Wednesday, May 30, 2012

571. AN EULOGY TO A FRIENDSHIP





*


AN EULOGY APOLOGY TO A FRIENDSHIP 


பதின்ம வயதில் நானும் அவனும் நண்பர்களானோம். சமீபத்தில் அவன் சாகும் வரை அது தொடர்ந்தது.  இளம் வயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டான். உறவினரின் உதவியால் படித்தான். படிப்பில் புலி தான். அதிகம் கஷ்டப்படாமலேயே நல்ல மதிப்பெண்கள் வாங்குவான். பள்ளிப் படிப்பு முழுவதும் ஏழை மாணவர்களுக்கென பள்ளியில் தனியாக இருந்த விடுதியில் படித்தான். கல்லூரிக்கு வந்ததும் முதன் முறையாக ஒரு சுதந்திரப் பறவை என்ற அனுபவம் அவனுக்கு. அதுவே வாழ்வின் முதல் தப்பை செய்வதற்கு ஏதுவாயிற்று. அதிக சுதந்திரம் ... கல்லூரி போகாமல் வீட்டில் மாட்டிக் கொண்டான். பெரிய தப்பில்லைதான்.  ஆனால் படிப்பைத் தொடராமல் எங்கோ ஓடிவிட்டான். சில மாதங்கள் கழித்துத் திரும்பி வந்த போது நான் பேச மறுத்து விட்டேன். சந்திக்கும் இடமெல்லாம் கோவிலில் தான். அப்போதெல்லாம் தினமும் கோவிலுக்குப் போகும் வழக்கம் உண்டு. படித்த பள்ளியை ஒட்டிய கோவில் - St. Mary's Church. எனக்காகக் காத்திருப்பான். நான் கண்டு கொள்ளாமல் சென்று விடுவேன். எங்களோடு அப்போது இணைந்திருந்த இன்னொரு நண்பன் மூலம் தூது வந்தது. வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டான் என்ற கோபம் எனக்கு. ஒரு வழியாக மீண்டும் இணைந்தோம்.

நான் கல்லூரி மாணவனாக இருந்த போதே அவன் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டான். மதுரையில் அப்போதிருந்த Spencer's-ல் வேலைக்குச் சேர்ந்திருந்தான். முதலில் இருந்த மேனேஜருக்குச் செல்லப்பிள்ளை போன்று இருந்தான். அவர் கொடுத்த ஆதரவில் அவன் all in all alaguraja ஆகி விட்டான். எந்த சீட்டிலும் உட்கார்ந்து எந்த வேலையையும் பார்க்க அவனால் முடிந்தது. அந்த மேனேஜருக்குப் பின் வந்த மேனேஜர்கள் எல்லோரும் அவனிடம் கேட்டு கம்பெனியை நடத்தியது எனக்கு நன்கு தெரியும். 

இப்போது ஒரு தனிக்காட்டு ராஜா. தனியாகத் தங்கியிருந்தான்.சின்னக் கடன்கள் .. பெரிய தொல்லைகள் .. தப்பி வந்து காலை நன்கு ஊன்றினான். வாழ்க்கை நன்கு போனது. விளையாட்டுத் தனம் நிறைய. இன்னும் நினைவில் இருக்கிறது ... ’சவாலே சமாளி’ படம் ... வெறும் இடமாக மட்டுமே இன்னும் இருக்கும் தேவி தியேட்டரில் படம். முதல் நாள் படம் பார்க்கப்  போனோம். கூட்டத்தைப் பார்த்ததும் ‘வாடா .. போய்டுவோம்’ என்றேன். கொஞ்சம் பொறு என்றான். பூட்டியிருந்த கேட் பக்கம் போய் அங்கே நின்றவரிடம் ஏதோ சொன்னான். கதவு திறந்தது; நேரே போய் டிக்கட் வாங்கிட்டு  வந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றான். எப்டிடா என்றேன். C.T.O.  என்றான். அப்டின்னா என்ன என்றேன். Commercial Tax Office(r) என்றான். என் தோள் உயரத்திற்கு தான் இருப்பான். சின்ன உடம்பு. ஏண்டா உன்னைப் பார்த்த பிறகும் கூட எப்படிடா ஏமாந்து போயிர்ராங்க?  உனக்கும் எப்டிடா இந்த தைரியம்?’ என்றேன். அதெல்லாம் தானா வரணும்’பா என்றான். அப்படியே கொஞ்ச நாள் சில தடவை C.T.O.புண்ணியத்தில் டிக்கட் வாங்கினோம். எதுக்கு ரிஸ்க் என்று நான் வலியுறுத்திய பின் அதை விட்டு விட்டான்.

அடி வாங்கும் அளவிற்கு யாரோடும் சண்டை போட்டு, கடைசியில் அடிவாங்காமல் தப்பித்த நேரங்கள் பல உண்டு.  ஒரு சின்னப் பயல் comment அடிக்க நாங்கள் திட்டி அனுப்பினோம். ரீகல் தியேட்டர் முன் சூடான டீ குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் நாலு நண்பர்களாக நின்றிருந்தோம். எங்களிடம் திட்டு வாங்கிய பசங்க பத்துப் பதினைந்து பேரோடு கூட்டமாய் நின்று ‘ரெடி’யாகிக் கொண்டிருந்தார்கள். திரும்பிப் பார்த்தேன். என் நண்பர்கள் இருவரும் அப்பீட் வாங்கிட்டாங்க. நின்றது நானும் அவனும் மட்டும் தான். சரி .. இன்னைக்கு நல்ல பூசை கிடைக்கப் போகுது என்றேன். இரு பார்ப்போம் என்றான். கூட்டத்தின் தலைவர் ஆளனுப்பி கூப்பிட்டனுப்பினார். அவர் யார்னு தெரியாது; வேணும்னா அவரை வரச்சொல் என்று சொல்லியனுப்பினேன். கூட்டமாக வந்து சுற்றி நின்றார்கள். கையில் இருக்கும் டீயைக் குடிக்காமல் வைத்திரு என்று ஒரு அட்வைஸ் கொடுத்தான். எங்களின் ஒரே தற்காப்பு ஆயுதம் அது.

’கூப்பிட்டா வரமாட்டீங்களோ’ .. தல கேட்டுச்சு.
’நீங்க யாருன்னே தெரியாது. இதே மாதிரி நான் கூப்பிட்டா நீங்க வந்திருவீங்களோ’ன்னு ஒரு கேள்வி கேட்டான். தலைக்கு சுதி கொஞ்சம் குறைந்தது.
’என்ன  .. நம்ம பசங்களைப் பார்த்து செருப்பால அடிப்பேன்னு சொன்னீங்களா?’ என்றார்.
’ஆமா சொன்னேன். ஆனா அடிக்காம விட்டது தப்பு’ன்னேன். தலைக்கு இன்னும் சுதி இறங்கியது.
’என்ன இப்படி பேசுறீங்க?’
’உங்களுக்கும் எனக்கும் ஒரே வயசு இருக்கும். தெருவில  போற ஒரு சின்னப் பயலைப் பார்த்து நீங்க செருப்பைக் கழட்டி அடிப்பேன்னு காரணமில்லாம சொல்லுவீங்களா?’ என்றேன். தலையை நம்ம பக்கம் இழுத்துட்டேன்.

தல அதுக்கப்புறம் என்ன நடந்துதுன்னு கேட்டு. அந்தப் பசங்களை என் முன்னால்  நாலு தட்டு தட்டிட்டு,’தப்பா எடுத்துக்காதீங்க’ அப்டின்னு என்னைப் பத்தி விசாரித்தார். வீட்டு ஏரியா சொன்னதும் ‘அட .. நம்ம ஏரியா .. எப்ப வேணும்னாலும் என்ன தேவையின்னாலும் சொல்லுங்க’ அப்டின்னு ஒரே ப்ரண்ட்லியா ஆய்ட்டார். அந்தக் கூட்டம் அவர்கள் பாஷையில் என்னையும் அவனையும் தொட்டுத் தொட்டு வணக்கம் சொல்லிட்டு கலைந்தாய்ங்க. நிம்மதியாயிருந்தது. தூரத்தில் நின்னு வேடிக்கை பார்த்த இரு நண்பர்களும் அதன் பின் வந்து சேர்ந்தார்கள். இப்ப தெரியுதா யார் யார் நண்பர்கள் அப்டின்னேன்.

இப்படிப் பல நிகழ்வுகள். ரீகல் தியேட்டர் முன்னால் குதிரைகள் தண்ணீர் குடிக்க ஒரு நீள தண்ணீர்த் தொட்டி இருக்கும். அதற்குப் பக்கத்தில் நின்று கொஞ்சம் சில்லறைகளை வாரி இறைத்து, அதைச் சின்னப் பசங்கள் பொறுக்குவதை வேடிக்கை பார்த்த ஒரு வெள்ளைத் தோல் அயல்நாட்டுக்காரனை நாலு நல்ல கேள்வி கேட்டோம். மன்னிப்பு கேட்டபடி போனான் அவன்.  ஏறத்தாழ பின்னாளில் அதே இடத்தில் நின்று வானத்தைப் பார்த்து கையை ஆட்டி ஆட்டிப் பேசி கொஞ்ச ஆட்களையும் அதே போல் நின்று வானத்தைப் பார்க்க வைத்திருக்கிறோம். குறும்புக் கலவையாக 
நாட்கள் சென்றன

.

வேளானக்கன்னி போய் மொட்டை போட்டுக்கொண்டு என் வீட்டிற்கு வந்தான். அவனைச் சாமியாக்கி, நான்  கையில் கூஜாவோடு அவனது சிஷ்யனாக வேடம் போட்டு எடுத்துக் கொண்ட படம் ..............அவன் கையிலிருப்பது Oxford Pocket Dictionary !!
அனேகமாக எழுபதின் கடைசிகளில் எடுத்த படமாக இருக்கலாம்.


 
காலம் கடந்தது. கல்யாணம் எல்லாம் முடிந்தது. Spencer-யை விட்டு வெளியே வந்தான். ஒரு ஆயுர்வேத மருந்துக் கம்பெனியில் சேர்ந்தான். பெயர் அதிகம் தெரியாதிருந்த கம்பெனியை அடுத்த 13 ஆண்டுகளில் தென் தமிழ்நாட்டில் நிலைபெறச் செய்தான். சுய வளர்ச்சியும் நன்கிருந்தது.  என் கல்லூரி வேலையில் வந்த சம்பளத்தை விட இரு மடங்கு சம்பாதித்தான். 13 ஆண்டுகள் ஆனபோது கம்பெனியில் சில மாற்றங்கள். நியாயமாக இவனுக்கு வர வேண்டிய உயர்வு இவனுக்குக் கிடைக்கவில்லை. இவன் வேலை பார்த்த கம்பெனியின் எதிர் கம்பெனி இவனை வேலைக்கழைத்தார்கள். எவ்வளவோ சொன்னேன் .. சொன்னோம். இதுவரை 13 ஆண்டுகளாக உழைத்த ஒரு கம்பெனிக்கு எதிர்த்து இப்போது என்னால் வேலை செய்ய முடியாது என்றான். மருத்துவக் கம்பெனிகளில் இது ஒன்றும் புதிதல்ல. இருந்தும் யார் சொல்லையும் கேட்கவில்லை. இது அவன் வாழ்க்கையின் பெருந்தவறாகப் போனது,.நாற்பதுகளின் கடைசியில் எடுத்த இந்த முடிவிற்குப் பின் அவன் எந்த ஒழுங்கான வேலையுமில்லாமல் இருக்கும் படி ஆகிப் போனது. கிடைத்த சில வேலைகளும் ’ஏதோ .. ஒரு வேலை’ என்றாகிப் போனது.

சொற்ப சம்பளங்கள்.அவன் பாட்டை அவன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றானது. படித்து முடித்து வளர்ந்து வேலைக்குப் போன மூத்த மகனும் விபத்தில் காலமானான். இயந்திர வாழ்க்கையாகிப் போனது. எனது ஓய்விற்குப் பின் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியாது போயிற்று.

அவனும் நானும் கடைசிக் காலத்தில் கையாகாமல் போனால் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டுமென நினைத்திருந்தோம். Euthanasia நல்ல வழியாகப்பட்டது.  செத்த பிறகு எரிக்கப்பட வேண்டுமென நினைத்தோம். (இன்னோரு நண்பன் சொன்னான்: ’செத்த பிறகு உங்களை என்ன செய்தால் உங்களுக்கென்ன? ஏதும் தெரியவா போகுது. பேசாம போவீங்களா’ என்றான். அதுவும் சரிதான்!) Euthanasia செய்து கொள்ள அடுத்தவன் உதவி தேவையாக இருக்கும் என நினைத்திருந்தோம்.

எப்படியோ அவன் மனம் முற்றிலும் மாறியிருந்தது. அது உண்மைதானென்றாலும், தான் குடும்பத்திற்குப் பாரம் என்று தொடர்ந்து நினைக்க ஆரம்பித்து விட்டான். உடல் மனம் எல்லாம் சோர்ந்து போச்சு.

முடிச்சிக்கிட்டான்.

நான் இன்னும் அருகில் இருந்திருக்க வேண்டும் ....



*





*

Thursday, May 24, 2012

570. THE MYSTERY CONTINUES ...

*

தெக்கத்திக்காரங்கன்னா தெக்கத்திக்காரங்க, தான் !!!

+2 தேர்வுகளின் முடிவுகளில் டாப் 10 இடத்தில் முதல் ஐந்து இடங்களில் நான்கிடம் தெக்கத்தி மாவட்டங்களுக்குத் தான். அதில் எங்களுக்குப் பெருமை. ஆனால் அதிசயத்தக்கமானதாக எனக்கு அன்றும் இன்றும் இருப்பது முதலிடத்தை பல ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து வைத்திருப்பதுதான். இந்த ஆச்சரியத்தின் காரணமாக 2006-ம் ஆண்டே ஒரு பதிவிட்டிருந்தேன். மீள் பதிவாக அதே ஆச்சரியத்தோடும்,  அப்போதிருந்த கேள்விகளோடும் எழுதப்பட்ட பழைய பதிவை மீள்பதிவிடுகிறேன்.

பதிலிருப்போர் பதில் தரலாமே ...

இந்த ஆண்டின் தேர்வு முடிவுகள்

+2 PASS PERCENTAGE

THE TOP 10 DISTRICTS

விருதுநகர்            94.68
தூத்துக்குடி            94.62
ஈரோடு                    93.35
மதுரை                    93.32
திருநெல்வேலி   93.11
கோவை                 91.46
நாமக்கல்               90.97
திருப்பூர்                 90.8
கரூர்                        90.8
சிவகங்கை           90.58
சென்னை              90.4

..............................................................................................................................................

மீள் பதிவு


THE HINDU தேதி: 23.11.'06 



நடந்து முடிந்த +2 தேர்வுகளின் மாவட்ட வாரியாக தேறியவர்களின் விழுக்காடுகள்.

சில ஆச்சரியங்கள்.. சில ஐயங்கள் .. சில கேள்விகள்... 

*

சென்னைக்கு ஐந்தாவது இடம்தான் - 84.6%
மற்ற மாவட்டக்காரர்கள் மத்தியில் பொதுவாக மாநிலத்தின் தலைநகர் என்பதால் சென்னையின் மாணவர்கள் முதல் இடம் வருமளவிற்கு இருப்பார்கள் என்ற நினைப்பு பரவலாக உண்டு. ஆனால் முடிவுகள் அப்படி இல்லையே. ஏன்? (சொல்லுங்க - யார் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது?)

* கன்யாகுமரி மாவட்டம் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாவட்டம் என்ற பெயருடையது. பின் ஏன் இவ்வளவு குறைந்த விழுக்காடு? - 65.23% (சொல்லுங்க ஜோ!)

* நாமக்கல், தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பள்ளிகள் நல்ல மதிப்பெண்கள் பெருவதற்காகவே மாணவர்களைத் தயார் படுத்துவதாகக் கேள்விப்பட்டதுண்டு. அந்தப் பள்ளிகள் மட்டுமே அது போல இருக்கும்போலும். 79.1%; 78.9% (அப்படித்தானே நாமக்கல் சிபி?)

* விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது - 87.8%; அடுத்து, திருநெல்வேலி இரண்டாவது - 86.7% - ஆச்சரியப்படுவதற்கில்லை (!) அந்த மாவட்டத்தில பிறந்தவங்கன்னாலே புத்திசாலிகள்தான். இல்லையா, சிவா?

மூன்றாவது இடம் தூத்துக்குடிக்கு -86.6%. இதுவும் எதிர்பார்க்கக்கூடியதுதான், இல்லையா ஜி.ரா.?

இந்த 3 மாவட்டங்களுமே பொருளாதாரத்தில் கொஞ்சம் பின்தங்கிய மாவட்டங்கள்தான். அதிலும் முதலாக வந்துள்ள விருதுநகர் மாவட்டம் வரண்ட பகுதியாகவும், குழந்தை உழைப்பாளிகள் நிறைந்த ஒரு பகுதியாகவே இதுவரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் கல்வியில் உச்சத்தில்.. வாழ்த்துக்கள். (யாருங்க அந்த ஊர்க்காரங்க..வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு போங்க)

* இன்னும் சிலவும் உண்டு. இப்போதைக்கு இது போதும்... *

Tuesday, May 08, 2012

569. அர்த்தமில்லாத மதச் சட்டங்கள்




*


இக்கட்டுரை இந்துவில் மே 7-ம் தேதி வந்துள்ள INDIA’S GOD LAWS FAIL THE TEST OF REASON என்ற கட்டுரையின் மொழியாக்கம்.  

இக்கட்டுரைக்கும், என் பதிவொன்று தமிழ்மணத்தால் நிறுத்தப்பட்டதற்கும் நிச்சயமாக எவ்விதத் தொடர்புமில்லை.



*

சென்ற மார்ச் மாதத் துவக்கத்தில் பம்பாயில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவிலில் உள்ள சிலுவையின் அடிப்பாகத்திலிருந்து நீர் சொட்டு சொட்டாக விழுந்தது. நம்பிக்கையோடு பலரும் வந்து அந்த நீரைக் குப்பிகளில் எடுத்துக் கொண்டு போனார்கள். இது சிலுவையிலுள்ள ஏசுவின் கண்ணீர் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. இது தங்கள் தொல்லைகளை நீக்கும்; வியாதிகளைக் குணமாக்கும் என்ற ஆவல் அவர்களுக்கு.  

இந்நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் இந்தக் கோவிலுக்கு அகில உலக பகுத்தறிவுவாதிகளின் சங்கத்தின் தலைவர் சானல் இடமருக்கு சென்று வழிவது ஏசுவின் கண்ணீரல்ல; கட்டிக்கிடந்த சாக்கடை நீரே capillary action மூலம் கசிந்து வந்தது என்று கண்டுபிடித்துள்ளார்.

Sanal Edamaruku, President Rationalist International
இந்தக் ‘கண்டுபிடிப்பிற்காக’ அவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இதோடு அவர் கோர்ட், கேஸ் என்று சில ஆண்டுகளாவது அங்குமிங்கும் அலைய வேண்டியதிருக்கும். மத வெறுப்பை வளர்ப்பதற்காக அவர் மீது மூன்று காவல் நிலையங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆனால சானல் இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டார். ஏற்கெனவே சத்திய சாயி பாபா போன்றோரின் ஏமாற்றுகளைத் தோலுரித்தவர் இவர்.
இந்தியக் குடியுரிமையில் மக்கள் ‘அறிவியல் மனப்பான்மையோடும், மனித நேயத்தோடும், கேள்வி மனப்பான்மையோடும், புதியன கண்டுகொள்ளும் ஆவலுடனும்’ இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறது. ஆனால் நடைமுறையில் இந்த சாத்தியங்களுக்காகப் போராடுபவரை இந்தியச் சட்டங்கள் தண்டிக்க முற்படுகின்றன.

இந்திய அரசியலமைப்பின் 295 சட்டம் மதக் கோட்பாடுகளைக் காத்து நிற்கின்றது அதன் தொடர்பான 295A மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்கின்றது. 153B மத, மொழி, இன, சாதீய உணர்வுகளை மீறுவோருக்கான தண்டனையைக் கூறுகிறது. ஆனால், இச்சட்டம் உண்மைகளுக்கு மட்டும் இடங்கொடுக்க மறுக்கிறது. சட்டத்தின் துவக்க நாளிலிருந்து இன்று வரை இந்தச் சட்டங்கள் மதக் கோட்பாடுகளின் மீது கேள்வியெழுப்பும் பல அறிஞர்களை, கலைஞர்களைத் தண்டிக்கத்தான் அதிகம் பயன்பட்டது.

1993-ல் தில்லியில் ’சஹ்மாத்’ – Sahmat – என்ற அமைப்பு பலவித ராமாயணங்களைப் பற்றிய ஒரு கண்காட்சி அமைத்தது. ரொமிலா தாப்பர் போன்ற அறிஞர்களை இவைகள் கவர்ந்தாலும், இந்த அமைப்பின் மீது பல வழக்குகள் பதியப்பட்டன. பஞ்சாபில் இத்தகைய வழக்குகள் மிக அதிகம். சமயத் தொடர்பான, அகாலித் தளத்தின் மீது கேள்வியெழுப்பும் தலித்தியம் முன்னெடுக்கும் புதிய கருத்துகள் மீது வழக்குகள் குவிந்து விடும்.

சீக்கியர், இந்துக்களுக்கு சலித்தவர்கள் நாங்கள் அல்ல என்று காட்டுவது போல் இஸ்லாமியரும் இதே அளவு ‘உற்சாகத்தைக்’ கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ’சாத்தானின் வேதம்’ என்ற நூலை வாசித்ததிற்காக பெயர் பெற்ற நான்கு எழுத்தாள்ர்கள்  மீது சட்டம் பாய்ந்தது. இஸ்லாமியரின் தீவிர அடிப்படைவாதிகளைப் பற்றிய அச்சம் எங்கும் உண்டு. 1995-ல் எழுத்தாளர் காலித் ஆல்வி 1933-ல் கடவுளுக்கு எதிரான கவிதை என்று தடை செய்யப்பட்ட, ஆனால் புதிய பாதையைக் காண்பிக்கும் சில உருது கவிதைத் தொகுப்பொன்றை Angaarey என்ற தலைப்பில் வெளிக்கொண்டு வந்தார். அவைகளில் உள்ள பல வரிகள் நீக்கப்பட்டன. 2006-ல் இந்தியா டுடே என்ற இதழில் காபாவின் படம் ஒன்று வெளிவந்தமைக்காக ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட போது மற்ற ஊடகங்கள் அதைக் கண்டு கொள்ளவேயில்லை.

இறை நம்பிக்கைகள் கூட சில சமயங்களில் நம்பிக்கையுள்ளவரையும் தண்டனையோடு தீண்டி விடுகின்றன. சென்ற ஆண்டு ஜெயமாலா என்ற பழைய நடிகை, உன்னி கிருஷ்ணா என்ற ஜோதிடர், அவரது துணையாளர் ரகுபதி ஆகியோர் அந்த நடிகை ஐயப்பனைத் தீண்டி விட்டதற்காக கேரளா நீதிமன்றங்களுக்கு இழுத்தடிக்கப்பட்டார்கள். பொதுவாகவே நீதியரசர்கள் பக்தி முயற்சிகளைக் கண்டிக்க வேண்டியதிருந்தாலும் வீண் வம்பென்று நினைத்தோ அச்சத்தாலோ ஒதுங்கி விடுகிறார்கள். 1958-ல் ஈ.வே.ரா. பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைக்க முயற்சித்த போது நீதிமன்றங்கள் திணறின. கீழ் நீதிமன்றங்கள் பிள்ளையார் சிலை புனிதப் பொருளல்ல என்று தீர்ப்பளித்தது. ஆனால் உச்ச நீதி மன்றம் ’உண்மையோ பொய்யோ, சமய நம்பிக்கைகளை, உணர்வுகளை மதிப்பளிக்க வேண்டும்’ என்று கூறின.

சமயங்களுக்கான இழிவு:

 1957-ல் உச்ச நீதிமன்றம் 295A சட்டத்திற்கு சில வரையறைகள் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் ‘எந்த ஒரு இழிவையும் தண்டிப்பதில்லை; ஆனால் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் இழிவை ஏற்படுத்தினால் தண்டனைக்கு வழியாகும்’ என்றது. ஆனால் உண்மையில் மதங்களை இழிவு படுத்துவது என்ன என்பது வரையறைக்கப்படவில்லை. 1998-ல் பி.வி. நாராயணாவின் ‘தர்மகாரனா’ என்ற பரிசு பெற்ற, இந்து சமயப் புனிதர் பஸ்வேஷ்வரா என்பவரின் வரலாற்று நூலை கர்நாடக அரசு தடை செய்ததை உச்ச நீதி மன்றம் அனுமதித்தது. அதேபோல் 2007-ல் மும்பை உயர் நீதிமன்றம் ‘இஸ்லாம்’ என்ற தலைப்பில் ஆர்.ஐ.. பாஸின் என்பவர் இஸ்லாமிய நம்பிக்கைகளைத் தாக்கி எழுதிய நூலை மகாராஷ்ட்ர அரசு தடை செய்ததை அனுமதித்தது. இவ்வாறு தடை செய்யப்படும் பல நூல்களில் சில பொறுப்பற்றதாக, தூண்டி விடுவதாக இருக்கலாம், ஆனால் பல தரமான நூல்களும் அரசுகளால் தடை செய்யப்பட்டு விடுகின்றன.

எதிர்வரும் ஆபத்து:

 1924-ல் ஆர்ய சமாஜ் சார்ந்த மஹாஷே ராஜ்பால் ’வண்ண மயமான தூதுவர்’ – Rangila Rasul – என்ற தலைப்பில் இஸ்லாமிய நம்பிக்கைகளை எதிர்த்து எழுதிய நூலில் இருந்தே இந்த போராட்டம் தொடங்கியது. கீழ் வழக்கு மன்றங்கள் அவருக்கு சிறை என்று தீர்ப்பளித்தன. ஆனால் லாகூர் உயர் நீதி மன்றத்தின் நீதியரசர் டலிப் சிங் ‘தீர்ப்பளிக்க மக்களின் எதிர்ப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் தூதுவரின் வரலாற்றைப் பற்றியெழுதும் ஒரு சிறந்த வரலாற்றாசிரியனின் நூலும் அந்த வரையறைக்குள் வந்துவிடும்’ என்றார்.
1927-ல் சுதந்திரத்திற்கு முன்பு இந்திய மேல்சபையில் இந்த தீர்ப்பு பலரால் ஒத்துக் கொள்ளப்பட்டது. எம்.ஆர். ஜெயகர் சமய அடிப்படைவாதம் ஒரு மன நோய் என்றார். அந்த நோய்வாய்பட்டவர்களை மற்ற சாதாரண மக்களிடமிருந்து ஒதுக்கி வைக்க வேண்டுமென்றார். ஆனால் இந்த அறிவுசார்ந்த சிறந்த முடிவு பொதுவான ஒரு முடிவாக இல்லை; அதற்குப் பதில் ரங்கிலா ரசூல் போன்ற நூல்கள் தண்டிக்கப்படக் கூடியவையே என்று முடிவானது. (இன்னும் ‘இந்தக் கதை’ தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது!)

சமயச் சட்டங்கள் அதற்கேற்றாற்போல் திருத்தப்பட்டன. ஆனாலும் பாகிஸ்தானில் இருப்பது போன்று யாரையும் கொல்லும் அளவிற்கு இந்தியச் சட்டங்கள் செல்லவில்லை என்பதற்கு நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இடமருக்கு மேல் உள்ள வழக்குகள் நாம் இந்தப் பிரச்சனையில் எங்கிருக்கிறோம் என்பதை நமக்குத் தெளிவாக விளக்கி விடும். பக்கத்து நாட்டு பயங்கரம் நம் நாட்டில் இல்லாமல் போக வேண்டுமானால் மக்கள் தாங்கள் விரும்பும் கொள்கைகள் மீதான கடுமையான சாடல்களையோ, இழிவுகளையோ பொறுத்துக் கொள்வதே சரியாக இருக்கும்.

தூதுவர்கள் நடத்திய அற்புத செயல்கள் பக்தியினால் எழுந்த வெறும் ஏமாற்று வித்தைகள்தான். அவைகள் வெறும் பக்திகரமான கதையாடல்களே. எல்லா சமயங்கள் போதிக்கும் பாடங்கள் எல்லாமே தவறு; உண்மையல்ல. இதற்கான ஒரே சான்று: ஒவ்வொரு மதமும் தங்களுக்குள் வேறுபட்டு நிற்கின்றன. பாரம்பரியமும் சோம்பேறித்தனமும் தான் மனிதர்கள் மதங்களை நம்புவதற்கான ஒரே காரணம். சமயங்களின் வேறுபாடுகளே மனிதர்களுக்குள் பல போர்களை ஏற்படுத்தியுள்ளன. மேலும் மதங்கள் தத்துவ எதிர்பார்ப்புகளுக்கும், அறிவியல் தேடலுக்கும் எதிரானவை. வேத நூல்களாக்க் கருதப்படுபவைகள் எல்லாமே எந்த வித பயனுமில்லாத வெறும் புத்தகங்களே.’ மேற்கண்டவற்றை மருத்துவ அறிஞரான அபு பக்கர் முகமது இப்ன் ஸக்கரியா-ராஸி என்பவர் 864-ம் ஆண்டு கூறியுள்ளார். இவர் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் காலிப் அபு அல்-காசிம் அப்ட்’அல்லாவினால் நடத்தப்பட்ட மருத்துவ மனையில் உயர் பதவியிலிருந்து, பெரும் பணி புரிந்து, தன் மாணவர்களின் மத்தியில் நன் மரணம் அடைந்தார். நல்ல வேளை ... ஒரு வேளை இன்றைய இந்தியாவில் அவர் இருந்திருந்தால் அவரது கருத்துக்களினால் அவரது இறுதிக்காலம் அந்த அளவு அமைதியாக இல்லாமல் போயிருந்திருக்கும்.

Sunday, May 06, 2012

568. இஸ்லாமிய குரான்? ஏன் இன்னும் இச்செய்தி பரவவில்லை? ... 2

* பகுதி ... 1


* பகுதி ...2



*

இஸ்லாமியர்கள் இஸ்லாமைப்பற்றிய எந்தக் கேள்விகளையும் எழுப்பவே மாட்டார்கள். ஆனால் தற்போது இஸ்லாமிலிருந்து விலகிய பழைய நம்பிக்கையாளர்கள் சிலர் இஸ்லாமியச் சிறையிலிருந்து சில இஸ்லாமியர்களை வெளிக்கொணரும் முயற்சியில் உள்ளார்கள். சானா குரானைப் பற்றிய விவரங்கள் முழுவதும் வெளியே வந்தால் அந்தப் பழைய நிலை நீடிக்காது. குரானின் புனிதத்தன்மை விலக, புது மாற்றங்கள் ஏற்படும். அவர்களின் மனதில் எழும் முதல் கேள்வி – எந்தக் குரான் மிகவும் சிறந்தது. ஆனால் அப்போது ஒன்றைத் தேர்ந்தெடுத்து மற்றவைகளைப் புறக்கணிக்க முடியாது. ஏனெனில் எந்த ஒரு குரான் வசனத்தையும் நம்பாதவன் மொத்த குரானையும் நம்பாதவனாகி விடுவான்.

குரான் மனித குலத்தின் இறைவனின் இறுதி வெளிப்பாடு. ஆகவே அது மனித குலத்தின் நன்மைக்கானதாகவே இருக்க வேண்டும். ஆனால் உண்மை அதுவல்ல. முஸ்லீம் நாடுகளே உலகின் ஏழை நாடுகளாக உள்ளன (Ohmyrus 2006). .எதிர்ப்பாளர்களின் பேச்சில் உள்ள அறிவியல், உண்மைத்தனம், தத்துவங்கள் இவைகளை மதக் குருமார்கள் வெறும் முரட்டு பத்வாவினால் முறியடிக்காமல் விளக்கங்கள் மூலமாக முறியடிக்க வேண்டுமென இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பார்கள். சானா குரான் வெளிச்சத்திற்கு வந்தால் எப்படி இத்தனை ஆண்டுகள் குரானே இறுதி என்ற பொய் எப்படி நிலைத்து நின்றது என்பது அதன் அடுத்த கேள்வியாக இருக்கும். இந்தப் பொய் ‘சாதாரண’ பொய் அல்ல; மிகப் ‘பெரிய’ பொய். இத்தகைய பெரிய பொய்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவைகள் கேட்போரை மயக்கியே வைக்கும். ஹிடலர் தன் நூல் Mein Kamph-ல் ’நாட்டின் மொத்த மக்கள் அனைவரும் சின்ன பொய் ஒன்றிற்கு அல்லாமல், ஒரு பெரிய பொய்யினிற்கு அடிமையாவார்கள்’ என்றார். சினா என்பவரும் பெரிய பொய்கள் கேட்போரை அதிர வைத்து நம்ப வைக்கின்றது என்கிறார். அரசியலில் இந்தப் பெரிய பொய்களின் ஆளுமை மிக அதிகம். George Orwell ‘அரசியல் மொழியில் பொய்கள் மிகவும் உண்மை போலவும், கொலைகள் மிகவும் மதிப்புள்ளது போலவும், காற்றிற்கும் கடுமை உண்டு எனவும் எளிதாகத் திரித்து விடலாம்.

சானா குரான் இப்போதைய இஸ்லாமின் ஆன்மீகத்தன்மையை எளிதில் போக்கி விடும். இஸ்லாம் என்பது அரேபியாவின் அரசியல் நிகழ்வு என்றாகி விடும். குரானின் மீது ஏற்றி வைத்துள்ள இறைத்தன்மை மற்ற நாடுகளை வரலாற்றில் அவர்கள் வென்ற போது அந்த நாட்டு மக்கள் மேல் ஏற்றி வைக்கப்பட்டது. இந்த மனத்தளவில் வந்த அடிமைத்தனம் இஸ்லாமியர் அந்த நாட்டைவிட்டு விலகிப் போனாலும் மக்கள் மனதில் நிலைத்து விட்டன. முகமதுவின் நண்பர்கள் பலரும் இஸ்லாமில் இருந்தது அப்போது நடந்த போர்களில் கிடைத்த லாபத்திற்காகத்தான். ஏனெனில் முகமது இறந்ததும் அவரின் பல நண்பர்கள் தங்கள் பழைய மத்த்திற்குத் திரும்பி விட்டனர்.

வாக்னின் (Vaknin 1999) – முகமதுவிற்கு இருந்ததாகச் சொல்லப்படும் Narcissistic Personality Disorder-ல் பெரும் பொய்களை நினைவறிந்தோ நினைவின்றியோ சொல்வது எளிது. அவர்கள் சொல்லும் பொய்களை அவர்களே நம்புவதும் இயல்பு என்கிறார். குரானின் தெய்வீகத்தன்மை போனால் மீதி என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்:

முதலாவதாக, பல குரான்கள் இருந்தால் அதில் எந்த குரான் உண்மை?

இரண்டாவதாக, பல குரான்களில் ஒன்று மட்டும் உண்மையென்றால் எப்படி மற்ற குரான்கள் இருக்க அல்லா சம்மதித்தார்?

மூன்றாவதாக, அல்லாவின் வார்த்தைகள் மாறாதவை என்றால் மற்ற குரான்கள் எப்படி வந்தன?

இறுதியாக, புகாரி (4.52.233)-ல் ‘நம்பிக்கையற்றவர்கள் எப்போதும் நம் அடையாளாங்களையும் வெளிப்பாடுகளையும் புரிந்து கொள்ள மாட்டார்கள்’ என்கிறார். ஆனால் சானா குரானைக் கண்டுபிடித்த ஏமானிய அதிகாரிகள் அதனை மேலும் ஆய்வதற்கு தங்களால் முடியாததால் ஏன் ஜெர்மானிய அறிஞர்களை நாடினார்கள்?

குரான் இன்னும் பல கேள்விகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக, ஏமானிய அதிகாரிகள் புயின், போத்மெர் இருவரையும் இன்னும் அதிகமான ஆய்வுகளுக்குள் செல்வதைத் தடுத்து விட்டனர். Dar al-Makhtutat Library-ல் உள்ள சானா பிரதிகளில் குரானற்ற சில பழைய பிரதிகளை மட்டுமே பார்வையாளர்களுக்கு இப்போது காண்பிக்கப்படுகின்றன. ஆனால் சானா தோற்றுவித்த உண்மைகளை மறைக்க இது மட்டுமே உதவாது. 35,000 ஆயிரம் போட்டோக்கள் எடுக்கப்பட்டு விட்டன. நிச்சயமாக அந்தப் பிரதிகளின் மேல் இன்னும் பல ஆய்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கும். அவைகள் ஒரு நாள் நிச்சயம் வெளிவரும்.

 Taher, 2000 – புயின், போத்மெர் இருவரின் ஆய்வுகளை இஸ்லாமியர் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. இவைகள் குரானின் மகத்துவத்தைக் குறைக்க வந்த சில நம்பிக்கையற்றோரின் திட்டமிட்ட சதி என்று அவர்கள் கூறலாம். சல்மான் ருஷ்டி விவகாரத்தை மனதில் கொண்டு புய்ன், ‘என் கருத்துக்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நடுவே கோபத்தைக் கிளப்பி விட்டுள்ளது. அந்தப் பழைய பிரதிகளின் மீது என் கருத்தைச் சொல்ல நான் அருகதையற்றவன் என்பது அவர்களது குற்றச்சாட்டு’ என்கிறார்.  

UNESCO- சானா குரான் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, 1995-ல் அதைப் பற்றி குறுந்தகடு ஒன்றை வெளிக்கொண்டு வந்தது. அரேபிய, ஆங்கில, பிரஞ்சு மொழிகளில் இதன் விளக்கம் இருந்தது. அக்குறுந்தகட்டில் 302 பிரதிகளின் 651 படங்களும் இருந்தன. அந்தப் பிரதிகள் கண்டு பிடிக்கப்பட்ட விதம், அவைகளில் உள்ள பிரதிகளைப் பற்றிய முன்னுரை, அரேபிய எழுத்தியல் எல்லாம் அதில் உண்டு.

 


இப்போதும் அந்தப் பிரதிகள் முறையான வழியில் பாதுகாக்கப்படவோ, அண்மைக் காலத்து அறிவியல் முறையில் பிரதிகளைக் காக்கவோ ஏமானிய அரசு ஏதும் செய்வதில்லை என்று அந்த நூலகத்தின் அதிகாரி Ursula Dreibholz கூறியுள்ளார். பூச்சி, நீர் போன்றவைகளிடமிருந்து காக்கவோ, அதைவிடவும் முக்கியமாக நெருப்பிலிருந்து காக்கவும் எந்த முயற்சியும் இல்லை. அதற்கெல்லாம் பணமில்லை என்பது ஏமானிய அரசின் கூற்று. மதத்தைக் காக்க எந்த அளவுக்கும் நம்பிக்கையாளர்கள் செல்வார்கள். எப்போது ஒரு பெரும் தீ விபத்து நடக்கும் என்பது யாருக்குத் தெரியும். தீவிபத்து தடுப்பு ஏதும் ஏமானிய அரசு செய்யாமல் இருப்பது இந்த ’விபத்தை’ எதிர்பார்த்துதானோ!



References

Journals:

1. Abid, Abdelaziz (1997); “Memory of the World”: Preserving Our Documentary Heritage. Museum International, Vol. 49, No. 1, January 1997 issue. Blackwell Publishers, Oxford.

2. Dreibholz, Ursula (1983); A treasure of early Islamic manuscripts on parchment. Significance of the find and its conservation treatment. AIC Preprints of papers presented at the 11th annual meeting in Baltimore, Maryland, 25-29 May 1983. Washington, DC.

3. Dreibholz, Ursula (1996); The Treatment of Early Islamic Manuscript Fragments on Parchment in The Conservation and Preservation of Islamic Manuscripts, Al-Furqan Islamic Heritage Foundation, London

4. Dreibholz, Ursula (1999); Preserving a treasure: the Sana’a manuscripts. Museum International. Islamic collections. Vol. LI, No. 3, July 1999 issue. Blackwell Publishers. Oxford.

5. Whelan, Estelle (1998); Forgotten Witness: Evidence for the Early Codification of the Qur’an. Published in The Journal of America Oriental Society. January to March Issue, 1998. University of Michigan. USA.



*
Another article related to Sana Quran: http://www.theatlantic.com/past/issues/99jan/koran.htm


*

பின் குறிப்பு:

இது ஒரு மத அவதூறுப் பதிப்பல்ல; ஒரு வரலாற்றுப் பதிவே.. 


*

567. தமிழ்மண உத்தரவு

* Dear author,

Your post 566.is removed by tamilmanam.net Administrator due to follwing reason, மத நல்லிணக்கத்துக்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளையாமல் இருக்கத் *தற்காலிகமாக* மதம் சார்ந்த இடுகைகளைத் தமிழ்மணத்தில் இருந்து நீக்குகிறோம். அதன்படி உங்களின் இந்த இடுகையும் (இடுகை மட்டும்) நீக்கப் படுகிறது. உங்களது இடுகை அவ்வாறானது அன்று என நீங்கள் கருதினாலும் தற்சமயம் தமிழ்மணத்தின் முடிவே இறுதியானது. இது போன்ற வேறு இடுகைகளை நாங்கள் நீக்கத் தவறி இருந்தால் எங்களுக்குச் சுட்டிக் காட்டுங்கள். பரிசீலிக்கிறோம். மேலதிகவிபரங்களுக்குக் காண்க: http://blog.thamizmanam.com/archives/391 நிர்வாகி www.tamilmanam.net *

Saturday, May 05, 2012

566. இஸ்லாமிய குரான்? ஏன் இன்னும் இச்செய்தி பரவவில்லை? ... 1



*






இறைவனிடமிருந்து வஹியாக முகமதுவிற்கு வந்திறங்கிய வசனங்களே குரான் - இஸ்லாமியரின் தீவிர நம்பிக்கை இது. குரானில் மாற்றம் ஏதுமில்லை (10:64); கடவுளின் இந்த வார்த்தைகளை யாரும் மாற்ற முடியாது (6:34) --  இவை குரானின் வசனங்கள். ஆனால் 6:558 ஹதீசில் புகாரி, ‘முகமதுவிற்கு சில வசனங்கள் மறந்துவிட்டன’ என்கிறார். ('இது ஒரு weak ஹதீஸ்' என்று நம்பிக்கையாளர்கள் சொல்லிவிடுவார்கள் என்று நினைக்கின்றேன்,) சுனான் இப்ன் மஜாஹ் (3:1944)-ல் முகமதுவின் சில வசனங்களை ஆடு தின்று விட்டன என்கிறார். 10.64-லும், 6.34-லும் சொல்லியது உண்மையென்றால் எப்படி தெய்வீக வார்த்தைகள் ஆட்டினால் தின்னப்பட்டிருக்கும்; அல்லது அவை மாற்றப்படவோ, திருத்தப்படவோ, நீக்கப்படவோ செய்யப்பட்டிருக்கும்? அல்லாவின் வார்த்தைகளே இப்படி முன்னுக்குப் பின் முரணாகவா இருக்கும்?

இவைகள் எல்லாம் நம்பிக்கையற்றவர்களின் வழக்கமான கேள்விகள். ஆனால் இந்தக் கேள்விகளையெல்லாம் தாண்டி ஒரு பெரும் கண்டுபிடிப்பு நடந்துள்ளது.

ஏமன் நாட்டிலுள்ள சானா என்ற பெரிய மசூதி ஒன்றில் முதல் ஹிஜ்ரா காலத்திய பழைய குரான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குரான் இப்போது நம்பப்படும் குரானிலிருந்து மாறுபட்டுள்ளது. இந்த பழம் கையெழுத்துப் பிரதி இஸ்லாமியரால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கார்பன் ஆராய்ச்சியின் படி – carbon dating analysis - இவைகளின் உண்மைத் தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. இது 1425 ஆண்டுகளில் இஸ்லாமிய வரலாற்றின் தடுமாற்றத்திற்குரிய ஒரு கண்டுபிடிப்பாகும்.


சானாவில் உள்ள பெரிய மசூதி இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பழமையான மசூதியாகும். முகமது தன் வழிவந்த நம்பிக்கையாளர் மூலம் ஆறாம் ஹிஜ்ரா ஆண்டில் கட்டச் சொன்ன மசூதியாகும் இது. அதன் பின் பல இஸ்லாமிய அரசர்களால் பெரியதாக மாற்றப்பட்டன. 1972-ம் ஆண்டில் பெரும் மழை ஒன்றின் காரணமாக மசூதியின் மேற்குப் பக்கத்துச் சுவர் சரிந்த போது நடந்த ஒரு புனரமைப்பு சமயத்தில் தொழிலாளர்கள் தற்செயலாக ஒரு புதை குழி ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். மசூதிகளில் புதைகுழி இருப்பதில்லை. இந்தப் புதைகுழியும் எந்த மனித உடலோ வேறு எதுவுமோ புதைக்கப்பட்ட இடமாக இல்லாமலிருந்தது. ஆனால் வெறும் குப்பைக் காகிதங்கள் போல் மழையிலும் காலத்தாலும் நமத்துப் போயிருந்த அராபிய மொழியில் எழுதப்பட்ட பழைய சுவடிகளும், தாட்களும் குவிந்து கிடந்தன. இவைகளின் மதிப்பை அறியாத தொழிலாளர்கள் இக்காகிதங்களை அள்ளி 20 சாக்குப் பைகளில் திணித்து, அவைகளை மசூதியின் ஒரு மினாரத்தின் அடியில் வைத்துப் பூட்டி விட்டார்கள்.

ஒரு புதைபொருள் விற்பன்னரிடம் இச்செய்தி போனதால் அதன் முக்கியத்துவம் வெளி வந்துள்ளது. Qadhi Ismail al-Akwa – இவர் ஏமானின் பழம்பொருள் விற்பன்னர்களின் தலைவராக – President of Yemeni Antiquities Authority – இருந்தவர். இவர் பார்வைக்கு இந்தக் காகிதங்கள் கிடைத்ததும் அதன் முக்கியத்துவத்தைக் கருதி அவைகளைப் பாதுகாக்கவும், அதனை ஆராயவும் முயன்றார். அவரது முயற்சியினால் 1977-ம் ஆண்டு ஒரு ஜெர்மானிய இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் துணையை நாடினார். அந்த அறிஞரும் இந்தச் சுவடிகளைக் காக்க தன் நாட்டு அரசின் உதவியை நாடினார்.

ஆய்வில் ஆயிரக்கணக்கான குரானின் வாசகங்கள் அந்தப் பதிவுகளில் இருப்பது தெரிந்த்து. இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பழுதடைந்த பிரதிகள் அந்தப் புதை குழியில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. குரானின் வாசகங்களின் குறிப்புகள் காணக் கிடைத்தன. குரானின் வரலாற்றில் பழைய சிதிலமான பிரதிகள் புழக்கத்திலிருந்து எடுபட வேண்டும் என்பதை வழக்காக வைத்திருந்தார்கள். இதனால் புதிப்பிக்கப்பட்ட நல்ல பிரதிகள் மட்டுமே பயனில் இருக்கும். அது போலவே எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற அவைகளைப் பத்திரமான இடங்களில் வைப்பதும் நடந்து வந்துள்ளது. சானாவின் புதைகுழிப் பிரதிகள் அதுபோல் காக்கப்பட்ட பிரதிகளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மசூதி முதலாம் ஹிஜ்ராவிலிருந்து ஒரு குரானைக் கற்பிக்கும் இடமாக இருந்து வந்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட இந்த பிரதிகளை ஒழுங்கு படுத்தவும் அவ்வேலைகளை மேல்பார்வை பார்க்கவும் ஜெர்ட் புயின் – Gerd R. Puin – என்ற சார்லேன்ட் பல்கலையின் பேராசிரியர், அராபிய எழுத்தியல் விற்பன்னர், பழைய அராபிய தொல்லியல் மொழி ஆசிரியர் – இந்த பிரதிகள் மேல் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆராய்ச்சி நட்த்தினார். 1985-ல் இன்னொரு பேராசிரியர் – H.C.Graf V. Bothmer – புயினோடு இணைந்து செயல்பட ஆரம்பித்தார். கார்பன் 14 ஆராய்ச்சியில் இந்தப் பிரதிகள் கி.பி. 645 -690 காலத்தியவை என்பது உறுதியாகியது. அப்படியாயின் இந்த பிரதிகள் எழுதப்பட்ட தோலின் வயதே இது. ஆகவே அதில் எழுதப்பட்ட்து இந்த ஆண்டு காலத்திற்குச் சிறிதே பிந்தியதாக இருக்க வேண்டும். எழுத்துகளின் அமைப்பை வைத்து பார்க்கும் போது அவை கி.பி. 710 -715 என்ற காலத்தியதாக இருக்க வேண்டும். சில பிரதிகள் இஸ்லாமின் முதலிரு நூற்றாண்டு காலத்திற்குரியதாகவும், காலத்தால் முந்திய குரானாகவும் இவை இருக்க வேண்டும். 1984-ம் ஆண்டு ஏமின் அரசும், ஜெர்மானிய அரசும் இணைந்து ‘கையெழுத்துப் பிரதிகளின் இணையகம்’ (House of Manuscripts – Dar al Makhtutat) என்ற ஒன்றினை இந்த பெரிய மசூதிக்கருகில் ஏற்படுத்தினார்கள். மீண்டும் அந்தப் பிரதிகளுக்கு ‘உயிர்’ கொடுக்கும் வேலையின் முனைந்தார்கள். 1983 -1996 ஆண்டுகளில் மொத்தமிருக்கும் 40,000 ஆயிரம் பிரதிகளில் ஏறத்தாழ 15,000 பிரதிகளைப் புதுப்பித்து விட்டார்கள். இதில் பன்னியிரண்டாயிரம் பிரதிகள் ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் தோலில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளாகும். இதுவரை மூன்று குரானின் பழைய பிரதிகள் உண்டு. அவையில் மிகவும் பழைய பிரதி – ஏழாம் நூற்றாண்டிற்குரியதும் மிகவும் பழைய பிரதியாக நினைக்கப்பட்ட குரான் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ளது. ஆனால் சானாவின் குரான் இதைவிடவும் காலத்தால் முந்தியது. அது மட்டுமின்றி அவை முகமது வாழ்ந்த இடமான அரேபியாவின் ஹிஜாஸ் என்ற இட்த்திற்கான எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. இவைகள் அதனால் மிக முந்திய பதிவு என்பதோடு மட்டுமின்றி முதலில் எழுதப்பட்டவைகளாக இருக்க வேண்டும். ஹிஜாஸி அராபிய எழுத்துகளில் எழுதப்பட்ட முதல் நூல்களாக இருக்க வேண்டும். இவை முதல் குரான் என்பதோடு மட்டுமின்றி இவை ஒன்றின் மேல் மற்றொன்றாக எழுதப்பட்டவை என்றும் கண்டறியப்பட்ட்து. (palimpsests - manuscripts on which the original writing has been effected for re-use).

                                             இப்பட்த்தில் தெரிவதைக் காண்க.
பழைய எழுத்துக்களும் தெரிகின்றன.



புயின் அவரது ந்ண்பர் போத்மெர் இருவருக்கும் எழுத்துக்களின் அழகும் நேர்த்தியும் அவர்களை மிகவும் கவர்ந்தன. அதைவிடவும் அவர்களை ஆச்சரியப்பட வேறொரு உண்மை காத்திருந்த்து. இந்த குரான் பிரதிகள் இப்போதுள்ள குரானோடு ஒப்பிட்டு பார்க்கும் போது அவர்களை ஓருண்மை உலுக்கியது. இந்த இரு பிரதிகளும் மிகவும் பெரிய வேறுபாடுகளோடு இருந்தன. வசனங்களின் எண்ணிக்கையில் வேற்றுமை; வார்த்தைகளில் சின்ன ஆனால் மிக முக்கியமான மாற்றங்கள்; வேறுபட்ட எழுத்துக் கூட்டல்கள்; வித்தியாசமான கலை – ( There are unconventional verse ordering, small but significant textual variations, different orthography (spelling) and different artistic embellishment (decoration) ) குரானின் வசனங்கள் கடவுளிடமிருந்து வந்த நேரிடையான, முழுமையான, எந்தவித மாற்றமுமில்லாத வசனங்கள் என்ற இஸ்லாமியரின் ஆழ்ந்த நம்பிக்கைகளை இந்த மாற்றங்கள் முறியடித்தன. குரான் திரித்து, மாறுபட்டு, திருப்பி மாற்றி எழுதப்பட்டு, மாற்றங்களோடு திருத்தப்பட்டு கிடைக்கப்பட்ட ஒன்று; மனிதக் கரங்களால் மாற்றப்பட்ட வசனங்களோடு அவை உள்ளன.

குரானின் புனிதத் தன்மை, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியரின் ஆழமான நம்பிக்கை இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பால் ஆட்டங்கண்டு விட்ட்து. கோடிக்கணக்கான இஸ்லாமியரின் குரான் காலத்தைத் தாண்டியது; கடவுளின் வார்த்தைகள் அப்படியே கொடுக்கப்பட்டவை என்ற நம்பிக்கைகள் என்பதெல்லாம் ஒரு ஏமாற்றும் கட்டுக் கதையாகிப் போனது. அது மட்டுமின்றி குரானில் உள்ளவை கடவுளின் வார்த்தைகள்; அவைகளை மனிதன் மாற்ற முடியாது என்ற அறைகூவலும் பொய்யாகிப் போனது. மாற்றங்கள் குரானில் நடந்துள்ளன என்பதற்கான ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. குரானைப் பற்றி கில்லாவ்மி (Guillaume ) என்பவர் ”குரான் மற்ற நூல்களுக்கு அடியில் வைக்கப்படக்கூடாது; எல்லா நூல்களுக்கும் மேல்தான் வைக்கப்பட வேண்டும்; குரான வாசிக்கப்படும் போது யாரும் குடிக்கவோ புகைக்கவோ கூடாது; குரானை வாசிக்கும்போது முழு அமைதி வேண்டும்; எல்லா வியாதிகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது குரான்” என்றெல்லாம் சொன்னது வலிவிழந்தது. இஸ்லாமியர் குரானை ‘எல்லா நூல்களுக்கும் அன்னையாக’க் கருதுவதுண்டு. வேறு எந்த நூலும், வெளிப்பாடுகளைக் கொணரும் எந்த புத்தகமும் அதற்கு இணையானதல்ல; இந்த நம்பிக்கைகள் எல்லாமே தவிடு பொடியாகின. குரான் கடவுளின் வார்த்தைகள் என்ற இஸ்லாமியரின் 14 நூற்றாண்டுப் போராட்டங்களை இந்தக் கண்டுபிடிப்புகள் ஒன்றுமில்லாக்கி விட்டன.

இந்தப் பழைய பிரதிகளில் வரிகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக (palimpsests) எழுதப்பட்டுள்ளன. பழைய எழுத்துக்களும் அந்தப் பிரதிகளில் காணக்கிடக்கின்றன. அல்ட்ரா வய்லட் போட்டோகிராபி மூலம் பழைய எழுத்துக்களையும் இப்போது காண முடியும்.
PALIMPSESTS

இந்த முறையில் சானா பிரதிகளில் மாறுபாடுகள் இருப்பது மட்டுமின்றி, இந்தப் பிரதிகள் எழுதும் முன்பே வேறு பிரதிகள் மாற்றப்பட்டும் திருத்தப்பட்டும் எழுதப்பட்டுள்ளன என்பதும் புலனாகிறது. அல்லா சொன்னது போல் (56.77-78; 85.21-22) சுவனத்தில் தங்க எழுத்துக்களில் குரானின் முதல் பிரதி இருக்கிறது; வானதூதர்களைத் தவிர வேறு யாரும் அதைத் தொடக்கூட முடியாது என்ற அல்லாவின் வார்த்தைகள் சிறுபிள்ளைக் கதை போலாகின்றது.

தொடர்ந்த ஆய்வின் பின் புயின், குரான் கடவுள் கொடுத்து அப்படியே இங்கு எழுதப்பட்டது இல்லை; ஆனால் குரானும் மற்ற நூல்கள் போலவே அடித்து திருத்தி எழுதப்பட்ட ஒரு நூல் என்பது புலனாகிறது என்கிறார். அவரின் கூற்று: “குரானின் முதல் கடைசி அட்டைகளுக்கு நடுவில் உள்ளவை எல்லாமே கடவுளின் மாற்றப்படாத வார்த்தைகள் என்பது பல இஸ்லாமியரின் ஆழ்ந்த நம்பிக்கை. பைபிளின் வார்த்தைகளுக்கு பிறந்த, வளர்ந்த, வரலாறு உண்டு என்பார்கள்; அவை வானத்திலிருந்து மனிதர்களிடம் குதித்து வந்ததில்லை என்பார்கள். ஆனால் குரானுக்கு அத்தகைய வரலாறு ஏதுமில்லை என்பார்கள். இந்த வாதத்தை முறியடிக்க, குரான் எழுத்துக்களுக்கும் அதேபோன்ற ஒரு வரலாறு உண்டென்று காண்பிக்க சானா குரானின் பிரதித் துண்டுகள் போதும்”.

புயின் மேலும் தொடர்கிறார்: “ குரானின் வார்த்தைகள் மட்டுமல்ல; முகமதுவின் காலத்திற்கு முன்பே எழுதப்பட்ட சமயக் கருத்துக்கள் மீண்டும் தொடர்ந்து எழுதப்பட்டன”.

ஏமன் அதிகாரிகள் புயின், போத்மெர் இருவரும் நடத்திய ஆய்வின் போது இந்த ஆய்வினைப் பற்றி அதிகம் வெளியில் தெரியாதவண்ணம் இருக்கச் சொல்லியுள்ளனர். ஏனெனில் குரானின் வரலாறு ஆயிரம் வருஷங்களாகச் சொல்லி வருவதை மாற்றக் கூடாதே. அதுபோல் ஆய்வாளர்களும் அமைதி காத்தனர். ஏனெனில் அதுவே அவர்கள் தொடர்ந்து தங்கள் ஆய்வை மேற்கொள்ள வழி வகுக்கும். புயினின் ஆய்வில் கிடைத்த மற்றொரு தகவலின் படி இஸ்லாமியம் ஆரம்ப்பிப்பதற்கு முன்பே குரானில் வெளித் தலையீடுகள் உண்டு. அரேபியர் இல்லாத இரு ஜாதியினர் – As-Sahab-ar-Rass (Companions of the Well) and the As- Sahab-al-Aiqa (Companions of the Thorny Bushes) – முகமதுவின் காலத்தினருக்கே தெரியாத இந்த இரு ஜாதியினர் பற்றிய செய்திகள் உண்டு. குரானும் செவ்விய அரேபிய மொழியில் எழுதப்படவில்லை. குரான் என்பதற்கு இன்று இஸ்லாமியர் சொல்லும் ” recitation” என்பது பொருளல்ல. குரான் என்பதே அராமிக் மொழியிலுள்ள “Qariyun” என்ற சொல்லிலிருந்து வந்துள்ளது. : தொழுகை நேரத்தில் வாசிக்கப்படும் தெய்வீகத் தொகுப்புகள் என்றே இதற்குப் பொருள். குரானில் பைபிளின் கதைகளின் சுருக்கங்கள் இருப்பதால் இவை தொழுகையில் வாசிக்கப்படும் தொகுதிகளாகும்.

1997-ல் போத்மெர் இப்பிரதிகளை 35,000 படங்களில் பதிந்து ஜெர்மனிக்குக் கொண்டுவந்துள்ளார். அவர்கள் விரும்பினால் தங்கள் ஆய்வுகளை அவர்கள் இப்போது வெளியிட முடியும். (What stops them ??!!  ஒருவேளை சல்மான் ருஸ்டி கதை நினைவுக்கு வருகிறதோ??) புயின் குரானைப் பற்றிக் கூறியது: “குரானில் கூறப்பட்டவைவை முகமதுவின் காலத்திலேயே முழுவதுமாகப் புரிந்து கொள்ளப் படவில்லை. இஸ்லாம் ஆரம்பிப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முந்திய செய்திகள் அதில் உண்டு. குரான் தன்னைப் பற்றி ‘mubeen’, or clear என்று சொல்லிக் கொள்ளும். ஆனால் ஒவ்வொரு ஐந்தாவது சொற்றொடரும் முழுப்பொருளும் தராது. ஐந்தில் மீதியுள்ள நான்கு பாகமும் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாதது. அராபியிலேயே புரிந்து கொள்ள முடியாது போனால் மொழியாக்கம் செய்யப்பட்ட மற்றமொழிகளில் எப்படிப் புரிந்து கொள்வது? குரான் தன்னை ’எளிது’ என்று சொல்லிக் கொண்டாலும் புரிவது கடினமாகவுள்ளது.”

புயினின் ஆய்வைப் பற்றியறிந்த சமயப் பேராசிரியர் ஆண்ட்ரூ ரிப்பின் - Andrew Rippin – குரானைப் பற்றி ஆச்சரியத்தோடு கூறியது: ” சானா குரானின் தாக்கத்தின் வேகம் இன்னும் உணரப்படவில்லை. மாறுபட்ட வசன்ங்களும், வரிசை முறைகளும் மிக முக்கியமானவை மட்டுமல்ல எல்லோராலும் ஒத்துக்கொள்ளபட வேண்டியவை. குரானின் காலத்து வரலாறு ஒரு திறந்த கேள்விக்குறி”.

ரிப்பின் சொன்னவை மிக முக்கியமானவை. இஸ்லாமிய காலிஃபுகளின் காலத்தில் இஸ்லாம் ஓர் அரசியல் முக்கியத்துவத்தோடு இருந்தது. சமய முக்கியத்துவம் இல்லை. அதனால் அவர்களை இணைப்பதற்கு இஸ்லாம் என்பது தேவையாக இருந்தது. குரான் ஒரு ‘status symbol’ போலிருந்தது. அப்படி ஒரு நிலையில்லாவிட்டால் இஸ்லாம் முகமதுவின் காலத்திலேயே மடிந்திருக்கும்.

குரான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட்து. அதனை மகிமைப்படுத்த அதனோடு ஒரு தெய்வீகம் ஒட்டப்பட்டது – ஒரு சமூகத்தை ஒன்றிணைக்க. இப்போதுள்ள இஸ்லாமியரை விட பழைய காலத்து இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகளாக இல்லாமல் இருந்துள்ளார்கள். பல வசனங்கள் அவர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டது. சான்றாக, அலியைப் பின்பற்றிய பல Kharijites ஜோசப்பைப் பற்றிய சுராக்கள் மிகவும் மட்டமானவையென்றும் அவை குரானில் இருக்கத் தகுதியற்றவை என்றனர். ரிப்பினைப் போலவே வராக் - Warraq – அந்தக் காலத்து இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் மனத்தளவில் மிகவும் மென்மையாக இருந்தார்கள்.

இன்னொரு சான்று குரானின் தன்மையை நன்கு வெளிக்கொண்டுவரும். பல வசனங்கள் 691-ல் கட்டப்பட்ட ஜெருசலேம் Dome of Rock of Jerusalem மேல் பொறிக்கப்பட்டுள்ளன. அவை இன்றுள்ள வசனங்களிலிருந்து வெகுவாக மாறுபட்டிருக்கின்றன.

 Rodhinson இந்து, கிறித்துவர்களோடு இஸ்லாமியரைப் பொருத்திப் பார்க்கிறார். முந்திய இருவரும் தங்கள் வேத நூல்களை வரலாறு, அறிவியல் இவைகளோடு கோர்த்துப் பார்ப்பதில் ஆவலோடு இருப்பார்கள். அம்மதங்களோடு தொடர்புள்ள பழைய பிரதிகள் கிடைத்தால் அந்த இரு மதத்ததவரும் அவைகளை அறிய மிக ஆர்வத்தோடு இருப்பார்கள். ஆனால் இஸ்லாமியருக்கு அந்த ஆர்வம் சுத்தமாக இராது. அவர்கள் அது போன்ற நிகழ்வுகளை எதிர்ப்பார்கள். இந்த வேற்றுமை மிக எளிதாகத் தெரியும். (அன்னை தெரசா தன் கடவுள் மறுப்புக் கொள்கைகளை எரித்துப் போடச் சொன்ன பிறகும் கூட கிறித்துவர் அதை வெளிப்படையாக அவர்களே அதனை ஒரு நூலாக வெளியிட்டது இதற்கான ஒரு சான்று. கிறித்துவர்கள் வெளிப்படையாக இவ்வாறு இருந்தது எனக்கு இன்னும் ஆச்சரியமே!)   இந்து, கிறித்துவ நம்பிக்கைகள் தொல்பொருள், வரலாற்று சான்றுகளைத் தேடிப்போவதுண்டு. ஆனால் இஸ்லாமில் அது சுத்தமாகக் கிடையாது. மெக்கா, மதீனா போன்ற இடங்களில் எந்த வித தொல்பொருள் தேடல் நடப்பதே கிடையாது. அப்படி ஒன்று எப்போவேனும் நடக்கும் என்பதற்கான சான்றுகள் எதுவும் நிச்சயம் இல்லை.


..................................................................................... ........................தொடரும் 

* *