JUDAISM:
The March 5 attack on an important Jewish seminary by a Palestinian has hit Israel hard in several ways.
Rabbi Kook’s core doctrine revolved around the belief that the “messianic age” had already dawned, and that it would end with the arrival of a Jewish Messiah. The arrival of the messiah could be hastened by establishing settlements on land over which Jews have had a divine right, as revealed in the Hebrew Bible.
CHRISTIANITY:
Bush: "God is at work in world affairs, he(Bush) says, calling for the United States to lead a liberating crusade in the Middle East ..."
ISLAM:
Safdar Nagori and SIMI’s jihad ... “Mohammad is our commander; the Quran our constitution; and martyrdom our one desire.”
மேலே சொன்னவைகள் எல்லாம் தினசரிகளிலும் அல்லது மற்றைய ஊடகங்களிலும் வந்த செய்திகள். அவைகள் சொல்லும் செய்திகள் எல்லாமே "அரசியல் + மதங்கள்" என்ற கலப்பு பற்றியவைதான்.
மத்திய கிழக்காசியாவின் நீண்ட நாள் தலைவலியான இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சனை தீருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க பெரும் காரணியாக இருப்பது இரு தரப்பினரும் தம் தம் மதநூல்களின் அடிப்படையில் தங்கள் தரப்பிற்கு நியாயம் கற்பிப்பதே. பிரச்சனையில் உள்ள இடத்தை யூதர்கள் அது தங்கள் "divine right" என்று தங்கள் டோராவை வைத்துக் கற்பிதம் செய்து கொண்டபின் அங்கு மற்ற எந்த நியாய விவாதங்கள் எடுபடும்?
கிறித்துவ மதத்தின் "அரசியல் + மதங்கள்" என்ற ஒருமைப்பாடு ஐரோப்பிய கண்டங்களின் வரலாற்றையே முழுமையாக மாற்ற துணை நின்றது. அரசர்களும், அவர்களின் அரசுகளும் மதத்தலைவர்களின் முழு ஆள்மைக்கு அடிபணிந்தே பலகாலம் நடந்து வந்துள்ளன. ஆனாலும், கடந்த ஓரிரு நூற்றாண்டுகளாக இந்தப் பிணைப்பு சிறிதே தளர்ந்து விட்டது என்ற நிலை வந்த நேரத்தில் 11-செப்ட். நிகழ்வுக்குப் பிறகு ஜார்ஜ் புஷ் அதை மீண்டும் மறு உருவெடுக்க வைத்துள்ளார். நடக்கும் போர் எண்ணெய்க்காக நடக்கும் போரென்றாலும் அதை ஏதோ இரு மதங்களுக்கு நடுவேயான ஒரு போராகச் சித்தரித்து, புதிய உலகப் பிரச்சனைக்கு வழிகோலிட்டு விட்டார். அந்த நெருப்பு என்று இனி அணையுமோ?
இஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கையே மனித வாழ்வின் எல்லா கூறுகளுக்குமே அவர்களின் வேத புத்தகமே அடிப்படை என்பதே. முழுமையாக ஷாரியத் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள் அரசியலில் மதம் என்பதையும் தாண்டி, மதமே தங்களது அரசியலமைப்பு என்பதாக மாற்றிக் கொண்டுள்ளன. மதக் கோட்பாடுகள் என்ற பிறகு அங்கே வேறு மாற்று எண்ணம், நிலை என்பது வரும் என்று நினப்பது கனவுதான். அதோடு, 11-செப்ட்.க்குப் பிறகு நிலை மேலும் தீவிரமாகி விட்டது. மதங்களுக்காக, தங்கள் மத நம்பிக்கைகளுக்காக உயிர் விடுதல் உயர்ந்த விசயமாக்கப்பட்டு, அவர்களுக்காக சுவனம் காத்திருப்பதாகக் கற்பிக்கப் பட்டபின் நம்பிக்கையாளர்களின் வாழ்வை எதிர்நோக்கும் போக்கே மாறிவிடுகிறது. (நல்லவேளை! இதற்கு இணையான நம்பிக்கையாகக் கிறிஸ்துவர்களின் மத்தியில் இருந்த 'வேதசாட்சிகள்' என்ற சொல்லும், அதோடு இணைந்த அவர்களது கருத்துக்களும் இப்போது கொஞ்சம் நீர்த்து விட்டன என்றே நினைக்கிறேன்.)
மதங்களும் அரசியலும் ஒன்றோடு ஒன்றாக இப்படி பின்னிப் பிணைந்தபின் சமூகங்கள் மேலும் மேலும் பிளவு பட்டே நிற்கும் என்பது வெள்ளிடைமலை. காரண காரியங்கள் (reasoning) புறந் தள்ளப்பட்டு நம்பிக்கைகள் (faith) மட்டுமே பெரிதாக இருக்கும். 'தெய்வத்தின் வார்த்தைகள்' நமக்குள் பிளவுகளை வளர்க்க மட்டுமே பயன்படும். மனித ஒற்றுமை, மனித நேயம் எல்லாமே பின் தள்ளப் படும்.
இப்படியெல்லாம் இல்லாமல் இருந்த நம் சுதந்திர இந்திய நாட்டிலும் "அரசியல் + மதங்கள்" என்ற இந்த ஃபார்முலா வந்து விட்டது. அந்தக் காலத்திலேயே இந்த மண்ணிலும் மதங்கள் தங்கள் அரசியலை செய்து வந்திருக்கின்றன. மக்களும் மாற்றுக் கருத்துகளும் அழித்தொழிக்கப்பட்டுதான் வந்துள்ளனர். ஆனாலும் அந்த வரலாற்றுக் காலங்களுக்குப் பிறகு, விடுதலைக்குப் பிறகு - பெருமளவிற்கு நேருவுக்கு நன்றி - அரசியலும் மதமும் சிறிது இடைவெளியோடுதான் இருந்து வந்துள்ளன. ஆனால் இங்கும் நிலை மாறிக் கொண்டிருக்கிறது; இன்னும் முழுவதுமாக முற்றவில்லையெனவே நம்புகிறேன்.
அரசியலும் மதநம்பிக்கைகளும் கலக்கும்போது எப்போதும் பிறப்பது கலகமேயொழிய வேறில்லை. ஒரு வேளை ஒரே மதக்காரர்கள் மிகப் பெரும்பான்மையாயிருப்பின் அந்நாட்டில் குழப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் மற்ற நாடுகளில், அதுவும் இந்தியா போன்று கலவையான மக்கள் நிறைந்த நாட்டில் இந்த அரசியல் + மதப் பிணைப்புகளில் கேடுமட்டுமே மிஞ்சி நிற்கும். தண்ணீருக்குள் இழுக்கும் தவளையும், நிலத்துக்கு இழுக்கும் எலியும் கூட்டு சேர்ந்த கதைதான் நடக்கும். சேது சமுத்திரத் திட்டம் நல்லதா இல்லையா என்பதையும் மீறி, அத்திட்டத்திற்கு நேர்ந்த கதிதான் பலவற்றிலும் நடந்தேறும்.
அரசியலோடு கலக்க வேண்டியது பொருளாதாரக் கொள்கைகளேயன்றி நிச்சயமாக மதங்கள் அல்ல.
ராம ராஜ்ஜியம் என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்கலாம்; கொண்டாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் ராமரின் கதையே பள்ளியில் பிள்ளைகளுக்குக் கதையாகக் கூட சொல்லிக் கொடுக்கப் படக்கூடாது; அவ்வளவு ஏன், சிறுவர்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகக் கூட இருக்கக் கூடாது என்பதற்கும் - அது ஆர்ய-திராவிட என்ற வேறுபாட்டைச் சொல்லியோ, தந்தையேயாயினும் தன் உரிமையை நிலை நாட்டாததாலோ, தன் மனைவியையே சந்தேகித்ததாலோ - நியாயமான காரணங்களாக மற்றொரு சாரார் சொல்ல முடியும். ஒரு மதத்தின் கோட்பாடுகள் மற்றோருக்கு அதர்மமாகத் தோன்றுவது நித்தம் காணும் காட்சி. யார் கடவுள், யார் நபி என்பதிலோ, எந்தக் கடவுள் ஆர்யக் கடவுள், எந்தக் கடவுள் திராவிடக் கடவுள் என்றோ நமக்குள் என்றாவது ஒரே தீர்மான முடிவு வருமா? மத தர்மங்கள் பொதுவாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளக் கூடியவனவாக இருத்தல்
இதில், ஓட்டு கேட்டு வரும்போது மதத்தைக் கையில் எடுத்துக் கொள்வதும் ஆட்சிக்கு வந்தால் பல காரணங்களை முன்னிட்டு மதத்தை ஓரமாக ஒதுக்கி வைப்பதுமாக "விளையாட்டு" காண்பிப்பதும் இதுவரை பி.ஜே.பி. நமக்குக் காண்பித்த கண்ணாமூச்சி விளையாட்டு. ஒரு தடவை விளையாடியது போதுமென்றே நினைக்கிறேன். இன்னும் 'இந்துக்கள்' என்ற ஒற்றைப் போர்வையால் பெரும்பான்மையரை மூடி வைத்து, ராம ராஜ்யம் என்ற கானல் நீரை நோக்கி ஓடும் விளையாட்டை நிறுத்துவதே நல்லது. அவர்கள் விளையாடிக் கொண்டு தானிருப்பார்கள். நாம்தான் நிறுத்த வேண்டும்.
2011- நடக்கப் போகும் மக்கள் கணக்கெடுப்பில் ப.ம.க. தலைவர் சாதிவாரியாகக் கணக்கெடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். அதோடு, மதவாரியாகவும் கணக்கெடுக்கவும் கோரிக்கை வைத்தால் நலமே.
ஆனால் அதற்கு முன்பே யார் யார் இந்துக்கள்; யார் யாருக்கு தாய்மதம் எது எது? என்பதையும் முடிவு செய்வது அவசியம். இக்கருத்தைப் பற்றி சமீபத்தில் சிறில் எழுதிய பதிவும், அப்பதிவின் பின்னூட்டத்தில் லெமூரியன் தந்துள்ள கருத்தும் (கீழே தந்துள்ளேன்.) இந்தப் பதிவுக்குத் தொடர்புள்ளதாகக் கருதுகிறேன்.
லெமூரியன்:இந்து என்கிற சொல் சிந்து என்கிற சொல்லில் இருந்து மறுவி வந்தது என்கிற பின்னணி மட்டும்தான் இருக்கிறது. ஆனால் வேதங்களிலோ, புராணங்களிலோ, மற்ற இந்து மத நூல்களிலோ இந்து என்கிற சொல்லே இடம்பெறவில்லை. இந்து என்கிற சொல்லிற்கு பாரசீக மொழியில் இந்திய கண்டத்தைச் சேர்ந்தவன். அடிமை மற்றும் பெரியார், கலைஞர் கூறிய அர்த்தமும் உண்டு. 5000 ஆண்டு தொன்மையுடையது என்று கூறப்படும் ஒரு சமயத்திற்கு 1000 ஆண்டுகளுக்கு முன் படையெடுத்து வந்த பாரசீகர்கள்தான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்து மதம்தான் இந்தியாவின் தொன்மையான மத நம்பிக்கை என்கிற வாதமே பொய்யானது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?. ஆரியர்களால் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இனம்பிரிக்கும் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சனாதானம் என்கிற கட்டமைப்பே பாரசீகர்கள் இந்திய கண்டத்தினரை இழிவாக விளிக்க உபயோகித்த இந்து என்கிற சொல்லை கடன் வாங்கி இன்று இந்து மதம் என்று அழைக்கப்படுகிறது.