Tuesday, May 30, 2006

160. இன்னொரு guinea pig - மதுமிதாவிற்கு.

Image and video hosting by TinyPic

வலைப்பதிவர் பெயர்: G. Sam George
வலைப்பூ பெயர் : தருமி
சுட்டி(url) : http://dharumi.weblogs.us/

ஆங்கில வலைப் பூ: http://sixth-finger.blogspot.com
புகைப்படங்களுக்கான வலைப்பூ: http://singleclicks.blogspot.com/
ஆயினும் அளிக்கப்படும் தகவல்கள் என் தமிழ்ப்பதிவை அடிப்படையாகக் கொண்டவையே.

ஊர்: மதுரை
நாடு: நம் நாடுதான்.

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: அது ஒரு விபத்துதான்.(விபத்து எனக்கல்ல!)முதலில் பார்த்தது தேசிகனின் பதிவு. அதன் மூலம் மெரினா கடற்கரைப் பதிவர் கூட்டத்திற்கு ஆஜர். அங்கே கிடைத்த உந்துதல்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :24.04.05

இது எத்தனையாவது பதிவு:160

இப்பதிவின் சுட்டி(url):http://dharumi.weblogs.us/2006/05/30/225

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: கொஞ்சூண்டு மொழிக் காதல்; இத்தினிக்கூண்டு சமூக அக்கறை; அதோடு, 37 ஆண்டு ஆசிரியனாக இருந்து, நித்தம் நித்தம் பத்து ஐம்பது பேரை ஆடியன்ஸாக வைத்திருந்து, ஓய்வு பெற்றதும் ஏற்பட்ட ‘காலி இடம்’ — இம்மூன்றின் ஒட்டு மொத்தக் கூட்டுதான் பெருங்காரணி.

சந்தித்த அனுபவங்கள்:

சந்தோஷமான அனுபவங்கள்: (சின்னச் சின்ன வயது ஆட்களிடமிருந்தும்கூட) ஆச்சரியப்பட வைக்கும் தீர்க்கமான சிந்தனைகள்; ஆழமான அறிவு; மொழிப் பற்று; மொழி ஆளுமை.

வருத்தமான அனுபவங்கள்: படித்துப் பட்டம் மட்டுமின்றி பெருந்தொழிலில் இருப்பது மட்டுமின்றி, நல்ல அறிவிருந்தும் அதை அற்பவழியில் செலவிடும் பலரைப் பார்ப்பது.

பெற்ற நண்பர்கள்: நிறைய; ஆயினும் அந்த நண்பர்களில் மிகப்பலரும் (ஒரு சீனியர் பதிவாளர் அறிவுறுத்தியதுபோல்) out of sight out of mind என்பார்களே அதே போல் பதிவிட்டால் மட்டுமே இந்த நட்பு இருக்கும் என்ற நிலையில் இருப்பது ஒரு சோகம்.

கற்றவை: வலைப்பதிவர் உலகம் ஒரு microcosm. வெளியுலகத்தின் சிறு நகல். எல்லாவித மனிதக் குண நலன்களையும் இச் ‘சிறு வெளியில்’ பார்ப்பதே ஒரு தொடர்கல்விதான். முடிவில்லாதது.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: முழுசு. நினைத்ததை எழுதுகிறேன்.

இனி செய்ய நினைப்பவை: இதுவரை செய்ததையே மேலும் தொடருவது.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு இங்கே…

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
தமிழ்ப் பதிவுகள் இன்னும் முதிர்ச்சியடையவில்லை; இன்னும் தவழும் குழந்தைதான். ஆனால், இது வளர்ந்து சமுதாயத்தின் ‘நான்காவது தூணின்’ முக்கிய ஒரு பகுதியாக உயர்ந்து, சமூகத்தின் ‘thinking tank’ ஆக மாறும் நாள் விரைவில் வர பேராவல்.
நகைச்சுவைப் பதிவுகளும், மற்ற வித light hearted பதிவுகளே அதிகமாக வந்து கொண்டிருந்தாலும், சமூகத்தைப் பிரதிபலித்து - ஏன், அந்தச் சமூகத்தை வழி நடத்தவும் - தமிழ்ப் பதிவுகள் எல்லோராலும் உற்று நோக்கப்படும் காலம் வரவேண்டும். பேராசை இல்லையே?



if need be: http://i2.tinypic.com/1198htd.jpg







Pathivu Toolbar ©2005thamizmanam.com


May 30 2006 09:02 pm | Uncategorized |
49 Responses
பொன்ஸ் Says:
May 30th, 2006 at 9:22 pm
//அதோடு, 37 ஆண்டு ஆசிரியனாக இருந்து, நித்தம் நித்தம் பத்து ஐம்பது பேரை ஆடியன்ஸாக வைத்திருந்து, //

என்ன சொல்லிக் கொடுத்தீங்க? உங்க வகுப்பில் படிக்கலையேன்னு இருக்கு இப்போ

//சமூகத்தைப் பிரதிபலித்து - ஏன், அந்தச் சமூகத்தை வழி நடத்தவும் - தமிழ்ப் பதிவுகள் எல்லோராலும் உற்று நோக்கப்படும் காலம் வரவேண்டும்//
சீக்கிரம் வந்துவிடும் என்று நினைக்கிறேன்

Prasanna Says:
May 30th, 2006 at 10:25 pm
///(சின்னச் சின்ன வயது ஆட்களிடமிருந்தும்கூட) ஆச்சரியப்பட வைக்கும் தீர்க்கமான சிந்தனைகள்; ஆழமான அறிவு; மொழிப் பற்று; மொழி ஆளுமை.////
என்னத் தான சொன்னீங்க, பேர சொல்லியே சொல்லி இருக்கலாமே
உண்மைய சொல்லணும்னா, உங்க கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்குறேன், உங்க மாணவர்கள் குடுத்து வைத்தவர்கள். நீங்கள் உங்கள் ஆசிரியர்களை நினைவு கொள்வது போலவே அவர்கள் நினைவில் நீங்க எப்பவுமே இருப்பீங்க.
பிரசன்னா

D the Dreamer Says:
May 31st, 2006 at 8:32 am
//ஆயினும் அந்த நண்பர்களில் மிகப்பலரும் (ஒரு சீனியர் பதிவாளர் அறிவுறுத்தியதுபோல்) out of sight out of mind என்பார்களே அதே போல் பதிவிட்டால் மட்டுமே இந்த நட்பு இருக்கும் என்ற நிலையில் இருப்பது ஒரு சோகம்//

அருமையாக சொல்லியிருக்கீங்க தருமி.

துளசி கோபால் Says:
May 31st, 2006 at 10:12 am
out of sight out of mind இல்லை என்று நிரூபிக்க இந்தப் பின்னூட்டம்னு வச்சுக்கலாமா?

தருமி Says:
May 31st, 2006 at 10:29 am
out of blog…out of mind என்ற நடைமுறைத் தத்துவத்தை எனக்கருளிய சீனியர் பதிவாளர் துளசி,

நீங்களே உங்கள் தத்துவத்தைப் பொய்யாக்க எவ்வளவு முயற்சி எடுக்க வேண்டியதிருக்குது; பாத்தீங்களா?
(இருந்தாலும் நம்ம என்ன அப்டியா பழகியிருக்கோம், மறந்திர்ரதுக்கு )

தருமி Says:
May 31st, 2006 at 10:31 am
D the Dreamer,
நானாங்க அத சொன்னேன். சொன்னது துளசி. ஆனா, நச்சுன்னு மனசில பதிய வச்சுக்கிட்டேன்.

தருமி Says:
May 31st, 2006 at 10:37 am
ப்ரஸ்,
“என்னத் தான சொன்னீங்க, பேர சொல்லியே சொல்லி இருக்கலாமே..” // நினப்புதான பொழப்ப கெடுக்குது. ஆமா, என்ன இப்ப ஆளே இந்தப் பக்கம் காணோம்? ஓ! out of blogging….blah..blah…இல்ல?

“அவர்கள் நினைவில் நீங்க எப்பவுமே இருப்பீங்க.” அது தெரியும். ஆனா எப்படின்னு தெரியலை. ஒரே ஒரு மாணவன் இந்தப் பக்கம் வந்துகிட்டு இருந்தான். நல்ல வேளை!
இப்போ ஆராய்ச்சியின் கடைசிக் கட்டத்தில ரொம்ப பிஸியா ஆய்ட்டான். இல்லன்ன வந்து உண்மையையெல்லாம் புட்டு புட்டு வச்சிருப்பான்; பொழச்சேன்.

தருமி Says:
May 31st, 2006 at 10:40 am
உங்க வகுப்பில் படிக்கலையேன்னு இருக்கு இப்போ”// அந்த அளவு எனக்கு நல்ல ‘வாய்ஸ்’கிடையாது - lullaby பாடறதுக்கு!

//சமூகத்தைப் பிரதிபலித்து - ஏன், அந்தச் சமூகத்தை வழி நடத்தவும் - தமிழ்ப் பதிவுகள் எல்லோராலும் உற்று நோக்கப்படும் காலம் வரவேண்டும்//
சீக்கிரம் வந்துவிடும் என்று நினைக்கிறேன் “//
சீக்கிரம் வந்துவிடும் அப்டின்னு சொல்லிட்டி அப்புறம் என்ன ஒரு ஸ்மைலி

D the Dreamer Says:
May 31st, 2006 at 10:40 am
//சொன்னது துளசி//

துளசி அக்கா நன்றி

//நச்சுன்னு மனசில பதிய வச்சுக்கிட்டேன்//

நானும். With due thanks to you

pattanathu rasa Says:
May 31st, 2006 at 10:58 am
I got into the blogs through your chain essays about GOD. I always say to me “I will get the best” and So I. Thanks to you sir. though i don’t give the best

thanu Says:
May 31st, 2006 at 4:19 pm
//பதிவிட்டால் மட்டுமே இந்த நட்பு இருக்கும் என்ற நிலையில் இருப்பது ஒரு சோகம்.//hope this is not applicable to me. u will be horrified by my kadi SMS!!!
(soory for english comment. in delivery room, no tamil software in laptop)

thanu Says:
May 31st, 2006 at 4:20 pm
hw cme my cme comes immediately without moderation!!!

TheKa Says:
May 31st, 2006 at 6:37 pm
தருமி,

என்னாத்தா சொல்றது. கலக்கீபுட்டீங்க. நியாயமான ஆசைகளை முன் வைத்திருக்கிறீர்கள்… நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை, நம் முகத்திரையை அகற்றி சற்றே பரந்த மனப் பாங்குடன் விசயங்களுடன் காணும் பொருட்டு .

ஆமா, நீங்க மீன் கொத்தி எல்லாம் அருந்துவது உண்டா ? அப்படிப் பட்ட prof களுடன் மட்டுமே hangout பண்ணுவதில் quality time கிடைத்ததாக கருதுபவன் அடியேன்… இல்லென்னா நான் உங்க வகுப்பிலிருந்து டிமிக்கு கொடுத்துவிட்டு விஜய் படம் பார்க்க சென்றுருப்பேன்…

தருமி Says:
May 31st, 2006 at 7:54 pm
பட்டணத்து ராசா,
நம்ம ‘கடவுள்’ சீரியலுக்கு இப்படி ஒரு ‘மரியாதையா’? யாருக்குத்தான் best கொடுக்க முடியும்? ஒன்றுக்குஅடுத்து அடுத்து betterஆக கொடுத்தா போதாதா?

Sivabalan V Says:
May 31st, 2006 at 7:56 pm
// பேராசை இல்லையே? //

நிச்சயம் பேராசையில்லை..

நிறைவேறும்..

தருமி Says:
May 31st, 2006 at 8:29 pm
தாணு,
உங்க வார்த்தைகள் கேட்கவே சந்தோஷமா இருக்கு.
பதில் ‘கடி’கள் எப்படியிருக்கு?

sorry for english comment. in delivery room, no tamil software in laptop :

வேலைத்தளத்தில் இருந்தேவா? பரவாயில்லை..ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் ஓ! sorry, ஒரே room-ல் ரெண்டு deliveryயா

தருமி Says:
May 31st, 2006 at 8:37 pm
// அப்படிப் பட்ட prof களுடன் மட்டுமே hangout பண்ணுவதில் quality time கிடைத்ததாக கருதுபவன் அடியேன்…//
- இதில பெரிய உண்மையே இருக்கிறது மாதிரி இருக்கே

“நீங்க மீன் கொத்தி எல்லாம் அருந்துவது உண்டா ?”//
ச்சீ..ச்சீ..மீன் கொத்தியா? அதெல்லாம் சின்னப் —- சாப்பிடுறதில்ல.. (கொத்ஸ், கால்கரி சிவா நான் ஒண்ணும் உங்கள சொல்லலை’பா …”நாங்கெல்லாம் அரசம்பழத்திற்கே படுக்கும் ஆள்” )
ஜானி நடையர், ராஜ சலாம்..இப்படி. இல்லைன்னா தங்க
பை ஊதுக்காரன் -இதுகதான் சரியா வரும். மீன்கொத்தியில ரொம்ப calories இருக்குல்லா அப்டின்னு சொல்லிடறது. நாங்கல்லாம் ரொம்ப ‘கடினமான’ ஆளாக்கும்

பொன்ஸ் Says:
May 31st, 2006 at 8:39 pm
பாருங்க தருமி, போனமுறை இந்த பின்னூட்டம் முழுக்க தட்டி, உங்க பதிவில போட்டா மக்கர் பண்ணிடுச்சு.. ஆனாலும், ஒரு “அறிவுப் பூர்வமான ”விவாதத்தை விட்டுடக் கூடாதுன்னு திருப்பி தட்டிகிட்டு இருக்கேன்..

//பதிவிட்டால் மட்டுமே இந்த நட்பு இருக்கும் என்ற நிலையில் இருப்பது ஒரு சோகம்.//
இந்த வரிகள் எனக்கில்லைன்னு நினைச்சு வெளில போய்ட்டேன்..

ஆனா, எனக்கென்ன புரியலைன்னா, நீங்க என்ன சொல்ல வர்றீங்க? உங்க பதிவுல நான் பின்னூட்டம் போடறேன், நீங்க பின்னூட்டம் போட்டா, பதில் சொல்றேன்.. நான் மதுரை வந்தா பார்க்கலாம் இல்லை நீங்க சென்னை வந்தா, அதுக்கு மேலதிக தொடர்பில் இல்லைன்னா நட்பு இல்லைன்னு எப்படிச் சொல்றீங்க?

இப்போ என் நண்பர்கள் சிலர் இங்க இருக்காங்க.. அவங்களோட பேசி 4 வருஷம் கிட்ட ஆச்சு.. அவங்க ஊருக்கு வந்ததினால கூப்பிட்டுப் பேசினேன்.. பதிலுக்கு அவங்களும். அவ்வளவுதானே?!! இன்னும் தொடர்ந்த தொடர்பில்(continous contact) இருக்கணும்னா அது அல்டிமேட்லி, அரட்டைக் கச்சேரி ஆகிவிடாதா?

கல்யாணம், காதுகுத்துன்னா இருக்கவே இருக்கு, கூப்பிடப் போறோம்.. வேற என்ன சொல்லவர்றீங்க?

தருமி Says:
May 31st, 2006 at 9:44 pm
சிவபாலன்,
உங்கள் வார்த்தைகளைப் பார்க்க உண்மையிலேயே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?

நிறைவேற்றிக் காட்டுங்கள். வாழ்த்துக்கள்.

SK Says:
May 31st, 2006 at 9:45 pm
பல நல்ல செய்திகளை, உங்களது மற்ற பதிவுகள் போலவே, இதிலும் தெரிந்து கொண்டேன். நன்றி!

தருமி Says:
May 31st, 2006 at 9:57 pm
பொன்ஸ்,
“இந்த வரிகள் எனக்கில்லைன்னு நினைச்சு வெளில போய்ட்டேன்.. “// இந்த வரிக்கு நன்றி.

உங்கள் மூன்றாவது பத்திக்கு நான் பதில் சொல்வதை விடவும் துள்சி சொன்னத சொல்றேனே. (அது நான் பதிய ஆரம்பித்த நேரம்): ” தருமி, நீங்க ஒரு ரெண்டு மூணு மாசம் எழுதலைன்னு வச்சுக்கங்க; யாரு, உங்கள தேடப் போறாங்க. எழுதுறது வரைக்கும் பின்னூட்டம் அது இதுன்னு தொடர்பு. அதுக்குப் பிறகு நினைவில இருந்து மெல்ல மறைஞ்சிர்ரதுதான் நடக்கும்” அப்டின்னாங்க.
இப்ப பாருங்க இருந்து காணாம போன சில ஆட்கள் எனக்கு நினைவுக்கு வர்ராங்க.தனிப்பட்ட உறவுன்னுகூட சொல்ல முடியாது. ஆனால் அடிக்கடி பதிவு, பின்னூட்டம்னு ‘சந்திச்சிக்கிட்டு’ இருந்தவங்க காணாம போனதும் தொடர்பு இல்லாமதான் போயிடுது.

எப்படியோ கல்யாணத்துக்கு அழைப்பு உண்டு அப்டிங்கிறத சொல்லிட்டீங்க. அதில கூட ஒரு தயக்கம் வந்திருது - நமக்கு அங்க யாரையும், அழைச்சவங்ககூட தெரியாதேன்னு.

பொன்ஸ் Says:
May 31st, 2006 at 10:13 pm
//அதில கூட ஒரு தயக்கம் வந்திருது - நமக்கு அங்க யாரையும், அழைச்சவங்ககூட தெரியாதேன்னு.
//
இருங்க தருமி.. நம்மூருக்கு வந்ததும், மதுரைக்கு ஒரு ட்ரிப் போட்டுர்றேன்,.. அதுக்குள்ளார, வெஜிடேரியனா ஏதாச்சும் சமைக்கக் கத்துக்கிடுங்க

Prasanna Says:
May 31st, 2006 at 10:13 pm
நினைப்பு தான் பிழைப்ப கெடுக்குதா??? அவசரப் பட்டேனோ??, அவுட் ஆஃப் பிளாக்கிங் எல்லாம் ஒண்ணும் இல்லைங்க, கொஞ்சம் ஆறப் போடலாமேன்னு தான்,
பிரசன்னா..

குமரன் (Kumaran) Says:
May 31st, 2006 at 11:35 pm
நல்ல பதிவும் நல்ல பின்னூட்டங்களும் இதுக்கு மேல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? நடப்பதெல்லாம் நன்மைக்கே.

Padma Arvind Says:
June 1st, 2006 at 1:41 am
சும்மா என்னை மறந்து போகாம இருக்க

கால்கரி சிவா Says:
June 1st, 2006 at 2:02 am
சார்,

//“நீங்க மீன் கொத்தி எல்லாம் அருந்துவது உண்டா ?”//
ச்சீ..ச்சீ..மீன் கொத்தியா? அதெல்லாம் சின்னப் —- சாப்பிடுறதில்ல.. (கொத்ஸ், கால்கரி சிவா நான் ஒண்ணும் உங்கள சொல்லலை’பா …”நாங்கெல்லாம் அரசம்பழத்திற்கே படுக்கும் ஆள்” )
ஜானி நடையர், ராஜ சலாம்..இப்படி. இல்லைன்னா தங்க
பை ஊதுக்காரன் -இதுகதான் சரியா வரும். மீன்கொத்தியில ரொம்ப calories இருக்குல்லா அப்டின்னு சொல்லிடறது. நாங்கல்லாம் ரொம்ப ‘கடினமான’ ஆளாக்கும்//

நானும் “கடினமா” தான் இருந்தேன், சவூதிக்குப் போய் கடின ப் பழக்கம் விட்டுப் போய் கெட்டு விட்டேன்.

இப்போது தங்க லேபிளைக் கண்டவுடன் ஜொள்ளுகிறது. சாரி சார் உங்க கிட்டே போய் இதெல்லாம் பேசிக் கிட்டு.

சரி, என்னுடைய அப்பா என்னை அமெரிக்கன் கல்லூரியில் பி.யு.ஸி சேர்க்க இருந்தார். நான் என் நண்பர்களுடன் போய் சௌராஷ்ட்ராக் கல்லூரியில் சேர்ந்துவிட்டேன். அவர் அடிக்கடி அவருடைய நண்பர் அமெரிக்கன் கல்லூரியில் வேலை செய்வதாக கூறுவார். அது நீங்களாக இருக்குமோ? ஏனென்றால் என் தந்தை ரீகல் தியேட்டரில் சிறிது காலம் டிக்கட் கவுண்டரில் வேலை செய்துக் கொண்டிருந்தார். நீங்களும் அடிக்கடி ரீகல் தியேட்டருக்கு போனவர்.

அவரிடம் கேட்கலாமென்றால், அவரில்லை. போன டிசம்பரில் காலமாகிவிட்டார்

தருமி Says:
June 1st, 2006 at 9:29 am
ப்ரபா, அது ‘ராஜ சலாம்’ இல்லை…’ராஜ சவால்’

மஞ்சூர் ராசா Says:
June 1st, 2006 at 2:47 pm
அது என்னமோ தெரியலே எப்பவுமே ஆசிரியர் என்றாலே் ஒரு தனி மரியாதை தானாக வந்துவிடுகிறது. இப்பவும் உங்களெ நேரிலெ பாக்கலேன்னாலும் அந்த உணர்வு மனதிற்குள் எழுவது என்னமோ உண்மை.

இன்னொரு உண்மையெ சொல்லணும்னா இன்னிக்கி தான் இங்கே முதல் முதலா வந்திருக்கேன்னு நினைக்கிறேன்.

நல்ல பதிவாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைத்தையும் கூடிய விரைவில் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.

ஆசிரியருக்கு வாழ்த்து சொல்லுவது மாணவனுக்கு அழகல்ல என்பதால், வணங்குகிறேன்.

நன்றி.

TheKa Says:
June 1st, 2006 at 10:51 pm
//நாங்கல்லாம் ரொம்ப ‘கடினமான’ ஆளாக்கும் //

பிட்டு பிட்டு வச்சுட்டீங்க… என்னொட முதல் சுற்று இண்டர்வியூ-ல நீங்க பாஸ்… இன்னும் வருது .

ஹைலைட் வந்து உங்களுடைய தமிழ் மொழிப் பெயர்ப்புகள் நெஞ்சாங் கூட்டை தொட்டது என்றால் மிகையாகது…

அப்படியே கொஞ்சம் மிச்ச சரக்குகளுக்கும் தமிழாக்கம் தேவை… மெழிச் சேவை பின்னால் ஆற்றுவதற்குகென … நீங்க வேற ஏன் சார் அப்படி என்னை பார்க்றீங்க…அடெ

இளவஞ்சி Says:
June 1st, 2006 at 11:23 pm
தருமிசார்,

//out of sight out of mind //

ப்ளாக் மட்டும் இல்லைங்க! வாழ்க்கை முழுசும் அப்படித்தான் போகுதோன்னு பயமா இருந்தாலும் தவிர்க்க முடியலை!

5 வருசமா அந்த நண்பனுக்கு ஒரு 20 மெயில் அனுப்பிச்சிருப்பேன்! அதுலையும் 15 பார்வேர்டு! 6 மாசம் முன்னாடி அவன் இங்க வந்தப்ப தடால்னு திரும்பவும் அதே நட்பு.. அதே பேச்சு.. அதே ப்ரீக்வென்ஸி… ஒரு வித்தியாசமும் தெரியலை! யோசிச்சா ஒன்னும் புரியலை! ஆனா இதுல தப்பு இருக்கறதாவும் தோணலை!

ஒருவரது இருத்தலின் இழப்பு இப்போதெல்லாம் பெரிய பாதிப்பை கோடுப்பதில்லை போல!

தருமி Says:
June 2nd, 2006 at 10:11 am
நன்றி SK.
கவலையே படாதீங்க SK. பிகிலு சொல்லியா நாம சண்டை போடப்போறோம். நம்ம என்ன அப்படியா பழகியிருக்கோம்??!!

தருமி Says:
June 2nd, 2006 at 10:19 am
“வெஜிடேரியனா ஏதாச்சும் சமைக்கக் கத்துக்கிடுங்க “//
இதுவரை மூன்று முறை செய்து முதல் முறை மட்டும் நன்றாகச் செய்து, அதன் மூலம் மோர்க்குழம்பு expert என்ற பெயர் வாங்கிய அதே குழம்பை எடுத்து உட்ருவோம். சரியா? இத்தனூண்டு நெத்தியில ஆண்டவன் எவ்வளவு எழுதியிருக்கான், பாத்தீங்களா? (அட்டா, இதை வெங்கட்ரமணியின் டாப்10 பதிவில போட்டிருக்கலாமே!)

தருமி Says:
June 2nd, 2006 at 10:21 am
பொன்ஸ்,
do we ‘miss’ anybody in Thamizmanam என்பதுதான் கேள்வி

தருமி Says:
June 2nd, 2006 at 10:27 am
ப்ரஸ்,
என்ன அதுக்குப் பிறகு சென்னை போனீங்களா? தங்கச்சிகிட்ட அடி வாங்கினீங்களா? ரகசியமா சொல்லுங்க..இங்க வந்து. நான் யார்ட்டயும் சொல்லலை. சரியா?
டெய்லர் சித்தப்புவைக் கேட்டதாகச் சொல்லவும்.

தருமி Says:
June 2nd, 2006 at 10:35 am
குமரன்,
உங்க ‘நல்ல′ பின்னூட்டத்தில் ஸ்மைலிகளாகப் போட்டு, அந்த ‘நல்ல′ என்பதைக் கேள்விக்குரிய விஷயமாக்கி விட்டீர்களே

அதோடு இன்னொரு விஷயம். கேக்கணும்னு ரொம்ப நாளா நினச்சிக்கிட்டு இருந்த விஷயம். இந்த ‘விஷயம் / விடயம்’ பற்றி ‘ஒரு சொல்’ பதிவு ஏதும் போட்டிருக்கிறீர்களோ? தேடிப்பார்த்தேன். வேஷ்டிதான் கிடச்சுது; விஷயம் கிடைக்கலை லின்க் இருந்தால் கொடுங்களேன்.

தருமி Says:
June 2nd, 2006 at 10:37 am
பத்மா,
தாணு, துள்சி, பொன்ஸ் அவர்களுக்குச் சொன்னது மாதிரி - கேட்க சந்தோஷமா இருக்கு.
உங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இன்னும் ரெடி பண்ணவில்லை; வெறுமனே அசைமட்டும் போட்டுக் கொண்டிருக்கிறேன். மறக்கவில்லை. வருகிறேன் சீக்கிரம்.
நன்றி.

தருமி Says:
June 2nd, 2006 at 10:41 am
கால்கரி சிவா,
அப்பாவைப் பற்றி எழுதியிருப்பது..sorry about it siva. நீங்க அப்போ எங்கே இருந்தீங்க? should have been a hard time.

தருமி Says:
June 2nd, 2006 at 10:46 am
கால்கரி சிவா,
அமெரிக்கன் கல்லூரியில் there was a big ‘tribe’ addicted to Regal theatre. mostly many of them were my seniors. ஒருவேளை அவர்களில் யாரேனும் இருக்கக் கூடும். ஏனெனில் எனக்கு முருகேசன் என்பவர் மட்டும் தெரியும்; அவர் தியாகராசர் கல்லூரியில் வேலைசெய்து, மாலை மட்டும் தியேட்டருக்கு வருவார் பகுதி நேர வேலைக்கு.

“சவூதிக்குப் போய் கடினப் பழக்கம் விட்டுப் போய் கெட்டு விட்டேன்.”//
-வாழ்க்கையில “திருந்துங்கப்பா”!

{நான் இப்படி எழுதுறது சரியா? தப்பா?…எனக்குத் தெரியலையேப்பா! (நாயகன்..?) }

தருமி Says:
June 2nd, 2006 at 10:53 am
மஞ்சூர் ராசா,
welcome.
you make me feel terribly guilty. உங்க மரியாதைக்கு எனக்குத் தகுதி இருக்கான்னு தெரியலை. வேண்ணா இதுக்கு மேல் உள்ள பின்னூட்டம் பாருங்களேன். திருத்த வேண்டிய வாத்தியார்…இப்படி..?!

“நல்ல பதிவாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைத்தையும் கூடிய விரைவில் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.”//
எதற்கும் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்; ஆவலோடு காத்திருக்கிறேன். மரியாதை உணர்வோடு படிக்க ஆரம்பிக்கும் ஒருவருக்கு என் எழுத்துக்கள் என்ன தாக்கம் உண்டு பண்ணுகிறது என்று அறிய ஆவல்.
வணக்கம் எல்லாம் சொல்லி அந்நியப் படுத்தணுமா?

தருமி Says:
June 2nd, 2006 at 10:58 am
தெக்கிஸ்,
ஆஹா நான் பாசாயிட்டேன்
அடுத்த ‘ரவுண்ட்’ -i mean அடுத்த சுற்று இண்டர்வியூ எப்போ? நான் ரெடி..அப்போ நீங்க..?

தருமி Says:
June 2nd, 2006 at 11:12 am
“இருத்தலின் இழப்பு இப்போதெல்லாம் பெரிய பாதிப்பை கொடுப்பதில்லை போல!”// அப்டியா சொல்றீங்க, இளவஞ்சி. ஒருவேளை நான் இன்னும் கொஞ்சம் சென்டியான ஆளோ? நல்லா நட்போட இருந்த பதிவர் திடீர்னு கண்டுக்கலைன்னா என்னமோபோலதான் இருக்கு.

“வாழ்க்கை முழுசும் அப்படித்தான் போகுதோன்னு …”//
நீங்க சொல்றதுமாதிரிதான் வாழ்க்கையும். ஆனா என்ன, ப்ளாக்கில ஒரு சில வாரங்கள்ல இந்த மாற்றம் ஏற்படுது; வாழ்க்கையில சில வருஷங்கள். அதனாலதான் இப்பதிவில் பதிவுலகம் ஒரு microcosm என்று சொன்னேன்.

உங்க இந்த மதுமிதா பதிவுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன். ரொம்ப வித்தியாசமா இருக்கும்; தெரியும்.

குமரன் (Kumaran) Says:
June 2nd, 2006 at 3:42 pm
ஐயா. நான் போட்ட சிரிப்பான்கள் எல்லாம் நக்கல் சிரிப்பான்கள் இல்லை. புன்சிரிப்பான்கள். தப்பா நினைச்சுக்காதீங்க.

விஷயம் என்ற சொல்லைப் பத்தி பின்னூட்டங்கள்ல மக்கள் பேசியிருக்காங்க. தனிப் பதிவா இல்லை. இனிமே போடறேன். விஷயம் என்பதற்குப் பதிலாக செய்தி, சங்கதி, சேதி, விடயம், விதயம் என்று இடத்திற்குத் தகுந்தாப்ல பயன்படுத்திக்கலாம்.

Balamurugan Says:
June 2nd, 2006 at 5:37 pm
நல்ல அறிவு இருந்தாலும் அற்ப வழியில் செலவு செய்யறதுன்னு சொன்னா என்ன அர்த்தம் பெரியவரே? நடிகர்களை ஒப்பிட்டு நீங்க எழுதினது எல்லாம் கிடையாதுதானே?

வாழ்க்கையில “திருந்துங்கப்பா”!

பொன்ஸ் Says:
June 2nd, 2006 at 7:10 pm
//do we ‘miss’ anybody in Thamizmanam //

//“இருத்தலின் இழப்பு இப்போதெல்லாம் பெரிய பாதிப்பை கொடுப்பதில்லை போல!”//

வாத்தியார் சொல்வது உண்மைதான்.. இதப் பத்தி இன்னும் கொஞ்சம் கருத்தும் இருக்கு.. இங்க விவாதிக்கலாம்னா ..க்கலாம்..

இருங்க வரேன்..

தருமி Says:
June 2nd, 2006 at 7:32 pm
குமரன்,
அந்த விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஏற்கெனவே இதைப் பற்றி நான் ஒரு பதிவு போட்டேன். விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்.

தருமி Says:
June 2nd, 2006 at 7:35 pm
பொன்ஸ்,
அது ‘don’t we miss people in Thamizmanam என்றிருந்திருக்க வேண்டும்.

க்கலாம்; …ங்க!

தருமி Says:
June 2nd, 2006 at 7:38 pm
சின்னவர் பாலமுருகரே,
உங்கள் உள்குத்து புரியுது.
‘அற்ப வழியில்’ என்பதை ‘கேவலமான வழியில்’ என்ற பொருளில் கொள்க.

கமல் Says:
June 22nd, 2006 at 8:22 pm
//படித்துப் பட்டம் மட்டுமின்றி பெருந்தொழிலில் இருப்பது மட்டுமின்றி, நல்ல அறிவிருந்தும் அதை அற்பவழியில் செலவிடும் பலரைப் பார்ப்பது.//

100% சரி. சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவரையும் வருத்தப்பட வைக்கும் விஷயம். குறைந்த பட்சம் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்காவது புரிய வைக்க வேண்டியது நம் கடமை.

//பதிவிட்டால் மட்டுமே இந்த நட்பு இருக்கும் என்ற நிலையில் இருப்பது ஒரு சோகம்.//

அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது சார்! இந்த விஷயத்தில் பொன்ஸ்-ன் கருத்துதான் என்னுடையதும்.

//இன்னும் தொடர்ந்த தொடர்பில்(continous contact) இருக்கணும்னா அது அல்டிமேட்லி, அரட்டைக் கச்சேரி ஆகிவிடாதா?//

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இணைய இணைப்பை மாற்றியது மற்றும் இந்தியப் பயணம் போன்ற காரணங்களால் தமிழ்மணம் பக்கம் வர முடியவில்லை. அதற்காக, உங்களை மறந்து விட்டேன் என்று அர்த்தமா? ஊருக்கு வந்தபோதுகூட உங்களையும் தாணுவையும் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஒரே ஒரு வாரம் மட்டும் இருந்ததால் முடியவில்லை. அடுத்தமுறை முயற்சி செய்கிறேன். ஊரிலிருந்தபோதுகூட, உங்களின் மதங்களைப் பற்றிய பதிவுகளைப் பற்றி ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். கிறிஸ்தவ/இஸ்லாமிய மதங்களை யாரும் கேள்வி கேட்பதில்லை என்ற அவரது வழக்கமான குற்றச்சாட்டுக்கு, தங்களின் பதிவை உதாரணமாகக் கூறினேன். உடனே, ‘அவர் ஓய்வு பெற்றதால்தான் அப்படி எழுத முடிகிறது. பணியிலிருக்கும்போது எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா?’ என்றார். எதற்கெடுத்தாலும் ஒரு ஊகத்தை பதிலாகச் சொன்னால் என்னதான் செய்யிறது? இப்படியே இருங்கன்னு விட்டுட வேண்டியதுதான்.

நன்றி
கமல்

தருமி Says:
June 23rd, 2006 at 1:29 am
kamal,
“அடுத்தமுறை முயற்சி செய்கிறேன். ” முயற்சியெல்லாம் வேண்டாம். just make it possible.

ungkaL RSS நண்பரிடம் சொல்லுங்கள்: எங்கள் கல்லூரியில் சில ஆசிரியர்கள் open house என்று ஓர் அமைப்பை வைத்திருந்தோம். யார் வேண்டுமானாலும் எதைப்பற்றியும் பேசலாம். அதன்பின் அக்கருத்துக்களின் மேல் விவாதங்கள் நடைபெறும். அப்படிப்பட்ட அமைப்பில் நான் அரங்கேற்றியதே இந்த மதம் பற்றிய எனது கருத்துக்கள். அன்றுதான் நானே என்னை முதல் முதலாக ஒரு நாத்திகன் என்று நினைக்கத் தொடங்கினேன்.கிறித்துவத்தைப் பொருத்து நான் எழுதியுள்ள என் கருத்துக்கள் அன்று விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டன. இன்று எழுதியுள்ளவைகள் இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்தப் பட்டுள்ளன. அவ்வளவே.

எங்கள் கல்லூரி தனக்கென சில வேறுபட்ட பாரம்பரியங்களைக் கொண்டது என்ற பெருமை எனக்குண்டு.

Friday, May 12, 2006

159. நாமும் தமிழும், ஆங்கிலமும்...

Image and video hosting by TinyPic

“வசந்தத்தின் முதல் மொட்டுக்கள்”

‘எனக்கு டமில் வராது, சார்’ ( I don’t know Tamil) என்று என்னிடம் கூறிய மாணவர்களின் முகத்தில், தொனியில் கவலையோ வெட்கமோ இருந்ததில்லை. ஆனால், ‘நான் தமிழ் மீடியம்,சார்’ என்றவர்களின் முகம் மட்டுமல்ல முழு உடம்பே வெட்கத்தால் கூனிக் குறுகி நிற்கும். இந்த நிலை தலைகீழாக இருந்தால் சரியாக இருக்கும். ஆனால் நமக்கு ஆங்கிலம் என்றால் அதில் முழு பாண்டித்தியம் இருக்கவேண்டும்; தமிழ் என்றால் ‘கிடக்குது, போ’ என்ற நினைப்பு. எப்படி வந்தது இந்த மனநிலை? புரியவில்லை!

அவ்வளவு எதற்கு? நான் தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவுகள் வைத்திருக்கிறேன். ஆங்கிலத்தில் முடிந்தவரை தவறின்றி தட்டச்சி, ஒரு முறைக்குப் பல முறை தவறிருக்கிறதா என்று தேடித் தேடிப் பார்த்து அதற்குப் பின்பே பதிவிடுகிறேன். ஆனால், தமிழ்ப் பதிவுகளில் அவ்வளவு மெனக்கெடுவதில்லை. தமிழ் தவறின்றி வந்து விடுகிறதென்றா பொருள்; அப்படியெல்லாம் இல்லை. பின் ஏன் இந்த இரு வேறுபட்ட நிலைப்பாடு? ஆங்கிலத்தில் தப்பு செய்துவிட்டால் ஏதோ பெரிய தவறு போல நினைக்கும் நான், தமிழில் பதிந்த பிறகு தெரியும் தப்புகளைக் கூட பல சமயங்களில் கண்டு கொள்ளாமல் செல்வதுண்டு. எந்த இலக்கணப் பிழையும் ஆங்கிலத்தில் வந்து விடக்கூடாதே என்ற கவலையும், கவனமும் ஏன் தமிழில் எழுதும்போது வருவதில்லை.

அதோடு நம் தமிழ் வலைப்பதிவுகளில் எழுதப்படும் தமிழ் ஒரு தனிவகை. ஒரு சில பதிவர்களைத்தவிர after all, language is just a carrier of ideas என்பதை மற்றவர்கள் அனைவருமே அப்படியே கடைப்பிடிக்கிறோம். சமீபத்தில் துணைவியார் தேர்வுத் தாட்களைத் திருத்திக் கொண்டிருந்தார்கள்; ஒரு தாளில் ‘எங்க அம்மா நல்லவங்க’ என்று ஒரு சொற்றொடர்; தமிழாக்கப் பகுதி, தவறு என்று x போட்டிருந்தார்கள். என்னடா, இது சரியாகத்தானே இருக்கிறது என்று நினைத்து, கொஞ்சம் அவசரப்பட்டுக் கேட்டுவிட்டேன்.’ எங்கள் அம்மா நல்லவர்கள்’ என்பதுதானே சரி என்ற பின்தான் எனக்கும் உறைத்தது. காரணம் வேறொன்றுமில்லை. இப்போதெல்லாம் நான் மட்டுமல்ல, பதிவர் பலரும் இப்படித்தான் எழுதுகிறோம்.

நம் மொழியில்தான் இந்தத் தகராறு என்று நினைக்கிறேன். பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் மிகுந்து வேறு பட்டு இருக்கின்றன. நிச்சயமாக ஆங்கிலத்தில் இவ்வளவு வேறுபாடு இருப்பதில்லை. I wanna write about it என்று நாம் பேசுவது இல்லை என்பது மட்டுமல்ல நிச்சயமாக எழுதுவதில்லை. அப்படியே அதிக அமெரிக்கத் தாக்கம் ஏற்பட்டவர்கள்கூட மிஞ்சிப்போனால் It sucks ; howdy..என்று கொஞ்சமே கொஞ்சம் எழுதுகிறார்கள் ஓரோரிடத்தில், எப்போதாவது. அவ்வளவே!

பேச்சுத் தமிழை நல்ல தமிழ் எழுத்துக்காரர்கள் நல்ல தமிழாக அங்கீகரிக்கப்பதில்லை. ஆனால் நாம், பதிவர்களோ அப்படியே எழுதப் பழகிவிட்டோம். எழுதுபவர்களில் என்னைப் போன்ற ‘வயசாளிகள்’ வெகு சிலரே. ஏனையோராகிய நீங்கள் எல்லோரும் 25-35 வயதுக்காரர்களாகத்தான் இருக்கிறீர்கள். உங்கள் எழுத்தே எதிர்காலத்தில் அங்கீகாரம் பெறும் நிலை. அப்படியானால் இதுவே வழக்கில் நிலை நின்று விடுமா? அப்படி நின்று விடின், அது எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கு உகந்ததா இல்லையா?

பதில் எனக்குத் தெரியவில்லை. (தருமிக்கு கேள்வி கேட்க மட்டும்தானே தெரியவேண்டும்!) உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்.

தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன், ப்ளீஸ்!!

மொழிக் கல்வி பற்றி இங்கே கொஞ்சம் அழுதிருக்கிறேன்; வந்து பாருங்களேன்.



பிற்சேர்க்கை:

அடப் பாவி மக்கா!
நான் மட்டும் என்ன தனித்தமிழியக்கத்தின் தனிப் பெரும் தலைவனா என்ன?
நானும் உங்க கட்சிதாம்’ப்பா! பேச்சுத்தமிழ்ல்ல எழுதுறதுதான் சுகமாவும் இருக்கு; நல்லாவும் இருக்கு; ‘டார்கெட்டு’க்கும் போய்ச்சேருது.இல்லைங்கல…இது நல்லதா கெட்டதான்னு ஒரு பட்டிமன்ற சான்ஸ் கொடுத்தேன். என்னப் போட்டு இப்படி புரட்டி எடுத்தா எப்படி?

இளவஞ்சி, (என்(சிவா)புராணம்) சிவா, ஆசீஃப் மீரான் - இந்த மாதிரி ஆளுகளுக்கு அவங்கவங்க வட்டார வழக்கு நல்லா வருது. பொளந்து கட்றாங்க; நான் என்ன பண்றதுன்னா, பின்னூட்டங்களில இத கொஞ்சம் எடுத்து உட்டுட்டு, பதிவுகளில் கொஞ்சம் அடக்க வாசிக்கிறதுன்னு ஒரு ‘பாலிசி’; அம்புடுதன்..!

இத பின்னூட்டத்தில போடறதா இல்ல, பதிவில போடறதான்னு யோசிச்சு, எதுக்கு வம்பு எல்லாருக்கும் போய்ச்சேரணுமேன்னு ரெண்டுலயும் போட்டுர்ரதுன்னு முடிவு பண்ணியாச்சி…





Š







Pathivu Toolbar ©2005thamizmanam.com


May 12 2006 10:48 pm | சமூகம் |
87 Responses
Prasanna Says:
May 12th, 2006 at 11:09 pm
தருமி சார். வலைப் பதிவுகளில் அப்படி எழுதுவதன் நோக்கம், நாம் எளிதாக வாசகர்களை சென்று அடைந்து விடலாம் என்பது தான். ராஜேந்திர குமார், சுஜாதா, ஆகியோர்களிம் வெற்றிக்கு இந்த பொதுத் தமிழ் நடை மிகவும் கை குடுத்தது. தெரிந்தோ தெரியாமலோ வலைப் பதிவாளர்கள் பலருக்கு இந்த தாக்கம் இருக்கிறது. நான் வலை பதியும் போது தான் இப்படி பொது தமிழில் தட்டச்சுகிறேன். மற்றபடி கல்லூரிகளில மடல் எழுதும் பொழுதும், பிற காரியங்களுக்கு மடல் எழுதும் போதும் சுத்த தமிழில் தான் எழுதுகிறேன்.

கொசுறு: சென்ற முறை சென்னை சென்ற பொழுது என் தங்கையின் நண்பிகளுடம் காஃபி ஷாப் சென்றேன். காப்புசினோ ஷேக் வாங்க குடித்து “பரவாயில்ல! சுவையாத்தான் இருக்கு” அப்படின்னேன். என்ன உக்கார வெச்சு 2 பொண்ணுங்க குமைச்சு தள்ளிடுச்சுங்க. தமிழ ஒழுங்க பேசினவன கிண்டல் பண்ணா அப்புறம் எப்படி பொது இடத்துல தமிழ்ல எல்லாரும் பேசுவாங்க.

TheKa Says:
May 12th, 2006 at 11:13 pm
என்ன தருமி சார்….இப்படி பண்ணி விட்டீர்களே? நானும் அந்த இரண்டாம் தர எழுத்தில் விழுந்திருக்கிறேன்.

ஆரம்பத்தில் நான்றகத்தான் எழுத ஆரம்பித்தேன், பிறகு யாரும் அதனை படிப்பது போல் தெரியவில்லை. குதித்துவிட்டேன் குட்டைக்குள்.

இருப்பினும் கதை சொல்ல ஏதுவாக இருக்கிறது என்பதால் அம்முறையை பயன்படுத்துகிறேன். சரியா? தவறா? தெரியவில்லை.

நீங்களே கூறிவிடுங்கள்.

ஆமா, நீங்க இன்னும் தூங்கப் போகவில்லையா?

தெகா.

சிவா Says:
May 13th, 2006 at 12:00 am
நல்லா சொன்னிய போங்க. ‘நானெல்லாம் தமிழ் மீடியம் தான்’..இதை காலர தூக்கிவிட்டுக்கிட்டே நான் சொல்வேன். ஆனா பொண்ண எங்க படிக்க வைக்கணும் என்று நினைக்கும் போது எத்தனை பேரால் ‘தமிழ் மீடியம்’ என்று போக முடிய/மனசு வருகிறது. காசு இல்லாதவனுக்கு தான் தமிழ் மீடியம் என்று ஆகிவிட்டது.

நீங்க சொல்றது சரி தான் சார். தமிழில் எழுதும் போது பிழைகள் இருந்தால் (தெரியாம எழுதி இருந்தா கூட) நாம அவ்வளவாக கண்டு கொள்வது கிடையாது. ஆனா ஆங்கிலத்தில் ஒரு சின்ன எழுத்து தப்பா போட்ட கூட ‘ஐயோ! அவன் நமக்கு ஸ்பெல்லிங் தெரியலைன்னு நெனைச்சிருவானோன்னு’ அடிச்சிக்குது..நாம வெளங்கின மாதிரி தான்.

முடிஞ்ச அளவு எழுத்து தமிழில் நானும் எழுதலாம் சார். ஆனா ‘ஏல! மக்கா! நல்லாருக்கியால′ என்று எழுதும் போது அதை படிப்பதற்கும் ‘நண்பரே. நலமா?’ என்பதை வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை நம் மொழியின் சிறப்பு என்று சொல்வதா, குறை என்று சொல்வதா.. தெரியவில்லை. அதனால் தான் பேச்சுத்தமிழில் நிறையே பேர் எழுதுவதாக எனக்கு படுகிறது.

( மேலே எழுதியிருக்கிறதுல ஏதாவது குத்தம் கண்டுபுடிச்சி (எழுத்துப் பிழை) என்னை திருப்பி அடிக்காதிய..என்ன ).

பேச்சுத்தமிழோ…எழுத்து தமிழோ..மொதல்ல தமிழ சொல்லிக்கொடுக்கவே நிறைய பெற்றோர்கள் (அறிவாளிகள்) யோசிக்கிறார்கள். அதுங்க தாய் மொழியும் தெரியாம, அயல்மொழியும் புரியாம, சொல்ல்வ வேண்டியதை மழலை கலந்த நகைச்சுவையோடு சொல்லமா, ஏதோ ரோபாட் மாதிரி பேசுதுங்க… …எம்புள்ள இங்கிலீசுல தான் பேசுவான்..அவனுக்கு தமிழ் தெரியாது என்று காலர தூக்கிவிட்டுக்கிட்டு சுத்துதுங்க..வெளங்கா மட்டைங்க….என்னமோ போங்க..நாட்டு நெலமய நெனைச்சா சிரிக்கிறதா,,அழுவறதான்னே தெரியலை…

கால்கரி சிவா Says:
May 13th, 2006 at 12:29 am
ப்ரசன்னா,

சிங்கபூரில் பிறந்து வளர்ந்த என் தம்பி மகன்மகளூக்கு சுத்த தமிழ் தான் தெரியும் (நாங்கள் வீட்டில் தமிழ் பேசுவதில்லை). ஒரு முறை அந்த பொடியன்கள் சென்னையில் உள்ள அஞ்சப்பரில் பரிமாறிய சர்வருக்கு ” நன்றி வணக்கம்” என இருவரும் சொன்னார்கள் . உடனே அந்தப் பணியாளர்கள் அந்த சிறுவர்களிடம் ஒவ்வொரு பொருளாக காட்டி அதன் பெயர்களை கேட்க இவர்கள் சுத்த தமிழில் சொல்ல, அந்த பணியாளர்களுக்கு ஒரே ஆச்சரியம். உ.ம். மின்விளக்கு, மின்விசிறி, குளிர்ந்த நீர், குளிர் பானம்.

பிறகு அந்த சிறுவர்கள் தமிழ்நாட்டில் உள்ள இவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என அங்காலாய்த்தார்கள்

கில்லி - Gilli » I dont know tamil… Says:
May 13th, 2006 at 12:37 am
[…] என்று சொல்லிவிட்டு, தங்களுக்குத் தெரிந்த பேச்சுத் தமிழில் எழுதுபவர்கள் பற்றி பேராசிரியரின் புலம்பல் […]

ஜெயபால் Says:
May 13th, 2006 at 1:02 am
இது பதிவில் ஆரம்பித்த ஒரு விடயமல்ல ஐயா. 20, 30 வருடங்களுக்கு முன்னர் வந்த திரைப் படங்களையோ, கதைப் புத்தகங்களையோ பாருங்கள் தெரியும். தூய தமிழில் அவை படைக்கப் பட்டன. இடையே வந்த சிலர், கதைகளை பேச்சுத் தமிழில் எழுதத் தொடங்கினார்கள். பிரபலமும் ஆனார்கள். தமிழ்த் திரைப் படங்களும் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சுத் தமிழுக்குத் திரும்பியது. அப்படியே கொச்சைத் தமிழாகி, தமிங்கிலமாகி கொஞ்சு தமிங்கிலமாகி இப்பொழுது சிதைக்கப் பட்டுப் போயுள்ளது.

இதைச் சரிப் படுத்த, ஊடகங்கள் அயராது தூய தமிழில் எழுதியும், ஒலிபரப்பியும், ஒளிபரப்பியும் வந்தால் நிலைமை மாறும்.

இன்னொன்று, தமிழைப் படிக்காத தமிழர்கள், தமிழ்ப் பற்றினால், தமிழ் எழுத உதவியாக இந்த ஆங்கில மூலத் தமிழ் இருப்பதால், அவர்கள் எழுதுவது சுத்தமாக இராது தான். அவர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துத் தமிழைப் படைக்க வேண்டும்.

அன்புடன்,
ஜெயபால்

நல்லசிவம் Says:
May 13th, 2006 at 1:53 am
தருமி,

//நாமும் தமிழும், ஆங்கிலமும்
எனக்கு என்னமோ தலைப்புலயே இடிக்கறாப்போல இருக்கு..

உம்மைத்-தொகை மேல சந்தேகமா இருக்கு..
எதுக்கும் வீட்டுல அம்மணிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுங்களேன்

துளசி கோபால் Says:
May 13th, 2006 at 2:17 am
தாங்கள் சொல்வதுபோல எழுதினால் வாசகர்கள்(!) படைப்பாளி இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு
பிரிவு, பிளவு இருப்பது போல தோற்றம் அளிப்பதன் காரணமாகவே அநேகர் இப்படிப் பேச்சுத்தமிழில்
எழுத முற்படுகிறார்கள் என்று சொல்லலாமா?

அப்பாடா……………………. ஆளை விடுங்கப்பா

ஏங்க தருமி,

மனுஷனைச் சும்மா இருக்க விடமாட்டீங்களே! முந்தி, மெட்ராஸ்லே ஒரு பஸ் கண்டக்ட்டர் எப்பவும்
தூய தமிழில் பேசுவார். அவரைக் கிண்டல் செய்யவே அந்த பஸ்ஸுலே போவோம்.

இங்கேயும், ஒரு இலங்கைத்தமிழர் எப்பவும் தூய தமிழ்தான். ஆனா அன்னியப்பட்டுப்போற
உணர்வுதான் எங்களுக்கு.

ஜீவா Says:
May 13th, 2006 at 6:28 am
சார்,
இயல்பான நடைமுறைத் தமிழில் எழுதுவதே என் தேர்வு.
அதாவது: தேவையில்லாமல் ஆங்கிலம் கலப்பதையும், பேச்சுத்தமிழில் எழுதுவதையும் தவிர்க்கிறேன்.
வேண்டுமென்றே அனைத்து ஆங்கில சொற்களையும் தமிழில் மொழி பெயர்ப்பதை ஆதரிப்பதில்லை.

வெளிகண்ட நாதர் Says:
May 13th, 2006 at 11:05 am
//அப்படியே அதிக அமெரிக்கத் தாக்கம் ஏற்பட்டவர்கள்கூட மிஞ்சிப்போனால் It sucks ; howdy..என்று கொஞ்சமே கொஞ்சம் எழுதுகிறார்கள் ஓரோரிடத்தில், எப்போதாவது. அவ்வளவே!// கூட கொஞ்சம் ‘awesome’ம்மையும் சேர்த்துக்குங்க! அப்புறம் அனுபவங்களை சொல்லு தமிழ்ல எழுதினா நல்லா இருக்குமா? அப்புறம் இந்த தமிழ் எழுத்து வடிவங்கள்ல வந்த பிரச்சினையே நம்ம ஆங்கிலேயர் அமைத்த சாதியம்-வரலாறு தொடர்கிறது!!ல பாருங்க!

கொத்ஸ் Says:
May 13th, 2006 at 11:30 am
தருமி சார்,

இப்போதான் கௌசிகன் பதிவில் ரொம்ப சண்டை போட்டுட்டு வந்திருக்கேன். நான் எங்கள் வெ.வா. ஜீவாவின் கருத்துகளை வழிமொழிகிறேன்.

ஆனால் சில ஜனரஞ்சகப் பதிவுகளுக்கு பேச்சுத்தமிழில் எழுதினால் தப்பில்லை என்பது என் எண்ணம்.

selvan Says:
May 13th, 2006 at 11:40 am
பார்ட்னர்,

ஆங்கிலம் பிஸினஸ் மொழி என்பதால் பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்ற உணர்வு நம் மனதில் தன்னிச்சையாக எழுகிறது என நினைக்கிறேன்.டெண்டர்,ஆபிஸ் லெட்டர் ஆகியவை ஆங்கிலத்தில் பெரும்பாலும் எழுதுவதால் பிழை இருக்கா என கண்ணில் விளக்கெண்னை ஊற்றிப்பார்ப்பது நம் வழக்கமாகி விட்டது.தமிழில் எழுதுவது பெரும்பாலும் உறவினர்களுக்கான கடிதம்,குழு மடல்கள் என இருப்பதால் அவ்வளவாக இலக்கணம் பார்ப்பதில்லை என நினைக்கிறேன்.

மேலும் ஆங்கிலத்தில் தப்பு கண்டுபிடிப்பது எளிது.தமிழில் இலக்கணம் அவ்வளவாக பரிச்சயமில்லை என நினைக்கிறேன்(என்னளவிலேனும் இது உண்மை)

இளவஞ்சி Says:
May 13th, 2006 at 11:55 am
தருமிசார்!

மத்தவங்களைப்பத்தி தெரியலை! நான் ஏன் இப்படி எழுதறேன்னா இதில் எனக்கு கிடைக்கும் Flexibility தான்! மேலும் ப்ளாக்கு என்பதனை நான் இலக்கியத்தின் மற்றொரு ஊடகமாக பார்ப்பதில்லை!

சுயகட்டுப்பாடு என்பதைத்தவிர இங்கு இப்படித்தான் எழுதனும் இதைத்தான் எழுதனும்கற வேறெந்த கட்டுப்பாடுகளும் இல்லாத சுதந்திரபூமி!

எனவே அந்த சுதந்திரத்தை நாங்கள் இப்படி.. ஹிஹி…

பொன்ஸ் Says:
May 13th, 2006 at 12:31 pm
தருமி,
சின்னத் திரையில் கடிந்து கொண்டே பார்த்தீர்களே “மாபெரும் தொடர்கள்”, அங்கே இருக்கிறதா நீங்கள் தேடும் தமிழ்?

வெள்ளித் திரையில் வெற்றுச் சடங்குகளால், வெறுப்படைந்தாலும் பார்த்தீர்களே, அங்கேயாவது இருக்கிறதா தமிழ்?

உங்கள் வீட்டம்மா(ள்??), திருத்தும் தாள்களிலும் இல்லை தமிழ்…

நீங்கள் வீட்டில் பேசுவதிலும் இல்லை சுத்தத் தமிழ்..

அப்புறம் ஏங்க பதிவுல மட்டும் எதிர்பாக்கறீங்க?!!
சரி விடுங்க.. என்ன செய்யறது.. சுத்தத் தமிழில் எழுதினா யாருங்க படிப்பாங்க? நம்மளே ஒரு வருடம் கழிச்சு வந்து பார்த்து, இது என்ன மொழின்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டா? தமிழ் அப்படி ‘வளர்ந்துட்டு’ இருக்குங்க இப்போ!!!

(இப்போதைக்கு இது போதும்.. மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு வர்றேன்.. )

தருமி Says:
May 13th, 2006 at 12:53 pm
அடப் பாவி மக்கா!
நான் மட்டும் என்ன தனித்தமிழியக்கத்தின் தனிப் பெரும் தலைவனா என்ன?
நானும் உங்க கட்சிதாம்’ப்பா! பேச்சுத்தமிழ்ல்ல எழுதுறதுதான் சுகமாவும் இருக்கு; நல்லாவும் இருக்கு; ‘டார்கெட்டு’க்கும் போய்ச்சேருது.இல்லைங்கல…இது நல்லதா கெட்டதான்னு ஒரு பட்டிமன்ற சான்ஸ் கொடுத்தேன். என்னப் போட்டு இப்படி புரட்டி எடுத்தா எப்படி?

இளவஞ்சி, (என்(சிவா)புராணம்) சிவா, ஆசீஃப் மீரான் - இந்த மாதிரி ஆளுகளுக்கு அவங்கவங்க வட்டார வழக்கு நல்லா வருது. பொளந்து கட்றாங்க; நான் என்ன பண்றதுன்னா, பின்னூட்டங்களில இத கொஞ்சம் எடுத்து உட்டுட்டு, பதிவுகளில் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதுன்னு ஒரு ‘பாலிசி’; அம்புடுதன்..!

இத பின்னூட்டத்தில போடறதா இல்ல, பதிவில போடறதான்னு யோசிச்சு, எதுக்கு வம்பு எல்லாருக்கும் போய்ச்சேரணுமேன்னு ரெண்டுலயும் போட்டுர்ரதுன்னு முடிவு பண்ணியாச்சி…

முத்துகுமரன் Says:
May 13th, 2006 at 1:15 pm
தருமி,

பேச்சோ, எழுத்தோ இயன்றவரை தமிழை சிதைக்காமல் எழுதினாலே மகிழ்ச்சி.

தருமி Says:
May 13th, 2006 at 2:19 pm
ப்ரஸ்,
“வலைப் பதிவுகளில் அப்படி எழுதுவதன் நோக்கம், நாம் எளிதாக வாசகர்களை சென்று அடைந்து விடலாம் என்பது தான்.”"// அதே…அதே…

அந்தக் கொசுறு விஷயம்: விஷயம் புரியலையா, ப்ரஸ்? நான் அடுத்த மேசையிலதான் உக்காந்திருந்தேன். உங்கள் கொமச்ச பொண்ணு இருக்கே அது ஏன் அப்படி பண்ணுச்சின்னா, அதுக்குப் பக்கத்தில ஒரு பொண்ணு நமட்டுச் சிரிப்போடு இருந்திச்சே அத indirect-ஆ கலாய்க்கிறதுக்குத்தான். புரிஞ்சுதா?

அதோட ஜிகர்தண்டா சிவா கீழே உங்களுக்கு ஒரு பதில் தந்திருக்கார்; போய் பாத்துக்கோங்க.

தருமி Says:
May 13th, 2006 at 2:22 pm
தெக்காட்ஸ்,
மறுபடி பதிவை பின்குறிப்போடு சேத்து வாசிச்சிருங்க…சரியான ட்ராக்லதான் போய்க்கிட்டு இருக்கீங்க. விஷயங்களும் நல்லா இருக்கிறது ஒரு பெரிய + பாய்ண்ட்.

அதுசரி. தெக்காடுன்னா நெல்லையத்தான் சொல்லுவாங்க. புதுக்கோட்டையையுமா சொல்லுவாங்க? (நீங்க புதுக்கோட்டைன்னு சொன்னமாதிரி படிச்சேன்.)

தருமி Says:
May 13th, 2006 at 2:22 pm
சிவா,
நீங்க கட்டாயம் நான் ‘அழுதிருக்கிற பதிவைப்’ படிக்கணும். மேல, பதிவின் கடைசியில லின்க் கொடுத்திருக்கேன்.

சோகம் என்னன்னா அந்த மாதிரி இங்லீஷ் மீடியத்தில படிக்கிற பிள்ளைக நிறைய பேத்துக்கு இப்ப தமிழும் தெரியலை; ஆங்கிலமும் தெரியலை.

நாம் எங்கே போகிறோம்??

தருமி Says:
May 13th, 2006 at 2:23 pm
ஜிகர்தண்டா சிவா,
(இந்தப் பேரு எப்படியிருக்கு?)

1. அங்கலாய்த்தல் - இதிலிருந்துதான் கலாய்த்தல் என்ற சொல் வந்திருக்குமோ? (எப்படி நமது ஆராய்ச்சி?)

2. அந்த சிறுவர்கள் தமிழ்நாட்டில் உள்ள இவர்களுக்கு தெரியவில்லை என்று அங்கலாய்த்தார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவ்வளவுதான் நம்ம வீட்டு ஆளுக ‘அவமானத்தினால கூனிக் குறுகி’ தொங்குற அளவுக்கும் போயிடுவாங்க. ஆனா இப்ப…?

தருமி Says:
May 13th, 2006 at 2:24 pm
கில்லிக்கு நன்றி

தருமி Says:
May 13th, 2006 at 2:25 pm
வாங்க..வாங்க ஜெயபால்..முதல் வருகை.
வரவேற்கிறேன்.

30 வருடங்களுக்கு முன்பு வந்த பட ‘நாதன் & நாதி(!)’ பற்றி முந்திய பதிவில் கூட எழுதியுள்ளேன்.

“ஊடகங்கள் அயராது தூய தமிழில் எழுதியும், ஒலிபரப்பியும், ஒளிபரப்பியும் வந்தால் நிலைமை மாறும்.” - நான் முன் வைக்க நினைத்த கேள்வியே… நிலைமையை மாற்ற வேண்டுமா என்பதுதான். எப்படி பேசும் மொழியும் எழுத்து மொழியும் ஆங்கிலத்தில் ஏறத்தாழ ஒன்றாய் இருப்பது போல தமிழிலும் இரண்டையும் நெருக்கிக் கொண்டு வர வேண்டுமா? ஏற்கெனவே நம் பதிவுலகத்தில் நெருங்கி வந்துவிட்டது - அது சரியான பாதைதானா என்பதுதான் என் கேள்வியே!

தருமி Says:
May 13th, 2006 at 2:27 pm
வாங்க..வாங்க நல்லசிவம்..முதல் வருகை.
வரவேற்கிறேன்.

WE AND TAMIL & ENGLISH இப்படி மனசுல நினச்சுக்கிட்டு தலைப்பை வச்சேன்னா, அப்போ எப்படி எழுதணும். தெரியலையே! அம்மணிட்ட அவ்வளவெல்லாம் கேக்க முடியாதுங்க. நீங்கதான் உதவணும்…ஒரு உம்மைத் தொகைதான் வரணும்னு சொல்றீங்கன்னு நினைக்கிறேன். அந்த விதியை மீறாமல் நான் நினைத்தத் தலைப்பை எப்படி எழுதுவது

தருமி Says:
May 13th, 2006 at 2:32 pm
துளசி,
“….அன்னியப்பட்டுப்போற
உணர்வுதான் எங்களுக்கு. //

அதனால இப்போ மேலே ஜெயபால் அவர்களிடம் கேட்ட கேள்வியைத் திரும்பவும் உங்கள் முன் வைக்கிறேன்.

“எப்படி பேசும் மொழியும் எழுத்து மொழியும் ஆங்கிலத்தில் ஏறத்தாழ ஒன்றாய் இருப்பது போல தமிழிலும் இரண்டையும் நெருக்கிக் கொண்டு வர வேண்டுமா? ஏற்கெனவே நம் பதிவுலகத்தில் நெருங்கி வந்துவிட்டது - அது சரியான பாதைதானா என்பதுதான் என் கேள்வியே!”
வேண்டுமென்றால் ஒரு சிறு திருத்தம் அதில்: அது சரியான பாதைதானே என்பதுதான் என் கேள்வியே!”

தருமி Says:
May 13th, 2006 at 2:36 pm
வாங்க..வாங்க ஜீவா..முதல் வருகை. வரவேற்கிறேன்.

“பேச்சுத்தமிழில் எழுதுவதையும் தவிர்க்கிறேன்.”// பட்டி மன்றத்தில் நீங்கள் ஒரு பக்கம் எடுத்து இருக்கிறீர்கள். மறுபக்கம் வெகுஜன ஆதரவோடு மாற்றுக் கருத்து இருப்பதற்கு உங்கள் பதில்

தருமி Says:
May 13th, 2006 at 7:37 pm
வெளிகண்ட நாதர்,
fantastic அதுக்கு எதிர்மறையாக very weird - இந்த இரண்டையும்கூட சேர்த்துக்கணும்னு நினைக்கிறேன்.

உங்க பதிவில இந்த விஷயம் எங்கே இருக்குன்னு தெரியலையே!

தருமி Says:
May 13th, 2006 at 7:46 pm
கொத்ஸ்,
அப்போ ஜனரஞ்சக எழுத்துக்களுக்கு மட்டும்தானா? வீட்டுக்கு அம்மா, அப்பாவுக்கு எழுதுறீங்க; நண்பர்களுக்கு மயில் அனுப்புறீங்க…அப்போவெல்லாம் எப்படி எழுதலாம்..?

Padma Arvind Says:
May 13th, 2006 at 8:01 pm
எனக்கும் தமிழ் சரியாக தெரியாது. இது உண்மை மட்டும் தானே தவிர கர்வமோ ஆங்கிலம் தெரியும் என்ற அகந்தையோ இல்லை:( வீட்டில் பேச்சு மொழி சிறிது தமிழ், சொல்ப கன்னடா, தோடாஸா ஹிந்தி,அதிகமாய் ஆங்கிலம்.. இது வசதிக்காகத்தானே தவிர பெருமையும் இல்லை சிறுமையும் இல்லை.I love you ஆனால் என்ன பிரேம் கர்தோ என்றால் என்ன காதல் காதல்தானே என்ற ஒரு சமன்பாடு அவ்வளவே.

சிங். செயகுமார். Says:
May 13th, 2006 at 8:05 pm
உங்கள் பதிவு ரொம்பவே தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. உண்மை நிகழ்வும் அதுதான்.பேச்சு தமிழ் கடை கோடி வாசகர்களையும் சென்றடைவதால் இலக்கியம் பாமரரும் பருக வாய்ப்பும் அமைகின்றது.

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் தொலை பேசியில் பேசும் போது தம்பி நீங்க ரொம்ப தமிழ் பேசுரீங்க நமக்கு அந்த மாதிரி பேசி பழக்கமில்லைன்னு சொல்லிவிட்டார் .அந்த உடைந்த தமிழ் பேசினால்தான் அவருக்கு புரிகின்றது. இவ்வளவும் அவர் மெத்த படித்தவர். முடிந்த வரை நல்ல தமிழில் எழுத பழகுவோம். இதனுடன் சம்மந்த பட்டபதிவொன்று

Gowrishankar Says:
May 13th, 2006 at 8:12 pm
Hi,

The difference between spoken and literary forms of a language is well known in linguistics, and is not unique to Tamil. It is called “diglossia”. It is a feature of all Dravidian languages and several other languages in the world. This happens in all languages with a fairly early literary tradition. The literature freezes the written form of language, even while the spoken form keeps moving farther and farther away from it due to the masses.

Even in English, you will realize that there is a standard Queen’s/ Webster forms as opposed to various forms of colloquial language. People living abroad in English spoken countries will realize that the native speakers do not care for the correctness of grammar/syntax etc…. “no nothing”, “I says” etc. They do not care, and do not know! We are concerned about our mistakes in English, because we LEARN it, as opposed to the native speakers who merely pick it up as we do in case of Tamil.

When the literary form becomes too different from the spoken form, then the literary language dies…like Sanskrit. Pali and Prakrit were considered “crude” neecha bashas whereas Sanskrit was called deva basha. But all the deva bashas will die, if care is not taken to bring it down gradually to the reality of the day. That is where the importance of “pazhayana kazhithalum pudhiyana puhudhalum vazhuvala, kaala vahaiyinaane”.

சதயம் Says:
May 13th, 2006 at 8:24 pm
நல்லவேளை என் தமிழை…நடையை யாரும் கேள்வி கேட்க முடியாது….இப்படியெல்லாம் யாராச்சும் கிண்டுவாங்கன்னுதான் பதிவு ஆரம்பிக்கும் போதே “இயன்ற வரை இனிய தமிழில்” னு தலைப்பு வச்சிட்டு எழுத ஆரம்பிச்சேன்.

Geetha Sambasivam Says:
May 13th, 2006 at 8:42 pm
தாங்கள் காலையில் குழம்பி அருந்துவீர்களா? அல்லது இலைநீர் வடிகட்டி அருந்துவீர்களா?

Gowrishankar Says:
May 13th, 2006 at 9:26 pm
do u not allow replies in english?

TheKa Says:
May 13th, 2006 at 9:29 pm
தருமி,

இப்பத்தான் உங்களோட ஆங்கிலப் பதிவ பார்த்து படிச்சுப்புட்டும் தான் (புரிஞ்சயளவுக்கு ))) இங்கன வாரேன். சார் சும்மா சொல்லக் கூடாது, தூள் பண்ணிட்டீங்க.

எல்லோரும் அதனை படிக்கணும், கட்டாயம.

நீங்க அங்க போயிப் பார்த்தீங்களா, நான் பட்டையைய கிளப்பி புட்டேன் கிளப்பி… உங்களுக்கு எதிர் பாட்டுப் பாடி…

புரியுது புரியுது இந்த தமிங்கிலிஸ் ட்ரெண்ட்…

ஹீம்…புதுகைதான், ஆனா தெக்கிக்காடுங்கிறது ஒரு சிறிய சமூகம் வாழ்ற ஒரு சிறு ஊர்… கட்டக் கடாசிலெ கிடக்கிறதாலெ அப்படி பேர் வந்துடுச்சுப் போல… தெக்கப் பார்த்து…

தெகா

பொன்ஸ் Says:
May 13th, 2006 at 9:36 pm
கொத்ஸ், இந்த ஜீவா நம்ப வெ.வா. இல்லை.. வேற ஒருத்தர்..

தருமி Says:
May 13th, 2006 at 9:39 pm
கொத்ஸ்,
நீங்க சொன்ன பிறகு கெளசிகன் பதிப்பைப் போய் பார்த்தேன். அதில் நிறைய உள்குத்துக்கள் இருப்பதாகப் படுவதால்,பேசாமல் வாலைச்(!) சுருட்டிக்கிட்டு வந்துட்டேன்.

:சில ஜனரஞ்சகப் பதிவுகளுக்கு பேச்சுத்தமிழில் எழுதினால் தப்பில்லை என்பது என் எண்ணம். “//
- இதுவே பலரின் எண்ணமாகவும் இங்கே இருப்பதால் எனக்கு ஓர் ஆசை; நம்ம ஞானவெட்டியான், வளவு இராமகி இருவரையும் இங்கே ‘இழுத்தால்’ என்ன என்று. அடுத்த பக்கத்தையும் கேட்டது மாதிரி இருக்குமே!

தருமி Says:
May 13th, 2006 at 9:59 pm
பார்ட்னர்,
“டெண்டர்,ஆபிஸ் லெட்டர் ஆகியவை ஆங்கிலத்தில் பெரும்பாலும் எழுதுவதால் பிழை இருக்கா என கண்ணில் விளக்கெண்னை ஊற்றிப்பார்ப்பது நம் வழக்கமாகி விட்டது.”//
சரி விடுங்க; நாமளே ஒரு ஆங்கிலப்பதிவு வச்சிருக்கோம்னு வச்சுக்கங்க. தமிழ், ஆங்கிலப் பதிவுகள் இரண்டையும் ஒரே மாதிரியா ட்ரீட் பண்ணு(வோம்)கிறோம்? இல்லையே!

தருமி Says:
May 13th, 2006 at 10:01 pm
இளவஞ்சி,
“………வேறெந்த கட்டுப்பாடுகளும் இல்லாத சுதந்திரபூமி! “//
- தமிழில் எழுதும்போதும் எந்த மனக்கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருக்கிறோமல்லவா? பின் எதற்கு/எப்படி/ஏன் ஆங்கிலத்திற்கு மட்டும் …?

தருமி Says:
May 13th, 2006 at 10:02 pm
பொன்ஸ்,
கையில் மாணிக்கச் சிலம்புக்குப் பதில் ஒரு பேப்பரைச் சுருட்டி வச்சுக்கிட்டு கோபமா இருக்கிற கண்ணகியை அப்படியே விஷுவலைஸ் பண்ண முடியுது.
மறுபடி வரும்போது இந்த அளவு கோபமா வராதீங்க சரியா?

தருமி Says:
May 13th, 2006 at 10:16 pm
முத்துக்குமரன்,
நன்றி
நறுக்குன்னு சொல்லிட்டீங்க.

தருமி Says:
May 13th, 2006 at 10:21 pm
பத்மா,
தமிழ் தெரியாது இருப்பது பாவமோ தவறோ அல்ல. ஆனால் அதில் பெருமை கொள்வதும், அப்படிச் சொல்வோருக்கு பெருமை அளிப்பதுமே தவறென்று சொல்கிறேன்.
‘சொல்ப தமிழ்’ வைத்துக்கொண்டுதானா இந்தப் போடு போடுகிறீர்கள்

தருமி Says:
May 13th, 2006 at 11:14 pm
Gowrishankar,
i think this is your maiden visit. if so, thanks.

“This happens in all languages with a fairly early literary tradition.”//
so one can be happy that we have this ‘diglossia’ since that itself proves the antiquity of our mother tongue!
‘no nothing’ or’ i dont have nothing’ - may be used by native speakers but i think ‘I says..’ - that is mostly by illiterate afro-americans. right? and of course in western movies and fictions!

நீங்க சொன்னதில எனக்கு ரொம்ப பிடிச்சது: When the literary form becomes too different from the spoken form, then the literary language dies…like Sanskrit. My major worry was whether this gap between literary tamil and spoken tamil is good for the future of our language. நீங்க சொல்றபடி பார்த்தால் நாம் இந்த ‘மொழிப் பிளவில்’கொஞ்சம் சிரத்தையோடுதான் இருக்கவேண்டுமென நினைக்கிறேன்.

நல்ல ஒரு பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி.

தருமி Says:
May 13th, 2006 at 11:19 pm
Gowrishankar,
“do u not allow replies in english? “// come on, how and why do you think like that?
why dont you make a visit to the latest posting in my english blog - a matter of concern related to languages.

தருமி Says:
May 13th, 2006 at 11:21 pm
சதயம்,
இந்த மாதிரி ஆளுகளைத்தான் ‘எமகாதகன்’ அப்டிம்பாங்களோ?

வெளிகண்ட நாதர் Says:
May 13th, 2006 at 11:27 pm
அந்த பதிவின் பின்னோட்டம் கொஞ்ச்ம் பாருங்க!

தருமி Says:
May 13th, 2006 at 11:29 pm
“தாங்கள் காலையில் குழம்பி அருந்துவீர்களா? அல்லது இலைநீர் வடிகட்டி அருந்துவீர்களா? “//
- தப்பு திரிபுரசுந்தரி தப்பு…sorry, just was carried away
தப்பு கீதா தப்பு.எப்படி கேட்கணும்னா:
தாங்கள் காலையில் குழம்பி அருந்துவீர்களா? அல்லது இலைநீர் வடிகட்டி அருந்துவீர்களா?
இப்படியா, இல்லை,
ஏங்க, நீங்க காலையில் காலையில காப்பி குடிப்பீங்களா? இல்ல டீ தானா?

இதுக்கு ரெண்டு பதிலுங்க:
1.அது வீட்டம்மா என்ன கொடுக்குராங்களோ, அதாங்க!
2. நான் இரண்டாவது டைப்புங்க

தருமி Says:
May 13th, 2006 at 11:35 pm
தெக்ஸ்,
உங்க ஆங்கிலப் பதிவைப் பார்த்துட்டேன். Great people think alike அப்டின்னு சொல்லுவாங்க. (அதே மாதிரி இன்னொண்ணும் சொல்லுவாங்க!அது எனக்கு மட்டும்னா சரியா இருக்கும். )

தருமி Says:
May 13th, 2006 at 11:41 pm
வெ.க. நாதர்,
நம்ம மண்டை கொஞ்சம் மரமுங்க தமிழ் நடை பற்றிச் சொல்லியிருப்பதைச் சொல்கிறீர்களா?
நோட்ஸ் இல்லாம் என்னைக்குப் படிச்சேன் இப்ப விளங்குறதுக்கு

ஜீவா Says:
May 14th, 2006 at 7:02 am
இப்போதுதான் பார்க்கிறேன்…பின்னூட்டங்கள் மிகப்பலவாய் வந்து குவிந்திருக்கின்றன…
வேகமாய் நோட்டம் விடுவதற்கே நேரம் போதவில்லை…

வலைப்பதிவுகள் டைரியைப்போல். அதில் இலக்கியம் அல்லாத சாதரண நடைமுறைத் தமிழில் இருத்தலில் எந்த தவறும் இல்லை. அதே சமயம் வெறும் பேச்சுத் தமிழில் முழுதுமாய் நொடிந்து விடாமலும் பார்த்துக் கொள்ளலாமே! அவ்வாறு பேச்சுத்தமிழை தவிர்க்கும்போது ஏதோ நிறைவு இருப்பதாகவும் சமயங்களில் தோன்றுகிறது!

ஆனால் பேச்சுத்தமிழில் எழுதுவதற்கும் தேவை இருக்கிறது- உதாரணத்திற்கு - நாடக வசனம். அல்லது, கதைகளில் மேற்கோளிடப்பட்ட பேச்சுக்கள்.

“wanna” பற்றி பி.பி.சி யின் சுட்டி:
http://www.bbc.co.uk/worldservice/learningenglish/grammar/learnit/learnitv165.shtml

Prasanna Says:
May 14th, 2006 at 9:29 am
///அந்தக் கொசுறு விஷயம்: விஷயம் புரியலையா, ப்ரஸ்? நான் அடுத்த மேசையிலதான் உக்காந்திருந்தேன். உங்கள் கொமச்ச பொண்ணு இருக்கே அது ஏன் அப்படி பண்ணுச்சின்னா, அதுக்குப் பக்கத்தில ஒரு பொண்ணு நமட்டுச் சிரிப்போடு இருந்திச்சே அத indirect-ஆ கலாய்க்கிறதுக்குத்தான். புரிஞ்சுதா?///
இருபதுக்கு அனுபவம் குறைவு, அறுபது அதை எடுத்து உரைத்து விட்டது. இந்த முறை சென்னை செல்லும் பொழுது பார்த்துக் கொள்கிறேன்.

Prasanna Says:
May 14th, 2006 at 9:43 am
///பிறகு அந்த சிறுவர்கள் தமிழ்நாட்டில் உள்ள இவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என அங்காலாய்த்தார்கள்///
தேசிகன் அவர்கள் பதிவுல அவர் ஒரு தடவ சொல்லி இருந்தார். இங்க இருக்குற வரைக்கும் பசங்கள ஸ்போக்கன் இங்கிலீஷ் படிக்க சொல்லி கஷ்டப்படித்துவோம். அமேரிக்கா போன உடனே சங்கம் வைத்து தமிழ் வளர்க்குற ரேஞ்சுக்கு தமிழ் தமிழ்னு அடிச்சுக்குவோம். அதான் சொல்லத் தோணுது. தமிழ் பேச்சு தமிழா இருந்தாலும் செந்தமிழா இருந்தாலும் தமிழ்ல அடிக்குறோமா அப்படின்றது தான் மேட்டரே. இல்ல இன்னொரு நண்பர் சொன்னது போல் செம்மொழி அந்தச்த்த வெச்சுகிட்டு தூங்குற சமஸ்கிருதம் போல் தமிழும் தூங்க வேண்டி இருக்கும்.

முத்துகுமரன் Says:
May 14th, 2006 at 12:48 pm
//இலைநீர் வடிகட்டி//
தேநீர் என்று சொல்லிவிட்டு போகலாமே… பயன்படுத்தவும் எளிமையாகவும் இருக்கும். தமிழ்ப்படுத்துகிறேன் என்கிற பெயரில் எல்லை மீறிப்போவதும் தவறு. இலைநீர் வடிகட்டி என்று சொல்லவேண்டிய கட்டாயமில்லை. அது ஒரு வகையான அரசியல். வேண்டுமென்றே கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ஆர்வமிருப்பவர்களையும் வதைக்கும் போக்கு கூடாது. நான் பதினொன்றாம் வகுப்பு கணினி பாடத்தை தமிழில் படித்தேன். அப்போது தமிழ்ப்படுத்துகிறேன் என்கின்ற பெயரில் பெரிய கூத்துகளை எல்லாம் அரங்கேற்றி இருந்தார்கள். Keyboard- எளிமையாக தட்டச்சு பலகை என்று சொல்லுவதை விட்டு விட்டு ‘’கட்டை விரற்பட்டடை என்று சொல்லியிருந்தார்கள்'’.

தருமி Says:
May 14th, 2006 at 2:06 pm
என்ன ஜீவா,
பட்டிமன்றத்து நடுவர் உரை மாதிரி சொல்லிட்டீங்க போல..

தருமி Says:
May 14th, 2006 at 2:08 pm
ப்ரஸ்,
“இந்த முறை சென்னை செல்லும் பொழுது பார்த்துக் கொள்கிறேன்.”// அய்யா, ஷியாமி விஷய்த்தில டெய்லர் சித்தப்பா..இங்க நானா?
ஒண்ணு பண்ணுங்க…அந்த மாதிரி காபிக்கடைக்கெல்லாம் போனீங்கன்னா, தங்கச்சியையும் கூட்டிக்கிட்டு போங்க..

தருமி Says:
May 14th, 2006 at 2:13 pm
ஆமாம் முத்துக்குமரன்,
துவிச்சக்கர வண்டியில் போறதை விட, சைக்கிளில் செல்வது நல்லா இருக்கில்ல?
சிற்றுந்து ஒன்றில் போய், பின் பேருந்தில் ஏறிப மருத்துவரிடம் போய் கூட்டு மருந்து வாங்குவதற்குப் பதில் மினிபஸ்ல போய், பெறகு பஸ்ஸுக்கு மாறி டாக்டரைப் பாத்து காப்ஸ்யூல் வாங்கிட்டு வந்திடலாமோ?

பொன்ஸ் Says:
May 14th, 2006 at 2:24 pm
//துவிச்சக்கர வண்டியில்//
இதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இருசக்கர வாகனம், மிதி வண்டி, இதெல்லாம் புழங்குகின்ற பேர்தானே தருமி - பேச்சுத் தமிழில் இல்லை என்றாலும், எழுத்துத் தமிழிலாவது?!!

உங்க பதிவோட தாக்கத்துல, நான் இன்னிக்கு போட்ட பதிவில் கூடிய வரை எழுத்துத்தமிழில் எழுதி இருக்கேன்.. பாக்கலாம், எத்தனை பேர் படிக்கிறாங்க, எத்தனை பேர் பி.பி.ப.ஓடறாங்கன்னு

முத்துகுமரன் Says:
May 14th, 2006 at 2:29 pm
//சிற்றுந்து ஒன்றில் போய், பின் பேருந்தில் ஏறிப மருத்துவரிடம் போய் கூட்டு மருந்து வாங்குவதற்குப் பதில் // இப்படி வாங்கினாலும் நோய் தீரும்

தருமி Says:
May 14th, 2006 at 2:46 pm
பொன்ஸ்,
“இருசக்கர வாகனம்…” என் பேரன்(பெயரன்?)கூட இருசக்கர வாகனம் ஒண்ணு (ஒன்று?)வச்சிருக்கான்(வைத்திருக்கிறான்?)!

பி.பி.ப.ஓடறாங்கன்னு ..அப்டின்னா
‘பி.கா.பி.ப.ஓடறாங்கன்னு …’ அப்டின்னுதானே அர்த்தம்.

தருமி Says:
May 14th, 2006 at 2:47 pm
முத்துகுமரன்,





முத்துகுமரன் Says:
May 14th, 2006 at 2:55 pm


முத்துகுமரன் Says:
May 14th, 2006 at 3:22 pm
//இப்படி வாங்கினாலும் நோய் தீரும் //
தருமி, மருந்து கொஞ்சம் கசக்கத்தான் செய்யும். ஆனால் நோய் குணமாயிடும்..

என்ன சொல்றீங்க

கோவி.கண்ணன் Says:
May 14th, 2006 at 3:28 pm
வலைப்பதிவுகள் செய்தித்தாள்கள் அல்ல, பேச்சுத் தமிழில் எழுதுவது,படிப்பது நேரிடையாக பேசுவதோ, கேட்பதுபோன்று இருக்கிறது. வலைப்பதிவுகளை எழுதுபவர்கள் எல்லோரும் நல்ல தமிழில் தேர்ச்சி பெற்றோர் என்று நினைக்க முடியாது. தகவல்களை தொலைபேசியில் பேசுவது போல வலைப்பதிவுகளில் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறோம். சரியோ தவறோ தமிழில் இருப்பது நன்று என்றே தோன்றுகிறது. ஆங்கில கலப்பில்லாமல் சுலபமாக எழுதமுடியாது அது போலவே, பேச்சுத் தமிழின்றி சொல்லவந்த விசயங்களை தங்குதடையின்றி எழுதமுடியாது. தூய தமிழில் பதிவுகள் எழுதப்பட்டால் அது செய்தி ஓடை போலவே காணப்படும். செய்தி ஊடகங்களின் தாக்கங்களினால் வட்டாரவழக்குகள் அழியும் நிலையில் இருக்கிறது. நல்ல கதைகள், செய்திகள் ஆகியவற்றை அவ்வட்டார வழ்க்கிற்கேற்ப நயமுடன் எழுதப் பெற்றால் நம் வட்டார வழக்குகளையும் காக்க முடியும் என்று நினைக்கிறேன், வட்டார வழக்கின்றி தமிழ் வழங்கப்படுமானால் அது மொரிசியஸ் நாட்டில் பேசப்படும் தமிழ்போலவே இருக்கும்.

தருமி Says:
May 14th, 2006 at 3:39 pm
முத்துக்குமரன்,
இப்போ சுத்தமா குழம்பிப் போச்சு…இப்போ நீங்க சொல்ற கசப்பு மருந்து எது? நோய் எது?

தருமி Says:
May 14th, 2006 at 3:41 pm
அதாவது கோவி. கண்ணன், நீங்க இப்போ எழுதியிருக்கிறது மாதிரி ‘நற்றமிழாய்’ எழுதாம, நான் இப்போ எழுதிறேனே அதுமாதிரி பேச்சுத் தமிழில் இருக்கணும்னு சொல்றீங்க..சரிங்களா?

அது சரி அது என்ன:”மொரிசியஸ் நாட்டில் பேசப்படும் தமிழ்போலவே இருக்கும். “”// அது எப்படி இருக்கும்? தெரியாதே!

கோவி.கண்ணன் Says:
May 14th, 2006 at 3:54 pm
//அது சரி அது என்ன:”மொரிசியஸ் நாட்டில் பேசப்படும் தமிழ்போலவே இருக்கும். “”// அது எப்படி இருக்கும்? தெரியாதே!//
சன் தொலைக்காட்சியில் நீங்கள் கேட்ட பாடல்கள் நிகழ்ச்சியில் அங்குள்ள பூர்விக தமிழர்கள் பேசுவார்கள், வட்டார வழக்குகள் முற்றிலும் தெரியாத நிலையிலோ, தமிழில் பேசி பழகாததால் அவர்கள் பேசும் ஓவ்வெரு வார்த்தைக்கும் இடையில் பெரிய இடைவெளியிருக்கும், அங்கு தமிழ் ஆசிரியராக வேலை பார்பவர்களுக்கும் பேச்சுத்தமிழ் வரவே வராது. மறுபயிற்சி அல்லது தனிப்பயிற்சி (டுட்டோரியல் காலேஜ்) முப்பது நாட்களில் ஆங்கிலம் பேசலாம் என்று கூறி தமிழ் மூலம் ஆங்கிலம் பயிற்றுவிப்பது போல் சொல்லிக் கொடுப்பார்களா என்னவோ. அந்த தமிழாசிரியர்கள் பேசுவதற்கு திணறுவது தெரிந்தது. ஆனால் தமிழ்திரைப்படங்களை நன்கு புரிந்துகொள்கிறார்கள். அவர்களுக்குள் தமிழில் பேசிக் கொள்வது இல்லை என்று சொல்கிறார்கள்.
அவர்களை குறைசொல்லவில்லை. பேச்சு வழக்கு இல்லாத மொழி வழக்கு இழந்துவிடும் என்பதற்காக குறிப்பிட்டேன்.

கோவி.கண்ணன் Says:
May 14th, 2006 at 4:00 pm
//நற்றமிழாய்’ எழுதாம, நான் இப்போ எழுதிறேனே அதுமாதிரி பேச்சுத் தமிழில் இருக்கணும்னு சொல்றீங்க..//
கட்டுரைகள் எழுதப்படும் பொழுது கருத்துக்களை உள் நிறுத்தி தூய தமிழில் எழுதலாம். ஆனால் நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது பேச்சுத் தமிழில் எழுதினால் அதனுடன் உணர்களும் சேர்ந்து கொள்ளும் என்பது என்கருத்து.

‘ஐயா தருமி அவர்களே, உங்கள் மறுமொழியில் உடன்பாடு இல்லை’ என்பதற்கும் ‘தருமியாரே கவுத்துப்புட்டிங்களெ’ என்று சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என்பது தெரிகிறதல்லவா

தருமி Says:
May 14th, 2006 at 4:18 pm
கோவி.கண்ணன்,
பேச்சுத் தமிழில் எழுதினால் அதனுடன் உணர்களும் சேர்ந்து கொள்ளும் என்பது என்கருத்து.//
ரொம்ப சரியாகவே சொல்லீட்டீங்க..மறுப்பேயில்லை.

“பேச்சு வழக்கு இல்லாத மொழி வழக்கு இழந்துவிடும் என்பதற்காக குறிப்பிட்டேன்.”
இதற்கு மறு கேள்வி: பேச்சு வழக்கே எழுத்து மொழியாகி விடும் ஆபத்து இருந்தால்…அப்போது அதன் நிலை என்ன?

கோவி.கண்ணன் Says:
May 14th, 2006 at 4:27 pm
//இதற்கு மறு கேள்வி: பேச்சு வழக்கே எழுத்து மொழியாகி விடும் ஆபத்து இருந்தால்…அப்போது அதன் நிலை என்ன? //
இப்படித்தான் தென் திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, துளுவம், மலையாளம் முதலியன தமிழிலுருந்து தோன்றியதாக மொழியாளர்கள் சொல்லுகிறார்கள். அந்த நிலை இப்போது இல்லை. எனென்றால் காட்சி ஊடகங்களும், செய்த்தித்தாள்களும் தமிழ்நாடு முழுவதற்கும் ஒரே செய்தித் தமிழில் தான் சென்று அடைகின்றது. பேச்சு வழக்கு எழுத்து மொழியாவது எப்போதென்றால் அதிகம் அன்னிய மொழிகள் கலந்து மொழியின் வேர்செற்களே மறைந்து போனால் நிச்சயம் அந்நிலை வரும். அதை மனதில் வைத்துத்தான் தனித்தமிழ் இயக்கங்களும், இந்தி எதிர்ப்பு போராட்டங்களும் தோன்றின. தமிழில் வேர்சொற்களை தற்பொழுதும் வட்டார வழக்குகள் இனம் காட்டுகிறது, இதைப்பற்றி வேர்சொல் அகராதிகள் நிறைய பேசுகின்றன.

கோவி.கண்ணன் Says:
May 14th, 2006 at 4:41 pm
பேச்சு வழக்கே எழுத்து மொழியாகி விடும் என்ற நிலை இப்போது இல்லை. எனென்றால் காட்சி ஊடகங்களும், செய்த்தித்தாள்களும் தமிழ்நாடு முழுவதற்கும் ஒரே செய்தித் தமிழில் தான் சென்று அடைகின்றது. செய்தி ஊடகங்களின் தாக்கங்களினால் வட்டாரவழக்குகள் அழியும் நிலையில் இருக்கிறது. எனவே அவைகளில் வட்டார வழக்குகள் இடம்பெறவேண்டும் என்றும் சொல்கிறேன்.
(முன்னுக்கு பின் முரணாக இருப்பது போல் தோன்றும் அதற்காக இந்த சிறுவிளக்கம்)

Prasanna Says:
May 14th, 2006 at 9:23 pm
///ப்ரஸ்,
“இந்த முறை சென்னை செல்லும் பொழுது பார்த்துக் கொள்கிறேன்.”// அய்யா, ஷியாமி விஷய்த்தில டெய்லர் சித்தப்பா..இங்க நானா?///
என்ன செய்யிறது நமக்கு அப்படி அமைஞ்சிடுத

தருமி Says:
May 14th, 2006 at 9:31 pm
கோவி.கண்ணன்,
“அதை மனதில் வைத்துத்தான் தனித்தமிழ் இயக்கங்களும், இந்தி எதிர்ப்பு போராட்டங்களும் தோன்றின.”//
- இந்தி எதிர்ப்பு போராட்டங்களை இதிலிருந்து கழட்டி விட்டு விடுங்கள்; அது ஒரு தனி ட்ராக். அதைப்பற்றிய என் பதிவுகளையும், முக்கியமாக அவைகளுக்கு வந்த பின்னூட்டங்களையும் வேண்டுமானால் வாசித்துப் பாருங்களேன்.

உங்கள் பின்னூட்டங்கள் நிச்சயமாக நல்ல பல பதில்களை முன்வைத்துள்ளன. நான் கேட்ட கேள்விகள் எப்படியோ; ஆனால் இப்போது அந்தக் கேள்விகளுக்கே ஒரு தனி மரியாதை வந்ததாக உணர்கிறேன். அதற்குக் காரணம் உங்கள் விளக்கங்களே. மிக்க நன்றி. இப்பதிவை எழுதும்போது ஏற்படாத மகிழ்ச்சியும், நிறைவும் இப்போது ஏற்பட்டுள்ளன.
a very fine analytical explanations. thanks again.
keep in touch.

கமல் Says:
May 14th, 2006 at 9:35 pm
தேவையான நல்ல பதிவு. நான் சொல்ல நினைத்த கருத்துக்களை கௌரிசங்கரும் முத்துக்குமரனும் சொல்லிவிட்டார்கள்.

நாம் தமிழைப் படித்த முறையும், ஆங்கிலத்தைப் படித்த முறையும் வேறுவேறானவை. தாய்மொழியில்தான் சிந்தனை ஓட்டம் இருக்கும். ஆங்கில உரையாடலின்போது, நம் மூளையில் சேமித்து வைத்திருக்கும் Wren&Martin மற்றும் Oxford/Webster சமாச்சாரங்களைப் பயன்படுத்தித் தமிழுக்கு மாற்றி, உரையாடுகிறோம். எனவே, is was ஆக மாறும்போது உடனடியாகத் தெரிந்துவிடுகிறது.

சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் படித்த அமெரிக்கர்கள் கூட இலக்கணப் பிழையுடன் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஜப்பானியர்களும் சில சமயங்களில் தவறாகப் பேசுவதுண்டு. ஆனால், தமிழ் பேசும்போது யோசித்து, சரியாகப் பேசுவார்கள். காரணம், மூளை மொழிமாற்றத்தில் ஈடுபடுவதால்தான்.

பேச்சுத் தமிழை எழுத்தில் கொண்டு வருவதால், தமிழுக்கு ஒன்றும் நட்டமில்லை. ஆனால், அதற்குமுன்பு, பேச்சுத்தமிழ் சரியானதுதானா? வேற்றுமொழிச் சொற்கள் கலந்து பேசாத பேச்சுத்தமிழில் எழுதுவதில் தவறேதுமில்லை.

நண்பர்களுக்கிடையில் பேசிக்கொண்டிருக்கும்போது கூட, தெரியாத ஆங்கில வார்த்தை வந்தால், கமுக்கமாக இருந்துவிட்டு, பிறகு யாருக்கும் தெரியாமல் அகராதியை எடுத்துப் பார்ப்போம். ஆனால், இதுவரை கேள்விப்படாத ஒரு தமிழ்வார்த்தை வந்துவிட்டால், சொன்னவன் கதி அதோகதிதான். ஓட்டித்தள்ளி விடுவோம். நான் பேசும்போது பெரும்பாலும் முழுவாக்கியமும் தமிழ் அல்லது முழுவாக்கியமும் ஆங்கிலம் என்றுதான் முயற்சி செய்வேன். அதையும் நண்பர்கள் கிண்டலடிப்பது உண்டு. இயல்பாகப் பேசுவதில்லை என்று குற்றம் சாட்டுவார்கள். ஒரு தமிழன் தமிழில் பேசுவதை இயல்பாக ஏற்றுக்கொள்வதில்லை. இப்படியே, நாளாக ஆக, வேற்றுமொழி வார்த்தைகள் கலப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தால், இரண்டு அல்லது மூன்று தலைமுறை கழித்து வரும் குழந்தைகளுக்கு எது தமிழ், எது வேற்றுமொழி என்றே தெரியாமல் போய்விடும். இன்று நாம் பயன்படுத்தும் சொற்களில் எது தமிழ், எது வடமொழி எனத் தெரியாமல் இருப்பது போல. எனவே, பிறமொழிச் சொற்கள் கலக்காமல் பேசுவது என்பது தமிழ்த்தாய்க்கு நாம் செய்யும் தொண்டு. தமிழன் என்ற முறையில் நம் கடமையும் கூட.

இலக்கிய நடைக்கும் பேச்சு நடைக்கும் வேறுபாடு அதிகரித்தால் என்ன ஆகுமோ என்ற கவலை தேவையற்றது. வேறுபாடு என்பது இப்போது மட்டுமல்ல. எப்பொழுதும் இருந்து வருவதுதான். தமிழ்மொழி தோன்றிய காலகட்டத்திலிருந்து இலக்கியநடை என்பது ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அதேபோல், பேச்சுநடையும் இலக்கியநடையும் ஒரேமாதிரி இருந்ததுமில்லை. அதிகம் விலகியும் போகவில்லை. இரண்டாம் நூற்றாண்டில் எழுத்து நடைக்கும் பேச்சு நடைக்கும் எத்தனை சதவீதம் வித்தியாசம் இருந்ததோ, அதே அளவுதான் இருபதாம் நூற்றாண்டிலும் இருந்தது. முப்பதாம் நூற்றாண்டிலும் இருக்கும். பத்தாம் நூற்றாண்டின் எழுத்துத்தமிழையும் இருபதாம் நூற்றாண்டின் பேச்சுத்தமிழையும் ஒப்பிடக்கூடாது. அப்படி ஒப்பிட்டால், அதிகம் விலகியிருப்பது போலத்தான் தோன்றும். சரியான தீர்வும் சொல்ல முடியாது.

நன்றி
கமல்

தருமி Says:
May 14th, 2006 at 9:46 pm
ப்ரஸ்,
“என்ன செய்யிறது நமக்கு அப்படி அமைஞ்சிடுத..”

ஒன்னச் சொல்லிக் குத்தமில்லை
என்னச் சொல்லிக் குத்தமில்லை
……….

சகலமான ஜனங்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்;
எனக்கு ப்ரஸ் என்ற ஓர் ஆளைப் பற்றி எதுவும் தெரியாது. அவரது செயல்களுக்கு அவரே பொறுப்பு.

இளவஞ்சி Says:
May 14th, 2006 at 10:34 pm
தருமிசார்!

//பின் எதற்கு/எப்படி/ஏன் ஆங்கிலத்திற்கு மட்டும் …? //

+2 படிக்கையில் வாத்தி 20 மார்க்கு English Essayக்கு ஒரு தப்புக்கு .5 மார்க்குவீதம் குறைக்கப்போவதாக சொல்லி திருத்தி நான் -14.5 வாங்கியது நினைவுக்கு வருவதால் இதைப்பற்றி நான் பேசுவது சரியாக இராது!

கோவி.கண்ணன் Says:
May 15th, 2006 at 5:59 am
//இப்பதிவை எழுதும்போது ஏற்படாத மகிழ்ச்சியும், நிறைவும் இப்போது ஏற்பட்டுள்ளன.//
எனக்கும் நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உங்கள் இந்தி எதிர்ப்பு பற்றிய பதிவுகளை ஒரு ‘சுபயோக சுபதினத்தில்’ கட்டாயமாக படிக்கிறேன். பிறிதொரு பதிவில் சந்திப்போம் நன்றி.

கோவி.கண்ணன் Says:
May 15th, 2006 at 2:29 pm
தருமி அவர்களே, நானும் இந்தி பேசி இருக்கிறேன். இந்த தொடுப்பிற்கு சென்று உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

http://govikannan.blogspot.com/2006/05/blog-post_114767424348424355.html

தருமி Says:
May 15th, 2006 at 3:20 pm
கமல்,
“இலக்கிய நடைக்கும் பேச்சு நடைக்கும் வேறுபாடு அதிகரித்தால் என்ன ஆகுமோ என்ற கவலை தேவையற்றது.”//
- உங்கள் பதிலும், கோவி. கண்ணனின் பதில்களும், கெளரி சங்கரின் பதிலும் இந்த அச்சம் தேவையற்றது என்பதை நன்கு நிறுவியுள்ளன.
நன்றி.

தருமி Says:
May 15th, 2006 at 3:25 pm
இளவஞ்சி,
என்ன ஒரு ‘இது’ இருந்தால் என் ‘ஜாதி’க்காரரை என் முன்னாலேயே, என் பதிவுக்கே வந்து இளப்பமாகப் பேசுவீர்கள். என்னதான் நான் உங்கள் ரசிகனாக இருந்தாலும் என் ஜாதிக்காரரை இப்படிப் பேசுவதை நான் ஒப்புக்கொள்ளவே முடியாது. நீங்கள் எப்படி “+2 படிக்கையில் வாத்தி 20 மார்க்கு …” என்று எழுதலாம். ம்ம்ம்….ம்ம்…ம்

கப்பி பய Says:
May 15th, 2006 at 3:34 pm
தமிழ் பதிவுகளில் அரசியல்,செய்திகள், நிகழ்வுகள், ‘சில கதைகள் மற்றும் கவிதைகள்’ தூய தமிழில் எழுதப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையாக எழுதப்படும் சொந்த அனுபவம் குறித்த பதிவுகள் பேச்சுத் தமிழில் உள்ளன.

இதை “மூளைல இருந்து எழுதினா சுத்தத் தமிழ்…மனசுல இருந்து எழுதினா பேச்சுத் தமிழ்”-னு விஜய் பட டயலாக் மாதிரி சொல்லலாம்…

பதிவுகளை விட பின்னூட்டங்கள் பேச்சுத் தமிழை அதிகமாக உபயோகிப்பது குறிப்பிடத்தக்கது…

வசந்தன் Says:
May 15th, 2006 at 3:57 pm
தருமி, வட்டார வழக்கைப் பாவிப்பதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தையே வட்டார வழக்காகப் பாவிப்பது உறுத்துகிறது.
(இன்னிக்கு நைட்டு, ஈவினிங், என்று சகட்டு மேனிக்கு சொற்கள் பாவிக்கப்படுகின்றன.) வலைப்பதிவு என்று கிட்டத்தட்ட அனைவரும் ஏற்றுவிட்ட சொல்லையே இன்னும் நாங்கள் முழுமையாகப் பாவிக்கத் தொடங்கவில்லை. இப்போதும் பிளாக் என்றுதான் நிறையப்பேர் எழுதுகின்றனர்.

நல்ல தமிழ்பற்றிக் கதைப்பவர்களைக் கேலிசெய்யாமலிருப்பதே இப்போதைக்குப் போதுமானது என்று நினைக்குமளவுக்கு நிலைமை இருந்தது/இருக்கிறது.

பதிவுகளில் பிழை திருத்தாமை பற்றி நீங்கள் சொல்வது அப்படியே எனக்கும் பொருந்தும். (ஆனால் நான் தமிழில் மட்டுமே எழுதுகிறேன்.) பொதுவாக நான் எழுதியதைத் திரும்பித் திருத்தும் பழக்கமில்லை. (வலைப்பதிவுகளில்). முன்பு சுரதாவின் எழுத்துரு மாற்றியைப் பாவித்து ஒருங்குறிக்கு மாற்றிப் பதிவிட்ட காலத்தில் திரும்பவும் பதிவைப் படிப்பேன், காரணம் எல்லாம் சரியாக மாற்றியுள்ளதா என்று சோதிக்க. அந்தநேரத்தில் தென்படும் பிழைகளைத் திருத்துவேன். ஆனால் இகலப்பை வந்தபின் இரண்டாம் தரம் வாசிப்பதும் தேவையற்றுப் போனதால் எப்படி எழுதினேனோ அப்படியே பதிவேறுகிறது. பின் கண்டுபிடிக்கும் பிழைகளைத் திருத்துவதேயில்லை. எல்லாம் சோம்பல்தான். ஒரு பின்னூட்டத்துக்குப் பதிலளிப்பதிலுள்ள உற்சாகத்த்தில பத்திலொரு பங்குகூட பதிவைத் திருத்துவதில் இல்லை. அடடே, ஒரே தடவையில் இவ்வளவு தூரம் பிழையில்லாமல் எழுதுகிறேன் என்று உள்ளுக்குள் சந்தோசப்பட்ட தருணங்களுமுண்டு.

மேலும், இங்கே பெரும்பாலும் எல்லோரும் மற்றோரின் எழுத்துக்களால் பாதிக்கப்படுகின்றனர். மாற்றமென்பது தனியொருவரில் தங்கியில்லை. இளவஞ்சி சொன்னதுபோல் சுயகட்டுப்பாடு என்பதுதான் இதுவரையாவது பலரின் சுயத்தைக் காப்பாற்றிக் கொண்டுள்ளது. நீங்கள் தொடர்ச்சியாக வலைப்பதிந்து வருபவர்களிற் பெரும்பாலானவர்களை எடுத்துப்பாருங்கள். (சில சுயம்புகள் இருக்கத் தான் செய்கிறார்கள்.) அவர்களின் தொடக்க கால எழுத்துக்கும் இப்போதுள்ள எழுத்துக்கும் உங்களால் வித்தியாசம் காண முடியும். ஏதோ மாதிரித் தொடங்கி, பின் பொது நீரோட்டத்திற் கலந்துவிடுவார்கள். இன்று பொது எழுத்துநடையொன்று தமிழ்வலைப்பதிவுகளில் வந்துவிட்டதை உணரலாம்.

sammatti Says:
May 15th, 2006 at 4:35 pm
இது உங்கள் பதிவா ?
http://dharumi.blogspot.com/
http://www.blogger.com/comment.g?blogID=12236223&postID=112827963934942168
அல்லது போலி பதிவா ?

தருமி Says:
May 15th, 2006 at 4:45 pm
சம்மட்டி,
மொதல் லின்க் நம்ம பழைய வீடுங்க…ஆத்திர அவசரத்துக்கு இருக்கட்டுமேன்னு அப்படியே விட்டு வச்சிருக்கேன்.
ரெண்டாவது…தெரியலைங்களே… மட்டுறுத்தலை இதுவரை கண்டுக்கவில்லை…

தருமி Says:
May 15th, 2006 at 5:02 pm
நன்றி சம்மட்டி..இனி கட்டுக்குள் வைத்துக் கொள்கிறேன்.

ஜோ Says:
May 15th, 2006 at 5:49 pm
ஆங்கிலத்தில் தவறு செய்தாலும் நான் வெட்கப்படுவதில்லை .அது என் தாய்மொழி அல்ல.ஆனால் தமிழில் தவறு செய்தால் வெட்கப்படுவேன்.

தருமி Says:
May 15th, 2006 at 10:34 pm
கப்பிப் பய,
பெயர்க்காரணம் என்னங்க?
உங்க பஞ்ச் டயலாக் ப்ரமாதம். ரொம்ப சரியாகவும் இருக்கு.
“பதிவுகளை விட பின்னூட்டங்கள் பேச்சுத் தமிழை அதிகமாக உபயோகிப்பது குறிப்பிடத்தக்கது:// - அதுக்குக் காரணம் என்னென்னா, இப்போ பாருங்க நான் உங்ககிட்ட மட்டும் பெர்சனலா பேசுற நினப்பு வந்திடுதில்லா..அதனாலதான். இல்லியா?

தருமி Says:
May 15th, 2006 at 10:35 pm
வசந்தன்,
“அடடே, ஒரே தடவையில் இவ்வளவு தூரம் பிழையில்லாமல் எழுதுகிறேன் என்று உள்ளுக்குள் சந்தோசப்பட்ட தருணங்களுமுண்டு.”// கொஞ்சம் பொறாமையாகவே இருக்கு. எப்படி இது உங்களுக்குச் சாத்தியமாயிற்று? இப்பின்னூட்டத்தில்கூட பிழை ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.

“இன்று பொது எழுத்துநடையொன்று தமிழ்வலைப்பதிவுகளில் வந்துவிட்டதை உணரலாம். “// இந்த நடையைத்தான் கொஞ்சம் ‘உரசிப்’ பார்த்தேன்.

தருமி Says:
May 15th, 2006 at 10:36 pm
ஜோ,
“ஆங்கிலத்தில் தவறு செய்தாலும் நான் வெட்கப்படுவதில்லை”// ஆச்சரியம்தான். என்னுடைய முதலாண்டு இளங்கலை காலத்தில் என் சீனியர் என்னிடம் ஆங்கிலத்தில் பேச, நானும் உளறிக் கொட்ட அதில் நான் செய்த ஒரு பிழை இன்றும் நினைவில் இருக்கிறது. வெட்கமாயிருந்தது. இதைத் தவிர்ப்பது உங்களுக்கு எப்படி முடிகிறது? நல்ல விஷயம்…

Saturday, May 06, 2006

158. சின்னத்திரை இயக்குனர்களுக்கு…

Image and video hosting by TinyPic



G.K.Chesterton எழுதிய ‘On reading habit” என்ற கட்டுரை என்று நினைக்கிறேன். வாசிக்கும் பழக்கம் எவ்வளவு நல்லது என்று கூறும்போது, தற்கொலை செய்துகொள்ளப் போகும் ஒருவன் திடீரென தான் வாசித்துவரும் தொடர்கதையில் கதாநாயகிக்கு அடுத்த வாரம் என்ன ஆகும் என்ற நினைப்பு வந்ததும், ‘சரி, அதைப் படித்துவிட்டு பிறகு தற்கொலை செய்து கொள்ளலாமென நினைத்துத் திரும்பிவிடுவான் என்று எழுதுவார். நம்ம ஊரு சின்னத்திரை மெகாசீரியல்கள் எடுக்கும் இயக்குனர்கள் இதே போல எத்தனை எத்தனை தற்கொலைகளைத் தடுத்துள்ளனரோ, யாருக்குத் தெரியும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அவர்களைப் பற்றியும் அவர்கள் எடுக்கும் சீரியல்கள் பற்றியும் மக்கள் நிறைய பேருக்கு கிண்டலும் கேலியும். நியாயப்படி அவர்களை நம் சமுதாயம் தனிப்பட்ட முறையில் கெளரவிக்க வேண்டும்.



இப்போ பாருங்க, நடக்கப்போற தேர்தலில் ஒரு கட்சி நாங்கள் வென்றால் கலர் டிவி தருவதாக வாக்களித்துள்ளார்கள். அது மட்டும் நடக்கட்டும்; எத்தனையோ பிரச்சனைகள் தீர்ந்து விடும்! இரவுகளில்தான் முக்கிய மெகா சீரியல்கள் நடக்கும். எல்லோரும் சீரியல்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டால் இரவு சாப்பாடுபற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? மெகா சீரியல்களில் இப்போதே சகுனம், சாத்திரம், ஜாதகம், தலையெழுத்து போன்ற நல்ல விஷயங்களை கதைகளில் சொல்லுகிறார்கள். இனி அவைகளை இன்னும் கொஞ்சம் ஏற்றிச் சொன்னால் மக்கள் ‘எல்லாம் நம் தலைவிதி’ என்ற தத்துவத்தில் தங்கள் சுக துக்கங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ன? இத்துணை நல்ல விஷயங்களை நமது மெகா சீரியல்கள் மூலமாக நடைப்படுத்த நம் சின்னத்திரை இயக்குனர்கள் நிச்சயமாக முனைவார்கள் என்பதில் எனக்கு ஒரு சின்ன எபிசோடு அளவுகூட சந்தேகமேயில்லை!



இவ்வளவு நல்லது செய்யும் நம் சீரியல் இயக்குனர்களுக்கு நான் ஒரு சில டிப்ஸ் கொடுக்க நினைக்கிறேன்; சில கேள்விகளும்தான். அதற்கு முந்தி எனக்கு இந்த சீரியல்களில் வரும் நடிக, நடிகையர்கள் பெயரெல்லாம் தெரியாது. ராதிகா, தேவயானி இவர்கள் பெயர்தான் தெரியும். மற்றவர்களைப் பற்றிப் பேச அவர்கள் நடிக்கும் ரோல்களை வைத்துதான் சொல்ல முடியும். அதென்னமோ தெரியவில்லை, நம் சீரியல்களில் வரும் ‘திருமுகங்கள்’ எப்படி தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்றே தெரியவில்லை. நமது இயக்குனர்களுக்குள்ள aesthetic sense அவ்வளவுதானா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. மெட்டிஒலியில் ஒரு பெரிய பெண் பட்டாளம்; அதில் சகோதரிகளாக வந்த நடிகைகள்(முதல் மகள் தவிர) + மாணிக்கத்தின் தங்கை+மாணிக்கத்தின் தம்பியைத் திருமணம் செய்த பெண்+ பின் காதலித்த பெண் - இவர்களையெல்லாம் எப்படி தேடிப்பிடித்தார்கள் என்று எனக்கு சந்தேகம். அதில் பெரிய ஆச்சரியம் அதில் பெரும்பாலோர் புதிய பல சீரியல்களில் வருவதுதான். கொஞ்சம் அழகானபெண்களுக்கு அவ்வளவு பஞ்சமா, என்ன? அல்லது அழகான பெண்ணாக இருந்தால் கொஞ்ச நாளில் தற்கொலை செய்து கொள்கிறார்களா? (சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட இரு நடிகைகள் நன்றாகவும் இருந்தார்கள்; நன்றாகவும் நடித்தார்கள்; பாவம்) சரி, நடிகைகள்தான் இப்படி என்றால் நடிகர்கள் அதைவிடவும் மோசமாக இருக்கிறார்கள் - at least எனக்கு அப்படி தோன்றுகிறது. கோலங்களில் வரும் கதாநாயகனும், வில்லனும் - less said better for them. இதிலும்கூட விஜய் ஆதிராஜ் நன்றாகவும் நடித்து, பார்க்கவும் ஸ்மார்ட்தான்; ஆனால் ஆளே காணோம்! லிஸ்ட் போட்டால் நீண்டுகொண்டே போகும். இது ஒரு காதல் கதையில் முதலில் வந்த கதாநாயகனைப் பார்த்தது அய்யோடா என்று இருந்தது; ஆள் மாற்றினார்கள்; இப்போது பழைய ஆள் பரவாயில்லை என்று தோன்றுகிறது. இயக்குனர்களே, கொஞ்சம் அழகுணர்ச்சியோடு உங்கள் நடிக, நடிகையர்களைத் தேர்ந்தெடுங்களேன். எங்களை ரொம்பவும் சோதிக்கணுமா, என்ன?



என்னடா இவ்வளவு சீரியல்களை இந்த மனுஷன் பாத்துக்கிட்டு இருக்கானேன்னு தோணுமே. அதற்கும் நம் இயக்குனர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். ஒரு சீரியலை இரண்டு தடவை பார்த்துவிட்டு, பிறகு எத்தனை நாள் கழித்துப் பார்த்தாலும் கதை புரிகிறது. (அப்படி ஒன்று இருந்தால்தானே!) வெறும் சம்பவங்களின் தோரணங்களாகவே இருப்பதால் கதை எப்போதும் புரியும். இந்த அளவு திறமையோடு நம் இயக்குனர்கள் ‘கதை’களை நகர்த்திக் கொண்டு போகிறார்கள். இப்படியே இருங்க.



இன்னொண்ணு இந்த சகுனம், சோதிடம் என்று அந்த நம்பிக்கைகளை வளர்க்கிறது மாதிரி கதையைக் கொண்டு போகாதீர்கள் என்று சொன்னால் கேட்கவா போகிறீர்கள்; அதனால் அதைப் பற்றிப் பேசவில்லை. ஆனால், இந்த காட்சி அமைப்புகளில் வழக்கமாக வரும் ஒரு விஷயம்: ஒரே காமிராவை வைத்து படம் எடுப்பதலா இல்லை குறைந்த செலவில் எடுக்க முற்படுவதாலா எதனால் என்று தெரியவில்லை - உங்கள் சீரியல்களில் வரும் கேரக்டர்களில் ஒரு சீனில் மூன்று பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பேசும் நபர் காமிராவைப் பார்த்துதான் பேசுகிறார்; அதாவது, ஆடியன்ஸைப் பார்த்து. பழைய நாடகங்களில் நடிக்கும்போது ஒரு பொது விதி சொல்வார்கள். ஸ்டேஜில் நடிகர்கள் தவறியும் ஆடியன்ஸுக்கு - - - க் காட்டக் கூடாது என்று.(முதுகைத்தான் சொன்னேன்!) அந்த ட்ராமா விதியை அப்படியே நமது சின்னத்திரை இயக்குனர்கள் கடைப்பிடிப்பது நல்ல வேடிக்கை. முக்கால்வாசி நேரங்களில் கதாபாத்திரங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசுவதைவிடவும், ஆடியன்ஸைப் பார்த்துக்கொண்டு, மற்ற கதாபாத்திரங்களுக்கு - - - க் காட்டிக்கொண்டு பேசுகிறார்கள். நல்ல வேடிக்கையாக இருக்கிறது. இன்னொன்று கதாபாத்திரங்கள் அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். நானும் வீட்டில் ஓரிரு முறை அதே மாதிரி முயற்சித்தேன்; மனைவி, மக்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது ஆடியன்ஸுக்குப் புரிய வைக்க இப்படி ‘நோட்ஸ்’ போடுகிறார்கள்; ஆனாலும் ஆடியன்ஸ் அவ்வளவு மோசமா?



எது எப்படியோ, நீங்கள் உங்கள் வழியில், உங்கள் ரசனையில் கொண்டுபோய்க்கொண்டிருங்கள்; எங்கள் தலைவிதி உங்களைத் திட்டிக் கொண்டேகூட நாங்கள் உங்கள் சீரியல்களைப் பார்த்துக்கொண்டே இருப்போம்.







Pathivu Toolbar ©2005thamizmanam.com


May 06 2006 03:57 pm | ஊடகங்கள் and சினிமா |
83 Responses
முத்து(தமிழினி) Says:
May 6th, 2006 at 4:42 pm
//தவறியும் ஆடியன்ஸுக்கு - - - க் காட்டக் கூடாது என்று.(முதுகைத்தான் சொன்னேன்!) //

கட்சியில் சேர்ந்தவுடன் வெற்றிக்கொண்டான் பாணியா… வீரப்பன் பழனியில் _ _ _ நோண்டியது கதை தெரியுமா?

//அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். நானும் வீட்டில் ஓரிரு முறை அதே மாதிரி முயற்சித்தேன்; மனைவி, மக்கள் என்னை ஒரு மாதிரியாகப்//

தண்ணி அடிச்சிட்டு வீட்டுக்கு போனா மேல பார்த்து கீழே பார்த்து திரும்பி நின்னு பேசுவாங்களே..

அய்யா..அழகு இல்லாத ஆட்களை டிவியில் போடுவது ஒரு உளவியல் அணுகுமுறை..மக்களுக்கு ஒரு நெருக்கம் வருணும் இல்லையா?

Sivabalan Says:
May 6th, 2006 at 8:27 pm
//தற்கொலைகளைத் தடுத்துள்ளனரோ// may be!

//aesthetic sense // Wow!! One simple word about Serial Directors.

//அப்படி ஒன்று இருந்தால்தானே// It is true!!

Good Blog! Keep up!!

தருமி Says:
May 6th, 2006 at 8:46 pm
கட்சியில் சேர்ந்தவுடன் வெற்றிக்கொண்டான் பாணியா… //
- அது ஒண்ணும் இல்லை தமிழினி! நம்ம டைரடக்கர் ஒருத்தர் அந்தக் காலத்தில நாங்க எல்லாம் ட்ராமா ஆர்ட்டிஸ்ட்டுகளா ‘கொடிகட்டிப் பறந்த போது’ அப்படி அவரை சொல்ல வைக்கிறதுக்காகவே நாங்க ரிகர்சல்களில் - - - க் காட்டுறது உண்டு. பழைய நினைப்புடா பேராண்டி அப்டிங்கிறது மாதிரி..ஹி..ஹி..தலைவர் தப்பா எடுத்துக்கிட்டு, ஒழுங்குப் பிரச்சனையெல்லாம் எடுத்திறப் படாது.

Prasanna Says:
May 6th, 2006 at 8:56 pm
///மெட்டிஒலியில் ஒரு பெரிய பெண் பட்டாளம்; அதில் சகோதரிகளாக வந்த நடிகைகள்(முதல் மகள் தவிர) + மாணிக்கத்தின் தங்கை+மாணிக்கத்தின் தம்பியைத் திருமணம் செய்த பெண்+ பின் காதலித்த பெண் - இவர்களையெல்லாம் எப்படி தேடிப்பிடித்தார்கள் என்று எனக்கு சந்தேகம்.////

அத்தன பேருக்கும் எப்படி சம்பளம் குடுத்து முடியுதுனு தான் தெரியல!!!

///இது ஒரு காதல் கதையில் முதலில் வந்த கதாநாயகனைப் பார்த்தது அய்யோடா என்று இருந்தது; ஆள் மாற்றினார்கள்; இப்போது பழைய ஆள் பரவாயில்லை என்று தோன்றுகிறது.///

முதல்ல அவர் விலகும் போது என்ன சொன்னார் தெரியுமா?? சினிமா தான் என் லட்ச்சியம். கவுண்டமணி சொன்ன மாதிரி “ஏன் நீ இது வரைக்கும் பண்ணது பத்தாதா??”
பிரசன்னா

கமல் Says:
May 6th, 2006 at 9:48 pm
செல்வத்தைக் காதலித்த பெண் (சக்தி?) அழகா இல்லையா? அட, என்ன சார் நீங்க!

நல்லவேளை! ‘செல்வி’ல வில்லியா (பெயர் மறந்து போச்சே நீலாம்பரி? நந்தினி? ) நடிச்சவங்களை வம்புக்கு இழுக்கலை. அவங்களுக்கு ஒரு பெரிய ரசிகர் மன்றமே இருக்கு தெரியுமோ? டின்னு கட்டிடுவாங்க!

//ஆனாலும் ஆடியன்ஸ் அவ்வளவு மோசமா?//

நீங்க வேற! ஒரே ஷாட், வசனமே இல்லாம, இப்படியெல்லாம் மெட்டி ஒலியில போட்டுப் படுத்தி எடுத்தாங்களே!

நன்றி
கமல்

பொன்ஸ் Says:
May 6th, 2006 at 9:55 pm
அழகா இல்லாதவங்க அழுதாத் தானே அழகா இருக்காது.. அப்போ தானே மக்கள் பரிதாபப்படுவாங்க?!! இல்லைன்னா, இப்படி இவளைப் போய் அழவிடறானேன்னு எரிச்சல் படுவாங்க.. அப்படியே ஒரு பாசமும் வந்துரும்..

பொன்ஸ் Says:
May 6th, 2006 at 9:56 pm
ஆமாம், அதுக்கு எதுக்கு அழகழகா குத்து விளக்கெல்லாம் எடுத்து வைத்திருக்கீங்க??:)

பட்டணத்து ராசா Says:
May 6th, 2006 at 10:08 pm
//அழகுணர்ச்சியோடு உங்கள் நடிக, நடிகையர்களைத் தேர்ந்தெடுங்களேன். எங்களை ரொம்பவும் சோதிக்கணுமா, என்ன?//

என்னே தருமிக்கு வந்த சோதனை? ஏ இதல்லாம் நோட்டுப் பண்ணுங்க தேர்தல அறிக்கையில ஒரு பாயிண்டா சேத்துக்கலாம்யிலல

//வெறும் சம்பவங்களின் தோரணங்களாகவே இருப்பதால் //
நிங்க வேற பெரும்பாலான சினிமாக்களே சீன் சீனா பில்ட்டு பண்ணுவாங்க துனை இயக்குனர்களிடம் பேசிப்பாருங்க இவுஙக ரூம் போட்டு சீன் சீனா திறைக்கதைய shape செய்யுற ஆழகே தனிதான்.

தருமி Says:
May 6th, 2006 at 10:42 pm
thank you, Sivabalan

தருமி Says:
May 6th, 2006 at 10:44 pm
எல்லாம் ப்ரஸ் உங்கள மாதிரி ஆட்களால்தான். பின்னே, நடிக்கக் கூப்பிட்டா போறதில்லை. அப்புறம் இந்த மாதிரி ஆட்கள்தான் வருவாங்க.எல்லாம் எங்க தலைவிதி

தருமி Says:
May 6th, 2006 at 10:47 pm
கமல்,
அந்தப் பெண் பேரு சகதியா.. i mean, சக்தியா? இப்போ அவங்க கோலங்களில் வரும் கோலம் பார்த்தீங்களா? பொல்லா அலம்புதாங்க!

எனக்கு என்ன சந்தேகம்னா, அவங்களுக்கெல்லாம் நாம ரொம்ப அழகுன்னு நினப்பு இருக்கும்ல.

செல்வி -வில்லி, சும்மா சொல்லக்கூடாது அழகா இருக்காங்க. யாருங்க நீங்கதான் ரசிகர் மன்றத் தலைவரா?

தருமி Says:
May 6th, 2006 at 10:51 pm
பொன்ஸ்,

அது என்ன உங்க குரு என்னடான்னா ‘உளவியல் அணுகுமுறை..’ அப்டின்னு மனோதத்துவம் எல்லாம் பேசறாரு. நீங்களும் அதே பாணியில் சொல்றீங்க. நல்ல குரு..நல்ல சிஷ்யை

இது மாதிரி குத்து விளக்காட்டம் பெண்களை தேர்வு செய்யுங்கப்பான்னு இயக்குனர்களுக்கு சிம்பாலிக்கா ஒரு ஃபோட்டோ. அம்புடுதன்..

தருமி Says:
May 6th, 2006 at 10:56 pm
பட்டணத்து ராசா ,
தேர்தல அறிக்கையில ஒரு பாயிண்டா சேத்துக்கலாம்யிலல ..//
- அடுத்த தேர்தலுக்கா?

நீங்க சொன்ன திரைக்கதையமைப்பு கொஞ்சம் பிரமிப்பூட்டும் காரியம்தான், அதிலேயும் குப்பைப் படங்களுக்கி இன்னும் அதிகமாய் மெனக்கெட வேண்டும்போல. லண்டன் அப்டின்னு பிரசாந்த நடிச்ச படம் ஒண்ணு. கட்டாயம் பாருங்க. எப்படி இந்தமாதிரி படங்களுக்குத் திரைக்கதை அமைச்சுபடம் எடுத்து, எடிட் செய்து…பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டாதான் இந்த மாதிரி ஒரு கண்றாவியான படம் தரமுடியும். அதே மாதிரி அவங்க கஷ்டப்பட்டு எடுத்ததால் நாமும் பார்க்க ரொம்பவே கஷ்டப்படவேண்டியதிருக்கு

கமல் Says:
May 6th, 2006 at 11:01 pm
சக்தி-ங்கறது அந்தக் கதாபாத்திரத்தோட பேர். நிஜப்பேர் என்னன்னு தெரியலை. கோலங்களான்னு ஞாபகம் இல்லை. ஒருநாள் பார்த்தேன். அந்த எபிசோட் முழுக்க அந்தப்பெண்தான். தாங்க முடியலை. மெட்டி ஒலியில மட்டுந்தான் நல்லா இருந்தது.

ரசிகர் மன்றத் தலைவரெல்லாம் இல்லீங்கோ! கணிசமான ஆட்கள் சேர்ந்தா, இணையத்துலயே ஆரம்பிச்சிடலாம். நீங்க தலைவரா இருக்க ரெடியா? ஏன்னா, உங்க வாயால (சரி! கையால) அழகுன்னு சொன்னது இவங்களை மட்டும்தான். ஆறு மாசத்துக்கு முன்பு கோவையில என் உறவினர் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அப்ப நெறையப்பேரு அவங்க கட்டியிருந்த டிசைன் புடவையையே கட்டியிருந்தாங்க. அப்ப அது ரொம்ப பாப்புலரா இருந்தது.

ஐயோ!!!யாராவது அவங்க பேரைச் சொல்லுங்களேன்! எவ்வளவு யோசிச்சும் ஞாபகம் வரமாட்டேங்குது.:???:

நன்றி
கமல்

தருமி Says:
May 6th, 2006 at 11:17 pm
கமல்,
வேண்டாம்; இந்த விளையாட்டெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க; உங்க மனசுல என்னதான் நினச்சிக்கிட்டு இருக்கீங்க. இதுதான் கடைசி தடவையா இருக்கட்டும். சரியா..? என்ன துணிச்சல் இருந்தா “மெட்டி ஒலியில மட்டுந்தான் நல்லா இருந்தது..” அப்டின்னு சொல்லுவீங்க?

ஏங்க கமல் நிஜமா சொல்லுங்க, நீங்க சும்மானாச்சுக்கும்தானே அந்த மாதிரி சொன்னீங்க? பாக்கிற மூஞ்சுங்களா அது - அன்றைக்கும் இன்றைக்கும்?

“நீங்க தலைவரா இருக்க ரெடியா?”// வேணாங்க, அனாவசியமா இன்னொரு தற்கொலைக்கு நான் காரணமாக முடியாது. இப்படி ஒரு ரசிகர் மன்ற தலைவரா நமக்குன்னு நினச்சு அந்த பொண்ணு…வேணாங்க அந்தப் பாவம் எனக்கு; உள்ளதே போதும்

சரி விடுங்க..பேர்ல என்னங்க இருக்கு? Rose is a rose is a rose

தருமி Says:
May 6th, 2006 at 11:19 pm
kamal,
“அப்ப நெறையப்பேரு அவங்க கட்டியிருந்த டிசைன் புடவையையே கட்டியிருந்தாங்க…”//
- அதில “அவங்களும்” சேத்தியா?

கமல் Says:
May 6th, 2006 at 11:24 pm

ஆங்!! ஞாபகம் வந்திடுச்சி!!!! ரஞ்சனி.

//உள்ளதே போதும் //

என்ன சார் இது! ஏமாத்திட்டீங்க! சரி விடுங்க! உங்க ஊராச்சேன்னு சொன்னேன். வேற யாராவது கேட்கறாங்களான்னு பார்ப்போம்!

நன்றி
கமல்

கமல் Says:
May 7th, 2006 at 9:01 am
//- அதில “அவங்களும்” சேத்தியா? //

பற்றிக் கொள்வதில் நீங்க ஒரு கற்பூரம்னு இன்னொரு முறை நிரூபிச்சிட்டீங்க! அதுதான் நான் சொல்ல வந்தது.

நன்றி
கமல்

தருமி Says:
May 7th, 2006 at 9:12 am
கமல், “உங்க ஊராச்சேன்னு சொன்னேன்”//
- என்னது அவங்க எங்க ஊரா? அதான, அழகா இருக்கிறப்பவே நினச்சேன்

ஓ, ரஞ்சனியா அவங்க பேரு. அப்டின்னா ‘அவுங்க’?

KOZHUNDU Says:
May 7th, 2006 at 9:17 am
சம்பளம் நிறையக் கொடுத்தாதானே அழகா இருக்கிறவங்க நடிக்க வருவாங்க! இவங்களுக்கெல்லாம்
மாசச் சம்பளமா இருக்கும்.
அன்புடன்
சாம்

பொன்ஸ் Says:
May 7th, 2006 at 9:19 am
ரஞ்சனி அழகா இருக்காங்கன்னு சொல்றீங்களா? நான் நீங்க மாயாவைத்தான் சொல்றீங்கன்னு பார்த்தேன்..

தருமி Says:
May 7th, 2006 at 9:29 am
சாரி கமல்,
பேரு கேட்டு ரொம்ப மூக்க நுழைக்கக் கூடாதுல்ல. அதோட பேருல்ல என்ன இருக்கு…Rose is a rose is a rose

வளர, மலர வாழ்த்துக்கள்

தருமி Says:
May 7th, 2006 at 9:32 am
கொழுந்து சாம்,
சம்பளம் பிரச்சனை இல்லைன்னு நினைக்கிறேன். அது தயாரிப்பாளர் தலைவலி; இல்லையா? நம்ம இயக்குனர்களின் டேஸ்ட் அப்படி இருக்குன்னு நினைக்கிறேன்.

தருமி Says:
May 7th, 2006 at 9:35 am
அய்யோ பொன்ஸ்,
நான் சொல்றது அந்த மாயாதான். ரஞ்சனி நல்லா நடிக்கிறாங்க. மாயா அழகா இருக்காங்க. இன்னொண்ணு வருமே..இப்பகூட சீரியல்ல conceive ஆகி இருக்கே..அதுவும் அதுக்கு கணவனா வருதே ஒண்ணு…விடுங்க, வேற ஆளுக பற்றிப் பேசுவோமா?

பொன்ஸ் Says:
May 7th, 2006 at 9:36 am
//இவங்களுக்கெல்லாம் மாசச் சம்பளமா இருக்கும்.//

இவங்களுக்கெல்லாம் தினச் சம்பளம்னு எங்கயோ படிச்சேன்…

(சும்மா தெரிஞ்சி வச்சிக்கத் தான்.. என்னிக்காவது உதவுமில்ல. )

பொன்ஸ் Says:
May 7th, 2006 at 9:46 am
தருமி, இந்த சீரியல் வில்லிகள் எல்லாம் அழகா இருப்பது இன்னோரு உளவியல் சங்கதி.. இவங்களை அழ விட மாட்டாங்க.. அதனால, இவங்க மேல எந்த ஒரு பாசமும், affection-உம் சீரியல் பாக்கற பொண்ணுங்களுக்கு வந்துரக் கூடாது… அழகா இருந்தா, இந்தப் பொண்ணு நம்ம மாதிரி இல்லைன்னு தோணி எந்த நெருக்கமும் வராது இல்ல…

தருமி Says:
May 7th, 2006 at 10:03 am
பொன்ஸ்,
நானும் அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதோடு மேக்கப், காஸ்ட்யூம் எல்லாம் நடிகர்களே பார்த்துக்கணும்னும் கேள்வி. எப்படி..கண்டிஷன் எல்லாம் உங்களுக்கு ஓகேதானே

தருமி Says:
May 7th, 2006 at 10:05 am
பொன்ஸ்,]
“….இன்னோரு உளவியல் சங்கதி.. “//
- எங்கேயோ போய்க்கிட்டு இருக்கீங்க…mass psychology எல்லாம் கொளுத்துரீங்க…உங்க குருகூட அங்க எங்கேயோ பின்னால நிக்கிறாரு..

KOZHUNDU Says:
May 7th, 2006 at 10:06 am
என்னங்க சன் டீ வீல அதிக பட்ச சம்பளமே எட்டு லட்சம் தானாமே! இங்க தமிழ்மணத்தில தான்
படிச்சேன். கோடி கோடியா லாபம் பார்க்கிறவங்க இப்படியா பண்ணுவாங்க! போட்டி வேணும்.
பேசாம சிங்கப்பூர், மலேஷியாகாரங்க இன்னொரு சானல் ஆரம்பிச்சாங்கன்னா உள்ளூர்காரங்க
பயந்துக்குவாங்க!
அன்புடன்
சாம்

தருமி Says:
May 7th, 2006 at 10:21 am
கொழுந்து சாம்,
பேசாம U.S. NRI எல்லோரும் சேர்ந்து ஒண்ணு ஆரம்பியுன்க்களேன். அப்படியே நமக்கு ஒரு சான்ஸ்…ஹி ஹி..

ramachandranusha Says:
May 7th, 2006 at 10:33 am
துளசி., பொன்ஸ்,
ஒரு விஷயம் கவனிச்சீங்களா? பெண்கள்தான் சீரியல் பார்ப்பாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே, ஆனால் வில்லி, அழகி, புடவை டிசைன்னு யாரூ யாரூ பேசுவதுன்னு பார்த்தீங்களா?

கமல் Says:
May 7th, 2006 at 12:19 pm
அடப்போங்க சார்! ‘பேருல என்ன இருக்குன்னு Rose டயலாக்கை நான் சொல்லலாம்னு இருந்தேன். நீங்க முந்திட்டீங்க!

//ரஞ்சனி நல்லா நடிக்கிறாங்க. மாயா அழகா இருக்காங்க.//

ஐயய்யய்யோ!! இப்படி பல்டி அடிக்கறீங்களே! இதுக்கெல்லாம் தாவல் தடைச்சட்டம் இல்லையா?

சீரியல் வில்லிங்க அழகா இருக்கறதாலதான் இந்தப் பினாத்தல்களைக் கொஞ்சமாவது பார்க்க முடியுது. (நான் என்னைச் சொல்லலைப்பா! ) ஆனா யுவராணி படத்துல அழகா இருந்தாங்க.

என்னங்க பொன்ஸ்!

//அழகா இருந்தா, இந்தப் பொண்ணு நம்ம மாதிரி இல்லைன்னு தோணி//

அப்படீன்னா, சீரியல் பார்க்கற பொண்ணுங்க எல்லாம் அழகா இல்லைன்னு சொல்றீங்களா? நான் இல்ல. எஸ்கே…ப்.

நன்றி
கமல்

பட்டணத்து ராசா Says:
May 7th, 2006 at 12:26 pm
இவக்களுக்கு சம்பளமெல்லம் குறைச்சல் இல்லைங்க தினப்படி சம்பளம் தான் அவங்க பொழியில சொல்லுறதுன்னா மீட்டர். இதுல டபுல் டிரிபுல் மீட்டர் ( அதாங்க ஒரே நாள்ள இரண்டு மூனு சிரியல்)நடிக்கிறவுங்களும் உண்டு. அதற்கு அப்புறம் இந்த நடிக தேர்வுகளில் adjustment அப்படிங்கற ஒரு விசயம் இருக்கு.

Geetha Sambasivam Says:
May 7th, 2006 at 2:45 pm
:மெட்டிஒலியில் மாணிக்கத்தின் தம்பியைக் காதலித்த அந்தப் பெண்ணின் பெயர் நீலிமாராணி.கோலங்களில் மட்டும் இல்லை, என் தோழி, என் மனைவி, என் காதலி என்ற சீரியலிலும் அந்தப் பெண் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த சீரியல் எல்லாம் பிடிக்காவிட்டால் “சிதம்பர ரகசியம்” மட்டும் பாருங்களேன். நாடி ஜோசியத்தைப் பற்றி வருவதால் உங்களுக்குப் பிடிக்கும்.

KOZHUNDU Says:
May 7th, 2006 at 5:14 pm
இங்க தமிழர்கள் எண்ணிக்கை அதிகம் இல்லையே!

//எல்லோரும் சேர்ந்து//:-))
//அப்படியே நமக்கு ஒரு சான்ஸ் //

அப்படியே!

அன்புடன்
சாம்

தருமி Says:
May 7th, 2006 at 7:31 pm
துளசி, பொன்ஸ், உஷா,
மெட்டிஒலிக்கு நிறைய விமர்சனங்கள் வந்திச்சே…அப்போவெல்லாம் நீங்களா எழுதினீங்க?
நாங்க இதையெல்லாம் பார்த்து நம்ம வீட்ல உள்ள மக்களுக்கு என்னென்ன தாக்கம் இருக்கும்; அதை எப்படி handle பண்ணுவது என்று தெரிந்துகொள்ளதான் பார்க்கிறோமாக்கும்!

தருமி Says:
May 7th, 2006 at 7:36 pm
கமல்,
“ரஞ்சனி நல்லா நடிக்கிறாங்க..”//
அட ரஞ்சனி கண்ணு எவ்வளவு அழகு… சரிதானே, கமல்?

தருமி Says:
May 7th, 2006 at 7:42 pm
கீதா,
அப்போ உங்களுக்கு நீ.ராணி பிடிக்கும்னு சொல்லுங்க.

சிதம்பர ரகசியம் பற்றிய பெனாத்தல் சுரேஷின் பதிவொன்றில் அதன் டைரக்டர் நாகா சில பின்னூட்டங்கள் இட்டிருந்தாரே படிக்கலையா? அதிலேயே ஏன் இந்த மாதிரி சீரியல்களாக எடுக்கிறீர்கள் என்று கேட்டு இருந்தேனே..அதோட அந்த சீரியல் உங்களுக்கு ரொம்ப பிடிக்கணுமே - உங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள் பற்றிய சீரியலாச்சே! நானெல்லாம் anti-நாடி சோதிடம் இல்லையா?

தருமி Says:
May 7th, 2006 at 7:45 pm
கொழுந்து,
“//அப்படியே நமக்கு ஒரு சான்ஸ் //

அப்படியே”//

நன்றி சாம், சான்ஸுக்கு

ramachandranusha Says:
May 7th, 2006 at 7:55 pm
கீதா, சிதம்பர ரகசியம் நல்லா இருக்கு சொன்னவங்களைத் தேடிக்கிட்டு இருக்கேன்

பினாத்தலார் சொன்னாரே என்று கொலை செஞ்சாரூ எடிட்டரை செஞ்சாங்களே, மூணு மாசத்துக்கு முன்னால, அப்பொழுது பார்க்க ஆரம்பித்து, இப்படியா இழுப்பாங்க என்று நாலைந்து வாரமாய் புதன் கிழமை நல்ல வேளையாய் பார்க்க முடியாமல் மறந்துப் போகிறது. இதெல்லாம் பார்க்க பொறுமை
வேணுங்க.

சிங்.செயகுமார் Says:
May 7th, 2006 at 8:09 pm
2002 -ல் சென்னைக்கு வெளியே ஒரு சீரியல் சூட்டிங்.”சிகரங்கள்” சன் டீவில மதியம் 12 மணிக்கு ஒளிபரப்புனாங்க. அந்த டீவி நடிகைகிட்ட பேசிட்டு இருந்தோம் ஒரு நாளைக்கு 1500 ரூபாவாம் சம்பளம். மறுநாளும் வேடிக்கை பார்க்க போயிருந்தேன்.கிடுகிடுன்னு உள்ளே போயி என்ன நடக்குடுன்னு வேடிக்கை பாக்க போனேன் .(கையில சுருட்டிய காகிதம் இருந்திச்சா.) நம்மல யாரோ கை காட்டி இவருதான் அஸிஸ்டண்ட் டைரக்டருன்னு கை காட்ட. அங்கே இருத்த அந்த நடிகை சாரி சார் நான் நேத்து உங்க கூட சரியா பேசல போன் நம்பர் அட்ரஸ் கூட மாத்தி குடுத்துட்டேன் .சாரி சார்ன்னு சொன்னாங்க. அதுக்கு மேல அங்க நிற்கல டைரக்டர் வந்தார்னா நம்மள டின் கட்டிடுவாங்களே!
இப்போ அந்த நடிகை “செல்வி” ல விதவையா நடிக்கிறாங்க பேருதான் மறந்து போச்சு…

காகா ப்ரியன் Says:
May 8th, 2006 at 1:28 am
வணக்கம் வணக்கம் வணக்கம் !

ரொம்ப நாளச்சுல்ல….

என்ன பண்றது இப்பத்தான் ஒரு வழியா எலக்ஷனுக்கு எல்லா ஏற்பாட்டையும் பண்ணி முடிச்சிட்டு வர்றேன்

நல்லா இருக்கீங்களா.. தனி மயிலு கூட காணோம் ?

ம்ம்ம… கவனிச்சுக்கறேன்…

******
இது ஒரு காதல் கதையில் முதலில் வந்த கதாநாயகனைப் பார்த்தது அய்யோடா என்று இருந்தது;
*****

மாட்டிகிட்டீங்க… அந்த ப்ரஜன் தான் தமிழக யுவதிகளின் லேட்டஸ்ட் கனவுக் கண்ணனாம் (எனக்கு எப்படித் தெரியும்னுலாம் கேட்க கூடாது

அவருக்கு ரசிகர்(கை) மன்றமெல்லாம் இருக்குங்க…

உங்க கிட்ட யாராவது 1கோடி கேட்க போறாங்க பாருங்க…



தருமி Says:
May 8th, 2006 at 7:57 am
காகா ப்ரியன்,
“தனி மயிலு கூட காணோம் ?”// ஏன் நம்ம போட்டுருக்கலாம்ல..

” அந்த ப்ரஜன் தான் தமிழக யுவதிகளின் லேட்டஸ்ட் கனவுக் கண்ணனாம்// நெஜமாலுமா..அப்ப என் டேஸ்ட்ல ஏதோ தகராறுதான் போலும். இல்ல?

தருமி Says:
May 8th, 2006 at 7:58 am
சிங்.செயகுமார்,
இப்படி வேற ஆக்ட் கொடுத்தீங்களா? அதான் உங்கள நாடு கடத்திட்டாங்க போலும்..

ஞானவெட்டியான் Says:
May 8th, 2006 at 8:02 am
அன்புடையீர்,
இத்தனை பின்னூட்டங்கள் வந்தும் ஒருவராவது, இந்த நாடகங்களில் நடக்கும் தமிழ்க்கொலையை, அதுதான் “பண்ணித்தமிழ்”, “தமிங்கிலம்”, “ச”கரம் பாம்பாகி “ஷ்” எனச் சீறுதல், ஆகியவற்றைக் கண்டிக்கவில்லையே?

வெளிகண்ட நாதர் Says:
May 8th, 2006 at 8:26 am
என்ன தருமி சார், சீரியல்கள் எல்லாம் பார்த்து அல்சுரீங்க போங்க! நான் இப்படிதான் கால்ல அடிபட்டு ஒரு ஆறு மாசம் வீடல படுத்திருந்தப்ப, இந்த் சீரியல்கள் தான் துணை. அப்ப தான் தெரிஞ்சுச்சு வீட்லேயே இருக்கிற பெண்களை நம்ம் சும்மா சத்தாய்க்கிறோம், நாமுலும் வீடல முடங்கின அப்படிதான்னு. அப்ப தமிழ்மணம் மாதிரி பொழுது போக சாதனம் இல்லை. இருந்திருந்தா இதை பத்தி தினம் ஒரு கதை எழுதி இருப்பேன். அம்புட்டு விஷயம் இருக்கு போங்க்;)

துளசி கோபால் Says:
May 8th, 2006 at 9:07 am
இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?
நமக்குச் சம்பந்தமில்லாத விஷயமா இருக்கேன்னு நிதானமா வந்து பார்த்தா…………..
நமக்கும் சேதி சொல்லி இருக்கீங்க!

பொன்ஸ்,
‘பளிச்’னு தேய்ச்சுவச்ச குத்து விளக்காட்டம் அழகு’ன்னு படிச்சிருக்கேன். அதனாலெ ‘அழகு’ன்ற
வார்த்தையை சிம்பாலிக்கா சொல்றாரு போல.
இல்லீங்களா தருமி?

உஷா,

அதே அதே. நல்லா இல்லேன்னு சொல்லிக்கிட்டே வீட்டம்மாவுக்குக் கம்பெனி கொடுக்கற சாக்குலே
எல்லாம் பார்க்கறாங்க இவுங்க.

சின்னத்திரையில் ‘நடிக்கும்’ ஒரு தோழி எனக்கு இருக்காங்க.( இதை இங்கே ஏன் சொல்றேன்? ம்ம்ம்ம்

தருமி Says:
May 8th, 2006 at 10:19 am
துளசி,

பொன்ஸ் கேட்டாங்க எதுக்கு இங்க குத்துவிளக்குபடம் எல்லாம் என்று..அதுக்கு நான் சொன்ன பதில் 12-ம் பின்னூட்டத்தில் இப்படி:”இது மாதிரி குத்து விளக்காட்டம் பெண்களை தேர்வு செய்யுங்கப்பான்னு இயக்குனர்களுக்கு சிம்பாலிக்கா ஒரு ஃபோட்டோ. அம்புடுதன்..”

நீங்க என்ன mind reader ஆயிட்டீங்களா, அப்படியே அச்சுக்குண்டா அதையே சொல்லியிருக்கீங்க வரவர எங்கேயோ போய்க்கிட்டு இருக்கீங்க

தருமி Says:
May 8th, 2006 at 10:25 am
ஞானவெட்டியான்,
என்ன சொல்றீங்க நீங்க… ‘கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து உடை மாத்தாதே / ‘கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து கல்லெறியாதே - (இரண்டில் எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.)அப்டின்னு சொல்லுவாங்களே. உங்கள மாதிரி நாலைந்து பேர்கள் தேறுமா - நல்ல தமிழில் எழுதுகின்ற ஆட்கள்? மற்றபடி நாங்களே தமிழ்க் கொலை (பண்ணும்) செய்யும்போது நாங்கள் மற்றவர்கள் தமிழைக் குறை சொல்ல முடியுமா, என்ன?

எங்கள் கண்ணில் உள்ள உத்திரத்தை எடுத்து விட்டல்லவா, அவர்கள் கண்ணில் உள்ள துரும்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.

sivaji rasigan Says:
May 8th, 2006 at 9:18 pm
From one rasigan to another

http://www.lazygeek.net/archives/2006/05/malarndhum_malaraadha.html

P.S Im not the blog owner

குமரன் (Kumaran) Says:
May 8th, 2006 at 10:33 pm
என்னதிது? நான் பார்க்கிற தொடரை வேற யாரும் பாக்குறதில்லை போலிருக்கே? மலர்கள் தொடரைத் தான் சொல்றேன். வீட்டுக்கு சன் டிவி வந்த புதுசுல தொடரெல்லாம் பாக்கக் கூடாதுன்னு இருந்தோம். ஒரு நாள் தப்பித்தவறி இந்தத் தொடரைப் பாத்துட்டோம். அந்த நேரம் பார்த்து யாரோ ஒரு அம்மா சுலோசனாவை அசிங்க அசிங்கமா திட்டி மண்ணெல்லாம் வாரி இறைச்சாங்க. அப்பப் புடிச்சது சனி எங்களுக்கு. அன்னையில இருந்து அதைப் பாத்துக்கிட்டிருக்கோம். தருமி ஐயா, நீங்க சொன்ன மாதிரி இந்தத் தொடருலயும் ஒரு வாரம் பாக்காம விட்டு அப்புறம் பாத்தாலும் தெள்ளத் தெளிவா புரியுது. அப்புறம் இந்தத் தொடரும் சோதிடத்தை வெகு அழுத்தமா சொல்லுதப்பூ… ஐயோ ஐயோன்னு அடிச்சுக்கலாம்…. அந்த அளவுக்கு…

Prasanna Says:
May 8th, 2006 at 11:31 pm
///எல்லாம் ப்ரஸ் உங்கள மாதிரி ஆட்களால்தான். பின்னே, நடிக்கக் கூப்பிட்டா போறதில்லை. அப்புறம் இந்த மாதிரி ஆட்கள்தான் வருவாங்க.எல்லாம் எங்க தலைவிதி///
ஹய்யோ ஹய்யோ உங்கள எல்லாம் பார்க்க எனக்கு பாவமா இருக்கு. எனக்கும் இந்த மாதிரி யாராவது திட்டுவாங்களோன்னு பயம் தான் காரணம், வேற ஒண்ணும் இல்லை.
இந்த மாதிரி நடிக்க வர்றவங்களுக்கு, ஒரு நாளைக்கு இவ்வளவு, இத்தன நாள் இருக்கணும்னு சொல்லிடுவாங்க. முடியும்போது மொத்தமா குடுத்திடுவாங்க. மின் பிம்பங்கள் போன்ற சில நிறுவனங்கள் சம்பளம் சரியாகத் தருவதில்லை எனக் கேள்வி. அண்ணாமலை சீரியலில் கோவணம் கட்டிக் கொண்டு ஆடின்னாரே கார்த்திகேயன், அவருக்கு ராதிகா குடுத்த சம்பளம் ஒரு செல் ஃபோன் மட்டுமே!!!

காகா ப்ரியன் Says:
May 9th, 2006 at 2:41 am
*****
நெஜமாலுமா..அப்ப என் டேஸ்ட்ல ஏதோ தகராறுதான் போலும். இல்ல?
*****

அப்டில்லாம் சொல்லிட முடியாது… நான் நெனைச்சேன்… நீங்க சொல்லிட்டீங்க… நீங்க சன் மியூசிக்-லாம் பாக்கமாட்டிங்களா? அதுல வருவார் பாத்து என்ஜாய் பண்ணுங்க

ஷ்ரேயா Says:
May 9th, 2006 at 4:39 am
//எனக்கு ஒரு சின்ன எபிசோடு அளவுகூட சந்தேகமேயில்லை!//

இப்பிடியும் சொல்லலாம்:
கதையளவு கூட சந்தேகமில்லை

ramachandranusha Says:
May 9th, 2006 at 11:59 am
குமரன், என்ன கேள்விக் கேட்டுபுட்டீங்க நுனிப்புல் பக்கம் வருவதில்லையா? பார்க்க-http://nunippul.blogspot.com/2006/05/blog-post_06.html

தருமி ஐயா, விளம்பரம் போட்டதற்கு மன்னிச்சிடுங்க

தருமி Says:
May 9th, 2006 at 12:38 pm
நன்றி சிவாஜி ரசிகன்…

தருமி Says:
May 9th, 2006 at 12:40 pm
உஷா,
குமரனுக்கு முந்தியே நாம் அங்க போய்ட்டு வந்திட்டேன். அந்தக் கதையை விட நீங்க எழுதின நாடகம் ரொம்ப நல்லா இருக்கு..டோண்டு சொன்ன முடிவு கூட நல்லா இருந்திருக்கும்.

தருமி Says:
May 9th, 2006 at 12:42 pm
குமரன்,
“…..சோதிடத்தை வெகு அழுத்தமா சொல்லுதப்பூ… ஐயோ ஐயோன்னு அடிச்சுக்கலாம்…. அந்த அளவுக்கு… ..”//
நம்புற ஆளுகளுக்கே அப்படி இருந்தா என்ன மாதிரி கேசுகளுக்கு எப்படி இருக்கும்? நீங்களே புரிஞ்சுக்குங்க..

தருமி Says:
May 9th, 2006 at 12:44 pm
ப்ரஸ்,
எல்லா விபரங்களும் விரல் நுனியிலதானா? ரொம்ப தொடர்பு விச்சிருக்கீங்க.keept it up…நாளை நடப்பதை யாரறிவார்? அப்போ சொல்லிக்குவோம்ல ‘ஓ! ப்ரஸ்ஸா, எனக்கு ரொம்ப குளோஸுன்னு’!

தருமி Says:
May 9th, 2006 at 12:46 pm
ஆனா காகா பிரியன். நெஜமாலுமே எனக்கு அந்த சந்தேகம் உண்டு..நம்ம டேஸ்ட்லதான் ஏதோ தகராறுன்னு…ஏன்னா, நூத்துக்கு 90 பேரு “மூஞ்சே’ பிடிக்கலை…that includes men also.

தருமி Says:
May 9th, 2006 at 12:47 pm
சொல்நயம் கண்ட ஷ்ரேயாவுக்கு நன்றி.
நீங்க சொன்னதும் ரொம்ப பொருத்தம்தான்.

Geetha Sambasivam Says:
May 9th, 2006 at 12:57 pm
சீரியல் எது பார்த்தாலும் இந்த நிலைமை தான். ஜோசியத்தை நம்பினா ஜோசியத்தைப் பத்திப் பொய் சொல்ற சீரியலைப் பார்க்கச் சொல்றீங்களே. திருவிளையாடலுக்குப் பிறகு வந்த எந்த சாமி படமும் படமே இல்லை என்ற கொள்கை உள்ளவங்க நான். அதே போல சீரியல் பார்த்து சாமி நம்பிக்கை வரணுமுன்னா அது வேண்டவே வேண்டாம்.அந்த நேராத்தில் 4 புத்தகம் படிக்கலாம் ஏற்கெனவே படித்ததாய் இருந்தாலும்.

தருமி Says:
May 9th, 2006 at 11:14 pm
Geetha Sambasivam,
“திருவிளையாடலுக்குப் பிறகு வந்த எந்த சாமி படமும் படமே இல்லை என்ற கொள்கை உள்ளவங்க நான்”//

அதிலேயும் அந்தப் படத்தில் ஒரு காரக்டர் அப்படியே மனசுல பதிஞ்சுபோயிருக்குமே; இல்ல?

குமரன் (Kumaran) Says:
May 10th, 2006 at 12:05 am
உஷா…. நுனிப்புல்ல நீங்க அந்தத் தொடரைப் பத்தி எழுதுனப்பவே படிச்சாச்சு. இந்தப் பதிவுல யாருமே அதைப் பத்தி சொல்லலியேன்னு கேட்டேன்.

ஷ்ரேயா Says:
May 10th, 2006 at 4:03 am
//அதிலேயும் அந்தப் படத்தில் ஒரு காரக்டர் அப்படியே மனசுல பதிஞ்சுபோயிருக்குமே; இல்ல? //

அடடா.. அவையடக்கம் என்பது இதானா (சுயதம்பட்டத்தையும் அவையடக்கத்தையும் குழப்பிக்கறேன் போலிருக்கே!! ம்ம்.. )

lakshmi Says:
May 10th, 2006 at 7:52 am
good analysis dharumi. Lots of appreciation. But, I don’t agree with the point “charecters must be beautiful”. It is really impossible to do..

I think, you can start taking a mega serial…

regards,
lakshmi

தருமி Says:
May 10th, 2006 at 11:44 am
ஏதோ ஒரு பாகவதர் பெயரில் பாலையா வருவாரே, அவரை நான் சொன்னேன். ஷ்ரேயா, நீங்களும் அவரைத்தானே சொல்றீங்க?

தருமி Says:
May 10th, 2006 at 11:46 am
இந்த லஷ்மி எந்த லஷ்மி? எனக்குத் தெரிஞ்ச ‘அவனா?’

லட்சணமா இருக்கணும்னு சொல்லலை, லஷ்மி…அவலட்சணமா இல்லாம இருக்கக்கூடாதா?

Geetha Sambasivam Says:
May 10th, 2006 at 2:53 pm
உங்க பதிவுக்கு வந்ததே பேரைப் பார்த்துட்டுத்தான். எங்க ஊர் வேறே. நக்கீரன்னு பேர் வச்சுக்கத்தான் ஆசை. யாரோ ஒருத்தர் நற்கீரன்னு பேர் வச்சுக்கிட்டு முந்திக்கிட்டாரு. போட்டி வேண்டாம்னு சொந்தப்பெயரிலேயே தொடருகிறேன்.

தருமி Says:
May 10th, 2006 at 6:21 pm
Geetha Sambasivam ,
நற்கீரன்னு பேர் வச்சுக்கிட்டு முந்திக்கிட்டாரு//
just a suggestion: நக்கீரன்/ நக்கீரி/ நற்கீரி / நற்கீரள் / நக்கீரன் II/ நற்கீறன் II………

ஷ்ரேயா Says:
May 11th, 2006 at 4:33 am
ஆகா!!! “கவுத்துட்டாங்க” என்பதற்கு பொருள் இப்பத்தானே புரியுது..
உங்க leagueஏ தனி!! ( :iceவைத்தல்/butter பூசல்: னு ஒரு இமோட்டிக்கொன் இல்லை இங்கே போலிருக்கே)

தருமி Says:
May 11th, 2006 at 12:25 pm
ஷ்ரேயா,




Geetha Sambasivam Says:
May 11th, 2006 at 2:03 pm
உங்க ஐடியா எதுவும் நல்லா இல்லை.

தருமி Says:
May 11th, 2006 at 2:53 pm
Geetha Sambasivam

:

பொன்ஸ் Says:
May 11th, 2006 at 3:14 pm
முடியலை.. என்னால முடியலை.. இங்க சின்னத் திரைன்னு சொல்லிட்டு இப்படி பெயர் ஆராய்ச்சி எல்லாம் செஞ்சிகிட்டு இருக்கீங்க?!!!

சொல்ல மறந்துட்டேனே.. ஒரு விஷயம் விட்டுட்டீங்க தருமி..
//ஒரு சீரியலை இரண்டு தடவை பார்த்துவிட்டு, பிறகு எத்தனை நாள் கழித்துப் பார்த்தாலும் கதை புரிகிறது//
இந்த ரெண்டு மூணு சீரியல்ல ஒரே நடிக நடிகைங்க வருவாங்களே.. அது ஒரு பெரிய தலைவலி.. எங்க பாட்டி பொதுவா என் பெயரையும் என் தங்கை பெயரையும் மாத்தி மாத்தி சொல்லுவாங்க..

என்னிக்காவது ஒரு நாள் நான் தப்பித் தவறி சீரியல் பாக்கும்போது பாட்டி கிட்ட “இந்தப் பொண்ணுக்குத் தான் கல்யாணம் ஆய்டுச்சே.. திரும்பி என்ன நிச்சியதார்த்தம் பண்ணுறாங்க” என்றால், அதுக்கு பாட்டி, “அது ஆடுகிறான் கண்ணன்ல.. இது சொர்க்கம்.. இப்படி குழப்பிக்காத”ம்பாங்க.. எப்படித் தான் இதெல்லாம் சரியா நினைவு வச்சிக்கறாங்களோ!!!

தருமி Says:
May 11th, 2006 at 11:00 pm
பொன்ஸ்,
ஒரே ஒரு தப்பு பண்றீங்க..“இந்தப் பொண்ணுக்குத் தான் கல்யாணம் ஆய்டுச்சே.. திரும்பி என்ன நிச்சியதார்த்தம் பண்ணுறாங்க” என்றால்,…”// - இப்பட்டிப்பட்ட கேள்வியெல்லாம் கேட்காமல் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ன்னு பாத்தீங்கன்னா புரிஞ்சிடும்.
so moral of the…?: கேள்விகள் ஏதுமின்றி சீரியல்கள் பார்க்கவும்.

Prasanna Says:
May 11th, 2006 at 11:24 pm
///ப்ரஸ்,
எல்லா விபரங்களும் விரல் நுனியிலதானா? ரொம்ப தொடர்பு விச்சிருக்கீங்க.keept it up…நாளை நடப்பதை யாரறிவார்? அப்போ சொல்லிக்குவோம்ல ‘ஓ! ப்ரஸ்ஸா, எனக்கு ரொம்ப குளோஸுன்னு’!///
பெரியவங்க ஆசிர்வாதத்தில ஏதாவது நல்லது நடந்தா சரிதான், அப்புறம் இந்த காதல் படத்துல சொல்ற மாதிரி நானும் ஒரு வில்லன்ல ஸ்டார்ட் பண்ணி அப்டியே ஹீரோவாகி அப்புறம் கோட்டை டெல்லி நு செட்டில் ஆகிடலாம்.
என்ன நடுவுல நீங்க ஒரு பதிவு போடுவீங்க
ரஜினி–>விஜய்–>பிரசன்னா????
இது எப்டி இருக்கு? (சே! சும்ம ஒரு பேச்சுக்கு சொன்ன இந்த வியாதி என்னையும் பிடிச்சுகிசே?)

ஷ்ரேயா Says:
May 12th, 2006 at 4:50 am
//கேள்விகள் ஏதுமின்றி சீரியல்கள் பார்க்கவும்//
பார்க்கணுமா என்பது தான் கேள்வியே.. பார்க்கலைன்னா எவ்வ்வ்வ்ளோ நேரம் மிச்சம்! (மண்டையிலே முடியும் மிஞ்சும்(பொன்ஸ் பிச்சுகிட்டா மாதிரி பிச்சுக்கத் தேவையே வராது ))
உருப்படியா ஏதாச்சும் செய்யலாம் இதுகளைப் பாக்கற நேரத்துக்கு.

பொன்ஸ் Says:
May 12th, 2006 at 10:33 am
//so moral of the…?: கேள்விகள் ஏதுமின்றி சீரியல்கள் பார்க்கவும் //
இப்போ தான் புரியுது.. நீங்க எப்படி இதெல்லாம் பொறுமையா பாக்கறீங்கன்னு..

இப்போ ஒரு மாசமா எங்க அம்மாவுக்கு ஒரே வருத்தம்.. அவங்களோட உட்கார்ந்து சீரியல் பாக்காம நான் தமிழ்மணத்துல சுத்தி கிட்டு இருக்கேன்னு.. நான் அவங்களையும் தமிழ்மணத்துக்கு இழுத்துகிட்டு இருக்கேன்.. அவங்க என்னைக் கோலங்கள் பாக்க வைக்கறதுன்னு கங்கணம் கட்டிகிட்டு இருக்காங்க.. யாருக்கு வெற்றின்னு பாக்க எங்க அப்பா பயங்கர ஆர்வமா இருக்காரு

தருமி Says:
May 12th, 2006 at 11:34 am
pப்ரஸ்,
“என்ன நடுவுல நீங்க ஒரு பதிவு போடுவீங்க
ரஜினி–>விஜய்–>பிரசன்னா????”
சரி வேண்டான்னா விடுங்க; இப்படி போட்டுருவோம்: “சூர்யா< --ப்ரஸ்-->விஜய் –??”

“இந்த வியாதி என்னையும் பிடிச்சுகிசே?”// எத வியாதிங்கிறீங்க?

தருமி Says:
May 12th, 2006 at 12:32 pm
ஷ்ரேயா, பொன்ஸ்,
நீங்க பாட்டுக்கு ஈசியா சொல்லிட்டு போயிட்டீங்க. இந்த சீரியல் பாக்கிறது இருக்கே அது சிகரெட் குடிக்கிறது மாதிரி அல்லது கல்யாணம் கட்டிக்கிறது மாதிரி.

சிகரெட் குடிக்கிறவங்க்ளுக்குத் தெரியாதா என்னன்னு. குடிச்சா நல்லது எதுவும் இல்லை கெட்டதுதான்னு தெரிஞ்சபிறகும் உட முடியுதா? இழுக்க இழுக்க இன்பம் அப்டின்னுட்டு “இறுதி’” வரை இழுத்துட்டு ( நான் அதுக்குக் கொஞ்சம் முந்திவரை) அடிக்ட் ஆகி உக்காந்திரவேண்டியதுதான்.

அடுத்தது என்னன்னா (நீங்க ரெண்டுபேருமே ‘சின்னப் பிள்ளைங்க’ அப்டிங்கிறது என் நினைப்பு) இந்தக் கல்யாணத்தைப் பற்றி ஆங்கிலத்தில் எல்லாரும் அடிக்கடி சொல்லுவாங்களே, கேட்டு இருக்கீங்களா?: ‘It is an unavoidable evil’. அது மாதிரி ஆயிடுது.

வீடென்ன அரண்மனையா/ எங்க உக்காந்தாலும் டி.வி. சத்தம் காதில சாயுங்காலம் உழும். அதில் வேற வேலை என்ன பாக்கிறாது. சரின்னுட்டு, திட்டிக்கிட்டே எதிர்த்தாற்போல உக்காந்து.
திட்டிக்கிட்டே பாத்துக்கிட்டு இருந்துட்டு, திட்டித் திட்டி ஒரு பதிவை போட்டா, அதுக்கும் திட்டித் திட்டி பின்னூட்டம் வந்தா மனுஷன் என்னதாங்க பண்றது??

தருமி Says:
May 12th, 2006 at 12:35 pm
ponS,
“யாருக்கு வெற்றின்னு பாக்க எங்க அப்பா பயங்கர ஆர்வமா இருக்காரு “// அந்த சாக்கை வச்சுக்கிட்டே அப்பாவும் கோலங்கள் பாத்திர்ராங்களா?

பொன்ஸ் Says:
May 12th, 2006 at 1:10 pm
//அந்த சாக்கை வச்சுக்கிட்டே அப்பாவும் கோலங்கள் பாத்திர்ராங்களா?//

பின்ன, அவரும் இந்த unavoidable evil-ஐ முப்பது வருஷம் முன்னாடியே பண்ணினவராச்சே, என்னை மாதிரி புத்திசாலியா இல்லாம