Showing posts with label திரைப்படங்கள். Show all posts
Showing posts with label திரைப்படங்கள். Show all posts

Sunday, May 26, 2024

1276. லவ்வர் ... திரைப்பட விமர்சனம்


**

ஜெய்பீம், குட்னைட்  படங்களுக்குப் பிறகு லவ்வர் படம் பார்த்தேன். நினைத்தபடி கதையை முடித்த விதம் பிடித்திருந்தது.

காதல் உன்மத்தம் தலைக்கேறிய இளைஞனின் ஏறத்தாழ ஒரே மாதிரியான எதிர் வினைகளை வைத்தே ஒரு படம் எடுத்திருந்தாலும் திரைக்கதையை அலுக்காமல் கொண்டு சென்ற இயக்குநருக்குப் பாராட்டுகள்.

இப்போது வரும் படங்களில் “ex” என்ற பதம் அடிக்கடிப் பயன்படுவதைப் பார்க்கும் போது காதல் தோல்வியால் தாடி வளர்க்காமல் “break up” என்பதைத் தாண்டி இளைஞர்கள் எளிதாகச் செல்லும் “நல்ல” வழியைக் காண்பிக்கும் நல்லதொரு நாகரிக முன்னெடுப்பு என்றே நினைக்கின்றேன்.

விஜய் சேதுபதியிடமிருந்து விலகி மெல்ல மணிகண்டனை நோக்கி நடை போட ஆரம்பித்திருக்கிறேன்.




Tuesday, January 16, 2024

1272. SAMSON AND DELILAH vs LEO

எந்த ஆண்டு அந்தப் படம் வந்தது என்று ஆண்டவரிடம் கேட்டேன். 1949 என்று போட்டிருந்தது. அதாவது எனக்கு நாலைந்து வயது. ஆனாலும் பாருங்க ... அந்தப் படத்தை ரொம்ம்ம்ம்ப சின்ன வயசில பார்த்திருக்கிறேன். எப்போ படம் இந்தியாவிற்கு வந்ததோ... நான் எங்கு, யாருடன் அந்தப் படத்தைப் பார்த்தேனோ என்பதெல்லாம் நினைவில் இல்லை. சின்ன வயதில் பார்த்த ஒரு படம். ஒருவேளை பைபிள் படம் என்பதால் பள்ளியில் காண்பித்திருக்கலாம்.(ம்ம்... அதற்கு வாய்ப்பில்லை.) எப்படியோ அந்தப் படத்தை அன்னாளில் பார்த்தேன்.


https://youtu.be/yMo3DL_KkHE?si=dl0b261hgoUwe0O7

அந்த சாம்சன், நம்ம கர்ணன் மாதிரி தன் சக்திகள் அனைத்தையும் தன் தலைமுடியில் வைத்திருந்தாராம். அதை வெட்டிட்டா அவரை எதிரிகள் அடித்து வீழ்த்த முடியும், டிலைலா  “முடிவெட்டும்” சீன் இன்னும் நினைவில் இருக்கிறது. இருந்தாலும் அவர் ஹீரோ அல்லவா... அதுனால் முடி போனாலும் முடிவில் ஹீரோ தான் ஜெயுக்கணும்.  கடைசியில் அவர் எதிரிகளோடு சண்டையிடுவார். அதில் நினைவில் இருப்பதெல்லாம், அவர் கையில் கழுதை அல்லது கோவேறிக் கழுதையின் கீழ்த்தாடை எலும்பு இருக்கும். அது மட்டுமே அவரது ஆயுதம். மயிரும் ஏற்கெனவே போய் விட்டது, இருந்தாலும் அந்த எலும்பை வைத்து எதிரிகளை அடித்துத் துவம்சம் செய்து விடுவார். அடின்னா அப்படி ஒரு அடி அடித்துக் கொல்லுவார்.

https://www.youtube.com/watch?v=yMo3DL_KkHE

அசந்து பார்த்தது அந்தக் காலம் அப்டின்னு நினச்சுக்கிட்டு இருந்தப்போ பொங்கலுக்கு லியோ படம் போட்டாங்க. அது ஒரு மூணு நாலு மணியளவில் ஓடுமா... நல்ல வேளை .. படம் பார்க்கிறப்போ பொங்கல் வாழ்த்து சொல்லி, கதையடிக்க மூணு நண்பர்களின் தொலைபேசி அழைப்பு வந்தது.  அப்பப்போ mute போட்டு பேசினேன். அப்போவெல்லாம் சில வெவ்வேறு மாநில ஊர்களின் பெயர்களின் ஸ்லைடுகளும் வந்திச்சு. அதையெல்லாம் வச்சி நானோ ஒரு கதை உண்டாக்கிக் கிட்டேன். 

அதிலும் பிக்பாஸ் ஜனனி, மாயா இவங்கல்லாம் ஒத்த ஒத்த சீனுக்கு வந்தாங்க... எதுக்கு வந்தாங்கன்னு தெரியலை. அப்புறமா காணாம போய்டுறாங்க. திரிஷா எங்கேயோ போய் டிடக்டிவ் வேலை செய்றாங்க. இப்படியெல்லாம் போச்சா ... கடைசி சீன் வந்திருச்சா .... அதுல, சாம்சன் கையில் கழுதையின் தாடை எலும்புன்னா இங்க பார்த்திபன் அலையாஸ் லியோ - அதாவது விஜய் அண்ணா - கையில் ஒண்ணறை இஞ்சி சைசில் சின்னப் பேனா கத்தி மட்டும் இருந்தது. ஆனால் mortality rate இன்னைய படத்தில் அதிகம். ஏறத்தாழ ஐநூறு பேரை அந்த ஒண்ணரையணா... இல்லைங்க .. ஒண்ணறை இஞ்ச் கத்தியே வச்சி அத்தனை பேரையும் வெட்டிச் சாய்ச்சிட்டார் விஜய் அண்ணா.

சாம்சன்னை விட நம் விஜய் அண்ணாதான் பெட்டர்.


Friday, January 12, 2024

1271. kathal, the core #dharumispage

Saturday, October 21, 2023

1255. தண்டட்டி

Saturday, April 15, 2023

1218. #விடுதலை #DHARUMIsPAGE

Wednesday, December 21, 2022

1210. #விட்னஸ் #DHARUMIsPAGE #FILMREVIEW

Wednesday, December 07, 2022

1204. #வதந்தி #webseries #DHARUMIsPAGE

Thursday, November 17, 2022

Friday, September 16, 2022

1185. 19 (1) (a) - திரைவிமர்சனம்


 

ப்பாடா .. ஒரு வழியாக மொழியாக்கம் செய்து கொண்டிருந்த வேலை முடிந்தது. 532 கையெழுத்துப் பக்கங்கள். இனி அதைச் சரிசெய்து…. இன்னும் எவ்வளவோ இருக்கு ... ஆனாலும் ஒரு பெரிய வேலையைச் செய்து முடித்த மகிழ்ச்சி. கொண்டாட வேண்டாமா...?


                                              

சினிமா அதுவும் மலையாளச் சினிமா பார்த்து விட வேண்டும் என்று நெட்பிளிக்ஸில் தேடலை ஆரம்பித்தேன். விஜயசேதுபதி மலையாளத்துப் படத்திலா? அதுவும் நித்தியா மேனன் படமா என்று ஓர் ஆச்சரியம். படத்தின் பெயர் 19(1)(a). அது என்ன சட்டம் என்று பார்த்தேன்: Article 19(1)(a) of the Indian Constitution upholds freedom of speech and expression.

 

படம் ஆரம்பித்தது. விடியாத இளங்காலை நேரம். விசே வருகிறார். ஒரு டீ குடிப்பதற்குள் யாரோ வந்து அவரைச் சுட்டு விட்டுப் போய் விடுகிறார்கள். அதற்குப் பிறகு கொஞ்சம் நேரம் வரை அவரைக் காணவே காணோம்.


                                               

 

படம் பார்த்ததும் அப்படி ஒரு பெரும் ஆச்சரியம். இது போன்று ஒரு படம் தமிழில் வருவதற்கு அநேகமாக இன்னும் பத்து ஆண்டுகளாவது ஆகும் என நினைக்கின்றேன்.ஏனெனில் நம் ரசிகப் பெருமக்களின் தரம் அப்படி. இப்படத்தில் விசே வரும் சீன்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மீதியெல்லாம் நித்தியா மட்டுமே வருகிறார். அவரைச் சுற்றி மூவர்: ஒரு (இஸ்லாமியத்) தோழி; ஒரு கம்யூனிச தோழர்; வாழ்க்கையையே ஒதுக்கி வாழும் தகப்பன். இவர்களும் வரும் இடங்கள் எல்லாமே ஒரு கை எண்ணுக்குள்ளேயே தானிருக்கும். படங்கள் எதையும் விளக்குவதில்லை. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்ற பாணி. டமில் ரசிகர்கள் இதில் தோற்றுவிடுவார்கள் என்று இயக்குநர்கள் பயப்படுவார்கள்.


 2017 ஆண்டில் பெங்களுரில் கொல்லப்பட்ட கெளரி லங்கேஷ் என்ற இதழாளரின் மரணம் இக்கதையின் ஆரம்ப வித்து. இதே போல் இப்படத்தில் வரும் சமுகப் போராளியான விசே கெளரி சங்கர் கொல்லப்படுகிறார். அவரால் எழுதப்பட்ட  அவரது கடைசி எழுத்துகள் நகல் எடுப்பதற்காக நித்தியாவிடம் வருகிறது.

 

பெண் இயக்குநர் இந்துவிற்கு இது முதல் படம். அவரது துணிச்சலுக்குப் பாராட்டுகள். தயாரிப்பாளருக்குப் பெரும் பாராட்டுகள். படம் ஒரு காவியம் போல் மெல்லவே விரிகிறது. படம் முழுவதும் நித்தியாவிற்கே சொந்தம். இறந்து போன போராளி மீது நித்தியாவிற்கு ஏற்படுவது மரியாதை ஏற்படுகிறது.  இல்லை .. அதையும் தாண்டி அவர் மீதான அபிமானம், அன்பு, பெருமிதம் எல்லாம் கூடுகிறது.அவரது நூலைத் தன் பையில் வைத்துக் கொண்டு நெஞ்சோடு அழுத்திப் பிடித்தபடியே இருக்கிறார்.  சுவற்றில் வரைந்த விசேயின் படத்தைப் பார்க்கும் போது பின்னாலிலிருந்து ஒரு கேள்வி: எதைப் பார்க்கிறாய்? படத்தையா, வாசகங்களையா? என்றொரு கேள்வி. நித்தியாவின் பதில் இரண்டையும் தான். இதுவும் ஒரு காதல் அல்லது பக்தி தான்.

 

விசேயின் அக்கா வீட்டிற்கு ஒரு பத்திரிகையாளரோடு செல்கிறாள் நித்தியா. அங்கே ஒரு virtual விசே வருகிறார். (இங்கேயும் டமில் ரசிகர்கள் பெயிலாகலாம்!) அமைதியான, அழகான சீன். அந்த வீட்டிலிலிருந்து கிளம்பி நடக்கும் போது நித்தியா நின்று திரும்பி வேகமாகத் திரும்பி வந்து விசெயின் அக்காவைக் கட்டிப் பிடித்துவிட்டு, பின் திரும்பாமல் விரைகின்றார். எனக்குப் பிடித்த சீன்.

 



 

விசே எப்படி என்றே தெரியவில்லை. தன்னுடைய இருப்பின் தாக்கத்தை முழுவதுமாகத் தந்துள்ளார். அந்தக் காலத்தில் சிவாஜி கணேசன் சிகரெட் பிடிக்கும் அழகிற்கு யாரும் பக்கத்தில் நெருங்க முடியாது என்று நினைப்பதுண்டு (புதிய பறவை, ‘யார் இந்த நிலவுப் பாடல் ... போன்றவைகள் நினைவுக்கு வருகின்றன).  அந்தப் பாடல்களில் சிகரெட்டும் இன்னொரு character ஆகவே இருக்கும். அதன்பிறகு பல நடிகர்கள் முயன்று தோற்றதை விசே மிக அழகாகச் செய்துள்ளார். சிவாஜியின் நடிப்பில் aesthetics நன்கிருக்கும். ஆனால் விசே செய்தது அப்படியே ஒரு smoker செய்யும் விதத்தை அழகாகக் காண்பித்திருப்பார். இவரும் சிகரெட்டை  ஒரு பாத்திரமாக ஆக்கியிருப்பார். மிக மிக சின்ன ரோல் தான் அவருக்கு. ஆனால் நிறைவாகச் செய்துள்ளார். இலைகள் நிறைந்த ஓர் ஒற்றையடிப்பாதையில் நடப்பதைக் காண்பித்திருப்பார்கள். நிறைந்த காட்சி. பின்னால் கதாநாயகி வந்து விடுவாரோ என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது.

 

இப்படத்திப் பார்க்கும் போது, தீவிரமாக எழுதப்பட்ட ஓர் ஆணின் கவிதையை ஓர் அழகான பெண்ணின் குரலில் கேட்பது போன்றிருந்தது.

 

போராளிகள் கொல்லப்படலாம்; ஆனால் போராட்டம் சாகாது என்பதை மிக அழகாகப் படமாக்கியுள்ளனர்.

                                           



Wednesday, August 03, 2022

1177. #12th MAN #FILMCRITICISM #திரைவிமர்சனம் #DHARUMIsPAGE

Tuesday, June 28, 2022

1169.#விக்ரம் #நெஞ்சுக்குநீதி #DHARUMIsPAGE #FILMCRITICISM

Wednesday, June 22, 2022

1168. #OXYGEN #FILMREVIEW #DHARUMIsPAGE #

Saturday, June 18, 2022

1266. நடிகர்களின் ரசிகர்கள் எனிப்படி இருக்கிறார்கள்?




*

அம்புலிமாமா கதைகள்

தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள்

மு.வரதராசனார்

அகிலன்

கல்கி

நா. பார்த்தசாரதி

.

.

.

ஜெயகாந்தன்

தி.ஜா.ரா.

இந்திரா பார்த்தசாரதி

அதன் பின் .. அசோகமித்திரன், லாசாரா, கி.ரா., சுந்தர ராமசாமி, கோணங்கி, மெளனி, ஜெ.மோ. என்று பலர் எழுத்துகளை ஆங்காங்கே தூவிக்கொண்டதுண்டு. சாரு மாதிரி ஒரு சிலரை ஓரிரண்டு வாசித்து விட்டு சுத்தமாகப் புறந்தள்ளியதுமுண்டு.

ஒரு வாசிப்பாளனின் வாசிப்பின் பரிணாமம் இப்படித்தானே அடுக்கடுக்காய் இருக்க முடியும்.

ஆனால் ஏதாவது ஒரு நடிகரைப் பிடித்துப் போனால் தங்கள் ஆயுள் முழுவதும் அவரின் விசிறியாக மட்டுமே இருப்பது எப்படி? நான் இன்னும் அம்புலிமாமா கதைகளைப் படித்துக் கொண்டு, ‘ஆஹா .. என்னே கதைகள்... என்னா இஸ்டைலு .. என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்னைப் பார்த்து சிரிக்க மாட்டார்களா? சிவாஜி மாதிரி இன்னும் யாரும் நடிக்க முடியுமான்னு ஒரு கேள்வி மனதிற்குள் இருந்தாலும், இன்று அவர் படங்களைப் பார்த்து முன்பு போல் ரசிக்கமுடியவில்லை; ரசிக்க முடியாது. அடுத்தடுத்து யார் என்று தானே இருக்க வேண்டும்.

இல்லீங்க ... சின்னப் பிள்ளையிலிருந்தே எனக்கு அவரைத் தான் (அவரை மட்டும் தான்) பிடிக்கும்னு யாரும் சொன்னால் ...

.... தள்ளி உட்கார்ந்து அவர்களை வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.





*

Sunday, June 12, 2022

1265. #DHARUMIsPAGE #DON

Wednesday, June 08, 2022

1264. JANA GANA MANA A DARING MOVIE

Thursday, May 26, 2022

.1263. #HARRIET #FILMCRITICISM #DHARUMIsPAGE ##திரைவிமர்சனம்

Wednesday, May 11, 2022

1262. #FILMCRITICISM #SANNI KAAYITHAM #GANGUBOI(HINDI) #DHARUMIsPAGE #திர...

Thursday, May 05, 2022

1260. #KING RICHARD #FILMCRITICISM #DHARUMIsPAGE

Monday, May 02, 2022

1259. #kadaisila biriyani #DHARUMIsPAGE # FILMCRITICISM

Thursday, April 28, 2022

1258. #NIGHT DRIVE #DHARUMIsPAGE #FILMCRITICISMS