Showing posts with label மரணம் தொட்ட கணங்கள். Show all posts
Showing posts with label மரணம் தொட்ட கணங்கள். Show all posts

Thursday, September 03, 2020

1107. கொரோனாவும் நானும் ... 4


*

ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 

*

கைத்தொலைபேசி கையோடு இருந்ததால் நேரம் பார்க்க முடிந்தது. யார் கண்டது தேதியையும், நாளையும்? இது பற்றாது என்பதுபோல் நினைவுகளும் அப்போது அத்தனை துல்லியமாக இல்லை. நாட்கணக்கு, கிழமைக் கணக்கு என்று ஏதும் தெரியாது. இரண்டு நாட்கள் இந்த வார்டில் இருந்திருப்பேன். வேறு நல்லதொரு அறைக்கு மாற்றலாம் என்று என்னை இரண்டாவது மாடியில் உள்ள அறைக்குச் செல்ல, தள்ளு நாற்காலியில் வைத்து அழைத்துச் சென்றனர். ஒரு நடு வயது பெண்மணி அழைத்துச் சென்றார்கள். சமூக இடைவெளிக்காக மின்தூக்கி வேலை செய்யாது என்று என்னை வைத்துத் தள்ளிக்கொண்டே சென்றார்கள். பாவம் அவர்கள்.. மூச்சு அப்படி வாங்கியது. தள்ளிக் கொண்டு ஒரு ஹாலுக்குள் நுழைந்தார்கள். கீழே நானிருந்தது போலவே இதுவும் ஒரு நீண்ட ஹால்.. மத்தியில் மருத்துவர்களுக்கான சிற்றறை இங்கே இல்லை. கட்டில்கள் அனைத்தும் ஓர் ஓரத்தில் கிடந்தன.  ஒரு கட்டிலைத் தேர்ந்தெடுத்து மின் விசிறிக்கு அடியில் நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்து எனக்காகத் தயார் செய்தார்கள். எல்லாம் முடிந்து நான் கட்டிலில் உட்கார்ந்ததும் ஆக்சிஜன் மாஸ்க் போட தயாராகும் போது தான் தெரிந்தது - அந்த ஹாலில் ஆக்சிஜன் கொடுப்பதற்கான வசதிகள் கிடையாது  என்பது. உடனே மீண்டும் பழைய ஹாலுக்குஏ திரும்பி வந்தோம். ஏறத்தாழ இந்த ‘பயணத்திற்கு’ 30 நிமிடங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அதற்குள் நான் படுத்திருந்த கட்டிலில் வேறு யாரோ “பால் காய்த்து” குடியேறிவிட்டார்கள்.

நல்ல வேளை இன்னொரு இடம் உடனே கிடைத்தது. அதுவும் முதலில் இருந்ததை விட நல்ல இடம். மருத்துவ சிற்றறைக்கு ஒட்டிய கட்டில்; முன்பு போலவே சிற்றறைக்கு மேற்கு புறத்தில் கிடைத்தது. பழைய சூழல். ஆனால் என்ன .. முன்பு கட்டிலின் இரு புறமும் என்னைப் போன்ற நோயாளிகள். இப்போது ஒரு புறம் மட்டும் அந்தத் ‘தாக்குதல்’ இருக்கும்; இன்னொரு பக்கம் மருத்துவ அறைப் பக்கம் திரும்பியிருந்து கொள்ளலாம். இன்னொரு நாள் அங்கே கழிந்தது. அடுத்து சென்றது வசதியான இன்னொரு வார்டு. அதன் பெயர் எல்லாம் சொல்ல மாட்டேன். எதற்கு இதை வாசிக்கும் (எண்ணிக்கையில் மிக சிலரே இதை வாசிக்கிறீர்கள்; மற்றவர்கள் எல்லோருக்கும் வாசிக்க அச்சம் போலும்!)  எல்லோரையும் அச்சுறுத்த வேண்டும்.

அந்த வார்டுக்குள் நுழைந்ததும் அத்தனை அழகாக இருந்தது அது. ஹாலிவுட் படங்களில் வரும் அமைப்பில் இருந்தது. நட்ட நடுவே மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்குமான வட்ட வடிவமான Doctors' Well. உள்ளே அவர்களுக்கான செயலிடங்கள் அழகாக இருந்தன. அந்த வட்டத்தைச் சுற்றி இன்னொரு பெரிய வட்டமாக இருந்தது. படுக்கைகளும் ஒரு பக்கம் வரிசையாக இருந்தன. ஏ.சி. இருந்தது. ஆனால் படுக்கைகளுக்கு நடுவே மிக மிகச் சிறிய இடம் மட்டுமே இருந்தது.அடுத்த கட்டிலில் படுத்திருப்பவரைத் தொட்டுக் கொள்ளக் கூடிய அளவில் அருகாமை. அவ்வளவு வசதியிருந்தும் கழிவறையில் இந்திய வகை மட்டுமே இருந்தது. ஜெகன் அதற்கு உடனே மாற்று ஏற்பாட்டுக்கான வழியைக் கண்டு அதை வாங்கி வந்து விட்டார். இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் கோவிட் மட்டுமில்லாது அனைத்து நோயாளிகளும் இங்கு வருவார்கள் போலும்; அதனால் தான் death rate அதிகமாகக் கண்ணில் பட்டது .. சில சமயங்களில் அருகருகே…

அப்படியும் ஒன்று நடந்தது. மாலை ஒருவர் பக்கத்து கட்டிலுக்கு வந்தார். அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் வைக்க மருத்துவர்களும் உறவினர்களும் முயற்சித்தும் முடியவில்லை. நான் தூங்கி விட்டேன். திடீரென்று இரவு கண் விழித்தேன். என்னைச் சுற்றி கூட்டமாக மருத்துவர்களும், செவிலியர்களும் நிற்பது போல் தெரிந்தது. பிறகுதான் தெரிந்தது… பக்கத்துக் கட்டில் நோயாளிக்காக நிற்கிறார்கள் என்று.  அப்போது இரண்டரை மணி.  அவருக்கான சிகிச்சை அடுத்த நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. அடுத்த நாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று மருத்துவர் ஒருவர் வேகமாக ஓடி வந்து எனது கட்டிலுக்கும் அடுத்த கட்டிலுக்கும் இடையில் இருந்த சிறு இடைவெளியில் நுழைந்து CPR கொடுக்க முனைந்தார். அந்த முயற்சியில் என் கட்டிலும் சேர்ந்தே ஆடியது. எங்கே இனி சாப்பிட முடியும். சிறிது நேரத்தில் கட்டில் ஆடியதும் நின்றது; அவரது வாழ்வும் முடிந்தது.

நல்ல வேளை. இது நடந்து முடிந்த அடுத்த நாள் காலை மறுபடி என்னை பழைய green zone வார்டுக்கு அழைத்துச் சென்றார்கள். இம்முறை மருத்துவச் சிற்றறைக்குக் கிழக்குப் பக்கம், அந்த மருத்துவ அறைக்குப் பக்கத்திலேயே கட்டில் கிடைத்தது. இதில் அடுத்த இரு நாள் கழிந்தது. ஏனோ இப்பகுதி அமைதியாகவும், அதிக இழப்பும் இல்லாமல் இருந்தது. என்னால் இப்போது ஓரளவு ஆக்சிஜன் இல்லாமல் இருக்க முடிந்தது. தேவையான நேரத்தில் வைத்தால் போதும் என்பது போல் இருந்ததால் பக்கத்து கட்டில் நடப்புகளையும் பார்க்க முடிந்தது.

பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சுற்றி நடந்தன. இதே வார்டில் இரு நாட்களுக்கு முன் நானிருந்த போது பக்கத்து கட்டிலில் இருந்த கணவன் மனைவி இருவரிடமும் யாரோ ஏஜென்ட் ஒருவர் ஒரு மருத்துவமனையைப் பற்றிச் சொல்லி, 4 லட்சம் வேண்டுமென்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது என் உடல் அந்த அளவு நன்றாக இல்லை. அவர்களிடம் நான் ஏதும் பேசவில்லை. ஆனால் இப்போது உடல் கொஞ்சம் நலமாக இருந்ததால் இரண்டாவது  கட்டிலில் இருந்த ஒரு தம்பதியிடம் நடந்த உரையாடலைக் கேட்க முடிந்தது. ஒரு ஆட்டோரிக்‌ஷா ட்ரைவர் வந்து பேசியிருப்பார் போலும். ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கொடுத்தால், சுகமாக்கி விடுவார்கள் என்று கூறியிருப்பார் போலும். கணவனுக்குத்தான் உடல் நலமில்லை; இளம் வயது தான். அவரின் மனைவி கடன் வாங்க தொலைபேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த அளவு வசதியில்லாத ஆட்கள். கடனுக்காக அலை மோதிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முடிவு தவறாகப் பட்டது. அந்தப் பெண்ணை அழைத்து உங்கள் முடிவு சரியில்லை; அவருக்கு இன்னும் கட்டாயம் ஆக்சிஜன் தேவைப் பட்டது. அதுவே அந்தப் பெண்ணுக்கான கவலை. அவரிடம் நான் இரு நாட்களுக்கு முன்பு அதே நிலையில் இருந்தேன். அதே போல் அவருக்கும் சுகமாகிவிடும். மருத்துவம் மிகவும் சரியாகச் செய்கிறார்கள். யாரோ சொன்னதை நம்புவதை விட இங்கே இத்தனை பேர் மருத்துவம் பார்க்கிறார்களே அவர்களை நம்புவது மேல் என்று சொல்லி விட்டு, ஆனால் முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்திருக்கும் என்று நம்பினேன். அவர்களிடம் பேசிய சில மணி நேரங்களில் என்னை மூன்றாவது மாடியில் உள்ள தனி அறைக்கு எடுத்துச் சென்றார்கள். நல்ல வேளை இப்போது மின் தூக்கி வேலை செய்தது. அங்கே தனி அறை. ஒரு மாலையும் இரவும் அங்கே தங்கியிருந்தேன். அங்கேயும் தொடர்ந்து மருத்துவக் கவனிப்பு இருந்தது. வழக்கமாக இரவு இரண்டிலிருந்து இரண்டரை மணிக்குள் மருத்துவர்கள் வந்து ஆக்சிஜன் அளவு அல்லது ஊசி மருந்து கொடுப்பது என்று கவனிப்பார்கள். இங்கும் அதே கவனிப்பு இருந்தது.

அடுத்த நாள் காலையில் இன்று வீட்டுக்குப் போகலாம் என்றார்கள். (இதன் தொடர்ச்சி முதல் கட்டுரையில் …)

வீட்டிலும் ஆக்சிஜன் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். முதல் இரண்டு மூன்று நாள் அவ்வப்போது அது தேவையாக இருந்தது. இரவு நேரமாகினும் மகள் உதவியோடு சிறிது நேரம் தேவைப்படும் போது வைத்துக் கொண்டேன். சிறிது நடந்தாலும் ஏறத்தாழ 15-20 நிமிடத்திற்கு மூச்சு வாங்கும். மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்குது என்பார்களே, எனக்கு வயிற்றுக்குள் பெருச்சாளி ஓடும். நாளாக நாளாக பெருச்சாளி மெல்ல எலியாக,மூஞ்சூராக மாறியது.

ஆனாலும் அனைத்து மருத்துவர்களும் என் வயதைக் காரணமாகச்சொல்லி முழுமையான குணம் பெற இரண்டு மூன்று மாதங்கள் எடுக்கும் என்று கூறியுள்ளார்கள்.

வண்டியைத் தள்ளிச் செல்ல வேண்டும்…..


(என் 3வது கட்டுரையை அதிகமாக யாரும் வாசிக்க விழையவில்லை போலும். ‘எத்ற்கு இந்தக் கழுதையை வாசிக்க வேண்டு’மென்று நீங்கள் நினைத்திருக்கலாம். அதனால் சிறிது விவரணைகளைச் சுருக்கி இதோடு முடித்துக் கொள்கிறேன்.

முக்கியமாக இதை எழுத இரு காரணங்கள்:

வீட்டோடு முழுமையாக இருந்தும் எனக்கு வந்து விட்டது -- 

1. கொரோனாவைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

2. அரசு மருத்துவ மனையில் நான் பெற்ற மருத்துவம் முழுமையாகவும், சிறப்பாகவும் இருந்தது. 

3. ஆனால் தனி மருத்துவ மனைகளுக்கு இது ‘காசு பார்க்கும்’ நேரமாக ஆகிவிட்டது. ஒரு ஊசி 60,000 ரூபாய் என்று மூன்று ஊசி போட்டு முதல் 3 நாளிலேயே நண்பர் ஒருவரிடம் இதற்கான 1.80,000  வாங்கி விட்டார்கள். எனக்கும் முதல் நாள் போட்ட ஊசி கொஞ்சம் விலை அதிகமானது என்றார்கள். ஆனால் இப்படி ஒரு பகல் கொள்ளை அங்கு ஏதுமில்லை. நானும் யோசித்துப் பார்த்தேன்... 60,000 ரூபாய்க்கு ஒரு ஊசி. ஒரு வேளை உலகிலேயே மிக அதிகமான விலையுள்ள PLACEBO  என்ற மருந்தாக இருக்குமோ? (PLACEBO பொருள் தெரியாதவர்கள் அகராதியைப் பார்த்துக் கொள்ளுங்கள்.  இதுபோன்ற பகல் கொள்ளைகள், ஏஜெண்டுகள் என்பவையிலிருந்து சிலர் தற்காத்துக் கொள்ள முடியும் என்ற காரணத்தால் இதை எழுதினேன். கசப்பாக, நீண்டதாக போனமைக்கு மன்னிக்கவும்.)

 




*

Sunday, August 30, 2020

1105. கொரோனாவும் நானும் ... 3




*

ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 

மருத்துவ மனையில் சேர்ந்த முதல் நாள் இரவில்தான் முதல் ஷாக் வந்தது. ஆனால் அடுத்த நாளே இந்த ஷாக்குகள் பழகிப் போக ஆரம்பித்து விட்டன.  புதுக் கட்டிடத்தில் தான் green zone என்று பெயரிடப்பட்ட எங்கள் வார்டு இருந்தது. பழைய மருத்துவ மனையை ஏறத்தாழ 25-30 ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறேன். ஒரு வாழும் நரகம் போல் தோன்றும். எங்கும் அழுக்கு .. எச்சில்.. கழிவு நீர்… வெராண்டாவில் படுத்திருக்கும் நோயாளிகள் என்று அச்சமுறுத்தியன அந்தக் காலத்தில். ஆனால் இப்போது அப்படியேதும் அச்சம் தரும் நிலையில்லை. சுத்தம் இருந்தது; அதிகக் கூட்டமில்லை. ஆனாலும் வார்டுக்குள் நுழைந்ததும் முதலில் சிறிது பயம் தான் வந்தது. நீண்ட ஹால் .. எதிர் எதிராக இரு வரிசையாகப் படுக்கைகள்; படுக்கைகளுக்கு நடுவே ஒன்று அல்லது ஒன்றரை அடி இடைவெளி தானிருந்தது. ஹாலின் நடுவே மருத்துவர்களுக்கான சிறிய அறை. அதனால் ஹால் இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தன. எனக்கு முதலில் அந்தச் சின்ன மருத்துவ அறையின் மேற்குப் பக்கத்தில் இருந்த பகுதியில், வடக்குப் பக்கம் இருந்த வரிசையில்.. நட்ட நடுவே எனக்கு ஒரு கட்டில் கிடைத்தது. (நிலைமை அப்படித்தான்… ஏதோ ஒரு நோயாளி ஏதோ ஒரு நிலையில் - அதாவது உயிரோடு அல்லது அது இல்லாமலே ‘வெளியே’ சென்றால் தான் அடுத்தவருக்கு இடம் என்ற நிலை!) அப்படிப்பட்ட கூட்டத்திலும் எனக்கென்னவோ எளிதாக அட்மிஷன் கிடைத்தது - என் நண்பர்களின் முனைப்புகளினால் எளிதாக அமைந்தது. ரவியும் வைத்தியும் என்னை வார்டில் என்னைச் சேர்த்து விட்டு அடுத்த நாள் மதியம் வரை ஊண், உறக்கம் இல்லாமல் மருத்துவ மனையிலேயே இருந்திருக்கின்றனர். பாவம் பசங்க …


அதோடு மருத்துவ மனையிலிருந்து வெளி வந்து பல நாட்கள் வரை மக்கள் ரகசியமாக வைத்திருந்த செய்திகள் இப்போது தான் மெல்ல கசிந்து எனக்கு வருகின்றன. நிமோனியாவில் அடுத்தடுத்து ஆறு நிலைகள் இருக்குமாம். எனது நோயின் நிலை ஐந்தாவது நிலையில் இருந்திருக்கிறது. நல்ல சீரியஸ் கேஸ் தான் போலும்; இப்போது தான் தெரிகிறது. அதனால் தானோ என்னவோ, மருத்துவ மனையில் சேர்ந்த சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஒரு S.O.S. voice mail கொடுத்து அவர்களை ‘அலற’ வைத்திருப்பேன் போலும். அதைப் பற்றி அவர்கள் என்னிடம் இப்போது பேசிய போது, அப்படி ஒரு மெயில் கொடுத்த நினைவே எனக்கில்லை. அது தான் சொன்னேனே … எது நிஜம் .. எது கனவு .. என்றே தெரியாத ஒரு நிலையில் முதல் சில நாட்கள் இருந்திருக்கிறேன்.


அந்த வார்டில் இருந்த நோயாளிகளில் ஏறத்தாழ 80% விழுக்காட்டிற்கு மேல் ஆண்கள் தான் நோயாளிகளாக இருந்தார்கள். The "weaker" sex were so low in number!!  Reason..? அம்மாமார்களும், மனைவிமார்களும் நோயாளிகளை அக்கறையாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். பெண்குலத்திற்கே என் மனமார்ந்த வணக்கம்.


முதலில் மிரட்சி. மணி பத்து பதினொன்றுக்கு மேலிருக்கும். என் வரிசையின் வலது பக்கக் கடைசியில் இருந்த ஓரிரு கட்டில்கள் முன் கூட்டமாக இருந்தது. மெல்லிய அழுகை ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தது. யாருக்கோ இறுதிப் போராட்டமாக இருந்திருக்க வேண்டும். அங்கே படுத்துத் தூங்கி விடுவேனா என்றும் தோன்றியது. ஆனால் இதுவரை இருந்தது போன்ற அசதியில் தூங்கி விட்டேன். நடுநிசி தாண்டி ஏதோ ஒரு நேரத்தில் சிறுநீர் கழிக்க எழுந்தேன். கழிவறை என்று எங்கே என்று கேட்டு முதன் முறையாக அங்கே சென்றேன். சுத்தமாகவே இருந்தது. ஆனாலும் தரையை சமமாகப் போடாத கொத்தனார்களைத் திட்டிக் கொண்டேன் - ஏனெனில் அறைகளின் நடுவில் இருந்த பகுதி அதற்குள் பள்ளமாக தண்ணீர் - என்ன தண்ணீரோ? - தேங்கி நின்றது. வெஸ்டர்ன் டாய்லட்டில் பழகியாகி விட்டது. அது இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்று இருந்தது. ஆனால் மேல்பாகமெல்லாம் காணாமல் போய் உடைந்து நின்றது. சமாளித்து வந்த வேலையை முடித்து விட்டு, ஹால் பக்கம் நடந்தேன். இரவிலும் ஆள் நடமாட்டம் இருந்தது. ஹாலின் வாசலுக்கு வரும் போது தான் அந்த முதல் ஷாக் கிடைத்தது. வாசலுக்கு அடுத்தாற்போல் ஒரு இரும்பு ஸ்ட்ரெட்சர் … அதில் நீளப் பொட்டலம் போல் வெள்ளைத் துணியில் கட்டப்பட்ட இறந்த உடலொன்று கிடந்தது. வர வேண்டியவர்கள் இன்னும் வரவில்லை போலும் .. கேட்பாரற்று சுவரோரம் ஒதுங்கிக் கிடந்தது. ஆனால் அடுத்த இரு நாளில் பார்த்த மரணங்கள் - என் கணக்கின்படி எட்டு அல்லது ஒன்பது - மெல்ல என்னைப் பழக்கிக் கொண்டிருந்தன. I was getting adapted to those sad but continuous events.


மருத்துவ மனை செல்வதற்கு முன்னும் பின்னும் ஏறத்தாழ பல நாட்களுக்கு இரவுப் பொழுதுகள் கனவிற்கும், நினைவிற்கும் நடுவில் ஊடாடிக்கொண்டே கழிகின்றன. விழித்துப் பார்த்தால் எது கனவு.. எது நிஜமென ஏதும் புரிவதில்லை. குழப்பம் தான் மிஞ்சி நின்றது. Meet the Spartans என்று ஒரு நகைச்சுவைப் படம். அதில் ராஜாவின் அரண்மனைக்குள் ஒரு இருண்ட குழி இருக்கும். ராஜா வேண்டாதவர்களை அதில் தள்ளி விடுவார். ஆழம் தெரியாத குழி. படத்தில் அந்தக் குழியில் வட்ட மேடை ஒன்றைச் சுற்றியிருக்கும். எனக்கென்னவோ மருத்துவ மனையில் சேர்ந்த முதல் மூன்று நான்கு நாட்களுக்கு நான் அந்த மேடையில் இருப்பது போன்ற நினைவே கனவில் வரும். எந்தப் பக்கம் விழுவது என்ற ஒரு திரிசங்கு நிலையில் இருந்தேன்.


இரண்டாவது நாள் நிகழ்ச்சி. என்னை அது ஏதோ ஒரு சமநிலைக்குக் கொண்டு வந்தது. பதினோரு மணியிருக்கும். எனக்கு எதிர்த்த வரிசையில் ஏறத்தாழ எனக்கு நேரெதிரே படுத்திருந்த ஒரு வயதான பெண்மணி உயிரிழந்தார். கோரோனாவா என்று கொஞ்சம் சந்தேகம் தான். அழுகை ஏதும் இல்லை. அதன் பின் ஓரிரு மணியளவில் என்னைப் பார்க்க வைத்தி, ரவி என் படுக்கையருகே இருந்தார்கள். ஏதோ ஒரு ‘சதி’ செய்து, அவர்கள் முதுகிற்குப் பின்னால், என் கட்டிலிலிருந்து நாலாவது கட்டிலில் ஓர் உயிர் பிரிந்திருக்கிறது. அந்தக் கடைசி நிமிடங்கள் என் கண்ணில் படாதவாறு மறைத்து நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் அதன் பின் இறந்தவர்களின் உறவினர்கள் இரண்டு மூன்று பேர் வந்து அழுத போது தான் அந்த இறப்பு என் பார்வைக்கு வந்தது. ஆனால் இதில் இருந்த பெரும் அதிர்ச்சி  என்னவெனில் அந்த இரு உடல்களையும் அப்புறப்படுத்த ஐந்தாறு மணிகளாகி விட்டது. ஆள் பற்றாக்குறையோ என்னவோ…  அந்த இரு உடல்களையும் அதுவரை பார்க்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியவில்லை.


நான் அங்கிருந்த நாட்களில் இன்னொரு விஷயம் எனக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தையும் கொடுத்தது. இறந்ததும் உறவினர்கள், முக்கியமாக மனைவிமார்களின் அழுகை மிக மெல்லியதாக, சில நிமிடங்களுக்கு இருக்கும். அதன்பின் அவர்களில் பலர் ஏதாவது ஒரு சுவற்று மூலையில் சாய்ந்து விசித்துக் கொண்டிருப்பார்கள். சூழ்நிலை அடக்கி வைத்து விட்டதா .. இல்லை அவர்களாகவே அடங்கி விட்டார்களா என்று தெரியவில்லை.


தொடர்ந்து நடந்து வந்த மரணங்கள்.. நானும் என்னையே அந்த மரணக் கிணற்றின் விளிம்பில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நினைவு .. எல்லாமே இணைந்து உலக  அரசுகள் அனைத்தும் வேறெந்த வேலையும் செய்யாமல் அனைத்தையும் துடைத்தெறிந்து விட்டு, மக்கள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனாவை மட்டும் எதிர்த்துப் போரிட வேண்டும் என்று மனதிற்குள் தோன்றியது. இப்படி ஏதேதோ எண்ணங்கள் .. அவைகளைத் தவிர்க்கவும் முடியவில்லை. திருவிளையாடல் படத்தில் …

எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே..   என்று பாடியதும் அனைத்தும் உறைந்து நிற்குமே, அது போல் உலகத்தையும் ஒரு frozen stageக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் சில நினைவுகள். மூளை மந்தமாக ஆனால் வேகமாகவே வேலை செய்து கொண்டிருந்தது போலும் !!


பிள்ளைகளும், நண்பர்களும் என்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்து விட்டதைப் பற்றி என்னிடம் அடிக்கடி பேசினார்கள். அது ஒரு மிகப் பெரும் நல்ல முடிவு என்பது எனக்குப் பின்னால் தான் நன்கு தெரிந்தது. ஒரு முக்கிய காரணத்தைப் பிறகு அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.


மருத்துவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டையும், நன்றியையும் சொல்ல வேண்டும். PPE உடை போட்டிருக்கிறார்கள். மருத்துவர்களுக்கு வெள்ளை நிறம்; மற்றவர்களுக்கு ஊதா. மணிக்கணக்காக அந்த உடையைப் போட்டிருப்பதற்காகவே அவர்களைப் பாராட்ட வேண்டும். தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார்கள், இரவில் கூட யாரும் அமர்ந்தோ, தூங்கிக்கொண்டோ இருந்ததைப் பார்க்கவில்லை. மிகச் சரியாக இரவு இரண்டு, இரண்டரை மணிக்கு வார்ட் முழுவதையும் சுற்றி ஒவ்வொரு நோயாளியையும் கவனித்து, முக்கியமாக ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளதா என்று தொடர்ந்து கவனித்துக் கொண்டும், ஊசி மருந்துகள் போடுவதும் என்று மிகுந்த அக்கறையோடு எல்லோரையும் கவனித்தார்கள். அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுகள். வழக்கமாக அரசாங்க மருத்துவ மனை மருத்துவர்கள் விட்டேற்றியாக இருப்பார்கள் என்ற நமது வழக்கமான எண்ணத்தை முற்றிலுமாக துடைத்தெடுத்து விட்டார்கள். மனமுவந்த பாராட்டுகளும், தலை தாழ்ந்த வணக்கமும் அவர்களுக்கு உரித்தாகட்டும்.


செவிலியர்களும், துப்புறவுத் தொழிலாளர்களும் நம் பாராட்டுக்குரியவர்களே. அதிலும் ’வசூல் ராஜா, எம்.பி.பி.எஸ்.’ படத்தில் ஒரு துப்புறவு தொழிலாளர் இருப்பாரே, அதே போல் பலரும் இருந்ததைப் பார்த்தேன். ஆனால், பாவம் அவர்கள்… கட்டிப்பிடி வைத்தியம் பார்க்க அங்கு யாருமில்லை!

 

 











*


Thursday, August 13, 2020

1104. கொரோனாவும் நானும் ... 2


ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 



pix not for viewing ... only to record my days with corona....


in GH ward ....



back at home ...on a shaving day!!!




Sunday, August 09, 2020

1103. கொரானாவும் நானும் ….. 1


*

ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 

,*

                          

 

எழுத ஆரம்பித்த நாள்: 4.8.20

வலைக்கு வந்தே ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது.   ஏழுமலை ... ஏழுகடல் தாண்டிய அனுபவம்தான்  இதுவரை.   என்னென்னவோ நடந்தது ..எப்படி எப்படியோ இருந்ததுஎல்லாம்  ஆங்காங்கே  நினைவுகளாக ஒட்டிக் கொண்டு நிற்கின்றன. துடைத்துப் போடவும் முடியவில்லைதொகுத்துத் தரவும் முடியவில்லை

தொடர்ந்து எழுத முடியவில்லை. தொடரணும் …

 

 5.8.20

பெற்று வளர்த்த இரண்டு பிள்ளைகளும்பெறாமல் வந்து சேர்ந்த மூன்று பிள்ளைகளும் கட்டி இழுத்து வந்து இதுவரை கொண்டு வந்து விட்டார்கள்அவர்கள் மட்டும்தானாபெரிய படையே அல்லவா  திரண்டு என் பின்னால்  நின்றதுஎத்தனை கரிசனம்எத்தனை அன்புஎங்கெங்கிருந்தோ உதவி.  

 

உங்களையெல்லாம்  மீண்டும் என் மனதிற்குள்  ஒரு தரிசனம்  செய்ய ஆசை. அதுவே இந்த எழுத்துக்களின் நோக்கம்.

 

6.8.20

ஜூன் மாத கடைசி வாரம்வலது பக்கம் தோள்பட்டை வலிஅத்தனை அசதிபாரசிட்டமால்  வாங்கப் போனால் கடையில் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்விற்பனைக்கு இல்லையாம். ICMR ல் வேலை பார்க்கும் நண்பனுக்கு ( இக்கட்டுரையில் இனி ‘நண்பன்’ என்றால் அனேகமாக அவன் ஒரு மாணவ நண்பன் என்று கொள்ளவும்.).  சில மாத்திரைகள் சொன்னான்இரண்டு நாள் சாப்பிட்டேன்பயனேதுமில்லைஅவனுக்கு வாட்ஸ்அப்பில்  வாய்ஸ் மெசேஜ் கொடுத்தேன்என்னப்பா பண்றது என்று கேட்டிருந்தேன்மூன்று நாளாகியும் பதில் இல்லைஆச்சரியம்இன்னொரு நண்பனுக்கு செய்தி சொன்னேன்சிறிது நேரத்தில் ICMR நண்பரிடமிருந்து  போன் வந்தது. “அக்காவிடம் கொடுங்கள்என்றான்மனைவியிடம் கொடுத்தேன்அவன் பேச ஆரம்பித்ததும் மனைவி என்னிடம் சைக்கினையில்  அழுகிறான் என்றாள். வாங்கி நான் பேச ஆரம்பித்தேன்அவன் நான்கு நாட்களாகாக குவாரண்ட்டையினில்  இருக்கிறான்அதனால் என் செய்தியை வாசிக்கவில்லைஅதற்கு அத்தனை கவலை அவனுக்கு. அவனுக்கு நான் ஆறுதல் சொல்ல வேண்டியதாகிவிட்டது. 

 

 9.8.20 (இன்று எழுதி முடித்து விட வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கணினி முன் அமர்கிறேன் ….)

 

அடுத்த நாள் காலை. நண்பன் அனுப்பிய மாநகராட்சி ஊழியர் ஒருவர் வந்து கொரோனா டெஸ்ட் எடுத்துப் போனார். எப்போ ரிசல்ட் தெரியும் என்றேன். தினமும் 1500 டெஸ்ட் செய்ய முடியும்; ஆனால் 2000க்கும் அதிகமாக வருகின்றன; நாலைந்து நாட்களாகலாம் என்றார். நண்பனிருக்க நமக்கேன் கவலை என்பது போல் இரண்டாம்  நாளே ரிப்போர்ட் வந்தது. கொரோனா நெகட்டிவ். மகிழ்ச்சி. ஆனால் குடும்ப மருத்துவர் உடனே ஒரு ஸ்கேன் எடுத்து விடுங்கள் என்றார். மாலை போனோம். மீண்டும் எப்படியோ, மக்களெல்லாம் காத்திருக்க நான் போனதும் பத்து நிமிடங்களுக்குள் என்னை அழைத்தார்கள். ஸ்கேன் எடுத்ததும் ரிசல்ட் மாலை 8 மணிக்குக் கிடைக்கும் என்றார்கள். ரிசல்டிற்காகக் காத்திருந்தேன்.

 

அதற்குள் நண்பர்கள் என் பிள்ளைகளோடும், சென்னையில் பெரிய பதவியில் உள்ள இன்னொரு நண்பனிடமும் கலந்து பேசி பல முடிவுகளை எடுத்துள்ளார்கள். (அந்த “இன்னொரு நண்பன்” படிக்கிற காலத்தில், அதாவது 40 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் எல்லோருக்கும், அதுவும் என் மனைவிக்குப் பிடித்த விளையாட்டுப் பிள்ளை..) தேவையானால் அரசாங்க மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்பது சென்னை நண்பனின் பெரிய மருத்துவ நண்பர் கொடுத்த அறிவுரை. மருத்துவம் முடிந்ததும் சென்னைக்குப் பிள்ளைகள் வீட்டிற்குச் சென்றுவிட வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார்கள்.

 

8 மணியாயிற்று. தகவல் இல்லை. 8.30 மணிக்கு நண்பர்கள் வந்தார்கள். மருத்துவ மனைக்குப் போக வேண்டும் என்று தகவல் சொன்னார்கள். உங்கள் காரில் தானே என்றேன். இல்லை .. ஆம்புலென்ஸ் வந்திருக்கிறது என்றார்கள். கொஞ்சம் பக் என்றிருந்தது. இல்லை .. அதுதான் வழக்கம் என்றார்கள். அத்தனை குறுகிய காலத்தில் ஆம்புலென்ஸை உடனே வரவழைத்தது மட்டுமில்லாமல் சென்னை நண்பன் மதுரை அரசு மருத்துவ மனையில் நோயாளிகளை அனுமதிப்பதை மேற்பார்வையிடும் மருத்துவரிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தான். சென்றேன்; உடனே அனுமதிக்கப்பட்டேன். மற்றவர்கள் படும் சிரமத்தை நான் உள்ளே சென்ற பிறகுதான் புரிந்துகொண்டேன்.

 

மருத்துவமனைப் பொறுப்பை மூன்றாவது மகன், அதாவது என் மருமகன் எடுத்துக் கொண்டார். சாப்பாடு எடுத்து வருவது, மருத்துவர்களைப் பார்ப்பது … அதெல்லாம் சரி .. ஆனால் மூத்திர பாட்டிலைக் காலி செய்து கொடுப்பதும், கழிவறைக்கு வெஸ்டர்ன் டாய்லட்டிற்கு உரிய நாற்காலையைத் தூக்கி உடன் வருவதும், டையாப்பர் மாட்டி விடுவதும் … அம்மாடி! … அவனின் கன்னத்தை இரு விரல்களால் கிள்ளி ஒரு முறை முத்தமிட்டேன். வேறென்ன செய்ய முடியும் என்னால்!

 

மருத்துவமனையில் சேர்ந்த அடுத்த நாளே ஒரு பெரிய மருத்துவ அதிகாரியிடமிருந்து தொலைபேசி வந்தது. யாரென்று தெரியாமல் கேட்டேன். யார் என்பதைச் சொன்னார். தொடர்ந்து உங்களுக்கான மருத்துவத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். மதுரையிலுள்ள மாணவி நான் அரசு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறேன் என்று தன் வகுப்புத் தோழன் - அவன் இப்போது ஒரு மாவட்ட ஆட்சியர் - தகவல் தெரிவித்திருக்கிறாள். அவன் உடனே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளான். அதன் பின் மனைவியிடம் பேசியிருக்கிறான். ஆனால் அதன் பின் பல நண்பர்கள் நாங்களும் அவரிடம் பேசியுள்ளேன் என்றார்கள். எனக்குக் கொஞ்சம் பயம் தான். அவருக்கே அலுப்பு வந்து விடக் கூடாதே என்று. சில முறை என்னிடம் பேசினார். பேசும் போதெல்லாம் “நீங்களே எல்லாவற்றையும் முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறினேன்.

 

இன்னொரு பெரிய மருத்துவ அதிகாரியிடமிருந்தும் என்னிடம் சில சமயமும், மருமகனிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி என் உடல் நிலை முன்னேறி வருவது பற்றி அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருந்தார். இந்தக் கவனிப்பும் சென்னை நண்பன் மூலமாகவே வந்தது.

 

ஏறத்தாழ ஒரு வாரம் மருத்துமனை வாசம். மறக்க முடியாத பல கொடூரமான நிகழ்வுகளும் நடந்தன. மறக்க நினைத்தும் முடியாதவைகள். பிறகு தனியே தொகுத்து எழுத வேண்டும்.

 

20.7.20 மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்பட்டேன். மருமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார். காரின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்ப வந்து கொண்டிருந்தேன். முகத்தில் வேகமாக வீசிய காற்று சுகமாக இருந்தது. திரும்பி வந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைவில் அத்தனை மகிழ்ச்சி. எங்கள் புறநகர்ப் பகுதியில் வந்ததும் மகிழ்ச்சி இரட்டிப்பானது. வீட்டிற்கு அருகில் நெருங்கிக் கொண்டிருந்தோம்.

 

முக்கிய வீதியில் வந்து கொண்டிருந்தோம். இதில் இரு வினாடிகள் … சாலை இடது பக்கம் திரும்பியதும் அடுத்த மூன்று வினாடிகள். அவ்வளவே வீட்டிற்கான தொலைவு. அந்தக் கடைசி 5 வினாடிகள். They started moving in slow motion. முதல் இரு வினாடிகளில் “என் வீட்டை”ப் பார்த்தேன். பச்சைப் பசேலென்ற மரங்கள் சூழ்ந்த ஒரு சின்ன வீடு. அதுவும் பெரிய சாலையிலிருந்து பார்க்கும் போது … தனியான ஓரழகுப் பச்சை வண்ணத்தில் கொன்றைப் பூவின் இலைகள் … அவைகளின் ஊடே அத்தனைச் சிவப்பாக கொன்றைப் பூக்கள். இலையும் மரங்களும் அத்தனை அழகூட்டின. கார் இடது பக்கம் திரும்புகிறது … அடுத்த மூன்று வினாடிகளில் பிள்ளைகளும், நண்பர்களும் எனக்காக.. என் நாளைய பொழுதிற்காக எடுத்திருக்கும் முடிவுகள் நினைவுக்கு வந்தன. இது தான் ”என்” வீடு… வாழ் நாளெல்லாம் இங்கு தான் என்று நினைத்து வைத்திருந்த எண்ணங்களை நான் நினைத்ததை விட எளிதாக அப்படியே மறந்து… புறந்தள்ளி விட்டு “அந்த” வீட்டிற்குள் நுழைந்தேன்.

 

வீட்டிற்கு வந்ததும் இன்னும் ஒரு பிரச்சனை -- மூச்சு வாங்குவது. சின்ன வேலை செய்தாலும், நான்கடிகள் நடந்தாலும் மூச்சு வாங்கும். நான்காவது நாள். நானும் பிள்ளைகளும், மனைவியும் உட்கார்ந்து ஒரு flash back ஓட்டினோம். கொரோனா ஆரம்பித்த காலத்தில் எப்படி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்கார்களின் உதவி பற்றியெழுதியிருந்தேன். ஆனால் இந்தக் கடைசி சில நாட்களில் எனக்குக் கிடைத்த அன்பு என்னை நிச்சயமாக நிலை குலைய வைத்து விட்டது. அதுவும் நண்பர்களின் உதவி… அம்மம்மா … நேரடி உதவி செய்யாவிட்டாலும், தங்கள் குறுஞ் செய்திகள், தொலைபேசி அழைப்புகள்… அதில் இருந்த உண்மையான அன்பு. ஓரளவு என் மாணவர்களின் அன்பு எனக்குப் பழகியது தான். ஆனால் இந்த முறை.. ஆனால் இந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல… மனைவியும். பிள்ளைகளையும் இந்த உணர்வு உண்மையிலேயே உலுக்கி எடுத்து விட்டது. அப்பாவின் மீது இத்தனை பேருக்கு இத்தனை அன்பா .. என்று பிள்ளைகளே வியந்து நின்றனர். ’என்னோடு பேசும் போது எத்தனைக் கலங்கி பேசினார்கள்’ என்றார்கள்.

 

(என்ன பிரச்சனை என்றால் இதைப் பற்றி கண்ணீர் மல்க பேசி கொண்டிருந்தோமா… - இப்போதெல்லாம் நான் மிக எளிதாக உடைந்து விடுகிறேன் - எனக்கு மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது. சில நிமிடங்களே இருக்கும் இந்தப் பிரச்சனை அன்று முடிய ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. மருத்துவர்கள் கொடுத்த கடுமையான அறிவுரை : TALK LESS.)

 

 














*










Tuesday, November 08, 2005

103. மரணம் தொட்ட கணங்கள் ...4

* முதல் கணம் ...

* இரண்டாம் கணம் ...

* மூன்றாம் கணம் ...

E.C.G.பார்த்த டாக்டர் நேரே போய் I.C.U.வில் படுங்க என்றார். கொஞ்சம் அதிர்ச்சிதான். தனியாக பைக்கில் சென்றிருந்தேன். வீட்டுக்குப் போயிட்டு காலையில் வந்து விடட்டுமா என்றேன். E.C.G. சரியாக இல்லை என்றார். உடனே I.C.U.-வில் வைத்து மருத்துவம்  பார்க்க வேண்டும் என்றார். வேறு வழியில்லை.

.வீட்டில் துணைவிமட்டும் இருந்தார்கள். என்ன செய்வது, observation-ல் இருக்கவேண்டியதிருக்கிறதாம்; காலையில் வருகிறேன் என்று அவர்களிடம் ஒரு பொய் சொல்லிவிட்டு, I.C.U. போனேன். அங்கே போனால் அதுக்குப் பிறகு ஓரிரு நாட்களுக்காவது என்ன ஏது என்று ஒன்றும் தெரியாது; மயக்க மருந்து கொடுத்து அரை விழிப்பில் வைத்திருப்பார்கள். துணைவியார் பக்கத்து வீட்டு மக்களின் உதவியுடன் அன்றிரவே மருத்துவமனை வந்து வெளியே காவல் தெய்வமாக உட்கார்ந்து இருந்தார்களாம். இரண்டு நாட்கள் கழித்து discharge. இம்முறை டாக்டர் angiography பார்த்து விடுங்கள். என் ‘நீண்ட’ experience-ல் angio என்றாலே ஒரே மாதிரி வசனம்தான் மருத்துவர்களிடமிருந்து அடுத்து வரும்: “நல்ல வேளை; சரியான நேரத்தில் வந்திருக்கிறீர்கள்; 3/4 blocks இருக்கு; உடனே அறுவை சிகிச்சை பண்ணி ஆகணும்”. டாக்டரிடமே இதைச் சொன்னேன்; நல்ல பதில் ஒன்று கொடுத்தார். “கடந்த இரண்டு நாளில் 60-க்கும் மேல் இதய நோயாளிகளைச் சோதித்து, அதில் உங்களையும் சேர்த்து இரண்டு பேரை மட்டும் angio-வுக்கு அனுப்பியுள்ளேன். அதனால், அநேகமாக ஒரே மாதிரிதான் ரிசல்ட் இருக்கும் என்றார். ஆக, முடிவாகிவிட்டது - அறுவைதான் என்று.

மனத்தையும், பணத்தையும் தயார் நிலை கொண்டுவர சின்னாட்கள் எடுத்தது. அதற்குள் டாக்டரும் அவசரப் படுத்தினார். அக்டோபர் கடைசியில் - 23-ம் தேதி என்று நினைக்கிறேன். மதுரை அப்பல்லோவில் மாலை அனுமதிக்கப்பட மனைவியோடு சென்றேன். பணம் கட்ட என்று அங்கிங்குமாய் அலைந்து கடைசியில், அறை வாங்க ரிசப்ஷன் சென்றேன். patient எங்கே அன்றார்கள்; நான்தான் என்றேன்; மேலும் கீழுமாய் பார்த்துவிட்டு அறைக்கு அனுப்பினார்கள்! வீட்டுக்கார அம்மாவிடம் அதைச் சொல்லி…appearances are deceptive என்ற தத்துவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டோம்!

அடுத்த நாள் angio; சொன்னது மாதிரியே 4 ப்ளாக்குகள்; மூன்றில் bye-pass செய்ய வேண்டும் - உடனே என்றார்கள். தெரிந்ததுதானே… 28-ம் தேதிக்கு நாள் குறிக்கப்பட்டு அதற்கு முந்திய நாளே அட்மிட் ஆனேன். 27-ம் தேதி மாலை ஒரு சீனியர் நர்ஸ் வந்து, surgery பற்றிய முழு விபரம் கூறினார். மொத்தமே 25-30 நிமிடம்தான் உண்மையில் surgery இருக்கும்; ஆனால், ஓரளவு மயக்கம் தெளிந்த பின்பே தியேட்டரை விட்டு நோயாளிகளை வெளியே கொண்டு வருவார்கள். அதில் சிலருக்கு இரண்டு மணி நேரம் ஆகலாம்; இன்னொருவருக்கு மூன்று மணி நேரம் பிடிக்கலாம். அந்த நேர தாமதங்களை வைத்துப் பயப்படக்கூடாது என்பது போன்ற அறிவுரைகள் என் மனைவிக்கும், வந்து சேர்ந்துவிட்ட மகள்களுக்கும்; எனக்கு என்னென்ன risks இருக்கின்றன்; எப்படி பாதியிலேயே எல்லாமே ‘டப்புன்னு’ நிக்கிறதுக்கு சான்ஸ் இருக்கு.. வேற என்ன குளறுபடிகள் வரலாம்; bleeding heart surgery (இதயத்தை ‘அதுபாட்டுக்கு’ வேலை செய்யவிட்டுவிட்டு bye pass பண்ணுவது), இல்லையேல் heart-lung machine பொறுப்பில் உடம்பைக்கொடுத்துவிட்டு, இதயத்தை ‘ஒரு கை’ பார்ப்பது என்பது அறுவை மேசையில்தான் முடிவு செய்யப் படும் … இப்படி பல பயமுறுத்தல்களும், ஆலோசனைகளும். மக்கள் நன்றாகவே பயந்து போனார்கள். I think I was above all those things. A sort of emptiness…நம் மொழியில் அதற்குப் பெயர் என்ன - “கையறு நிலை” என்பதுதானே?

அடுத்த நாள் - D-Day - காலையிலேயே தியேட்டருக்கு stretcher-ல் பயணம்; வழியில் ஆல்பர்ட் (’நம்ம திருட்டுத் தம் கூட்டாளி !)என்னிடம் குனிந்து தைரியம் சொன்னான்; அவனிடமிருந்து பெரும் சிகரெட் நாற்றம்; ‘இப்படி அடிச்சிதான் நான் இப்படி போறேன்; நீ இன்னும் விடமாட்ட, இல்ல என்றேன். (சிரிச்சிக்கிட்டே ஜோக் மாதிரி நான் சொன்னதாக அவன் பின்னால் சொல்லி, எப்படி’டா, அந்த நேரத்தில் உன்னால ஜோக் அடிக்க முடுஞ்சுது என்றான்.)

தியேட்டருக்கு நுழைவதற்கு முன் உள்ள முன்னறையில் படுக்க வைத்தார்கள்; சில பல ஊசிகள். மயக்கநிலைக்குச் சென்று கொண்டிருந்தேன். அடுத்த ஒரு stretcher-க்கு மாற்றியதை உணர்ந்தேன்; அது மிக மிக ‘சில்’லென்று இருந்தது.  உள்ளே எடுத்துப் போகப்பட்டேன். தலைக்குமேல் ஏதோ ஒன்று - லைட் மாதிரி ஏதாவது இருக்கலாம்; பள பளவென்று இருந்தது. அதில் என் உருவம் ஓரளவு தெரிந்தது; ஏதோ சிலுவையில் அறையப் போவதுபோல் கைகளை நீட்டி வைத்திருந்தது தெரிந்தது. அதையே பார்த்துக்கொண்டேடேடேடே..…இருந்தேன். அவ்வளவுதான் தெரியும்.


விழித்தபோது post-operative I.C.U. பகுதியில் இருந்தேன். என்னோடு அன்று இன்னும் இருவருக்கும் ‘அறுப்பு’ நடந்ததாம்; பக்கத்தில் ஒருவர்; எதிர்த்தாற்போல் இன்னொருவர். எனக்கில்லாத சில extra-fittings இருந்தது அவர்களுக்கு. என்னவென்றால் எனக்கு bleeding heart surgery. அவர்களுக்கு அப்படியில்லாததால் எக்ஸ்ட்ராவாக தொண்டை, மூக்குக்குள் குழாய்கள் பொருத்தப் பட்டிருந்தன. அது அதிகமான உறுத்தல் தருமாம்; அதனால் இருமல் வரும் வாய்ப்பும் அதிகம். ‘இருமல், தும்மல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்; அப்படி வந்தால் கொடுக்கப் பட்டுள்ள சின்ன தலையணை ஒன்றை வைத்து நெஞ்சின்மேல் வைத்து அழுத்திப் பிடித்துக்கொண்டு இருமும் படி சொன்னார்கள்.’… நான் பரவாயில்லை, ஒரே ஒரு முறை ஒரு தும்மல் வந்து தொலைத்தது. ஆனால் அடுத்த இருவரும் மிகுந்த கஷ்டப்பட்டார்கள். இருவருக்குமே அடிக்கடி இருமல். எனக்கு ஒரே ஒரு தும்மல் என்றாலும் அது இன்னும் நினைவில் இருக்கும் அளவு நெஞ்சில் வலி. மற்றபடி, நெஞ்சு இறுக்கமாக இருந்தது; வலி பின்னால்தான் வந்தது. மூன்றாவது நாளே நான் அந்த இருவரையும் விட தெளிவாகிட்டதாகக் கூறி என்னை அறைக்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டு மக்களை அன்றுதான் முழு நினைவோடு பார்க்கிறேன்.

இரண்டு நாட்கள் ஆயிற்று. ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர் வழக்கம்போல் இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு என்று சோதித்தார்; அவ்ர் முகம் மாறியது; விரைந்து வெளியே சென்ற அவர் மூத்த மருத்துவரோடு திரும்பி வேகமாக வந்தார் - முகத்தில் கவலைக் குறிகளோடு. மறுபடி என்னை விரைவாக I.C.U.எடுத்துச் சென்றார்கள். ஊசிகள்…மருந்துகள்…நான் அரை நினைவுக்கு நழுவினேன். ஓரளவு சுற்றி நடப்பது தெரிகிறது. அறுவை செய்த மருத்துவர் ஸ்ரீதர் ஏதேதோ உத்தரவுகள் பிறப்பிக்க, என்னைச் சுற்றிப் பரபரவென எட்டு பத்து பேர்; என்னவோ நடக்கிறது; நடப்பது அவ்வளவு நல்லா இல்லாத விஷயம்தான் என்ற அளவு புரிகிறது. மருத்துவர் கையில் surgical scalpel.

இதுவே என் வாழ்வின் கடைசி நிமிடங்கள் என்ற நினைவு வந்தது. என்னைச் சுற்றியும் உள்ள பதட்ட நிலை, டாக்டரின் கையில் உள்ள அறுவைக் கத்தி…எல்லாம், அநேகமாக, அங்கேயே நெஞ்சை அறுத்துத் திறக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன். அப்போது என்னை நானே, என்னிலிருந்து தனியாகப் பார்ப்பதாக உணர்ந்தேன்.’சாகப்போகிறோம்; இப்போது கடவுளைப் பற்றி நினைக்கவேண்டுமோ; கடவுளிடம் ஏதாவது பிரார்த்திக்க வேண்டுமோ என்று ஒரு நினைவலை. எனக்கு நானே பதில் சொல்லிக் கொண்டேன். யோசிச்சி…யோசிச்சி அதெல்லாம் ஏதும் இல்லையென்ற முடிவுக்குத்தான் வந்து விட்டோமே; பிறகு இந்த நினைவு எதற்கு என்று நானே அந்த நினைவிலிருந்து வெளியே கொண்டு வந்தேன். மனைவி, மக்கள் நினைவு அடுத்தது…அவர்களை விட்டுவிட்டுப் போகிறோமோ என்று ஒரு வேதனை வந்தது. அடுத்த நினைவு: Osho சொல்லியது என்று நினைக்கிறேன்; only living is painful and not dying. நாம இப்போ செத்துட்டம்னா, நமக்குஅதன்பின் தொல்லை ஒன்றுமில்லை. பாவம் உயிரோடு இருப்பவர்கள்தான் கஷ்டப்படுவார்கள் என்ற நினைவு நெஞ்சில் நின்றது. . வீடு திரும்பிய சின்னாளில் நான் எழுதிவைத்த ஆங்கிலக் குறிப்பில் உள்ள ஒரு வாக்கியம் மருத்துவ மனையின் அந்த கணத்தை முழுமையாகச் சொல்லும் என்று நினைப்பதால்… : அதை இங்கு திரும்பச் சொல்கிறேன்:-- It was like the living Sam looking down on the dying Sam.

‘தப்பித்து வந்தானம்மா’ அப்டிங்கிறது மாதிரி மறுபடி அறை வந்து, மக்கள் சிரிப்பைப் பார்த்து… ம்…ம்… நாலு வருஷம் முழுசா ஓடியிருச்சோ…? மருத்துவ உலகின் அதிசயமாகச் சில விஷயங்கள் இருந்தன. விலா எலும்புகளின் நடுவில் அறுத்து, நெஞ்சைப் பிளந்து, காலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தக் குழாய்களை வைத்து, இதயதிற்குச் செல்லும் அடைபட்ட ரத்தக் குழாய்களைச் சீர் செய்து, மறுபடி நெஞ்சுக் கூட்டை மூன்று இடங்களில் ‘கம்பிகளால் முடுக்கி’, என்ன, …படிக்கும்போதே தலை சுற்றுகிறதா என்ன…?..இவ்வளவு ‘வேலை’ நடந்த பிறகும் ஓரிரு நாளிலேயே காலில் இரத்தக்குழாய் எடுப்பதற்காக போட்ட கீறல் சரியாகி விட்டது; நெஞ்சில் மூன்று சின்ன பாண்டேஜ் மட்டும்தான்; அதுவும் முதல் வாரத்தில் மட்டும்தான்.

இன்னொரு சோதனை; (echo cardiogram..?)படுக்கவைத்து இதயத்தின் உட்கூறு தெரிய, அதில் புள்ளிகள் பலவைத்து, plot செய்து…ஒரு சின்ன வயது கிறித்துவப் பெண் எனக்கு அந்தச் சோதனையைச் செய்து கொண்டிருந்தார்கள். அநேகமாக இதயத்தின் உட்சுவர்களின் நிலை பற்றித் தெரிந்துகொள்ள செய்யப்படும் சோதனை என்ற அளவு புரிந்தது. அவர்களிடம் கேட்டேன்; ஆமாம் என்றார்கள்.

‘இதயச்சுவர்கள் எந்த அளவு damage ஆகியுள்ளது’ என்றேன்.

‘45-50 விழுக்காடு’ என்றார்கள்.

‘பரவாயில்லையே. அவ்வளவு போன பின்னும்கூட வண்டி இப்படி ஓடுதே’ என்றேன்.

என் பெயரிலிருந்து என்னைக் கிறித்துவனாக நினைத்து,‘கடவுள் (’கர்த்தர் என்று வாசித்துக்கொள்ளவும்!) அவ்வளவு உன்னதமாகப் படைத்திருக்கிறார்’ என்றார் அவர்.

‘கடவுள் படைச்சிருந்தா இந்த மாதிரி ஓட்ட ஒடசலாவா படைச்சிருப்பார்’ என்றேன்.

‘அவர் நல்லாதான் படைச்சிருக்கார்; நாமதான் அதை சரியா வச்சுக்கிறதில்லை’ -இது அவர்.

‘சாமி படச்ச விஷயமா இருந்தா நாம என்ன பண்ணினாலும், அது பாட்டுக்கு நல்லா இருந்தாதான் சாமி படச்சதுக்கு ஒரு மரியாதை இருக்கும்’ - இது நான்.

இப்படி படுக்கப்போட்டு, அறுத்த பிறகும் உனக்குப் புத்தி வரலையே; - இது அவர் தம் மனசுக்குள் சொல்லிக்கொண்டது. பதில் பேசாமல் ஒரே ஒரு முறை முறைத்துவிட்டு, தன் வேலையப் பார்த்தார்கள்.

2001,நவம்பர் 8-ம் தேதி - அறுவை முடிந்த பத்தாம் நாள் discharge. கடைசி நேர வேலைகள் எல்லாம் முடித்து நீங்கள் போகலாம் என்று கூறிய பிறகும், wheel chair வரும் என்ற எண்ணத்தில் காத்திருந்தோம். ‘என்ன போக மனசில்லையா?’ என்று நர்ஸ் கேட்டபோது, wheel chair-க்கு காத்திருக்கிறேன் என்றேன். நீங்கள் இப்போ நார்மல்…பேசாமல் நடந்து போங்கள்’ என்றார்கள். நடந்து மின் தூக்கிக்குப் போனேன்! எனக்கே மிகுந்த ஆச்சரியம்!

நான் ஒரு தனிக்கேசு என்று தெரிந்துகொண்டேன். பலருக்கும் ஏதாவது வெளிப்படையான பிரச்சனைகள் இருக்கும்; மூச்சு விட கஷ்டம்; நெஞ்சு வலி; இப்படிஏதாவது. எனக்கோ, வண்டி அது பாட்டுக்குப் போயிட்டு இருக்கும். எந்தப் பிரச்சனையின்றி இருப்பேன். திடீரென்று - somebody throwing a spanner into the wheel - என்பார்களே, அது மாதிரி காத்துப் போன பலூனாய் பொசுக்குன்னு ஏதாவது ஆகிவிடுகிறது. இதனால் எப்போ மணி அடிக்கும் என்று தெரியாத ஒரு ‘மாய வாழ்க்கை’! அதனால் சாவைப் பற்றிப் பேசவோ, நினைக்கவோ எளிதாகத்தான் இருக்கிறது. என்ன, துணைவியாருக்குத்தான் அப்பப்போ கோவம் வரும். ஏன்னா, செத்த பிறகு (கமல்ஹாசன் செஞ்சது மாதிரி) உடம்பைத் தானமாகக் கொடுக்கணும்னு ஆசை. பிள்ளைகளிடம் அது பற்றிப் பேசி சம்மதம் வாங்குவது பிரச்சனையில்லை; ஓரளவு வாங்கியது மாதிரிதான். துணைவியாருடன்…? கேட்டா, இதப் பற்றிப் பேசினா அடுத்த ஓரிரு மணிவரை பேச்சு கிடையாது. சரி, அது வேண்டாம்னா, at least, கல்லறை வேண்டாம்; எரிச்சிடலாம்னு சொன்னாலும் சண்டைக்கு வர்ராங்க. இந்தக் கிறித்துவர்கள் மட்டும், உள்ளதே இடப் பஞ்சம் இங்கே; இதில் நல்ல இடமா பாத்து ஏக்கர் கணக்கில வாங்கி, ஆளுக்கு 6 x 4 ன்னு கொடுத்து இடத்த வீணடிக்கிறார்கள்! இந்துக்களின் வழக்கம் ரொம்பப் பிடிக்குது; முஸ்லீம்காரரகள் கூட புதைத்தாலும் தனி அடையாளம் இல்லாமல் ஒரே இடத்தில் எல்லோருக்கும் ஒன்றாய், சமமாய் முடித்து விடுகிறார்கள். ‘சமரசம் உலாவும் இடம்’ அப்டின்னு சொல்லிட்டு,கிறித்துவர்கள் கல்லறையில் சிலருக்கு பளிங்கு அது இதுன்னு பளபளன்னு பெருங் கல்லறைகள்; அதிலும் உயர்வு தாழ்வுகள்…சரி…அதெல்லாம் பிறகு மக்கள் பாத்துக் கொள்ளட்டும்!

ரொம்ப சாரி’ங்க…ரொம்ப depressing விஷயமா எழுதிட்டேனோ? கண்டுக்காதீங்க…என்ன.இந்த மாதிரி நான் எழுதினதால யாரும் ‘டல்’லா ஆகியிருந்தாலும் கோவிச்சுக்காதீங்க. After all, it is also one point of life..இல்லீங்களா?

இனி இந்த மாதிரி கணங்கள் எழுதல…அடுத்த கணம் இனி எப்பவோ, எப்படியோ…உங்கட்ட அது பற்றியெல்லாம் சொல்ல முடியுமோ, முடியாதோ.அதனால இப்பவே - bye


இம்புட்டு எழுதி உங்களைக் கஷ்டப்படுத்தினதிற்காக உங்கள சிரிக்க வைக்கிறது இப்போது என் கடமையாப் போச்சு. இப்ப உங்கள சிரிக்க வைக்கணும்னா அதுக்கு ஒரு வழி கைவசம் இருக்கு…அதுக்காகத்தான் இங்கேயுள்ள படம்…பாத்தா உங்களுக்கும் சிரிப்பு வருமே…நல்லா சிரிச்சிக்கிங்க, சரியா..?



சந்தோஷமா அடுத்த பதிவில சந்திப்போம்.







Nov 08 2005 08:35 pm சொந்தக்கதை.. edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 7 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
26 Responses
Prem Says: after publication. e -->November 8th, 2005 at 9:52 pm e
Noorandu kaalam vazhga …
சங்கரய்யா Says: after publication. e -->November 8th, 2005 at 10:01 pm e
தருமி,
ஏதோ நானும் உங்களுடன் “அறுவைக்கு” வந்த ஒரு உணர்வு, படம் பார்த்து சிரிப்போ சிரிப்பு
இராமநாதன் Says: after publication. e -->November 8th, 2005 at 10:23 pm e
அடாடா தருமி.. என்ன ஒரு போட்டோ? செவாலியே கன்பர்ம்ட்! )
//இப்படி படுக்கப்போட்டு, அறுத்த பிறகும் உனக்குப் புத்தி வரலையே;//சூப்பர்.
உங்க approach ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு தெரிஞ்ச பலரும் வாழ்க்கையே முடிஞ்சிடுத்துங்கற மாதிரி, ஓவர் கண்ட்ரோல்ட் மோடுக்கு போய் எதையுமே அனுபவிக்காம இருக்கிறாங்க. ஒரு நோய் நம்மள பயமுறுத்த ஆரம்பிச்சுடுச்சுன்னா, அப்புறம் அதற்கு தீர்வே கிடையாது என்பது என் தாழ்மையான எண்ணம்.
அது சரி, என்னைய இளவஞ்சி பதிவுக்கு வரச்சொன்னீங்க. நானும் வந்துட்டேன்.. உங்களத்தான் காணலே. இதுல என்னப் பத்தி டீச்சர்கிட்ட வேற வத்திவக்கீறீங்க.. என்ன நியாயம்? அந்த சொக்கனே வந்தாத்தான் ஆகுமா?
வெளிகண்ட நாதர் Says: after publication. e -->November 9th, 2005 at 6:05 am e
நெஞ்சை கணக்க வைத்த தருணங்கள். இருந்தாலும் முடிவை சுபமாக்கி சிரிக்க வச்சுட்டிங்க
துளசி கோபால் Says: after publication. e -->November 9th, 2005 at 7:08 am e
என்ன தருமி,இப்படி எமனுக்கே ‘கடுக்காய்’ கொடுத்துட்டீங்களே?:-))))
நல்லா இருங்க. இந்தப் படம் நல்லா இருக்கே தருமி.
டீச்சருக்குத் தெரியாமத்தானே போட்டீங்க?
Thangamani Says: after publication. e -->November 9th, 2005 at 7:12 am e
//It was like the living Sam looking down on the dying Sam//
Nice. Take care.
D.Krishnamurthy Says: after publication. e -->November 9th, 2005 at 7:41 am e
It was like the living Sam looking down on the dying Sam.
great!
தாணு Says: after publication. e -->November 9th, 2005 at 10:52 am e
தாடியோடு இருந்த போட்டோ பார்த்து பாவமா இருந்தது. கண்ணாடி போட்டு சிரிக்கிறப்போ பார்க்க சந்தோஷமா இருக்கு.ஆனாலும் வாத்தியாரோட வறட்டு தத்துவங்கள் செத்துப் பொழைச்ச கணத்திலும் போகலை பாருங்களேன்!!
தாணு Says: after publication. e -->November 9th, 2005 at 10:53 am e
உண்மையைச் சொல்லுங்க பல் செட்டா உண்மையான பல்லா?
Awwai Says: after publication. e -->November 9th, 2005 at 11:00 am e
/”‘கடவுள் படைச்சிருந்தா இந்த மாதிரி ஓட்ட ஒடசலாவா படைச்சிருப்பார்’ என்றேன்.”/
அதுதானே! பயலுவ எம்புட்டு மக்கா இருந்தாலும், சோம்பேறியா, ஊதாரியா, கழிசடையா இருந்தாலும், அவிங்க அம்புட்டுபேரயும் 100% வாங்க வச்சிருவாருல எங்க தருமி! சாமியும் அதுபோல நாம என்ன @$#%$*^*&*&**)^&%^% செஞ்சாலும் எல்லாதயும் சரிபண்ணிடனும்!————–And Samji, a lateral thinking: cremation wastes away all the matter we built the body with, and ends up warming up the globe. Burial feeds zillions of bacteria, and then further feeds trees and plants! Don’t worry about real estate value of 6X4! Let us consider it as ‘compost pit’ where we will add value to the soil (and future archeologists)!!
anbudan awwai.
Awwai Says: after publication. e -->November 9th, 2005 at 11:02 am e
namma orukaararu-nu nirubichitteenga! (ilichchavaai photo!)
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:01 pm e
என் படத்தைப் பார்த்துச் “சிரித்த” அனைத்து ‘சிரிப்பர்களுக்கும்’ நன்றி.
தாணு மாதிரி என் பல்வலியை..இல்ல..இல்ல..என் பல்வலிமையைச் சந்தேகிக்கும் ஆட்களுக்கு எச்சரிக்கை!
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:16 pm e
இராமனாதன்,
இத…இததான் கேட்டுக்கிட்டு இருக்கேன் - எப்படி ஸ்மைலிகளைப் பின்னூட்டத்தில் ஏற்றுவது என்று. நீங்களாவது சொல்லுங்களேன்.
ஒத்த ஆளா நின்னு எல்லார்கூடவும் மல்லுக்கட்டிக்கிட்டு இருந்ததனாலதான் உங்களை இளவஞ்சி வீட்டுக்குக் கூப்பிட்டேன். நீங்க வந்துதான் எல்லாத்தையும் கிளியர் பண்ணீட்டீங்களே!
செவாலியே கன்பர்ம்ட்!- இது சரி…அதுக்குப் பின்னால என்ன ஸ்மைலி வேண்டியதிருக்கு. கேலியா…ம்ம்..?
“ஒரு நோய் நம்மள பயமுறுத்த ஆரம்பிச்சுடுச்சுன்னா, அப்புறம் …” - அது சரிதான், ஆனாலும் பயமில்லாமல் இருக்க முடியாது; பயத்தை மறைத்துக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ முயலவேண்டியதுதான். review-க்கு போகும்போது பக்கத்தில் இருந்த அடுத்த patients-களுக்கு நான் வேடிக்கையாகப் பேசி தைரியமளித்ததைப் பின்னால் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மருத்துவர், “உங்களை பேசாமல் post-operative counsellor-ஆகப்போட்டு விடலாமா” என்று வேடிக்கையாகக் கேட்டார்.
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:19 pm e
சங்கரய்யா, வெளிகண்ட நாதர்,இருவருக்கும் ஒரேவித உணர்வுகள். நன்றி
வெளிகண்ட நாதர்,உங்கள் பெயர் ஏதாவது சாமியின் பெயரா?
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:22 pm e
தங்கமணி, D.K.,
இருவருக்கும் ஒரேவித உணர்வுகள். ஆங்கிலத்தில் எழுதிய அந்தச் சொற்றொடர் பிடித்தமையால்தான் அதை அப்படியே பெயர்த்து எடுத்து இங்கும் இட்டேன். நன்றி
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:28 pm e
துளசி,
“டீச்சருக்குத் தெரியாமத்தானே போட்டீங்க?” // -- போடும்போது தெரியாது. உங்கள் இந்த பின்னூட்டத்தையும், போட்டோவையும் சேர்த்து காட்டி, அடியிலிருந்து தப்பித்தேன்!!
இராமநாதன் Says: after publication. e -->November 9th, 2005 at 10:29 pm e
: )
இரண்டுத்தையும் gap இல்லாம சேர்த்து டைப் அடிச்சா தானா ஸ்மைலி வந்துட்டு போகுது.
//“ஒரு நோய் நம்மள பயமுறுத்த ஆரம்பிச்சுடுச்சுன்னா, அப்புறம் …” - அது சரிதான், ஆனாலும் பயமில்லாமல் இருக்க முடியாது; பயத்தை மறைத்துக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ முயலவேண்டியதுதான்.//பயம் எல்லாருக்கும் இருக்கும், தருமி. restrict செஞ்சுக்கறதுக்கும் முழுக்கவே isolate செய்வதற்கும் வித்தியாசம் இருக்கில்லையா? அதிகமா பயப்பட்டு, அந்த பயமே நம்ம வாழ்க்கையின் எல்லா விஷயங்களையும் dictate செய்யற அளவுக்கு போகக்கூடாது என்பது தான் நான் சொல்ல வந்தது.
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:29 pm e
ஏங்க தாணு,
பல்லைப் பத்தித் தப்பா சொன்னீங்க - போனா போது, , பிழைச்சுப் போங்க. ஆனா, அதுக்குப் பிறகு என்ன : “வாத்தியாரோட வறட்டு தத்துவங்கள் …” //-
- எப்படி நீங்க இப்படிச் சொல்லலாம்; சாமி இருக்கு, பூதம் இருக்கு அப்டின்னா பசுமை; நாங்க சொல்றதெல்லாம் வறட்டுத் தத்துவமா…? (நிஜப் பல்லைக் கடிக்கிற சத்தம் கேட்குதா..?)
dharumi Says: after publication. e -->November 9th, 2005 at 10:33 pm e
அவ்வை,
அட போப்பா…நீயும் உன் entropy-யும்!
“அம்புட்டுபேரயும் 100% வாங்க வச்சிருவாருல எங்க தருமி! ” // -- சரி, தருமியால அது முடியாதுதான். என்னையும் மீறி சில பசங்க நல்லா வந்திர்ராங்க - உன்ன மாதிரி. அது வேற விஷயம். நீ சொல்றபடி பார்த்தா, தருமியையும் சாமியையும் ஒரே தட்டிலல்ல வச்சிருக்க. உதாரணம் தப்பு மாதிரில்ல தெரியுது..?
Bobby Says: after publication. e -->November 10th, 2005 at 12:58 am e
Hi Tharumi,
I’d like to create a blog acc. for me.Can you let me know the way you create, add the blog with Thamizmanam, and how to write & upload in Tamilplease?Thank you.-BobbyAlberta, Canada.
moses Says: after publication. e -->November 10th, 2005 at 2:01 pm e
fantastic dharumi……your writing style is nice
ரவிகுமார் Says: after publication. e -->November 10th, 2005 at 3:28 pm e
நிங்க brightன்னு தெரியும், ஆன இவ்வளவு brightன்னு தெரியாது
தருமி Says: after publication. e -->November 10th, 2005 at 8:21 pm e
பிரேம்,உங்க பேரு எப்படி முதல்ல விட்டுப்போச்சுன்னு தெரியலை. மன்னிக்கணும்.
பிரேம், மோசஸ், ரவிகுமார்,மூன்று பேருமே முதல் தடவையா வீட்டுக்கு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். வரவேணும்.நல்ல வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.
ரவிகுமார் - என் பல்லைப் பத்திதான சொல்றீங்க…?
ரவிகுமார் Says: after publication. e -->November 10th, 2005 at 9:46 pm e
இது இரணடாவது முறை தருமி, முதல் முறை உஙகளோட ஒருக்கேள்விக்கு பதில் சொல்ல முயற்சிசெத்தேன்( வாதியாருன்னு தெரியாம ) . ஆனா உஙக மாணவர் அவ்வை பரிசு தட்டிடாரு
வெளிகண்ட நாதர் Says: after publication. e -->November 10th, 2005 at 10:21 pm e
அட நீங்க ஒன்னு, சாமியுமில்ல, பூதமுமில்ல. நாடுவிட்டு நாடு வந்தா நாடோடி, அது மாதிரி ஊரு விட்டு ஊரு போயி, மாநிலம் விட்டு மாநிலம் தாண்டி, பிறகு பொறந்த தேசத்தை வுட்டுட்டு வெளி நாடு வந்து வெளி உலகங்களை கண்டதுனால, வெளி கண்ட நாதர்.. ம்.. ஒண்ணுமில்லை நீங்க சொன்னது வாஸ்தவம் தான், சின்ன வயசுல நாங்க தங்கன வீட்டுக்கு பக்கத்தில இருந்த கோயில்ல இருந்த சாமி பேரு தான்.. வச்சுகிட்ட நல்லாருக்குமின்னு வச்சுக்கிட்டேன்.
Padma Arvind Says: after publication. e -->November 10th, 2005 at 10:49 pm e
கிட்டதட்ட இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் நானும் அனுபவித்தேன்.

102. மரணம் தொட்ட கணங்கள்…3

* முதல் கணம் ...

* இரண்டாவது கணம் ...


1990 ஜனவரி முதல் நாள்; புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து இரவு வீடு திரும்பிய அப்பா நெஞ்சு கரிக்கிறது என்று சொல்லி, அம்மாவிடம் சுக்கு மல்லி காஃபி கேட்டு, குடிச்சிட்டு படுத்திட்டாங்க. இரவு இரண்டு மணிக்கு அம்மா என்னை எழுப்பியபோது அப்பாவின் மூச்சு சரியாக இல்லை; தொண்டைக்குள் கரட்..கரட் என்று சத்தம். எதிர் வீட்டு டாக்டர் நண்பர் வந்தவர் ‘எல்லாம் முடிஞ்சிடுச்சி’ என்று சொன்னபோது மணி 2.20.

அப்பாவின் இறப்புச் சான்றிதழ் வாங்கும் விஷயத்திற்காக டாக்டரிடம் சென்ற போது, டாக்டர், நண்பர் என்ற முறையில், ‘Sam, அப்பாவுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை; அவரே இப்படி சட்டுன்னு போய்ட்டார். ரெண்டு பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு இப்படி சிகரெட் பிடிக்கிறீர்களே’ என்றார். ஏற்கெனவே நானும் இதைப்பற்றி நினைத்ததுண்டு; பயப்பட்டதும் உண்டு.

ஆறாம் தேதி இரவு; வீட்டில் சும்மா வெளியே நின்று கொண்டிருந்தவனை நண்பன் அரசரடி வரை டீ குடிக்கக் கூட்டிப்போனான்; நாலைந்து பேர் சேர்ந்தோம். டீ, அரட்டை என்றாகி புறப்படும்போது இரண்டு சிகரெட் வாங்கி ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டு நண்பனின் வண்டியில் பின்னால் உட்கார, தெரு முனையில் விட்டுவிட்டுச் சென்றான். வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கும்போது இந்தச் சனியனை விட்டால் என்ன என்று நினைத்து கையில் இருந்ததை ஆழமாக இழுத்து, உறிஞ்சி…நசுக்கினேன். பையில் இருந்த இன்னொரு சிகரெட்டை எடுத்து வீசி எறிந்தேன். ஒரு கம்பீரம் வந்த மாதிரி தோன்றியது. ஒரு பத்துப் பதினைந்து அடிதான் அந்தக் கம்பீரம் எல்லாம். திரும்பிப்போய் தூர எறிந்த சிகரெட்டைத் தேடிப் பிடித்து எடுத்துக் கொண்டேன்; வீட்டிற்குச் சென்று, அந்த சிகரெட்டைப் பற்ற வைத்து மீண்டும் ஆழமாக உறிஞ்சி…சூழும் புகை மண்டலத்திற்குள் லயித்திருந்து, கடைசியாக ஆஷ் ட்ரேயில் அதை நன்றாக நசுக்கி…நாளையிலிருந்து சிகரெட் குடிக்கக்கூடாது என்று ஒரு முடிவெடுத்தேன் - வாழ்க்கையில் அதுபோன்று சிகரெட்டுக்காகவே ஏற்கெனவே எடுத்த முடிவுகளின் எண்ணிக்கை ஒரு இருபதிலிருந்து முப்பதாவது இருக்கும். இது முப்பத்தொன்று என்று வைத்துக்கொள்வோமே; (Mark Twain சொன்னதை இப்ப நான் வேறு சொல்லணுமா, என்ன?)எப்படி என்று தெரியவில்லை… அதன் பிறகு இந்த நிமிடம் வரை குடிக்கவேஏஏஏஏஏஏஏஏஏ இல்லை! வீட்டில், வெளியில், கல்லூரியில் எங்கும் எல்லோருக்கும் அப்படி ஒரு ஆச்சரியம். எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம் என்று சொன்னவர்கள்தான் அதிகம்.

A smoker is always a smoker - என்பதற்கு ஏற்றாற்போல இன்னுமும் சிகரெட் ஆசை என்னவோ விடவில்லை! பேனா மூடி, பென்சில் இப்படி ஏதாவது ஒன்றை வாயில் வைத்துக்கொண்டு ‘பழைய நினைப்பில்’ மூழ்கி, வீட்டில் திட்டு வாங்கும்போதெல்லாம், ‘என் இரண்டாம் மகளின் கல்யாணம் முடிந்த அன்றைக்குப் பாருங்கள்; தண்ணி, தம்முன்னு அடிச்சி ஒரு ‘அலப்ஸ்’ கொடுக்கிறேனா இல்லையான்னு’ சொல்லிக்கிட்டே இருப்பேன். அதே மாதிரி அவள் கல்யாணம் முடிந்த அன்று இரவு ‘ராஜ மாளிகை’யில் என்னோடு தம் அடிக்கப் பழகிய ஆல்பர்ட்டிடமும், இன்னொரு நண்பனிடமும் ஒரே ஒரு சிகரெட் ஓசி கேட்டேன்; பாவிப் பசங்க தரமாட்டேன்னுட்டாங்க! அதனால், இரண்டில் ஒன்றை மட்டும் செய்து என் வாக்குறுதியில் 50% மட்டும் நிறைவேற்றிக்கொண்டேன். இன்னும் ‘ஆசை இருக்கு தம் அடிக்க; அதிர்ஷ்டம் இல்லை பத்த வைக்க!’

எண்பதுகளின் நடுவரை டென்னிஸ் விளையாட்டு. அதன் பிறகு கஷ்டமாகத் தோன்றியது. உள்ளதே backhand என்றாலே அலர்ஜி; எப்படியோ அள்ளி அள்ளி போடணும். இப்ப அந்த சைடில் பந்து வந்தாலே ஒரு பெரிய philosophy-யே உருவாயிடுச்சி. என்ன, அந்த பந்தை எடுத்தாலும், அள்ளி அடுத்த சைடுக்குப் போட முடியவா போகுது; அப்ப, ஏன் வெட்டியா ஓடணும்? இதன் அடுத்த நிலையாக forehand-க்கு வரும் பந்தைப் பற்றியும் அதே தத்துவம் வர ஆரம்பிக்கும் நிலையில் ஒரேயடியா ரிசைன் பண்ணிட முடிவு செய்தேன். நல்ல வேளை வீட்டுக்குப் பக்கத்தில் மூன்று நண்பர்கள் shuttle cock பிரிட்டோ பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். நாலாவதாக நான் போய்ச் சேர்ந்தேன். நாலில் மூன்று பேர் சிகரெட் குடிப்பவர்கள். எங்களுக்கு warming up என்றாலே தம் அடிப்பதுதான். ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னும், பிறகு பின்னும் warming up கட்டாயம் உண்டு.


1990 செப்டம்பர் காலை. வழக்கம்போல விளையாட அரைக்கால் சட்டை போட்டுகிட்டு, shoe மாட்டப் போகும்போது திடீரென இடது கையின் மேற்பாகத்தில் சுரீர் என்று ஒரு வலி. ஏதோ பிடித்திருக்கும் போல என்று நினைத்து, துணைவியாரைச் சிறிது தேய்த்துவிடச் சொன்னேன். அடுத்த கையிலும் அதே வலி. புரிந்தது. அப்பா இறந்த போது மாரடைப்பின் விதங்கள், அறிகுறிகள் என்று பலர் சொல்லித் தெரிந்தது அப்போது கைகொடுத்தது. அப்படியே எதிர் வீட்டு டாக்டர் நண்பரிடம் சென்றேன். உறுதி செய்தார். வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பினார்.

வழக்கமான மயக்க ஊசிகள், I.C.C.U., சுற்றியும் monitors, பதட்டத்தை அதிகமாக்கும் டாக்டர்களின் வருகைகள், கதவின் வட்டக் கண்ணாடி வழியே தெரியும் ஆதங்கம் நிறைந்த முகங்கள் …இப்படியே நாலைந்து நாட்கள்; எல்லாமே ஒரு பனிமூட்ட effect-ல். பின்பு ஒரு பத்துப் பனிரெண்டு நாட்கள் மருத்துவமனை வாசம். முதல் நான்கைந்து நாட்களுக்குப் பின் குடும்பத்தினர் முகத்தில் இருந்த இறுக்கம் மறைய, உடனிருந்த நண்பர்களின் வால்தனமும் கூடியது. வருபவர்கள் எல்லாரும் ஒரே மாதிரி Horlicks, Grapes, Oranges என்று வாங்கிக் குமிக்க, நண்பர்கள் ரவியும், சூரியும் கதவில் ஒரு போஸ்டரே ஒட்டிவிட்டார்கள்: There are many brands other than Horlicks!, Only seedless grapes accepted! என்று!
மெடிக்கல் லீவ் முடிந்து கல்லூரி திரும்பியபோது பல தரப்பட்ட comments! எனக்கு வந்தது heart attack-ஆக இருக்காது என்ற நம்பிக்கை சிலருக்கு. பல காரணங்கள்: சிகரெட் விட்டாச்சு - நல்ல active-ஆக இருக்கிற ஆளுதானே - எதையும் சீரியஸா எடுக்காத ஆளல்லவா {நம்ம போடுற ஆட்டம், அடிக்கிற கூத்து, போட்டுக்கிற சட்டை துணிமணி-கல்லூரியில் ஆசிரியர்கள் மத்தியில் ‘முதல் ஆள்’ என்று பெயர் (!?) வாங்கிய விஷயங்கள் பல

மருத்துவமனையில்….




- உதாரணமா, முதல்ல ஜீன்ஸ் போட்டது, ஜிப்பா பைஜாமாவோட வர்ரது, வலது கையில் வாட்ச்(ஆனா, இப்போவெல்லாம் இடது கையில்தான்; அதுக்காக வலது கையில் கட்றவங்களை நான் ஒண்ணுமே சொல்லலையே!!) இதோடு, பூனக்குட்டிய இடுக்கிகிட்டு இருக்கிறது மாதிரி எப்போதும் தோளில் தொங்கும் காமெரா, குட்டியூண்டு வெள்ளெழுத்து கண்ணாடி போட்டுக்கிட்டு அதையும் கயித்தில கட்டி தொங்க விட்டுக்கிறதுன்னு ஒரு பெரிய லிஸ்ட் — இதல்லம் வச்சு பல மக்கள் freaky என்பார்கள், சிலர் trendy என்பார்கள். எது எப்படியாயினும், நான் எனது மூன்றாம் கட்டளையைப் பின்பற்றி செய்த விஷயங்கள் இவை.

இதையெல்லாம் போற்றுவோர் போற்றட்டும்…ம்ம்… அதுக்குப் பிறகு என்னமோ சொல்லுவாங்களே அதுமாதிரி கண்டுக்காம போயிடறது. இந்த மாதிரி இருந்ததாலேயே மக்கள் அப்படி நினைச்சாங்க; சொன்னாங்க. ஒருத்தர் ‘you’ve become very fair’அப்டின்னார். Dont envy. Got it by paying a heavy price for that’ என்றேன். ஏதாவது gas problem இருக்கும் என்று சொன்னது பலர். நானும் அடுத்த செக்கப் போகும்போது டாக்டர் அதே மாதிரி சொல்லிட மாட்டாராவென நினைத்தேன். sure case of myocardial infarction. left ventricle wall has become thicker- அப்படின்னு ஒண்ணுக்கு மூணு டாக்டர்கள் சொல்லிட்டாங்க! கொழுப்பும் (cholesterol) கூடிப்போச்சுன்னாங்க. (யாருங்க அது? ‘இது’ தெரிஞ்சதுதானே அப்டீங்றது?) ஒரு முறை ‘அட்டாக் கேசுகள்’ நாலஞ்சு பேராசிரியர்கள் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது - வேறெங்கே, காலேஜ் கான்டீன்தான் - ஒருவர் கேட்டார். நாம எல்லாருக்குமே personal habits ரொம்ப வித்தியாசமா இருக்கு; ஆனா ஒரே மாதிரி அடிபட்டு இருக்கோமே, காரணம் என்னவாக இருக்கும் என்றார். ஆங்கிலப் பேராசிரியர் வசந்தன் ரொமப் சிம்ப்ளா ஒரு தியரி சொன்னார்: heart-ன்னு ஒண்ணு இருந்தா heart attack-ன்னு ஒண்ணு வரும்!

இதில என்ன வருத்தம்னா, அப்போ என் மகள்கள் இருவருமே இதன் gravity-யைப் புரிந்துகொள்ள முடியாத வயதினர்; மூத்தவள் அப்போ படித்தது XI; அடுத்தவள் VIII. துணைவியார் அப்போது வேலை எதுவும் பார்க்கவில்லை. அதனாலேயே, வேலை தேட, ஒரு வேலையும் சீக்கிரம் கிடைத்தது பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால், என் emotional balance-யை முற்றிலுமாக இழந்தேன்; இன்னும் அந்தப் பிரச்சனை உண்டு. அதைப் பற்றித் தனியா பேசணும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க முயற்சித்தேன்.

இருந்தும் 5 வருடங்கள் ஆன பிறகு, 95-ல் இரண்டாம் முறையாக ‘அட்டாக்’. மறுபடியும் மருத்துவமனை, I.C.C.U.; I.C.U., சோகங்கள், பயங்கள், ஆறுதல்கள், இறுக்கங்கள் என இன்னொரு சுழற்சி. அதிலிருந்தும் வெளியே வந்து, மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தாகி விட்டது. அதற்கு அடுத்த வாரம் உறவினர்கள் வேளாங்கண்ணி போவதாக முடிவு செய்து, என் மகள்களையும் கூட அழைத்து சென்றார்கள். அவர்கள் திரும்பி வரும் இரவுக்கு முந்திய காலையில் மறுபடி எனக்குப் பிரச்சனை வர, முந்திய மருத்துவமனை மீது திருப்தி இல்லாத காரணத்தால் நண்பர்கள் மூலம் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இரவு வீடு திரும்பிய மகள்களுக்கு நான் மறுபடி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டேன் என்ற சேதி மட்டும் கிடைத்தது. எந்த மருத்துவ மனையென்பதோ, என்ன ஆயிற்று என்பதோ ஒன்றும் தெரியாது. பாவம், குழந்தைகள் உறவினர்களோடு பழைய மருத்துவ மனைக்குச் சென்று நான் அங்கு இல்லாதது கண்டு வேறு சில மருத்துவமனைகளை முயற்சித்து அங்கும் தோல்வி கண்டு என்ன செய்வதென்று அறியாமல் உறவினரின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். நீண்ட, சோகமான, கொடுமையான இரவு என்று அவர்கள் மனதில் அந்த இரவு இன்றுவரையும் ஆழமாகப் பதிந்து விட்டது. அந்த வயதில் வரக்கூடாத சோகங்களும், வேதனைகளும் பிள்ளைகளுக்கு. அவர்களைப் பார்த்து எனக்கு அந்த நோய்க்குப் பின் வரக்கூடாத மன அழுத்தங்கள். குரங்கை நினைக்காம மருந்து சாப்பிடு என்பது போன்ற கதைதான். ரொம்ப டென்ஷன் வச்சுக்கக் கூடாதுன்னு சொன்னாதானே, டென்ஷனே வருது. ‘ஆசையை அடக்கு’ன்னு புத்தர் சொன்னாராம்; ஆனா, அதுவே ஒரு ஆசைதானே. another oxymoron in our lives! வேறென்ன சொல்ல? ஆயினும் வாழ்க்கை நல்லாவேதான் போச்சு - 2001 வரை.

அதுவரை இருந்த ‘சிலாவத்தான’ (care free) வாழ்க்கையைக் கொஞ்சம் மாற்றி இப்போ ஒரு ஒழுங்கான வாழ்க்கைக்கு மாறினேன். ஒரு காலத்தில் dark room-க்குள் போனால் நாளும், நேரமும் மறந்தே போகும். photography-ன்னு ஒரு கிறுக்கு; b & w processing and printing என்று நேரம் காலம் மறந்ததெல்லாம் இப்போ பழைய கதையாயிற்று. சொன்னது மாதிரி 1995 -2001 வரை நடந்த நல்ல விஷயங்கள் பல: தலைக்கு மேல் ஒரு கூறை (1996)- ரொம்ப காலம் தாழ்ந்ததாயினும் ஒரு மன நிறைவு; மூத்த மகள் கல்வி முடித்து, கல்யாணமும் (1997), சின்னவளின் படிப்பு முடித்து, வேலையிலும் சேர்ந்தது, மூத்த பேரன் பிறந்தது (2001). இதோடு நீண்ட நாள் கனவான கார் ஒன்று வாங்குவதும் அந்த ஆண்டே. ஜாவா பழகியது போலவே காரும் பழகினேன். எப்போதோ ஒரு நண்பனின் காரை ஓட்டிய அனுபவம். அதை வைத்தே நாலு நாள் நம்ம ஏரியாவில் - ஊரைவிட்டு ஒதுங்கி வீடு கட்டியதில் இந்த ஒரு லாபம் - ஓட்டிவிட்டு ஊருக்குள்ளும் போயாகிவிட்டது. கார் வாங்கி ஓரிரு மாதத்தில் வலது கையில் கொஞ்சம் வலி. கார் ஓட்டியதில் வந்த வலியென்று நினைத்து பேசாதிருந்து விட்டேன். வலி கொஞ்சம் இடம் மாறியது - migratory pain என்று சொல்வார்களே என்று ஒரு சின்ன நினைப்பு. சரி, ரெகுலர் செக்கப் செய்தும் நாளாயிற்றே என்று டாக்டரிடம் போனேன். அது 2001 செப்டம்பர் மாதத்தின் கடைசியில் ஒரு நாள்.


அங்க போனா…




***


Nov 08 2005 01:36 am சொந்தக்கதை.. edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 2 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
11 Responses
துளசி கோபால் Says: after publication. e -->November 8th, 2005 at 2:30 am e
ம்… அப்புறம்?….
ராம்கி Says: after publication. e -->November 8th, 2005 at 7:10 am e
நீங்க ஜாலியா எங்களுக்கு கதை சொல்லிட்டு இருக்கீங்க.. அந்த நாட்கள்ல வீட்டுல என்ன பாடு பட்டிருப்பாங்க?
D.Krishnamurthy Says: after publication. e -->November 8th, 2005 at 7:34 am e
Well said ramki.Disease to us is mental agony to our dear ones only, not to us. Still, dharumi sir, your write up stirs many memories.
Awwai Says: after publication. e -->November 8th, 2005 at 10:07 am e
ஒருத்தர் ‘you’ve become very fair’அப்டின்னார். Dont envy. Got it by paying a heavy price for that’ என்றேன்.
I thought you were always fair! (well, if they were refering to complexion, not integrity, who cares? it doesn’t matter at all!
வெளிகண்ட நாதர் Says: after publication. e -->November 8th, 2005 at 12:33 pm e
இந்த மரணம் வந்து வந்து தொட்டு போனா மாதிரி உண்டாகிற அனுபவங்கள், பய அவலங்கள் இருக்கே பெருத்த அடிபட்டு ஆஸ்பத்திரி போயிட்டு வரப்பதான் தெரியும். விபத்து ஏற்பட்டு படுத்து கிடந்த நாட்கள்ல இதை அனுபவிச்சிருக்கிறேன்.
dharumi Says: after publication. e -->November 8th, 2005 at 1:31 pm e
துளசி,நல்லாயிருக்கா கதை?!
அவ்வை,கேட்டது உங்க பர்னபாஸ். probably it matters to him.
dharumi Says: after publication. e -->November 8th, 2005 at 1:32 pm e
துளசி,நல்லாயிருக்கா கதை?!
அவ்வை,கேட்டது உங்க பர்னபாஸ். probably it matters to him. anyway thanks for your compliment. நமக்குள்ள எதுக்கு, இது?
dharumi Says: after publication. e -->November 8th, 2005 at 1:35 pm e
ராம்கி, D.K.,அதிலயும் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட அந்த நிகழ்ச்சி இப்போது நினைத்தாலும் அவர்களுக்குமே நெஞ்செல்லாம் பதறும்.
வெளிகண்ட நாதர்,அதைத்தான் சொல்லுவாங்க: தனக்கு வரும் வரை எல்லாமே வேடிக்கைதான் என்று…
சன்னாசி Says: after publication. e -->November 9th, 2005 at 1:21 am e
//அதுவரை இருந்த ‘சிலாவத்தான’ (care free) வாழ்க்கையைக் //இந்த வார்த்தையைக் கேட்டுப் பல நாள் (வருடங்கள்?) ஆயிற்று. இது இன்னும் திரிந்து (அசல் எதுவோ?) “செலாத்தா”, “செலாவட்டா” என்றும் வரும்.
நண்பன் Says: after publication. e -->December 8th, 2005 at 1:31 am e
அருமையான கட்டுரை.
நீங்கள் கொடுத்த சுட்டியின் மூலம் இந்த ஒரு பதிவு மட்டுமே படித்தேன்.
மீண்டும் வந்து முழுக்கப் படிக்கிறேன்.
அப்புறம்.
அந்த புகைப்படப் பழக்கம் -
அதைக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன் - புகை பிடிப்பதை விட்டுட்டு, புகைப்படத்தைப் பிடிக்கலாம் என்று தான்..
தருமி Says: after publication. e -->December 8th, 2005 at 12:41 pm e
அந்த புகைப்படப் பழக்கம் -அதைக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன” “ //நல்ல ஆள் பாத்தீங்க, போங்க. நான் சொல்லிக் கொடுத்தா என்ன மாதிரி மோசமான படங்கள் எடுக்க முடியும்னுதான் தெரிஞ்சுக்கலாம்.
நல்ல படம் எடுக்கணும்னா இங்க போங்க…சரியா…?http://anandvinay1.blogspot.com/