*
சும்மா சொல்லக்கூடாது .. விஜய் தொலைக்காட்சி நல்ல சில விஷயங்களைத் தொடர்ந்து தருகிறார்கள்.
சூப்பர் ஜூனியர் நிகழ்ச்சி .. ரொம்ப ஜவ்வாக இழுக்கிறார்கள். ஆனாலும் கடைசி ஏழு பேருக்கு ஏழு பெரிய இசை விற்பன்னர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி. அதுவும் கெளதம் பாடியதும் அனைவரும் இசைக்கு அளித்த மரியாதையையும், அந்தப் பாடலைப் பாடிய பையனைப் பாராட்டியதும் (இது ஒரு ரியாலிட்டி ஷோ என்ற உண்மை ஒரு பக்கம் இருந்தாலும்) மிக அழகாக இருந்தது. நல்ல பில்ட் அப் ...
சரவணன் மீனாட்சி .. சும்மா சொல்லக்கூடாது. அழகான கதாநாயகி; விளையாட்டுக்கார கதாநாயகன்; அசத்தலான அப்பா .. நிறைய இளைஞர்களுக்குப் பிடித்த காதல் ...இதையெல்லாம் விட எனக்குப் பிடித்தவைகள் - ஆரம்பத்திலேயே ஜாதகத்திற்கு கொடுத்த அடி ரொம்ப பிடித்தது. எனக்குத் தெரிந்து ஜாதகத்தைத் தூக்கி எறிந்த முதல் நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. அதனாலேயே ரொம்ப பிடிச்சிப் போச்சு. அடுத்து வரதட்சணை - அந்த விஷயத்தைக் கையாண்ட வகை பிடிக்காவிட்டாலும் அதையும் அழகர் - இயக்குனர் - ஒரு பிடி பிடித்திருந்தார். ஏமாற்றிய கணவனைத் தூக்கி எறிவது, விவாகரத்து பெற்ற பெண்ணின் அடுத்த திருமணத்தை எளிதான ஒரு நிகழ்வாகக் காட்டியிருப்பது ... எல்லாம் கொஞ்சம் புதிதுதான். ஒரு சில சீன்களில் மட்டும் வந்த நண்பன் சுப்பையா, இன்னொரு மீசைக்காரர் ... அசத்தல் நடிப்பு; பாராட்டு. TRP rating என்பதற்காக இரு பொது நிகழ்ச்சிகளைக் கொண்டாடி சீரியலைப் புது மெருகேற்றியது நல்ல உத்தி.
இதையெல்லாம் தாண்டி இப்போது வரும் 7-ம் வகுப்பு C பிரிவு ரொம்ப நல்லா இருக்கு. ஆசிரியர்களும், இளம் மாணவர்களும் கட்டாயம் பார்க்கணும். Sydney Poitier நடித்த TO SIR WITH LOVE படத்தை மிகப் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறேன். சரி .. அதைப் பார்த்து ஏதோ உல்டா பண்ணப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நிச்சயமாக அந்தப் படத்தை விட இந்த சீரியல் நன்றாக இருக்கிறது.
அங்கே தன்னோடு குத்துச்சண்டை போட வரும் மாணவனை ஆசிரியர் குத்துச்சண்டை பழக்குபவனாக ஆக்குவார். ஆனால் இங்கே சண்டைக்காரப் பையனை ஆசிரியர் அஹிம்சாவாதியாக மாற்றுகிறார். ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களின் நலன் பேரில் எடுக்கும் முயற்சிகள், அவர் மாணவர்களை நடத்தும் முறை ... நன்குள்ளன. நிகழ்வுகளை மிக இயல்பாக வருவதாக அமைத்துள்ள இயக்குனர் ராம் விநாயக்கிற்கு வாழ்த்து. நடிகர்கள் தேர்வும் மிகச் சரியாக உள்ளது. ’இளைய பாரதிராஜா’ மாதிரி வரும் கதாநாயகன் சாதாரணத் தோற்றத்தோடு வந்து, அழகாக, இயல்பாக நடிக்கிறார். சரியான வயதுக்குரிய பிள்ளைகளை நடிக்க வைத்திருப்பது பாராட்டுதற்குரியது. குருவியும், தலைமை ஆசிரியரும் நல்லா செஞ்சிருக்காங்க. கொஞ்சம் ட்ராமாட்டிக்காக சில காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் எனக்கு மிகவும் பிடித்த சீரியல் இப்போது இதுதான்.
வித்தியாசமான, பாராட்டுகுரிய சீரியல். இந்த சீரியலை எடுத்து அளிக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு பாராட்டு.