நான் நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவனுக்கு கெட்டவன். (நான் எப்பவுமே கெட்டவன்தான்.)
எனக்கு என் மனசாட்சிதான் முக்கியம். (நான் என் இஷ்டப்படிதான் ந்டப்பேன்.)
நான் நினைச்சா சாதிச்சிடுவேன். (ஆனா நினைக்கவே மாட்டேன்.)
பொய் சொல்றது மட்டும் எனக்குப் பிடிக்காது. (இந்த பொய்யைத் தவிர.)
செய்யும் தொழிலே தெய்வம். ( இது எனக்கல்ல; எனக்கு கீழே உள்ளவன் எல்லாம் அதே தொழிலையே - அது எவ்வளவு மோசமான அல்லது இழிவான தொழிலாக இருந்தாலும் - செய்து வர வேண்டும். அவன் முன்னேறி விடக்கூடாது என்பதற்காக என் புத்திசாலி முன்னோர்கள் சொன்னது.)
2 comments:
///செய்யும் தொழிலே தெய்வம். ( இது எனக்கல்ல; எனக்கு கீழே உள்ளவன் எல்லாம் அதே தொழிலையே - அது எவ்வளவு மோசமான அல்லது இழிவான தொழிலாக இருந்தாலும் - செய்து வர வேண்டும். அவன் முன்னேறி விடக்கூடாது என்பதற்காக என் புத்திசாலி முன்னோர்கள் சொன்னது.)///
நான் வேறு ஒரு கண்ணோட்டம் சொல்கிறேன். எந்த ஒரு தொழில் செய்பவருக்கும் ஒரு சலிப்பு (மற்ற தொழிலைப் பார்த்து) வரும். அப்போது அவன் தொழிலை விட்டுவிட்டு சிரமப்படக்கூடாது என்றும், தொழில் மீது ஒரு ஈடுபாடு இருந்தால்தான் தொழிலில் வளர முடியும் என்பதாலும், கடைசியாக எந்தத் தொழிலும் கேவலமில்லை (உடனே நீ வா, வந்து என் தொழிலைச் செய்து பார்- என்பன போன்ற விமர்சனங்கள் வரும் என்பது தெரிந்தே சொல்கிறேன்) என்பதாலும் என்பதே.
//எந்தத் தொழிலும் கேவலமில்லை ...என்பதாலும்...//
நிஜமாகத்தான் எல்லா தொழிலுமே உயர்வானவை ..செய்யும் தொழிலே தெய்வம் என்றுதான் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? அப்படி நீங்கள் உண்மையிலேலையே நினைப்பவராயின் நான் பேச ஒன்றுமில்லை.
தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை என்று சொல்வது, நாம் எந்த தொழிலில், எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து என்றே நினைக்கிறேன்.
//அவன் தொழிலை விட்டுவிட்டு சிரமப்படக்கூடாது .. //
லாஜிக் சரியாகப் பொருந்தவில்லை. அதாவது அக்கரைப் பச்சை என்று நினைத்து அக்கரைக்குப் போக நினைக்கக்கூடாது; கையிலிருப்பதை விட்டுட்டு ஆகாயத்தில் பறப்பதைப் பிடிக்க முயலக்கூடாதென்கிறீர்கள். அப்படித்தானே? ஆசைப்படாதே; அது உனக்கு நல்லதல்ல என்கிறீர்கள்; இல்லையா?
//உடனே நீ வா, வந்து என் தொழிலைச் செய்து பார்- என்பன போன்ற விமர்சனங்கள் வரும் // நீங்களே சரியாகச் சொல்லி விட்டீர்கள். அந்தமாதிரி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்? யார்தான் தானிருக்கும் நிலைக்குக் கீழ்நிலைக்குச் செல்ல தயாராக இருப்பார்கள்?
Post a Comment