Showing posts with label இந்து மதம் எங்கே போகிறது?. Show all posts
Showing posts with label இந்து மதம் எங்கே போகிறது?. Show all posts

Friday, April 04, 2014

740. இந்து மதம் எங்கே போகிறது? --- 9





*

நம் நாட்டுக்கு சுயராஜ்யம் கொடுக்கலாம் என்று யோசித்த போது தஞ்சாவூர் ஜில்லா ஆடுதுறைப்பக்கமுள்ள ஒரு சின்ன கிராமத்தில் ... ஒரு ரகஸ்ய கூட்டம். அதற்குத் தலைமை தாங்கியவர் மகாப் பெரியவர்.(335)

ஹிந்து தர்ம்த்தை, சனாதன தர்மத்தை, வர்ணாஸ்ரம மநு தர்மத்தை காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கூட்டம்.

பெண்களுக்கு 8 வயதிற்குள் கல்யாணம் பண்ண வேண்டும். இல்லையென்றால் அவளுடைய ‘பஹிஷ்டையில்’ வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும் என்ற அருவெறுக்கத்தக்க கட்டளையை மநு போட்டிருப்பதை ஏற்கெனவே பார்த்தோம். (336) 

1929-ல் பிரிட்டிஷ்காரர்கள்  குழந்தைகளுக்கு கல்யாணம் கட்டி வைக்கக் கூடாது. அப்படி செய்து வைத்தால் தண்டனை தான். ஜெயில் தண்டனை தான்.

ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியில் மநு வர்ணாஸ்ரம தர்மங்களை சற்று தலை தட்டி வைப்பது போன்ற சட்டங்கள் போடப்பட்டிருந்தன. அப்போது parliamentary delegation ஒன்று பிரிட்டிஷ் நாட்டிலிருந்து இங்கு வந்திருந்தது.

ஏற்கெனவே பால்ய விவாஹத்துக்கு தடை பண்ணிட்டாஇன்னும் என்னவெல்லாம் நம்ம சம்ப்ரதாயத்து மேல் அட்டாக் பண்ணப் போறாளோ. அதனால் இப்ப வந்திருக்கிற அந்த டெல்கேஷன் கிட்டே சனாதன வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு நாம சொல்லியாகணும். என்ன சொல்றேள்என மகாபெரியவர் கேட்க,
சிஷ்யாளோ, ‘ஸ்வாமி, இப்படியெல்லாம் அவாளை கேட்கறது எங்களுக்கு என்னமோ உசிதமா படல. அவர் செய்த செய்யட்டும். சில விஷயங்களை மாத்தறது நல்லது தானேஎன்றனர்.

வெளியே உட்கார்ந்திருந்த என்னிடம் வந்த சங்கராச்சாரியார்தாத்தாச்சார் .. நீரும் நானும் தான் மிச்சம்என்றார்அந்த பிரிட்டிஷ் டெலிகேஷனுக்கு மெமோரண்டம் கொடுக்கப் போறோம். அதுக்காக உம்மைத்தான் செலக்ட் பண்ணியிருக்கேன் என்றார். (338) அந்த ராத்திரி 11 மணிப்பொழுதில் நூறு தந்திகளை தேசத்தின் பல இடங்களிலிருந்து கொடுக்க ஏற்பாடு செய்தோம்.(339)

பாரத தேசத்தின் மதாச்சார கர்மானுஷங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். புது அரசியல் மூலம் எங்கள் மத ஸ்வதந்த்ரம் பாதிக்கப்படக் கூடாதுஎன்பது தான் தந்தி வாசகம்.
தந்தியடித்த பிறகு மகா பெரியவர், ‘நாம அவாளை நேர்ல பார்த்து நம்ம மத சம்ப்ரதாயத்தைப் பத்தி பிரஸ்தாபிக்க சனாதன மதத்துக்கு ஸ்வதந்த்ரம் கேக்கணும். அதை நீர் தான் பண்ண்ணும்என்றார்.

டெலிகேஷன் சென்னை இந்து ஆபிசுக்கு வந்தது. நான் பார்க்க சென்றேன்.’இவர் மதாச்சாரியர்களின் பிரதிநிதிஎன்று அறிமுகப்படுத்தப்பட்டேன். டெலிகேஷனில் இருந்த சோரன்சன் என்ற பாதீயாரும் நானும் பரஸ்பர வணக்கத்தை பரிமாறிக் கொண்டோம். 100 தந்திகளை ஞாபகப்படுத்தினேன்அன்று இரவு சோரன்சன்னை சந்தித்தேன். (340)
Give me a memorandum and meet me in Delhi என்றார் சோரன்சன். மகாப்பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னேன். சில அட்வகேட்கள், சம்ப்ரதாயஸ்தர்கள் ஆகியோரை வைத்துக் கொண்டு வர்ணாஸ்ரம தர்மத்துக்கு முழு சுதந்திரம் வேண்டும்என்று ஒரு மெமோரண்டம் தயாரித்தோம். டெலிகேஷன் அஸ்ஸாம் சென்றிருப்பதாக அறிந்து, மெமோரண்டத்தின் ஒரு காப்பியை அஸ்ஸாமிற்கு அனுப்பி வைத்தோம்.

பிறகு டெல்லி போனேன். அங்கே வக்கீல் சிவராவின் வீட்டில், காங்கிரஸ் தலைவர்களான அச்சுத பட்டவர்தன், ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் டெலிகேஷனைச் சந்திக்கக் காத்திருந்தார்கள். அவர்களுக்குப் பின் டெலிகேஷனைச் சந்தித்தேன்.
‘வர்ணாஸ்ரம கதாச்சாரத்தைப் பின்பற்ற ஜீவாதார உரிமை வேண்டும்’ என்ற மெமோரண்டத்தை  கொடுத்தோம். வாங்கிக் கொண்டு போனார்கள்.
இதன்பின் பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Cabinet delegation  வந்தது. அவர்களோ, ‘உங்கள் அரசியல் சாதனத்தை உங்கள் தலைவர்கள் தான் உருவாக்கப் போகிறார்கள். அதனால் உங்கள் தேசத் தலைவர்களையே பாருங்கள்’ , என்று சொல்லி விட்டார்கள். 
தேஸத் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலை பார்க்கச் சென்றோம். (341)

பட்டேல், ‘மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள். வெளியுலகத்தில் மக்களோடு உறவே இல்லை. முக்கியமாக ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும் மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை. முதலில் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்குப் பணி செய்ய மதாச்சாரியார்களை வரச் சொல்லுங்கள்’ என்று கண்டிப்பாக என்னிடம் கூறினார் பட்டேல்.
இதை மகா பெரியவரிடம் கூறினேன். இது முழுவதும் உண்மைதான் என்றார்.

அடுத்து பண்டிட் நேருஜியைப் பார்த்தேன். அதற்கு முன் பல ஆச்சாரியார்களிடம் ஆலோசனை பண்ணி அவரைப் பார்க்க போனேன். (342)

மெமோரண்டத்தின் சாரத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்த்துமே கேட்டு விட்டு, உடனே நிமிர்ந்தவர் என்னைப் பார்த்து, ‘If you want to talk about religion you go outside from this nation. We don’t allow specialty to any religion. Here all are equal …. Don’t talk about religion … understand?’ என்றார் ரோஜாவின் ராஜாநான் அதிர்ந்து விட்டேன்.

இவ்வளவு நடந்தும் சங்கராச்சாரியார்கள் அலட்டிக் கொள்ளவில்லை. மதத்துக்குத் தான் தனியுரிமை கிடைக்கவில்லை. மடங்களுக்காவது தனியுரிமை கிடைக்குமா என்று பார்ப்போம் என்று சொல்லி களத்தில் இறங்கினார். அதன்படி அகில பாரதிய மடங்கள் மாநாட்டை டெல்லியில் கூட்டச் சொன்னார். சங்கராச்சாரியாவிடம் அபார பக்தி கொண்ட  குளித்தலை அண்ணாதுரை அய்யங்கார் முன் வந்தார். (343)

சைவ, வைணவ மடங்கள் பலவற்றை நாடு முழுவதும் போய் பார்த்தோம். யாரும் எங்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால் கூட்டத்திற்கு கராச்சி சிந்துநகர மடாதிபதியைத் தவிர. அம்மாநாட்டில் Freedom of relation and maintaining religious institutions … வேண்டும் என்று ஒரு தீர்மானம் போட்டோம். இதன் பிறகும் மடங்களுக்கான தனியுரிமை குறித்து, Parliament Bill  ஒன்று கொண்டு வர முயற்சித்தோம். அந்த பில்லை யாரும் கண்டு கொள்ளவில்லை.

இந்தியா பிளவு பட்டுப் பிரிந்தது.

நமது மதாச்சாரப்படி தர்மம் எல்லோருக்கும் ஒன்றுதான். அரசனும் தர்மத்துக்குக் கட்டுப்பட வேண்டும். ஏன் பகவானே கூட தர்மத்துக்கு, தர்ம நெறிகளுக்கு எதிராக நடந்தால் பகவானையே தண்டிக்கவும் நமது மதக் கலாச்சாரம் கற்றுத் தருகிறது. இதனைத் தான் ‘தர்மவிதிக்கரமம்’ என்கிறோம். (346)

இதனை இரு பகவான் கதைகளைச் சொல்லி விளக்குகிறேன்.

முதல் கதை பாகவதத்தை பரிட்சித்து ராஜாவுக்காகச் சொல்லும் போது நடந்தது. கிருஷ்ணன் கோபியரோடு ஆடிக்கொண்டிருக்கிறான். அப்போது ஒரு கோபியை கிருஷ்ணன் தூக்கிக் கொண்டு போய் லீலை கொண்டாடுகிறான் என சுகப்பிரம்மன் சொல்கிறார்.  இதை கேட்ட பரிட்சித்து ’புருஷன் இருக்கும் போது ஒரு பத்தினியுடன் ஆடிப்பாடி அவனை கவர்ந்து கடத்திச் செல்வது .. அந்தப் புருஷனுக்கு பாவம் இழைப்பாகாதா? நியாயமா இது? என்று கேட்கிறார். (347)

இதற்கு சுகப்பிரம்மம் ‘பகவானாகிய கிருஷ்ணரே செய்தாலும் அது தப்பு தான். அவனுக்கு இதற்கான தண்டனை உண்டு’ என்கிறார்.

இன்னொரு புராணக் கதை:

பஞ்சாப் மாநிலத்தில் ஓரிடம். ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். இருவருக்குள்ளும் கடவுளைப் பற்றிய விஷயத்தில் வித்தியாசம். பிருந்தா விஷ்ணு பக்தை. ஜலந்தரோ சிவ பக்தன். நடுவில் நாரதர் விளையாடுகிறார்.
நாரதர் ஜலந்தரிடம், ‘உன் சிவ பக்தியால் நீ சிவனின் மனைவி பார்வதி தேவியையே அடையலாமே .. ஏன் இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய்’ என்று கொளுத்திப் போடுகிறார். (349)

நாரதர் யோசனையும் கொடுக்கிறார். சிவனுக்கு சாம்வேதம் என்றால் உயிர். அதைக் கேட்டு சிவன் மயங்கி இருக்கும் வேளையில் கைலாயத்துக்குச் சென்று காரியத்தை முடித்து விடு’ என்கிறான்.  இந்த யோசனையின் படி ஜலந்தர் கைலாயம் சென்று பார்வதியைக் கட்டிப் பிடிக்கிறாம். ‘ஸ்வாமி...’ என்று கொந்தளித்து பார்வது கத்துகிறாள்.

ஆனால் இதே நேரத்தில் பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். நமது பக்தைக்கு நாம் ஏன் இன்பம் தரக்கூடாது என்று ஜலந்தர் உருவில் அவளிடம் செல்கிறார். பிருந்தாவும் தன் கணவன் என நினைத்து இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் தருணத்தில் இருவருக்கும் நடுவே ஒரு தலை ரத்தம் வடிய வந்து விழுந்தது.  அது ஜ்லந்தரின் தலை. (350)

சிவன் வெட்டியெறிந்த தலை அது. பிருந்தா தடுமாறுகிறாள். அப்போது விஷ்ணு தன் ரூபத்தைக் காண்பிக்கிறார். பொங்கியெழுகிறாள் பிருந்தா. ‘என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்து விட்டாய்; பகவானாக இருந்தாலும் தவறு தான். உனக்குச் சாபமிடுகிறேன். கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக’ என சபிக்கிறாள். இந்த சாபத்தால் தான் பகவான் சாலக்ராமம் என்ற சிலையாகி விட்டார் என்கிறது புராணம்.

கடவுளே தவறு செய்தாலும் தண்டனை உண்டு என்பது தான் இக்கதை சொல்லும் நீதி.
இப்போது நம் தேசத்தில் சட்ட பூர்வமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆகம ரீதியாக இன்னும் அது உயிர் வாழ்ந்து வருகிறது. ப்ராமணியத்தின் படி பிராமணன் தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது. அதனால் All are equal  என்ற தர்மம் தான்  இப்போது நம் மதத்தைக் காப்பாற்ற ஒரே வழி.(351)

விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் பேசிய பின் சென்னை வந்த போது அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன்.

இளைஞர்களே! இதை நினைவில் கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்திய ஆன்மீக சிந்தனைகளால் உலகத்தை நாம் வெல்ல வேண்டும்.
ஆன்மீகச் சிந்தனைகள் என்று நான் கூறியதுஉயிருணர்வு அளிக்கக்கூடிய கோட்பாடுகளையே தவிர, நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிற மூட நம்பிக்கைகளை அல்ல. கண்ட கண்ட மூட நம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த மூட நம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாஸ்திகர்கள் ஆகி விடுங்கள். இது உங்களுக்கு நல்லது. உங்கள் இனத்துக்கும் நல்லது.



..... முற்றும் 




Monday, March 31, 2014

738. இந்து மதம் எங்கே போகிறது? --- 8






***



***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

******



இவ்வளவு விஷயங்களை பார்த்த நாம் எங்கேயாவது ஒரு இடத்திலாவது ‘ஹிந்து’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறோமா?

இந்தக் கேள்வி வரும்போது தான் இந்தப் பதம் எப்படி வந்தது என்று சொல்ல வேண்டியதுள்ளது.

மனித இனங்களை ஐந்தாகப் பிரிக்கிறார்கள்:

Semetic ... யூதர்கள், அரேபியர்கள்

Hemetic .... இவர்கள் இன்று இல்லை என்கிறார்கள்

Negroes ... ஆப்ரிக்கா மக்கள்

Mangolis ... சீனா தேசத்தவர்

Aryans ... ஐரோப்பியர்கள், இந்திய பிராமணர்கள்(317)

உலகின் மிக இருட்டான பழைய காலத்தை புரட்டிப் பார்த்தால் அங்கே இரண்டு கலாச்சார வெளிச்சம் கண்ணைப் பறிக்கிறது. ஒன்று பபிலோனியா; மற்றொன்று எகிப்து. (318)

பபிலோனியர்களிடம் Totemism worship விலங்கு உருக்களை வழிபடும் வழக்கம் இருந்தது. (319)

கடவுளிடம் அறிவைக் கேட்டார்கள் பபிலோனியர்கள்.(321) மத குருவிற்கு ‘சேங்கு’ என்று பெயர். தலைவர் என்று அர்த்தம். இவரை விட உயர்ந்தவர் ‘சேங்கு ரேபு’.இவருக்கு மேல் ’சேக்கு டேனு’. - Mighty priest. கடைசியாக supreme priest – ‘சேங்கு மேஹூ’.

மன்னர்கள், பாமரர்கள், அடிமைகள் அனைவரும் ஒன்றாக கூட்டு வழிபாடு நடத்துவர். ஒரே ஒரு தகுதி – வரி கட்ட வேண்டும், இல்லாவிடில் கோயில் காரியங்களை சிலவற்றைச் செய்ய வேண்டும். உடல் உழைப்பை அர்ப்பணிக்க வேண்டும். பெண்களும் கலந்து கொள்வார்கள். மதகுருமார்கள் பக்தி, ஆன்மீகம், வழிபாடு இவற்றில் மட்டுமல்ல; பல்வேறு நிர்வாகப் பணிகளையும் செய்து வந்திருக்கிறார்கள்.

இந்த நாடு மீது பக்கத்து நாட்டு மன்னனுக்கு ஒரு கண்.

2600 ஆண்டுகளுக்கு முன் ...பபிலோனிய நாட்டுக்குப் பக்கத்து நாடான பாரசீக நாட்டின் மன்னன் Cambysis I என்பவனின் மகன் . இந்த அரசு மிடீய நாட்டு அரசனான Astyages என்பவரின் கீழ் அடிமைகளாக - vassals - இருந்தனர். (323) அப்போது பாரசீக நாட்டிற்கு அன்சன் என்று பெயர். Cambysis-ன் மகன் சைரஸ் தன் தந்தையை விட பழங்குடி மக்களிடம் அதிகமாகத் தன் கட்டுக்குள் கொண்டு வந்தான். அவர்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள். மிடீயன் அரசனும் இவனைக் கட்டுப்படுத்த தன் படையை ஏவினான். ஆனால் மிடீயனின் படையை சைரஸ் வென்று விரட்டினான். தனது vassal என்ற நிலையை மாற்றி சுதந்திர மன்னனாகினான்.

இதில் ஒரு ரகசியம் என்கிறார் வரலாற்றாசிரியர் ஹெரடாடஸ். மன்னன் Cambysis மிடீய நாட்டு மன்னன் மகளைத் திருமணம் செய்து தன் அந்தப்புரத்தில் வைத்திருந்தான். ஆனால் மிடீய நாட்டு மன்ன்னின் இன்னொரு மகளை மகனான சைரஸ் திருமணம் செய்து கொண்டான். இதனால் சைரஸ் தன் நாட்டோடு சேர்த்து மிடீய நாட்டையும் இணைத்து ஆண்டு கொண்டான்,

பபிலோனிய நாட்டின் மீது கண் வைத்த சைரஸ் அதை வெற்றி கொள்ள அதிக ராணுவம் வேண்டியதிருந்தது. (325) கொஞ்ச தூரம் தள்ளிச் செல். அங்கே சிந்து தேசம் உள்ளது. அவனிடம் உதவி கேள் என்று சைரஸிற்கு அறிவுரை வந்தது.

வரலாற்றாசிரியர் Arrian தன் குறிப்பில் சைரஸ் சிந்து பகுதிக்கு வந்திருக்கிறான். ஆனால் அதை அவன் படையெடுத்து வென்றதாக கல்வெட்டுகளோ, ஆதாரங்களோ இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

சிந்து தேசம் என்றால் இன்றைய சிந்து நதியில் கரைப்பகுதியை உள்ளடக்கிய பிரம்மாண்ட தேசம். இன்றைய திபெத்தில் உள்ள மானசரோவரில் பிறந்து, ஓடி ஓடி பாகிஸ்தானின் கராச்சியில் கடலில் போய் கலக்கிறது.

சிந்து நதி அரசன் கொடுத்த யானைப் படை, குதிரைப்படை மூலம் சைரஸ் பாபிலோனியாவை வென்றான்.(326) இந்த சைரஸ், சிந்து தேச ராஜா நட்பின் மூலம் சிற்சில வார்த்தைகளாவது பரிமாறப்பட்டிருக்காதா?

உலக பிலாலஜி அதாவது மொழியியல் வல்லுனர்களின் முடிவுப்படி சமஸ்கிருதப் பாஷைக்கும், பாரசீக பாஷைக்கும் இடையிலான சில ஒற்றுமை வேற்றுமைகள் உள்ளன. அதாவது இங்கே ‘ஸ’ என்பதை அவர்கள் ‘ஹ’ என உச்சரித்தார்கள். அதாவது சரஸ்வதியை ஹரக்வதி என்றார்கள். நாம் ‘அசுர்ஹா’ என்று சொவதைப் போல் அவர்கள் ‘அஹூரமஸ்தா’ என்ற கடவுளை வணங்கினார்கள்.

இந்த வகையில் தான் அவர்கள் சிந்து தேசம் என்பதை ஹிந்து தேசம் என தப்பாக உச்சரித்தார்கள்.(327)

வேதங்களில் ஆயிரம் இடங்களில் சிந்து என்ற வார்த்தை தான் உள்ளதே தவிர ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை; கிடையவே கிடையாது.

ஆபஸ்தம்ப சூத்திரம்: 
நதேவாஹா நகந்தர்வாஹா 
நபிததீ ஆஜக்‌ஷதே 
அயந்தர்மோ ஆயந்தமேதீ 
யந்தா ஆர்ய க்ருமாணம் சம்சந்தி நதமஹா’

மக்கள் செய்ய வேண்டிய இந்த மந்த்ர கர்மாக்களுக்கு தேஸாச்சாரம் என்று பெயர். இந்த ஆச்சாரத்தை ஆர்ய மதம் என்று அழைக்க வேண்டும் என்கிறார் ஆபஸ்தம்பர். (328)

அதாவது சிந்து நதிக்கரை மக்களின் பழக்கத்துக்கு சிந்து மதம் என்று கூட அவர் பெயர் வைக்கவில்லை. ஆர்ய மதம் என்றுதான் பெயர் வைத்தார்.

ஆனால் சிந்து நதியிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வாழும் நம்மூர் பையனின் பள்ளி சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே ... ஏன்?

சிந்து தேசம் என்று பாரசீகக்காரன் சொன்னானே தவிர, அந்த தேசத்தை வேதக்காரன் ’பாரதம்’ என்று தான் அழைத்தான். ரிக் வேதத்தில் விஸ்வாமித்ரர் என்ற பிரபலமான முனிவர் பெயர் அடங்கிய மந்தரம் எழுந்து வருகிறது.

’விஸ்வாமித்ரஸ்ய ரக்‌ஷதீ 
ப்ரம்மே இதம் 
பாரதஞ்ஜனம்’

விஸ்வாமித்ரர் சொல்கிறார்: என்னுடைய ஞான தேஜஸினால் நான் கற்ற சாஸ்திரங்களின் பலனால், நான் உபதேஸிக்கும் மந்த்ரங்கள் இந்த பாரத தேசத்தின் ஜனங்களையெல்லாம் வாழவைக்கும்; பாதுகாக்கும். (329)

இன்னொரு உதாரணம்.
ப்ராமணர்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. சங்கல்பம் – அதாவது ஒவ்வொரு கர்மாக்கள் செய்யும் போதும் இதை இந்த கர்மாவை சிறப்பாக சிரத்தையுடன் பூர்த்தி செய்வேன் என்ற சபதம் எடுத்துக் கொள்ளும் மந்த்ரம் தானிது.

’விஷ்ணோ ... ஆக்ஞாய
........ 
........
பாரத வர்ஷே பரத கண்டே ... சகாப்ஹே ..’

 பாரத வர்ஷே என்றால் ‘பாரத தேசத்தில் வாழும்’ என்று அர்த்தம். பாரத கண்டே என்றால் ‘பரதன் ஆண்ட தேசம்’ என்று அர்த்தம்.

விஷ்ணு புராணம், பாகவதம் போன்ற பழம்பெரும் பக்தி இலக்கியங்களில் ‘பாரத தேசம்’ என்று தான் சொல்லியிருக்கிறார்கள். (331)

பிரிட்டிஷ் டாக்குமெண்ட்களில் நம்மை அவன் முதன் முதல் ‘Zindoo’ என்று குறிப்பிட்டான். நான் அந்த பிரிட்டிஷ் டாக்குமெண்டை பார்த்திருக்கிறேன்; படித்திருக்கிறேன். (332)

காலப் போக்கில் ‘Zindoo’ என்பதை Hindu என்று உச்சரித்தான். நமது மதத்தின் பெயரான ’ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். (333)

வேத மதம், ஆரிய மதம். பிராமண மதம் இங்கே வந்தது. அதை எதிர்த்து புத்த மதம் உண்டானது. மத்வைதம் பிறந்தது. த்வைதம் கிளைத்தது. விசிஷ்டாத்வைதம் வளர்ந்தது. சைவம், வைஷ்ணவம் பெரிதாகப் பேசப்பட்டது. சமணம் தோன்றியது. வைணவத்தில் கூட தென்கலை, வடகலை என கோர்ட் வரை கூட பிளவு படியேறியது.(334)

நம் தேசத்தின் அகண்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே சிறு தெய்வ வழிபாடுகள் எக்கச்சக்கம். காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன், அய்யனார், முனியப்பன், கருப்பசாமி, தூண்டிக்காரன் சாமி .... என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இவ்வளவு வழிபாடுகளையும் பார்த்து திக்குமுக்காடிய வெள்ளைக்காரன் எல்லாவற்றிற்கும் மொத்தமாக சேர்த்து, இந்த தேசத்தில் வாழ்பவர்களையெல்லாம் மொத்தமாக ‘ஹிந்து’ என்று அழைத்தான்.

**********







*

Tuesday, March 25, 2014

735. இந்து மதம் எங்கே போகிறது? --- 7







***



***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

**********


*



 தெய்வம் யார்?

வேதம் கர்மாக்களை வகுத்தது. அடுத்து வந்த உபநிஷத்துக்காரர்கள் கர்மாக்களை தியாகம் செய்து விடுங்கள்; அது தான் மோட்சம் என்றன.

வேத, உபநிஷத்துக்காரர்களின் கடவுளைப் பற்றிய சிந்தனைகள் வேறு வேறாய் இருக்க, இதன் அடிப்படையில் ஆறு தத்துவக்காரர்கள் தங்கள் கருத்துகளை முன் வைத்தார்கள். (296)

அந்த ஆறு பேர்: கனாதர், அக்ஷபாதர், வ்யாஸர், கபிலர், பதஞ்சலி, ஜெய்மினி

கனாதர் உபதேசித்தது – வைஷேஷிகம்.  அக்ஷபாதர் – நியாயம். நியாம் என்றால் தர்க்கம் பண்ணுவது; தர்க்கிகம் என்று பெயர் இதற்கு. கபிலர் – சாங்க்யம் செய்தார்.கடவுளைப் பற்றிக் கேள்வி கேட்பது தான் சாங்க்யம். (297) பதஞ்சலி – யோகம் என்ற தத்துவம் சொன்னார்.

வ்யாஸரைப் பற்றியும், ஜெய்மினி பற்றியும் சிறிது விளக்கம்.

முனிவர்கள் தவம் செய்யும் போது காம்ய ஆசையை மறுத்து ஆசையை அடக்க வேண்டும். ஆனால் தவத்திற்கு இடையூறு வந்தால் முனிவர்கள் அப்பெண்களை நெருங்கி தங்களது காம ஆசையைத் தீர்த்துக் கொள்வார்கள். ஸ்தீரிகளும் மறுக்க முடியாத நிலையில் இருந்தனர்.

கங்கைக் கரையில் புராசரர் என்ற முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருக்கும்போது ஒர் பெண்ணைப் பார்த்துக் காமுறுகிறார். யாரென்று கேட்கிறார். அவள் மச்சகந்தி என்ற சத்தியவதி; ஒரு செம்படவப் பெண்.(298)

ஆற்றைக் கடக்க முனிவர் அவளிடம் உதவி கேட்கிறார். கடக்கும் போது ஆசையைக் கடக்க முடியவில்லை; நெருக்கமாக அணைக்கிறார். ‘இது பஹவத் முகூர்த்தம். என்னோடு சம்மதித்து இணைந்துவிடு. ஒரு மாமுனிவனை எனக்குப் பெற்றுக் கொடு. யாருக்கும் இது தெரியப்போவதில்லை. நீ கன்னியாகவே இருப்பாய்’ என்கிறார்.

அவளது மேனியில் மீன் வாசம் போய் ஆண் வாசம் வந்தது.

’ரிஷி கர்ப்பம் ராத்தங்காது என்பார்கள். அதாவது ரிஷிகள் தங்கள் காமத்தை ஒரு அவஸ்யத்துக்காக, தங்கள் ஞானத்தின் இன்னொரு பலனுக்காக அனுபவிக்கிறார்கள். (299)

ரகசியம் எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகி விடுகிறது. அவன் மீனவப் பையன். அவனுக்கு சாஸ்த்ரம் சொல்லித் தரக்கூடாது என்கிறார்கள். ஆனால் அவனோ சாஸ்திரம் கற்றான்; சம்ப்ரதாயம் கற்றான். எல்லாம் கற்றான்

அப்பையன். வளர்ந்தான்; தாடி வளர்ந்தது; ரிஷியானான். வேதம் தொகுத்தான். 18 புராணங்களைத் தொகுத்தான். பிராமணர்களின் முது பெரும் நூலான ‘ப்ரம்ம சூத்திரம்’ எழுதினார். அவர் தான் வ்யாஸர் வேதவ்யாஸர்.

வ்யாஸர் வியாக்கியானம் என்ன? ‘நீங்களெல்லாம் ப்ரம்மத்தை, அதாவது கடவுளை காரணத்தின் அடிப்படையில் அணுகுகிறீர்கள் (based on reason). ஆனால் அவர் அறிவுக்கு அப்பாற்பட்டவர். தர்க்கங்களைத் தாண்டியவர். உலகத்தைக் கடவுள் தான் படைத்தார். அவரை அறிவு, காரணம், தர்க்கம் போன்றவற்றின் அடைப்படையில் அணுகாதீர்கள். கடவுள் காரணங்களைக் கடந்தவன் (God is above logic.)(301)

இந்த வ்யாஸருக்கு ஒரு சீடர். அவர் ஓர் இயற்கை வாதி – naturalist. அவர் தான் ஜெய்மினி. இவர் வ்யாஸரோடு நிகழ்த்திய விவாதங்கள் சுவாரஸ்யமானவை.

‘ஸ்வாமி, அவனை இங்கே கூட்டி வாருங்களேன்.’ என்றார் ஜெய்மினி.

‘யாரையப்பா?’

 ‘அவன் தான் உலகத்தையெல்லாம் ஒருத்தனே பொசுக்கென படைத்து முடித்து விட்டான் என்கிறீர்களே! … அந்தக் கடவுளைத்தான்’ என்றார் ஜெய்மினி.

 ‘அவன் பரலோகத்தில் இருக்கிறான். அவனை இங்கே இருந்து பார்க்க முடியாது’.

ஜெய்மினி சிரிக்கிறார். ‘அது எப்படி இருக்கும்?’

‘இங்கே யாகத்தில் புகை அதிகமாக வந்தால் புகை மூட்டமாக இருக்குமே … அது போல இருக்கும்.’

‘நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பரலோகம் உங்களுக்குத் தெரியுமா? அப்படி தெரிந்தால் காட்டுங்கள். இல்லையென்றால் தெரிந்தவர்களைக் கூப்பிடுங்கள். அடியேன் பார்த்து பரவசப்பட்டுக் கொள்கிறேன்’.

வ்யாஸர் பதிலின்றி மெளனித்த போது (302)… ஜெய்மினி சொன்னார்:

’கோஹி தஸ்வேத யத்ய முஷ்பின் லோகே 
அஸ்தீ வாரவேதீ …’ யஜூர் வேதத்தில் வருகிற மந்த்ரம் இது.

‘பரலோகம் யாருக்குத் தெரியும்? அதைப் பார்த்தவர்கள் யார்? இருந்தால் வரச்சொல். அது எப்படியிருக்கும்?’

வ்யாஸரோ … ‘அவன் பரலோகத்தில் இருக்கிறான். உனக்கும் எனக்கும் இந்த செடிக்கும் கொடிக்கும் உயிர் கொடுத்தவன் .. உடல் கொடுத்தவன்.’

ஜெய்மினி இதைக் கேட்டதும் டக்கென ஒரு கொடியை பிடித்தார். இந்த கொடிக்கும் பிராணன் உள்ளது; வளர்கிறது; அசைகிறது; பூக்கிறது; காய் கொடுக்கிறது; கனி கொடுக்கிறது. இதற்கு இத்தனையும் கொடுப்பது தண்ணீர். அந்த தண்ணீர் தான் கொடிக்குச சோறு. ’இப்போது இந்தக் கொடியை வாழ வைப்பது கடவுள் என்றால் … தண்ணீர் தான் கடவுளா? அல்லது கடவுள் தண்ணீர் தானா?” ’

’அந்தக் கொடிக்கு உள்சக்தி ஒன்று உண்டு. அதற்கொரு வளரும் சக்தி உண்டு. அது தண்ணீரால் கிடைக்கிறது. அதை ஏன் கடவுள் என்கிறாய்?’ இது தான் ஜெய்மினியின் மீமாம்ஸ. அதாவது கடவுளைப் பற்றிய விசாரணை. (303)

ஜெய்மினி இப்படியாக இயற்கையை முதன்மைப்படுத்தினார்.

தம் கர்மாக்களை நாம் செய்து கொண்டிருந்தால் கடவுளுக்கு என்ன அவஸ்யம்? என்பது தான் ஜெய்மினியின் கேள்வி.(ஆஹா! ...அழகு!)

வ்யாஸர் பிரம்ம சூத்திரம் என்ற நூலை இயற்றினார். அதற்கு ’உத்தர மீமாம்ஸா’ என்று பெயர். ராமானுஜர். சங்கரர் போன்றோர் இதற்கு உரையெழுதியுள்ளனர்.

ஆனால் ஜெய்மினி ‘பூர்வ மீமாம்ஸ’ என்ற சித்தாந்தத்தைக் கொடுத்தார். வ்யாஸரின் மீமாம்ஸத்தைத் தொட்டவர்கள் ஜெய்மினியின் மீமாம்ஸவைத் தொடவில்லை. ஏனென்றால் ஜெய்மினியை நாஸ்திகர் என்று அழைத்தவர்கள் பலர் அன்று உண்டு.(304)

வ்யாஸர் பிறந்த கதை பார்த்தோம். இந்த வ்யாஸருக்குப் பிறந்தவர் எப்படி இருந்தார்? (305) ரிஷிகள் காம்ய சுகத்தை அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள். அப்படியோர் பொழுதில் வ்யாஸரின் ரேதஸ் – உயிர்த் திரவியம் கீழே சிந்தி விட்டது. அதை ஒரு கிளி கொத்தித் தின்று விட்டது அல்லது அப்படி கிளியாக வந்த அழகியுடன் அவர் கூடினார் என்றும் கூறுவார்கள். . கர்ப்பமான கிளி ஒரு ‘குட்டி’ போட்டு விட்டது! தலையெல்லாம் கிளி போல இருந்ததாம். உடல் மட்டும் மனுஷ்ய பாவனையாக அமைந்ததாம். சுகஹா என்றால் வட மொழியில் கிளி என்று பெயர். அதனால் அந்தக் கிளிப் பிள்ளைக்கு ’சுகர்’ என்று பெயர். சுகப்பிரம்மம் என்றும் சொல்வார்கள். (306)

வ்யாஸர் வேதங்களை பிரித்து வகைப்படுத்தி, உபநிஷத்துக்கு பிரம்ம சூத்திரம் பண்ணிய போதும், 18 புராணங்களை தொகுத்த போதும் திருப்தி இல்லை; ‘பாகவதம்’ என்ற மகா காவ்யத்தைப் படைத்தார். இதைக் கேட்டாலோ, உபதேசம் பெற்றாலோ மோட்சம் பெற்று பகவான் நாராயணனின் வைகுண்டத்தை அடைந்து விடலாம் என்பது நம்பிக்கை. (307)

சுகர், பரீட்சித்து என்னும் ராஜாவிற்கு பாகவதத்தை உபதேசிக்கிறார். பரீட்சித்து ராஜா ஒரு வாரத்திற்குள் உபதேசம் பெற்றால் தான் அவன் மோட்சம் பெற முடியும். உபதேசம் பெற்று அவன் மோட்சம் பெற்றான்.

மோட்சம் பெற்று வைகுண்டம் செல்கிறான் என்று சொல்கிறார்களே … மோட்சம் என்றால் என்ன? வைகுண்டம் என்றால் என்ன?

இங்கு போல் அங்கும் ஸகல போகங்களும் உண்டு என்கிறது உபநிஷது. வைகுண்ட லோகத்தில் வீடுகள் உண்டா? அங்கு வஸிப்பவர்கள் மனைவியுடன் இருக்கிறார்களா? இங்கு போல் அங்கும் காம ஸுகத்தை அனுபவிக்கிறார்களா? மகப் பேறுகளைப் பெறுகிறார்களா? அங்கேயும் திருடர்கள் இருக்கிறார்களா? ஸ்ந்யாஸிகள் இருப்பார்களா? ஒரு புருஷன் மற்றொருவர் மனைவியை அங்கும் விரும்புவானா?

… இந்தக் கேள்விகளையெல்லாம் மும்மதஸாரம் என்னும் புத்தகத்தில் சக்கரவர்த்தி ஆச்சாரியார் எழுப்பிய கேள்விகள்.

விரஜா என்றொரு நதி. இந்த நதியைத் தாண்டி அபராஜிதை என்னும் ஒரு பட்டணம். எங்கு பார்த்தாலும் ஆண்கள் பெண்கள் ரொம்ப சந்தோஷமாக கூடிக் கலவி களித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஒரு மண்டபம் ஒன்று உள்ளதாம். அந்த மண்டபத்திலும் ஒரே ஆனந்த மயம் தான். (309) அங்கே ஒரு கட்டில் இருக்கிறது. அதிலே பாம்புப் படுக்கையில் பெருமாள் இருக்கிறார்.

அங்குள்ளவன் தனது விருப்பத்துக்கு தக்கபடி பித்ரு லோகம், ஸத்ரி லோகம், முதலியவற்றை படைத்துக் கொள்கிறான். அனுபவித்துக் கொள்கிறான். மோட்ச ஸ்வரூபம் என்ற தலைப்பில் சக்கரவர்த்தி ஆச்சார்யார் இதனை விளக்குகிறார். ‘இவர்கள் இணைந்துள்ள மோட்சம் எல்லோராலும் போற்றத் தகுந்தது. ஜாதி, வர்ணம், மதம், பாகுபாடு இதில் கிடையாது. எல்லாரும் ஏக ஜாதியைச் சேர்ந்தவர்கள். அங்கு போகத்திலும் வேற்றுமை இல்லை. அனைவருக்கும் சமமான போகம். இதைத் தான் ஸாயுஜ்யம் என்பர். எல்லா வகைகளும் எல்லாருக்கும் சமமாகப் பரிமாறப்படும்.

அவர்களுக்குள் ஏதும் வேற்றுமை ஏற்பட்டு விடாதா என்கிற ஐயம் சிலருக்கு வரலாம். இதற்குப் பதில் ; இவர்கள் அனைவரும் அங்குள்ள நித்ய ஸூரிகள் (நித்யஸூரிகள் என்றால் … என்றென்றும் ஜீவித்து வைகுண்டத்தில் பகவானுக்கு கைங்கர்யம் செய்வார்கள்.) ஆண் பெண் என்கிற வேறுபாடு அங்கிருந்தாலும் எவ்வகையிலும் அவர்களுக்குக் குறைவில்லை.

(அட … இஸ்லாமிய மறுமை மாதிரி இங்கேயும்!! சொல்லப்போனால் அங்கே இருப்பதை விட இங்கே ஜாதி, பால்வேறுபாடு எதுவும் இல்லையாமே! இஸ்லாமிய மறுமை மாதிரி ஆண்களுக்கு மட்டும் special treatment இங்கே இல்லையே! Good! Well done !!) (310)

ஒரு முத்தாத்மா பல உடல்களை எடுக்கும்போது ஆண், பெண், குழந்தை முதலிய உடல்களை எடுத்துக் கொண்டு குடும்பமாக அடிமை செய்யலாம். அல்லது மற்றொரு முத்தாத்மாவை உதவியாக வைத்துக் கொண்டு அதற்குத் தக்கபடி இரு முக்தர்களும் பல உடல்களை எடுத்து குடும்ப தாஸ்யம் செய்யலாம். இவ்வாறு குடும்ப தாஸ்யம் செய்யும் போது ஆண் உருவமும், பெண் உருவமும் உடையவர்களாக இருந்து கொண்டு விளையாடினால் காமம் என்கிற இன்பம் இவர்களுக்கு வரும். ஆகையால் அது மோட்ச சொரூபத்துக்கு விரோதமா என்று சந்தேகப்பட வேண்டாம். இவர்களது எல்லா ரமணமும் அதாவது விளையாட்டும் பகவானுடையதே.(311)

கிருஷ்ணன் கோப ஸ்த்ரிகளுடன் ஏன் காமபோகத்தை அனுபவிக்க வேண்டும்?  ஸ்ரீரங்கநாதன் தனது ஆன்ந்த நாடிகளைக் கொண்டு ஸ்ரீரங்கநாயகியுடன் ஆனந்தமாக கலவியை அனுபவிக்கிறான் என பராசுரபட்டர் ஸ்ரீகுணரத்ர கோசத்தில் எப்படி சாதித்தார்?

உனக்கு என்ன வேண்டும்? உன் அம்மாவை பார்க்க வேண்டுமா? படைத்துக் கொள். உன் அப்பாவை பார்க்க வேண்டுமா? படைத்துக் கொள். சரி... குடும்ப உறவுகள் வெறுத்துப் போய் விட்டது. உனக்கு இப்போது ஒரு பரஸ்த்ரீ வேண்டுமா? நீ நினைத்தால் உன் முன்னே வந்து நிற்பாள். உன்னைப் பார்த்து சிரிப்பாள். நெருங்குவாள். அணைப்பாள். ஆனந்தம் தருவாள். இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம். அங்கே அது பேரின்பமாக மாறும். ( சுவன்ம் - modified here !!)

இந்த லோகத்தின் ஆனந்தங்கள் அல்பம். அங்கே பகவத் ஆனந்தம். இங்கு நீ மோட்டாரில் சுற்றுவது போல் அங்கேயும் ஜாலியாக சுற்றலாம். அதுவும் எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம். அவளை நீயே படைத்துக் கொண்டு என்கிறது. (312)

இந்த உலகத்திற்கு போக வேண்டும் என்றால் எப்படி போவது? (இங்கும் போக ‘சுவனப் பிரியன்’ ஆகலாம் போலும்!!) இதற்குப் பல வித்யையைகள் ஓதப் பட்டிருக்கின்றன.

அதில் இருக்கும் one line – ஆத்மாவை அறிகிறவன் மோட்சம் பெறுகிறான்.

தேவர்களும், அசுரர்களும் மோட்சம் பெறுவது எப்படி என்று ப்ரஜாபதியிடம் கேட்கிறார்கள். அசுரர்கள் தேகத்தை தான் ஆத்மா என்று தப்பாக நினைத்தவர்களாகி விட்டார்கள். (313) இந்திரன் காத்திருந்து ஆத்மா என்ன என்பதைக் கண்டு பின் கடைசியில் மோட்சம் போனான்.

இந்த உலகத்தில் நல்லவனாக வாழ வேண்டும். வாழ்ந்தால் இதை விட இன்பம் மிகுந்த உலகம் உனக்கென காத்திருக்கிறது என ஆசை காட்டும் வேலைதான் மோட்சம்.( the same carrot and stick story - ஆப்ரஹாமிய மதங்களின் அதே கதை தான் இங்கும். !)(316)






*

Friday, March 21, 2014

732. இந்து மதம் எங்கே போகிறது? --- 6






*


***



***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

*****


பிராமணர்களின் வாழும் பகுதியாக வேதத்தில் கூறப்பட்ட இடங்கள் எல்லாம் இமயமலைச்சாரல் பகுதிகள். இதுவெல்லாம் இப்போது ஆப்கானிஸ்தானமாக இருக்கிறது. (250)


காவிரிக் கரையில் நின்று கொண்டு கங்கையைக் கும்பிட்டால் ... அந்த மந்திரத்தை மாற்ற வேண்டும். சென்னையில் இருக்கும் பிராமணர்கள் ..

’நமோ அடையாறு கூவம் யோஹே 
மத்யேயே வசந்தீ ... என்றல்லவா வணங்க வேண்டும். (252)

சம்ஸ்கிருத பாஷையைத்தான் போற்றுவோம்; சமஸ்கிருதம் சொன்னால் தான் கேட்போம் என்று ஒற்றைக் காலில் நிற்பவர்களுக்கு நானும் ‘ஒற்றை ஸ்லோகம்’ ஒன்று சொல்கிறேன்.

 ’வேத ப்ராமாண்யம் கஸ்ய மிது 
கர்த்ரு வாதஹா ஸ்நானே 
தர்மேச்சா ஜாதிவாத அவலேயஹ 
சந்த பாரம்பஹா பாபஹான யசைநீ 
ஸ்தவஸ்த ப்ரக்ஞாநாம் சஞ்சலிங்கானீ ஜாம்யே ....’

’மனிதன் உயிருள்ளவன். ஜீவன் உள்வன். சிந்திக்க வேண்டிய கடமை கொண்டவன்.(’சிந்திக்க மாட்டீர்களா?’ - இதை எங்கேயோ கேட்டது போல் உள்ளதே!! இப்படி சிந்தனையாளனாக இருக்க வேண்டிய மனிதன் இன்று
வெறும் ஜடமாகி விட்டான். அதாவது குட்டிச் சுவர் போலவும் சாலையில் கிடக்கும் கல்லைப் போலவும் பயனற்ற ஜடமாகி விட்டான்.’

இதற்குப் பல காரணங்கள்.
அவைகளின் பட்டியல்:
1. எதற்கெடுத்தாலும் வேதம் சொன்னதையே நம்பிக்கொண்டு அதில் நல்லவை கெட்டவை எது என்பதை அறியாமல் அப்படியே பின்பற்றுவது – வேத ப்ராமாண்யம்.

2. நம் எல்லோரையும் ஒருத்தன் படைத்தான்; அவன்தான் நமக்கு கர்த்தன்; அதாவது காப்பாளன் என்று சும்மா நம்பிக்கொண்டிருப்பதால் மனிதன் ஜடமாகிறான்.

3. ஸ்நானே ... குளியல். இதனோடு மதத்தைச் சம்பந்தப்படுத்தி ஜடமாகிப் போனான்.

4. ஜாதிவாதம் (254)

5. சந்தாபாரம் – உடல் ரீதியாக தன்னையே வருத்திக் கொண்டு ஜடமாகிறான்.

இவைகள் தான் சமஸ்கிருத ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள். (255)

மலை மக்கள் வணங்கிய காளி மாதாவை பிராமணர்கள் காலப்போக்கில் ஆகம விதிக்குள் அடக்கி அவளை ஒரு ஆண் தெய்வமாக்கி விட்டார்கள்.

பிராமணர்கள் தங்கள் அடிமடியை அவிழ்த்துக் கொண்டிருப்பதை மலை மக்கள் உணர்ந்தார்கள். போராடத் துவங்கினார்கள். அவர்களின் ஆயுதங்களை பிராமணர்களின் அறிவு தோற்கடித்தது.

இதன் மூலம் ஒரு உடன்படிக்கை. பிராமணர்கள் உள்ளே போய் கடவுளை சேவிக்க, மலை மக்கள் அம்பட்டர்களாய் வெளியே அம்ர்ந்து பக்தர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்பதே அது! இருவருக்கும் தட்சணை கிடைக்கும்!(269)

திருப்பதி மலைக்காளியை பரம சிவனாகவும், சுப்ரமணியனாகவும் மாற்றிவிட்ட நிலையில் தான் இந்தத் தகவல் வைணவர்களுக்குக் கிடைத்தது. கொதித்தெழுந்தனர் வைணவர்கள்.

மலை மீது அடுத்ததாக வைணவப் படை ஏறியது. ஸ்ரீராமானுஜர் 11-ம் நூற்றாண்டு தன்னுடைய மாமா திருமலை நம்பியிடம் ராமாயாணம் கேட்பதற்காக திருப்பதிக்குப் போனார்..(270)

இந்த வைணவ – சைவ போரில் ராமானுஜர் ஈடுபட்டதைப் பற்றி குரு பரம்பரை என்ற புனித நூல் விளக்குகிறது. (271)

இரண்டு தரப்பிலும் வாதப் பிரதிவாதங்கள் பண்ணிக்கொண்டே இருந்தார்கள்.

அம்மலைக்கே உரிய மலை மக்கள் இந்த பஞ்சாங்கத்தைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என தெரியாமல் முழித்தனர்.

குரு பரம்பரையில் ராமானுஜர் ஒரு வழி சொல்கிறார். பகவானே நேரில் வந்து சொல்லட்டும் என்று ஒரு பதில் தருகிறார். (272)

பெருமாளின் சங்கு சக்கரம், சிவனின் மான், மழு என்ற ஆயுதங்களையும் சன்னதியில் விக்கிரகத்துக்கு அருகே வைத்து விட்டு ராத்திரி சன்னதியை இழுத்துப் பூட்டி விடுவோம். காலையில் வந்து பார்ப்போம். விக்கிரம் எந்த ஆயுதத்தைச் சூடி நிற்கிறது என்று பார்த்து முடிவு கட்டுவோம் என்றார்.(273)

எல்லோரும் ஒத்துக் கொண்டனர்.

இரவு ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷன் அம்சம். ஆகவே அவர் பாம்பு உருவம் எடுத்து, கோமுகம் / நீர்மம் / தூம்பு வழியாக உள் நுழைந்து சங்கையும் சக்கரத்தையும் எடுத்து விக்கிரகத்திற்கு சூட்டி விட்டு, மான், மழு இரண்டையும் சிதைத்து விட்டு வந்து விடுகிறார். (276)

இதைப் பற்றிப் பேச நீர் யார் என்று என்னிடம் கேள்வி கேட்கின்றார்கள்?

இதற்குப் பதிலாக இன்னொரு நிகழ்வு பற்றிக் கூறுகிறேன். திருப்பதி மலையில் செய்யக்கூடிய பெரிய கைங்கர்யம் பெருமாளுக்கு நித்யப்படி தீர்த்தம் கொண்டு வருவது தான். (277)

ஒரு முறை திருமலை நம்பி தீர்த்தம் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு நீர் எடுத்து வரும்போது வழியில் ஒருவர் இவரை, ‘தாத்தா’ என்று கூப்பிட்டு நீர் கேட்கிறார். நம்பி மறுக்கும் போது அவர் ‘எனக்குத் தண்ணீர் தந்தால் ஒரு உயிரைக் காப்பாற்றின புண்ணியம் கிடைக்கும். அந்தக் கல்லூக்கு ஊற்றி என்ன பண்ணப் போறே?” என்று கேட்கிறார். நம்பி மறுத்து நடக்கும் போது மீண்டும் அதே குரல். நம்பி திரும்பிப் பார்க்கும் போது பெருமாளே தண்ணீர் கேட்டு சோதித்திருக்கிறார் என்பது நம்பிக்குத் தெரிகிறது. (278)

 ‘தாத’ என்றால் அப்பா என்று ஒரு அர்த்தம் உண்டு. பெருமாளை பிரம்மனுக்கு அப்பா என்பார்கள். அப்படிப்பட்ட அப்பாவான பெருமாளே நம்பியை ‘தாத…’ என்றழைத்ததால் திருமலை நம்பி அடியார்க்கு தாத்தா ஆனார். அவரது வம்சத்தினர் தாத்தாச்சாரியார்கள் ஆனார்கள். அடியேனும் அப்படி வந்தவன் தான்.(279)

திருப்பதி மலையோடு ஒன்றியவர் இன்னொருவர். அவர் ஹத்தியராம் பாபுஜி.

வட இந்தியரான இவர் கோயிலில் சேவகம் செய்ய ஆரம்பித்து, பின் கோயிலின் நிர்வாகியாக ஆகி விடுகிறார்.(280)

திருப்பதி கோயிலில் உள்ள தெய்வம் மலை மக்களது காளி என்பதற்கான இன்னொரு தடயத்தை ஆசிரியர் தருகிறார். திருப்பதி கோயிலைப் பிரபல்யமாக்க மொட்டை போடுவதை பாபாஜி தீவிரமாகக் கடைப்பிடித்தார். அப்போது சில பிராமணர்கள் அவரிடம், ‘விக்ரஹத்தின் கைகளில் பாம்பு இருக்கிறது. அதை எடுத்து விட்டால் இன்னும் நன்றாக இருக்கும். அதே போல் .. பின்னாலுள்ள பின்னலையும் நீக்கி விட்டால் ...’ என்றனர். பாபாஜி மறுத்து விட்டார். பின்னால் என்ன பின்னல்? (281)

ஜெருசலேமில் உள்ள ஒரு பெண்மணி இசையரசி எம். எஸ். அம்மா அவர்களுக்குத் தெரியும். இந்து மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பியவருக்கு எனது தொடர்பு கிடைக்கிறது. அவரை அழைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வெங்கடாஜலபதியை முழுமையாகப் பார்க்கும் போது தான்  திருப்பதி பெருமாளுக்கு அழகான தலையைச் சீவி சிங்காரித்து பின்னல் செய்து போட்டிருந்தார்கள் என்பதைப் பார்க்கிறார்.(283)

வர்த்தகக் கடவுளாக மாறி விட்ட வேங்கடாஜலபதியின் முந்தைய நிலைமையைச் சொன்னேன். மலையின் மைந்தர்கள், முதலில் காளியை வழிபட்டார்கள். இன்று வெளியே உட்கார்ந்து மொட்டையடிக்கிறார்கள். இதை பெரிய பிஸினஸ்ஸாகவும் ஆக்கி விட்டார்களே ... அந்த ஆதங்கத்தில் தான்... திருப்பதி பற்றிய இத்தனை திருப்பங்களையும் சொன்னேன்.

இதற்கு மேலும் இன்னும் சில ஆதாரங்களைக் கூட நாம் சேகரிக்க முடியும். திருமாலுக்கு நான்கு கைகள். இரண்டு கைகளில் சங்கு சக்கரமும் இன்னும் இரண்டு கைகள் எக்ஸ்ட்ராவாக இருக்கும். ஆனால் திருப்பதி பெருமாளுக்கு இரண்டே இரண்டு கைகள் தான். சங்கு சக்கரம் தோள்பட்டையில் தான் தொற்றிக் கொண்டிருக்கிறது. அடுத்து, பெருமாளின் பக்கத்தில் பிராட்டியைப் பார்த்ததுண்டோ? (284)

பிராட்டியார் கீழே திருச்சானூரில் தான் இருக்கிறார். மலை மக்களின் காளியை மலையேறியவர்கள் மாற்றி விட்டார்களே ... அந்த உரிமைப் பிரச்சனைக்குத் தான் இப்படிச் சொன்னேன். (285)

அடுத்து …

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்றைய மலையாள தேசத்தில் இருக்கும் ஒரு மலைக்கிராமம். அது பாண்டிய ராஜாவிடமிருந்த மலை தேசம். வளங்கொழித்துக் கிடந்தது. திடீரென்று குதிரைகளில் வந்த ஒரு சிப்பாய்க் கொள்ளைக்காரர்கள் சுழன்றடித்தார்கள். கொள்ளையடித்ததும் சுற்றும் பார்த்தார்கள். சுற்றிலும் 5 குன்றுகள். கஷ்டப்பட்டு மேலே ஏறினார்கள். காந்த மலை என்ற அந்தக் குன்றை அடைந்ததும் அங்கே மலைவாழ் மக்கள் வைத்திருந்த தங்கச் சிலை அவர்கள் கண்ணைப் பறித்த்து. (286)

அங்கே நடந்தது பற்றி இரு கருத்துகள் உள்ளன. கொள்ளையடித்தார்கள் என்பது ஒரு கருத்து. இன்னொன்று அச்சிலையை உடைத்து நொறுக்கினார்கள் என்ற செய்தி.

தங்கள் சிலை கொள்ளையடிக்கப்பட்டதும் காந்த மலையிலிருந்து இறங்கி 5 குன்றுகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் இன்னொரு அய்யனார் காவல் சிலையை உருவாக்கினர். பின்னால் இதுவும் கொள்ளையடிக்கப்பட்டது. முதலில் பொன் விக்கிரகம் இருந்த இடம் பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது. இப்படி எதிரிகளால் உடைத்து நொறுக்கப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட அந்த மலை மக்களின் சிலை தான் இன்று ஜோராக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. (287)

அய்யனாருக்கு வழிபாடு தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் இப்போதைய கேரளா (ஆந்திரப் பிரதேசம் என்று நூலில் உள்ளது??) நம்பூதிரிகள் பூணூலை முறுக்கிக் கொண்டு வந்தனர்.

அவர்கள் புது ஐதீகத்தைக் கிளப்பினார்கள்.(288) இது உங்க அய்யனார் இல்லை; எங்க அய்யப்பன் இவன் என்றார்கள். (289)

பத்மாசுரன் என்ற ஓர் அசுரன் பயங்கர தவம் இருந்தான். சிவனும் காட்சி கொடுத்தார்; என்ன வரம் வேண்டுமெனக் கேட்டார். ‘நான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் பஸ்பமாக வேண்டும்’ என்றான். அதை சேங்ஷன் பண்ணி விட்டார் சிவன். எல்லார் தலையிலும் கைவைத்த பத்மாசுரன் கடைசியில் சிவனிடமே வந்தான். தன் வரமே தன்னை அழிக்க வந்ததை அறிந்த சிவன் திருமாலிடம் ஓடினார்.

பெருமாள் மோகினியானார். (290) மோகினி பார்த்த பத்மாசுரனுக்கு எல்லாம் மறந்து போனது.

மோகினியும் ஆட ஆரம்பித்தாள், என்னைப் போல் ஆடினால் நான் கிடைப்பேன்; தயாரா என்றாள். பத்மாசுரனும் போட்டிக்குள் இறங்கினான். ஆட்டத்தில் மோகினி தலையில் கை வைக்க, பத்மாசுரனும் தன் தலையில் கை வைத்து எரிந்து போனான்.(291)

ஆஹா.. பத்மாசுரன் இறந்து விட்டான் என்று நினைத்துத் திரும்பிய சிவனின் கண்ணில் மோகினியின் அழகிய உருவம் தெரிய, அவளை அவர் பிரேமிக்க … இந்த சம்பவத்தால் மோகினி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்த தெய்வக் குழந்தை தான் அய்யப்பன். இந்த அய்யப்பன் கதையை நம்பூதிரிகள் மலைவாசிகளிடம் சொல்ல, (293) அவர்களும் நம்பினார்கள்.

இரண்டு மூர்த்திகளால் அவதரித்த அய்யப்பனை வழிபடும் வேலையை எங்களிடம் விட்டு விடுங்கள் என்றார்கள்.

 மலை மக்கள் பூக்கள் போட சில படிகளைக் கட்டி வைத்திருந்தார்கள். அவைகளை சாதாரண படிகள் அல்ல; 6 திருப்படிகள் சிவாம்சம் வாய்த்தவை; 6 திருப்படிகள் முருகன் அம்சம் கொண்டவை; 6 திருப்படிகள் மணிகண்டனான அய்யப்பனின் அம்சங்கள். மண்டலம் இருந்து.

மாம்ஸம் விலக்கி, சுத்தமாக இருந்தால் தான் இங்கே ஏறமுடியும் என்றார்கள். அவர்களின் தொனி உயரத்தில் இருந்தது.

பிராமணர்கள் மேலே சென்றனர். அவர்களின் கண்களில் ஒரு ஜோதிப் பிரகாசம் ஜொலித்தது. (294)

நாங்கள் தீப்பந்தம் கொளுத்தி திருவிழா கொண்டாடுகிறோம். அது தான் அந்தக் காந்த மலையில் ஜொலிக்கிறது என்றார்கள் மலை மக்கள். அய்யப்பனுக்கு சபரி என்னும் காட்டு வாசி பக்தை இருந்தாள். அவளை புஷ்பம் இறைத்து, தேவர்கள் வாழ்த்த ஒரு பெரிய ஜோதி தோன்றியது. அதில் சபரி கலந்து மோட்சம் அடைந்தாள் என்றார்கள் நம்பூதிரிகள். அந்த மோட்ச ஜோதி அது என்றார்கள்.

இப்போது நம்பூதிரிகள் ரகஸ்ய ஏற்பாடு செய்து அங்கே தீமூட்டி வருகிறார்கள்.

இதை பிரபல்யமான கேரளத் தலைவர்கள் பலருமே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். (295)





*

Wednesday, March 19, 2014

730. இந்து மதம் எங்கே போகிறது? --- 5








*****  



***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

*****

அதர்வண வேதம் சொல்லும் அறிவுரை.
 “மக்களே ஒன்று கூடுங்கள். கடவுள் ஒருவன் தான். அவனை யார் கூப்பிடுகிறார்களோ அவர்களின் வீட்டுக்கே அவன் போவான். அவன் பழமைக்கும் பழமையானவன். புதுமைக்கும் புதுமையானவரன். கடவுள் ஒருவன் என்றாலும் அவனை வழிபடும் வழிகள் லோகத்தில் பல்வேறு பட்டதாக உள்ளன. அவனை வழிபடும் முறைகள் பல்விதம் என்றாலும் எல்லாம் சரியே. அதனால் அவன் பெயரால் யாரும் யாரையும் தூஷிப்பதோ, நிந்திப்பதோ கூடாது. (231)

சுமார் 30-40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்துக்கு அருகிலேயே உள்ள நாச்சியார் கோயில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் அதிகாரிகள் தமிழில் அர்ச்சனை பண்ண்ணும்னு முடிவெடுத்திருக்கிறோம். அதனால் தமிழில் எப்படி எப்படி அர்ச்சனைகள் செய்யலாம்னு எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார்கள். தமிழில் எப்படி எப்படி என்று மொழிப்போர் நடத்த ஆரம்பித்தார்கள் சில பட்டாச்சாரியார்கள். (233)

 மற்றவர்கள் மறுத்த போது நான் எழுதி வைத்திருந்ததைக் கொடுத்தேன்.

உயர்வு அற உயர் நலம் உடையவன் போற்றி ... 
மயர்வு அற மதி நிலம் அருளினன் போற்றி ... 
அயர்வு அற அமரர்கள் அதிபதி போற்றி ... – இப்படியாக நாராயணனைப் போற்றும் நாமங்கள் 108 எழுதிக் கொடுத்தேன். நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் தொடங்கி சில பாசுரங்களை ‘சஹஸ்ரநாமம் பாணியில்’ எடுத்துக் கொடுத்ததுதான். (234)

பகவானின் ஆயிரம் பெயர்களைக் கூறி அவரைப் போற்றிச் சொல்வது தான் சஹஸ்ரநாமம். இதைப் படித்த பார்த்த அதிகாரிகளுக்கு பரம இன்பம்.

தமிழில் இவ்வளவு இனிமையான கருத்து அடர்த்தியுள்ள பக்தி கானங்கள் இருக்கும்போது ஏன் சமஸ்கிருத பாஷையைக் கட்டிக்கொண்டு நாம் அழ வேண்டும்?

இதுபோல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தரும் ‘நல்ல தமிழ் சொற்கோவைகளுடன்’ தமிழிலேயே இறை பூஜைகள் செய்யலாமே என்றனர்.

அதன்படி ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் அடிப்படையில் நான் எழுதிக் கொடுத்த 108 தமிழ் நாம வழிபாட்டு மொழிகள் அப்போதே அர்ச்சகர்களின் எதிர்ப்போடு, 30-40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் சாரங்க பாணி பெருமாள் கோவிலில் அரங்கேற்றப்பட்டது. (235)

ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் தமிழ் ஆழ்வார்களின் அருளிச் செயலான நாலாயிரம் இறைப்பாட்டுகளை திவ்யம் (தூய்மை)+ பிரபந்தம் (திரட்டு) என்ற இரு சமஸ்கிருத சொற்களால் தான் நாம் இன்றளவும் அழைத்து வருகிறோம்.

இனிமேலாவது ‘ஆழ்வார்களின் நாலாயிர அருளிச் செயல்’ என்பது தான் இந்தப் புனித நூலுக்கு தமிழ்ப்பெயர்.

சமஸ்கிருதம் எப்படி தமிழைக் கட்டிப் போட்டது? (236)

ஆகமக்காரர்களின் ஆதிக்கம் அவர்கள் முழு முதல் சமஸ்கிருதக்காரர்கள். ஆனதால் தமிழன் வெளியே நிறுத்தப்பட்டான். சமஸ்கிருதர்கள் உள்ளே சென்றார்கள். தமிழ்ப் பூக்களைத் தூவி சமஸ்கிருத அர்ச்சனை நடத்தினார்கள்.

இப்படி ’சமஸ்கிருத சர்க்கார்’ நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் தான் ... நமது தமிழ் பக்தி இலக்கியத்தை முன்னிறுத்துவதற்காக, ஆங்காங்கே ஆழ்வார்கள் தோன்றினார்கள்.

5-ம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் 12 ஆழ்வார்கள் தோன்றினார்கள். (239)

தினம் தினம் கேட்கும் சமஸ்கிருத சுப்ரபாத வடிவத்தை நாம் இப்போது கேட்கிற சுப்ரபாதம் இயற்றப்பட்டதற்கு அறுநூறு வருஷங்கள் முன்னதாகவே அற்புதமாக இயற்றியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். இனிய தமிழில் ’திருப்பள்ளியெழுச்சி’ என்றும் பெயர் கொண்ட அந்த பத்து முத்தான பாடல்களை ‘ஆழ்வார்கள் அருளிச் செயல்’ புத்தகத்தில் 917 முதல் 920 வரையிலான பாடல்கள் சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன். (241)

 ”கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து 
அணைந்தான்; கனை இருள் அகன்றது 
காலை அம் பொழுதாய் 
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம் 
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி 
எதிர்திசை நிறைந்தனர். இவரொடும் புகுந்த 
இருங் களிற்று ஈட்டமும் பிடியொரு முரசும் 
அதிர்தலில் அலை கடல் போன்றுவிது எங்கும் 
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே ..’ (242)

இந்தத் தமிழ்ப்பாடலுக்கு என்ன குறைச்சல்....?

ஆனால் நாமோ logic இல்லாத சமஸ்கிருத வெங்கடேச சுப்ரபாதத்தை தினந்தோறும் காலையில் போட்டுக் கேட்கிறோம். (243) 

சுப்ரபாதத்தைப் போல திருப்பள்ளியெழுச்சி என தமிழ்ப் பெயரில் மாற்றி இனியாவது எவரேனும் அதற்கு நல்ல இசையமைத்து விடியற்காலையில் தமிழ் மணக்கச் செய்வார்களா? (244)

திருப்பாணாழ்வாரின் தமிழைக் கேட்பதற்காக ஆளனுப்பி அரங்கத்துப் பெருமாள் அவரை மரியாதையோடு தூக்கி வரச் செய்ததாக கதை உண்டு.

ஆனால் ஸ்ரீரங்கத்தில் இது எப்படி நடக்கும் என்றால் … மூலவரான ரங்கநாதன் படுத்தபடியே தமிழில் கேட்கக் காத்திருக்க … உற்சவரை அதாவது உற்சவ மூர்த்தியை வெளியே ஒரு மண்டபத்திற்கு தூக்கி வருவார்கள். அங்கே வைத்து நாலாயிரம் அருளிச் செயலையும் இசையோடு பாடி முடிப்பார்கள். இதற்கு அரயர் சேவை என்ற பெயர். இது முடிந்த பிறகு … அதாவது தமிழ்ப் பாடல்கள் முடிந்த பிறகு உற்சவரை மறுபடியும் உள்ளே கொண்டு போய் வைத்து விடுவார்கள். ஆக தமிழ் உள்ளே போகக் கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கி வருகிறார்கள்! (246)

வைணவத்தில் இப்படி. சைவத்தில் எப்படி?
’தென்னாடுடைய சிவனே போற்றி 
என்னாட்டவருக்கும் இறைவா போற்றி’ 

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார். 

திருமறைக்காட்டு சிவன் கோயில் மணி வாசல் வேதங்களால் பூஜிக்கப்பட்டு அடைக்கப்பட்ட கதவை சிவனடியார்கள் திறக்க முடியாமல் கஷ்டப்பட்ட போது திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிக் கதவைத் திறந்தார்கள். பல்லாண்டு காலம் வேதக்காரர்களால் பூட்டப்பட்ட கதவை தமிழ் பாடி திறக்க வேண்டும் என்ற கருத்துருவே நமக்குப் போதும்.(248)

இப்படியெல்லாம் தமிழோடு பின்னிப் பிணைந்திருக்கும் சிவ பெருமானுக்கு கோயிலில் நடக்கும் பூஜை புனஸ்காரங்களில் என்ன நிலைமை?

சிவாச்சாரியார் திருநீற்றுப் பட்டை அணிந்து கொண்டு லிங்கத்தை நெருங்கிச் செல்வார். பூஜைகள் செய்வார். அவர் வாயில் தமிழே இருக்காது; சமஸ்கிருதம் தான்.(249)

தமிழ் இப்படி தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்தது. சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள். மிலேச்ச பாஷை பேசியவர்கள் தோற்றார்கள். மிலேச்ச என்றால் non Aryan என்று பொருள்.



*


Monday, March 17, 2014

728. இந்து மதம் எங்கே போகிறது? --- 4






***





***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்


 *****


ஆண் தெய்வம், பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள். (176)

உற்சவங்களில் ஆண் மகன் எங்கே வேண்டுமானாலும் போவான். ஆனால் பெண்ணானவள் அதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும். தெய்வங்களிடையிலேயே கூட இப்படித்தான் நடக்கிறது.

பாரிவேட்டை படித்திருப்பீர்கள். அதாவது ஆண்  தெய்வம் கோவிலை விட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இதை சகித்துக் கொண்டு பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ளேயேதான் இருக்க வேண்டும். (179)

பிராட்டிக்குப் புறப்பாடு என்றால் கோவில் பிரகாரத்தைச் சுற்றி வருவது தான். அதற்கு மேல் எங்கேயும் வெளியே போகக்கூடாது என்பது தான் பொது விதி.

பெண் தெய்வங்களுக்கு எவ்வளவு கட்டுப்பாடுகள்.
இதெல்லாம் எதற்கு?

தெய்வ விஷயத்திலேயே இப்படித்தான் இருக்கிறது. பெண் தெய்வம் படி தாண்டக் கூடாது என சாஸ்திரம் கோடு போட்டு வைத்திருக்கிறது.

பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன் போகத்துக்காக இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போதனையும் தெய்வங்களிடமிருந்தே ஆரம்பித்து விட்டனர். (180)

ஸ்ரீரங்கம் கோவிலில் ரங்கநாதனின் சன்னதியிலிருந்து இரவு நேரத்தில் அவரது ஆனந்த நாடி அதாவது தேக சம்பந்தம் வைத்துக் கொள்வதற்கு உபயோகப்படுத்துகிற அங்கத்தை ரங்கநாயகி சன்னதிக்குள் அனுப்பி தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டுவிடுகிறார் என்பதை குணரத்தின கோசத்திலேயே கூத்தாழ்வாரின் மகன் பராசரபட்டர் விளக்கியுள்ளார்.

இப்படியெல்லாம் பெண்களை போகப்பொருளாகக் காட்டுவது வைணவமும் மட்டுமல்ல ... சைவமும் இதற்கு சளைத்ததில்லை. (182).

இன்றும் ‘அத்வைதம்’ என்று பேச்சுக்குப் பேச்சு பேசும் காஞ்சி சங்கராச்சாரியர்கள் எங்கெங்கே போய் வருகிறார்கள்? சென்னை, பம்பாய், காசி, டெல்லி என டூர் அடித்து, அதோடு  கோர்ட் வரைக்கும் போய் விட்டார்கள்.

ஆனால் ... அவர்கள் பூஜிக்கும் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் பிரகாரத்தைத் தாண்டி வெளியே வந்திருக்கிறாளா என்று விசாரித்துப் பாருங்களேன்.

ஆண் பெண் ஏறத்தாழ்வுகளை ஏற்படுத்தி வைத்திருந்த ஆகம சம்பிரதாயங்கள், தெய்வங்களிலும் வர்க்க பேதங்களையும் வகைப் படுத்தி வைத்திருக்கின்றன. (183)

சைவத்தில் எப்படி?
பரமசிவனும் தில்லை காளி இருவருக்குள்ளும் நடனப் போட்டி. காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங்களும் பார்ப்பவர்களை வசீகரித்தன. சிவனின் தாண்டவம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை.(191)

ஒரு பெண்ணிடம் தோற்பதா? இனியும் இவளை ஆட விடக்கூடாது என முடிவு கட்டிய சிவன் தன் இடது காலை சற்றே தூக்கினார். வலது காலை ஊன்றி இடது காலை உயர தூக்கிக் கொண்டே போக, சபையே ஒரு கணம் அதிர்ந்தது. ஏன்..? வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காகத்தான் இடது காலை விலக்கி தூக்கியிருக்கிறார் சிவன்.

வெற்றியின் விளிம்பில் நடனமாடிக்கொண்டிருந்த தில்லை காளி இக்காட்சியைப் பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது. தலை குனிந்தாள். ஆனால் சிவபெருமான் தொடர்ந்து தாண்டவமாடிக் கொண்டிருந்தார். ஆக, சிவன் ஜெயித்தார் என்றாகி விட்டது. ...

இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

ஆணிடம் பெண் போட்டி போடக்கூடாது. அப்படியே திமிராக போட்டி போட்டாலும் ஜெயித்து விடக்கூடாது. அவளைத் தோற்கடிக்க ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். (192)

முருகன் என்றால் யார்?
சமஸ்கிருதத்தில் கந்தன், சரவண பவ என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

வடக்கிலுள்ள கதை:
சிவன் பார்வதி மேல் ஒரு நாள் காமமுற்று அவளை அழைக்கிறான். இப்போது வேண்டாமென்று பார்வதி மறுத்தும், சிவன் தொடர்கிறார். சிவன் பார்வதி மேல் பாய்ந்து படர்ந்தார். (194)

அந்த ஷணத்தில் பார்வதி விலகிக் கொள்ள, பரமசிவனின் உயிர்த்துளிகள் அப்படியே ஆகாயத்திலிருந்து கங்கையிலிருந்து விழுந்தன. ஆற்றோடு போன துளிகள் நாணல் காட்டுக்குள் தேங்கி ... குழந்தையாக அவதரித்தது. நாணலுக்கு சமஸ்கிருதத்தில் சரம் என்று பெயர். காட்டுக்கு வனம். இது சரவனம் என்றாகி, இப்போது சரவணனாகி விட்டது. (195)

ஏன் கந்தன் என்ற பெயர். அது கந்தன் அல்ல; ஸ்கந்தன். ஆணுடைய சுக்லம் – உயிர்த்துளிகள் என்பது அதன் பொருள்.(196)

பிள்ளையார் என்பது தமிழ் வழியில் ஒன்று. ஆனால் சமஸ்கிருதத்தில் கதை வேறாகிறது.
பார்வதி குளிக்கும் போது மறைவாக பரமசிவன் அவளை நோட்டமிடுகிறார். தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பதைத் தன் சக்தியால் புரிந்த பார்வதி உடுத்திக்கொண்டு, தன்னைப் பார்த்தவனைக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார். (197)

பரமசிவனைக் கண்டுபிடித்த பார்வதி,  இது உமது திருவிளையாடல் என்றால் என் திருவிளையாடலைப் பாரும் என்று சொல்லி, ‘நான் குளித்ததைப் பார்த்த நீர், யானைத் தலையனாகவும், மனித உடம்பனாகவும் மாறக்கடவது’ என்று சாபமிட்டார். (198)

இன்றும் ஆற்றங்கரையில் பிள்ளையார் இருப்பது எதற்கு என்றால், ‘டேய்! குளிப்பது உன் பத்தினியாகவிருந்தாலும் எட்டிப் பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று சொல்வதற்குத்தான்.

பிள்ளையார் வேதத்திலேயே வந்தார்; இவர்தான் உலகத்தின் தொடக்கம்; என்றெல்லாம் பின்னால் பிள்ளையார் சுழி போட்டார்கள். ஆனால் அதெல்லாம் கிடையாது. கூட்டமான மக்கள் இருந்த போது அவர்களுள் உள்ள சிறு கூட்டங்களுக்குத் தலைவர்களாக பலர் இருந்திருப்பார்கள். அவர்களே கணபதிகள்.(199)

இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் நமக்கெல்லாம் ஒழுக்கத்தையும் சத் நெறிகளையும் வழங்க வேண்டிய தெய்வங்கள் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணர்த்ததான்.

நவராத்திரி, கொலு என்பதெல்லாம் பெண் தெய்வங்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர்களின் ஆராதனைக்காக நடத்துவது என்பது இப்போது பொதுவான நம்பிக்கை. ஆனால் விசேஷம் வேறு.

மகிஷாசுரன் என்றொரு அரக்கன். எருமைத் தலையை உடையவன். (200) இவனை அழிக்க பெண்களால் தான் முடியும். பெண் தெய்வங்கள் ஒன்று கூடி இவனை அழிக்க திட்டமிடுகிறார்கள். ஆனால் வேதம் பெண்களுக்குக் கொடுத்த பலத்தை புராணம் பலவீனமாக்கியது. (202)

பெண்களின் வேண்டுகோளின் படி தேவர்கள் தங்கள் பலத்தையெல்லாம் பராசக்தியிடம் கொடுக்கிறார்கள். அவளும் அரக்கனை அழிக்கிறாள். இப்போது அவளை எல்லோரும் புகழ வேண்டும். ஆனால் யாரும் புகழவில்லை. ஏனெனில் தேவர்கள் அனைவரும் பலத்தைக் கொடுத்து விட்டதால் அப்படியே அசைவற்று பொம்மைகளாய் நின்றார்கள். (203)

புராணக்காரர்கள் பல ஜோடனைகள் பண்ணி கொலுவின் உண்மையான த்த்துவத்தையே கொன்று விட்டார்கள்.

பழங்காலத்தில் மன்னர்கள் மழைக்காலத்தில் தங்கள் படை ஆயுதங்களை பாதுகாத்து, நிறுத்தி வைத்து, அவைகளுக்கு வணக்கம் செலுத்துவார்கள். மழை முடிந்ததும் போரெடுத்து வெல்வார்கள். இது தான் கொலுவின் உண்மையான மூலம். (206)

கொலு கோவில்களில் வைப்படுவதில்லை. அவரவர் வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். ஒருவேளை, ‘பெண்களைப் போற்றினாலும் வீட்டுக்குள்ளே வைத்துப் போற்றிக் கொள் .. வெளியே வேண்டாம்’ என்று சொல்லாமல் சொல்கிறதோ!(207)

ஆயுதம் என்பது மனிதர்களுக்குத் தானே வேண்டும்; தெய்வங்களிடமும் எதற்கு ஆயுதம் இருக்க வேண்டும்?

இதற்கான பதிலையும் வேதத்திலேயே தேடுவோம்.

ரிஷிகள் வேதத்தில் இருவகை தெய்வங்களைப் பற்றிக் கூறுகிறார்கள். அதில் ஒன்று ருத்ரன். (208)

இவன் கையில் எப்போதும் வில்லும் அம்பும். இவனுக்கு எதிர்மறையாக ருத்ரனின் இன்னொரு வடிவமாக சாந்த சொரூபன் – விஷ்ணு. (210)

இவர் கையில் பஞ்சாயுதம் – ஐந்து ஆயுதங்கள் – சங்கு, சக்கரம், கதை, சாரங்கம், கட்கம். இதில் சங்கு, சுதர்சனார் என்று மரியாதையாக அழைக்கப்படுகிறது. சக்கரத்தாழ்வார் என்றும் மரியாதையாக அழைக்கப்படுகிறார். இவரது கையில் 16 வகை ஆயுதங்கள்! (213)

யாகங்களுக்கு பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளம் தான் தட்சணை. ருத்ரன் அழுகும் போது அவனது கண்ணீர் வெள்ளியாக மாறி விடும். இதனால் வெள்ளி தட்சணையாகக் கொடுக்க முடியாது. ஆகவே வீடு, ஆஸ்ரமம் இவைகளோடு தங்கம் கொடுக்கலாம். (219)

 யாகங்களின் முக்கியத்துவம் என்ன? அவைகள் நம் பாவங்களைன் தொலைக்கப் பயன்படுகிறது. (222)

பாவங்கள் எல்லாம் வேத மந்த்ரங்களை உச்சரிக்கும் போது அழிந்து விடும். (225)

பாவ மன்னிப்புக்கான ஒன்று சந்தியாவந்தனம். காலையில் எழுந்த்தும் சூரிய தேவனிடம் வேண்டுவது. (226)

நித்தமும் மூன்று முறை இதைச் செய்ய வேண்டும். கிறிஸ்துவர்களின் பாவமன்னிப்பு பழக்கத்தை ஜெயேந்திர்ர் போன்றவர்கள் தூற்றுகிறார்கள் என்றால் ... அவர்கள் வேதம் அறியாதவர்கள். (229)





*

Friday, March 14, 2014

727. இந்து மதம் எங்கே போகிறது ? --- 3









இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

*****


எனது 15 வது வயதில் ஆரிய சமாஜம் உருவானது. தாயனந்த சரஸ்வதி என்பவரால் வட நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இவ்வமைப்பு பிராமணர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. (82)

‘வேதத்தை பிராமணர்கள் தங்களது தொழிற்கருவியாக பயன்படுத்தி விட்டனர். .. வேதத்தை பிராமணர்கள் மட்டுமல்ல எல்லோரும் படிக்க வேண்டும். வேதப் பொருள்களை அனைவரும் உணர வேண்டும். இதை எதிர்த்து அந்த  பிராமண சபை உருவானது.

 பெரியாரும் இந்தக் காலத்தில் பிராமணர்களை, பிராமணீயத்தை கடுமையாக விமரிசித்து வந்தார். (83)

பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம். இந்த புனிதமான கோயில்களுக்குள் சூத்திரனோ, பஞ்சமனோ ஒரு அடி எடுத்து வைத்தால் கூட அனுஷ்டானங்கள் கறைப்பட்டு விடும். – இது ஆகம கொள்கை.

இந்த சமயங்களில் பல ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. (100)

இந்த நிலைமையில் தான் பண்டித ஜவஹர்லால் நேருஜியின் மந்திரி சபையில் ‘ஹிந்து கோடு பில்’ கொண்டு வருவது பற்றிய ஆலோசனையில் இறங்கினார்கள்.(103)

பல எதிர்ப்புகளுக்கு நடுவே பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்று நேருஜி சட்டம் கொண்டு வந்தார். (107)

இந்தியா முழுவதும் உள்ள மடங்களை ஒன்று சேர்க்க சங்கராச்சாரியார் முயன்றார்;

ஆனால் வட இந்தியா முழுவதும் உள்ள மடங்கள் ‘சாது சம்மேளன்’ என்ற பெயரில் ஒன்றாகின.

அடுத்து தமிழ்நாட்டு மடங்களை ஒன்று சேர்க்க முனைந்தார். Association of Mutts ஒன்று உருவானது. (110)

ஒவ்வொரு மடமும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை இவ்வமைப்புக்குக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தினால் ஒற்றுமை குலைந்தது.

ஒரு கூட்டத்தில் மதுரை ஆதினம் ஒரு பிரச்சனையைக் கிளப்பினார். கோவில்களைக் கட்டியது மன்னர்கள். அதற்கு உதவி செய்தது, உழைப்பு கொடுத்தது, வியர்வை சிந்தியது, வீர்யம் கொடுத்தது, கல் சுமந்தது, மண் சுமந்தது எல்லாம் பிராமணர் இல்லாதோர். ஆனால் பூசை செய்வது மட்டும் பிராமணர்களா? கல் சுமந்து, மண் சுமந்து கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க பூசை செய்ய தடையா? வடநாட்டு காசியில் போல், இங்கும் அவரவர் பூசை செய்து கொள்ள விட வேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெற வேண்டும். அதற்கு இந்த அமைப்பு உதவ வேண்டும் என்றார். (113)

ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழனாக வடக்கேயிருந்து வெற்றி சூடி திரும்பி வரும்போது, வடக்கிலிருந்த நாதமுனி என்ற வித்வானைத் தன்னுடன் அழைத்து வந்து, அவரைத் தன் குருவாக ஆக்கிக் கொண்டான். நாதமுனியின் பரம்பரை சோழ அரசோடு இணைந்து வந்தது. நாதமுனியின் பேரன் ஆளவந்தார். இந்த ஆள்வாரின் பேத்தியின் பிள்ளை விசிஷ்டாத்வைதம் கண்ட ஸ்ரீராமானுஜர்.(115)

மண்டையோட்டு வழிபாட்டுக் கலாச்சாரம். சார்வாகன் என்பவரின் நாஸ்திக கூட்டம், பெளத்த இருட்டு, ஜைனம், ஆதிசங்கரர் போதித்த மாயாவாதம் என்ற அத்வைதம் - எல்லாவற்றையும் அடக்கி ஒடுக்க வந்தவர் ஸ்ரீராமானுஜர். (117)

உலகில் எதுவுமே மாயை என்பது தவறு. பகவானுக்கு ரூபம் உண்டு. அவன் வைகுந்தத்தின் வசிக்கிறான். அவன் தான் ஜீவாத்மாவாகிய நம்மையும் உலகத்தையும் படைத்தான். பகவானின் உருவம் மனசு கற்பித்ததில்லை. அவன் நிஜமான உருவம் கொண்டவன் . பக்கத்தில் பிராட்டியோடு வைகுண்டத்தில் இருக்கும் பகவானை நாமெல்லாம் தியானிக்க வேண்டும் என்பது தான் ராமானுஜ உபதேசம்.

உபநிஷத்தின் வியாக்யானமான ப்ரம்மசூத்திரம் முக்கியமான வேதாந்த நூல்.

இதைப் படித்து உரை எழுதுவது அதாவது பாஷ்யம் பண்னுவது மிகக் கடினமான காரியம். அப்படிப்பட்ட ப்ரம்ம சூத்திரத்திற்கு சங்கரர் உரை எழுதினார். அது மத்வ பாஷ்யம் எனப்பட்டது.

அதே ப்ரம்ம சூத்திரத்திற்கு ராமானுஜரும் உரை எழுதினார். அது ஸ்ரீ பாஷ்யம் என்று மேன்மையாக அழைக்கப்படுகிறது. (119)

 ’பகவானின் உருவத்தை நித்யமும் தியானித்து உபாஸனம் செய்பவர்களுக்குத் தான் மோட்சம். இது பிராமணர்களுக்கு மட்டும் தான். பிராமணர் அல்லாத சூத்திரர்கள் மோட்சம் வேண்டும் என்றால் ... இந்தப் பிறவியை இப்படியே கழித்து, அடுத்த ஜென்மாவில் பிராமணனாக பிறக்க பகவானை பிரார்த்திக்க வேண்டும்.

ஒரு வேளை அடுத்த பிறவியில் பிராமணர்களாகப் பிறக்க அவர்களுக்கு பிராப்தம் கிடைக்குமானால் வேத உபநிஷத்துகளைக் கற்று பகவானைத் தொடர்ந்து தியானித்து மோட்சம் பெறலாம்.

அது போலவே ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்திரர்கள். எனவே அவர்கள் அடுத்த ஜென்மாவில் ப்ராமண புருஷனாக அவதரித்தால் தான் மோட்சத்துக்கு பாடுபடுவதற்குரிய தகுதியே கிடைக்கும்’, என்கிறார் ராமானுஜர்.(121)

திருமணச் சடங்குகளில் ரிஷிகளும், கோமாமிசமும் (பசு மாட்டுக் கறி) அவஸ்யமானவை என்கிறது வேத விதி. (146)

இப்போதும் திருமணங்களில் கோமாமிசம் சாப்பிடவேண்டிய சடங்குக்கான மந்த்ரத்தைச் சொல்கிறார்கள். அப்போது பெண்ணும் மாப்பிள்ளையும் தேங்காய் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்! காலத்தின் மாற்றத்தால் சடங்குகளை மாற்றிக் கொண்ட பிராமணர்கள் மந்த்ரங்களை மட்டும் இன்னும் விடாப்பிடியாய் பிடித்திருக்கிறார்கள்.(147)

பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது. பெண்களுக்கு உபநயனம் உள்ளிட்ட எவ்வித மந்த்ர சம்ஸ்காரங்களும் கிடையாது.(171)

8 வயசிலேயே கல்யாணம் பண்ணிக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் குடித்தனம் நடத்து. இல்லாவிடில், ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை .. உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப் படுமே கழிவு, அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படி ஒரு தண்டனையைப் பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை. (164)

(இந்த தண்டனையைப் பற்றியேதும் எழுத வேண்டாமென நினைத்து விட்டு விட்டேன். ஆனால் பின்னூட்டத்தில் ஒருவர்  //இந்துமதத்தை இவ்வளவு வக்கிர வர்ணனை செய்வதால் உங்கள் சார்பு நிலைதான் தெரிகிறது. .நான் அரண்மனையைப் பற்றிச் சொல்கிறேன். நீங்களோ அதிலுள்ள கழிவறையை கிளறிவிட்டு நாறுகிறதே என்கிறீர்கள் என்ன சொல்வது?// என்று வருந்தி எழுதியிருந்தார். ஆகவே விட்டுப் போனதை மறுபடியும் எழுதி “அரண்மனை”யின் அழகைப் பற்றி விலாவரியாக எழுதும்படியாகி விட்டது..) 


வேதமே இப்படி சொல்கிறதென்றால் மநு சும்மா விடுமா? வேதத்தை விட இன்னும் தெளிவாகச் சொல்கிறது. விதவைகளை சிதையிலேயே வைத்து தீர்த்துக் கட்டு என உத்தரவிடுகிறது. (173)

விதவைகளுக்குக் மொட்டை அடிக்கக் கூடாது என்று வடகலை வைணவர்கள் வலியுறுத்தினார்கள். அதெல்லாம் இல்லை மொட்டையடித்தே ஆகவேண்டும் என்பது தென்கலைக்காரர்களின் தரப்பு வாதம்.

வடகலை, தென்கலை என்றால் யார் யார்? பிரம்மத்துவம் எனப்படும் கடவுள் தன்மை பெருமாளின் துணைவியான பிராட்டி அதாவது தாயாருக்கு உண்டா என்ற பிரச்சனை எழுந்தது. பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் பங்கு கிடையாது; உதவும் சக்தி கிடையாது. வெறும் சிபாரிசு மட்டும் செய்ய முடியும் என்பது தென்கலைக்காரர்களின் வாதம். இதற்கு ‘புருஷகாரத்வம்’ என்பது சம்ப்ரதாயப் பெயர். இதனாலேயே விதவை மொட்டையடிக்க வேண்டும் என்றார்கள் இவர்கள். வட கலைக்காரர்களோ பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் குறிப்பிட்ட பங்கு இருக்கிறது என்று நம்பினார்கள்.இதனாலேயே இவர்கள் விதவைகள் மொட்டையடிக்க வேண்டியதில்லை என்றார்கள்.

இன்னும் 24 விஷயங்களின் அடிப்படையில் இந்த இருவரும் கருத்து வேறுபாடு கொண்டவர்கள். பின்பு 40 விஷயங்கள் என்று வளர்ந்து விட்டது.(174)





*



Tuesday, March 11, 2014

725. இந்து மதம் எங்கே போகிறது ? --- 2





*



***



இந்து மதம் எங்கே போகிறது?

                            அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்



*


உபநிஷத்துகள் ‘கடவுளுக்கு உருவம் இல்லை’ என்கிறது. ஆனால் உபநிஷத்தையும் தாண்டிக் குதித்து தமிழகத்தில் சிலைகளுக்கு முன்னால் மந்திரம் சொல்ல ஆரம்பித்தனர்.

இலக்கியங்கள் சித்தரிப்பது போல் ‘களவியல்’ என்பது தான் பழந்தமிழர்களின் திருமண முறை. (34)

களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் தாலி வந்த கதை சுவாரஸ்யமானது. திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில் ஒரு ஆண் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் ‘இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்’ என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள். பனை மரத்திற்கு ‘தால்’ என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது.

கல்யாணக் கலாச்சாரத்தில் மாற்றங்கள் கொண்டு வந்தார்கள் பிராமணர்கள். (36)

தமிழனின் களவியல், கற்பியலில் மந்த்ர இயல் புகுந்தது.

 “மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலமும் உண்டு” என்கிறது தொல்காப்பியம். (அப்போதே மேலோர், கீழோர் என்று பிரிந்து விட்டது.)(39)

கல்யாண முறை மட்டுமல்லாது அனைத்து வழிகளிலும் சூத்திரர்களை கீழ்ப்படுத்தினார்கள். இதற்கு மநு ஸ்மிருதி தான் ரொம்ப உதவியாக இருந்தது. சண்டாளர்களுக்கு அதிகமான கொடுமைகளைச் செய்தார்கள்.

யாரிந்த சண்டாளர்கள்? (40) பிராமண ஸ்திரிகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை சண்டாளர்கள் என்று பெயரிட்டு ஒதுக்கி வைத்தனர். இதே போல் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களுடன் கள்ளத்தனமாக உறவு கொண்டனர். இந்த சந்ததியரும் சண்டாளர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களை ஊரை விட்டே ஒதுக்கி வைத்தார்கள். (43)

A stable society அதாவது ஒரு நிலையான சமூகக் கட்டுமான அமைப்பு அமைய வேண்டுமென்றால் அது சாதியாகப் பிரிக்கப்பட்டால் தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு. (44)

முறை கேடான சாஸ்திரங்களை சாகடிக்கக் கூடிய வகையில் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவு கோல் வைத்துப் பார்த்தார் மநு. அவை – அனுலோம சங்கரம்; ப்ரதிலோம சங்கரம் சங்கரம் – சபிக்கப்பட்ட உறவுகள் என்று பொருள்.

ஆண் மேல் ஜாதிக்காரனாக இருந்து பெண் கீழ் ஜாதிக்காரியாக இருந்தால் அது அனுலோம சங்கரம்.  மேல்ஜாதி ஆண் என்பதால் இவர்கள் சண்டாளர்கள் இல்லை.(45)

மேல்ஜாதிப் பெண்ணை கீழ்ஜாதி ஆண்கள் கவர்ந்து பறித்து சுகர்ந்து விட்டால் மநுவின் பார்வையில் இது ப்ரதிலோம சங்கரம். இந்த சந்த்தியினர் சண்டாளர்கள். இவர்கள் ஊரை விட்டு விரட்டப்பட்டார்கள். (46)

 சங்கரர் – கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து சில தொலைவில் அங்க மாலி என்ற ஊர். அதிலிருந்து சிறிது தொலைவில் காலடி. இதுவே சங்கரர் பிறந்த இடம்.

வேதம், பகவத் கீதை, ப்ரம்ம சூத்திரம் எல்லாம் கற்று அதன் பின் புத்தரின் கொள்கைகளையும் வாசிக்க ஆரம்பித்தார். புத்தர் சங்கருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார். இறுதியில் ஒரு தெளிவிற்கு வந்தார். புத்தன் சொன்ன ஞானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் உள்ள அனைத்தும் பொய். அதுதான் எனக்குக் கிடைத்த ஞானம். (55)

இவ்வுலகில் ஞானம், அஞ்ஞானம் ஆகிய இரண்டு தான் உண்டு. வேதம் சொன்ன கர்மாக்கள் எல்லாம் பொய் – கடவுள் என்பதைத் தவிர என சங்கரர் உபதேசம் செய்ய வைதீகர்கள் சங்கரரை எதிர்க்க ஆரம்பித்தனர். தனது அத்வைதத்தை ஊர் முழுக்க பரப்பினார். (56)

தனது கருத்துகளை பஜகோவிந்தம் (கோவிந்தனை பஜனை செய்கிறேன் என்று பொருள்) என்ற நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார்.(59)

தீவிர கட்டுப்பாடுகளுடன் சந்யாசத்தைத் தழுவிக்கொண்ட சங்கரர் வேத கர்மாக்களை எதிர்ப்பதிலும் ஆர்வம் காட்டினார். தான் சந்யாசியான ஷணத்திலேயே தலையை மொட்டையடித்துக் கொண்டார். ய்க்ஞோபிதம் அதாவது பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். இந்த இரண்டும் சங்கரர் மீது வேதக்காரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. (61)

உபநிஷது – ’ஜானாதீ இச்சதீ யததே’ என்கிறது. ஆசைப்பட்டவைகளை அடைவது ஆனந்தம். ஆசைப்பட்டு அடைய முயற்சிகள் செய்து முயற்சியில் வெற்றி பெற்று ஆனந்தப்படுவது தான் அறிவு என்கிறது உபநிஷது. (62)

இக்கருத்துகள் சங்கரரின் அத்வைதத்திற்கு எதிராக இருந்தன.

வேதக்காரர்களின் எதிர்ப்பை சமாளிக்க சங்கரரே ஒரு முரண்பாட்டை சூடிக்கொண்டார். சித்த சுத்தியுடன் வேதம் சொன்ன கர்மாக்களை செய்தால் மோட்சம் எளிதில் பெறலாம் என்று சொல்லி அத்வைத குட்டையை சங்கரர் குழப்பி விட்டார்.

ஆதி சங்கரருக்கும் ஆகமக்காரர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடிக்கத் தொடங்கியது. ஆகமம் என்றால் வழி முறை; இவைகளை உபதேசிப்பவர்கள் ஆகமக்காரர்கள்.

 வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு இரண்டு ஆகமங்களும், சைவ சம்பிரதாயத்துக்கு 63 ஆகமங்களும் இருக்கின்றன.(63)

ஆகமக்காரர்களின் அறிவுரைகளை நம்பிக் கொண்டிருந்தால் மோட்சம் கிட்டாது; கடவுளின் கடாட்சமும் கிட்டாது. (64)

உலகியல் பற்று குறையும் போது உன் மனம் மோகத்தை முழுமையாக விட்டு விடுகிறது. மோகத்தை நீ விட்டு விட்ட போது  உனக்கு சலனம் இல்லாத சித்தம் வாய்க்கிறது. சித்தத்தில் சலனம் இல்லாமல் இருந்தாலே உனக்கு மோட்சம் கிடைக்கும். இதற்காக கர்மா, வழிபாடு எல்லாம் தேவையில்லை என்கிறார் சங்கரர்.

ஆதி சங்கரர் தன் 32 வயதிலேயே மோட்சம் அடைந்த்தாகச் சொல்கிறார்கள். அவரது காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்கிறார் நேரு தனது Discovery of India என்ற நூலில். (65)

புத்தரிடமிருந்து தனக்கான அத்வைதத்தின் சாரத்தைப் பெற்ற சங்கரர் வைஷ்ணவர்களால் ’ப்ரசன்ன புத்தர்’ என்றே அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரின் சிஷ்யர்கள் புத்த விஹார்களை முன்னோடியாக வைத்து மடங்களை நிர்மாணிக்க ஆரம்பித்தனர்.(67)

இம்மடங்களில் எந்த வித பூஜை புனஸ்காரங்களுக்கும் இடம் கிடையாது. அத்வைதம் காட்டும் ஞான மார்க்கத்தின் படி, விக்ரக வழிபாடுகள் கிடையாது; ஆகமங்கள் கிடையாது. வேதங்கள் சொன்ன கர்மாக்கள் கூடாது. (68)

தெற்கே சிருங்கேரியிலிருந்து, வடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே துவாரகா என்ற இடங்களில் மடங்கள் உள்ளன.

இளவயதில் மரணமடைந்த சங்கரர் கால் நடையாகவே நடந்து அத்வைதத்தைப் பரப்பி வந்திருக்கிறார். ஆகவே அவரே  இந்த மடங்களை ஏற்படுத்தினார் என்பது உண்மைக்குப் புறம்பானதாகவே இருக்க வேண்டும். (70)

நான்கு மடங்களிலும் உள்ள வழிபாடுகளும் வேறு வேறு.

ஸ்தீரிகளை மடத்தில் சேர்க்கக் கூடாது.

வேறு பிரதேசத்துப் பிராமணர்களும் மடங்களுக்குள் செல்ல முடியாது. சிருங்கேரி மடத்தின் உள்ளே தமிழ்நாட்டு பிராமணர்கள் தடுக்கப்பட்டார்கள். (75)

இதனால் புதியதாக  கும்பகோணத்தில் ஒரு மடம் ஆரம்பிக்கப்பட்டது. இது நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டது. அம்மடத்தின் மடாதிபதியாக ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆனார். (79)

பின்னால் இந்த மடம் மதராஸிற்கு அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டது. (81)





*

Saturday, March 08, 2014

721. இந்து மதம் எங்கே போகிறது? --- 1




*

***



***



இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

அந்தக் கால ஆப்ஹானிஸ்தான். மக்கள் பல பயங்களினூடே சுற்றும் பார்த்தார்கள்; அவர்களின் சிந்தனைக்குள்ளும் சூரியன் உதித்தது.  இதன் விளைவு – தெய்வம் கண்டுபிடிக்கப்பட்டது. வெளிச்சம் தான் தெய்வம் என்றான் உற்றுப் பார்த்தவன். இங்கிருந்த
ஆரியர்களில் ஒரு பகுதிதான் ஐரோப்பாவுக்கு நகர்ந்தது. 

இயற்கை தான் கடவுள்.
உற்றுப் பார்த்தவன் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு ‘ரிஷி’ என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான் ... பார்ப்பான் .. பார்த்துக் கொண்டே இருப்பான் என்று பொருள்.
நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் ... அதற்கு நாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள். உண்டாயிற்று வேதம்.(16)

வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது. ஆரிய இனத்தவர்கள் என்று வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும் இம்மனிதர்களிடையே இப்படித்தான் வேதம் பிறந்தது. 

இந்த நல்லெண்ண சிந்தனை வளர்ந்து மெருகேறியது தான் சமூக அமைப்பு; கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.(17)


ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக இரு பிரிவு.
ஆள்பவன் ஷத்திரியன் ஆனான். உழைப்பவன் வைசியன் ஆனான். வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான். 
ஷத்திரியனும் வைசியனும் வியர்வை சிந்தி உழைக்கப் போய் விட்டார்கள். வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது. ... வேதம் அவர்கள் கைக்குப் போனதும் வேத மதம் பிராமண மதமாயிற்று.
இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்ஹானிஸ்தானில் நடந்த்தாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன. 
ஆரிய மதம் வேத மதமாகி, வேத மதம் பிராமண மதமாகி கால வெள்ளத்தில்  அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க  .. அப்போது இங்கு 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்?(18)




இந்தியாவில் இருந்த 450 மதங்களில்
எது இந்து மதம்?
படிப்படியாக பார்ப்போம்

அன்று ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். ஆப்ஹானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது கூட வந்த பெண்கள் கம்மி. ஆனால் மநு ஸ்மிருதியைக் கையோடு கொண்டு வந்தனர். (19)

பிராமணன், ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை மநு பிளவாக்கியது. 
‘சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே; தர்மோபதேசம் பண்ணாதே; சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு.(20)

வைதீகக் கட்டுப்பாடுகள் சர்வாதிகரமாக விதிக்கப்பட்டன. ‘கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறார். இதுபடி கேள்; இல்லையேல் நீ பாபியாவாய்...’ என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள். (21)
இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதியப்பத்திய’ சூழ்நிலையில் தான் இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது. 
’வேதத்தை  சாதத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்; பேதம் வளர்க்காதீர்கள். கொடுமை தான் உங்கள் கொள்கையென்றால் வேதம் வேண்டாம்; மநு வேண்டாம்; கடவுள் வேண்டாம்; கர்மாக்கள் வேண்டாம்; மனித தர்மம் மட்டும்தான் வேண்டும்.’ – என இந்தச் சூழ்நிலையில் மிக மிக மிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.(22)

பிராமணர்கள் நெருப்பு வளர்த்து பல யாகங்கள் செய்தார்கள். மக்கள் பேசியது ப்ராகிருத மொழி. ஆனால் இவர்கள் அவர்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் மந்தரம் செய்தார்கள்; புத்தர் இதைப் பார்த்தார்.

 அசுவத யாகம் ஒன்றினை பிராமணர்கள் செய்து வந்தார்கள். மிகவும் கேவலமான யாகம் அது. ராணியை கேவலப்படுத்தும் யாகம் அது. இது போதாதென்று, அடுத்த கட்டமாக, யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல் என்றார்கள். (24)
புத்தர் வேள்விச்சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியைப் போட ... யாகத்தை விட பெரு நெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு. (25)
’இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே; ஒருவனுக்கு  இழப்பும் ஒருவனுக்குப் பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை இது.’ பிராகிருத மொழியில் பிளந்து கட்டியது புத்தர் குழாம். (26)
பிராமணர்களின் மிகபெரிய பலமே யாரிடம் எது நல்லதாக இருக்கிறதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து கொள்வது தான். புத்த இயக்கத்திடமிருந்து ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீகரித்தார்கள்.

மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள்.(26)
புத்த மதத்தினர் மெல்ல வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்தனர். பிராமணர்களும் பின் தொடர்ந்தனர். (27)

தீபவெளிச்சத்தில் பூக்களால் நடத்தப்பட்டது தான் தமிழனின் முதல் வழிபாடு. பூ + செய் = பூவால் செய். இது இணைந்து தான் பூசெய் .. பூசை என இப்போதைய வார்த்தையின் வடிவம் தோன்றியது. (28) இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர் எஸ்.கே. சட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார். 
வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம் தான் முன்னோடியாக இருந்திருக்கிறது. 
’நாயகன் - நாயகி பாவம்’ என்ற பக்தி வடிவத்தை உலகுக்குக் கொடுத்ததே தமிழ் இனம் தான். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் புத்தம் மற்றும் சமணக் கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவின. சமணக் கொள்கைகள் தெற்கே திருநெல்வேலி வரை பரவி விட்டது. நாகப்பட்டினம் வரை புத்தம் புகுந்து விட்டது. 
வட இந்தியாவில் புத்திசத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மகேந்திர பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது. 
பல்லவ ராஜாக்கள் வேதத்தை,  வேத நெறிமுறைகளை இங்கே விதைத்து வைத்தனர். புத்த போதனைகளால் எதிர்க்கப்பட்ட  வேத போதனைகள் இங்கே பிராமணர்களால் மறுபடியும் தலை தூக்கின. (30)



கடவுளுக்காக கைகூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக தமிழர்களின் உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள். 

நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா?  நாங்கள் சில மந்திரங்கள் சொல்கிறோம்; அதை உச்சரித்தால் தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி வரும். (33) 

சமஸ்கிருந்த மந்திரங்களை அச்சிலை முன்னர் கூறத் தொடங்கினார்கள். புதிதாக இருக்கிறதே என்று கேட்க ஆரம்பித்த தமிழர்கள் இன்றுவரை கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.