ப்ரேசில்
- செர்பியா
கட்டாயம் ப்ரேசில் பற்றியெழுதியாகணுமே ... நம்ம கட்சியை அதுவும், ஆரம்பத்திலேயே நாமளே கைவிட்டுறலாமா?
ஏற்கெனவெ அர்ஜெண்டினா, ஜெர்மனி கதை உலகறிந்து போச்சு. அதே நிலை
ப்ரேசிலுக்கும் நீடிக்குமோ என்ற பயம் பலருக்கு; எதிர்பார்ப்பும்
பலருக்கு இருந்தது. முதல் அரைமணி நேர ஆட்டம் போய்க்கொண்டிருக்கும் போது அந்த பயம்
நிஜமாகிவிடுமோ என்று தான் எண்ண வேண்டியதிருந்தது. விளையாட்டு நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.
ஆனால் கோல் எதுவும் விழவுமில்லை. அதோடு இரண்டு மூன்று முறை பந்து கோல் கம்பங்களில்
பட்டுத் திரும்பியது. ஒரு கார்னர் ஷாட் நெய்மர் அடித்தார். அழகு. பந்து மேலெழுந்து
வந்து மிகச் சரியாக கோல் போஸ்டின் நடுவில் கீழிறங்கியது. ஆனால் கோல் கீப்பர் தடுத்து
விட்டார். இருப்பினும் மிக அழகான ஷாட்.
62 நிமிடம் என்று நினைக்கின்றேன். Richarlison முதல் கோலைப் போட்டார். ஆட்டம்
இன்னும் வேகமெடுத்தது. அடுத்த பத்தாவது நிமிடத்தில் தன் இரண்டாவது கோலைப் போட்டார்
Richarlison. இதுவே இன்று கால்பந்து உலகம் முழுவதும் வியந்து பாராட்டும் ஷாட். அது சைக்கிள்
ஷாட் / ரிவர்ஸ் கிக் என்று பல பெயர்களில் வியந்தோதும் ஷாட். ஏறத்தாழ இதே மாதிரி ஒரு
ஷாட்டை ரொம்ப ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் உலகப் போட்டியில் பார்த்த நினைவு. ஆண்டு, அடித்தவர் யார் என்பதெல்லாம் மறந்தே
போச்சு. ப்ளாட்டினி என்று ஒரு பெயர் நினைவுக்கு வந்தது. ஆங்கிலேயரா, பிரஞ்சுக்காரரா ... தெரியவில்லை.
இந்த கோல் போட்டு சிறிது நேரத்தில்
Richarlison திருப்பி வெளியே எடுக்கப்பட்டு விட்டார். பாவம் ...அவர் ஒரு “தொப்பித் தந்திரம்”
... அதாங்க hat trick செய்ய
முயற்சித்திருக்கலாமே. சரி... ரெண்டு கோல் போட்டுட்டாரென்று அழைத்திருக்கலாம். அவரோடு
நெய்மரையும் வெளியே எடுத்து விட்டார்கள். அவருக்குக் கரண்டைக் காலில் வீக்கம். அடுத்து
எப்போது களம் இறங்குவாரோ தெரியவில்லை.
ப்ரேசில் -
செர்பியா ...2:1
இரண்டாம் பகுதியில் விறுவிறுப்பு 90% விழுக்காட்டிற்கு மேலே போனது.
*
https://www.facebook.com/sam.george.946/posts/pfbid02bP82QahP9DoiHRh18ha3En9Lf1pdyV2XBuZaR9unqgy46DnMBXxgZVgW2zfMhKzrl