இந்த ஆண்டில் வெளிவந்த எனது நான்காவது நூல் இது. (பாலஸ்தீன் & இஸ்ரேல் போராட்டம், சூத்திரர்; 80 நாட்களில் உலகம் சுற்றிய பயணம்; அடுத்த நூலாக இது.) அதுவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட என் முதல் நூலாக வெளிவந்துள்ளது. மகிழ்ச்சி.
இதனை உண்மையாக்கிய எதிர் வெளியீடு அனுஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
மதங்கள் பற்றி முதலில் எழுதிய ‘மதங்களும் சில விவாதங்களும்’ என்ற நூலைப் பொறுத்தவரையில் பெரிய ‘விசுவாசிகள்’ யாரும் வாசிக்க மிகவும் தயங்கினார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் ‘கிறித்துவத்தைப் பற்றி நானறிந்த அளவே போதும். நீ தரும் அதிகத் தகவல்களோ, கேள்விகளோ, விளக்கங்களோ எனக்குத் தேவையில்லை. நானறிந்தவைகளை வைத்து நான் முழு விசுவாசத்தோடு இருக்கிறேன். அது எனக்குப் போதும். அதிகமாகத் தெரிந்து, அதனால் குழம்பி விடுவேன் என்று சொன்ன கிறித்துவ விசுவாசிகளைத் தான் அதிகம் சந்தித்தேன். (அதனால் தான் இந்த நூலில் ஆரம்பத்திலேயே நீட் சேயின் மேற்கோளைக் கொடுத்துள்ளேன்.) நம்பிக்கை என்று சொல்லி விட்டாலே அதற்கு மேலே உண்மைகளைத் தெரிந்து கொள்ள நம்பிக்கையாளர்கள் மறுக்கிறார்கள் என்றது அந்த மேற்கோள். இதுவும் ஒரு வகை அச்சமே. தாலாட்டிலிருந்து ஆரம்பித்து, இறுகிப் போயுள்ள தங்கள் நம்பிக்கைகள் மீதே அவர்களுக்கு அதிக நம்பிக்கையில்லை என்றே தெரிகிறது! அச்சமே மீதூறுகிறது.
அனைத்திற்கும் எங்கள் வேத நூலில் பதிலிருக்கிறது
என்று ஆபிரகாமிய
மதக்காரர்கள் வழக்கமாகக் கூறுவதுண்டு. இது மதராசாவில் சொல்லிக் கொடுக்கப்
பட்டது. அனைவரும் அதனைச் சொல்வதே இப்போது ஒரு fashion- ஆகிவிட்டது.
சற்று ஆழமாக மதத்தின் வரலாறு,
ஆரம்பித்த காலத்திலிருந்த குழப்பங்கள், குழப்பங்கள்
விலகிய வரலாறு, அதற்குக் காரணமானவர்கள், அதற்கான காரணங்கள் என்றுள்ள ஆயிரத்தெட்டு விஷயங்களும் எங்களுத் தெரிய வேண்டாம்
என்ற முனைப்போடு விசுவாசிகள் இருப்பதையே கண்டேன். ஆரம்ப காலத்தில் எனக்கு சமயங்களின்
மீது கேள்விகள் எழும்போதும் ஏறத்தாழ இதே போன்ற குழப்பங்கள் எனக்குள் இருந்தன. கேள்விகளுக்குப்
பதில்கள் இல்லாத போது theist -> agnostic என்ற நிலைக்கு “முன்னேறினேன்!” அதன்பின்னும்
என் தேடலைத் தீவிரமாக்கிய பின், இறுதியாக theist
-> agnostic -> atheist -> anti-theist என்ற “enlightenment”
எனக்குள் விளைந்தது. இதெல்லாம் எதற்கு என்று இன்றைய விசுவாசிகள் நினைக்கிறார்கள்.
இன்னொரு வகை விசுவாசிகளும் உண்டு. எங்கள்
வேத நூல் அனைத்திற்கும் விளக்கமளிக்கும் என்பார்கள் அவர்கள். அவர்களுக்கு இந்த நூல்
நல்ல உணவளிக்கும் என்று நம்புகிறேன்.
முதலிரு பக்கங்களிலேயே வாசகர்களுக்கு
ஒரு test
வச்சிருக்கேன். நல்ல பதிலா சொல்லுங்க ...
Try your chance.