*
இப்பதிவில் shanawazkhan, G u l a m, Haja என்ற மூவர் கொடுத்துள்ள சில விவாதங்களுக்குப் பதில் கூற ஆரம்பித்து, அது நீளமாக அமைந்ததால் அதை ஒரு தனியிடுகையாக என் பதிவில் இடுகிறேன். அவர்கள் விவாதங்களை நீல வண்ணத்தில் கொடுத்துள்ளேன். I
4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (shanawazkhan)
நீங்கள் ஒட்டு மொத்தமாக ஆண்களையே கேவலப்படுத்தியுள்ளீர்கள். ஒரு மனைவியோடு இருப்பவன் பல பெண்களோடு தொடர்பு கொண்டிருப்பார்கள். அதைத் தடுக்க 4 மனைவிகள் !!!!!!!!!!!!!! - நல்ல தத்துவம்.
எனக்குத் தெரிந்த ஆண்கள் - இஸ்லாமியரையும் சேர்த்து - ஒரு பொண்டாட்டிக்காரங்கதான். நீங்க சொல்றது அதில் யாருக்கும் பொருத்தமில்லை. நீங்கள் யாரை நினைத்து இப்படி சொன்னீர்களோ! கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிகிறீர்களோ?
//பல ஆண்கள் தவறான வழியில் பல பெண்களிடம் தொடர்ப்பு வைத்திருக்கிறார்கள், ... இதுப் போன்ற அவல நிலை தோன்றக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் கூறிய செய்தி தான் இந்த 4 திருமணம்.// _ Haja
அடுத்த நச் தத்துவம். நீங்க சொல்ற மாதிரி 4 திருமணம் பண்ற பசங்க நிச்சயமா அதோடு நிக்க மாட்டாங்க. அரபு நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வந்து, சில நாட்களுக்குத் திருமணம் செஞ்சு பொண்ணுகளை விட்டுட்டு போனதாக சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து செய்திகள் வந்தன. உங்க மதத்தில் அந்த மாதிரி திருமணத்திற்கு ஏதோ ஒரு பெயர் இருப்பதாகப் படித்தேன். (பெயர் என்ன?) அவங்க ஊர்ல நாலு இருந்தும் பத்தலைன்னு இங்க வந்தாங்க அவங்க. அவுத்து உட்டுட்டா, மேய்ற மாடு அப்படித்தான் எங்க வேணும்னாலும் எபப்டி வேணும்னாலும் மேயும்.
நீங்க சொன்னது என்ன philosophy-ன்னு எனக்கு தெரியவில்லை. பொதுவாக எல்லா ஆண்களையும் கீழ்த்தரத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது.
இதைவிடவும் இன்னொரு பொன் முத்து சொல்லியிருக்கீங்க: //விபச்சாரத்தையும், சீன்ன வீடு பிரச்சனைக்கும் அடியோடு ஒழிக்க ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துங்கள்.// (குலாம்.)
நீங்க சொல்றது உண்மையாக இருந்தால் முஸ்லீம் நாடுகளில் விபச்சாரம் என்பதே இல்லையா? முற்றாக ஒழிந்து விட்டதா? நடைமுறை அப்படியில்லையே.
இப்படி 4 பொண்டாட்டி இருந்துட்டா அவனவன் நல்லவனா, அல்லாவுக்குப் பிடிச்சவனா இருந்துருவான். இல்லைன்னா அவன் விபச்சாரத்திற்குப் போய்விடுவான். ஒரு பொண்டாட்டி வச்சிருக்கிறதால்தான் விபச்சாரமும், சின்ன வீடும் -- பயங்கரமான கருத்துக்கள் .............
கீதாச்சாரம் அப்டின்னு ஒண்ணு அச்சடிச்சி ரூம்ல மாட்டியிருப்பாங்க. இதையும் அப்படி செய்யலாம். அத்தனை சத்தான முத்துக்கள் இவை. AIDS-க்கு பாதுகாவலா ஆணுறை பயன்படுத்துங்கள் என்பதற்கு ஏகோபித்த கோபக்குரலில் மறுப்பு கொடுக்கும் நீங்கள், இப்படி விபச்சாரத்தை ஒழிக்க ஒரு புது வழியை உங்கள் மார்க்கத்தின் மூலம் கொடுப்பது நன்றாக உள்ளது. நாலு வச்சிருக்கவன்தான் சார், ஏற்கெனவே சொன்ன மாதிரி, அவுத்த உட்ட மாடு மாதிரி எங்கெல்லாமோ போவான். நீங்க என்னடான்னா, வீட்ல நாலு இருந்தா மனுசன் ஒழுங்கா ஆகிடுவான் அப்டின்றீங்க ... அப்பதான் சார், நிலைமை பல காரணங்களால் ரொம்ப மோசமாயிரும். விளக்கமெல்லாம் இங்கே எதற்கு .....
//இதில் சமுகத்திற்கு என்ன பிரச்சனை ஐயா?// -(குலாம்)
இப்படி ஒரு அணுகுண்டு. நாலு மனைவி வச்சிக்கிட்டா சமூகத்திற்கு என்ன பிரச்சனை என்று எளிதாகக் கேட்டு விட்டீர்கள்! அடக் கடவுளே!!
மதம் எப்படி மனுஷங்களை ஆட்டுவிக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு பெரிய அத்தாட்சி ஏது? நிஜமாகவே இப்படி ஒரு கேள்வி கேட்க எப்படி உங்க மனசாட்சி உங்களை அவிழ்த்து விட்டது??!! நம் சமூகக் கட்டுப்பாடு என்று ஒன்றுள்ளது. அது உங்களுக்குத் தேவையில்லை; குரான் தான் எங்களுக்கு எல்லாம் என்று நீங்கள் அடிக்கடி சொல்லும் விவாதம். தனி மனித ஒழுங்கு, loyalty to your spouse, -- இப்படி பல நல்ல காரியங்கள் நீங்கள் சொல்லும் பல தாரத்தால் அழிந்தொழிந்தல்லவா போய்விடும். நிஜமாகவே உங்களுக்கு ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற கருத்து தவறாகத்தான் உள்ளதா?
ஆளுக்கு நாலுன்னு வச்சிக்கிட்டா ... கடவுளே! நினச்சி பார்க்கவே பயமா இருக்கே. நீங்க ரொம்ப லைட்டா சொல்லிட்டீங்க ...
முகமது காலத்தில் நிறைய சண்டைகள்; சச்சரவுகள்; போர்க்களங்கள். நிறைய ஆண்கள் இறந்து போயிருப்பார்கள். பெண்கள் அதிகமாக வாழ்வில்லாமல் இருந்திருப்பார்கள். ஆண் நான்கு பெண்களை - அதை ஏன் முகமது நாலு என்று வைத்தாரென்று தெரியவில்லை; - திருமணம் செய்து கொள்ளலாம் என்று முகமது கூறினார் என்றால் அதில் தவறேதும் இல்லை. ஒரு சமூகக் காரணியாக அதை ஒரு சமூக கடமையாகக் கூட நினைத்து ஒப்புக் கொள்ளலாம். அந்தக் காலத்திற்கு அது ஒரு சரியான தீர்வு என்று கொள்ளலாம். ஆனால் அன்று சொன்னது அல்லாவே சொன்னார் என்பதுவும், அதுவும் எக்காலத்திற்கும் பொருத்தமான ஒரு அமைப்பு இது என்பதுவும், கடவுளே இப்படிச் சொன்னார் என்பது கேலிக்குரியவையே ஒழிய வேறொன்றுமில்லை.
அதிலும் எல்லோருக்கும் 4; எனக்கு மட்டும் அந்தக் கணக்கில்லை என்கிறார் உங்கள் முகமது. ஏனென்று கேட்டால் அல்லாவே உத்தரவு கொடுத்துட்டார் என்கிறீர்கள். நான் இதைப் பற்றி சொன்னதைத் திரும்பவும் சொல்கிறேன். அல்லா எனக்கு மட்டும் இந்த exemption கொடுத்திருக்கிறார் என்றால் அது ஒரு குற்றவாளியே தனக்கு சாதகமான சாட்சியாக வாக்குமூலம் கொடுப்பது போலல்லவா உள்ளது.
அடுத்து, எதற்காக முகமதுவிற்கு அந்த exemption? ஆயிஷா என்ற சின்ன பிள்ளையைக் கல்யாணம் செய்வது அரசியலுக்காக என்பீர்கள்; ஜேனாப் - வளர்ப்பு மகன் தன் மனைவியை தலாக் சொல்லிவிட்டால் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; ஏனெனில் வளர்ப்பு மகனை உண்மையான மகனாக நினைக்கக்கூடாது என்று காட்டுவதற்காக இந்த திருமணம் என்ற காரணம்; ஜுவேரியா என்ற தன்னிடம் தோற்ற எதிரியின் மனைவியைப் பேரம் பேசி முகமது திருமணம் செய்வது .. ... இதெல்லாம் என்ன சமூக / தனி மனித நாகரீகமோ; நியாயமோ?! தெரியவில்லை.
========================================================
II
ஆண்களுக்கு சுவனத்தில் என்னென்னவோ காத்திருக்கிறது என்று குரானில் சொல்லியுள்ளதே; ஏன் பெண்ணுக்குச் சொல்லவில்லை; பெண்ணுக்கு சுவனத்தில் என்ன கிடைக்கும் என்று கேட்டிருந்தேன்.
//ஆணை இங்கு முன்னிருத்தி சொல்கிறானே தவிர பெண்ணிற்கு அஃது கிடையாது என்று சொல்லவில்லை.//- G u l a m
ஓ! பெண்ணிற்கு 'அஃது உண்டு' என்கிறீர்களா? நல்லது. அந்த 'அஃது' என்னென்ன என்றுதானே கேட்கிறேன். ஏன் அதை சொல்லவே மாட்டேங்றீங்க? ..... ஆண்களுக்கு சுவனத்தில் என்னவென்று தெரியும். நிறைய இருக்கு. அதுபோல் பெண்களுக்கு என்ன? குலாம் வேறு இப்படி சொல்லியிருக்கிறார்: //அல்லாஹ் நாடினால் இது குறித்து மேலதிக விளக்கம் தருகிறேன்// G u l a m
இப்போதைக்கு நானும் நாடுகிறேன்.
---------------------------------------------------------------------------------------
III
1.***Sin of Khalwa - ஒரு ஆணோடு ஒரு பெண் தனித்து இருந்தால் பாவம். அந்த பாவத்தை மாற்ற பெத்த பிள்ளைக்கு ஒரு தாய் முலைப்பால் குடுக்குறது மாதிரி அந்த ஆணுக்கு அந்த பெண் தாய்ப் பால் கொடுத்துட்டா அவன் கூட தனியா இருக்கலாம் என்பது எப்படிப்பட்ட தத்துவம்! (இது என்ன ஹத்தீஸ்- strong /weak - என்று தெரியவில்லை; ??)
2.***லாய்லாஹ் - ஆண்களுக்கு கன்னி கழியாத பெண்கள் (55:56-57, 56:7-40) பையன்கள் (52:24, 56:17) சுவனத்தில் நிறைய தரப்படும்.
3. ***4 மனைவி + போனசாக அடிமைகள் - இவைகளை போதுமாக்கிக் கொள்ளுங்கள் அப்டின்ற "தேவ வாக்கு"
4. ****எல்லாத்துக்கும் 4 மனைவி வரை லைசன்ஸ்; ஆனால் முகமதுவிற்கு மட்டும் நிறைய - எல்லா வயதிலும். அதிலும் வளர்ப்பு மகன் மனைவியை -ஜேனாப்- தன் மனைவியாக்கிக் கொண்டது; 9 வயதுப் பெண்ணை -ஆயிஷா- மனைவியாக்கியது; போரில் தோற்ற தலைவனின் மனைவியை -ஜுவேரியா - தனதாக்கியது ... இந்தக் கதைகள்.
5. **** உங்கள் மதத்தை மறுப்பவர்களுக்கான தண்டனைகள்:
http://www.youtube.com/watch?v=JRl5c-xPVA0// - Arun
இந்த மதத்தீவிரம் எப்படி "கடவுளாலேயே" கொடுக்கப்பட்டிருக்க முடியும்?
என்னை மறுத்தால் தண்டனை தருவேன் என்னும் 'தெய்வத்தை'க் கருணையாளன், இரக்கமுள்ளவன் என்பது நல்ல ஒரு நகைமுரண்.
-- நான் இதுவரை இருபது தடவையாவது பின்னூட்டங்களில் சொல்லியிருப்பேன். மேலே சொன்னவைகளை இஸ்லாமில் இல்லாத உங்கள் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் சொல்லி, அவைகளுக்கு அவர்கள் எவ்வாறு react செய்வார்கள் என்று பாருங்கள் என்று சொல்லியுள்ளேன்.
இதிலும் ஒரு பிரச்சனை. இஸ்லாம் மத தொடர்பான பதிவர்கள் யாரும் இஸ்லாமைத் தவிர வேறு எதுவும் எழுதுவதில்லை. ஒரு பிரபல பதிவரைக்கூட ஒரு தொடர் பதிவில் வரவேற்றேன். அவருக்கு இஸ்லாமைத் தவிர ஏதும் எழுதமாட்டாரென்பது அப்போது தெரிந்தது. எல்லோரும் நன்றாக 'மத ஊழியம்' செய்கிறீர்கள். சரி .. ஆனால் இதுவரை நீங்கள் எழுதியவைகளில் இஸ்லாமிய பதிவர்களைத் தவிர வேறு யாரும் வந்து, 'ஆஹா! நீங்கள் மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்' என்று கூறியதை நான் பார்க்கவிலை. அதோடு, என்னோடு இன்னும் வால்ஸ், கல்வெட்டு, The Analyst போன்ற ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் அதிகமாக வந்து உங்கள் பதிவுகளில் கருத்துக்களைப் பகிருவதில்லை. காரணங்கள் பல இருந்தாலும், அதில் ஒன்று - என்ன சொன்னாலும் இவர்கள் எங்கே கேட்கப்போகிறார்கள் என்றுதான் நினைக்கிறார்கள். ஆகவே நீங்கள் இஸ்லாமியரைத் தவிர வேறு யாரையும் நண்பர்களாக அண்டுவதில்லை என்றே நினைக்கிறேன். பாவம் .. எப்படி நீங்கள் நண்பர்களைத் தேடி இதையெல்லாம் சொல்ல முடியும்?!
எந்தக் கேள்விக்கும் நீங்கள் எப்போதும் இரண்டு விஷயங்களை மட்டும் சொல்லிவிடுவீர்கள்: '1400 வருஷக் கதை & எல்லாவற்றிற்கும் இஸ்லாமில் பதில் உண்டு'. அதோடு நான் சொல்வதெல்லாம், 1400 வருஷக்கதையை மனுக்குலத்திற்கே சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போதைக்கு, பிற சமய நண்பர்கள் ஒரு நாலு பேரிடம் சொல்லி அவர்களின் பதிலையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கண்ணைத் திறக்க நம் கருத்துக்களுக்கு உரைகல் தேவை. அதைத்தான் செய்யச் சொல்கிறேன். மற்றவர்களுக்கு உங்கள் மதம் எந்த உணர்வுகளை எழுப்புகிறது என்று உங்களுக்கும் கொஞ்சமாவது தெரிய வேண்டாமா? முயற்சி செய்யுங்களேன் ஒரு முறையாவது. நான் சொல்லியுள்ள அந்த ஐந்தை மட்டும் சொல்லுங்களேன். அது போதும். அதை விட்டு விட்டு குரானை ஒரு முறை வாசியுங்கள்; பதில் கிடைத்து விடும் என்ற வேலை எதற்கு? கேட்ட, வாசித்த கொஞ்ச பகுதியிலேயே எக்குத் தப்பான கேள்விகள்;
முழுவதையும் வாசித்தால் ....???
*