சிங்கையில் இருந்தது என்னவொ ஏழெட்டு நாட்கள் தான். இருந்தாலும் யாரும் வாசிச்சாலும் வாசிக்கட்டாலும் சும்மா சகட்டு மேனிக்கு இடுகைகளை எழுதித் தள்ளிடுவோம்னு நினைத்தேன்.
Showing posts with label சிங்கப்பூர். Show all posts

Wednesday, September 22, 2010
442. சிங்கப்பூர் -- முடிவுரை மாதிரி ...
*
சிங்கையில் இருந்தது என்னவொ ஏழெட்டு நாட்கள் தான். இருந்தாலும் யாரும் வாசிச்சாலும் வாசிக்கட்டாலும் சும்மா சகட்டு மேனிக்கு இடுகைகளை எழுதித் தள்ளிடுவோம்னு நினைத்தேன்.
சிங்கையில் இருந்தது என்னவொ ஏழெட்டு நாட்கள் தான். இருந்தாலும் யாரும் வாசிச்சாலும் வாசிக்கட்டாலும் சும்மா சகட்டு மேனிக்கு இடுகைகளை எழுதித் தள்ளிடுவோம்னு நினைத்தேன்.
வகை:
சிங்கப்பூர்
Tuesday, September 21, 2010
441. சிங்கப்பூர் -- ஆடைகளில் ஒரு தத்துவம்
*
சிங்கையில் இறங்கியதும் சில cultural shocks இருந்தது. எல்லாம் நம் கீழை நாடுதானே ... நம்மவர் பலரும் இருக்குமிடந்தானே என்று நினைத்து வந்தால் இங்கே அமெரிக்காவின் சாயலை அப்படியே பார்க்க முடிந்தது. சாலைகள், விரையும் வண்டிகள், சாலை விதிகள், அப்பழுக்கற்று அவைகளைப் பின்பற்றும் மக்கள், நடைபாதைகளின் அழகு, பராமரிப்பு, ரயில், பேருந்துகளின் அழகான நிலை, விரைந்து வரும் மக்களிடமும் காணப்படும் நாகரீகம் -- இப்படி அந்த லிஸ்ட் மிக மிக நீளம்.
ஆச்சரியங்களை அளித்த இந்த வேற்றுமைகளோடு, ஷாக் கொடுத்த இன்னொரு விஷயம் -- மக்களின் ஆடைகள். பலரும், பொதுவாக அனைத்து சீனப் பெண் மக்களும் வயது வேற்றுமையின்றி அணிந்திருந்த ஆடைகள் முதல் இரு நாளில் என்னை வாயைப் பிளக்க வைத்தன. மிக மிகச்சிறிய கால் சராய்கள். மேலே போட்டிருக்கும் ஆடைகளும் எந்த வித fixed style என்றில்லாமல் 'என்னத்தையோ' போட்டுக் கொண்டிருந்தார்கள். உள்ளாடைகளின் நாடாவும், வெளியாடையின் நாடாவும் ஆளுக்கொரு பக்கம் நிற்கும். (நம்மூரில் அதற்கு sunday is longer than monday என்றெல்லாம் குழூக்குறிகள் உண்டு; அந்த மக்களுக்கு அந்தக் கவலையே இல்லை.) Wondering whether it was all a "calculated carelessness"?!

இப்படி அரை குறையாக ஆடை அணிந்து செல்கிறார்களே என்று ஆண்கள் யாரும் வாய்பிளந்து நிற்கிறார்களா என்றால் யாரும் இல்லை. முதல் இரு நாளில் எனக்கு இது வேடிக்கையாகவும், விநோதமாகவும் தெரிந்தது - மூன்றாவது நாளிலிருந்து அப்படியில்லை. என்னைப் போலவே ஒரு தமிழ் இளந்தாரி ஒரு நாளில் வாய்பிளந்து பார்ப்பதைப் பார்த்தேன். ஒரு வேளை அவனும் இப்போதுதான் சிங்கைக்கு வந்திருக்க வேண்டும்.
தொலைக் காட்சியில் ஒரு முறை நடிகைகள் ஷ்ரேயா (மிகச்சின்ன கால் சராயைப் போட்டுக் கொண்டு கால் மேல் கால் மாற்றி உட்கார்ந்திருந்தார்.), ரீமா சென் மேலே பட்டை ஏதுமில்லாமல் 'எப்படியோ தொங்கிக் கொண்டிருக்கும்' மேல்சட்டையுடன் இருந்தவைகளைப் பார்க்கும்போது எனக்கே 'என்னடா இப்படி இதுக எல்லாம் சட்டை போடுதுகள்' அப்டின்னு நினைத்தேன். நாலு இடம் பார்த்தாதான் 'இதெல்லாம் சகஜமப்பா' அப்டின்ற நினைப்பு வரும் போலும்.
நம்மூர்ல நடிகைகள் போடும் ஆடைகளை சர்வ சாதாரணமாக இங்கே எல்லா மக்களும் போட்டுக் கொண்டு போவதைப் பார்த்த பின்தான் நாம் தான் காலத்தால் மிகவும் பின் தங்கி விட்டோம் அப்டின்னு தோன்றியது.
அறுபது எழுபதுகளில் 'வாலிப வயசில்' இருந்த அப்போதைய இளைஞர்கள் எப்படி ஆடை அணிந்திருந்தார்கள்; அவர்கள் ஆடைகளுக்குக் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள் என்பது உங்களில் பலருக்குத் தெரியாதுதான். அப்போதெல்லாம் ரெடிமேட் ஆடைகள் என்பதெல்லாம் பணக்காரர்களுக்கென்றுதான் நாங்கள் சொல்வோம் -- விலை அப்படி இருக்கும். எல்லோரும் போடுவதெல்லாம் tailored ஆடைகள்தான். அப்போதெல்லாம் அமெரிக்காவில் பணக்காரர்கள் மட்டுமே tailored ஆடைகள் போடுவார்கள் என்பது எங்களுக்கு ஆச்சரியாக இருக்கும்.
சட்டை போட்டு 'டக்' பண்ணினால், சட்டையின் பின் பக்கம் தோள்பட்டை பக்கம் உள்ள இரு மடிப்புகள் மடிப்பு மாறாமல் நெடுக இருந்து, அதை டக் செய்யணும். ஒரு வேளை ஸ்லாக் சட்டை போட்டால் அதன் முன் மடிப்பு அப்படியே நேராக pants-ன் முன் மடிப்பில் சரியாகப் பொருந்தணும். pants-ன் pleats - மடிப்புகள் நன்றாக தைக்கப்பட்டு, சரியாக iron செய்யப்பட்டு கத்தி மாதிரி இருக்கணும். அட ... ஷூ கூட அவ்வப்போது டிசைன் மாறும். ஒரு தடவை ஊசி மாதிரி .. கொஞ்ச நாளில் ஷூவின் முனை தட்டையாக இருக்கணும். லேடிஸ் ஹை ஹீல்ஸ் செருப்பு மாதிரி கொஞ்ச நாள் ஆண்கள் ஷூவும் உயர்ந்த ஹீல்ஸோடு போட்டோம். (மோகன் - அதாங்க .. மைக் பிடிச்சிக்கிட்டு பாடிக்கிட்டே ஒரு நடிகர் இருப்பாரே, அவரது ட்ரேட் மார்க்கே அந்த டைப் ஷூ தான்!) இந்த பெல்ட் இல்லை ... அது பட்ட பாடு. 65-ம் வருடத்தில் பெல்ட் நம் அரை ஞாண் கயிறு சைசில் இருக்கும். அதிலிருந்து நாலைந்து ஆண்டுகள் கழித்து சரியான பட்டை சைசில் ஆயிரிச்சி. உரித்தெடுக்கும் டைட் pants அறுபதுகளின் கடைசியில். ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் படா பெல் பாட்டம்ஸ்.
எழுபது வரை இப்படி இருந்த 'ஸ்டைல்' தொன்னூறுகளில் முற்றிலும் மாறி விட்டது. ரெடிமேட் ஆடைகளின் காலம் ஆரம்பித்தது. அதுவரை தனித்தனியாக தைத்து போட்ட ஆடைகளில் நாங்கள் காட்டிய நுணுக்கங்கள் காணாமல் போனது. ஜீன்ஸுகள் வந்தன. casual wear என்ற காலம் பிறந்து விட்டது. அறுபதிலிருந்து எண்பதுகளின் கடைசி வரை டைட்ஸ், பெல் பாட்டம்ஸ் என்றெல்லாம் மாறி மாறி வந்த pants அனேகமாக ஒரே "ரூபத்தைப்" பெற்றன. அதன்பிறகு ஆண்களின் ஆடையில் மாற்றங்கள் மிகக் கம்மி.
ஆண்கள் ஆடையில்தான் இந்த மாற்றங்களா என்றால் பெண்களின் ஆடையிலும் தான். தாவணிகள் போய் சூரிதார் வரும்போது மிகவும் அவை மிக மெல்ல மெல்லவே வந்தன. பெண்களுக்கும் தடுமாற்றம். சமூகத்திற்கும் அதை ஒத்துக் கொள்ள காலம் எடுத்தது. ஒரு மாணவி சூரிதார் போட்டு என வகுப்பிற்கு வந்தால் நான் வகுப்பெடுக்க மாட்டேன் என்ற கல்லூரி ஆசிரியர்களும் இருந்தார்கள். தாவணி --> சூரிதார் -- இதற்கெடுத்த காலத்தையும் விட குறைவாகவே சூரிதார் --> pants எடுத்தது. அதிலும் மதுரையை விட சென்னையில் இந்த வேகம் கொஞ்சம் அதிகம். சென்னையை விட பெண்களூரில் இன்னும் வேகம். அதையும் தாண்டி அடுத்த நாடுகளில் வேகம் இன்னும் அதிகம். நமது நாட்டில் pants வரை பெண்கள் வந்து விட்டார்கள். அரைக்கால் சட்டையும் மெல்ல எட்டிப் பார்க்கிறது. சிங்கையில் முழுமையாக வந்து விட்டது.
சிங்கையில் ஒரு வாரம் இருந்து விட்டு விமான நிலையத்தில் கூட்டமாய் காத்திருந்த போது சுற்றிலும் நம்மூர் பெண்கள். எல்லா பெண்களிடமும், சேலை கட்டியோர் தங்கள் முந்தானைகளிலும், சூரிதார் பெண்கள் தங்கள் துப்பட்டாவிலும் மட்டுமே தங்கள் கற்பு 'தொங்கிக் கொண்டிருப்பது' போல் இருந்ததைக் காண முடிந்தது. அது எனக்கு இப்போது வேடிக்கையாக இருந்தது.
நாங்கள் எழுபதுகளில் உடைக்குக் கொடுத்த முக்கியத்துவம் போல் இப்போது பெண்கள் தங்கள் உடைகளோடு ஒன்றிப் போய் விட்டார்கள். ஆனால் சிங்கைப் பெண்கள் அதையும் தாண்டி வந்து விட்டார்கள். அந்த உடைகளில் அவர்களைப் பார்க்கும் போது working women என்ற ஒரு நினைப்பு உடனே வந்து விடுகின்றது. அதில் முதலில் தோன்றிய so called கவர்ச்சி என்று ஏதுமில்லை. மிக சாதாரணமாகத் தோன்றியது. அந்த பெண்கள் ஆடைகளைத் துறந்து விட்டார்கள். ஆடைகளுக்குரிய அதீத முக்கியத்துவத்தைத் துறந்து விட்டார்கள்.
ALVIN TOFFLER ஆடைகளின் fashions மாறி மாறி வரும் என்பது நிதர்சனமான உண்மை என்று தனது நூல் FUTURE SHOCK-ல் கூறுவார். முப்பது வருடங்களுக்கு ஒரு cycle என்பார் அவர். ஆனாலும் அவர் சொன்னதை விடவே இன்னும் வேகமாகவே மாறி வருகின்றன. அந்த மாற்றங்களை எதிர் நோக்குவதும் அதை ஏற்றுக் கொள்வதுமே நமது தகவுடைத்தன்மை என்பார். நாளை நம்மிடத்தில் மெல்ல வரப்போகும் ஒரு மாற்றத்தை திடீரென்று சிங்கை போனதால் பார்த்தேன்.அதனால் முதலில் சிறிதே FUTURE SHOCK !
*
ஒரு வேளை யாராவது இந்த இடுகையை வாசிக்க நேர்ந்து, ஒரு பின்னூட்டமும் போட நினைத்தல் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
'தமிழ்ப்பண்பாடு' என்ற வார்த்தை அதில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அப்படி ஒன்றுமே, எதுவுமே இல்லை. என்னைப் பொறுத்த வரை 'தமிழ்ப்பண்பாடு' என்பது அடிக்கடி சொல்லப்படும் ஒரு கெட்ட வார்த்தை.
சிங்கையில் இறங்கியதும் சில cultural shocks இருந்தது. எல்லாம் நம் கீழை நாடுதானே ... நம்மவர் பலரும் இருக்குமிடந்தானே என்று நினைத்து வந்தால் இங்கே அமெரிக்காவின் சாயலை அப்படியே பார்க்க முடிந்தது. சாலைகள், விரையும் வண்டிகள், சாலை விதிகள், அப்பழுக்கற்று அவைகளைப் பின்பற்றும் மக்கள், நடைபாதைகளின் அழகு, பராமரிப்பு, ரயில், பேருந்துகளின் அழகான நிலை, விரைந்து வரும் மக்களிடமும் காணப்படும் நாகரீகம் -- இப்படி அந்த லிஸ்ட் மிக மிக நீளம்.
இப்படி அரை குறையாக ஆடை அணிந்து செல்கிறார்களே என்று ஆண்கள் யாரும் வாய்பிளந்து நிற்கிறார்களா என்றால் யாரும் இல்லை. முதல் இரு நாளில் எனக்கு இது வேடிக்கையாகவும், விநோதமாகவும் தெரிந்தது - மூன்றாவது நாளிலிருந்து அப்படியில்லை. என்னைப் போலவே ஒரு தமிழ் இளந்தாரி ஒரு நாளில் வாய்பிளந்து பார்ப்பதைப் பார்த்தேன். ஒரு வேளை அவனும் இப்போதுதான் சிங்கைக்கு வந்திருக்க வேண்டும்.
தொலைக் காட்சியில் ஒரு முறை நடிகைகள் ஷ்ரேயா (மிகச்சின்ன கால் சராயைப் போட்டுக் கொண்டு கால் மேல் கால் மாற்றி உட்கார்ந்திருந்தார்.), ரீமா சென் மேலே பட்டை ஏதுமில்லாமல் 'எப்படியோ தொங்கிக் கொண்டிருக்கும்' மேல்சட்டையுடன் இருந்தவைகளைப் பார்க்கும்போது எனக்கே 'என்னடா இப்படி இதுக எல்லாம் சட்டை போடுதுகள்' அப்டின்னு நினைத்தேன். நாலு இடம் பார்த்தாதான் 'இதெல்லாம் சகஜமப்பா' அப்டின்ற நினைப்பு வரும் போலும்.
நம்மூர்ல நடிகைகள் போடும் ஆடைகளை சர்வ சாதாரணமாக இங்கே எல்லா மக்களும் போட்டுக் கொண்டு போவதைப் பார்த்த பின்தான் நாம் தான் காலத்தால் மிகவும் பின் தங்கி விட்டோம் அப்டின்னு தோன்றியது.
அறுபது எழுபதுகளில் 'வாலிப வயசில்' இருந்த அப்போதைய இளைஞர்கள் எப்படி ஆடை அணிந்திருந்தார்கள்; அவர்கள் ஆடைகளுக்குக் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள் என்பது உங்களில் பலருக்குத் தெரியாதுதான். அப்போதெல்லாம் ரெடிமேட் ஆடைகள் என்பதெல்லாம் பணக்காரர்களுக்கென்றுதான் நாங்கள் சொல்வோம் -- விலை அப்படி இருக்கும். எல்லோரும் போடுவதெல்லாம் tailored ஆடைகள்தான். அப்போதெல்லாம் அமெரிக்காவில் பணக்காரர்கள் மட்டுமே tailored ஆடைகள் போடுவார்கள் என்பது எங்களுக்கு ஆச்சரியாக இருக்கும்.
சட்டை போட்டு 'டக்' பண்ணினால், சட்டையின் பின் பக்கம் தோள்பட்டை பக்கம் உள்ள இரு மடிப்புகள் மடிப்பு மாறாமல் நெடுக இருந்து, அதை டக் செய்யணும். ஒரு வேளை ஸ்லாக் சட்டை போட்டால் அதன் முன் மடிப்பு அப்படியே நேராக pants-ன் முன் மடிப்பில் சரியாகப் பொருந்தணும். pants-ன் pleats - மடிப்புகள் நன்றாக தைக்கப்பட்டு, சரியாக iron செய்யப்பட்டு கத்தி மாதிரி இருக்கணும். அட ... ஷூ கூட அவ்வப்போது டிசைன் மாறும். ஒரு தடவை ஊசி மாதிரி .. கொஞ்ச நாளில் ஷூவின் முனை தட்டையாக இருக்கணும். லேடிஸ் ஹை ஹீல்ஸ் செருப்பு மாதிரி கொஞ்ச நாள் ஆண்கள் ஷூவும் உயர்ந்த ஹீல்ஸோடு போட்டோம். (மோகன் - அதாங்க .. மைக் பிடிச்சிக்கிட்டு பாடிக்கிட்டே ஒரு நடிகர் இருப்பாரே, அவரது ட்ரேட் மார்க்கே அந்த டைப் ஷூ தான்!) இந்த பெல்ட் இல்லை ... அது பட்ட பாடு. 65-ம் வருடத்தில் பெல்ட் நம் அரை ஞாண் கயிறு சைசில் இருக்கும். அதிலிருந்து நாலைந்து ஆண்டுகள் கழித்து சரியான பட்டை சைசில் ஆயிரிச்சி. உரித்தெடுக்கும் டைட் pants அறுபதுகளின் கடைசியில். ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் படா பெல் பாட்டம்ஸ்.
எழுபது வரை இப்படி இருந்த 'ஸ்டைல்' தொன்னூறுகளில் முற்றிலும் மாறி விட்டது. ரெடிமேட் ஆடைகளின் காலம் ஆரம்பித்தது. அதுவரை தனித்தனியாக தைத்து போட்ட ஆடைகளில் நாங்கள் காட்டிய நுணுக்கங்கள் காணாமல் போனது. ஜீன்ஸுகள் வந்தன. casual wear என்ற காலம் பிறந்து விட்டது. அறுபதிலிருந்து எண்பதுகளின் கடைசி வரை டைட்ஸ், பெல் பாட்டம்ஸ் என்றெல்லாம் மாறி மாறி வந்த pants அனேகமாக ஒரே "ரூபத்தைப்" பெற்றன. அதன்பிறகு ஆண்களின் ஆடையில் மாற்றங்கள் மிகக் கம்மி.
சிங்கையில் ஒரு வாரம் இருந்து விட்டு விமான நிலையத்தில் கூட்டமாய் காத்திருந்த போது சுற்றிலும் நம்மூர் பெண்கள். எல்லா பெண்களிடமும், சேலை கட்டியோர் தங்கள் முந்தானைகளிலும், சூரிதார் பெண்கள் தங்கள் துப்பட்டாவிலும் மட்டுமே தங்கள் கற்பு 'தொங்கிக் கொண்டிருப்பது' போல் இருந்ததைக் காண முடிந்தது. அது எனக்கு இப்போது வேடிக்கையாக இருந்தது.
நாங்கள் எழுபதுகளில் உடைக்குக் கொடுத்த முக்கியத்துவம் போல் இப்போது பெண்கள் தங்கள் உடைகளோடு ஒன்றிப் போய் விட்டார்கள். ஆனால் சிங்கைப் பெண்கள் அதையும் தாண்டி வந்து விட்டார்கள். அந்த உடைகளில் அவர்களைப் பார்க்கும் போது working women என்ற ஒரு நினைப்பு உடனே வந்து விடுகின்றது. அதில் முதலில் தோன்றிய so called கவர்ச்சி என்று ஏதுமில்லை. மிக சாதாரணமாகத் தோன்றியது. அந்த பெண்கள் ஆடைகளைத் துறந்து விட்டார்கள். ஆடைகளுக்குரிய அதீத முக்கியத்துவத்தைத் துறந்து விட்டார்கள்.
ALVIN TOFFLER ஆடைகளின் fashions மாறி மாறி வரும் என்பது நிதர்சனமான உண்மை என்று தனது நூல் FUTURE SHOCK-ல் கூறுவார். முப்பது வருடங்களுக்கு ஒரு cycle என்பார் அவர். ஆனாலும் அவர் சொன்னதை விடவே இன்னும் வேகமாகவே மாறி வருகின்றன. அந்த மாற்றங்களை எதிர் நோக்குவதும் அதை ஏற்றுக் கொள்வதுமே நமது தகவுடைத்தன்மை என்பார். நாளை நம்மிடத்தில் மெல்ல வரப்போகும் ஒரு மாற்றத்தை திடீரென்று சிங்கை போனதால் பார்த்தேன்.அதனால் முதலில் சிறிதே FUTURE SHOCK !
*
ஒரு வேளை யாராவது இந்த இடுகையை வாசிக்க நேர்ந்து, ஒரு பின்னூட்டமும் போட நினைத்தல் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
'தமிழ்ப்பண்பாடு' என்ற வார்த்தை அதில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அப்படி ஒன்றுமே, எதுவுமே இல்லை. என்னைப் பொறுத்த வரை 'தமிழ்ப்பண்பாடு' என்பது அடிக்கடி சொல்லப்படும் ஒரு கெட்ட வார்த்தை.
வகை:
சிங்கப்பூர்
Monday, September 20, 2010
440. சிங்கப்பூர் -- SINGAPORE FLYER
*
சிங்கப்பூர் சுழல் குடை ... ஈராண்டுகளுக்கு முன் ஆரம்பித்த ஒரு பெரும் சக்கரம். 40 மாடிக் கட்டிடத்தை விடவும் உயரமான இரும்பு அதிசயம். உலகத்தில் இதுபோல் உள்ள பெரும் சக்கரங்களில் இதுவே மிகப் பெரியதாம்.

Sunday, September 19, 2010
439. சிங்கப்பூர் -- கண்காட்சியகம்
வகை:
சிங்கப்பூர்
Wednesday, September 15, 2010
437. சிங்கப்பூர் -- சாலைகள், கடைகள், ரயில்கள், பேருந்துகள், டெக்ஸி ...
*
சிங்கையில் இறங்கி வெளியே சாலைகளுக்கு வந்ததுமே தெரிந்த முதல் உண்மை - நாம் மூன்றாம் உலகத்தில் இருந்து முதலாம் உலகத்திற்குள் நுழைந்துவிட்டோம் என்பதுதான்.
வகை:
சிங்கப்பூர்
Tuesday, September 14, 2010
436. சிங்கப்பூர் -- வீடுகள்
*
'ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்க' என்று சொல்லுவது போல் இந்த நாட்டை முன்னோக்கி நடத்த யோசித்தவர்கள் வாழ்க்கையின், பொருளாதாரத்தின், சமூகத்தில் பல படிகளையும் நன்கு யோசித்து நல்ல பல முடிவுகளை எடுத்துள்ளனர். எடுத்த முடிவுகளைச் சட்டங்களாக்கி, அவைகளை முறையாகவும் செயல்படுத்தி வருகின்றனர் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
நம்ம ஊர்ல ஆட்டோக்களுக்கு மீட்டர் போட ஒரு அரசாலும் முடியவில்லை!
கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டே போகும் உத்தமர்களை நிறுத்த காவல் துறையால் முடியவில்லை!
தலைக்கவசம் போட அரசின் கருணை இடம் கொடுக்கவில்லை!
ஒரு அரசியல்வாதியின் ஊழலை நீதிமன்றத்தில் நம் C.B.I.-ஆல் நிறுவ முடியவில்லை!
தப்பு செய்தாலும் தண்டனை கொடுக்க நீதியரசர்களுக்கு மனமில்லை!
இது போல் நிறைய இருக்கு அழுது கொண்டே சொல்ல ...
............. என்னமோ போங்க! நம் தலையெழுத்து!!
பரப்பளவு பற்றாக் குறையினால் அடுக்கு மாடி வீடுகளையே நிறைய கட்டியுள்ளார்கள். அறுபதுகளில் ஊரில் அங்கங்கே வெறும் கூரை வீடுகளாக இருந்தனவாம். அன்றைய குப்பங்கள் .. இன்றைய கான்க்ரீட் காடுகள். எங்கும் பல மாடிக்கட்டிடங்கள். 15 முதல் 50 வரையிலான மாடிக் கட்டிடங்கள். அவ்வாறு கட்டும்போதே அங்கே யார் யாரைக் குடி வைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்துள்ளார்கள். இருக்கும் மக்கள் நால்வகை மக்கள்: மலாய், சீனா, இந்திய, மற்றையவர் என நான்கு பிரிவு மக்கள்; வெவ்வேறு விழுக்காட்டில் உள்ளார்கள். சாதாரணமான, திட்டமில்லாத குடியேற்றம் என்றால் அந்தந்த வகை மக்கள் மொத்தமாக வீடுகளில் குடியேறியிருக்கலாம். அப்படியிருந்திருந்தால் ஒரு புறம் மலாய், மறுபுறம் சீனாக்காரர்கள்; இன்னொரு பக்கம் தமிழர்கள் என்றெல்லாம் இருந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வீட்டுப் பகுதிகளிலும் நாட்டில் இருக்கும் மக்களின் விழுக்காட்டின்படி மட்டுமே வீடுகள் பகிர்ந்தளிக்கப் படுகின்றன. 'அந்த லொக்காலிட்டி, இந்த லொக்காலிட்டி' என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லோரும் எங்கும் ....நம்ம ஊர் சமத்துவபுரம் போல் அங்கு சரியாக நடந்து வருகிறது.
வீட்டுத் தொகுதிகள் எண்களால் குறிக்கப்பட எங்கிருந்தும் வாடகைக்காரில் போய் வருவது எளிதாகி விடுகிறது. எண்களைச் சொன்னால் காரிலுள்ள G.P.S. மூலம் எளிதாகக் கண்டு பிடிக்க முடிகிறது. வீடுகளில் எந்தக் குழாயைத் திருப்பினாலும் வருவது நல்ல தண்ணீர் மட்டுமே. அமெரிக்காவிலும் முன்பு இதே நிலையைக் கண்ட போது ஆச்சரியமாக இருந்தது. சிங்கையில் தண்ணீரும் இறக்குமதிதானாம். மலேஷியா நாட்டிலிருந்து தண்ணீரைப் பெற்று அதை நல்ல நீராக்கி அவர்களுக்கே திரும்ப கொடுத்து லாப வியாபாரம். அதோடு தங்களுக்கும் தண்ணீரை இறக்குமதி செய்து கொள்கிறார்கள். வீட்டைச் சுத்த பத்தமாக வைத்திருக்க வேண்டுமாம். அவ்வப்போது வீடுகளின் நிலையை அரசு கண்காணிக்கிறது. கொசு போன்றவைகளை உருவாக்கும் வழியாக தண்ணீர் எங்கும் கட்டிக் கிடந்தால் அதற்கு தண்டம் உண்டு. நம்ம ஊர்ல மாதிரி அங்கங்க எச்சி துப்புறது, கண்ட இடத்தில் குப்பை போடுவது இவைகளைச் சிறு வயதிலிருந்தே தடை செய்யப்பட்ட விஷயமாக ஊட்டி விட்டிருக்கிறார்கள். எங்கும் எதிலும் குப்பையில்லை; அழுக்கில்லை. அட .. சாலைகள் கூட எவ்வளவு சுத்தம்.வீடுகளில் கூட நம் குப்பைகளை அந்தந்த மாடியில் உள்ள ஒரு பொந்தில் கொட்டி விடுகிறார்கள். குழாய் வழியாக அது 'மறைந்தே' விடுகிறது.
வீட்டுத் தொகுதிகளைச் சுற்றி நல்ல புல்வெளி; இரவில் உண்டு களிக்க திறந்த இடங்கள்; உடற்பயிற்சிக்கான இடங்கள்; வயதானவர்களுக்கான கீழ்த்தளத்தில் ஓரிடம்; வீட்டில் நல்லது கெட்டது எதற்கும் ஒரு பொதுவிடம் - கல்யாணமோ, கடைசிப் பயணமோ அங்கே நடத்திக் கொள்ள வசதி -- self contained complexes.
பதினேழரை வயதில் ஆண்கள் இரண்டரை ஆண்டு கட்டாய ராணுவ சேவைக்குச் செல்ல வேண்டும். இளைஞர்கள் அதன்பின் வேலைக்குச் சேரும்போது இந்த இரண்டரை ஆண்டுகளும் அவர்களின் தொழில் வரலாற்றுப் பதிவில் இடம் பெறுகிறது.இளைஞர்கள் அந்த ஆண்டுகளில் முழு மன வளர்ச்சி பெறுவது இயல்பாக நடந்து வருகிறது. வாழ்க்கையில் அவர்கள் முறையான பழக்க வழக்கங்களைக் கைக் கொள்ள இந்தப் பயிற்சி உதவுகிறது. குடும்பத்திலிருந்தும் சிறிது விலகல் வந்து விடுகிறது. அதன்பின் அவர்கள் ஒரு வளர்ந்த தனித்த மனிதனாக இருப்பதே நடைமுறை போலும்.
ஒவ்வொரு வீட்டுத் தொகுதிகள் பெரும்பாலும் ஒரு M.R.T. நிலையத்திற்குப் பக்கத்தில் உள்ளது. அதோடு ஒரு பெரிய Mall ஒன்றும் பக்கத்திலேயே. இன்னொன்றும் உண்டு. ஒரு பெரிய food court. பாதி கால்பந்து மைதான சைஸில் ஒரு சாப்பாட்டு இடம். அதைச் சுற்றிலும் பல கடைகள். உங்களுக்கு வேண்டியதை வாங்கி, அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு வரலாம். ஒரு சனி மாலை அந்தப் பக்கம் போனேன். எங்கும் எதிலும் காலி பியர் பாட்டில்கள். எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து மக்கள் சோம பானம் குடிக்கலாமாம். ஒரு நாள் இரவு 12 மணிக்கு ஒரு food court-க்குப் போனோம். இரண்டு மணியளவில் கிளம்பி போனால் பக்கத்திலிருந்த சாலையின் நடை மேடையில் ஒரு கச்சேரி - நம்ம ஊரு பசங்கதான் - நடந்துகிட்டு இருந்திச்சி. food court-ல் அம்புட்டு கூட்டம். ஜமாய்க்கிறாங்க'பா!
ஏற்கெனவே சொன்னது போல் underground bunkers நிறைய கட்டி வைத்திருப்பதாகச் சொன்னார்கள். மக்களின் எல்லா தேவைகளுக்கும் சிங்கை அயல்நாட்டு இறக்குமதிகளை நம்பித்தான் உள்ளது - தண்ணீர் கூட. ஆனாலும் எப்போதும் தேவையான பொருட்களை அரசு சேமித்து வைத்துள்ளது என்றும், இரு முழு ஆண்டுகள் வெளிநாட்டு இறக்குமதி இல்லாவிட்டாலுமே நாடு அதை சமாளிக்கும் அளவிற்கு தேவையான எல்லா பொருட்களையும் சேமித்து வைத்திருக்குமாம். ரூம் போட்டு அல்ல .. ஒரு பெரிய ஹால் பிடித்துப் போட்டு யோசித்து வைத்திருக்கிறார்கள்.
இரும்புக் கதவு |
வகை:
சிங்கப்பூர்
Thursday, September 09, 2010
434. சிங்கப்பூர் -- ஒரு அதிசயமான வரலாறு
*
*
கால் நூற்றாண்டுக்குள் ஒரு நாட்டை - அது எவ்வளவு சிறிதாக, மூலப்பொருளேதும் இல்லாது இருந்தும் கூட - வளமாக்க முடியும் என்பதற்கு சிங்கை ஒரு நல்ல உதாரணம்.
![]() |
Lee Kuan Yew |

Saturday, August 14, 2010
425. சிங்கப்பூர் -- மீண்டும் முதலில் இருந்து ....
*
*
எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த அறையிருந்த இடத்திற்கு Little India என்று பெயராம். 'தமிழ்நாட்டு'ப் புகழ்பெற்ற முஸ்தபா கடைக்கு மிக மிக அருகில். முஸ்த்பா கடை சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு மிகவும் பெரிதாக வளர்ந்துள்ளது. கடையை விரிவு படுத்தும்போது அதன் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் நடுவில் ஒரு ரோடு போகிறது அரசில் இருந்து அனுமதி பெற்று இரண்டு பகுதிகளையும் ஒரு பாலம் போல் ரோட்டுக்கு மேல் இணைத்திருக்கிறார்கள். 24 மணி நேரமும் விற்பனைதான். எங்களின் முதல் நாளில், இரவு மணி 12.30 - 1.00 வரை அந்தக் கடைக்குள் சுற்றிக் கொண்டிருந்தோம். முஸ்தபா இன்னும் வளர்ந்து கொண்டுதானிருக்கிறது. புதிய கட்டிடம் ஒன்று இரண்டாம் பகுதியின் தொடர்பாக வளர்ந்து வருகிறது. அதோடு, முஸ்தபாவின் அடிப்பகுதியில் முடியும்படி ஒரு MRT கட்ட அரசு ஆலோசித்ததாகவும், அதற்காக முஸ்தபாவிடம் ஒரு பகுதி பணம் கேட்டதாகவும், முஸ்தபா அதை மறுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி ...
நாங்களிருந்த அறை. காலைச் சிற்றுண்டிக்குச் செல்ல வெளியே வந்தோம். நிஜமாலுமே அப்பகுதி இந்திய, அதுவும் தமிழ்ச்சூழலோடு இருந்தது.
சரவணபவன், முருகன் இட்லி கடை, மதுரை மீனாக்ஷி பவன், ஆனந்த பவன் -- திரும்புமிடமெல்லாம் நம் ஊர் கடைகள். முதல் தடவை மட்டும் நம்மூரை மதிப்போமே என்ற பெரிய எண்ணத்தில் முருகனுக்குப் போனோம். தோசை .. பொங்கல் என்று போனது. இதற்குப் பின் இனி தமிழுணவைத் தவிர்க்க வேண்டுமென்று எடுத்திருந்த எங்கள் 'குறிக்கோளை' ஒரே ஒரு முறை தவற விட்டோம். மற்றபடி அதன்பின் எல்லாம் லோக்கல் சமாச்சாரங்கள்தான். அதுவும் நிறைய கடல் சமாச்சாரங்கள்.
மதியம் வரை முஸ்தபா .. இன்னும் சில கடைகள் என்று சுற்றினோம். மதியம் முஸ்தபாவில் இருந்த cafeteria-வில் ஒரு பர்கர் & லெமன் டீ குடித்தோம். சிங்கப்பூரில் என் முதல் காதல் இந்த லெமன் டீயோடு ஆரம்பித்தது.
மூன்றாவது நாளன்று slim tower mall-க்குப் பக்கத்திலிருந்த கடையில் குடித்த லெமன் டீ என் முதல் காதலை முழுவதுமாக முற்றிய காதலாக மாற்றியது. அதன் பின் அனேகமாக சிங்கையில் எங்கு போனாலும் லெமன் டீ தான் ... ஆனாலும் புத்திசாலித்தனமாக மாலைகளில் என் காதலையெல்லாம ஒதுக்கித் தள்ளி வைத்து விட்டேன்!!
அன்று மாலை ANG MO KIO - அங் மோ கியோ - என்ற நூலகத்தில் முதல் சந்திப்பு நடந்து முடிந்தது. அது முடிந்ததும் பக்கத்திலுள்ள MRT-க்கு வந்தோம். அழகான, மிக மிக சுத்தமான ரயில் நிலையங்கள், அதைவிட சுத்தமான ரயில்கள், மிக ஒழுக்கமான மக்களின் பழக்க வழக்கங்கள் ...
திரும்பி வரும்போது சில மால்களைத் தாண்டி வந்தோம். மால்களுக்கு மிக அருகே food courts -- பெரிய வளாகங்களில் சாப்பாட்டு மேசைகள், நாற்காலிகள் .. சுற்றிலும் நிறைய கடைகள் ... எங்கு வேண்டுமோ அதை வாங்கி வந்து எங்காவது உட்கார்ந்து சாப்பிடலாம். அன்று சனிக்கிழமை வேறா .. கூட்டத்திற்கு குறைச்சலில்லை. மது எங்கு வேண்டுமானலும் அருந்தலாம். ஒவ்வொரு மேசை மீதும் வரிசையாக காலி பீர் பாட்டில்கள் அணிவகுத்து நின்றன.
இரவு மீண்டும் ஊர் சுற்றல். இரவு 1 மணிக்கு ஒரு வட இந்திய உணவகம். நண்பர் சசி ருசி பார்த்த இடம். அதனால் நல்ல சாப்பாடு. அதோடு புதியதாகப் பார்த்த guiness beer ... ரொம்ப density-ஆன பீர். density-யோடு சேர்த்து சுவையும் நலமே ..
இரண்டாம் நாள் மாலையிலிருந்து நண்பர் சசியின் வீட்டில் தங்கினோம். அன்பான உறவுகள். அதிலும் சசியின் மகனுக்கு கவின் என்ற அழகான பெயரை வைத்திருக்கிறார்.

ஆனால் அவனுக்கோ இன்னொரு பெயரில் ஒரு ஈர்ப்பு!
முதல் நாள் அவனோடு இருந்துவிட்டு நான் வெளியே போனபின் தன் அப்பாவிடம், 'எனக்கு ஏன் கவின் அப்டின்னு பெயர் வச்சீங்க; தருமின்ற பெயர் எவ்வளவு நல்லா இருக்கு' என்றானாம்.
மதுரக்கார பயல் இல்லையா? அதிலிருந்து நான் அவனை 'குட்டி தருமி' என்றே அழைத்து வருகிறேன்.
சிங்கை ம்க்களோடு தங்கியிருந்தது நேரடி அனுபவங்கள் பெற துணையாக இருந்தது. அந்த அனுபவங்களால் இரண்டாவது காதல் -- சிங்கையின் மீது -- ஆரம்பித்தது.
என் இரண்டாவது காதல் பற்றி அடுத்த பதிவு ..........
முஸ்தபாவிலிருந்து கூப்பிடு தூரம் ...எங்கள் அறை |

Singapore Flier |
மதியம் வரை முஸ்தபா .. இன்னும் சில கடைகள் என்று சுற்றினோம். மதியம் முஸ்தபாவில் இருந்த cafeteria-வில் ஒரு பர்கர் & லெமன் டீ குடித்தோம். சிங்கப்பூரில் என் முதல் காதல் இந்த லெமன் டீயோடு ஆரம்பித்தது.
![]() |
சிங்கையில் முதல் காதல் |
மூன்றாவது நாளன்று slim tower mall-க்குப் பக்கத்திலிருந்த கடையில் குடித்த லெமன் டீ என் முதல் காதலை முழுவதுமாக முற்றிய காதலாக மாற்றியது. அதன் பின் அனேகமாக சிங்கையில் எங்கு போனாலும் லெமன் டீ தான் ... ஆனாலும் புத்திசாலித்தனமாக மாலைகளில் என் காதலையெல்லாம ஒதுக்கித் தள்ளி வைத்து விட்டேன்!!
அன்று மாலை ANG MO KIO - அங் மோ கியோ - என்ற நூலகத்தில் முதல் சந்திப்பு நடந்து முடிந்தது. அது முடிந்ததும் பக்கத்திலுள்ள MRT-க்கு வந்தோம். அழகான, மிக மிக சுத்தமான ரயில் நிலையங்கள், அதைவிட சுத்தமான ரயில்கள், மிக ஒழுக்கமான மக்களின் பழக்க வழக்கங்கள் ...
Sign Board inside the train. It just tells where you are and where do we go ... |
திரும்பி வரும்போது சில மால்களைத் தாண்டி வந்தோம். மால்களுக்கு மிக அருகே food courts -- பெரிய வளாகங்களில் சாப்பாட்டு மேசைகள், நாற்காலிகள் .. சுற்றிலும் நிறைய கடைகள் ... எங்கு வேண்டுமோ அதை வாங்கி வந்து எங்காவது உட்கார்ந்து சாப்பிடலாம். அன்று சனிக்கிழமை வேறா .. கூட்டத்திற்கு குறைச்சலில்லை. மது எங்கு வேண்டுமானலும் அருந்தலாம். ஒவ்வொரு மேசை மீதும் வரிசையாக காலி பீர் பாட்டில்கள் அணிவகுத்து நின்றன.
இரவு மீண்டும் ஊர் சுற்றல். இரவு 1 மணிக்கு ஒரு வட இந்திய உணவகம். நண்பர் சசி ருசி பார்த்த இடம். அதனால் நல்ல சாப்பாடு. அதோடு புதியதாகப் பார்த்த guiness beer ... ரொம்ப density-ஆன பீர். density-யோடு சேர்த்து சுவையும் நலமே ..
இரண்டாம் நாள் மாலையிலிருந்து நண்பர் சசியின் வீட்டில் தங்கினோம். அன்பான உறவுகள். அதிலும் சசியின் மகனுக்கு கவின் என்ற அழகான பெயரை வைத்திருக்கிறார்.

ஆனால் அவனுக்கோ இன்னொரு பெயரில் ஒரு ஈர்ப்பு!
முதல் நாள் அவனோடு இருந்துவிட்டு நான் வெளியே போனபின் தன் அப்பாவிடம், 'எனக்கு ஏன் கவின் அப்டின்னு பெயர் வச்சீங்க; தருமின்ற பெயர் எவ்வளவு நல்லா இருக்கு' என்றானாம்.
மதுரக்கார பயல் இல்லையா? அதிலிருந்து நான் அவனை 'குட்டி தருமி' என்றே அழைத்து வருகிறேன்.
சிங்கை ம்க்களோடு தங்கியிருந்தது நேரடி அனுபவங்கள் பெற துணையாக இருந்தது. அந்த அனுபவங்களால் இரண்டாவது காதல் -- சிங்கையின் மீது -- ஆரம்பித்தது.
என் இரண்டாவது காதல் பற்றி அடுத்த பதிவு ..........
வகை:
சிங்கப்பூர்
Friday, August 06, 2010
423. சிங்கப்பூர் -- MEETING POINT
![]() | |||
MEETING POINT |
விமானம், ஆகாயவிலை விமானம் என்றெல்லாம் வேறுபாடு இருக்கும்னு யாருக்குங்க தெரியும். 21-ம் தேதி இரவு .. கொஞ்சம் பசிதான். சரி விமானத்தில குடுப்பாங்கன்னு நினச்சிக்கிட்டு நானும் பிரபாவும் விமானத்தில ஏறி உக்காந்ததும் முன்னால் இருக்கிற புத்தகங்களில் ஒன்றை
எடுத்துப் புரட்டினேன். விலைவாசி எல்லாம் போட்டிருந்தது. நினச்ச மாதிரியே ஆர்டர் எடுத்தாங்க. தலைவிதியேன்னு சிக்கன் வாங்கினோம். தண்ணீர் 5 வெள்ளி, மற்றபடி டப்பாவில உள்ளது 8 வெள்ளின்னா எதை வாங்குவது புத்திசாலித்தனம் -- அதையே வாங்கினோம்.
.விமானத்துக்குள்ளேயும் நல்ல சத்தம். அரைத்தூக்கம்.
சிங்கப்பூர் வந்தாச்சு. வெளியே வந்ததும் ஆளுகளையே காணோம். பொழுது நல்லா விடிஞ்சிருந்தது. ஏற்கெனவே நான் பார்த்திருந்த சிங்கைப் பதிவர் கோவீஸ் மட்டும்தான். வெளிப்பக்கம் வந்து நின்றோம். திடீர்னு சில சிங்கைப் பதிவர்கள் உள்ளிருந்து வந்தார்கள். எங்களுக்காக அவர்கள் காத்திருக்க நாங்கள் அவர்களைக் கடந்து வெளியே வந்திருந்தோம் போலும்.
நாங்கள் வந்திருந்தது 'மலிவு விமானக் கூடமாம்'. அதுவே நல்லா இருந்தது. நாங்கள் இறங்கிய ஓரிரு மணி நேரத்தில் டாக்டர் தேவன்மாயம் அடுத்த விமான நிலையத்தில் வந்திறங்குவார். ஆகவே படையோடு அந்த விமான நிலையம் போனோம். அதென்ன ... ஜோசப் காரில் நாங்கள் அங்கே போகும்போது ஓரிடத்தில் ஜோசப் பாதை மாறினார். அதுக்காக ரொம்ப சுத்தி வந்து சரியான வழிக்கு வந்தார். ஹூம் .. ம்.. எங்க ஊர்லன்னா அந்த இடத்திலேயே எதிர்வழியானாலும் பரவாயில்லைன்னு திரும்பி வந்திர மாட்டோம்!
அடுத்த விமான நிலையத்துக்குப் போகும்போதே சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. மொத்தம் மூன்று விமான நிலையமாம். ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதாம். ஆளில்லா 'கார்' ஒன்று இவைகளுக்கு நடுவில் ஓடிக்கொண்டிருக்குமாம். வேண்டுமானால் ஓசிப் பயணம்.
இன்னொன்றும் நண்பர்கள் சொன்னார்கள். இந்த விமான நிலையங்களுக்கு அடியில் ஒரு நிலத்தடி பாதுகாப்பு கட்டிடங்கள் உள்ளனவாம். 'மோசமான காலங்களுக்காக' பொது மக்களுக்காகக் கட்டப்பட்ட இடமாம் அது.
'பவ்யமான' மனுஷங்க ரெண்டு பேர் !! |
எனக்கு இன்னொன்று ஆச்சரியமளித்தது. விமான நிலையத்தைத் தாண்டியதுமே பார்த்தேன். சாலைக்கு இரு புறமும் செழித்து வளர்ந்திருக்கும் பச்சைத் தாவரங்கள். நோக்கிய இடமெல்லாம் பச்சை .. பசுமை .. வளமை. இந்த ஆச்சரியம் சிங்கையில் இருந்தவரை தொடர்ந்தது. எங்கு பார்த்தாலும் நல்ல செடிகளும், மரங்களும். அட .. கடற்கரைக்குப் போனோமே ..( இங்கே போய் பாருங்கள். பச்சைன்னு அப்படி ஒரு பச்சை!) அங்கேயும் எங்கும் புல்லும் பெரிய மரங்களும். அப்டின்னா .. மெரினாவில் சிலைகள் முளைத்தன. ஆனால் அதைத்தவிர புற்களும், மரங்களும் ஏன் முளைக்கவில்லை?
(கடற்கரைன்னாலே ஒரே 'தேரிக்காடு' .. வெறும் பனை மரங்களும், காய்ந்த மணல் வெளியுமாகத்தான் நம்ம நாட்டுல பார்த்திருக்கேன். இங்கே மட்டும் கடற்கரையான இடத்தில் எப்படி இவ்வளவு வளமையான பசுமை .. ?)
'மணற்கேணி' வெளியீடு |
அடுத்த விமான நிலையம். காத்திருக்க ஆரம்பித்திருந்தோம். காலைச் சிற்றுண்டி சாப்பிடலாமே என்றார்கள். என்னடா ... இந்தச் சிங்கைக்காரர்கள் சரியான சாப்பாடு ராமன்களோ .. இந்த நேரத்தில் சாப்பிடணும்னு சொல்றாங்களேன்னு நினச்சேன். ஏன்னா எனக்கு அப்போ ஒரு காலைக் காப்பி குடிக்கணும்போல்தான் இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது; நான் இன்னும் இந்திய நேரத்தில் இருக்கிறேன். அவர்கள் சிங்கை நேரத்தில் - காலை உணவு நேரத்தில் - இருக்கிறார்கள் என்பது. அவர்கள் சாப்பிட்டார்கள். நானும் பிரபாவும் குடித்தோம்.
டாக்டர் தம்பதிகள் வந்து இணைந்தார்கள்.
கோவீஸ் |
'வாத்தியார்' |
ஏறத்தாழ நாங்கள் இறங்கி இரண்டரை மணி நேரம் ஆகியிருந்தது. அதற்குள் எல்லாவித inhibitions-ம் போய் நல்ல கலகலப்பாகியிருந்தது.
பதிவர்கள் நெருங்கி தோழமையோடு, உரிமையோடு ஒட்டி விட்டார்கள். அதென்ன மாயமோ .. இந்தப் பதிவர்கள் என்றாலே எப்போதும் இப்படித்தான்
இவ்வளவு காலையில் அத்தனை பதிவர்கள் 'களமிறங்கி' விட்டார்கள். அறிமுகங்கள், அரட்டை, காலிழுப்பு (leg pulling!!) -- வகை வகையாய் நடந்தேறின. குசும்புகளுக்கும் குறைவில்லை.
வெடிவால் |
செம வால் |
சின்னக் கண்ணன் சிரிக்கிறான் |
பி.கு:
நீல நிறத்தில இருந்தா அதெல்லாம் சிங்கைப் பதிவர்களுக்கான ஹோம் வொர்க். அதிலுள்ள கேள்விகளுக்கு நல்ல பிள்ளைகளாய் பதில் சொல்லுங்கள். முந்திய பதிவிலும் சில கேள்விகள் .. இன்னும் பதிலில்லாமல் தனியாய் பாவம்போல் நிற்கின்றன.
வகை:
சிங்கப்பூர்
Subscribe to:
Posts (Atom)