Thursday, May 30, 2019

1055. Sam ON DSL ........





*





DSL  இறந்தும் நாட்கள் ஓடி ஒரு வாரம் முடிந்து விட்டது.


கல்லூரியில் எங்கள் இருவரையும் இணைத்தது எங்கள் ஆசிரியர் சங்கம் - MUTA. நாங்கள் இருவருமே அதில் ஒரே ஒரு தரம் தான் இணைந்தோம் - ஏனெனில் தொல்லைகள் ஏதுமில்லாத எங்கள் கல்லூரியின் ஆசிரியர்களுக்கு சங்கம் ஒரு தொல்லை தான். ஏதாவது ஒரு காரணம் தேடி சேருவார்கள். கொஞ்ச நாள். ஏதாவது ஒரு காரணம் சொல்லி விலகுவார்கள். இது பலரிடம் அடிக்கடி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். சங்கத்தில் செயலராக இருக்கும் போது எங்கள் ரத்தத்தில் ஓடுவதெல்லாம் புர்ச்சி ரத்தம் என்பார்கள். அடுத்த மாதம் என்ன blood transfusion நடக்குமோ. புர்ச்சி வெளியேறி இருக்கும். இந்த சூழலில் முதலில் இருந்து ஓய்வு பெரும் வரை சங்கத்தில் தொடர்ந்து இருந்தவர்கள் என்று எங்கள் கல்லூரியில் அந்தக் காலத்தில் கணக்கெடுத்தால் கையளவு எண்ணிக்கையில் தான் இருப்போம். அந்த இணைப்பு என்னையும் லாரியையும் ஒன்றாகச் சேர்த்தது. அதில் எங்கள் இருவருக்கும் ஒரு வித்தியாசம். நான் சங்கத்து உறுப்பினர்களோடு இணைந்தும், சங்கத்தில் இல்லாதவர்களிடமிருந்து விலகியும், அல்லது அவர்களை எதிர்த்தும் இருந்து வந்திருக்கிறேன். இதனால் எனக்கு என்னிடமிருந்த conviction காரணமாக நிறைய நண்பர்களும், இன்னும் நிறைய non-நண்பர்களும் இருந்தனர். ஆனால் லாரி எல்லோரிடமும் நன்கிருப்பார். சங்கத்தின் மீது என்னை விட மிக அதிகமான பற்றுள்ளவர். ஆனால் அதை வைத்து - என்னைப் போல் - யாரிடமும் பகைமை காட்ட மாட்டார். அது தான் லாரி! 

அடிக்கடி விளையாட்டாக நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம். நான் அவரை ”நார்லு காட்டான்” (நாகர்கோவில் காட்டான்) என்றும், அவர் என்னை நெல்லைக் காட்டான் என்றும் அவ்வப்போது அழைத்துக் கொள்வோம். அப்படி இருந்த எங்கள் நட்பு எங்களது ஒய்வுக் காலத்தில் புதியதோர் வடிவம் பெற்றது. அவருக்கு கணினியைப் பயன் படுத்த வேண்டுமென்று அத்தனை ஆவல். சின்னச் சின்ன உதவிகள் செய்தேன். ஆனால் அதோடு அவரால் எளிதாக ஒட்டிக் கொள்ள முடியவில்லை. அதோடு நான் முதலில் மொழியாக்கம் செய்த “அமினா” நாவல் எங்கள் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை  உருவாக்கியது. அவர் எங்கள் பணி நாட்களில் என்னை ஒரு “விளையாட்டுப் பையனாக” நினைத்திருந்தார். அமினா வாசித்தார். அன்றிலிருந்து பல முறை அந்த நூல் பற்றிப் பெருமையாகப் பேசுவார்
.
“ஏய்யா ... இந்த மாதிரி எழுதக்கூடிய ஆள் என்று என்னை நீர் எதிர்பார்க்கவே  இல்லை. இல்லையா?” என்று கேட்டேன். அப்போதுதான் அந்த விளையாட்டுப் பையன் என்று நினைத்ததைச் சொன்னார். அதன் பின் எப்போதும் இப்போது என்ன செய்கிறாய்? என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார். எப்போதுமே அவரின் அருகில் நின்று பேசும் போது அவர்களின் தோளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டு பேசுவது அவர் பழக்கம். அமினா வாசித்த பிறகு எப்போதெல்லாம் தொலைபேசியில் பேசுகிறாரோ அப்போதெல்லாம் அந்த “தட்டிக் கொடுத்தல்” தொடர்ந்து நடக்கும். தொலைவின் காரணமாக அடிக்கடி சந்திப்பது இல்லை, ஆனாலும் எப்படியும் வாரம் ஒரு முறையாவது அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்து விடும். இப்போது என்ன செய்கிறீர்கள்? தொடர்ந்து செய்யுங்கள் என்ற தொடர்ந்த உற்சாகமூட்டல் இருக்கும்.

டயாலிசிஸ் வந்ததும் மிகவும் சோர்வாக இருந்தார். ஆனால் ஒரு மாதம் கழித்துப் பார்த்த போது அதிலிருந்து வெளிவந்ததாகக் காண்பித்துக் கொண்டிருந்தார். சின்னச் சின்னப் பிள்ளைகளுக்கும், இளைஞர்களுக்கும் டயாலிசிஸ் நடப்பதைப் பார்த்து தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். “என் கேஸ் பரவாயில்லை” என்றார். சில மாதங்களில் மனதை நன்கு தேற்றிக் கொண்டார். அதோடு நில்லாமல் மீண்டும் கணினி பற்றித் தெரிந்து கொள்ளவும் ஒரு புதிய கணினி ஒன்று வாங்கவேண்டும் என்று கேட்டார். ஒரு கணினியும் வாங்கும் முனைப்பில் நான் இருந்த போது உடல் நலம் மிகக் குறைந்தது. அப்போது நான் கடைசியாக அவரை வீட்டுக்குப் பார்க்கப் போனேன்.

”கிழித்த நாராய்” கிடந்தார் என்று வழக்கமாகச் சொல்வார்களே .. அந்த வார்த்தைகள் அவரது படுக்கையறையில் நுழைந்து அவரைப் பார்த்ததும் மனதில் தோன்றியது. ஏற்கெனவே டயாலிசிஸ்ஸிற்குப் பிறகு உடல் மிக மிக மெலிந்து இருந்தார். ஆனால் இப்போது அவர் படுத்திருந்த கோலமே அச்சுறுத்துவதாக இருந்தது. உள்ளே நுழைந்து கட்டிலின் பக்கதில் நின்றிருந்தேன். அழுதிடக் கூடாது என்று திடப்படுத்திக் கொண்டேன். மெல்ல பக்கத்தில் அம்ர்ந்தேன். அவர் விழிக்கவில்லை. மெல்ல நெற்றியில் கை வைத்தேன். விழிக்கவில்லை. முத்தமிடத் தோன்றியது. குனிந்து நெற்றியில் மெல்ல முத்தமிட்டேன். விழித்து விட்டார். எழுந்திருக்க முனைந்தார். தடுத்தேன். சிறிது நேரம் படுத்திருந்தார். பின் நான் தடுத்தும் எழுந்து உட்கார்ந்தார். அதுவே எனக்கு ஆச்சரியம் தான்.

இருவரும் ஏதும் பேசவில்லை. பின்னால் மெல்லிய குரலில்”ஏனிப்படியெல்லாம் நடக்கிறது” என்றார். என்ன பதில் சொல்ல முடியும்.  அவர் உட்காரவும் சிரமப் பட்டதாகத் தோன்றியது. படுத்திருக்கச் சொன்னேன். மெல்ல எழுந்தார். என்னால் மேலும் சிரமப் படுத்திக் கொள்கிறார் என்று தோன்றியது. கிளம்புகிறேன் என்றேன். Ok.. We will meet என்றார். நிச்சயமாக அது .... நான் சுகமாகி மீண்டும் பார்த்துப் பேசிக்கொள்வோம் என்ற பொருளில் அவர் சொல்லவில்லை என்று தான் எனக்குத் தோன்றியது. மறுமையின் டச் அதில் இருந்ததாகத்தான் நான் நினைத்தேன். என் இறைமறுப்பு அவர் அறிந்தது தானே. அது அவருக்கு நினைவுக்கு அப்போது வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவரே ‘அது எப்படி” என்பது போல் ஏதோ ஒன்றை முணுமுணுத்தார்.  கைகளைப் பற்றி  ”நார்லு காட்டான்” என்றேன். எப்படி அவரால் முடிந்தது என்று நான் நினைக்கும் அளவிற்கு என் கைகளை மிக இறுக்கமாகப் பிடித்தார். எப்படி அத்தனை உறுதி வந்தது என்று ஆச்சரியப்பட்டு போனேன்.  கண்ணீர் வர முயற்சித்தது. இன்னும் அவரோடு இருந்தால் அழுது விடுவேன் என்று உணர்ந்தேன். கஷ்டப்பட்டு அவரை கட்டிலில் மீண்டும் உட்கார வைத்து விட்டு வெளியேறினேன்.

வீட்டின் வாசல் படிக்கு அடுத்து அவரது துணைவியாரிடம் இரண்டு வார்த்தைகள் பேசினேன். திரும்பிப் பார்த்தால் அவர் எப்படி கஷ்டப்பட்டு வெளியில் வந்திருப்பாரோ தெரியவில்லை. படுக்கையறையின் வாசல் வரைக்கு வந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து படுக்க வையுங்கள் என்று சொல்லி விட்டு வெளியேறினேன்.

மருத்துவ மனையில் பார்த்த போது அவர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நினைக்கின்றேன். என் பெயரைச் சொன்னதும் கண்கள் எடுத்தேறி என்னைப் பார்த்தது போல் தோன்றியது. 



எல்லாம் முடிந்து விட்டது ........



*


1054. Elango Kallanai ON DSL





*

அடிமேல் அடி என்பது எனக்கு இந்த வருடத்தில் அதிகம். 

எனது தாயார் ஜனவரியில் மறைந்தார். என்னுடைய ஆசிரியர் சாமுவேல் லாரன்ஸின் மறைவு அடுத்தது. 

ஒரு நாள் திருப்பாலையில் உள்ள இயற்கை அங்காடிக்கு வாழையிலைக் கட்டை எடுத்துக் கொண்டு போனேன். "சார் உங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கேன் , வரவா ?" என்றேன். "உன்னைப் பார்த்தால் உற்சாகம் தான். வா" என்றார்.திங்கள் வியாழன் வாரத்தில் இரண்டு நாட்கள் டயாலிஸிஸ். டயாலிஸிஸ் முடிந்த அடுத்த நாட்கள் சோர்ந்து இருப்பார். அன்று புதன். வீட்டுக்கு சென்றதும் தழுவிக் கொள்ள வந்தார். கால்களைத் தொட்டு வணங்கினேன். " இதையா உனக்கு சொல்லிக் கொடுத்தேன்?" என்று கடிந்து கொண்டார். 

எனது கல்லூரி நாட்களில் ஜனநாயகம் என்பதை கற்றுக்கொள்ள முதல்க் காரணம் அவரே. இளைஞர்களை அப்படி மதித்த ஒரு நம்பிக்கையாளரை இதுவரை நான் வாழ்நாளில் திரும்பவும் பார்க்கவில்லை. Young minds நாட்டைக் காப்பாற்றுவார்கள் என்று திடமாக நம்பும் பழைய தலைமுறை ஆசிரியர். 

கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவர் போராட்டம்.அன்று சக மாணவர்களை வகுப்பை விட்டு வெளியேற அழைக்க ஓடுகிறோம். ஒரு வகுப்பில் மாணவர்கள் வெளியே வருவதை ஆசிரியர் ஒருவர் தடுக்கிறார். அந்த வகுப்புக்கு வெளியே இருந்த கண்ணாடியிலான அறிவிப்புப் பலகையை கையால் உடைக்கிறேன். கைகளில் இரத்தம். தலைமறைவாக ஒட முயற்சி செய்கிறேன். லாரன்ஸ் பார்த்து விடுகிறார். கண்டிக்கப் போகிறார் என்று நினைத்து கூசி நிற்கிறேன். பையில் இருந்த பணத்தை எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் இருந்து கொண்டு கடைசி வரை என்னை எதுவும் கேட்டதேயில்லை.. 

முதுகலை வந்த போது துறைத் தலைவர் அவரே. மூன்று தாள்களில் எனக்குப் பிடிக்காத ஆசிரியர்கள் இருவர் மதிப்பெண்ணைக் குறைத்துப் போட்டு விடுகிறார்கள். நான் இவ்வளவு குறைவாக வாங்க வாய்ப்பில்லை என்று வாதாடுகிறேன். என்னுடைய துறைத் தலைவர் லாரன்ஸ் சக ஆசிரியர்களைப் பகைத்துக் கொண்டு நீ மறு திருத்தலுக்குப் போ என்றார். மூன்று தாள்களிலும் 15 மதிப்பெண்களளுக்கு அதிகம். பரீட்சைக்குக் கட்டிய பணம் முதற்கொண்டு எனக்குத் திருப்பித் தர கல்லூரியில் உத்தரவு. அதற்கு பின்னர் அந்த குறிப்பிட்ட ஆசிரியருக்கு என்னுடைய வகுப்புகளுக்குத் தரவில்லை. கடைசி வரை இந்த நீதியுணர்வு தான். லாரன்ஸ் சார். 

கிறிஸ்தவ kindness தான் எனது ஆசிரியரின் செய்தி. அவர் எனக்கு இன்னொரு தாய். எனது ஆன்மீகம் ஆசிரியர்களின் நீதியுணர்வில் கிளைத்து வந்தது. லாரன்ஸ் தான் எனக்கு அதைக் கொடுத்தார். 

அவரை வெறும் உடலாகப் பார்க்க முடியாமல் பதற்றத்தில் நகரை விட்டு ஓடினேன். 

இப்போதும் மூச்சிரைக்கிறது. போங்க சார்.



1053. Karthik Bharathi ON DSL





*

அருமையான ஆசிரியர்கள் கிடைத்தும் ஆங்கிலம் கைவரப்பெறாத துரதிர்ஷடசாலி நான்.எனக்கு Eng111,Eng 112க்கு ஆங்கில ஆசிரியர்கள்பேராசிரியர் DSL உம்,பேரா. ஐசக்கும் தான். முதுகலை தலைவராக .இருந்தும் இளங்கலை தலைவராக இருந்தாலும்,இருவரும் தமிழ்த்துறையின் இளங்கலை. முதலாமாண்டு இரு பருவங்களுக்கும் வந்து பெரும் ஆபத்பாந்தவர்களாக இருந்தனர். DSL என்று மானவர்களால் அன்போடு அழைக்கப்பட்ட பேராசிரியர். சாமுவேல்லாரன்ஸ் பேராசிரியர்களின் ,பேராசிரியர்களின் ,பேராசிரியர். 

அவர் வகுப்பறை நினைவுகளும்,கல்லூரி வகுப்பறைக்கு வெளியே பல பொழுதுகளும்.சீடுக்குமான உறவுகளும் நினைவு கூறத்தக்கவை
வகுப்பறை ஒன்றில் உங்கள் பெயர்களில் எத்தனை பேருடைய பெயர் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள். பலருடைய பெயர்களை தமிழ் பெயரல்ல என் நிராகரித்தார். வகுப்பு கலகலவும் காரசாரமாகவும் போனது. DSL சத்தமாக கூட பேச மாட்டார். 
சிரிப்பிலும்,எளிய கற்பித்தல் முறையிலும் வகுப்பை கட்டுகோப்பாக வைத்து இருப்பார். என் முறை வந்தது. என் பெயர். வகுப்பறையில் கார்த்தி மட்டும்தான். முதலாண்டில் முதல் பருவம். தமிழ் படிப்புனா என்ன என புரிபடாத காலம். தமிழ்பெயர். என வாதிட்டேன்.மாதம்.நட்சித்திரம்.தீபம் , முருகன். ஆண்டாண்டு காலமாக புழங்கி வருவது என்றெல்லாம் சொன்னேன். என் பெயர் தமிழ் பெயரல்ல என்பதை பொறுமையாக விளக்கினார். மேலும் உன் பெயர் இ விகுதியில் முடிவதால் தொல்காப்பிய்ற் விதிப்படி உன் பெயர் பெண்பாற் பெயர் என அதிர்ச்சியூட்டினார். கற்பிப்பதில் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் இருப்பார். 

சீடு துவங்கிய. போது கல்லூரி துணை முதல்வராக இருந்தார். மதுரை சீடு இன் முக்கிய வருகைதரு ஆசிரியராக விளங்கினார், ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டு உறசாகம் ஊட்டுவார். உன் ஆங்கிலத்தை மேம்படுத்தினால் உன் சமூகபணி செம்மையுறும் என்பார். உனக்கு சிறப்பு வகுப்பு எதாவது எடுக்கட்டுமா, சேர யாரிடமும் போய் படிக்கிறாயா.என் அன்போடு விசாரிப்பார், கல்லூரி நாடகங்கள்,light and sound ஷோக்கள் முடிந்த்தவுடன் கண்ணீர் கழியும் கண்களுடன் பாராட்டிவிட்டு விடைபெற மனமில்லாமல் விடைபெறுவார்.

பல முன்னேற துடித்த போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெரும் ஆதர்சமாக இருந்தார். சீடு. ஐ மறு உருவாக்கம் செய்த போது தொலைப்பேசியில் மதுரை சீடுக்கு கீழ் to support and empower the underprivileged என்பது. சரியாக இருக்குமா சார். 2007 இல் ஓய்வு பெற்று இருந்தார். கார்த்தி புது பெயரில் ஆரம்பியேன்.இன்னும் உன்னால் சிறப்பாக பணிசெய்ய முடியும். என்றார். மறு முனையில் நான் அமைதியாக இருந்தேன். சரி உன் இஷ்டம் .அதனுடன் children and young people என்பதை சேர்த்துக்கோ. என்றார். ஒவ்வொருமுறையும் இதை சொல்லும்போதும் எழுதும் போதும் நினைவில் வருவார், 

இன்னொன்றும் நினைவில் வருகிறது. தமிழ் பேராசிரியர். சுவாமினாதன் அவர்கள் கற்றுகொள்ளதகும் பாடமாக என்ற தலைப்பில் DSL பற்றி அவரின் பணி நிறைவு ஒட்டி கல்லூரி ஆண்டு இதழில் எழுதிய கட்டுரையும் நான் மறக்க இயலா ஒன்று. உண்மையில் கற்று கொள்ள தகும் பாடமாக ஆசிரியர்கள் இன்று கல்லூரிகளில் இருக்கிறார்களா. என்ன? 

பேராசிரியர். சாமுவேல் லாரன்சுக்கு என் புகழ் அஞ்சலி.

1052. Prabahar Vedamanickam ON DSL






*


பேராசிரியர் சாமுவல் லாரன்ஸ் உடல்நலக்குறைவின் காரணமாக இன்று மாலை மரணத்தைத் தழுவினார். நான் மாணவனாகச் சேர்ந்த 80களின் தொடக்கத்தில் அவர் சைக்கிளில் வந்து கவனமாக ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும் காட்சி நினைவிலிருக்கிறது. மீண்டும் நான் 87இல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது அவர் ஆங்கிலத்துறைத்தலைவராக இருந்தார். முதலாண்டு தமிழ் மாணவர்களுக்கு part I எனப்படும் மொழிப்பாடம் கற்பிக்க வருவார். இப்போதெல்லாம் துறைத்தலைவர்கள் முதுகலை தவிர வேறு வகுப்புகளுக்குச் செல்லமாட்டார்கள். ஒருநாள் அதுபற்றிக்கேட்டபோது ' அவர்களுக்குத்தான் அனுபவமிக்க நம்மை போன்ற ஆசிரியர்கள் தேவை' என்றார். 
பழைய தலைமுறை ஆசிரியர். காலையில் வந்து வளாகத்தைவிட்டு கடைசியில் போகும் சிலரில் ஒருவராக இருப்பார். ஓய்வுக்குப் பின் கல்லூரிக்கு ஏற்பட்ட பின்னடைவால் மிகுந்த மனப்பாதிப்புக்கு ஆளாகியிருந்தார். நல்லவேளை .. இன்று சுயநினைவோடு இருந்திருந்தால் தேசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை கேள்வியுற்று மிகுந்த மனத்துயரம் அடைந்திருப்பார். 

நன்றி சார். உங்களோடு பேசிக்கழித்த பொழுதுகளுக்கு. போய்வாருங்கள்

1051. அரிஅரவேலன் யரலவழள ...DSL






*


பேராசிரியர் திருமிகு சாமுவேல் லாரன்சு Samuel Lawrenceமறைந்தார். 1999ஆம் ஆண்டில் மனிதநேயம் இதழ் ஆசிரியர் அமெரிக்கா சென்றிருந்ததால், அவ்விதழைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பைப் பேராசிரியர் ஏற்றிருந்தார். அப்பொழுது அவ்விதழுக்கு மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்றை அனுப்பியிருந்தேன். அதனைப் படித்த பேராசிரியர் தொலைபேசியில் அழைத்து மூலக்கவிதையையும் எனது மொழிபெயர்ப்பையும் வரிக்குவரி ஒப்பிட்டுப் பாராட்டினார்; தொடர்ந்து எழுதுக என ஊக்குவித்தார். இதுவே அவரோடு எனக்கு ஏற்பட்ட அறிமுகம்.
சில மாதங்கள் கடந்த பின்னர், ஆசிரியர் திருமிகு சூலியசு நடத்திய பூந்தளிர் நூலகத்தில் பேராசிரியரை நேரிற்கண்டேன். நூலகர் இருவரையும் அறிமுகம் செய்துவைத்ததும் ஓரடி முன்னேவந்து புன்சிரிப்போடு எனது முதுகில் தட்டிக் கொடுத்தார்; கடந்த பிப்ரவரி 24ஆம் நாள் எனது வீட்டிற்கு தன் இணையரோடு வந்து நெடுநேரம் செலவிட்டுச் சென்ற இறுதிச் சந்திப்பு வரை நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கண்டதும் கட்டிக்கொண்டு முதுகில் தட்டுவார். உற்சாகமான மனநிலையிலிருந்தால் "இன்னொரு முறை தட்டட்டா" எனக் கூறிக்கொண்டே தட்டிக்கொடுப்பார்.
காலை நேர உலாவில் தான் கண்ட காட்சிகளை முன்னிறுத்தித் தனது சிந்தனைகளை வெளிப்படுத்தும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மனித நேயம் இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். அவற்றைப் பாராட்டினால், ஓர் உதட்டுச் சுழிப்பில் அப்பாராட்டைப் புறந்தள்ளுவார்; அக்கட்டுரைகளின் உள்ளடக்கம் பற்றிப் பேசத் தொடங்கினால் உற்சாகமாகிவிடுவார்.
பாராட்டி ஊக்குவிக்கும் உங்களின் குணத்தையும் உடல் நலிவுற்ற நிலையிலும் குன்றாத உங்களின் உற்சாகத்தையும் எண்ணியபடியே விடை தருகிறோம் சார்!


1050. DSL





*


As per his wish,
Prof. DSL 
would be cremated 
today (May 24th, 2019)
at 4 pm.

1049. DSL மறைவு





*



Prof. D. SAMUEL LAWRENCE 
of English Dept., 
and my good friend
has passed away - 23.5.19 - around 8 pm.









Wednesday, May 22, 2019

1048. ஒரு கிழவனின் புலம்பல் ... 1








*


நாளைக்குத் தேர்தல் முடிவுகள் ...


என்னென்னமோ நடக்குது. நல்லதும் இருக்குது. மிக மட்டமானதும் நடக்குது. ஆனால் இப்போ புலம்ப ஆரம்பிச்சது எல்லாமே அரசியல், சமூக விஷயங்கள் தான்.

போன பாராளுமன்ற ஆட்சியில் காங்கிரஸ் கட்சி மீது பெரும் வெறுப்பு. இலங்கை மக்கள் அழிப்புக்கு, வெளியே தெரியாத அளவிற்கு நேரு குடும்பம் ஒரு பெரிய காரணம் என்பது என் அவதானிப்பு. இதனால் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் நினைத்திருந்தேன். ஆனால் அதற்காக பிஜெபி கட்சிக்கு வாக்களித்திருப்பேன் என்றும் நினைத்து விடக் கூடாது.

இந்த ஆண்டு நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் ஒரே நாடு .. ஒரே மொழி . ஒரே மதம் .. ஒரே கட்சி என்ற தத்துவத்தில் முத்தெடுக்கும் மோடி கட்சியின் மீது அத்தனை வெறுப்பு. அதானிக்கும் அம்பானிக்கும் பிரதமராக இருந்து “அள்ளித் தரும்” பிரதமர் அந்த உறவுகளோடு இருக்கும் பாசத்தில் கோடியில் ஒரு பகுதியையாவது இந்திய மக்கள் மீது வைத்திருந்தாலே போதுமென்று நினைக்கும் அளவிற்கு அவரது கண் மறைத்த பாசத்தின் மீது அசாத்திய கோபம் வந்தது. நாட்டையை அந்த இருவருக்கும் + அமித் ஷா மகனுக்கும் பிரித்துக் கொடுப்பதில் அவருக்கிருந்த வெறி அச்சத்தை ஏற்படுத்தியது. 

அதுவும் அவருக்கு தமிழ்நாட்டின் மீது ஏன் அத்துணைக் கோபம் .. வஞ்சம் என்றும் தெரியவில்லை. “குறி வைத்து அடிப்பது” என்பார்களே அதை அவர் தொடர்ந்து செய்து வந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. அத்தனை பெரிய ஒரு  புயல் வீசி தமிழ்நாடு தவித்த போது கூட உதவி செய்ய மறுத்த பெரிய “மாற்றாந் தாயாக” இருந்து வந்தார். இந்த ஆண்டு நீட் தேர்வு இல்லை என்று சொல்லிச் சென்ற அமைச்சர் நிர்மலா அதன் பின் அதைப் பற்றி ஏதும் பேசாமடந்தையாகி நீட் தேர்வை நடத்தியது... இன்றும் ரயில்வே பணியிடங்களில் வட இந்தியர்கள் ஏறத்தாழ எல்லாப் பணியிடங்களையும் கபளீகரம் செய்தது என்று எல்லாமுமே ஆன்டி-இண்டியன் என்பது மாதிரி ஆன்டி-தமிழன் என்றாகி விட்டது.

இங்கு எடுத்த திட்டங்கள் எல்லாமே தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் திட்டங்களாக மனதில் தோன்றுகிறது. அதற்கு ஒத்து ஊத இப்படி ஒரு தமிழக அரசு இடுப்பொடிந்த ஊமையாக இருப்பது வேதனையை அதிகமாக்குகிறது.

ஒரு வேளை தமிழ்நாட்டில் அடுத்து திமுக அரசு வரலாம். அந்த அரசை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. சரியான “அடிதடிக் கூட்டம்” என்று பெயர் வாங்கிப் பல காலமாகி விட்டது. காசில் மட்டும் தான் கண் என்ற நினைப்பில் அரசாளுவார்கள் ... மத்திய அரசிலும் பதவிகள் பெற்று பணம் குவிப்பதே குறிக்கோள் என்றே பலரும் வெளிப்படையாகப் பேசி வருகிறார்கள். மே 18 அன்று தூங்கிய நிலையில் இருந்து தங்கள் பதிவிகளைத் தற்காத்துக்  கொள்வார்கள் என்ற நிலையில் தான் இருந்தது அந்தக் கட்சி.

எங்கும் இருள் சூழ்ந்து வருவதாக எனக்குத் தோன்றுகிறது. அது உண்மையோ என் மனதின் மருட்சியோ தெரியவில்லை.
மீண்டும் “ரேடார் பிரதமர்” வந்தால் அவரது முதல் கல்லெறி கல்வி மீது தானிருக்கும் என்று நினைக்கின்றேன். கல்வி மாநில அதிகாரத்தில் வருவதே நல்லது. ஆனால் மத்திய அரசு கொடுக்கும் நிலையில் இல்லை; அதைக் கேட்கும் நிலையில் மாநில அரசு இருக்காது. தாய்மொழியைத் தள்ளி வைக்க இப்போதே ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கல்வி பறி போகும்; தாய் மொழி பிடுங்கி எறியப்படும்; வரலாற்று ஆய்விடங்கள் ஒரேயடியாக  மூடப்படும்; மொழியார்வம் துடைத்தெறியப்படும். இந்தி பொதுமொழியாகும்; வடமொழி கோலோச்சும். புராணக் கதைகள் இனி அறிவியல் பாடமாகும். பிள்ளையாரின் ப்ளாஸ்டிக் சர்ஜரியும், டெஸ்ட் ட்யூப் பேபிகளான கெளரவர்களும், ரேடார் பாடத்திட்டங்களும், ஜோதிடம், வாஸ்து, ஜாதகம், ... போன்றவையெல்லாம் பாடத்திட்டதில் இடம் பெறும். அறிவியல் கொழுந்து விட்டு எரியும் காலம் ஆரம்பித்து விட்டது.

மனம் சோர்ந்து விட்டது. நாமும் கீழானவர்கள்; நம்மை ஆள்பவர்கள் நம்மை விடக் கீழானவர்கள். மக்களாகிய நமக்குச் சட்ட திட்டங்கள் என்று ஏதுமில்லை; அவைகளை நாம் மதிப்பதோ அதன் வழி நடப்பதோ என்றும் இல்லை. மருந்துகளிலும், உணவுப் பொருளிலும், மாங்காய்களைப் பழுக்க வைப்பதிலும் கூட நாம் கலப்படம் செய்யும் அளவிற்கு மனசாட்சையைத் துச்சமாகத் துடைத்தெடுத்த மாக்கள் நாம். எல்லா ஏரிகளிலும் கட்டிடங்கள் ... அதிலும் அரசே கட்டும் கட்டிடங்கள். மணல் வாருவதில் நம்மை அடித்துக் கொள்ள ஆட்களே கிடையாது. எப்படி நம் எல்லோருக்கும் சுத்தமாக மனசாட்சியே இல்லை என்று (என்னையும் சேர்த்து தான்!) கேட்டுக் கொள்கிறேன். “என் வேலை - நல்லதோ கெட்டதோ - அது வெற்றிகரமாக முடிய வேண்டும்; அதனால் யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன!” என்ற பெரும் வாழ்க்கைத் தத்துவம் நமக்கு. நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன.. என் மேல் பாயக்கூடாது” என்றதொரு  பெரும் தத்துவம் நமக்கு.

இப்படி மனசாட்சியைத் துடைத்தெறிந்த மக்கள் காசு வாங்கிக் கொண்டு தேர்ந்தெடுத்தால் எந்த மாதிரி தலைவர்கள் அவர்களுக்குக் கிடைக்கும். அப்படித்தான் நமது மாநிலத் தலைவர்கள் இருக்கிறார்கள். (நேற்றுகூட டிவியில் பார்த்தேன். மோடி எல்லா கூட்டணித் தலைவர்களை விருந்துக்கு அழைத்திருக்கிறார். ஒவ்வொருவராக வரவேற்கிறார். நம் டயர் நக்கி அமைச்சர் காலில் விழ குனிந்து விட்டார். ரேடார்  நல்ல வேளையாகத் தடுத்து விட்டார்.) காசு வாங்கி ஓட்டளித்தால் எப்படிப்பட்ட தலைவர்கள் நமக்குக் கிடைப்பார்கள்? இப்படித்தான் கிடைக்கும். யாரைத்தான் நாம் நோவது? முதலில் நம்மை நோக்கி தான் நொந்து கொள்ள வேண்டும்.

எப்படியோ... மனமெங்கும் இருள். ஒளியைத் தூரத்திலும் பார்க்க முடியவில்லை. இத்தனை சோகமான்னு நினைத்தேன். இது உனக்குத் தேவையில்லை என்று மனசு சொன்னது. கொஞ்சம் அது சொல்வதைக் காது கொடுத்து கேட்டேன்.

“உனக்கே வயதாகிப் போய் விட்டது ... இன்னும் எத்தனை நாளோ? ஆனால் you're so lucky! வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நிறைய பார்த்தாகி விட்டது. உலகத்தையே உள்ளங்கையில் சுருட்டி மொபைல் போனிற்குள் கொண்டு வந்தாகி விட்டது. இருக்கவே  இருக்கிறார் கூகிள் ஆண்டவர். கேட்டதையெல்லாம் தருகிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூட இத்தனை knowledge explosion-யை எதிர் பார்த்திருக்க மாட்டோம். Alvin Toffler சொன்ன Future Shock என்பதை நன்றாகவே பார்த்து, அனுபவித்தாகி விட்டது. இன்னும் என்ன வேணும். அறிவியல் இன்னும் உயரும்; ஒரு “பெட்டியில்” இருந்து மின்சாரம் தயாரித்து விட்டாராம் ஒரு தமிழர். இன்னும் மனிதன் உயர உயர பறக்கப் போகிறான். அதன் அறிகுறிகள் பலவற்றையும் பார்த்தாகி விட்டது. இனி என்ன? ”


”எதிர் நிற்கும் காலமோ சிறிது. இந்த வயதில் இத்தனை உயரம் மனித குலம் வளர்ந்ததைப் பார்த்தாகி விட்டது. இனி உனக்கு என்ன? நாளை நாடு என்னாகும்? .. நம் மாநிலம் என்னாகும்? ... என்ற கவலை உனக்கெதற்கு? வரும் தலைமுறையினர் தலைவிதி அது; அதை அவர்கள் கவனித்துக் கொள்ளட்டும்; நீ ஏன் அதைப் பற்றிக் கவலைப் படுகிறாய்?” என்று மனது யோசனை கூறியது. அதைக் கேட்டு நானும் என் மனதைத் தேற்றிக் கொண்டேன்.

”இருக்கவே இருக்கிறது சூப்பர் சிங்கர் ... பிக் பாஸ்... அக்கடான்னு படுத்துக்கிட்டு இதையெல்லாம் பார்த்து சந்தோஷமா காலத்தைக் கடத்த வேண்டியது தான். உட்கார்ந்திருந்தா கைப்பேசியில் scrabble விளையாட வேண்டியது தான். ஏன் கண்டதற்கும் கவலைப்படுகிறாய், கிழமனமே! -- இப்படி மனசு சொன்னது. அதைக் கேட்டதும் நானும் ஒத்துக் கொண்டேன்.

இனியாவது மனசு சொன்னதை ஒழுங்கா கேட்டு நடக்க ஆரம்பிக்க வேண்டும்.

*



Saturday, May 11, 2019

1047. எங்க காலத்திலெல்லாம் ... 5 (மீசைகளின் பரிணாமம்)





*
Alvin Toffler எழுதிய Future Shock என்ற எதிர்காலவியல் நூல் வெளிவந்த போது  அது ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. 'நாளை’ வரப்போகும் knowledge explosion பற்றிய ஒரு எச்சரிக்கையை அது தந்தது. எப்படிக் காலங்களும் கருத்துகளும் மாறிப் போகும். அதற்காக தயாராக இல்லாத அனைவருக்கும் மாற்றங்கள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கும் என்ற பொதுக் கருத்தில் நிறைய சான்றுகளோடு அந்த நூலை வெளியிட்டிருப்பார்.

ஒரு பகுதியில் நம்முடைய நாகரீகங்கள் - fashions - இப்படி தொடர்ந்து மாறும் என்றும் கூறியுள்ளார்.

உண்மை தானே. நம்மூர் பெண்களின் ஜாக்கெட்டின் கை நீளம் மட்டும் எடுத்துப் பாருங்களேன். மேலே போகும் .. கீழே வரும். மேலே போகும்போது puff வரும் ... கீழே வரும்போது இப்போதுள்ளது மாதிரி மெல்லிய துணிவரும். தோளுக்கும் மணிக்கட்டுக்கும் நடுவில் பல இடங்களில் பஸ் ஸ்டாப் மாதிரி அங்கங்கே நின்று .. நீண்டு .. என்னென்னமோ நடக்கும். தமிழில் ஒரு சொலவடை சொல்வார்கள்: முப்பது ஆண்டுகள் தொடர்ந்து தாழ்ந்த குடும்பமும் கிடையாது; வாழ்ந்ததும் கிடையாது என்பார்கள். அது மாதிரி தான் fashions.

ஆண்களின் உடையில் நமது நீள் கால்சட்டைகளுக்குத்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்? அறுபதுகளில் skin tight என்று ஒரு fashion. அதுவும் அந்தக் காலத்தில் ஏறத்தாழ முழுமையாக பருத்தித் துணியில் தான் அதிகம் தைப்போம்.60களின் கடைசியில் தான் மெல்ல டெர்லின், நைலான், டெர்ரி காட்டன், ஷார்க் ஸ்கின் ... என்று மெல்ல வகை வகையாகத் துணிகள் வர ஆரம்பித்தன. ட்வீட், உல்லன் எல்லாம் கொஞ்சம் எட்டாத உயரம். அந்த சமயத்தில்  ரொம்ப காஸ்ட்லியான துணியாக நான் நினைத்திருந்தது gaberdine என்றொரு வழுவழுப்பான, பளபளக்கும் ஒரு பருத்தித் துணி தான்.


இந்த மாதிரி பருத்தி ஆடைகள் மட்டுமே அதிகமாக இருந்த நாளில் skin tight என்று ஒரு fashion வந்தது. நான் ஒன்றே ஒன்று தைத்தேன். பிரச்சனை என்னவென்றால் உடை அணிய ஆரம்பிக்கும் போது  கால்களை ஒரு வழியாக உள்ளே நுழைத்துப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் கழற்றுதற்கு தனியொரு  டெக்னிக் இருந்தது. மிகவும் இறுக்கமாக இருக்குமா .. அதனால் குதிகாலில் ஒரு நோட்டுப் பேப்பரை வைத்துக் கொண்டு கால்சட்டையில் முதல் கீழ்பகுதியை இழுத்து பேப்பர் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வீட்டில் தம்பி, தங்கை என்று யாரையாவது நயந்து வைத்துக் கொள்ள வேண்டும். first step-ல் கால்சட்டையை இப்படி வைத்துக் கொண்டு ஒரு கைலியை மேலாகக் கட்டிக் கொண்டு தம்பி / தங்கைகளைக் கூப்பிட்டு, நயந்து பேசி கால்சட்டையை உருவி எடுக்கச் சொல்ல வேண்டும். அப்போது நிற்க முடியாதில்லையா ... கட்டில் மல்லாந்து படுத்துக் கொண்டு ... அம்மாடி ஒரு வழியா இப்படித்தான் அதைக் கழற்றணும். ஆனால் இப்படி ஒரு தடவை அல்லது ஒரு முறைதான்  போட முடியும். எல்லாம் பருத்தித் துணியா .. ஒரு தடவை போட்டுக் கழட்டினாலே கசங்கி சுருக்கங்களோடு இருக்கும். இப்படி ஒரு கால்சட்டை தைத்து அதனோடு  மல்லுக் கட்டியதிலிருந்து அதன் மேலுள்ள ஆசை போய் விட்டது.

ஆனால் இன்னொரு நண்பர் இருக்கிறார். அவர் இதிலெல்லாம் கில்லாடி. அவரைப் பற்றி கொஞ்சம் பொருத்து சொல்கிறேன்.

1964-66 முதுகலை படித்த ஆண்டுகள். நான் தியாகராஜர் கல்லூரியில் இளம் கலை முடித்து அங்கேயே முதுலை தொடர்ந்தேன். மதுரையில் - மதுரையில் என்ன.. தென் தமிழகத்திலேயே - மதுரையில் மட்டும் இரு கல்லூரிகளில் முதுகலை இருந்தன. இவைகளை விட்டால் சென்னையில் 3 கல்லூரிகள் என்றுதான் இருந்தன மொத்தம் மாநிலத்திலேயே 5 கல்லூரிகளில் மட்டும் எங்கள் பாடத்திட்டம் முதுகலையில் இருந்தது. அப்போது. ஒரு வழக்கம். நாங்கள் இன்னொரு கல்லூரியான அமெரிக்கன் கல்லூரிக்கு ஒரு நாளும், பல்கலைக்கு ஒரு நாளும் வகுப்பிற்குப் போக வேண்டும். அதே போல் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் எங்கள் கல்லூரிக்கு வரவேண்டும். Inter-collegiate classes.  ஒரு கல்லூரியில் மாணவர்கள் ... ஆனால் மூன்று கல்லூரி ஆசிரியர்கள். ஒட்டு மொத்தமாக அங்கங்கு போவோம். அதில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மீது எனக்கும் என் வகுப்புத் தோழர்களுக்கும் எப்போதும் ஒரு பொறாமை. பல காரணங்கள். அட .. ஒண்ணே ஒண்ணு சொல்றேனே .. எங்கள் வகுப்பில் மாணவிகளோடு நாங்கள் கொஞ்சம் பேசினாலே எங்கள் பேராசிரியர்கள் முறைப்பார்கள். ஆனால் பொதுவாக அந்த பழைய பஞ்சாங்கத்தனம் அமெரிக்கன் கல்லூரியில் கிடையாதாம்.ஆனால் நாங்கள் மாணவர்களாக இருந்தபோது அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர்  எஸ். ஆப்ரஹாம் அத்தனை நல்ல மனிதர். மாணவர்கள் எல்லோரும் அவருக்குச் செல்லப் பிள்ளைகள். அவர் மதியச் சாப்பாட்டை சுவை பார்க்க மாணவர் கூட்டம் சுற்றி நிற்கும். நாங்கள் ஜெயில் பறவைகள். அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் சுதந்திரப் பறவைகள்- எல்லா விஷயத்திலும்!

இதனால் என் வகுப்புத் தோழர்கள் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடம் அதிகமாகப் பழக மாட்டார்கள். ஆனால் எனக்கு அதில் இரு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவர் Tagore.  சிலரின் பெயர்கள் அவர்களுக்கு சில கஷ்டங்கள் தரும். என் பெயரை ஷியாம், ஷாம் என்று இஷ்டப்படி உச்சரிக்கும் போது கஷ்டமாக இருக்கும். அதைப் பற்றி கூட இங்கே எழுதியுள்ளேன்... வாசித்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி தான் Tagore-க்கும். அவர் பெயரை தாகூர் என்று நாம் வழக்கமாகத் தமிழில் சொல்வோமே .. அதே மாதிரி சொன்னால் மனுஷனுக்குப் பிடிக்காது. ஆங்கிலத்தில் சொல்வது போல் சொல்லுங்கள் என்று கராறாகப் பேசி விடுவார். அவரிடம் தான் முதலில் பழகினேன்.  முனைவர் பட்டம் எல்லாம் பெற்று இளம் வயதிலேயே இறந்து விட்டார்.

அவர் மூலமாக இன்னொரு நண்பர் கிடைத்தார். பெயர் ப்ரின்ஸ். பயங்கர ஸ்டைல் மன்னன். தலைமுடி வெட்டிலிருந்து கால்களில் போடும் பாதணி (காலணி) வரை எல்லாமே தனி ஸ்டைல் தான். அதனால் தானோ என்னவோ என் வகுப்புத் தோழர்களுக்கு அவர் மேல் எப்போதும்  ஒரு கண். அதுவும் அந்தக் காலத்தில் skin tight போடுபவர்களே மிகக் கொஞ்சம். அதிலும் அந்த pants  போடும்போது அதோடு இடையில் கட்டியிருக்கும் இடை வார் - belt- அந்தக் காலத்து fashion  படி மிக மிக அகலம் குறைந்ததாக இருக்க வேண்டும். நானெல்லாம் அந்த பெல்ட் வாங்கவில்லை. ஆனால் இந்த ஸ்டைல் மன்னன் ஒரு பெல்ட் போட்டிருப்பார். அவரும் ஒல்லி .. அவர் பெல்ட்டும் அத்தனை ஒல்லி. அவர் மேல் என் வகுப்பு மாணவர்கள் ஏதாவது comment அடித்துக் கொண்டிருப்பார்கள்.என்னிடம். “ இங்க பார்ரா ... அரைஞாண் கயிரு மாதிரி இத்தனூண்டு பெல்ட் போட்டு வர்ராண்டா உங்க ஆளு” என்பார்கள்.

அட .. சொல்ல நினைத்தது மீசை பற்றியது. எங்கெங்கோ போய் விட்டேன். உண்மையிலேயே Alvin Tofflerசொன்னது போலவே இந்த மீசை தாடியெல்லாம் எனக்கு நிறையவே ஷாக் கொடுத்திருக்கிறது.  ஒரு சின்ன சான்று: எங்க காலத்தில எல்லாம் கல்யாண மாப்பிள்ளை வழு வழுன்னு ஷேவ் பண்ணியிருக்கணும். முதலில் சில மாப்பிள்ளைகளை ட்ரிம் பண்ணிய குட்டித் தாடியோடு பார்த்த போது Alvin Toffler சொன்ன ஷாக் எனக்கும் ஆனது. கர்ணன் அப்டின்னு ஒரு பெரிய cinematographer இருந்தார். அவர் கட்டபொம்மன் படத்தில சிவாஜி வச்சிருந்த மீசை மாதிரியே வச்சிருந்தார். It was an exception... so it became a very familiar one. ஆனால் தேவர்மகன் வந்த பிறகு தான் அந்த மீசை யார் வேணும்னாலும் வச்சிக்கலாம் என்ற நிலைக்கு வர முடிந்தது. முந்தியெல்லாம் “படிச்சவங்க” அந்த மாதிரி மீசையெல்லாம் வைக்கவே முடியாது. No social recognition. இப்போ இது சாதாரணமா ஆயிரிச்சி.




STEPHEN
PRINCE  '60s


நானே நான் .. ‘72

எங்க அறுபதுல நாங்க வச்சிருந்த மீசைக்கு மூணு சாம்பிள் மேலே கொடுத்திருக்கிறேன்.

அந்தக் காலத்து கதாசிரியர்கள்  ஒரு கதாநாயகனை வர்ணிக்கும் போது ”பென்சிலால் வரைந்தது போன்ற மெல்லிய மீசை” என்றுதான் எழுதுவார்கள். எம்ஜிஆருக்கெல்லாம் மீசை ரொம்ப சிம்பிள். நடுவில் கொஞ்சம் இடம் விட்டு பென்சிலால் அந்தப் பக்கம் ஒரு கோடு... இந்தப் பக்கம் இன்னொரு கோடு. முடிஞ்சிது. நம்ம ஜெயசங்கரைப் பாருங்க. அதே மாதிரி தான். நாங்களும் அப்படித்தான் வைத்திருந்தோம். அதில் மீசை சரியாக சைஸ் செய்வது ஒரு பெரிய கலை. பிளேடைத் தனியாகக் கையில் எடுத்து ஒவ்வொரு முடியாகச் சரி செய்வோம். செய்வோமோ என்னவோ .. நான் செய்தேன்.ப்ரின்ஸ் வைத்திருப்பது போல் நடுவில் கோட்டு மீசை. முடியும் இடத்தில் கொஞ்சம் கூடுதல். இது ஒரு டைப்! அல்லது ஸ்டீபன் மாதிரி கொஞ்சம் கீழே இழுத்துக் கொள்வது இன்னொரு ரகம்.

நாளாக நாளாக நாளொரு மேனியும் பொழுதொரு சைசுமாக அது வளர்ந்து மூக்கிற்கும் வாய்க்கும் நடுவில் உள்ள இடத்தை முழுவதாக இப்போது ஆக்கிரமித்துக் கொண்டது. எங்கள் வயசுக்கார ஆளுக பலபேர் இன்னும் அந்தக் கோட்டு மீசையோடு போவதைப் பார்க்கும் போது அந்த காலத்து நினைவு வரும். ஆனாலும் சில மீசைகள் மட்டும் மிகப் பிரபலமாகி விடும்.நம்ம ஊருக்கு கட்டபொம்மன் மீசை ஒரு தனி ரகம். ஆனால் உலகத்துக்கே ராட்சசன் ஹிட்லரின் பில்ட்டர் மீசை தனி ரகமாக நின்றது. அச்சமூட்டும் அந்த மீசையை வேணுமென்ற நகைப்பதற்குரிய ஒன்றாக மாற்றினார் சார்லி சாப்ளின்!

மீசை அளவு பெருத்தது. ஆனால் சைட் பர்ன் பல உருவமெடுத்துள்ளது. பல ஏற்ற இறக்கங்கள். இப்போது ஏறத்தாழ மக்களுடைய concentration எல்லாம் தாடிப்பக்கம் வந்து விட்டது என்று நினைக்கின்றேன்.பல ஆண்டுகளாக சைட் பர்ன் பற்றி யாரும் மெனக் கெடுவதில்லை. ஆனால் எழுபதுகளில் அதுவும் பல உருவம் எடுத்தது. சைட் பர்ன் அப்படியே வளர்ந்து தாடியோடு இணைந்து விடும். அல்லது மீசையோடு ஒட்டி விடும். இப்போது யாரும் அந்த ஏரியாவில் மெனக்கெடுவது இல்லை போலும். தாடி தான் இப்போதைக்கு ஓங்கிய நிலையில் உள்ளது.  ட்ரிம்மர் வேறு வந்து விட்டதா? மோடி மாதிரி ஒழுங்காக ஷேப் செய்த தாடிகள் இப்போதைய fashion.

அவரு சொன்னது மாதிரி 30 ஆண்டுகளுக்குள் எத்தனை மாற்றங்கள். மீசையைக் கோடா வச்சா என்ன ... முழுசா வச்சா என்ன? ஆனாலும் காலத்திற்கு ஒரு கோலமாக அவை மாறுகின்றன. ஆனால் எப்படி யாரால் அது மாறுகின்றது என்று யாராலும் சொல்ல முடியாது. எப்படியோ மாறுகின்றன.


பாருங்க இப்போது எங்க மூணுபேர் மீசையையும்.
முதலில் உள்ள நண்பர் பிரின்ஸ். நான் சொன்ன அந்த ஸ்டைல்காரர். பாத்தீங்கல்ல .. அப்போ மட்டுமில்லை... தல இன்னைக்கும் ஸ்டைல்காரர் தான்.









அடுத்த நண்பர் ஸ்டீபன் எனக்கும் பிரின்ஸிற்கும் அமெரிக்கன் கல்லூரியில்ஓராண்டு ஜூனியர். ;படித்த காலத்தில் அதிக தொடர்பில்லை. ஆனால் அவரது மெல்லிய வளர்ந்த உடல் எனக்கு அப்போதே பிடிக்கும். கொஞ்சம் majestic look கொடுப்பார். இப்போதும் பாருங்களேன் .. என்னை மாதிரி தொப்பையெல்லாம் இல்லாமல் ‘கச்சின்னு’ இருக்கிறார். எல்லாம் ஒரு கொடுப்பினை! அமெரிக்கன் கல்லூரியில் ஒரு பேராசிரியர் - - J.C.B.Abraham. - பரிணாமத் துறையில் வல்லுநர்.  இவருக்கு அவர் ஓர் ஆதர்சன ஆசிரியர். அதனால் அத்துறையில் இவரும் ஒரு பெரும் புள்ளி.. அரசுக்கல்லூரிப் பேராசிரியர். இவர் சமீபத்தில் தன் இரு படங்களையும் முகநூலில் போட்டிருந்தார். அவரும் ஒரு பரிணாம அவதானியா. அதனால் எனக்கு இந்த மீசையின் பரிணாமம் நினைவுக்கு வந்தது. 

அதன் பலன் தான் இந்தப் பதிவு.




STEPHEN

























Thursday, May 09, 2019

1046. வெகுநாட்கள் கழித்து ... கிறித்துவமும் ஒரு விவாதமும்





*

                           
கீ போர்ட் வாசிக்கிற பலர் 
கை நிறைய கலர் கலர்
கயிறுகளா கட்டியிருக்காங்க.
இசையை அவங்க தர்ராங்களா?
அல்லது கயிறுகள் தான் தருகின்றனவா?

கடவுளே...!


என்று முகநூலில் அங்கலாய்த்திருந்தேன். அதற்கு வந்த சில பின்னூட்டங்களில்.  எனக்கும் தம்பி ஒருவருக்கும் (எங்கள் கல்லூரி மாணவர்; இப்போது கிறித்துவ பாதிரியார்.) கிறித்துவம் பற்றிய விவாதம் ஒன்று வந்தது. அந்தப் பின்னூட்டங்களை இங்கே பதிவிடுகிறேன்.





C Sam Jeffry G Sam George 
சரி தான் அண்ணே...
G Sam George எது தம்பி சரி? நான் எழுதிய அடுத்த பதிவா? ஓ! நன்றி, தம்பி

C Sam Jeffry G Sam George 
ஆமாம் அண்ணே...
மிகச் சாி


G Sam George C Sam Jeffry //எனக்குள்ள ஆச்சரியம். பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் ஒரு சேர கடவுள் இஸ்ரயேலர்களைத் தாங்கள் தேர்ந்தெடுத்த இனமாக வைத்திருப்பதை ஆணித்தரமாக திரும்பத் திரும்ப சொன்ன பின்னும் எப்படி இன்று கிறித்துவத்தை அனைத்து மக்களுக்கான மதமாக மாற்ற முடிந்தது? எப்படி இன்னும் விசுவாசிகளுக்கு பிதாவும், மகனும் எல்லா மக்களுக்கான கடவுள் என்று நம்ப முடிகிறது?// ஆக இது சரியென்கிறீர்களா, தம்பி?


C Sam Jeffry G Sam George 
அருமை அண்ணே.
நல்ல கேள்வி.

பெரும்பாலும் பலர் மனதிலும் தொக்கி நிற்கும் கேள்வியை நீங்கள் வெளிப்படையாய்க் கேட்டிருக்கிறீா்கள்.

உங்கள் கேள்வியிலேயே விடை இருக்கிறது.

அது பழைய ஏற்பாடு.

பழைய ஏற்பாட்டு மரபுகள் பலவற்றையும் புதிய ஏற்பாடு புணரமைத்துப் புரட்டிப் போடுகிறது.

உதாரணமாக...

பழைய ஏற்பாட்டில் கத்தியால் குத்திக் கொன்றால் தான் கொலை.

ஆனால்...

புரட்சிப் புதிய ஏற்பாட்டிலோ, சகோதரனைப் பகைத்தாலே கொலை.

பழைய ஏற்பாட்டில் ஒரு பெண்ணோடு புணர்ந்தாலே விபச்சாரம்.

ஆனால் புதுமைப் புதிய ஏற்பாட்டிலோ ஆசையோடு பாா்த்தாலே விபச்சாரம்.

பழைய ஏற்பாடு அசையும் அசையாச் சொத்துகள் அவசியம் எனவும் அவற்றை வாாி வழங்குவதே தேவனுடைய வேலை என்றும் முனைப்பாய்ச் சொல்கிறது.

ஆனால்....புதிய ஏற்பாடு சொத்து சேர்த்தால் துருப் பிடிக்கும். பூச்சியரிக்கும்.
சொத்து சேர்த்தால் நிலைவாழ்வில்லை என்று நிறுவுகிறது.

இன்னும் நீங்கள் பழைய ஏற்பாட்டைப் படிக்கும் போது...

பகைவனைப் பழி தீா்க்க அவனைக் கொன்றழிக்கத் தேவனிடமே இறைஞ்சும் வழக்கம் இருந்ததை அறியலாம்.

சங்கீதம் நெடுகிலும் சத்துருவைச் சாிக்குச் சாி கட்டச் சொல்லித் தாவீது தொடா்ந்து வேண்டுவதைப் பாா்க்கலாம்.

ஆனால்...

புதிய ஏற்பாட்டு நாயகர் இயேசு இவற்றை எல்லாம் மாற்றிப் புது வரலாறு எழுதுகிறாா்.

கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் எனக் கேள்விப்பட்டிருக்கிறீா்களே...
நான் உங்களுக்குச் சொல்கிறேன்...சத்துருவைச் சிநேகியுங்கள்
எனப் புதுவிலக்கணம் எழுதுகிறாா்.

ஆக...

பழைய ஏற்பாட்டினின்று புதிய ஏற்பாடு முற்றிலும் முரணாகிறது.

புதிய ஏற்பாட்டில் நேசர் உலகத்தினர் எல்லாருக்குமானவராகத் தன்னை அறிமுகிக்கிறாா்.

உலகம் எங்கும் போய் எல்லாருக்கும் நற்செய்தி அறிவிக்க ஊழியா்களுக்கு ஆணை இடுகிறாா்.

பாவிகளை இரட்சிக்க உலகிற்கு வந்தாரே ஒழிய...
இஸ்ரவேலருக்கு மட்டுமல்ல.

எல்லா இடங்களிலும் தாம் எல்லாருக்கும் பொதுவானவா் என்கிற நம்பிக்கையை முனைப்பாய் முன்வைக்கிறாா்.

அவாின் சீடர்களும் சென்னை வரை வந்து நற்பணி ஆற்றினா்.

இவற்றை அடிப்படையாய்க் கொண்டு பாா்க்கையில் நேசா் எல்லாருக்குமானவா் என்பது உறுதியாகிறது.

சாி தானா அண்ணே....

என் அறிவிற்குத் தகுந்தவாறு நான் முன்வைக்கும் விடயங்கள் அண்ணே.


C Sam Jeffry வாய்ப்பிற்கு நன்றி அண்ணே.



  • G Sam George //புதிய ஏற்பாட்டு நாயகர் இயேசு இவற்றை எல்லாம் மாற்றிப் புது வரலாறு எழுதுகிறார்.?? 
    ஓ! First edition ... second edition மாதிரியா? நல்லா இருக்கே! பிதா - first editon author எழுதியதை - சுதன், அதாவது புதிய ஏற்பாட்டு நாயகர் second edition author - திருத்தி எழுதி விடுகிறார். ஒரே கடவுள் என்பீர்கள் . இரண்டு எதிரும் புதிருமான ஏற்பாடுகளைக் காண்பிப்பீர்கள். அப்பட்டமான முரண்பாடாக இது உங்களுக்குத் தெரியவில்லையா, தம்பி? 
    // கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் எனக் கேள்விப்பட்டிருக்கிறீா்களே...
    நான் உங்களுக்குச் சொல்கிறேன்...சத்துருவைச் சிநேகியுங்கள்
    எனப் புதுவிலக்கணம் எழுதுகிறாா்.//
    இந்த அப்பட்டமான contraditction உங்களுக்குப் புரியவில்லையா? விசுவாசம் கண்ணை மறைத்து விடுகிறதா? எப்படி, தம்பி? ஒவ்வொரு கடவுளுக்கும் - பிதா & சுதன் - தனித்தனி philosophyயா தம்பி?

  • C Sam Jeffry G Sam George 
    அண்ணன்!
    நிச்சயமாக...

    இருவேறு தத்துவங்களே.
    முன்னது மனிதர்களை நேசித்துக் கொடுத்த சுதந்தரங்களைத் தவறாய்ப் பயன்படுத்தியதால் வெகுண்ட பழைய மரபு.
    பின்னது விளைந்த
    பாவங்களைப் பலியாடாய் வந்து தீா்த்த புது மரபு.

    இரண்டிலும் சித்தாந்தங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகின்றன.

    மாறுபட்டே தான் ஆக வேண்டும்.

    காலத்திற்கேற்றவாறு இயேசு வந்து புரட்சிகளைப் படைக்கிறாா்.

    புதுமைகள் செய்கிறாா்.

    ஏற்கனவே இருந்த மரபுகள் மனிதம் வளர்க்கவும் மானுட சேவைகளைச் செய்வதற்கும் பலவழிகளிலும் தடைகளாக இருப்பதை உணர்ந்த இயேசு,
    மரபுகளைத் தகர்க்கிறாா்.

    ஞாயிறுகளில் சேவை செய்கிறாா்.

    சேவை செய்யாத ஊழியர்களுக்கு நிலைவாழ்வு இல்லை என்கிறாா்.

    விசுவாசம் கண்ணை மறைக்கவில்லை அண்ணே.

    ஞானம் கண்ணைத் திறந்தது.

    தந்தை மகன் தூயாவி...
    தனித் தனி தத்துவமல்ல.

    ஆனால்...

    தனித் தனிச் சூழல்களில் நின்று பேசும் சித்தாந்தங்கள்.

    ஆனால்...
    இலக்கு ஒன்று தான்.



  • G Sam George //புதிய ஏற்பாட்டில் நேசர் உலகத்தினர் எல்லாருக்குமானவராகத் தன்னை அறிமுகிக்கிறார்.//
    எனது நூல் - மதங்களும் சில விவாதங்களும் - என்ற நூலின் 36ம் பக்கத்தில் நான் எழுதியுள்ளவை உங்கள் கேள்விக்குப் பதிலாக இருக்கிறது, தம்பி.
    யேசு இரண்டு வசனங்களைத் தவிர ஏனைய இடங்களில் எல்லாம் தான் இஸ்ரயேலர்களுக்காக மட்டும் வந்ததாகக் கூறுகிறார்.
    யோவான் 17:6 - நான் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன்.
    மத். 10:5, 6 -- ... மாறாக வழிதவறிப்போன ஆடுகளான இஸ்ரயே மக்களிடமே செல்லுங்கள்.
    இன்னும் சில மேற்கோள்கள்: \யோவான் 17;9; மத்: 15:25; மார்க் 7:25; வெளி: 7:4 ..(அவரது குலமான இஸ்ரயேல் மக்களைச்.... ) .இவைகளையும் பாருங்கள், தம்பி..


  • G Sam George ”நான்கு திசைகளிலும் போய் பரப்புங்கள்” என்றார் உங்கள் கடவுள். ஆனால் எல்லா திசைகளிலும் உள்ளவர்கள் என் மக்கள் என்று சொல்லவில்லையே.
    1

    • C Sam Jeffry G Sam George 
      சொல்லவில்லை அண்ணே.
      ஆனால் அவரது செயல்கள் மற்றும் நிலைப்பாடுகள் போன்றவை அதை உணர்த்துகின்றன.
C Sam Jeffry என் வீடு 
#எல்லா_மக்களுக்கும்
ஜெபவீடு என்கிறாரே


C Sam Jeffry G Sam George 
சொல்லவில்லை அண்ணே.
ஆனால் அவரது செயல்கள் மற்றும் நிலைப்பாடுகள் போன்றவை அதை உணர்த்துகின்றன.


G Sam George //சொல்லவில்லை அண்ணே.// அப்பாடி .. ஒன்றை ஒப்புக் கொண்டமைக்கு நன்றி, தம்பி.


G Sam George //ஆனால் அவரது செயல்கள் மற்றும் நிலைப்பாடுகள் போன்றவை அதை உணர்த்துகின்றன// என்ன தம்பி. அப்படி அவ்ரது செயலும் நிலைப்பாடுகளும் உணர்த்தவில்லையே என்பதற்கான மேற்கோ்ள்களைத்தானே என் மேற்கோள்களில் காண்பித்துள்ளேன். யோவா 11:33, 35,38 .. கானானியப் பெண்ணை விரட்டி அடித்த ஏசு, தன் உறவினர் லாசர் இறந்ததும் எவ்வாறு கண்ணீர் விட்டு அழுதார் என்று சொல்வதை வைத்து ... நான் கொடுத்த முடிவுரை: (1)ஜாதித் துவேஷம் உள்ளவர்; (2)தன் ஜாதி/ குலம் காக்க வந்த ஒரு tribal leader. ... ஆகவே அவர் இஸ்ரயேலரின் கடவுள். (அட.. தமிழுக்கு குமரன் என்பார்களே... அது மாதிரி.)


இரு ஏற்பாடுகளிலும் உள்ள கடவுள் எல்லாம் ஒன்று தானே? ஒருவேளை அப்படி இல்லையோ? ஏனெனில் நீங்கள் வேறுபாடு காண்பிக்கிறீர்கள். ப.ஏ. கடவுள் ஒரு வழி; பு.ஏ. கடவுள் (நேசர், நாயகர்) வேறு வழி. இதில் நேர்வழியைக் காண்பியுங்களேன். நீங்கள் பு.ஏ. என்று சொன்னால் பிதா சொன்னதெல்லாம் தப்பா என்று நான் கேட்கலாமில்லையா, தம்பி.


G Sam George இன்னும் ஒரே ஒரு கேள்வி தம்பி. 
ஏசு - தான் பிதாவிடமிருந்து வந்தேன் ... பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருப்பேன் ... நானே வழி ... என் மூலமாகவே நீங்கள் பிதாவிடம் போக முடியும் ... இப்படியெல்லாம் பேசி, தன்னை பிதாவிடமிருந்து வந்தவராகச் சொல்கிறார். அதாவது முகமது அல்லாவிற்கு ஒரு நபியாக இருந்தது போல் தானும் ஒரு மெசஞ்சர் என்று தானே சொல்கிறார்.
எங்காவது ஓரிடத்திலாவது தன்னை அவர் கடவுள் என்று சொல்லியுள்ளாரா?
(கி.பி.365ம் ஆண்டு நடந்த First Council of Nicaea - Ecumenical Council - வரலாற்று நிகழ்வையும் வைத்து உங்கள் பதிலைத் தாருங்கள், தம்பி.




  • C Sam Jeffry “நான் தேவனாக இருக்கிறேன்” என்று இயேசு நேரடியாக கூறியதாக வேதாகமத்தில், எந்த இடத்திலும் பதிவு செய்யப்படவில்லை. அதற்காக அவர் தான் தேவன் என்று எந்த இடத்திலும் எடுத்துரைக்கவில்லை என்று அர்த்தமல்ல. உதாரணமாக இயேசு கிறிஸ்து என்ன சொல்கிறார் என்று பாருங்கள், “நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்” (யோவான் 10:30). சாதாரணமாக இதை பார்ப்பதற்கு, இயேசு தன்னைக் குறித்து தேவன் என்று சொன்னதாக இவ்வசனத்தில் தெரியாமல் போகலாம். ஆனால் இயேசு இப்படி சொன்னதும் அதற்கு யூதர்கள் எடுத்துக்கொண்ட விதம் மற்றும் யூதர்களின் பிரதிபலிப்பை கவனியுங்கள்: 'யூதர்கள் அவருக்கு பிரதியுத்தரமாக, நற்கிரியையினித்தமாக நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை - நீ மனிதனாயிருக்க உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவ தூஷணம் சொல்லுகிறபடியினால், உன் மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்" (யோவான் 10:33). இந்த வாக்கியத்தை இயேசு கிறிஸ்து கூறியது மூலம், தன்னை தேவனென்று குறிப்பிட்டதாக யூதர்கள் புரிந்து கொண்டார்கள். அவர்கள் இப்படி பிரதிபலித்ததால், இயேசு அதை மறுக்கவோ, மாறுத்தரம் சொல்லவோ இல்லை. இதிலிருந்து “நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்” என்று இயேசு கூறியது அவர் தேவனாக இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துவதற்குத்தான் என்பது தெளிவாகிறது. மற்றொரு உதாரணம் யோவான் 8:58, “ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நானிருக்கிறேன் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்றார்". இங்கேயும் யூதர்கள் அவர் மேல் கல்லெறிந்து கொலை செய்யும்படி கல்லுகளை எடுத்துக் கொண்டார்கள், காரணம் மோசேயின் பிரமாணத்தின்படி இது தேவதூஷணம் ஆகும் (லேவியராகமம் 24:15).


  • C Sam Jeffry #தொடா்ச்சி...

    “அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்றும் “அந்த வார்த்தை மாம்சமாகி” என்றும் (யோவான் 1:1, 14) குறிப்பிட்டு அப்போஸ்தலனாகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை யோவான் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறார். இந்த வசனங்கள் இயேசு கிறிஸ்துவே, மாம்சத்தில் வந்ததேவன் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. “ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்” என்று அப்போஸ்தலர் 20:28 கூறுகிறது. அப்போஸ்தலர் 20:28, தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபை, என்று சூளுரைக்கிறது. ஆகவே, இயேசு தேவனாக இருக்கிறார்.

    இயேசுகிறிஸ்துவின் சீஷனாகிய தோமா “என் ஆண்டவரே, என் தேவனே” என்று அழைக்கிறார் (யோவான் 20:28). இயேசுகிறிஸ்து அதைத் திருத்தவில்லை மாறாக அதை ஏற்றுக்கொண்டவராகவே இருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் இயேசுகிறிஸ்துவைக் குறித்து “மகாதேவனும், நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து” என்று தீத்து 2:13ல் குறிப்பிடுகிறார். அப்போஸ்தலனாகிய பேதுரு “நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து” என்று 2 பேதுரு 1:1ல் குறிப்பிடுகிறார். பிதாவாகிய தேவனும் இயேசுவின் தெய்வீகத்திற்கு சாட்சியாக இருக்கிறார். “குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது” (எபிரெயர் 1:8). பிதாவாகிய தேவன் இயேசுவை இங்கே “தேவனே” என்று குறிப்பிடுவதிலிருந்து மெய்யாகவே இயேசு தேவனாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

    வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவதூதன் அப்போஸ்தலனாகிய யோவானை நோக்கி, தேவன் ஒருவரையே ஆராதனை செய்வாயாக என்று கூறுவதைப் பார்க்கிறோம் (வெளி. 19:10). வேதாகமத்தின் பல பகுதிகளில் இயேசுகிறிஸ்து ஆராதிக்கப்படுவதையும் ஆராதனையை அவர் ஏற்றுக்கொள்வதையும் பார்க்கிறோம் (மத்தேயு 2:11; 14:33; 28:9, 17; லூக்கா 24:52; யோவான் 9:38). அவரை ஆராதித்ததற்காக ஒருவரையும் அவர் கடிந்துகொள்ளவில்லை. இயேசு தேவன் இல்லையென்றால், வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவதூதன் யோவானிடம் கூறியதுபோல, இயேசுவும் என்னை ஆராதிக்க வேண்டாம் தேவனை ஆராதியுங்கள் என்று கூறியிருக்கலாம். இவைகள் மட்டுமன்றி, இயேசுவின் தெய்வீகத்தைக் குறித்து இன்னும் பல வேத வசனங்கள் குறிப்பிடுகின்றன.

    இயேசு தேவனாக இருக்கவேண்டும் என்பதற்கு மிக முக்கியமான காரணமென்னவெனில், அவர் தேவனாக இல்லாவிட்டால், அவரது மரணம் உலகத்தின் பாவத்தை போக்குவதற்கு விலைக்கிரயமாக செலுத்தப்பட்டிருக்க முடியாது (1 யோவான் 2:2). தேவனாலேயல்லாமல் ஒரு சிருஷ்டியினால் நித்தியமான தண்டனைக்குரிய விலையை செலுத்த முடியாது. அப்படி செலுத்தப்பட்டது என்றால் அது தேவன் ஒருவரால் மட்டுமே சாத்தியம் (2 கொரிந்தியர் 5:21). அப்படியென்றால் இயேசு கிறிஸ்து தேவனாக இருக்க வேண்டும். மரித்த இயேசு மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, பாவம் மற்றும் மரணத்தின் மேல் வெற்றி சிறந்து நிருபித்தார்.
    1


  • G Sam George //”நான் தேவனாக இருக்கிறேன்” என்று இயேசு நேரடியாகக் கூறியதாக வேதாகமத்தில் எந்த இடத்திலும் பதிவு செய்யப்படவில்லை.//
    என் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டீர்கள், தம்பி. மிக்க நன்றி


  • G Sam George //இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை யோவான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறார்.// ஏசுவின் தெய்வீகத்தைப் பற்றிச் சொல்லியுள்ளது; ஆனால் தேவன் என்று சொல்லவில்லை.
    1:1 சொல்வது நம் விவாதங்களுக்குப் பதிலில்லை. அது ‘கடவுளோடு’ இருந்தது .எந்தக் கடவுள் என்று ஏதும் சொல்லவில்லை.
    யோவான் 1:14 ... நீங்கள் சொன்னது சரி. அந்த வாசகம் நீங்கள் சொன்னது போலன்றி, எப்படி முடிகிறது என்றும் பாருங்கள், தம்பி. “அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.. தெய்வம் என்று சொல்லியிருந்தால் சரி. அப்படியில்லையே..
    அப் 20:28 சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபை ... context என்ன தம்பி? அன்றைய நிலை.. அந்தச் சபை அவர் சம்பாதித்தது. கடவுளாக அவர் பெற்றது என்றா சொல்லியுள்ளது?
    யோவான் 20:28.. என்ன தம்பி... இந்த மேற்கோள். நான் கேட்பது கடவுளோ (பிதா), ஏசுவோ இவர்தான் கடவுள் என்று சொல்லியிருந்தால் சரி என்கிறேன். ஆனால் நீங்கள் தோமாவைப் பற்றிப் பேசுகிறீர்கள். அவர் உங்களைப் போல் ஒரு மத பரப்புரையாளர். பேதுரு, பவுல் சொன்னதும் அது போன்றதே.
    வெளி 19:10 .. அதையே தான் நானும் சொல்கிறேன்: தேவன் ஒருவரையே ஆராதனை செய்வாயாக... தேவனின் மகனை அல்ல.
    //இயேசு கிறிஸ்து என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: யோவான் 10:30 - நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம். நல்லது ...இது எப்படியிருக்கிறது என்றால் நானும் Sam Jeffryம் ஒரே ஊரில் வசிக்கிறோம் என்பது போல் உள்ளது. இதன் மூலம் பிதாவும் ஏசுவும் ஒன்று என்று எப்படி கூறுகிறீர்கள்?
    //அப்படியென்றால் இயேசு கிறிஸ்து தேவனாக இருக்க வேண்டும்.// இது உங்களது லாஜிக். நான் கேட்டது ஏன் ஏசு தன்னைக் கடவுளாகச் சொல்லவில்லை. மூக்கைத் தொடுங்கள் என்கிறேன்; நீங்கள் தலையைச் சுற்றி ஏதேதோ செய்கிறீர்கள். என் கேள்வி எளிமையானது: ஏசு கடவுள் என்பதற்கான அவரது மேற்கோள் ஏதாவது கொடுங்கள் என்றேன். உங்கள் பதில்:
    //அவர் தேவனாக இல்லாவிட்டால் ...” என்று கூறியுள்ளீர்கள். இது விசுவாசமின்றி வேறல்ல


  • G Sam George பவுல் கிறித்துவை mystify செய்ததற்குப் பிறகே அவரைக் கடவுளாக்கினீர்கள் - தேர்தல் எல்லாம் வைத்து. அதனால் தான் வரலாற்றுப் பின்னணியை வைத்துப் பதில் சொல்லுங்கள் என்றேன். ஓட்டு எண்ணிக்கை உங்கள் பக்கம் அன்று நிறைய விழுந்தது. அவர் கடவுள் இல்லை .. மனிதர் தான் என்றும் சொன்ன ஒரு பக்கமும் அப்போது இருந்தது. வரலாற்றை அத்தனை எளிதாக மறக்கவோ, மறைக்கவோ கூடாதல்லவா, தம்பி.



  • C Sam Jeffry காலம் காலமாக கிறிஸ்தவர்களின் முகம் நோக்கி நீட்டப்படும் ஒரு கேள்வி இது தான். இயேசு கடவுளா ? வெறும் செய்தியாளனா ?

    ‘வெறும் செய்தியாளன் என்றால், ஏன் கிறிஸ்தவம் அவருக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரு காந்தியோ, ஒரு விவேகானந்தரோ கூட செய்தி சொல்லிக்கடந்து போனவர்கள் தானே ? அவர்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தப் படவில்லையே ? இந்தக் கேள்விக்கு கிறிஸ்தவம் பல்வேறு சூழல்களில் பதிலளித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்னும் அந்தக் கேள்விகள் நீர்த்துப் போய்விடவில்லை.

    இந்தக் கேள்விகள் இன்று நேற்று முளைத்தவையல்ல. இயேசு இந்த பூமியில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த போதே எழுந்த கேள்விகள் தான். அவருடைய சமகால மக்கள் அவரை மூன்று விதமாகப் பார்த்தார்கள். பொய்யன், பைத்தியக் காரன், கடவுள் !

    முதலில் இயேசு தான் கடவுள் என்பதைச் சொல்லியிருக்கிறாரா என்று விவிலியத்தை ஆதாரமாகக் கொண்டு பார்த்தால், பல இடங்களில் அவர் தன்னுடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பதைக் காணமுடியும்.

    யோவான் நற்செய்தியாளர் (10:27-30 ) இதை மிகவும் தெள்ளத் தெளிவாக இயேசுவின் வார்த்தைகள் மூலமாக விளக்குகிறார். ” ஆடுகள் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றன, நான் அவற்றுக்கு நிறை வாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா.


    // இந்தக் கேள்விக்கு கிறிஸ்துவம் பல்வேறு சூழல்களில் பதிலளித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இன்னும் கேள்விகள் நீர்த்துப் போய் விடவில்லை.//

  • அட ... அச்சுக்குண்டா அப்படியே இஸ்லாமியர்கள் கேள்விகளை எதிர் கொள்வது போல் அப்படியே சொல்கிறீர்களே! அவர்கள் 1400 ஆண்டுகளாக என்று கொஞ்சம் சேர்த்து சொல்வதுண்டு!

  • //வெறும் செய்தியாளன் என்றால் ஏன் கிறிஸ்துவம் அவருக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது?//
    அது தானே தம்பி என் கேள்வியும்.
    //அவர்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தப்படவில்லையே?//
    பல மதங்களிலும் இந்த நிலை நீடித்திருக்கிறது. புத்தர் ஒரே ஒரு நல்ல சான்று




  • C Sam Jeffry #தொடர்ச்சி...
    ‘அவற்றை என்கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள மாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும் விடப் பெரியவர். நானும் என் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” இயேசுவின் இந்த வெளிப்படுத்துதல் யூதர்களை ஆவேசத்திற்கு உட்படுத்தியது ! ” மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொண்டாய்” என்று அவர்மேல் கல்லெறியப் பார்க்கிறார்கள்.

    இயேசுவை “பொய்யன்” என்று யூதர்கள் சொல்லும் வார்த்தையிலேயே இயேசு தன்னை இறைமகனாகக் காட்டிக் கொண்டார் என்பது விளங்குகிறது அல்லவா ? மேலும், எந்த ஒரு ஆராய்ச்சியாளரும் இயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்ளவில்லை என்று எந்த ஒரு ஆதாரத்தையும் கண்டெடுக்கவில்லை.

    ‘யூத வரலாற்றிலேயே இயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொண்டார் என்னும் செய்தி பிலாத்துவின் வாழ்க்கைக் குறிப்பேடுகளில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது ஒன்றே இயேசு தன்னை கடவுளாகக் காட்டிக் கொண்டார் என்பதற்குப் போதுமானது. இருந்தாலும் விவிலியம் முழுக்க அதற்கான ஆதாரங்கள் நிறையவே !

    இயேசு தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்ளவில்லை என்றும், யோவான் நற்செய்தி இயேசுவைக் கடவுளாகக் காட்டுவதற்காக சேர்க்கப் பட்டுள்ள பிற்சேர்க்கை என்றும் சொல்பவர்கள் விவிலியத்தை ஆழமாய் வாசித்ததில்லை என்பதே பொருள்.

    ‘மத்தேயு 26: 63-65, மார்க் 14 :60 – 62, லூக்கா 22:67-70 இந்த மூன்று நற்செய்தியாளர்களுமே ஒரு மிக முக்கியமான சான்றை முரணில்லாமல் சொல்கிறார்கள். இயேசு பிடிக்கப் பட்டு தலைமைக் குருவின் முன்னால் நிறுத்தப் படும்போது தலைமைக் குரு வினவுகிறார் ” போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீர் தானா ?” அதற்கு இயேசு ” நானே அவர் !” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் !.

    ‘யோவான், இயேசுவோடான பிலாத்துவின் உரையாடல் மூலமாக இயேசு தன்னை விண்ணக அரசராகக் காட்டிக் கொண்டதைக் குறிப்பிடுகிறார். மத்தேயு, மார்க் , லூக்கா மூன்று நற்செய்திகளும் இயேசு வாழ்ந்த நூற்றாண்டில் எழுதி முடிக்கப்பட்டவை என்பதை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    //எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும் விடப் பெரியவர்.. நானும் எந்த தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.//
    ஆக, இருவரும் வேறு வேறு என்று எளிதாக, துல்லியமாகத் தெரியவில்லையா? ஏற்கெனவே சொன்னேனே .. நானும் Sam Jeffryம் ஒன்றாக ஒரே ஊரில் இருக்கிறோம் என்று. அது போல் தான் 

  • யூத வரலாற்றில் சொன்னது அப்போதிருந்த அரசியல் நிலைக்குச் சாதகாமான ஒரு கருத்து. ரோமானியர்களின் கருத்தும் அதை ஒத்து இருக்கலாம். அதுவும் அப்போதைய அரசியல் நிலைக்கான கருத்து. அதுவே போதும் என்ற உங்களது விவாதம் எனக்குப் பதிலளிப்பதாக இல்லை.
  • யூதர்களின் கோபம் எப்படி  இதை நிரூபிக்கிறது. பாவம்.. தவறான கோபம்!
//”போற்றுதலுக்குரிய கடவுளின் மகனாகிய (இதைத் தடித்த எழுத்தில் இட்டுக் கொள்ளவும்.) மெசியா நீர் தானா?//
தம்பி, இங்கேயே எனக்கு ஒரு நல்ல சான்றைத் தந்து விட்டீர்களே. இதைத்தானே நானும் சொல்கிறேன் - அவர் கடவுள் அல்ல. Samன் மகன் Sam இல்லையே. இல்லையா? அதோடு கிறித்துவ வரலாற்றில் முக்கியமான Origen, Arius, Marcionism என்பவர்களின் கருத்துகளையும் இந்த நேரத்தில் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.



  • C Sam Jeffry #தொடர்ச்சி...

    ஆளுநர்களுக்கு முன்பாகவும், அரசனுக்கு முன்பாகவும் சித்திரவதை செய்யப்பட்டும், இரத்தம் சிந்தியும் சாவுக்கு சமீபமாக இருக்கும் ஒரு மனிதன், இறுதிவரை ஒரே விஷயத்தைச் சொல்கிறான் என்றால் ஒன்று, அவன் பைத்தியக் காரனாக இருக்க வேண்டும், அல்லது அந்தச் செய்தி எதனாலும் அழிக்க முடியாத உண்மையாக இருக்கவேண்டும்.

    ‘இயேசுவின் தெளிவான போதனைகளும், வழிகாட்டல்களும், திட்டங்களும் அவரை பைத்தியக்காரன் என்பவரைத் தான் பரிதாபத்தோடு பார்க்க வைக்கும். யோவான் 10:21 ல், மக்களே சொல்கிறார்கள் “பேய்பிடித்தவன் பேச்சு இப்படியா இருக்கும் ? பேய் பிடித்தவனால் அற்புதங்கள் செய்ய இயலுமா ?”. அப்படிப் பார்க்கும் போது இயேசு உண்மையைத் தான் சொன்னார் என்பது உறுதிப் படுகிறது இல்லையா ?

    யோவான் நற்செய்தியில் இயேசு தன்னை நல்லாயனாகக் காட்டிக் கொள்கிறார். தன் வழியே வருவோருக்கு மீட்பு என்கிறார். வாழ்வின் வாசல் நானே என்கிறார். நானும் தந்தையும் ஒன்றே என்கிறார்.

    ‘அவர் தன்னுடைய புத்தகத்தில் 4:25-26 இல் சமாரியப் பெண் ஒருத்தியிடம் தன்னைக் கடவுளாக வெளிப்படுத்துகிறதைக் குறிப்பிடுகிறார். புற இனத்தாரோடு எந்தவித சகவாசமும் வைக்காத ஒரு சமாரியப் பெண்ணைக் குறித்த செய்திகளை சம்பந்தமே இல்லாத ஒரு யூதர் எடுத்துக் கூறிய அற்புதத்தின் மூலம் இயேசு தன்னை வெளிப்படுத்துகிறார்.

    ஓய்வு நாளில் வேலை செய்யக் கூடாது என்னும் நிலையை மாற்றியவர் இயேசு. ஓய்வு நாளில் நல்லது செய்யலாம் தப்பில்லை ! “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார், எனவே நானும் செயலாற்றுகிறேன் !” என்று அற்புதங்கள் செய்கிறார்.

    .கடவுளுக்குரிய நாளில் கடவுளுக்குரிய காரியங்களை கடவுளே ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி தான் அது. ஓய்வு நாளை கடைபிடிக்காதவனை கொடூரமாய் தண்டிக்கும் அந்தக் காலத்தில் இயேசுவின் இந்த செயல்பாடுகள் இறை அருள் இல்லாத ஒருவரால் நிச்சயமாகச் செய்ய இயலாது.

    .மேலும் அவர் விண்ணகத் தந்தையை ” நம் தந்தை” என்று அழைக்காமல் ” என் தந்தை” என்று அழைப்பதன் மூலமாகவும் தனக்கும் தந்தைக்கும் இடையே உள்ள “ஒன்றித்த” நிலையை வெளிப்படுத்துகிறார்.

    “நான் தந்தையிடமிருந்து வந்தேன், தந்தையிடமே செல்கிறேன்” என்னும் இயேசுவின் வார்த்தைகள் (யோவான் ) இயேசு பிறக்கும் முன்பே இருந்தவர் என்பதும் மண்ணில் அவர் வந்தது தன் தந்தையின் பணியை மண்ணிற்கு உணர்த்தவுமே என்பதை வெளிப்படுத்துகின்றன.

    //”போற்றுதலுக்குரிய கடவுளின் மகனாகிய (இதைத் தடித்த எழுத்தில் இட்டுக் கொள்ளவும்.) மெசியா நீர் தானா?//
    தம்பி, இங்கேயே எனக்கு ஒரு நல்ல சான்றைத் தந்து விட்டீர்களே. இதைத்தானே நானும் சொல்கிறேன் - அவர் கடவுள் அல்ல. Samன் மகன் Sam இல்லையே. இல்லையா? அதோடு கிறித்துவ வரலாற்றில் முக்கியமான Origen, Arius, Marcionism என்பவர்களின் கருத்துகளையும் இந்த நேரத்தில் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.
//இயேசு நல்ல ஆயன்.// ஆஹா .. ஒத்துக் கொள்ளவேண்டிய விஷயம்.
தன்வழியே வருவோருக்கு மீட்பு என்கிறார்.. விசுவாசிகள் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம். சரி
நானும் தந்தையும் ஒன்றே என்கிறார். இதைத்தான் சொன்னேன்: . Samன் மகன் Sam இல்லையே. இல்லையா? இருவரும் வேறு வேறு ஆனால் ஒத்தக் கருத்துடையோர்/ ஒத்த காப்பாளர்கள்/ அல்லது ஒத்த இரு கடவுள்கள்! .. இப்படித்தான் அதற்கான பொருள், தம்பி.
//புற இனத்தாரோடு எந்த வித சகவாசமும் வைக்காத ...// இதை ஏற்கெனவே சொல்லி விட்டேனே. ஒரு சாதி / இனத்திற்காக வந்த மனிதர் அவர் என்று.



  • C Sam Jeffry #தொடா்ச்சி...

    பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தனக்கு தந்தையால் வழங்கப்பட்டிருக்கிறது என்னும் இயேசுவின் மொழிகள் அவரை கடவுளாகக் காட்டுபவையே !

    யாத்திராகமத்தில் (3) கடவுள் மோசேடம் தன் பெயர் “இருக்கிறவர் நானே” ( யேகோவா ) என்கிறார். யோவான் 8:58, ஆபிராகாமுக்கு முன்பே இருக்கிறவர் நானே… என்கிறார்.

    வழியும் உண்மையும் வாழ்வும் நானே, என்வழியாய் அன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை ( யோவான் 14:6)




  • //பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் ...// நீங்கள் யார் கட்டுகளை அவிழ்க்கிறீர்களோ அவர்கள் கட்டுகள் அவிழ்க்கப்படும். என்று தன் சீடர்களைப் பார்த்து சொன்னாரே ... அப்போது அவர்களும் கடவுள்களாக மாறி விட்டார்களா என்ன?

  • யோவான் 14:6 ... இதைத்தான் நானும் சொல்லி விட்டேனே. He is the way; he is the truth, his way is the only right way. IT STOPS THERE. He is the way BUT NOT THE FINAL DESTINATION.   இதுதான் அந்த வார்த்தைகளுக்கு நான் தரும் பொருள். நியாயமாக யோசித்துப் பாருங்கள். ஏசுவை நம்பினால் தான் பிதா என்ற கடவுளிடம் போகலாம்.

இதில் இன்னொரு விசேஷம் என்ன தெரியுமா? கிறித்துவத்தையும் இஸ்லாமையும் பங்காளி மதங்கள் என்று சொல்லலாம், ஒரே வேர். அங்கும் முதலில் நபியை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதன் பின்பே அல்லா .. ஒரு தொடர்ச்சியைப் பார்த்தீர்களா இரு மதத்திற்கும்!!!!



  • C Sam Jeffry #தொடர்ச்சி...

    அண்ணே...

    இப்போது இன்னோர் கேள்வி உங்கள் முன் எழலாம். இயேசுவின் கூற்றுகள் உண்மையா ?

    அதற்கு எளிமையான ஒரு பதில் சொல்லப் படவேண்டுமானால் இயேசுவின் காலத்தில் இயேசு செய்த அருங்குறிகள், அற்புதங்கள் மட்டுமே போதுமானவை. இறந்த மூன்றாவது நாள் உயிர்த்து எழுந்த நிகழ்ச்சியே பல்வேறு நிகழ்வுகள், நற்செய்திகள் மூலமாக விளக்கப்படுள்ளன. இயேசு உயிர்த்தபின் அவரை குறைந்தபட்சம் 500 பேர் பார்த்திருக்கிறார்கள். இதைவிட மேலான ஆதாரம் எதற்கு?
    ‘ இயேசுவை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.
    நம்பினால் வாழ்வில் வரும் நல்லதொரு திருப்பம்.’

    நன்றி அண்ணே
// இதைவிட மேலான ஆதாரம் எதற்கு?’’  i will take it as a joke!
.
//இயேசுவின் கூற்றுகள் உண்மையா?//
சான்றுகள் ஏதுமில்லாத கூற்று இது. உங்கள் வேத நூல்களில் சொல்லப்பட்டதால் நீங்கள் நம்புவீர்கள் அப்படியே.  ஒவ்வொரு மத நம்பிக்கையாளர்களும் அவர்களது வேதநூல்களை உண்மை என்று “நம்புவார்கள்”. அது எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஓர் அலைவரிசை!

//இயேசு காலத்தில் இயேசு செய்த அருங்குறிகள் ..//
இதுவும் எல்லா மதங்களிலும் உள்ள ஒரு பொதுவான அம்சம். நம்பிக்கை மட்டுமே இவைகளுக்குக் கை கொடுக்கும். கோவித்துக் கொள்ளாமல் கேளுங்கள்:
·         ஏசுவின் பிறப்பிற்கும் கர்ணனின் பிறப்பிற்கும் என்ன வித்தியாசம்?
·         ஆப்ரஹாம் தன் குழந்தையைப் பலி கேட்ட இரக்கமான கடவுள் போல், சிவன் குழந்தைக் கரி கேட்ட கதையும் ஒன்று தானா?
·         கண்பார்வை கொடுத்தார் ஏசு; வயிற்று வலிக்கு திருநீறு கொடுத்து குணமாக்கினார்  இங்கு. பேசாத குழந்தை ஞானப்பால் குடித்து கவிஞனாகியதும் இங்கு.
·         மீன் வயிற்றுக்குள் மூன்று நாட்கள் அங்கே;; நரியைப் பரியாக்கியது இங்கே.
·         கடலைப் பிளந்தார் அங்கே; பாற்கடல் பிளந்தது இங்கே.
·         பட்டியல் இரு புறமும் நீண்டிருக்கும்.
·         இயேசு உயிர்த்ததை 500 பார்த்திருக்கிறார்கள். சொல்வது எங்கே? உங்கள் வேத நூல் தானே? சான்று? எதிர்மறையான சான்றுகளும் உண்டு. (Ref; எனது இரண்டாம் புத்தகம்: ”கடவுள் என்னும் மாயை” பக்கம் 80)

அதோடு தயவு செய்து ஏசு ஜெத்சமேனியில் (முடியுமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு அகலக் கடவது என்று..)ஜெபம் செய்த பிறகு என்ன நடந்தது என்று இஸ்லாமிய நம்பிக்கைகளைப் பற்றிப் படித்துப் பாருங்கள், ஏசு சிலுவைத் தண்டனையிலிருந்து அல்லாவினால் காப்பாற்றப் பட்டார் என்பது அவர்கள் நம்பிக்கை. பிர்கு எப்படி நடந்திருக்கும் resurrection??!!

அந்தந்த வேத நூல்களைச் சான்றாகக் காட்டுவது எளிது. அது  அந்தந்த நம்பிக்கையாளர்களுக்கு மட்டும் உகந்தது; உவந்தது.

எல்லா மதங்களிலும் நீங்கள் சொல்லும் அருங்குறிகள் உண்டு. அவையெல்லாம் அவர்களின் நம்பிக்கையைப் பற்றிய விசயம். ஏ.ஆர். ரகுமானுக்கு கிறித்துவ பாதிரியார் செய்த செபம் கேட்கவில்லையாம். ஒரு இஸ்லாமியரின் தொழுகையில் சுகமாயிற்றாம்.  அதனால் அவர் இஸ்லாமியர் ஆனார். கேள்விப்பட்டிருக்கிறீர்களா இதை?

 எல்லாவற்றிற்கும் மேலாக, நான் மதங்களைப் பற்றி எழுத ஆரம்பித்த போது இந்துக்களிடமிருந்து சில எதிர்ப்புகள் .. கேள்விகள். இஸ்லாமைப் பற்றி எழுத ஆரம்பித்த போது கடுமையான எதிர்ப்புகள், அதைவிட தீவிரமான கேள்விகள் என்று தொடர்ந்து வந்தன. அதற்காகவே நிறைய வாசித்து, யோசித்து, பதில் எழுத வேண்டிய கட்டாயம் வந்தது.

ஆனால் கிறித்துவ மக்களிடமிருந்து அப்படி ஏதும் கேள்விகள் இல்லை. “பெரிய” கிறித்துவர்கள் இதை வாசிப்பதையே தவிர்த்து வந்தனர்.  அவர்கள் எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்வதில்லை. அத்தனைப் பெரிய விசுவாசம்! ஏனிந்த அச்சம் என்பது எனக்குப் புரிந்ததில்லை. பன்றிகளின் முன்னால் முத்துகளை  இறைக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு அகலுவதுதான் அவர்களின் பழக்கமாக இருந்தது. ஆனால் அது என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் கடைப்பிடிப்பது வெறும்  - escape mode தான்!

ஆனால் நீங்கள் பொறுமையாக நடத்திய நீண்ட விவாதத்திற்கு மிக்க நன்றியும் அன்பும் பாராட்டும். என்னோடு கிறித்துவம் பற்றி இத்தனை நீண்ட உரையாடலை நடத்தியமைக்கு மிக்க நன்றி, தம்பி.

நான் சொல்வதால் நீங்கள் மாறப்போவதில்லை; நீங்கள் சொல்வதால் நான் மாறப்போவதில்லை. ஏனெனில் இது ஒரு inner happening. நமக்குள் ஏற்படவேண்டும். எனக்கு என் வழியில் அது ஏற்பட்டது. நிறைய சிந்தித்து , யோசித்து, வாசித்து மெல்ல மெல்ல என் ஐம்பதுகளில் மதத்திலிருந்து வெளியே வந்தேன்.


*