெரிய தொகை என்பதுபோல இங்கும் அதைவிட மதிப்புமிக்க அவர்களது தன்மானம் பலருக்கு இதன்மூலம் வழங்கப்பட்டிருக்கும்.
இங்கு இருக்கும்(மன்னிக்கவும், இருந்த) உறுப்பினர்கள் யாரும் கருத்தளவில்/ நடையளவில் உங்களுக்கு(நமக்கு) ஒப்புதல் இல்லாதவர்கள் என்பதால் உங்கள் ஒப்புதல் பெற்ற யாரைவிடவும் ச்க வலைப்பதிவாளர்களாக அவர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை.
உங்கள் இந்த முடிவால், வலைப்பதிவு உலகத்துக்கு வேறு வேறு புதிய திரட்டிகள் கிடைக்கலாம்; இன்னும் வேகத்துடன் தொழில்நுட்பங்கள் கிடைக்கலாம். வலைப்பதிவு அதன் அடுத்தக் கட்டத்துக்கே முன்னேறலாம். …லாம் …லாம் …லாம். மிக மிக நல்ல விஷயம். ஆனால் அந்த முடிவைநோக்கிய ஆரம்பம் இன்னும் கொஞ்சம் வலிக்காமல் இருந்திருக்கலாம் என்பது என் (காலணா திவச தம்படிக்குப் பிரயோசனமில்லாத) கருத்து! வருந்துகிறேன்!!! /
inomeno Says: after publication. e -->October 22nd, 2005 at 8:51 pm e
/நாமும், நம் தமிழ்மணமும் /நிஜ உலகுக்கு வருங்கள் தருமி .அந்த வார்த்தை எப்பொழுதோ அதன் அர்த்தம் இழந்துவிட்டது.
சின்னவன் Says: after publication. e -->October 22nd, 2005 at 8:55 pm e
:-)
P.V.Sri Rangan Says: after publication. e -->October 22nd, 2005 at 10:53 pm e
தருமி,என்னதாம் இருப்பினும் வலைப்பதிவுகளைத் தூக்குவது ஏற்கமுடியாது.நீண்டகாலமாகப் பதியாத,மற்றும் இணைப்புகளற்ற பதிவுகளை அகற்றலாம்.ஆனால் குசும்பனின்,அடுத்து ‘என்னமோ போங்க’போன்றவர்களின் பதிவுகளை அகற்றியிருக்கக்கூடாது.என்னவோபோங்க’என் பதிவைக் காசி தூக்கிட்டாரு’என்று எழுதும்போது மனது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது!.என்னே நம்ம அவசரம்!எந்தக் கருத்து முன்வைக்கப்பட்டாலும் அதைப் புரிந்து கொள்வதும்-சம்பந்தப்பட்டவரின் மன நிலைக்கு நாமும் மாறி அந்தச் செயற்பாடை விளங்க முற்படணும்.அதன் பின்பு மூன்றாம் நபரின் நிலையில் நின்று நாம் செய்யப்போகும் காரியத்தை நோக்கி,அதன்பின் செயற்படுத்துவதில் எண்ணத்தைச் செலுத்தும்போது,ஆற்றவேண்டிய செயல் கடுகளவு பிரச்சனையாகவும்,அது தேவையற்ற செயலாகவும் படும்.காசி இந்தத் தளத்தில் சிந்திக்கவேயில்லை.எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது பொறுப்பான அதிகாரிக்கு உரிய செயலில்லை.
dharumi Says: after publication. e -->October 22nd, 2005 at 11:19 pm e
inomeno, sri rangan,“முதலில் எனக்கும் காசி முன்னறிவிப்புகள் இன்னும் கொடுத்து, தனி மடல்களிட்டு, பிறகு நீக்க நினைக்கும் பதிவுகளை நீக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது” - காசி செய்தது சரியென்பதல்ல என் வாதம் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
என்னைப் பொறுத்தவரை சிலரின் எழுத்துக்களும், வார்த்தைப் பிரயோகங்களும் மிகவும் கீழ்த்தரம். நாவினால் சுட்ட வடு ஆறாதே..
நமக்கு நேர் எதிரே நிற்கும் ஆளைப்பார்த்து, அதுவும் நம்மைவிட சிறிது உடல் வலிமையோடு நிற்கும் ஒருவனைப் பார்த்து நாம் நேரில் சொல்லத் தயங்கும் வார்த்தைகளை, அனானிமஸ் என்ற போர்வையிலோ, வேறு ஏதோ ஒரு funny பெயரிலோ சொல்லும் ஒரு பதிவரைப் பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது. யார், என்ன வார்த்தைகள் என்று விளக்கம் வேண்டுமா என்ன? அதற்குத்தான் தங்கள் முகங்களைக் கண்ணாடியில் பார்க்கச் சொன்னேன். சொல்லப்பட்ட சில வார்த்தைகளை என் முன்னால் நின்று என்னப் பார்த்து யாரும் சொல்லியிருந்தால் ( at least 15/20 ஆண்டுகளுக்கு முன் என்று கொள்க!)நிச்சயமாக வெறுமனே கேட்டுக்கொண்டு இருந்திருக்க மாட்டேன்.
இந்த நாகரீகமற்ற செயலே என்னை வெறுப்படையச் செய்கிறது.
dharumi Says: after publication. e -->October 22nd, 2005 at 11:31 pm e
நன்றி ஜோ.சின்னவன்,புறக்கணிப்புக்கு உள்ளான எல்லா பதிவாளர்களுக்காகவும், உங்களை ரசித்தவன் என்ற முறையில் அதிகமாகவே உங்களுக்காகவும் வருந்துகிறேன். சீர்படும், சீர் படுத்தமுடியும் என்ற -இனோமினோவுக்கு இல்லாத - நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நம்பிக்கைதானே வாழ்க்கை. திருத்தப்பட வேண்டியவைகள் திருத்தப்படும் என்ற நம்பிக்கை இன்னும்.
சின்னவன் Says: after publication. e -->October 22nd, 2005 at 11:52 pm e
தருமிஇதில் வருந்த அதிகம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது காசி என்ற தனி மனிதரின் personal blogroll , இதில் யாரை வேண்டுமானாலும் அவர் வைத்துக் கொள்ளலாம். இதில் கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது. ஆனால் இந்த காரணத்துக்கா நீக்கினேன் என்று சொல்லி இருந்தால் அவர் மீது நான் வைத்து இருந்த மரியாதை கொஞ்சம் கூடி இருக்கும்.
வயதில் நான் கொஞ்சம் சின்னவன். உலக அனுபவம் அதிகம் போதாது. நீங்கள் என் எழுத்தை ரசித்தீர்கள் என்பதை அறிவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
dharumi Says: after publication. e -->October 23rd, 2005 at 12:14 am e
சின்னவன்,காசி மேல் எனக்கு உள்ள வருத்தம் ( I am sad and I am unhappy -என்ற இரு பொருளிலுமேதான்) இவ்வளவு செய்த மனுஷன் சிறிது சறுக்கி, பலரின் கேள்விகளுக்கு - சில தரமான கேள்விகள்; பல தரம் குறைந்த கேள்விகள்; - ஆளாகி விட்டாரே என்பதுதான்.
ஜோ Says: after publication. e -->October 23rd, 2005 at 12:15 am e
இங்கு சின்னவன் நடந்து கொண்டது போல எல்லோரும் நாகரீகமாக நடந்து கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
இராமநாதன் Says: after publication. e -->October 23rd, 2005 at 12:42 am e
தருமி,சின்னவன் சொன்னது போல் இது காசி என்ற தனி மனிதரின் blogroll. கேள்வி கேட்க உரிமையில்லை. ஆனால் சுட்டிக்காட்டலாம் அல்லவா?
தவச தானியம் என்று எப்போது சொன்னாரோ அன்றைக்கு அவர் மேல் நான் வைத்திருந்த மரியாதை மிகவும் குறைந்து விட்டது என்று வருத்தத்துடன் சொல்கிறேன். இலவச சேவை பயன்படுத்துபவர்களின் மனம் புண்படும் வகையில் தேவையில்லாமல் பிரச்சனையை குழப்பி விட்டுவிட்டார். இதனை அவரின் பதிவிலே கூட எழுதியுள்ளேன். இந்த இந்த பதிவுகளின் போக்கில் எனக்கு உடன்பாடில்லை, அதனால் நீக்குகிறேன் என்று சொல்லிருந்தாரே ஆனால், அவரின் மதிப்பு பன்மடங்கு கூடியிருக்கும்.
மொத்தத்தில் வருந்தத்தக்க விஷயம்.
நேச குமார் Says: after publication. e -->October 23rd, 2005 at 2:36 pm e
அன்பின் தருமி,
உங்களது குழந்தைப் பருவம்/தாயார் பற்றிய பதிவைப் படித்து முடிக்கும் போது கண்கள் கலங்கிவிட்டன, இப்போது இதை எழுதும் போதும் தான். நல்ல பதிவு.
அப்பதிவை திரும்பவும் தேடிப்பார்த்தால் கிட்டவில்லை. ஆதலால் இந்த பின்னூட்டம் இங்கு. மன்னிக்கவும்.
இந்தியன் Says: after publication. e -->October 23rd, 2005 at 3:09 pm e
//‘உங்களில் குற்றமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும்’ என்று பைபிளில் ஓரிடத்தில் வரும்.//ஓஹோ! உமக்குத்தான் மதம் பிடிக்கவில்லை என்று பீலா விட்டீரே! பின் எதற்கு பைபிளிலிருந்து மேற்கோள்?? சரிதான். இப்பொழுது புரிகிறது. நாத்திகம் என்ற போர்வையில் பிற மதங்களின் மேல் கல்லெறிவதை நீர் மட்டும் செய்யலாமோ?
dharumi Says: after publication. e -->October 23rd, 2005 at 3:22 pm e
இந்தியனே (இப்படி அழைக்க நேர்ந்த அவலத்திற்கு வருத்தம்),உங்களைப் போன்ற மனிதர்களின் பிதற்றல்களுக்கு அளவேயில்லையா? உங்களின் ‘அறிவார்ந்த கேள்விகள்’ உங்களை எவ்வளவு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன என்று உங்களுக்கு புரிவதில்லையெனவே நினக்கிறேன்!
இந்தியன் Says: after publication. e -->October 23rd, 2005 at 11:27 pm e
திரு தருமி ஐயா, உம்மை முன்னாள் கிறிஸ்தவர் என்று எண்ண நேர்ந்த அவலத்தை என்னவென்பது? நல்ல வேளை எம் கிறிஸ்தவம் உம் போன்ற போலியாளர்களின் இருப்பை விட்டுத் தப்பிவிட்டது.. நானும் தூய மரியன்னையில் படித்தவன்.அது கிறிஸ்துவின் தேட்டத்தை அதிகப்படுத்தியதேயன்றி உம்போல் அவநம்பிக்கை கொள்ளவைக்கவில்லை. அதனால் தான் விவிலியத்தை மேற்கோள் காட்ட உமக்கு அருகதையில்லை என்ற பொருளில் தான் என் மேற்கண்ட பின்னூட்டம். பதிவுக்குப் பொருத்தமில்லாப் பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
வசந்தன் Says: after publication. e -->October 24th, 2005 at 5:57 am e
தருமி,நீங்கள் அலட்டிக் கொள்ளாதீங்கோ.எல்லாம் “தேளும் நெறியும்”தான்.மதத் தீவிரவாதிகளின் தாக்குதல்களே சொல்கிறது நீங்கள் எழுதிய பதிவின் தார்ப்பரியத்தை.
வசந்தன் Says: after publication. e -->October 24th, 2005 at 5:58 am e
“தேட்டத்தை” என்றால் சொத்தையா?
dharumi Says: after publication. e -->October 24th, 2005 at 9:56 pm e
இராமனாதன், சேச குமார், வசந்தன் - நன்றி.
வசந்தன் அந்த கேள்வி என்னிடமா? இல்லை அந்த மனிதன்…இல்லை… இல்லை…(இப்போது) இந்தியனிடமா?
மனிதன் –> இந்தியன் –> இந்த பரிணாம வளர்ச்சியில் அடுத்த நண்பர், தமிழன் என்ற பெயரில் வந்தாக வேண்டும்.பார்க்கலாம் வருகிறாரா என்று..
dharumi Says: after publication. e -->October 24th, 2005 at 10:52 pm e
அது நேச குமார், சேச குமார் இல்லை..மன்னிக்கணும்- புதுப்பெயர் வச்சதுக்கு!
விளாங்குடி-காரன் Says: after publication. e -->October 25th, 2005 at 5:52 am e
தலைப்பு: “எனக்கு ஏன் ப்லொக் பிடிக்கவில்லை” அல்லது “நான் ஏன் ப்லொக் மாறினேன்”
இப்படிதான் முதல்ல எல்லோரும் எல்லோரிடமும் அன்ப இருப்பாங்க; பிறகு குட்டி குட்டி குழுவா பிறிச்சிகிட்டு சண்டபோடுவாங்க. எது எங்கிட்டு ஆரம்பிச்சிச்சுனு யாருக்கும் தெரியாது! ஒரு oneman-up-ship போட்டி நடக்கும்! “என் பேச்சு திறனால உன்ன மடக்கிட்டேன் பாத்தியா?” அப்படின்னு.
மனுஷ புத்தி அப்படி. மூனு பேர் இருந்தா அங்க ரெண்டு குழு ஏற்படுதிடுவோம்! கேவலம் ஒரு ப்லொகுக்கெ இப்படி தெருசண்டைனா, ஆண்டாண்டு காலமா வரும் மதங்களுக்குள்ள எம்புட்டு இருக்கும்!
சரி, மதம்னா நாம அறிவு கெட்டு போய் சண்ட போடுவோம்னு அந்த தாடிகாரரு ரெண்டு அடில நெறய எழுதி வச்சாரு. நாமலும் அதுக்கும் “உலக பொதுமறை” அப்படின்னு பேர் குடுத்து பெரும பட்டுகுரோம். ஆனா “இனிய உலவாக இன்னாத கூரல் கனியிருப்ப காய் கவர்ந்தட்று” (எழுத்துப்பிழை? ) சுத்த்த்தமா பின்பற்ற மாட்டோம்!
சரி விடு! நான் சொல்லிதான் எல்லாரும் மாறப்போராங்கலா?HakuunaMataata!
ஒளவை
ஜோ Says: after publication. e -->October 25th, 2005 at 6:45 am e
//அதனால் தான் விவிலியத்தை மேற்கோள் காட்ட உமக்கு அருகதையில்லை//இந்தியன்,பைபிள்-ல இருந்து மேற்கோள் காட்ட கிறிஸ்தவனா இருக்க வேண்டுமென்று அவசியம் இல்லை .பைபிள் ஒன்றும் உம்ம சொத்து இல்ல .அது உலக மக்களுக்கெல்லாம் பொதுவானதுண்ணு நீர் நம்பல்லியன்னா நீர் கிறிஸ்துவரா?.விட்டா இயேசு நாதரே உங்களுக்கு மட்டும் தான் சொந்தம்-ன்னு சொல்லுவீர் போல .அவரை ஈசா நபி-ன்னு சொல்லுற முஸ்லிம் கிட்ட நீர் என்ன ஓய் சொல்லுவீர்?
வசந்தன் Says: after publication. e -->October 25th, 2005 at 8:08 am e
//கிறிஸ்துவின் தேட்டத்தை அதிகப்படுத்தியதேயன்றி//
இதன் சரியான கருத்து எனக்குப் புரியவில்லை. தேட்டமென்பது சொத்து என்ற கருத்தில்தானே வரும்?
கடவுளையோ விவிலியத்தையோ அவனவன் தன்தன் தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தும்போது நாமும் எம்தேவைக்குப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம்தான். பயன்படுத்தாவிட்டால் கண்டுபிடிப்புக்கே அர்த்தமில்லாமற்போய்விடும்;-)
dharumi Says: after publication. e -->October 25th, 2005 at 2:43 pm e
வசந்தன்,
அந்த நண்பர் ‘கிறிஸ்துவினைப் பற்றிய தேடலை’என்ற பொருளில் எழுதியிருக்கிறாரென்று நினைக்கிறேன்.
அவ்வை,
அப்டி இப்டின்னு கடைசியில என் தலையில் கை வச்சிட்டியா…?!! - உன் மெயிலின் தலைப்பையும், இந்தப் பின்னூட்டத்திகேன்றே வைத்துக்கொண்டுள்ள புனைப் பெயரையும் சொல்றேன்!! நல்லாதான் இருக்கு..

No comments:

Post a Comment