*
தன் குழந்தைகளை மையமாக வைத்து “பூந்தளிர்” என்றொரு பதிவு நடத்தும் பதிவர் சிறு குழந்தைகளிடமிருந்து கதையும், சித்திரமும் கேட்டு ஒரு பதிவு இட்டிருந்தார்கள்.
பேத்தியை இதில் இழுத்து விட வேண்டுமென்று நினைத்தேன். தற்செயலாக சென்னையிலுள்ள பேத்தி விடுமுறைக்கு மதுரை வந்தாள். வந்த முதல் நாளே விஷயத்தைச் சொன்னேன். ’பெரிய மனசு’ வைத்து ஒரு படம் தருவதாகக் கூறினாள். ஆனாலும் வந்து நாலைந்து மணி நேரம் எங்கள் வீட்டிலிருந்து விட்டு அடுத்த தாத்தா - பாட்டி வீட்டுக்குப் போய் இரு நாட்கள் கழித்து திரும்பி வந்தாள்.அந்த வீட்டுக்குப் போனதும் - என்னமோ ஒரு மூட் அவளுக்கு ! - கையில் கிடைத்த ஸ்கெட்ச் பேனாக்களை வைத்து ஒரு படம் வரைந்து கொண்டு வந்திருந்தாள்.படத்திற்கேற்ற ஒரு கவிதையும் எழுதியிருந்தாள்.
அடுத்த நாள் கடைக்குப் போனோம். ஒரு செட் க்ரேயான்ஸ் வாங்கினாள். அதே படத்தை மீண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள் & க்ரேயான்ஸ் வைத்து மறுபடி வரைந்தாள். சில மாற்றங்கள் சொன்னேன் - பெயர் நடுவில் வயதோடு எழுதியிருந்தாள். தலைப்பையும் எழுதியிருந்தாள். இந்த இரண்டையும் தனியாக எழுதிக்கொள்ளலாம் என்று கூறினேன். அதே போல் வரைந்து இரண்டாவது படம் ரெடி. இதில் வானவில் முழுமையாக, சரியாக வராமல் போயிற்றே என்று எனக்கு சிறிது வருத்தம்.
படத்தையும், கவிதையையும் பூந்தளிருக்கு அனுப்பியாகி விட்டது. அவர்களிடமிருந்து கவிஞர் & ஓவியரைப் பற்றிய ஒரு குறிப்பு கேட்டார்கள். சென்னை சென்று விட்ட பேத்தியிடம் பேசினேன். இரு நாட்கள் கழித்து மறுபடி கேட்டேன். I am working on that ... என்று பதில் வந்தது! இன்னும் குறிப்பு வந்து சேரவில்லை. வந்ததும் பூந்தளிருக்கு அனுப்ப வேண்டும்.
கவிதை:
A TRIP
TO THE BEACH
My trip to the beach
Enjoy it by eating a
ripe peach
That day was very
long,
Eat your peach by
singing a song.
That day was as
precios as Earth
But no more than a
Baby’s birth.
So that was my trip
to the beach.
So pick up a shell,
and what do find
under the shell?
A NICE FRIENDLY SMILY
LEECH !
(Precios - ஒரு வேளை இது அமெரிக்கன் spelling- ஆக இருக்குமோ?!
SMILY - அவள் எழுதியபடி கொடுத்து விட்டேன்.)
இரண்டாம் படம் வரைந்து கொடுத்ததும் வீட்டில் sand paper இருக்கிறதா என்று கேட்டாள்; எடுத்துக் கொடுத்தேன். சில நிமிடங்களில் இன்னொரு படம் ஓ.சி.யாகக் கிடைத்தது! பழைய படத்தின் இன்னொரு நகல்.
ஊருக்குப் போகும் முன் இன்னொரு படம் வரைந்து வைத்து விட்டுப் போனாள்.
*
இப்பதிவில் உள்ள படத்தையும் கவிதையையும் இணைய நூலில் போடுவதற்கு ‘ஆசிரியரைப்’ பற்றிய ஒரு குறிப்பையும் என்னிடம் கேட்டார்கள். நாமென்ன எழுதுவது .. ‘ஆசிரியரே’ எழுதட்டும் என்று நினைத்து பேத்திக்கு மெயில் அனுப்பினேன். அவளே எழுதி அனுப்புவதாகச் சொல்லி சின்னாட்களில் எழுதியனுப்பியதைக் கீழே பதிந்துள்ளேன்.
ALL ABOUT ME
I was born in Madurai – 13.12.2003. After 2 years I moved to
the US and stayed for 6 years. I stayed in New Jersey .I lived in one
house but in it lived two families. I took the lower part and the other family
took the top. My good friend Kaviya lived with the other family. Kaviya has a
little bro named Bharat. Since i was a baby in Madurai I did not fully
know how to speak so I learned the USA culture as I grew up.
In US one of the years I went to Texas to visit my cousins
Jordan and Anna. After some months while we were staying with my cousins we got
a call from Kaviya that the house we lived in was on fire. Luckily my family
was safe and so was the others. Since we had to move back we moved to a place
called Troy Hills village. I made friends like Varsha, Amy, Dianthe, Divesh,and
Krithika. I stayed there for 2 years. One day, my dad told me we had to move to
India. I was sad. I said bye to all my friends, even my BFF. And now I’ve been
staying in India for 1 year. And now I'M TEN!!!!!!!. And that’s my life. If
only all my friends could see what I wrote. Thank you for reading.
*