Monday, January 28, 2019

1030. அமைச்சர்களுக்கு ஓர் அவசர ஆலோசனை





*





பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம் கதைகளை வாசித்த சின்ன வயசிலிருந்தே எனக்கு நம்ம ஊரு மவராசாக்களை நினைத்தால் பக்தி பெருகும். அவர்கள் மேல் அம்புட்டு மருவாதி எனக்கு. கோன் உயர்ந்தால் கொடி உயரும் ... கொடி உயர்ந்தால் மக்கள் உயரும்னு சொல்லியிருக்காங்களாமே.(கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கேனோ ... பரவாயில்லை.)  மருவாதி வருவதற்கும் அதான் காரணம். 

அந்த மரியாதையின் நீட்சியாக இப்போதும் நம்ம அமைச்சர்கள் மேலும் எனக்கு ரொம்ப மருவாதியா ஆகிப் போச்சு. அவுக நல்லா இருந்தாதேனே நாமளும் உயர முடியும். அவுக நல்லா இல்லாட்டா நாமளும் நல்லா இருக்க முடியாதுல்லா? அதனால் அவுக நல்லா இருக்கணும்னு நான் இல்லாத சாமியை எல்லாம் கும்புடறதுண்டு. என் தேச பக்திக்கே இது தான் முக்கிய காரணம்.

இப்படி இருக்கச்சே ... இன்னைக்கி நம்ம சீப் மினிஸ்டர் புதுசா ஒரு செய்தி சொன்னார். அதாவது வெளிநாட்டு கம்பெனிகள் நிறைய நம் மாநிலத்திற்கு வருகிறார்களாம். அப்டி சொல்லிட்டு, இந்தியாவிலேயே இது மாதிரி வெளிநாட்டு மக்கள் வியாபாரத்திற்காக வருவதில் நம்ம மாநிலம் இரண்டாம் இடம் வகிக்கிறது என்று சொன்னார். அதில எனக்கு ஒரு சின்ன வருத்தம்.

நம்ம ஊர் வழக்கப்படி எல்லா மாநிலத்திலும் தொழில் ஆரம்பிக்கணும்னா அந்த மொதலாளிகள் கட்டாயம் நம் மாநில அமைச்சர்களுக்கு கமிஷன் கட்டாயம் வழங்கணும். அப்போது தான் கதவுகள் எல்லாம் திறக்கும். நெலமை இப்படி இருக்கும் போது வெளியில இருந்து பணம் போடுற ஆளு எங்க கமிஷன் குறையா வாங்குவாங்களோ அங்க தான கட்டாயம் போவாங்க. அப்படிப் பார்த்தால், நிறைய முதலீட்டாளர்கள் வர்ராங்க அப்டின்னா இங்க கமிஷன் தொகை ரொம்ப கம்மின்னு தானே அர்த்தம். அதுனால் குறையா கமிஷன் வாங்கிறதுல்ல நம்ம மாநிலம் இரண்டாம் இடத்தில நிக்கிது போலும்.

இந்த ஆங்கிளில் யோசித்தேனா... அப்போதிருந்து எனக்கு ரொம்பக் கவலையாகப் போச்சு, நம்ம அமைச்சர்கள் குறையா கமிஷன் வாங்கி ரொம்ப நட்டப் படுறாங்களே அப்டிங்கிற கவலை.

நம்ம அமைச்சர்கள் என்ன இங்கே நீண்ட நெடுங்காலமாகவா இருக்கப் போகிறார்கள். இருக்கிற கொஞ்ச காலத்தில் அள்ளி அமுக்கிப் போடாமல் சும்மா இருக்கிறார்களே என்ற கவலை எனக்கு. யாராவது அமைச்சர்கள்ட்ட சொல்லி சீக்கிரமா எல்லாத்தையும் அள்ளி முடிச்சி செளக்கியமா இருக்கச் சொல்லுங்க.


அவங்க நல்லா இருந்தா தானே நமக்கும் நல்லது. இல்லையா?


*******

*





Sunday, January 27, 2019

1029. பொங்கல் “பரிசு” ... பார்த்த சில திரைப்படங்கள்




*





பொங்கல் விடுமுறை. தொலைக்காட்சி தயவுகளில் நாலைந்து படம் பார்த்தேன்.
1. செக்கச் சிவந்த வானம்
2. மகா நடி
3. வடசென்னை
4. சர்(க்)கார்
5. திருட்டு டிவிடியில்  .. சீதக்காதி.

3 & 5 படங்களில் பாதியிலேயே எழுந்து விட்டேன். வடசென்னை .. மிடியலை!
சர்கார் .. முருகதாஸைப் பற்றித் தெரியும் முன்னே அவரது ரமணா படம் பிடித்தது. சர்கார் .. நல்ல பிரச்சனை. அதை இம்புட்டு வசனம் மூலம் சொல்ல நினச்சது உயிரை வாங்குச்சு. அதோடு நம்மாளு விசய் வசனம் பேசும் போது பண்ணும் கொனஷ்டைகளை அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கலாம். எனக்கு வேடிக்கை & வேதனை. எழுந்து விட்டேன். ஆனாலும் ஒரு பாரின் ரிட்டர்ன் ... இப்படி ஐம்பது ஆட்களை ஒரே நேரத்தில் துவம்சம் செய்வது அவரது ரசிகர்களுக்கே பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. துவச்சி எடுத்துறார் மனுசன் ... சிவகாசி படத்தில் இருந்த மாதிரி.

செக்கச் சிவந்த வானத்திற்கும் எழுதிருந்திருக்க வேண்டும், ஆனால் ஒரு வேளை விஜய்சேதுபதி ஏதாவது ஒன்றிரண்டு நல்ல சீன் பண்ணிவிடுவாரோ என்ற தயக்கத்தில் படம் முழுவதும் பார்த்துத் தொலைத்தேன். எப்படி விஜய் சேதுபதி உட்பட எல்லோரும் ஒருமித்த குரலில் இன்னும் மணிரத்தினத்தின் புகழ் பாடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தப் பட்த்தை நெகட்டிவ் காட் பாதர் ஆக்க நினைத்து முயன்றிருப்பார் போலும். ஒரே துப்பாக்கி சூடுகள் தான். அதோடு நம் காதில் ஓட்டை போட ஒரு ஊசியும் கையில் வைத்துக் கொண்டே இயக்கியிருக்கிறார். ஒரு நண்பரிடம் சொன்னேன், ஆனால் அவர் 5 கோடி செலவு செய்து 9 கோடி அந்தப் படம் கொடுத்தது .. ஆகவே அது ஒரு வெற்றிப் படம் என்றார்.

சீதக்காதி ... சேதுபதி உயிரோடு இருக்கும் வரை படம் கனமாக இருந்தது. நடுவில் சில பக்கத்தைக் காணோம் என்ற நகைச்சுவைப் படத்தை எடுத்த இயக்குனர் எப்படி ஒரு கனமான கதையை எடுத்திருக்கிறார் என்று நினைத்துப் படம் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய நாடகக் காட்சிகள் வரும் போது அந்தக் காலத்தில் சிவாஜிக்காக படங்களின் நடுவே நாடகங்கள் வருமே அந்த நினைவு வந்தது. அதிலும் சேதுபதி இளவயதில் அரச உடையோடு வரும் ஒரு சீன். சரி... சிவாஜி வீர மகனைப் போரில் பறி கொடுத்த வீரத்தாய் வசனம் மாதிரி ஏதும் பேசுவாரோ என்று எதிர்பார்த்தேன். ஒரே வரி வசனத்தோடு முடிந்தது. அவ்ரங்கசீப் படுத்திருப்பது போல் ஒரு போஸ். அதில் வலது காலை நீட்டி, இடது காலை மடித்து இருப்பதுபோல் சேதுபதி படுத்திருப்பார். அந்த போஸில் சிவாஜி நன்கு எட்டிப் பார்த்திருந்தார்.

ஒரு வேளை அந்த சீனில் எனக்கு சிவாஜி நினைவுக்கு வந்ததற்கான காரணம் கலை கலைஞனுக்குப் பிறகும் வாழும் என்ற இப்படத்தின் tag line சொல்வது போல் எனக்கு சிவாஜியின் நினைவு வந்திருக்குமென நினைக்கின்றேன்.

ஆனால் சேதுபதி இறந்த பிறகுதான் இந்தப் படம் பாண்டசி என்ற வகையான ஒரு காமெடி படம் என்பது புரிந்தது. கலைஞனுக்குப் பிறகு அவன் கலை நீண்டு வாழும் என்பது சரி. ஆனால் அவரது ஆத்மாவே வந்து நடிப்பதாகச் சொல்லி ... படத்தைப் பார்த்து சிரிப்பதா, இயக்குனரைப் பார்த்து சிரிப்பதா என்று தெரியவில்லை. பெருத்த ஏமாற்றம்.



மகா நடி ... சாவித்ரி மீது மிகுந்த மரியாதை உண்டு. அதுவும் அவர் மரணத்திற்குப் பின் அவரை நினைத்தாலே ஒரு வெறுமையும், இருளும் சுற்றி கவிவதைத் தடுக்க முடிந்ததில்லை. இதுவரை கீர்த்தி சுரேஷ் அழகாகச் சிரிப்பார் என்பதைத் தவிர ஏதும் பெரிதாகக் கண்டதில்லை. நன்றாக நடிப்பார் என்று எப்போதும் எதிர்பார்த்ததில்லை. ஆனால் இந்தப் படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்து விட்டார். இறுதியில் வரும் சீன்களில் முகமும் கூட சாவித்ரியின் முகமாகவே அவரது முகம் எனக்குத் தோன்றியது. இறுக்கமான படம்.











*



Saturday, January 26, 2019

1028. AUSTRALIAN OPEN 2019 ...4





*




இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதியாட்டம் பார்க்கும் போது பழைய்ய்ய ஞாபகம் ஒன்று வந்தது.

இன்று முதலாட்டத்தில் ஜப்பானிய ஓசாகாவின் கை ஓங்கியிருந்தது. வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டமும் வேகமாக நடந்தது. இரண்டாவது செட்டில் எதிராளியைத் தோற்கடிக்கும் நிலைக்கு வந்தார். 5:4 என்ற முன்னிலையில்  40:0  என்ற நிலைக்கு வந்தார், மூன்று செர்வ்கள் இருந்தன. மூன்றில் ஒன்றை ஒழுங்காக விளையாடியிருந்தால் வெற்றி அவருடையதே. ஆனால் ஒவ்வொரு பாய்ண்ட்டும் கை நழுவிப் போய்க் கொண்டிருந்தது. எதிராளி - விட்டோவா - இரண்டாம் செட்டைக் கவ்விக் கொண்டு போனார்,

அடுத்த செட் ஆரம்பித்த போது அந்தக் காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த சபாட்டினி இதே போல் ஒரு ஆட்டத்தில் 6 : 1, அடுத்த ஆட்டத்தில் 5- 1 என்ற நிலையில் செர்வ் செய்ய ஆரம்பித்து பெர்னாண்டஸ் என்ற எதிராளியிடம் தோல்வியுற்றார். அப்போது ’’till you win the last ball, the game is anybody's  என்று தினசரியில் வாசித்த நினைவு. அதே நினைவு மீண்டும் வந்தது. மூன்றாம் செட்டின் ஆரம்பமும் விட்டோவாவிற்குச் சாதகமாகவே ஆரம்பித்தது.


அவ்வளவு தான்... ஒசாகா தோற்றுவிடுவார் என்று தோன்றியது. போட்டியையும் தொடர்ந்து பார்க்க முடியாது போனது. ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் போது போட்டி முடிவு என்ன என்று ஆண்டவரிடம் கேட்டேன். கூகுள் ஆண்டவர் ஒசாகா வென்று விட்டதாகச் சொன்னார்.   

மகிழ்ச்சி .......









*


Friday, January 25, 2019

1027. AUSTRALIAN OPEN 2019 ...3





*




செரீனா ... மூன்றாவது போட்டியில் 5:1 என்றிருந்தும் தோல்வியுற்றது சோகம் தான். இன்னும் ஒரு க்ராண்ட் ஸ்லாம் வெற்றி பெற்றால் அவருக்கான என் ஆதரவை முடித்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். முடியாமல் போனது. கொஞ்சம் சோகம் தான்.

நம்ம ஆளு நடால், ஜோக்கோவிச் இருவருமே அரையிறுதி ஆட்டத்தை எளிதாக வென்றார்கள். ஸ்கோர் கூட ஏறத்தாழ ஒரே மாதிரி. மூன்றே ஆட்டம் ... போட்டி இனிதே முடிந்தது.
இனி இவர்களுக்குள் போட்டி. நடால் வெல்லட்டும், இன்னும் மூன்று க்ராண்ட் ஸ்லாம் பரிசுகள் (என் கணக்கில்) அவருக்கு மீதியுள்ளது. வெல்ல வாழ்த்துகள்.

பெண்கள் ஒற்றையர் ஆட்டம் ... அட உடுங்க... யார் ஜெயித்தால் என்ன!

சீனியர் legends ஆண்கள் ஆட்டம் ஒன்று நடந்தது. அதிர்ஷ்டம் தான். பார்க்க நன்றாக இருந்தது. நரைத்த பெரிய மீசை ஆளு அசத்தல். நல்ல sense of humour. அந்தக் காலத்தில் எப்படி ஆடியிருப்பாரோ? நானும் இப்போது ரொம்ப வயசாயிருக்குமோன்னு நினச்சேன். 63 தானாம்! நம்ம பக்கத்தில நெருங்க முடியுமா?









*




Monday, January 21, 2019

1026. AUSTRALIAN OPEN 2019 ...2




*

இன்னைக்கி காலைல யார் மூஞ்சில முழிச்சேன்னு தெரியலை. இப்படியா ஒரு டென்னிஸ் போட்டிய பார்க்கணும். விளையாடியது நாலாவது சுற்று. Pre-quarter final. செவ்ரெவ்(4)- ராகோனிக்(16) நடுவில் போட்டி. முடிவு 6:1; 6:1: 7:6

முதல் இரு செட்டுகளிலும் ஒரு “செட்டு” மேளம் மட்டுமே கேட்டுது. ராகோனிக் விளையாடினார்.  பாவம்.. செவ்ரெவ். புதிய சில விளையாட்டுகளை விளையாட முயற்சித்தார் போலும். அதாவது, தன் ராக்கெட்டை தரையில் எத்தனை தடவை அடித்து, அதை உருப்பெறாமல் செய்ய வேண்டும் என்பதை அழகாகச் செய்து காண்பித்தார்.



அதை அடுத்து இன்னொரு பிரமாண்ட record உருவாக்கினார். அதிக முறை ஒரு ஆட்டக்காரர் Double faults வைப்பதில் அநேகமாக ஒரு ரிக்கார்ட் வைக்க முயற்சித்தார். மொத்தம் 10 Double faults. அசகாய சூரர் தான்!

மூன்றாவது செட்டில் ராகோனிக் ரொம்ப பாவப்பட ஆரம்பித்து விட்டார். எத்தனை வில்லத்தனம் பண்ணினாலும் நம் சீரியல் கதாநாயகிகள் கோபப்படாமல், விரோதிகளுக்கும் நல்லதே செய்வார்களே, அது மாதிரி ராகோனிக் தன் எதிராளி மேல் பாவப்பட ஆரம்பித்து விட்டார். கடைசி இரு கேம்களில் ராகோனிக் டென்னிஸ் சொல்லிக் கொடுக்கும் போது கோச் எதிர் கோர்ட்டில் இருந்து எதிராளி அடிப்பதற்காகவே எளிதாக, அவர் கையில் கிடைக்கும்படி அடிப்பார்களே ... அதே மாதிரி செவ்ரேவ் கைகளுக்கே பந்து கிடைப்பது போல்  பந்தைத் “தட்டிக் கொடுத்து” ஆடினார். 

இத்தனை சலுகை கிடைத்தாலும் செவ்ரெவ் தொடர்ந்து தன் ஆட்டமின்மையை நிரூபித்துக் கொண்டே இருந்தார். எனக்கே சந்தேகம் வர... தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் போய் அவரது தரம் நிஜமாகவே நான்கு தானா என்று அருகில் போய் சரி பார்த்தேன். 

அடேய் தம்பி .. செவ்ரெவ் எப்படிப்பா இப்படியெல்லாம் விளையாடி நாலாவது தரம் பெற்றாய்? அல்லது இன்று மட்டும் தான் உன் ஆட்டம் இப்படியா? என்னமோ போ ... நீ தோற்றவரை எனக்கு மகிழ்ச்சி தான்.






*


Sunday, January 20, 2019

1025. AUSTRALIAN OPEN 2019 ...1




*



யாரையாவது டிவில கூட டென்னிஸ் விளையாட்டைப் பார்க்கக் கூடாதுன்னு நினச்சீங்கன்னா ஒரு நல்ல வழியை நேற்றும் இன்றும் கண்டுபிடிச்சேன். 6வது தர விளையாட்டுக்காரர் சிலிக் அப்டின்னு ஒருத்தர் இருக்கிறார். அவர் விளையாட்டை பத்துப் பதினைந்து நிமிடம் பார்த்து விட்டாலே அதன் பிறகு யாருக்கும் டென்னிஸ் விளையாட்டைப் பார்க்கவே பிடிக்காமல் போய்விடும்.

மனுஷன் செர்வ் செய்வதற்கு முன் பந்தைத் தரையில் தட்டி.. தட்டி .. தட்டி அதன் பின் செர்வ் செய்வார், விடிந்து விடும் பொழுது. இப்படியா 18-20 தடவை பந்தைத் தொடர்ந்து தட்டிக் கொண்டிருப்பார்கள். நாமளும் அதை விதியேன்னு பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நல்ல வேளை நான் பார்த்த போட்டியில் ஜெயித்தவர் அடுத்த நாள் தோற்று விட்டார். அப்பாடா ...!
******

இன்று (20.1019) பெடரரை ஒரு சின்னப் பையன் வெற்றி பெற்று விட்டான். ஏன் சின்னப் பையன்னு சொல்றேன்னா ... அவன் பெயரை எப்படி எழுதுவது, சொல்லுவது என்று தெரியவில்லை. சரி.. நம்ம கடைசி சோர்ஸ் ‘கடவுள்’ தானே. அதனால் கூகுள் ஆண்டவரிடம் கேட்டேன். அவர் இந்தப் படத்தைப் பார் என்று சொல்லி விட்டார். அதைப் பார்த்த பிறகும் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லிக் கொடுங்கள்.


முதல் இரு செட்கள் பார்க்கவில்லை. அதன்பின் பார்க்க ஆரம்பித்தேன். பையனை ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. தம்பி பக்கம் நின்னு விசிலடித்தேன். பெடரர் இதுவரை நெட்டை ஒட்டி ட்ராப் போட்டு எதிராளியை ஏமாற்றி பாய்ண்ட் எடுப்பதை இதுவரை பார்த்ததில்லை. அதுவும் செய்து முயற்சித்தார். இருந்தும் பயனில்லை. அடிக்கு அடி பையன் திருப்பி அழகாக அடித்தான். போட்டி பார்ப்பதற்கே நன்றாக இருந்தது.

*****

யோசித்துப் பார்த்தேன். இந்தப் பையன் நடால், ஜோகோவிச் இவர்களை எதிர்த்து ஆடினால் நான் யார் பக்கம் இருந்து விசிலடிப்பேன் என்று யோசித்தேன். டாப் இருவரில் எப்போதும் நான் நடால் பக்கம் தான்.

ஆனால் ... இந்த தடவை .... தெரியவில்லை!







*




Tuesday, January 15, 2019

1024. பற்றியெரியும் பஸ்தர் -- இந்நூலிலிருந்து சில பகுதிகள் ... 7






*


சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமா? எடுப்பதாயிருந்தால் எப்போது, எங்கே எடுப்பது போன்றகேள்விகள் எழுந்தன.


                                                                      ******


இந்த 2007ஆம் ஆண்டின் கோடை காலத்தில் இருந்த இரு அலுவலகங்கள் எனக்கு மிகவும் பழகிப் போக ஆரம்பித்தன. ஒன்று, மத்திய டில்லியில் அமைந்துள்ள நித்யா ராமகிருஷ்ணனின் அலுவலகம்; அபிஷேக் தேசாய் தன் வீட்டின் கீழ்த்தளத்தில் வைத்திருந்த அலுவலகம். இரண்டாவது, நித்யாவின் அலுவலகம்

 ...  எல்லா வழக்கறிஞர்களும் இந்த வழக்கில் பணம் பெறாமல் சேவையாக பல ஆண்டுகள், வயது வேற்றுமை ஏதும் பார்க்காது, ஜூனியர் சீனியர் என்ற வேற்றுமையையும் பாராது உழைத்து வருகின்றனர். பணம் வரும் வழக்குகளைக்கூடத் தள்ளி வைத்துவிட்டு பல இரவுகள் நெடுநேரம் விழித்திருந்து புதுப்புது குறிப்புகள் எடுத்து அடுத்தடுத்த உறுதிப் பத்திரங்களைத் தயாரிப்பார்கள்

அவர்களது ஆழமான அர்ப்பணிப்பு என்னைப் பரவசப்படுத்தும், ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தும். அவர்கள் யாருக்கும் பஸ்தாரோடு எவ்விதத் தொடர்புமில்லை. வழக்கமாகச் சொல்லப்படும் சமூக ஆர்வலர்கள் இல்லை அவர்கள். அப்படியிருந்தும் இத்தனைப் பிடிப்போடு உழைத்தனர். தெரியாத இடம்; பார்த்திராத மக்கள். ஆனாலும், சட்ட வல்லுனர்களாகவும், அதற்கும் மேலாக நாட்டின் குடிமக்களாகவும் அவர்கள் கடமையாற்றினார்கள்.


ஆழமே தெரியாத விஷயம் ஒன்று உண்டு. நீதிமன்றங்களில் பட்டியல் பற்றியது அது. வழக்குகள் எப்போது வரும் என்பதை உச்ச நீதிமன்றத்தின் இணையப் பக்கங்களில் பார்க்கலாம். ஆனால், இணையத்தில் வருவது ஒரு நாள் இருக்கும். அடுத்த நாள் இல்லாமல் போய்விடும்.

எதிர்ப் பக்கத்தில், சத்தீஸ்கர் அரசின் திட்டம் வேறுவிதமாக இருந்தது. அவர்கள் இந்த வழக்கை முழுமையாக அரசியலாக்க முயன்றனர். சட்டக் கோட்பாடுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவேயில்லை. அவர்களின் முக்கிய முனைப்பே வழக்கின் விண்ணப்பதாரர்கள் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் - வெளியே தெரியும் மாவோயிஸ்ட் முகங்கள் - என்று நிரூபிப்பதுதான்.

டில்லி பல்கலையின் டாடா சமூகவியல் கல்வியமைப்பு மாணவர்களும், ஹைதராபாத்தில் உள்ள என்ஏஎல்எஸ்ஏஆர் சட்டக் கல்லூரி மாணவர்களும் இந்தப் பொது விசாரணை நடப்பதற்கு உதவியாக, பொது மக்களிடம் செய்திசொல்லி ஒன்றுசேர்க்க உதவினர்.

2011 மார்ச் மத்திய பகுதிவரை நாங்கள் வழக்கு விசாரணைக்கு அங்குமிங்கும் ஓடிக் கொண்டேயிருந்தோம்.

நான் நீதிமன்றம் செல்லும் முன்பே நீதியரசர் ரெட்டி தன் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியிருந்தார். ஓடி வந்ததில் உண்டான மூச்சிரைச்சலால் வார்த்தைகள் சரியாக என் காதில் விழவில்லை. ஆனால், ‘கொடூரம்... கொடூரம்என்ற வார்த்தைகள் மட்டும் என் காதில் மாறி மாறி விழுந்தன. சரியாகத்தான் கேட்கிறேனா என்ற ஐயம் எழுந்தது. வந்து நின்ற வேகத்திலும் அவசரத்திலும் ஓர் ஆண் வழக்கறிஞரின் மடியில் கிட்டத்தட்ட உட்கார்ந்தே விட்டேன். என்ன நடந்தது என்பதே புரியவில்லை. குழப்பம் நீங்கவில்லை. தீர்ப்பு முழுவதுமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. குழப்பம் நீங்கவில்லை என்றாலும் வெளியில் வந்த வழக்கறிஞர்களை எனக்குத் தெரியும் என்பதால் ஒருவருக்கொருவர் அணைத்துக்கொண்டு, வெற்றியைக் கொண்டாடினோம்.


நீதியரசர்கள் ஏதாவது ஒரு விதத்தில் சமரசம் செய்துகொண்டுவிடுவார்களோ என்ற எனது அச்சத்திற்கு நேரெதிராக தீர்ப்பில் நியாயம் முழுமையாகக் கிடைத்து விட்டது. அரசியல் சாசனத்திற்கான தன் முழு ஆதரவையும் உறுதியாக தீர்ப்பு வெளிப்படுத்தியது.


ஆக மொத்தத்தில் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மிகவும் பலனடைந்தவர்கள் எஸ்பிஓக்களே. புதிய வேலை, நல்ல துப்பாக்கிகள், அதிகரித்த சம்பளம், முழு வேலைப் பாதுகாப்பு.




                                                                  *******
என் கதை இன்னும் தொடர்கிறது....


அது ஒரு பௌர்ணமி இரவு. நிலவின் வெளிச்சத்தில் மிதந்துவரும் மாடியா டோல் இசையில் நான் தறி கெட்டு ஆடிக் களிக்கிறேன். நானும் என் நண்பர்களும் ஒன்றுசேர்ந்து ஓர் இலுப்பை மரத்துக்கடியில் எதிர்காலத்து நன்மைகளை நினைத்து நம்பிக்கையுடன் ....



ஆடுவோம் ... கொண்டாடுவோம் ...











*

Monday, January 14, 2019

1023. பற்றியெரியும் பஸ்தர் -- இந்நூலிலிருந்து சில பகுதிகள் ... 6







*



பினாயக் சென் கைது செய்யப்பட்டபின் பெரும் தொடர் போராட்டங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்தன. அப்படிப்பட்ட ஒரு கடுமையான போராட்டத்தை இந்திய நாடு அது வரை நடத்தியதே இல்லை.
பினாயக் சென் தன் மருத்துவப் படிப்பைத் தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். அக்கல்லூரியின் பழைய மாணவர்கள் தொடர்ந்து கடிதங்களும் விண்ணப்பங்களும் எழுதி, மக்களின் ஆர்வத்தையும் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர். தலைவர்கள் பலரையும் சந்தித்துத் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டிருந்தனர். அவர்களும், ‘பினாயக் சென்னின் பாதுகாப்பிற்கான மருத்துவர்கள் அமைப்புஎன்ற அமைப்பை ஏற்படுத்திப் போராடினார்.

அவரது சிறைத் தண்டனை பல போராளிகளுக்கு ஓர் அச்சுறுத்தலாகப் போய்விட்டது. பல போராளிகளை அது முடக்கியது. மௌனமாக்கியது
2011இல்சோனி சோரி விடுதலைஎன்ற ஒரு புதிய முயற்சி கையில் எடுக்கப்பட்டது. இரு பிரபல செயற்பாட்டாளர்களுக்காக அடுத்தடுத்து மக்களிடையே பெரும் கிளர்ச்சிகள் ஏற்படுவதுஇந்திய வரலாற்றிலேயே, இந்திய சமூகப் பேராளிகளின் நடைமுறைகளிலேயே இதுவே முதல் முறை. முதலாவதே இரண்டாவதுக்கு வழிகோலியது.

பஸ்தாரின் உரிமைகளுக்குப் போராடும் தனி ஒரு மனுஷியாக எல்லோராலும் அறியப்பட்டார். அவரே 2015ஆம் ஆண்டில் ஒரு பத்திரிகையாளரிடம், ‘நான் சிறையில் அடைக்கப்பட்டு அல்லற்பட்ட பிறகு பொது மக்கள் கொடுத்த ஆதரவு என்னை ஓர் உண்மையான போராளியாக மாற்றியதுஎன்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.


                                                                    ********

பாராளுமன்ற இடதுசாரிகள் பொதுவாகத் தங்களை முழுதாக வெளிப்படுத்தும் திறன் இல்லாதவர்கள். தாங்கள் செய்த நல்ல விஷயங்களைக்கூட தண்டோரா போட அவர்களுக்குத் தெரியாது. அக்கட்சியினர் ஓர் அரிதில் கடத்திகள்!


                                                                      ********
இன்றைய குழப்பமான உலகில் ஊடகங்களில் வரும் செய்திகள்தான் சமூகத்தின் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் திறம் வாய்ந்தவை. கிராமங்களில் இருப்பவர்களுக்கு கைப்பேசிஒருவித ஊடகமாகச் செயல்படுகிறது. இனியும் தாங்கிக்கொள்ளமுடியாது என்னும் நிலையில்தான் மனித உரிமையை மக்கள் ஒரு விவாதமாக முன்னெடுக்கிறார்கள்தனக்கு என்ன தொல்லை வந்தாலும் பரவாயில்லை என்று வீரத்தோடு தங்கள் தரப்பை மக்கள் முன்வைக்க ஆரம்பிக்கிறார்கள்.


                                                                          *******


சிபிஜேசி, சிஐபிஎன்ற இரு அமைப்புகளுமே சமாதானப் பேச்சு, மனித உரிமைகள் என்ற இரு முக்கிய விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அதையும் தாண்டி, மாவோயிஸ்டுகள் கையில் எடுத்திருக்கும் சில முக்கிய பிரச்னை ஒன்றும் இருந்தது. அதுதான் மிக உண்மையான மையக் கருத்தாக இருக்கவேண்டும். அவை நில ஆக்கிரமிப்பும், சுரங்கத் தொழிலும்.


                                                                         *******


மல்கான்கிர் (ஒடிசா), சுக்மா என்ற இரு இடங்களின் ஆட்சியர்கள் வினீல் கிருஷ்ணா, அலெக்ஸ் பால் மேனன் இருவரும் கடத்தப்பட்டபோது நாட்டின் அனைத்து ஊடகங்களும் தங்கள் பார்வையை அதில் குவித்தனர்..... ஆனால், மேனன் பத்திரமாகத் திரும்ப வந்தபின் சில ஊடகங்கள் தங்கள் குரலைச் சிறிது மாற்றிக்கொண்டன. மேனன் தேவையற்ற முறையில் தன்னை முன்னிறுத்தி, தன்னைக் கைது செய்யத் தூண்டிவிட்டார் என்றும், அவருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்தது என்றும் வலதுசாரி ஊடகங்கள் எழுதின, பேசின.

கடத்தப்பட்ட இரு ஆட்சியர்களுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் அதில் நூற்றில் ஒரு பங்கையேனும் வன்முறைகளும் கொலைகளும் நடக்கும்போதும், கிராமத்து மக்கள் ஈவிரக்கமின்றி துன்புறுத்தப்படும்போதும் காண்பித்திருக்கலாம். அப்போதெல்லாம் சிறிதும் அக்கறையில்லாமல் இருந்தன.


                                                                     *******

மேலும் மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரையில் பேச்சு வார்த்தை என்பதே அர்த்தமில்லாத ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். புதிய பேச்சுவார்த்தைகளில் பேசுவதற்கென்றேபுதியவிஷயங்களாக முளைக்கப் போகின்றன. அரசு புதிய சுரங்கங்கள் தோண்டுவதையும், நில உரிமைகளையும் எந்தச் சமயத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கப் போவதேயில்லை. பின் பேச்சு வார்த்தைகள் எதற்கு?  ...  பேச்சு வார்த்தைகள் மாவோயிஸ்ட் தலைவர்களின் உயிருக்கும் உலை வைக்கவே நடத்தப்படுகின்றன.

                                                                 ******


2015 செப்டெம்பர் 21ஆம் தேதி பத்திரிகையாளர்கள்சிறை நிரப்புப் போராட்டம்ஒன்றை நிகழ்த்தத் திட்டமிருந்தனர். ஆனால், அதற்கு முந்திய நாளில் காவல் துறையினர் தங்கள் திட்டத்தின் மூலம் பத்திரிகையாளர்களின் ஒற்றுமையை இரண்டாகப் பிளந்தனர். எல்லாம் ஐஜி கலூரியின் புத்திசாலித்தனமான திட்டம்தான். போராட்டத்திற்கு முந்தைய நாள் பத்திரிகையாளர்களின் வாட்சப் குழு ஒன்றை ஆரம்பித்தனர் காவல் துறையினர். அதில் அடுத்த நாள் நடக்கும் பேரணியில் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் பங்கெடுப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளனர் என்ற பொய்ச் செய்தி விரைவாகப் பரப்பப்பட்டது.


                                                                   *******


சில ஊடகச் செய்திகள் உலகத்தின் கவனத்தைக்கூட தன் பக்கம் திரும்ப வைக்கும் ஆற்றலும் உண்மையும் உடையவை. அருந்ததி ராய் எழுதிய, தோழர்களுடன் ஒரு பயணம் என்ற கட்டுரையும்அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த பல நேர்காணல்களும் உலகத்தின் பார்வையை பஸ்தார் பக்கம் திருப்பியது. அங்கிருந்த சல்வா ஜுதும், மாவோயிஸ்டுகள் அனைவரும் முழு உலகுக்குத் தெரிந்தவர்களாகிப் போனார்கள்










*